• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 6

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 6


யாஷிற்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது ஆடவனை கண்டு.
விட்டால் பின்னால் சாய்ந்து விடுவோம் என்பதை உணர்ந்து கொண்டவள் கரங்களோ கதவின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ள உள்ளிழுத்த மூச்சை வெளி விடவில்லை. அதிர்ச்சி விலகாது அவனையே விழி மலர்த்தி பார்த்துக் கொண்டிருக்க நவீனோ வெகு சுவாதீனமாக புன்னகை மாறா பாவத்துடன் பாவையின் அபிநயங்களை கிரகித்துக் கொண்டிருந்தான் அருகிலிருந்த சுவற்றில் லேசாக சாய்ந்தப்படி. இடையில் அவனது புருவம் வேறு, 'என்ன?' என்பதாய் ஏறி இறங்க யாஷின் தலை இயல்பாய் தன்னை போல் இருபுறமும் அசைய மெதுவாக மூச்சை வெளி விட்டு தன்னை நிதானம் செய்து கொள்ள முயன்றாள். 'கிராதகா, எப்பொழுதும் என்னை மிரட்டிக் கொண்டே இருக்கிறானே! இப்பொழுது எங்கு மாடியிலிருந்து குதித்திருப்பானோ?' என்றவளின் எண்ணப்போக்கில் அவளது விழிகள் அபத்தமாய் மேற்கூரையை வேறு நோக்கி தொலைத்தது. ஆம், கதவு திறந்து
வெளி வந்தததை அவள் தான் கவனிக்கவில்லையே அந்தோ பரிதாபம். அவளின் செயலில் எண்ணப்போக்கை உணர்ந்தவனின் புன்னகை வழக்கத்திற்கு மாறாக மெலிதான ஒலியெழுப்பி விட சட்டென்று சுதாரித்து பெண் அவனை முறைத்தாள். 'ம்ம்...அப்புறம்' என்பதாய் அவளின் கோபத்தையும் ஆடவனது விழிகள் கேலி செய்ய, 'இவனை..' என்று பல்லைக்கடித்தவளுக்கு ஏற்கனவே இருந்த தலைவலி மேலும் சற்று கூடியது அவனின் பாவனையில்.





'போடா உன்னை பார்க்க மாட்டேன்' என்றெண்ணிய பாவையின் விழிகள் நவீனை தாண்டி பிரபுவின் வீட்டு வாயிலை நோக்கி பாய்ந்தது. ஆம், அவள் பிரபுவையே பார்ப்பதை கதவை திறக்கும் பொழுதே அவதனித்து விட்டவன் அவனை மறைத்து அதாவது யாஷிற்கு முன்பாக அவள் தன்னை மட்டும் காணும் வகையில் நின்றிருந்தான். இப்பொழுது அவனின் பார்வை தன்னை விட்டு விலகுவதை பொறுக்க இயலாதவனாக மீண்டும் நகர்ந்து பிரபுவை மறைத்தப்படி நிற்க, 'அடேய், உனக்கு என்ன தான்டா வேணும்?' என்று பார்வை பார்த்தாள் பெண்.


உணர்ந்தவன் இதழ்களோ, "என்ன கேட்டாலும் கொடுப்பியா யாஷ்?" என்று கேலியுடன் வெளி வர அவளுக்கு மயக்கம் வராத குறை தான். அவனது குரலில் உருக முயன்ற மனதை இழுத்து பிடித்தவள் விழிகள் அருகிலிருந்த பூந்தொட்டியில் நிலைத்தது. ஆம், அதை தூக்கி அவனின் தலையில் போடுவதற்கான ஆராய்ச்சி தான் மனதில். 'அடுத்து பேசி தான் பாரேன்' என்ற பாவனையில் நின்றிருந்தாள்.


தலையை கோதிக் கொண்டவன் புன்னகை மேலும் விரிய, 'அடேய், என்னால் நிற்கவே முடியவில்லை, இதில் நீ காட்டும் சர்க்கஸை வேறு பார்க்க வேண்டுமா? எல்லாம் என் நேரமடா' என்றே நொந்தவள் விலகி சென்று படியில் அமர்ந்து கொண்டாள் தலையை பிடித்தப்படி. அவளுக்கு தெரிந்திற்று, நவீன் கண்டிப்பாக அவளை நகர விட மாட்டானென்று.



நன்றாக நின்று கொண்டிருந்தவள் அமரவும் அதுவும் தலையை பிடித்துக் கொண்டு அமரவும் தான் நவீன் மூளை சுதாரித்தது. அவளருகில் சென்றவன் விளையாட்டை கைவிட்டு, "என்ன செய்யுது யாஷ்?" என்றான் அக்கறை ததும்பிய குரலில்.

அவளின் தலை நிமிரவேயில்லை. ஏனோ அவனின் அக்கறை வார்த்தைகள் கண்களை கரிக்க செய்தது. ஆனால் காட்ட விருப்பமில்லாது தலையை குனிந்தபடியே அமர்ந்திருக்க நவீனின் கை இயல்பாய் அவளின் தாடையை பற்றி முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியது. 'இதை எதிர்பார்க்கவில்லை' என்பதை பேதையின் விழிகள் இயல்பை விட அதிகமாக விரிந்து அங்குமிங்கும் அலைமோதி பிரலிபலிக்க அதிலே அந்த நொடியே உருகி கரைய முயன்றது ஆடவன் மனது.


அவனின் விரல்கள் இன்னும் பெண்ணின் வதனத்திலே நீட்டிப்பு செய்தது. அவனது தீண்டலில் தேகம் முழுவதும் சிலிர்த்தெழ விழிகள் தாமாகவே மூடிக் கொள்ள, "தலை வலிக்குது" என்றாள் முணுமுணுப்பாக அவனை காணும் திராணியின்றி.


"ஹாஸ்பிடல் போகலாமா?" என்றவனின் கேள்வியில் சுதாரித்து விழித்துக் கொண்டவள், "வேண்டாம், சூடா காபி குடிச்சா சரியாகிடும்" என்றபடி பிரபுவின் வீட்டை ஆராய்ந்தாள். அவளின் வதனத்தில் இருந்து கையை எடுத்துக் கொண்டவன், "அவன் அப்பவே போய்ட்டான்" என்றிட, 'என்ன?' என பெண் திடுக்கிட்டு விழிக்க யாஷ் வீட்டின் முன் ஒருவன் வந்து நின்றான். அவனின் உடையே உணவு கொண்டு வந்திருக்கிறான் என்பதை உணர்த்த, "ஃபுட் ஆர்டர் பண்ணியா நீ?" என்ற நவீன் அவளை விடுத்து அந்த ஆடவனிடம் சென்றிருந்தான்.


யாஷ்வியும் வேகமாக எழுந்து கையிலிருந்த சாவியைக் கொண்டு வீட்டை திறக்க முனைந்தாள். அதற்குள் நவீன் பணத்தை கொடுத்து உணவை பெற்றுக் கொண்டு அந்த ஆடவனை அனுப்பி விட்டு தன் வீட்டிற்குள் நுழைய யாஷ் நிலை தான் பரிதாபம். 'என்ன இவன் வாங்கி சென்று விட்டான்? வீட்டிற்குள் செல்லவா? வேண்டாமா?' என்று முழித்து வாயிலிலே தேங்கி நிற்க டேபிளில் உணவை வைத்து விட்டு மீண்டும் வெளியே வந்தவன், "என்ன இப்படியே நிற்கிற நீ? காபி கேட்ட தான, வேண்டாமா. உள்ள வா" என்று அழைப்பு விடுக்க,

'ஏதே இவன் காபி போடப்போகிறானா?' என்றெண்ணியவள் எதுவும் பேசாமல் மௌனமாய் அவனின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். ஆம், அவளிற்கு உண்மையிலுமே நின்று பேசுமளவிற்கு கூட உடல் ஒத்துழைக்கவில்லை.


அமைதியாய் அங்கிருந்த ஷோபாவில் கண்களை மூடி அமர்ந்து கொள்ள அடுப்பறை நுழைந்திருந்த நவீன் சில நிமிடங்களில் தேநீர் குவளையுடன் வெளியில் வந்திருந்தான்.


"காபி மட்டும் போதுமா? டேப்லெட் எதுவும் எடுக்கிறீயா?" என்று வினவியபடி டீபாயில் குவளையை வைத்து விட்டு அவளுக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, "இதுவே போதும், கொஞ்ச நேரத்தில சரியாகிடும்" என்று பதிலளித்தவள் கரங்கள் இயல்பாய் குவளையை கைப்பற்றிக் கொண்டது.


ஆடவனின் விழிகள் முழுவதுமே அவளையே அவதனித்தாலும் அவள் அதை கருத்தில் கொள்ளாது மிடறு மிடறாக தேநீரை உள்ளிறக்கியபடி, "காபி நல்லா இருக்கு" என்று வேறு கூற அவனோ முகத்தில் எந்த பிரதிபலிப்பும் காட்டாது அப்படியே கைகளை பின்னால் மடக்கி இலகுவான அமர்ந்திருந்தான் இதழில் கரைய விரும்பாத புன்னகையுடன்.

குவளையை காலி செய்த யாஷ் கிளம்புவதற்காக எழுந்து கொள்ள, "சாபிட்டு போ யாஷ்" என்றவனும் எழுந்து உணவு மேஜையில் அமர்ந்து கொள்ள, 'திமிரை பார், ஏதோ இவனே சமைத்தது போல் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறான். நான் தானே ஆர்டர் செய்தேன்' என்று பொறுமியவள், "இல்ல, நான் வீட்டில போய் சாப்பிட்டுக்கிறேன்" என நகராது அப்படியே நின்று கொண்டு குரல் கொடுத்தாள் தலையை மட்டும் அவன் புறம் திருப்பி.

"பயப்படாத, உன்னோட சாப்பாட்டை நான் ஒன்னும் பிடுங்கி திண்ணுட மாட்டேன்" என்று நக்கலாக குரல் கொடுத்தான் நவீன்.


'க்கும்...இது வேறயா? சாப்பாட்டை இல்ல நீ என்னையே முழுங்கிற மாதிரி தானேடா பார்க்கிற' என்று அவனை முறைத்தவள் அடுப்பறை நுழைந்து கைகளை கழுவிக்கொண்டு அவனுக்கெதிரில் அமர்ந்து விட உணவை பிரித்து தட்டில் வைத்து அவள் புறம் தள்ளி வைத்தவன் கன்னத்தில் கைக்கொடுத்து அமர்ந்திருந்தான்.


'அடடே! நான் என்னமோ எக்ஸிபிஷன் காட்டுற மாதிரில்ல இனி பார்ப்பான்' என்றவளின் தொண்டைக்குள் உணவு இறங்க மறுத்தது தான். எப்பொழுதும் விரைவாக உண்டு முடிப்பவள் மெதுவாக உணவோடு சேர்த்து அவனையும் அரைத்து மென்று விழுங்கினாள் கோபத்தில். யாஷ் எத்தனை விதமான பாவனைகளை கொடுத்தாலும் நவீனிடத்தில் அந்த ஒரே ஒரு அலட்டலில்லாத பாவனை தான் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை.


உண்டு முடித்தவள் ஓரளவு தெளிந்திருந்தாள். "நீங்க எப்படி இங்க திரும்பவும் வந்தீங்க?" என்று வீட்டை கருத்தில் கொண்டு வினவினாள். ஆம், நேற்று முதல்நாள் வரை வேறொரு குடும்பம் இங்கிருந்ததை யாஷ் அறிவாள்.


இதழில் லேசான புன்னகை அரும்ப, "கண்டிப்பா சொல்லணுமா?" என்றவன் வினாவில், 'போய் தொலைடா, உன்கிட்ட போய் பேசினேன் பார் என்னை சொல்லணும். எப்ப கேள்வி கேட்டாலும் பதிலுக்கு திரும்பி கேள்வி தான் கேட்கிறான்' என்று அவனை வறுத்தெடுத்த யாஷ் எழுந்து கொள்ள,

"உனக்காகத்தான் வந்தேன் யாஷ், அதுவும் இந்த வீடு தான் வேணும்னு ஸ்டண்ட் எல்லாம் செய்து, இந்த வீட்டில இருந்தவங்களை காலி பண்ணி" என்றவன் வார்த்தையில் தளர்ந்து அமர்ந்தவள், "இது தப்பில்லையா?" என்றாள் கமறிய குரலில். ஆம், காணமல் போன தலைவலி மீண்டும் தொற்றிக் கொள்ளும் போல் தோன்றியது அவனது வார்த்தையில், 'இன்னும் என்ன எல்லாம் செய்து தொலைத்திருக்கிறான்! அதுவும் அவன் செய்வதை செய்து விட்டு எனக்காக என்கிறானே' என்ற எண்ணத்தில்.



"எது தப்பு, அவங்களை மேல இருக்க ப்ளோருக்கு தான் ஷிப்ட் பண்னேன் தென் என்னோட வீட்டை தான காலி பண்ண சென்னேன்" என்ற விளக்கம் கொடுத்தான் பொறுமையாக. நவீன், இதுவரை இத்தனை அமைதியாய் யாருக்கும் விளக்கம் கொடுத்ததில்லை. ஏனோ பாவையின் விழிகளில் தோன்றிய கலக்கத்தை போக்க வேண்டி மனது வெகு பிரயத்தனப்பட்டது.


அவனது பேச்சில் ஓரளவு சமன்பட்டவள் இருபுறமும் தலையசைத்து எழுந்து கொள்ள நவீன் அப்படியே டேபிளில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் விழிகளை மூடி.


அவனிடம் கூறாமல் எப்படி கிளம்புவது என்று தயங்கிய யாஷ் முயன்று வரவழைக்கப்பட்ட குரலுடன், "நவீன், நான் கிளம்புறேன்" என்றிட அவனிடம் அசைவே இல்லை. 'ப்ம்ச்... இவனோடு' என்று சலித்தவள் மீண்டும் இயல்பை விட சத்தமாக, "நவீன்" என்றழைக்க இம்முறையும் அவன் எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை. 'வேண்டும் என்று தான் செய்கிறான்' என பெண்ணிற்கு புரிந்தது. 'ஆனால் என்ன செய்வது அருகில் செல்லலாமா?' என்று புரியாது விழித்தவள் ஏதோ ஒரு தைரித்தில் அவனுக்கருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொள்ள இம்முறை அரவத்தில் நிமிர்ந்து அமர்ந்தான் மூச்சை இழுத்து விட்டப்படி.

அவனது இதழில் புன்னகை ததும்ப தன் முன்னிருந்த பாவையின் விரல்களை நோக்கி ஆடவன் கரம் நீண்டது. பெண் அன்னிச்சையாக மருண்டு கைகளை பின்னால் இழுத்துக் கொள்ள அவன் முகம் சட்டென்று வாடித்தான் போனது. அதில் யாஷ்க்கும் ஏக வருத்தமே, அவளும் வேண்டுமென்று செய்யவில்லை, ஏதோ தன்னையும் அறியாமல் நடந்து போனது. அவஸ்தையுடன் நெற்றியை தேய்த்தவளை அப்படியே இமைக்க மறந்து பார்த்து அமர்ந்திருந்தவன், "என்னை விட்டு போய்ட மாட்டேல்ல யாஷ்?" என்றான் ஒரு வித ஆழ்ந்த குரலில்.


'க்கும்..' என்று தொண்டையை செருமி, "நீங்க போக விட்டுடுவீங்களா என்ன?" என்று எதிர் கேள்வியுடன் புன்னகை ததும்ப பெண்ணவளின் புருவம் ஏறி இறங்கியது.



அவளின் பாவனையில் நவீனின் இதழிலும் புன்னகை துளிர்க்க கைகளை தலைக்கு கொடுத்து பின்னால் சாய்ந்து இலகுவாக அமர்ந்து கொண்டான். அந்த சூழல் இருவரின் மனதையும் இதமாக்கியிருக்க பதிலுக்காக நவீனின் வதனத்தையே யாஷின் விழிகள் ஆராய அவன் ஜனித்த மந்தகாச புன்னகையை மரணிக்க விடாது இதழில் நிரப்பி அமர்ந்திருந்தான், 'ஓஓ...அந்தளவிற்கு உனக்கு என்னை தெரியுமா?' என்ற பாவனை காட்டி.



யாஷின் விழிகள் கடிகாரத்தில் நிலைக்க மீண்டும் கிளம்புவதற்காக எழுந்து கொள்ள இம்முறையும் விழிகளை மூடிக் கொண்டான். 'என்ன விளையாட்டு இது?' என பெண் ஆயாசமாக புருவத்தை நீவியபடி பார்த்தாள்.


நொடிகள் நிமிடங்களாக நீள யாஷின் பொறுமை பறிபோக அவளின் கரங்கள் தன் முன்னிருந்த டேபிளை லேசாக தட்டியது. எழுந்து நின்றவன் தலையை கோதிக் கொண்டு, "நீ கிளம்பு யாஷ்?" என்றான். ஆனால் பெண்ணவளின் கால்கள் நகர மறுத்து அடம்பிடிக்க கரங்களோ வலுவாக தன் முன்னிருந்த நாற்காலியின் விளிம்புகளை அழுத்தி பிடித்துக் கொண்டது.


ஏதோ கேட்க முயன்று விழுங்கியபடி நின்றவளின் செவியை, "என்ன யாஷ் கிளம்பலையா நீ?" என்ற நவீனின் குரல் தீண்டிற்று.


எச்சிலை விழுங்கியவள், "திரும்பவும் சொல்லாம போய்ட மாட்டிங்களே?" என்று ஏக்கத்தை தேக்கி வினவ, இருபுறமும் பலமாக தலையசைத்து, "அதுக்கும் வாய்ப்பிருக்கு" என்றான் தாடியை தடவியபடி மீண்டு கொண்ட அலட்டலுடன் அவளை வம்பிலுக்கும் பொருட்டு.


அவ்வளவு தான் நொடிப்பொழுதில் பெண்ணவளின் விழிகளில் இருந்து கரகரவென்று நீர் இறங்க பதறி போனான் ஆடவன்.


"யாஷ், என்ன இது?" என்ற அதட்டுதலோடு அவளருகில் வந்தவன் கரங்கள் பெண்ணின் கண்ணீரை துடைக்க முனைய, தன்னை தேற்ற மேலும் சில நிமிடங்கள் தேவைப்பட்டது பாவைக்கு.



அவனிடமிருந்து விலகி நின்றவள், "திரும்ப போய்டுவீங்களா நீங்க?" என்று மிரட்டல் தொனியில் வினவியபடி அவனின் கழுத்தை நெறிப்பது போல் கைகளை கொண்டு செல்ல ஆடவனிடமிருந்து அப்படியொரு மலர்ந்த புன்னகை.



"சீக்கிரம் என்கிட்ட வந்திடு யாஷ்" என்றவனின் யாசிப்பில் உருகி கரைந்தவள், "நான் உங்ககிட்ட தான் இருக்கேன் நவீன்" என்றாள் முணுமுணுப்பாக புன்னகையை விழுங்கிக் கொண்டு கண்களை சிமிட்டியப்படி.


அவள் விழிகள் படித்த அபிநயம் ஆடவனை தவிக்க செய்ய அள்ளிக் கொள்ள தோன்றிய கரங்களை முயன்று கட்டுப்படுத்தியவன் தலையை கோதியபடி, "கிளம்பு யாஷ்" என்றான் அவஸ்தையான குரலில்.



தலையசைத்தவள் வாயிலை நோக்கி நகர அவளின் பின்பே வந்தவன், "யாஷ் சொல்ல மறந்துட்டேன். நாளைக்கு சென்னை கிளம்பிடுவேன்" என்று நெற்றியை நீவ அப்படியே கதவில் கை வைத்தப்படியே நின்றுக் கொண்டவள் அதிமுக்கிய வினாவாக, "நீங்க என்ன வேலை தான பார்க்குறீங்க?" என்றாள் அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு.


"ஏன் வேலைக்கு போகலைன்னா நீ என்னை கண் கலங்காம பார்த்துக்க மாட்டியா என்ன?" என்றவன் கேள்வியை கிரகித்தவள் அவனை முறைத்து, "க்கும்...இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான், உங்களை ரீகன்சிடர் பண்ணணும் போலயே மிஸ்டர் நவீன்?" என்று கூறி அவனை மேலும் கீழும் பார்த்தாள் இடுப்பில் கையூன்றி.


"ஓஓ...அந்த ஐடியா எல்லாம் இருக்கா உனக்கு?" என்றவன் புருவம் ஏறி இறங்க, அவளின் இதழ் வளைந்தது நக்கலாக.


"இப்போதைக்கு யாஷ் பின்னாடி சுத்துறதை தான் ப்ரைமரி ஜாப்பா பார்த்துட்டேன் இருந்தேன். இனிமே அதுக்கு அவசியமிருக்காது பிகாஸ் அவ என் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டா" என்று அலட்டலில்லாத புன்னகையோடு கூறியவனை, 'ஓஹோ, இது வேறயா? அப்புறம்' என்ற ரீதியில் பெண் பார்த்தாள்.


அவளது பார்வையில், "இல்லையா பின்ன?" என்ற வினாவோடு பேதையை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னேற யாஷ் இம்முறை அசையவேயில்லை. கைகளை கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்தப்படி நின்றாள் புன்னகை முகமாக. விழிகளோ தீட்சண்யத்தோடு ஆடவனை ஏறிட அங்குமொரு பார்வை கபளீகரம் தான். அதை, அவளை, அந்த பார்வை பிரதிபலிக்கும் அதீத ப்ரியத்தை எதிர்கொள்ள இயலாது ஆடவனின் விழிகள் தவித்து தடுமாற முகம் கொள்ளா புன்னகையுடன் அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி மூச்சுக் காற்று உரசும் தூரத்தில் நிற்க அவஸ்தையுடன் பாவையின் விழிகள் திரும்பிக் கொண்டது.


"யாஷ்..." என்றான் உருகி நெகிழ செய்யும் குரலில். செவிக்கு மிக அருகாமையில் கேட்ட அந்த ரிதத்தோடு கூடிய அழைப்பு பேதையின் அடிவயிறு வரை சென்று மின்சாரத்தை போல் தாக்கி அதிர்வலைகளை தேகம் முழுவதும் கடத்திச் சென்று ஒரு விதமான சிலிர்ப்பை கொடுத்தது. அவனின் வாசனை நாசியிலிருந்து பயணப்பட்டு நுரையீரலை நிரப்ப விழிகள் மூலம் மனதோ அவனை கிரகித்து உள்வாங்கி நிறைக்க ஆகப்பெரும் பிரயத்தனம் கொண்டது. பாவையின் விழிகள் காட்டிய மாஜாலத்தில் நவீன் முற்றிலும் கரைந்து தொலைய முயன்றான். ஆம், அத்தனை சுழற்று சுழற்றியது.


"ரிலாக்ஸ் யாஷ்" என்றவன் கரங்கள் பாவையின் கன்னத்தில் பதிய பேதைக்கு மேலும் குளிரெடுக்கவே செய்தது. அவளை உணர்ந்தவன் இதழ்கள், "எதுவும் செய்ய மாட்டேன், ஏன் இவ்வளவு பேனிக் ஆகுற நீ?" என்று வினா எழுப்பி நகையை விழுங்க, "தெரியும்" என்று தலையசைத்து முணுமுணுத்தவளின் இதழும் புன்னகையை உணவாக்கி இருந்தது.


பற்களுக்கிடையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அவளின் இதழை பிடித்திழுத்து விடுதலையளித்தவன் கரங்கள் தாழ்பாளையும் திறக்க, "கிளம்பு யாஷ்" என்றான். பெண்ணவளின் மனதிற்கு சட்டென்று அந்த நவீனுடனான ஏகாந்தத்தை கலைக்க விருப்பமில்லாது போக, "திரும்ப எப்ப வருவீங்க?" என்று கேட்டு நின்றாள்.


"தெரியலை யாஷ், அப்பாக்கு ஹெல்த் இஸ்யூ. அவர் ட்ரீமெண்ட்க்காக தான் யூ.எஸ்க்கு வந்தோம். இப்பயும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க" என்றவன் குரலில் இத்தனை நேரமிருந்த நெகிழ்வு மறைய சோகம் இழையோடியது.


"அச்சோ! என்னாச்சு நவீன், இப்போ எப்படி இருக்காங்க?" என்றவளின் கரம் அவனின் விரலை ஆதரவாக பற்றிக் கொள்ள, "லங்க்ஸ் இன்பெக்ஷன், பட் இப்போ பரவாயில்லை. அன்னைக்கு உன்னை பார்க்கும் போது கூட ரொம்ப சிவியர் கன்டிஷன்ல்ல தான் இருந்தார்" என்றான் பெருமூச்சை இழுத்து வெளியேற்றியப்படி.


"சீக்கிரமே சரியாகிடும் நவீன்" என்றவளின் கரங்கள் விரல்களை விடுத்து தாடியடர்ந்த அவனது கன்னங்களில் அழுத்தமாக பதிந்திற்று. அன்று அவன் அழுத்திக் கொண்டதை போல். இருபுறமும் தலையசைத்து புன்னகைத்தவன் தன் கன்னங்களில் அழுத்தி இருந்த கரத்தை எடுத்து அதில் இதழ் பதித்து, "தாங்க்ஸ் யாஷ்" என்றிட
அவளும் ஆடவன் செயலில் விரிந்த புன்னகையை இதழில் நிரப்பிக் கொண்டு விடைபெற்றிருந்தாள்.



தொடரும்.....
 
Last edited:
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Yash unnaku thalavali.la naveen ah partha spiderman.mathiri ya theriyuthu koorai ah pichikitu varathuku irundhalum aval um enna pannuva ivan adikkadi kanam ah poiduran athae mathiri ava iruka edathula entry kudutha ipadi than yosikka thonum pola naveen pesuna thula yae avan oda feelings correct ah ippo than puriya mathiri express matum ivolo length ah vum pesi irukan illa na ivan oda standard expression ku enna subtitle podurathu oh ho naveen appa oda health condition serious ah irukkarathu na la than adikkadi poiduran pola
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Superrrrrrrr superrrrrrrrr
Naveen pathina suspense lam konjam konjama open aaguthu
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
சூப்பர்ல காப்பி போட்டு குடுக்குற கணவர் யாஷ்க்கு அமஞ்சாச்சு, ரெண்டுபேரோட உள்ளமும் சேர்ந்தாச்சு இனி டும் டும் டும் தான் 😄😄😄😄😄😄
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Yash unnaku thalavali.la naveen ah partha spiderman.mathiri ya theriyuthu koorai ah pichikitu varathuku irundhalum aval um enna pannuva ivan adikkadi kanam ah poiduran athae mathiri ava iruka edathula entry kudutha ipadi than yosikka thonum pola naveen pesuna thula yae avan oda feelings correct ah ippo than puriya mathiri express matum ivolo length ah vum pesi irukan illa na ivan oda standard expression ku enna subtitle podurathu oh ho naveen appa oda health condition serious ah irukkarathu na la than adikkadi poiduran pola
நன்றி ❤️😍😍
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
சூப்பர்ல காப்பி போட்டு குடுக்குற கணவர் யாஷ்க்கு அமஞ்சாச்சு, ரெண்டுபேரோட உள்ளமும் சேர்ந்தாச்சு இனி டும் டும் டும் தான் 😄😄😄😄😄😄
நன்றி❤️❤️😍
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Yash eppo unaku naveen potta coffee kudujathum thala vali poedujula 😁😁naveen apadi epadi casual face reaction la irukan 😌😌yash enna pannalum yash ka V2 ya shift pannidan paru da naveen appa sikirama sari aganum Naveen yash enaki tha pa evaluyu neyram pesi irugaga athulaiyum yash avana pathi thittitu thaana irutha manasula 😂😂naveen chennai porana marubadiyum 🤩🤩nice episode 💖💖
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Yash eppo unaku naveen potta coffee kudujathum thala vali poedujula 😁😁naveen apadi epadi casual face reaction la irukan 😌😌yash enna pannalum yash ka V2 ya shift pannidan paru da naveen appa sikirama sari aganum Naveen yash enaki tha pa evaluyu neyram pesi irugaga athulaiyum yash avana pathi thittitu thaana irutha manasula 😂😂naveen chennai porana marubadiyum 🤩🤩nice episode 💖💖
நன்றிம்மா❤️❤️😍😍
 
Top