• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 6

Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
ஜென்மம் 6

இல்லாமலே வாழ்வது

இன்பம் இருந்தும்
இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில்

என்னை கொல்லாதே…!

பேருந்தில் இருந்து கூட்டத்தில் அடித்து பிடித்து கொண்டு இறங்கியவள் வேக நடையில் அலுவலகத்தை அடைய முயற்சித்தாள்.

சரியாக உள்ளே நுழைந்து தனது கைவிரலை பதிவு செய்ய அரைமணி நேரம் தாமதமாக வந்து இருப்பதை அந்த கருவி சுட்டி காண்பித்தது.

‘ப்ச்’ என்று தன்னையே சலித்து கொண்டாள்.

நேற்று அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் முதலாவதே அலுவலகத்திற்கு நேரத்திற்கு வந்துவிட வேண்டும் கால தாமதம் என்பது கூடாது.

அப்படி எதாவது அவசரம் என்றால் மனிதவளத்துறை அதிகாரியிடமாவது தெரிவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நடந்த கலவரத்தில் அவளால் எதையும் செய்ய இயலவில்லை. அடித்து பிடித்து கிளம்பிவரவே நேரம் சரியாக இருந்தது.

சரி சமாளித்து தான் ஆக வேண்டும் என நினைத்தபடியே வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.

“என்ன கன்னல்மொழி வந்த ரெண்டாவது நாளே லேட்டா?” என்று தாரிகா வினவ,

“வீட்ல கொஞ்சம் பிராப்ளம்” என்று சோர்வாய் கூறினாள்.

“எம்.டி சாருக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்? லேட்டா வந்தா காய்ச்சி எடுத்திடுவாரு” என்று மொழிய,

“கேள்விப்பட்டேன்”

“சார் இன்னும் வரலை அதனால தப்பிச்சிட்ட. இல்லைனா வந்தவுடனே டோஸ் விழுந்திருக்கும்” என்க,

அவனது‌ தாமதத்திற்கு காரணம் அறிந்தவள் மெதுவாய் தலையசைத்தாள்.

“போய் ஊர்மிளா மேம்க்கிட்ட இன்பார்ம் பண்ணிடு” என்க,

சரியென தலையசைத்தவள் எழுந்து ஊர்மிளாவின் அறைக்கதவை தட்டி‌ உள்ளே நுழைந்தாள்.

“என்ன கன்னல்மொழி வந்த ரெண்டாவது நாளே லேட்?” என்று இறுக்கமான முகத்துடன் கேட்க,

இவளுக்கு சங்கடமாய் போயிற்று. இதுவரை இது போல எல்லாம் அவள் ஒரு முறை கூட தாமதமாக‌ வந்தது இல்லையே. ஆனால் அதனை கூற இயலாது.

“சாரி மேம்.‌ தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையால லேட் ஆகிடுச்சு”என்க

“எல்லாருக்கும் தான் ஆயிரம் பிராப்ளம் இருக்கும். அதுக்கு எல்லாரும் லேட்டா வரலாமா?” என்று வினா தொடுக்க,

இதற்கென்ன பதில் அளிப்பாள்.‌ அவர் கேட்பது நியாயமானது தானே.

தவறு என்மேல் உள்ளதே என்று தன்னை நொந்தவள்,

“இது தான் லாஸ்ட் டைம் மேம். இனிமே எப்பவும் இந்த தப்பு நடக்காது” என்று உறுதியாக மொழிய,

“ஓகே பர்ஸ்ட் டைம்னால வார்னிங்கோட விட்றேன்.நெக்ஸ்ட் டைம் என்னால எதுவும் பண்ண‌ முடியாது. டேரெக்டா எம்.டி சார் தான் டீல் பண்ணுவாரு” என்க,

‘சரி’ என்பதாய் தலையசைத்தாள்.

“இனி எதாவது எமெர்ஜென்சினா ஹெச்.ஆர்கிட்ட இன்பார்ம் பண்ணுங்க. அதர்வைஸ் எனக்கு மெசேஜ் போடுங்க” என்று கூற,

“ஓகே மேம்.‌ ஒன்ஸ் அகெய்ன் சாரி” என்று மன்னிப்பை வேண்டியவள் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.

முகம் நேற்று இருந்த இளக்கத்தை தொலைத்து இறுக்கமாக இருந்தது.

இதுவரை இது போல எந்த ஒரு சூழ்நிலையையும் பணிபுரியும் இடத்தில் கண்டதில்லை. எதிலுமே மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்.

நான் நேர்மையாக இருக்கிறேன் என்று ஒருவித கர்வம் கூட இருந்தது. வேலையையும் அப்படித்தான் சொன்ன நேரத்தில் நேர்த்தியாக செய்து முடிப்பாள்.

ஆனால் இங்கு வந்த மறுநாளே மன்னிப்பு கேட்கும் சூழல் அமைந்துவிட்டதே என்று ஒரு வித ஆற்றாமை.

நினைத்து பார்க்கையில் அவர்கள் வேண்டுமென்றே செய்திருப்பார்களோ? என்று கூட எண்ணம் வந்தது.

ஆனால் தன்னை தாமதப்படுத்துவதற்காக தானே சென்று கீழே விழுந்து அடிப்பட்டு கொள்ளும் அளவிற்கு அவர்கள் கிடையாதே என்று ஒரு மனம் சிந்தித்தது.

ஒருவேளை எதேச்சையாக நடந்த ஒன்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனரோ? இருக்கும் இதுதான் சரியாக இருக்கும்.

பார்த்தீபனது கோபத்தை பற்றி அறிந்தே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்ற முடிவிற்கு வந்தாள்.

எப்படியும் அவனிடம் தன்னை பற்றி இந்நேரம் பலவகையான கதைகளை புனைந்து கூறி இருப்பார்கள். இவனும் அதை நம்பி கொண்டு வந்து தன்னிடத்தில் முகத்தை காண்பிப்பான் என்று தோன்ற ஒரு பெருமூச்சு எழுந்தது.

பிறகு என்னவாயிருந்தால் என்ன பார்த்து கொள்ளலாம். இந்த கன்னல் மொழியை யாராலும் அத்தனை சுலபத்தில் அசைத்து பார்க்க முடியாது என்று எண்ணி கொண்டவள் தனது வேலையை செய்ய முயல,

இவளை கவனித்த அதுல்யா, “ஊர்மிளா மேம் ரொம்ப திட்டிட்டாங்களா கன்னல் மொழி” என்று வருந்தி கேட்க,

“இல்லை. ஏன் லேட்னு கேட்டாங்க. சீசன் சொல்லி சாரி கேட்டேன். வார்ன் பண்ணி விட்டுட்டாங்க”

“பொய் சொல்லாத அந்தம்மா கேக்கும் போதே முறைச்சுக்கிட்டே கேட்டு இருக்கும்.‌ அதுலயே நமக்கு ஒரு மாதிரி ஆகிடும்” என்க,

இவள் சோபையாய் புன்னகைத்தாள்.

“எப்படி கரெக்டா சொல்றேன்னு பாக்குறீயா? எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ். சார்க்கிட்டயோ சம்டைம்ஸ் திட்டு வாங்கி இருக்கேன். அழகான ஆம்பளைக்கிட்ட திட்டு வாங்குனா தப்பில்லைனு மனசை தேத்திக்கிட்டேன்” என்று கண்ணடிக்க,

அவளது கூற்றில் கனிக்கு புன்னகை விரிந்தது.

“என்ன உண்மை தானே? எம்.டி செம்ம‌ ஹாண்ட்சம்ல?” என்று மீண்டும் வினவ,

“வொர்க் நேரத்தில பேசுறதை பாத்து எதாவது சொல்லிட போறாங்க. அப்புறம் பேசலாம்” என்று அந்த பேச்சிற்கு முற்றி புள்ளி வைத்துவிட்டவள் பணியை துவங்கினாள்.

ஒரு மணி நேரம் கழித்து அலுவலகத்தினுள் நுழைந்த பார்த்தீபனின் முகம் கடுகடுவென்றிருந்தது.

அதனை கண்ட ஊழியர்கள், “சார் முகத்தை பார்த்தீயா. கடுகை போட்டா வெடிச்சிடும் அவ்ளோ கடுப்புல இருக்காரு. இன்னைக்கு அவர்கிட்ட மாட்னோம் கைமா தான்” என்று தங்களுக்குள் பேசி கொண்டனர்.

கனி எதையும் பார்க்காதது போல தனது பணியை கவனித்தாள்.

அவள் எண்ணியது போலவே வந்தவுடனே அவளை அழைப்பதாக வந்து ப்யூன் கூறி சென்றார்.

‘சரிதான் அங்கே ஏற்றிவிட்டதை என்னிடம் இறக்கிவைக்க கூப்பிடுகிறான்’ என்று எண்ணியவாறு எழுந்து சென்று, அறைக்குள் நுழைய அனுமதி கேட்டாள்.

முழுதாய் ஒரு நிமிடங்கள் கழித்து தான் அறைக்குள் செல்லவே அனுமதி கிடைத்தது.

நுழைந்தவுடன் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் தன் கையில் இருந்த கோப்பில் கவனமாகிவிட்டான்.

சரி பார்த்துவிட்டானே என்னவென கூறுவான் என்று இவள் அமைதியாக நின்றிருந்தாள்.

ஆனால் நேரம் போனதே தவிர அவன் அழைக்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்க இவளுக்கு கடுப்பாக வந்தது.

முகத்தில் எதையும் காண்பிக்காது தான் நின்று இருந்தாள்.

சுமித்ராவை அழைத்து பார்த்து கொண்டிருந்த கோப்பில் சில திருத்தங்கள் செய்து வர கூறினான்.

சுமித்ரா இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்துவிட,

அப்பாடா இப்போதாவது கூறுவான் என்று நினைக்க கணினியை உயிர்ப்பித்து அதனை பார்க்க துவங்கினான்.

இவளுக்கு புரிந்து போனது. தன்னை இப்படி காக்க வைப்பது தான் இவனுடைய‌ எண்ணம் என்று.

இதெற்கெல்லாம் அசருபவள் நான் அல்ல என்று எண்ணத்துடன் தான் நின்று இருந்தாள்.

அவன் கூறிய திருத்தங்களை செய்து சுமித்ரா கோப்புடன் உள்ளே நுழைந்தாள்.

அப்போதுதான் முன்பு இருந்த இடத்திலே நின்றிருந்தவளை கண்டு இவளுக்கு புருவம் சுருங்கியது.

இருந்தும் கருத்தில் கொள்ளாது நகர்ந்துவிட இவளுக்கு லேசாக கால் வலிக்க துவங்கியது.

மீண்டும் இருமுறை சுமித்ரா வந்து சென்ற போதும் இவள் இதே இடத்திலே தான் இருந்தாள்.

வேலையை முடித்துவிட்டு சாவகாசமாக‌ அவள் புறம் திரும்பியவன் அவளது முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு பியூனை அழைத்து தேநீர் எடுத்து வர கூறினான்.

ஐந்து நிமிடத்தில் தேநீர் வர அதனை எடுத்து சிறிது சிறிதாக குடித்து கொண்டிருந்தவனது பார்வை கன்னல்மொழியை தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

கனியும் நேராக அவனை தான் பார்த்திருந்தாள் நேர்கொண்ட பார்வையாக. என் மீது தவறில்லை என்ற நிமிர்வு அதில் பொருந்தி இருந்தது.

அந்த நிமிர்வு எதிரில் இருந்தவனுக்கு பிடிக்கவில்லை போலும்,

“ஜாயின்ட் பண்ண ரெண்டாவது நாளே ஏன் லேட்?”

“பர்ஸனல் இஸ்யூஸ் சார்”

“எல்லாருக்கும் தான் பர்ஸனல் பிராப்ளம் இருக்கு? எல்லாருக்கும் தினம் லேட்டா வர முடியுமா?. நேத்து அக்ரீமெண்ட் ரீட் பண்ணி தான சைன் பண்ணிங்க?” என்று அழுத்தமாக கேட்க,

இவளது தலை, ‘ஆம்’ என்று அசைந்தது.

“அப்புறம் ஏன் இன்னைக்கு லேட். நேத்து ரிலேஷன்ஷிப்க்கு இடமில்லை. எந்த அட்வாண்டேஜும் எடுத்த கூடாதுனு சொன்னப்போ கரெக்டா இருக்க மாதிரி பேசிட்டு இப்போ அட்வாண்டேஜ் எடுத்துக்கிறிங்களா மிஸ் கன்னல்மொழி?” என்று உறுத்துவிழிக்க,

இவளுக்கு கோபம் பெருகியது. தாமதமாக வந்ததற்காக அல்ல இந்த பேச்சு என்று உணர்ந்தவள் நிச்சலமான முகத்துடன்,

“சாரி பார் தி மிஸ்டேக் சார். இனி இது போல எப்பவும் நடக்காது. ஐ டோன்ட் டேக் எனி அட்வாண்டேஜ்” என்று அமரிக்கையாக கூற,

இவனுக்கு அவளது பாவனையில் சுர்ரென்று ஏறியது.

தன்னை கட்டுப்படுத்தியவன்,

“திஸ் இஸ் அ லாஸ்ட் வார்னிங். இனி இது போல நடந்தா யு வில் பையர்ட்” என்று மொழிய,
‘சரி’ என தலை அசைந்தது.

ஒருவழியாக பேசி முடித்துவிட்டான் என்று எண்ணி, “ஷால் ஐ லீவ் சார்” என்று கேட்டாள்.

கால் வலி ஒரு புறம் காலையில் நடந்த கலவரத்தில் பச்சை தண்ணீர் கூட இன்னும் குடிக்காதது வேறு வயிற்றுக்குள் பிசைந்தது.

“நோ” என்று சடுதியில் மறுத்தவன்,

“ஐ வான்னா ஆஸ்க் யூ ஒன்திங்க்?” என்று அழுத்தமாக அவள் முகம் காண,

“சொல்லுங்க சார்” என்று தானும் அவனது முகத்தை பார்த்தாள்.

“மாமா அவரோட கம்பெனிக்கு கூப்பிட்டும் வர மாட்டேன்னு சொல்லிட்டு இங்க தான் வருவேன்னு பேசி என் ஆபிஸ்ல ஜாயின்ட் பண்ணியிருக்கியாமே? வாட் திஸ் தி ரீசன்?” என்று உறுத்து விழிக்க,

“வாட்?” என்று அதிர்வும் திகைப்புமாய் அவனை கண்டவள்,

“நோ” என்று மறுத்திட,

“டோன்ட் லை. எனக்கு எல்லா நியூஸும் வந்திடுச்சு. ஏன் என் கம்பெனிக்கு வந்த? வாட்ஸ் யுவர் பிளான்?” என்க,

இவளது இதழில் இகழ்ச்சி புன்னகை தோன்ற,

“இதெல்லாம் உங்க அருமை அத்தையும் அவங்க பெத்த ரத்தினமும் சொன்னாங்களா?” என்று நக்கலுடன் கேட்க,

“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்” என்றவன்,

“ஆன்ஸர் மீ. என்னையும் நடிச்சு ஏமாத்தி நெருங்க தான் இங்க வந்தியா?” என்று நேரடியாக வினா தொடுத்திட,

சுள்ளென்று ஏறிய கோபத்துடன் பதில் மொழிய வாயை திறந்தவளுக்கு சட்டென்று தடுமாற்றம் கலையில் இருந்து உண்ணாததும் இவன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிற்க வைத்ததாலும் கால்கள் தடுமாறியது.

அதனை கண்ட பார்த்தீபவன் தன்னையும் மீறி, “கனி” இந்த அருகில் வர முயற்சிக்க,

“நோ டோன்ட் டச் மீ” என்று அந்த நிலையிலும் இரைந்தவள் கதவை பிடித்து தன்னை நிலைநிறுத்த முயற்சித்தாள்.

விழிகள் லேசாக மங்கலாக தெரிந்தது. தலையை ஒரு உலுக்கு உலுக்கி தன்னை சமாளித்தவள் கதவை திறந்து மெதுவாக‌‌ நடந்து வந்து தனது இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

தலையெல்லாம் சுற்றுவது போல இருக்க அருகில் இருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து வாயில் கடகடவென சரித்தாள்.

லேசாக தெளிந்தது போல இருந்தது. பின் தனது துப்பட்டாவை நீரில் நனைத்து முகத்தை ஒரு முறை அழுத்தி தேய்த்தவளுக்கு சற்று மேலும் தெளிவாகியது.

இவளது செய்கையை கவனித்த தாரிகா, “ஹேய் கன்னல்மொழி ஆர் யூ ஒகே?” என்று பதறி வினவ,

மற்றவர்களும், “என்னாயிற்று?” என்று இவள் புறம் திரும்ப,

“ஹே நத்திங். ஜெஸ்ட் ஹெட் ஏக் தான். யூ கேரி ஆன்” என்று அவர்களிடம் கூறியவள் எழுந்து எதிர்ப்புறம் இருந்த பணிமனைக்கு சென்று ஒரு தேநீரை வாங்கி கொண்டு அமர்ந்தாள்.

இவை யாவையும் சுருக்கிய புருவத்துடன் தனது அறையில் இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தான் பார்த்தீபன்.

அந்நிலையிலும் குரலில் அவ்வளவு திடத்துடனும் அவள் கூறிய, “டோன்ட் டச் மீ” அவனை கடுப்பேற்றியது.

நேற்றைய புன்னகை போல இந்த வார்த்தையும் அவனை ஏகமாய் தாக்கியது.

அதன் விளைவாய் தான் கால்களை நன்று அழுத்தமாக ஊன்றி அவளை வெறித்து கொண்டிருந்தான்.

அவளது ஒவ்வொரு செய்கையும் அவதானித்து கொண்டிருந்தான். யாருடைய உதவியையும் நாடாது எல்லாவற்றையும் தானே செய்வளை கண்டு இவனுக்கு புருவம் இடுங்கியது.

இவளுக்கு திமிர் மட்டுமல்ல எல்லாமே கூடதான் இருக்கிறது என்று மூளை எண்ணி கொண்டது.

பார்த்தீபனது பார்வை ஊசியாய் முதுகை துளைத்தாலும் அதனை அசட்டை செய்தவள் ஏலக்காய் இஞ்சி மணக்க போட்டிருந்த தேநீரை ரசித்து ருசித்து பருகி கொண்டிருந்தாள்.

தேநீரின் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தவளுக்கு காலை நடந்த நிகழ்வுகள் நினைவில் நழுவியது.

“அம்மா…” என்ற சத்தத்தில் ஒரு கணம் தான் தடுமாறியது அடுத்த நோடியே ஓடி சென்று பார்க்க,

கோதை தான் இடுப்பை பிடித்தபடி கீழே விழுந்து கிடந்தார்.

அதனை கண்டு பதறியவள்,

“பாட்டி என்னாச்சு”என்று கையை பிடிக்க,

“சீ என்னை தொடாத அநாதை நாயே” என்று வலியிலும் முகத்தை சுழிக்க,

சட்டென்று இவளுக்கு முகம் இறுகியது. எழுந்து சற்று தள்ளி நின்று கொண்டாள்.

அவரது சத்தத்தில், “என்னாச்சு?” என்று குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஓடி வர,

கற்பகம், “ஐயோ அம்மா என்னாச்சு ஏன் இப்படி விழுந்து கிடக்குற” என்று பதற,

“வலுக்கி விழுந்துட்டேன்டி” என்று வலியில் முகம் சுருக்க,

“எப்படி எப்படி விழுந்த? பாத்து வர மாட்டியா?” என்று வினவ,

“நான் பாத்துதான்டி வந்தேன். என்னக்கருமமோ வழுக்கிடுச்சு. இத்தனை நாள் நல்லாதான இருந்தேன். எல்லாம் இந்த சனியன் வந்த நேரம்” என்று வெறுப்பை உமிழ,

கனிக்கு கோபம் தலைக்கு ஏறியது.

கனி ஏதோ கூற வர,

“அத்தை நீங்க விழுந்ததுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் எதுக்கெடுத்தாலும் என் பொண்ணையே பேசாதிங்க” என்று கடித்தபடி வந்து அவரை தூக்க உதவ,

“ஆமா பாட்டி அக்காவ உங்களை தள்ளிவிட்டா அவளை திட்றீங்க” என்று தமக்கைக்காக பேசியபடி தானும் தூக்க உதவி புரிந்தான் பிரவீன்.

இறுதியாக வந்து, “ஐயோ பாட்டி உனக்கு என்னாச்சு?” என்று பதறிய ப்ரத்யூ கீழே இருந்த எண்ணெயை கண்டுவிட்டு,

“பாட்டி தரையில எண்ணெய் இருக்கு அதுல தான் வழுக்கி விழுந்திருக்க. இந்த நேரத்தில எண்ணெய் எப்படி வந்துச்சு?” என்று வினவ,

கற்பகம், “எல்லாம் இந்த கொலைக்காரி தான் ஊத்தி இருப்பா. அவ தான இங்க இருந்தா வந்தவுடனே என் அம்மாவ கொல்ல பிளான் பண்ணிட்டா. இவ நல்லா இருப்பாளா? நாசமா போய்டுவா?” என்று சாபம் விட,

“என் பாட்டி வயசானங்க. அவங்களுக்கு இந்த மாதிரி பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு. உன்னையெல்லாம் வீட்டுக்குள்ள சேர்த்த அப்பாவ சொல்லணும்” என்று ப்ரத்யூ எகிறி கொண்டு வர,

அவர்களது திட்டத்தை உணர்ந்தவள் சுவற்றில் நன்றாக கைகளை கட்டி கொண்டு நின்று வேடிக்கை பார்த்தாள்.

அவள் நின்ற தோரணை எதிரில் இருந்தவர்களை வெறியேத்தியது.

சிவப்பிரகாசம், “ப்ரத்யூ தேவையில்லாம பேசாத. அவ எதுக்கு அப்படிலாம் பண்ண போறா?” என்று மகளை அதட்ட,

“நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராதிங்க. இத்தனை நாள் இந்த வீட்ல இது மாதிரி நடந்துச்சா. இவ வந்த பின்னாடி நடக்குதுன்னா இவ தான் அதுக்கு காரணம். இந்த அநாதை நாய் தான் காரணம்” என்று ஆங்காரமாய் கூற,

“இன்னொரு தடவை என் பொண்ணை அநாதைன்னு சொன்ன பொண்டாட்டினு கூட பாக்காம மேல கையை வச்சிடுவேன்” என்று சிவப்பிரகாசமும் நிலையிழந்து கத்த,

கற்பகமும் பதிலுக்கு கத்த வீட்டில் ஒரே கலவரம் இடையில் மருத்துவரை வரவழைத்து மருத்துவம் பார்த்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் கூறிவிட்டதில் கனியின் மீது விழுந்த பழி பெரிதாகி இருந்தது.

இவற்றையெல்லாம் சமாளித்துவிட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இதில் எங்கே காலைக்கு சமைத்து சாப்பிட அப்படியே அடித்து பிடித்து கிளம்பி ஓடி வந்திருந்தாள். இருந்தும் தாமதம் ஆகிவிட்டது.

தனக்காக தான் அந்த எண்ணெய்யை கொட்டி வைத்துள்ளார்கள் அதில் அவர்களே மாட்டி கொள்ள பழியை இவள் மீது போட்டிருந்தனர்.

அனைத்தையும் எண்ணி பார்த்தவளுக்கு இதழில் கசப்பான புன்னகை ஜனித்தது.

வாழும் காலத்தில் சக உயிர்களிடம் அன்பை செலுத்தாவிடினும் எதற்கிந்த வன்மம் என்றே இவளுக்கு தோன்றியது.

தேநீரை குடித்து முடித்ததும் சற்று தெம்பாக உணர சற்று முன்பு பார்த்தீபன் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வர இதழ்களில் இகழ்ச்சி புன்னகை.

அந்த காகித குவளையை குப்பை கூடையில் போட்டவள் வேக நடையில் பார்த்தீபனது அறை நோக்கி நடந்து சென்று,

“மே ஐ கம் இன் சார்” என்று அனுமதியை வேண்ட,

இவளது செய்கையை அவதானித்தபடி இருந்தவன் யோசனையுடன் அனுமதி அளிக்க,

உள்ளே நுழைந்தவள், “சார் லாஸ்ட்டா ஏதோ கேட்டிங்களே அதுக்கு ஆன்ஸர் பண்ணாம போய்ட்டே
ன்” என்றவள் அவனது மோஜைக்கு நேராக குனிந்து,

“பிளான் பண்ணி தேடி வர்ற அளவுக்கு நீங்க வொர்த்தும் இல்லை. இந்த உலகத்திலே கடைசி ஆம்ளை நீங்களா இருந்தா கூட நான் திரும்பியும் பார்க்க மாட்டேன்” என்றவள் விறுவிறுவென வெளியேறிவிட,

அவளது பதிலில் திகைத்து பின் அதிர்ந்தவனது முகம் செந்தணலாய் சிவந்துவிட்டது.
 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Kani oda indha bathiladi parthiban sir ku pothum nu nenaikiran illa vera ethachum ketkanum na keta nalla vangi kattikilam aval ah partha ah eppudi thonuthu aaluku aalu chumma aval ah kuthikitae irupaga iva amaithi ah vangi kanum ah enna
 
Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
Kani oda indha bathiladi parthiban sir ku pothum nu nenaikiran illa vera ethachum ketkanum na keta nalla vangi kattikilam aval ah partha ah eppudi thonuthu aaluku aalu chumma aval ah kuthikitae irupaga iva amaithi ah vangi kanum ah enna
Ama. Namma heroine konjem terror 😂😜
 
Top