• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5

Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
ஜென்மம் 5

நீர் வழியே

மீன்களை போல்
என் உறவை
நான் இறந்தேன்
நீயிடிருந்தும் நீயிருந்தும்
ஒரு துறவை நான் உணர்ந்தேன்…


“அண்ணா…” என்றபடியே வந்து கையை பிடித்த நிவிஷாவை கண்டவன்,

“ட்ரிப் எல்லாம் எப்படி போச்சு?” என்று வினவிட,

“அது சூப்பரா போச்சு. கிளம்பவே மனசில்லை. இன்னும் டூ டேய்ஸ் இருந்துட்டு வந்திருக்கலாம்” என்று வருத்தப்பட,

“ஏன் இன்னும் ஒரு மாசம் அங்கேயே இருந்திருக்க வேண்டியது தான?” என்று மகளை முறைத்தபடி வந்தார் கஸ்தூரி.

“இருந்துருக்கலாம் அதுக்கு அந்த நீள மூக்கன் விடணுமே?” என்று அங்கலாய்த்தாள்.

“சொல்லி கொடுக்குற வாத்தியாரை இப்படிலாம் பேச கூடாதுனு எத்தனை முறை சொல்றது. இப்படி இருந்தா எப்படி படிப்பு வரும்?” என்று முறைக்க,

“அதெல்லாம் நாங்க பாஸ் ஆகிடுவோம் அத்தை” என்று சிரிப்புடன் உள்ளே வந்தாள் ப்ரத்யூ.

“வாடி ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டா யாராலயும் சமாளிக்க முடியாது” என்று சிரிப்பும் முறைப்புமாக கூற,

“உங்களுக்கு எங்க ப்ரெண்ட்ஷிப் பார்த்து பொறாமை” என்று என்று இருவரும் கட்டி அணைத்து கொண்டனர்.

நிவி, “மிஸ் யூ ப்ரத்யூ” என்க,

“மீ டூ டி” என்று பிரத்யூ மொழிய,

அவர்களது ஒற்றுமையை கண்டு நெகிழ்ந்தாலும் வெளியே,

“ரொம்பத்தான்” என்று நொடித்து கொண்டவர் மகன் நடப்பவற்றை புன்னகையுடன் பார்த்திருப்பதை கண்டு,

“பார்த்தி போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா. நான் காஃபி போட்டு வைக்கிறேன்” என்க,

தலையசைத்தவன் படிகளில் ஏறி மேலே சென்றான்.

இங்கு ப்ரத்யூவும் நிவியும் ஒரு வார கதைகளை பேச துவங்கினர்.

இருவருக்கும் ஒரே வயது தான் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் என்றதால் மிகவும் நெருங்கிய தோழமை இருந்தது.

யாரிடமும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து பேச மாட்டார்கள். ஒரே கல்லூரியில் வெவ்வேறு பிரிவில் படித்து வருகின்றனர்.

நிவிஷாவின் துறையில் இருந்து டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருக்க இருவரும் அதனை பற்றி தான் பேசி கொண்டிருந்தனர்.

கஸ்தூரி மூவருக்கும் தேநீரும் சிற்றுண்டியும் எடுத்து வர பார்த்தீபன் உடை மாற்றி கீழிறங்கி வந்தான்.

கரும்பச்சை நிறத்தில் டீசர்ட்டும் கருப்பில் பேண்டும் அணிந்து கீழிறங்கி வந்தவனை கண்ட ப்ரத்யூ வழக்கம் போல ஓரக்கண்ணால் ரசிக்க,

அதனை கண்ட நிவி நமட்டு சிரிப்புடன், “பால்ஸ திறந்து விடாத” என்க,

அதில் தானும் சிரித்தவள், “ஏன் என் அத்தானை பார்க்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு போகத்தான் உங்களுக்கு எல்லாம். பாத்துக்கோ அப்புறம் நாத்தனார் கொடுமை தான்” என்று என்க,

“ஆஹான் அப்போ நானும் உனக்கு நாத்தனார் கொடுமை தான். கற்பகம் அத்தை எப்பவும் என் சைடு தான்” என்று முறைத்தாள்.

இதனை கவனிக்காத ஏதோ சிந்தனையுடன் பார்த்தீபன் வந்து அமர,

“அத்தான்” என்றபடி அவனருகே சென்று அமர்ந்தவள்,

“கேக்க மறந்துட்டேன் ஆஸ்திரேலியால இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்திங்க?” என்று வினவ,

“அண்ணாக்கு அங்க ஷாப்பிங் போக டைம் இல்லையாம். அதனால எனக்கு மட்டும் தான் ஒரு ட்ரெஸ் வாங்கிட்டு வந்தாங்க” என்க,

பார்த்தீபனின் புறம் சடுதியில்,

“அவ சொல்றது உண்மையாத்தான்?” என்க,

நிவி சகோதரனிடம் கண்ணை காண்பித்தாள்.

அவனும், ‘ஆம்’ எனும் விதமாக தலையசைக்க,

சட்டென்று அவளது முகம் வாடிவிட்டது.

சட்டென்று எழுந்தவள், “நான் வீட்டுக்கு போறேன்த்தை” என்க,

மருமகளின் முகம் வாட பொறுக்கதாவர்,

“டேய் நீயும் இவ கூட சேர்ந்து என் மருமகளை வம்பிழுக்கிறியா?” என்று மகனை அதட்டியவன்,

“அவங்க பொய் சொல்றாங்க டா. உன் அத்தான் உனக்கு எதுவும் வாங்காம எப்படி வருவான்” என்றதும் முகம் மலர்ந்தவள்,

“அத்தான் என்ன வாங்கிட்டு வந்திங்க?” என்று விழிகளை விரிக்க,

சடுதியில் அவனுக்கு பல வருடங்கள் முன்பு தன்னை கண்டதும் முகம் மலர்ந்து விழிகளை விரிப்பவளது வதனம் நினைவில் நழுவி சென்றது.

நொடியில் அதனை ஒதுக்கியவன்,

“உனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி டைமண்ட் நெக்லஸ் வாங்கிட்டு வந்து இருக்கேன். உன் ப்ரெண்ட்கிட்ட தான் இருக்கு” என்க,

தோழியை முறைத்தவள், “என்கிட்டயே உன் விளையாட்டை காட்டீறியா?” என்க,

“ஜெஸ்ட் கிட்டிங்டி” என்றவள்,

“நானும் உனக்கு டார்ஜிலிங்ல இருந்து நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சமாதானம் செய்து அறைக்கு அழைத்து போனாள்.

இருவரும் செல்வதை கண்ட கஸ்தூரி,

“இதே மாதியே ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கணும்” என்க,

பார்த்தீபனும் தலையசைத்து ஆமோதித்தான்.

இருவரும் சென்ற வேகத்திலே வெளியே வர,

“அத்தான் இந்த நெக்லஸ் எனக்கு எப்படி இருக்கு?” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் வந்து நிற்பவளை கண்டவனது மனதில் மீண்டும் முதல் முறையாக தாவணி உடுத்தி கூச்சமும் சிரிப்புமாக,

“எனக்கு இது நல்லா இருக்காத்தான்” என்று வினவியவளது வதனம் வந்து போனது.

பட்டென்று தலையை உலுக்கியவன்,

“ரொம்ப நல்லாயிருக்கு ப்ரத்யூ” என்க, இவளுக்கு முகமும் அகமும் சேர்ந்து மலர்ந்து போனது.

“தாங்க்ஸ்த்தான்” என்றவள்,

“அத்தை எப்படி இருக்கு?” என்றிட,

“ஏன் ராசாத்தி உனக்கு எது போட்டாலும் தேவதை மாதிரி தான் இருப்ப” என்றிட,

அவளிதழில் கர்வ புன்னகை. காரணம் அவளது அழகை பற்றி புகழாதோர் மிகவும் குறைவு தான்.

கற்பகம் இயல்பிலே அழகு என்பதால் அந்த அழகு பிள்ளைகள் இருவருக்கும் வந்திருந்தது.

நல்ல பால் வெண்மை நிறத்தில் உயரத்திற்கேற்ப எடையும் அவ்வளவு அழகாய் இருப்பாள்.

இவளது அழகை கண்டே நிறைய ஆண்கள் காதலை தெரிவித்தது உண்டு. ஆனால் அவர்களை எல்லாம் பார்வையிலே நீ எனக்கு சமமா என்று உதறிவிடுவாள்.

காரணம் பார்த்தீபன் அன்றி வேறு என்ன? அழகு அறிவு என்று யாவிலும் முதலாவதாக திகழும் பார்த்தீபனின் மீது சிறுவயதில் இருந்தே தீராத ஆசை மயக்கம் என்றே கூறலாம்.

இவள் ஆசைக்கு தூபம் போடுவது போல பெரியவர்களும் பார்த்தீபனுக்கு நீ தான் மனைவி என்று எண்ணத்தை விதைத்திருக்க அது இன்று விருட்சமாகி இருந்தது.

நிவி வாங்கி வந்ததையும் இவர்களிடம் காண்பித்து மகிழ்ந்தவள் தான் வந்த விடயத்தை துவங்கினாள்.

“அத்தான் அந்த கொலைகாரி நம்ம ஆபிஸ்ல ஜாயிண்ட் பண்ணி இருக்காலாமே?” என்று வினவிட,

இத்தனை நாள் கண்ணில் பதியாதது கருத்திலும் பதியாது என்பது போல இருந்தது இன்று பார்த்துவிட்ட பிறகு அவளது முகம் தோன்றி மறைவது ஏன் என்று தன்னிடமே கேட்டு கொண்டிருந்தவன் ப்ரத்யூவின் கேள்விக்கு,

‘ஆம்’ எனும் விதமாக தலையசைத்தான்.

இதனை கேட்ட நிவி, “அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னாங்க. அவ எதுக்கு இப்போ திரும்பி வந்தா” என்று முகத்தை சுழித்து கேட்க,

“அந்த பொண்ணு நம்ம ஆபிஸ்லயா பார்த்தி வேலை பாக்குது? நீ தான் வேலை போட்டு கொடுத்தியா?” என்று கஸ்தூரி வினவினார்.

“அப்பா தான் ரெக்கமென்ட் பண்ணாங்க” என்க,

“அத்தான் மாமா அவங்களா ஒன்னும் சொல்லலை. இந்த பிச்சைக்காரி இருக்காளே அவ தான் அப்பாக்கிட்ட அடம்பிடிச்சா” என்க,

பார்த்தீபன் புருவம் சுருக்கி பார்த்தான்,

“ஆமா அத்தான்” என்று அவனருகே அமர்ந்தவள்,

“அப்பா எங்க ஆபிஸ்க்கு தான் வர சொன்னாங்க. ஆனால் அவ வந்தா உங்க ஆபிஸ்க்கு தான் வருவேன்னு அடம்பிடிச்சா. அதான் அப்பாவும் வேற வழியில்லாம மாமாக்கிட்ட பேசுனாங்க. இல்லைனா எங்க ஆபிஸ் இருக்கும் போது உங்கிட்ட எதுக்கு கேக்கணும்?” என்று வினவ,

அவள் கூறுவது சரி என்றே பட்டது பார்த்தீபனுக்கும்.

கஸ்தூரி, “ஏன் அந்த பொண்ணு அடம்பிடிச்சு பார்த்தி ஆபிஸ்ல சேர்ந்து இருக்கு?” என்று கஸ்தூரி வினவ,

பார்த்தீபனுக்கும் இந்த கேள்வி எழுந்தது ஆனால் கேட்கவில்லை.

“எதுக்குனு தான் தெரியலைத்தை. அவ ஏதோ பிளான் பண்றானு நினைக்கிறேன். அத்தான் எதுக்கும் கொஞ்சம் கேர்புல்லா இருங்க. பழைய மாதிரி நடிச்சு ஏமாத்தலாம்னு அத்தான் அத்தான்னு பாசமழைய பொழிவா அதெல்லாம் நம்பி ஏமாந்திடாதீங்க” என்று மொழிய,

கஸ்தூரி, “அந்த பொண்ணுக்கு எதுக்கு இந்த வேலை. அந்த பொண்ணு எதாவது உன்கிட்ட வந்து பேசிச்சா?” என்று வினவ,

‘இல்லை’ எனும் விதமாக தலை அசைத்தான்.

“ஸ்டார்டிங்ல இப்படிதான் அமைதியா இருப்பா. அப்புறம் போக போக அவ வேலையை காட்ட ஆரம்பிச்சிடுவா. விட்டா என் கம்பெனினு அதிகாரம் பண்ண கூட‌ ஆரம்பிச்சிடுவா. அவக்கிட்ட நீ ஒரு வேலைக்காரி மட்டும் தான்னு தெளிவா சொல்லிடுங்த்தான்” என்று ப்ரத்யூ மொழிய,

கண பொழுதில் ‘எனக்கு உங்களை தெரியாது’ என்றுவிட்டு விறுவிறுவென நகர்ந்ததும் தன்னறையில் தனக்கெதிரே அமர்ந்து ‘இல்லாத ஒன்றை எப்போதும் கூற மாட்டேன்’ என்று அழுத்தமாக கூறியது நினைவிலாடியது.

“அண்ணா நீ‌ எதுக்குண்ணா அந்த பிச்சைக்காரிக்கு வேலை கொடுத்த? அவெல்லாம் நம்ம கம்பெனில வேலை பாக்க தகுதியே இல்லாதவ‌. அவ செஞ்சதை நினைக்கும் போது இப்பவும் பாத்திட்டு வருது” என்று பொறிய,

“ஆமத்தான். அவளை வாசலோடயே அடிச்சு துரத்தி இருப்பீங்கன்னு நினைச்சேன். எதுக்கு வேலை கொடுத்திங்க” என்று ப்ரயூவும் வருந்த,

கஸ்தூரி, “அப்படிலாம் பேச கூடாது. அந்த பொண்ணு வேலைக்கு தான வந்து இருக்கு. அதுபாட்டுக்கு வேலையை பாக்கட்டும்” என்று இளகிய மனம் கொண்டவராக மொழிய,

பர்யூவிற்கு இது பொறுக்கவில்லை.

“அத்தை நீங்க ஏன் அந்த பிச்சைக்காரிக்கு சப்போர்ட் பண்றீங்க. நாங்க திரும்பி போனப்ப எங்களை பாத்து எப்படி ஏளனமா சிரிச்சா தெரியுமா? எங்கிட்டயே உங்களை வீட்டைவிட்டு துரத்தாம‌ விடமாட்டேன்னு சொல்றா. அப்பாவ ஏமாத்துற‌ மாதிரி அத்தானை ஏமாத்திடலாம்னு தான் அங்க போயிருக்கானு நினைக்கிறேன். உங்க அண்ணன் எப்படி அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு அது போல அத்தானையும் கைக்குள்ள போட்டுக்குற ஐடியால இருக்கா” என்றிட,

“ப்ரத்யூ” என்று சட்டென்று அதட்டல் போட்டான் பார்த்தீபன். அவள் பேசியது பிடிக்கவில்லை என்று முகமே காண்பித்து கொடுத்தது.

ப்ரத்யூவின் பேச்சை கேட்டு கஸ்தூரிக்கு பயம் எழுந்திட,

“பார்த்தி அந்த பொண்ணை ஆபிஸ்ல இருந்து அனுப்பிடுப்பா” என்று மகனது கையை பிடிக்க,

“ம்மா ப்ரத்யூ தான் புரியாம பேசுறான்னா நீங்களுமா? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என் அனுமதி இல்லாம யாரும் என்னை நெருங்க முடியாது. முக்கியமா அவ” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட,

ப்ரத்யூவின் முகம் மலர்ந்து போனது.

இதற்காக தானே இந்த வார்த்தையை கேட்க தானே ஓடி வந்தது. அது நிறைவேறிவிட்டது.

கன்னல்மொழி பார்த்தீபனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளாள் என்று கேட்டதில் இருந்து இருப்பு கொள்ளவில்லை.

எங்கே மீண்டும் தன்னுடைய அத்தானை அவளுடைய அத்தானாக மாற்றி கொள்வாளோ என்று காலையில் இருந்து தாயிடமும் பாட்டியிடமும் அத்தனை புலம்பல்.

அவர்கள் இருவரும் தான் அவளை பற்றி அவ்வபோது இப்படி தவறாக கூறி அவள் மீதான‌ எண்ணத்தை தவறாகவே வைத்திருக்க வேண்டும் மேலும் அந்த பிச்சைக்காரியை பார்த்தீபவன் கண்டுகொள்ள கூட மாட்டான் என்று தேற்றி அனுப்பி வைத்தனர்.

பார்த்தீபனது வார்த்தையில் இருந்தே அவன் நிச்சயமாக அவளை திரும்பி கூட பார்க்க மாட்டான் என்று தெளிவாக புரியவும் தான் மனதில் நிம்மதி ஜனித்தது.

வந்த வேலை முடிந்துவிட்டது இதனை உடனே தாயிடமும் பாட்டியிடமும் கூற வேண்டும் என்று நினைத்தவள்,

“சரிங்கத்தை போய்ட்டு வர்றேன்” என்று மற்றவர்களிடத்திலும் கூறிவிட்டு வீட்டை நோக்கி பயணமானாள்.

இங்கு பார்த்தீபனுக்கு வேலை தொடர்பான அழைப்பு வர எழுந்து தனதறைக்கு சென்றவன் பால்கனியில் நின்று பேசி கொண்டு இருந்தான்.

முழுதாக இருள் கவ்விய பொழுதில் ஒரு சில மகிழுந்து மட்டும் கடந்து சென்று கொண்டிருந்தது.

அந்த‌ இருளை கிழித்து கொண்டு வருவது போல தெருவிளக்கின் வெளிச்சத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள் கன்னல்மொழி.

தூரத்தில் இருந்த வரிவடிவமே பார்த்தீபனுக்கு அவள் தான் என்று உறுதியாக பார்வையை சற்று கூர்மையாக்கினான்.

சரியாக அதே நேரம் ப்ரத்யூ பேசி சென்ற வார்த்தைகள் செவிக்குள் அளவளாவியது‌.

‘உங்க ஆபிஸ்க்கு தான் வரணும்னு அடம்பிடிச்சு வந்திருக்கா?’ என்று,

ப்ரத்யூ கூறியவற்றை தூரத்தில் நடந்து செல்பவளிடம் மனது பொறுத்தி பார்க்க விழைந்தது.

என்னவோ எதுவும் ஒட்டவில்லை. விழிகள் அவளை கூர்மையாக அளவெடுத்தது.

தனக்கு முன்பே பேருந்து ஏறிவிட்டவள் ஏன் இவ்வளவு தாமதமாக வர வேண்டும் என்று வினா எழுந்தது.

இரண்டு கையிலும் பெரிய பைகள் இருந்தது. ஏதோ வாங்கி வருகிறாள் என்று புரிந்தது.

பைகள் இரண்டும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. கனமாகவும் இருக்கும் என்று புரிந்தது.

சற்று தூரம் நடந்ததும் கையில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு சிறிது மூச்சு வாங்கினாள்.

மிகவும் கணமாக இருந்தது போலும் பத்தடிக்கு ஒரு முறை வைத்து வைத்து எடுத்து சென்றாள்.

சற்று உன்னிப்பாக கவனித்ததில் கடையின் பெயர் தெரிந்தது. அது இந்த ஏரியாவின் முக்கிய சாலையில் அமர்ந்துள்ளது.

நடந்து வந்தால் நிச்சயமாக பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும். அதிலும் இவ்வளவு சுமையை எதற்காக தூக்கி வருகிறாள்.

ஒரு ஆட்டோவை பிடித்தால் ஐந்து நிமிடத்தில் வீடு வந்திருக்கலாம். அப்படி என்ன வந்த நாளே இவளுக்கு இவ்வளவு தேவைகள் என்று பலவாறு சிந்தனைகள் எழுந்தது.

பத்தடி தூரம் நடந்தவள் பையை வைத்துவிட்டு நிமிர யாரோ தன்னை பார்வையால் துளைப்பதை உணர முடிந்தது.

பார்வையை வேகமாக நான்கு புறமும் திருப்பினாள். யாரும் பார்வை படும் தூரத்தில் இல்லை.

மேலே திரும்பி பார்த்தவளது பார்வை ஒரு நொடி அவனது அறை பால்கனியில் நின்றது.

அவன் நின்றிருந்தது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. எல்லாம் ஒரு நொடி தான் சடுதியில் பார்வையை விலக்கியவள் பையை எடுத்து கொண்டு விறுவிறுவென நடக்க துவங்கினாள்.

அதன் பிறகு கீழே வைக்கவில்லை. அந்த தெருவை கடந்த பிறகு தான் கீழே வைத்துவிட்டு மீண்டும் நடந்தாள்.

ஒருவழியாக வீட்டை அடைய காவலாளி,

“பாப்பா நீங்க எதுக்கு இதை தூக்கிட்டு வர்றீங்க. என்கிட்ட கொடுங்க” என்று கேட்க,

“இல்லை நானே தூக்கிக்கிறேன்” என்று மறுக்க,

“அட கொடுங்க பாப்பா” என்று வாங்கி கொண்டவர் வீட்டு வாசல்வரை வந்தார்.

இவளுக்காகவே காத்திருந்த பிரவீன் தமக்கையை கண்டதும்,

“அக்கா வந்துட்டியா” என்று கையை பிடித்து கொண்டான். அவனது முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. தாயை கண்ட சேய் போல.

அதனை கண்ட கனிக்கு தான் நெஞ்சம் கனிந்து போனது.

காவலாளியிடம், “இதெல்லாம் யார் கொண்டு வந்தது?” என்று வினவ,

“நான் தான் வாங்கிட்டு வந்தேன்டா” என்று அதனை வாங்க முயல,

“நான் தூக்கிகிறேன் கா” என்று தானே வாங்கி அவளது அறைவரை சென்றான்.

உள்ளே நுழைந்ததும், “இதெல்லாம் என்னக்கா?” என்க,

“சமைக்கிறதுக்கு திங்க்ஸ்டா” என்றதும் அவனது முகத்தில் அதிர்ச்சி.

“அக்கா” என்றவன் வார்த்தை வராது பார்க்க,

“பிரவீன் எனக்கு தன்மானம் ரொம்ப முக்கியம்” என்றவள் அழுத்தமாக கூற,

இவனுக்கு புரிந்தது. தாயும் தமக்கையும் பேசிய பேச்சின் எதிரொலி தான் இது என்று.

இருந்தும் தங்களது வீட்டிலே தமக்கை தனியாக சமைத்து உண்பது வருத்தத்தை அளித்தது.

அதனை கவனித்தவள்,

“நீ படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போய் உன்னோட சம்பாத்தியத்துல எனக்கு சாப்பாடு போடு கண்டிப்பா நான் சாப்பிடுவேன்” என்க அவனது முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் பரவியது.

“கண்டிப்பாக்கா. நான் சம்பாதிக்கும் போது உனக்கு எல்லா செலவும் என்னோடது தான்” என்க,

இவளுக்கு புன்னகை முகிழ்ந்தது.

“பைவ் மினிட்ஸ் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்றவள் உடை மாற்றி வந்து அமர,

“பர்ஸ்ட் டே ஜாப் எப்படி போச்சு?” என்று வினா தொடுக்க,

“ஹ்ம்ம் குட்” என்றாள்.

“பார்த்தி அத்தானை பாத்து பேசுனயா? உன்னை அவருக்கு அடையாளம் தெரிஞ்சதா? வீட்ல இருக்க மத்தவங்க மாதிரி இல்லை அத்தான் ரொம்ப நல்லவருக்கா. அதான் அப்பா உன்னை அங்க ஜாப் சேர்த்துவிட்ருக்காரு” என்றிட,

சடுதியில் அவன் கூறிய வார்த்தைகள் வந்து போக முகத்தில் புரியாத பாவத்துடன் மென்னகை.

“என்னக்கா பதில் சொல்ல மாட்ற?” என்று மீண்டும் வினவ,

“ஹ்ம்ம் பாத்தேன். அவருக்கு என்னை அடையாளம் நல்லா தெரிஞ்சது. இன்டர்வியூ வச்சுதான் ஜாப் கொடுத்தாரு. ரொம்ப நல்லா பேசுனாரு” என்று பொய் பாதியும் மெய் மீதியுமாக கூறினாள்.

“எனக்கு தெரியும் அத்தான் ரொம்ப நல்ல கேரக்டர். பணத்தை வச்சு ஆளை ஜட்ஜ் பண்ண மாட்டாங்க” என்க இவளது இதழில் இகழ்ச்சி புன்னகை விரிந்தது.

பிறகு நேரம் செல்ல சிவப்பிரகாசமமும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.

கனி தானே இவர்களுக்கு சமைத்து தர இரவுணவு இனிமையாக கழிந்தது.

உறங்க செல்லும் நேரம் அலைபேசியின் கானா இசைத்தது.

எடுத்து பார்க்காமலே அழைப்பது மகேஷ் தான் என்று உணர்ந்தவள் சிரிப்புடன் அழைப்பை ஏற்றாள்.

மறுமுனையில் மகேஷ், “கனி என்ன பண்ற? வேலையா இருக்கியா?” என்க,

“இல்லை இப்போதான் சாப்பிட்டேன் படுக்க போறன்”

“ஓ… இன்னைக்கு அந்த கம்பெனிக்கு இன்டர்வியூ போனீயா? என்னாச்சு?”

“ஹ்ம்ம் போனேன். ஜாப் கிடைச்சது ஜாயின்ட் பண்ணிட்டேன்”

“அவன் அந்த பார்த்தீபன் கம்பெனி தான அது உன்னை எதாவது சொன்னானா?”

“மரியாதை கொடுத்து பேசுடா”

“ஓ… அத்தை மகன் மேல் பாசம் பொங்குதோ?”

“ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வயசுக்கு மரியாதை கொடுக்கணும்”

“சரிதான் அவர் என்ன சொன்னார்” என்று அழுத்தி கேட்க,

“அவருக்கு என்னை நியாபகமே இல்லை”

“வருத்தமா?”

“நெவெர் சும்மா சொன்னேன். ரெக்கமெண்டேஷன்ல ஜாப் கொடுக்க மாட்டேன்னு சொன்னார்” என்று நடந்தவற்றை கூறினாள்.

“சரியா தான் பண்ணி இருக்க. இருந்தும் உனக்கு ஜாப் பிடிக்கலை செட் ஆகலைன்னா உடனே என்கிட்ட சொல்லு. நான் ஊருக்கு அழைச்சிட்டு வந்திட்றேன்” என்றவனது குரலில் இருந்த வாஞ்சையில் நெஞ்சம் உருகியது.

“கண்டிப்பா எனக்கு உன்னைவிட்டா யார் இருக்கா? உன்கிட்ட தான் வருவேன்” என்றவளது வார்த்தை அவனை அமைதியுற செய்தது.

பின்னர் சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு உறங்க சென்றாள்.

விழிகளை மூடியதும் இன்றைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போக நிலையாக விழிகளுக்குள் நின்றான் அவன் பார்த்தீபன்.

உன்னை அடையாளமே தெரியாத ஒருவனை பற்றி உனக்கென்
ன நினைப்பு என்று மனசாட்சியால் குட்டு வாங்கியவள் நேரம் சென்றே உறங்கினாள்.

இருந்தும் சரியாக ஐந்து மணிக்கு விழிப்பு வந்துவிட எழுந்து யோகாசனம் செய்துவிட்டு நடைபயிற்சி செய்ய கீழிறங்கினாள்.

யாரும் எழாததால் வீடு அமைதியாக இறுதி படியில் இறங்கிய நொடி

“அம்மா…” என்று அமைதியை கிழித்து கொண்டு வந்த குரல் கனியை சட்டென்று தடுமாற செய்திருந்தது‌.






 
Well-known member
Messages
935
Reaction score
685
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Yaarukku ennachu nu theriyalaye
 
Well-known member
Messages
383
Reaction score
269
Points
63
Mozhi sappadu kooda andha veetula sapida matra ava parthiban kita urimai eduthuka pakkuralam ah nalla comedy panraga ava nega enna va pesuga nan pattuku ennoda uzhaipu la vazhuven nu sollama sollita ah ithu parthiban ku serthu than nu avanuku muzhusaa theriyum pothu sir oda reaction ennavo
Yaru da ithu kalai la yae indha amma na ra alarm
 
Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
Mozhi sappadu kooda andha veetula sapida matra ava parthiban kita urimai eduthuka pakkuralam ah nalla comedy panraga ava nega enna va pesuga nan pattuku ennoda uzhaipu la vazhuven nu sollama sollita ah ithu parthiban ku serthu than nu avanuku muzhusaa theriyum pothu sir oda reaction ennavo
Yaru da ithu kalai la yae indha amma na ra alarm
😍😍😍
 
Top