• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 5



யாஷ்வி, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து திங்களொன்று கடந்திருந்தது. அவனை சுற்ற விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்து வந்திருந்தவள் தான் ஆடவன் நினைவில் உருகி கரைந்து போனாள்.
முதல் வாரம் அன்னையின் கவனிப்பில் நெகிழ்ந்தவளுக்கு எதுவுமே தெரியவில்லை ஆனால் நாட்கள் நகர நகர அதுவும் நவீன் தன்னை காண வருகிறேன் என்று கூறிய நாளன்றெல்லாம் நிலை கொள்ளாமல் தவித்து தான் போனது மனது. 'ப்ம்ச்... அவனிடம் சொல்லியிருக்கலாம். ஒரு வேளை எனக்கு பிடிக்கவில்லை என்று நினைத்து விலகி சென்றிடுவானோ? வீட்டிற்கு சென்றிருப்பானோ? அண்ணியிடம் பேசியிருப்பானோ?' என்றெல்லாம் ஆயிரமாயிரம் வினாக்கள் மண்டையை குடைய 'போசாமல் அங்கேயே இருந்திருக்கலாம்' என்ற முடிவிற்கே வந்து விட்டாள் அபத்தமான எண்ண அலைகளின் அலைக்கழிப்பினால்.


அங்கு ஷமீயை போல் இங்கு ஸ்மிருதி, அவளின் அகவை ஆறு. "அத்தை" என்று யாஷ்வியையே சுற்றி வலம் வர பொழுதுக்களை நெட்டி தள்ளினாள் என்றே கூறலாம் கிளம்பும் நாளை எதிர்பார்த்து. தன்னுடைய எண்ணங்களின் மீது அவளுக்கே சலிப்பு மேலிட்டது. அவளின் அண்ணி மனிஷாவிற்கு பிரசவகாலம் நெருங்கியிருக்க மருத்துவமனையிலே அனுமதித்து விட்டனர். யாஷ்வி வந்து விட்டது சவிதாவிற்கு உதவியாய் போய் விட அவளை மனிஷாவிற்கு துணையாய் மருத்துவமனையிலே விட்டு விட்டார்.
ஆக, பொழுகள் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் என்று ஓடியது இரண்டு வாரங்கள். அவளின் அண்ணன் ரிதன் பணி நேரம் போக தங்கையையும் தாயையும் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்ல யாஷ்வியின் தந்தை கேசவன் பேத்தி ஸ்மிருதியுடன் வீட்டிலே இருந்து கொண்டார். அவளை கவனித்து பள்ளிக்கு அழைத்து செல்வது மீண்டும் அழைத்து வருவது என்று பேத்தியுடனே அவரின் நேரங்கள் ஓடியது.

அன்று, ஸ்மிருதிக்கு பள்ளி விடுமுறை என்பதால், "அத்தை நானும் அம்மாவை பார்க்க உங்களோட வரேனே!" என்று யாஷ்வியை தொற்றிக் கொள்ள இருவரையும் மருத்துவமனையில் இறக்கி விட்ட ரிதன் அலுவலகம் கிளம்பியிருந்தான். ஸ்மிருதியின் கைகளைப்பிடித்தப்படி அசட்டையாய் உள்ளே நுழைந்த யாஷ்வின் விழிகள் சட்டென்று பிரகாசமானது தூரத்தில் கண்டவனால். ஆம், நவீனே தான், பின்புறம் திரும்பியிருந்தவனை பாவை அடையாளம் கண்டு கொண்டாலும் உறுதி செய்ய அவசரமாக முன்னேற வரவேற்பறையில் நின்றிருந்தவனும் நகர்ந்து உள்ளே நுழைந்திருந்தான். அவனது அசைவில் பக்கவாட்டில் வதனத்தை கண்டு கொண்ட யாஷ்வியின் மனது அவன் தானென்று உறுதி செய்து விட ஏறக்குறைய ஓடினாள் அவனின் பின்பே. அவளின் ஓட்டத்திற்கு இழுபட்ட ஸ்மிருதியின் நிலைமை தான் சற்று பரிதாபத்துக்குரியது.


"அத்தை மெதுவா போங்களேன், என்னால நடக்க முடியலை" என்று அந்த குட்டி வாயை திறந்து கூறிய பின்பே தன் செயலின் வீரியம் உணர்ந்து நெற்றியை தேய்த்துக் கொண்டவள், "சாரிடா" என்று முணுமுணுத்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டாள்.


'எப்பொழுதிலிருந்து நீ இப்படி மாறினாய் யாஷ்?' என்று மனது கேலி பேசினாலும், 'எதற்கு இப்படி விழுந்தடித்து ஓடுகிறாய் பெண்ணே! அவன் என்ன ஆசையில் உன்னை வாரியணைத்து கொள்ளவாப் போகிறான். பார்ப்பானே ஒரு அலட்சியப்பார்வை..ம்கும்..அதிலே நீ பூமிக்கடியில் புதைந்து விட வேண்டுமே!' என்று கடிந்து பேசினாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவள் கண் முன் தெரிந்தது நவீன் மட்டுமே.


மின்தூக்கியில் ஏற முயன்றவனை மறைத்து ஓடி சென்று மூச்சு வாங்க நின்றவளை ஏற இறங்க பார்த்தான், விழிகளை விரித்து. ஆனால் அவன் பார்வை குற்றம்சாட்டியது, 'நீ என்னை ஏமாற்றி விட்டாய்' என்பதாய். யாஷ்வியினால் அவனை அவதனிக்க முடிந்தாலும் அதை விடுத்து, "நீங்க எப்ப இங்க வந்தீங்க?" என்றாள் ஆர்வமாய் மின்னும் விழிகளோடு.


'உனக்காக தான் வந்தேன்' என்று கூறி விட மாட்டானா என்று பேதையின் மனது அபத்தமாய் அலைமோத, ஆடவனுக்கு அப்படி பொய் கூறுவதில் விருப்பில்லாது போக, "ஏன் தெரிஞ்சு என்ன பண்ண போற யாஷ்?" என்று புருவமுயர்த்தினான் இதழ் வளைத்து புன்னகையுடன்.


அவனது எதிர் வினாவில் என்ன கூறுவது என்று புரியாது விழித்தவள் அமைதியாகி விட, "ஏன் ஊருக்கு கிளம்புறதை என்கிட்ட சொல்லலை நீ?" என்றான் புகாராய். யாஷ் வாயை அடக்க நினைத்தாலும், "நீங்க கூட தான் வீட்டை காலி பண்ணும் போது என்கிட்ட சொல்லை தென் எதுவுமே சொல்லலை" என்றாள் உரிமையாய் சலுகை கொண்டு. இத்தனைநாள் அலைப்புறுதல்கள் பெண்ணிற்கு ஒரு வித தைரியத்தை கொடுத்து பேச ஊக்குவித்திருந்தது. 'நானா இது?' என்று தன்னை குறித்து யாஷிற்கு ஆச்சரியமிருந்தாலும் நவீனுடனான உரையாடலை நீட்டிக்கவே மனது விரும்பியது. அதாவது அவனை இழுத்து தன்னுடன் பிணைத்துக் கொள்ள பிரயத்தனப்பட்டது.


'ம்ம்...அப்புறம்' என்பதாய் ஆடவன் புருவம் கிண்டலுடன் ஏறி இறங்க, "சோ பழிக்கு பழி அப்படி தான?" என்றான் இடுப்பில் கையூன்றி முறைத்து.


அவனின் பாவனையில் அப்படியொரு புன்னகை யாஷை தொற்றிக் கொள்ள கீழிதழை கடித்து அடக்கியவள் மேலும் கீழும் தலையசைத்து அவனை நக்கலாக பார்த்தாள். அதுவே அப்பட்டமாய் கூறியது, 'அப்படி தான் டா மடையா' என்று.


"இரு உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்" என்று மிரட்டிய நவீனின் அலைபேசி ஒலி இருவரையும் தடை செய்ய அழைப்பை ஏற்று காதில் பொருத்தியவன் நகர்ந்து சென்று விட இரண்டு நிமிடத்தில் மின்தூக்கி அவர்களுக்காக திறந்து கொண்டது. 'ஏறலாமா? வேண்டாமா?' என்று பட்டிமன்றம் நடத்தி நவீனை பார்த்தபடியே யாஷ் தயங்கி நிற்க, 'ஏறு' என்று சைகையில் கூறியவன் அழைப்பை துண்டித்து அவளின் பின்பே ஏறிக் கொண்டான்.



"நீங்க எதுக்கு வந்தீங்க இங்க?" என்றாள் தன் புறம் திரும்பியவனிடம். "ஏன், நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டா வந்த? நான் எதுக்கு உனக்கு சொல்லணும், போடி" என்று நெற்றியை சொரிந்தவன், "நீ எப்பயுமே தனியா இருக்க மாட்டியா? வாலோடவே சுத்துற" என்று ஸ்மிருதியை கண்காட்டி, 'யார் இது' என்றான் வினாவாய்.


அவனது பேச்சில் யாஷ்வியுடன் இணைந்து ஸ்மிருதியும் நவீனை முறைக்க, "உன் நேம் என்ன?" என்ற நவீன் ஸ்மிருதியுடன் உரையாட துவங்கியிருந்தான். சற்று நேரம் பொறுத்து பார்த்த யாஷ், "நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவேயில்லை" என்று நினைவுபடுத்தினாள். அவளுக்கு அவன் எதற்காக வந்திருக்கிறான் என தெரிந்து கொள்ளும் ஆர்வம். அதுவுமில்லாமல் தான் போகும் இடமெல்லாம் வருகிறானே! மேஜிக் எதுவும் செய்கிறானா என்றதொரு ஆராய்ச்சி வேறு!


"அதான் அப்பவே சொல்லிட்டேன் இல்லயா, உன்கிட்ட பதில் சொல்ல முடியாது" என்றவனின் இதழில் எப்பொழுதும் போல் அலட்சியமான புன்னகை ஆக்கிரமித்துக் கொள்ள பார்த்திருந்த யாஷ்விக்கு தான் இரத்த அழுத்தம் உயர்ந்தது.


"இப்படி மட்டும் சிரிக்காதீங்க, அப்படியே எதையாவது தூக்கி உங்க தலையிலே போடணும் போல தோணுது" என்றவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை துடைக்க முனைந்தாள்.

பாவையின் பேச்சில் அவனின் புன்னகை இன்னும் விரிய, 'ஓஓஓ... செய்து தான் பாரேன்' என்ற பார்வை கொடுத்து, "ம்ம்...நல்ல இம்ரூவ்மென்ட் தான், இங்க வந்து நல்லா பேச கத்துக்கிட்ட போல" என்றவனின் நக்கல் தொனியில் 'போடா டேய்' என்ற சலிப்புடன் யாஷ் பின்னால் சாய்ந்து நின்று கொண்டாள் முகத்தை மற்றையபுறம் திருப்பிக்கொண்டு.


"சரி எப்போ ரிட்டர்ன் நீ?" என்றவன் வினா காதில் விழுந்தாலும் அவனை விடுத்து அசட்டையாக வேடிக்கை பார்த்திருந்தாள் பெண். சற்று நேரத்தில் அவனின் அரவம் இல்லாது போக, 'என்ன தான் செய்கிறான்?' என யாஷ்வி நிமிர்ந்து பார்க்க எப்பொழுதோ கீழிறங்கி சென்றிருந்தான்.


'அடப்பாவி!' என்றவளின் மூளை சற்று குழம்பி தான் போனது ஒரு வேளை அவனுடனான உரையாடல்கள் எல்லாம் கனவோ என்று. "அத்தை யார் அவங்க?" என்ற ஸ்மிருதியின் கேள்வி அவளை நினைவுலகத்திற்கு இழுத்து வர, 'அப்ப நடந்தது உண்மை தான் போலும்!' என திருப்தியடைந்தவள் வாயில் வந்தததை கூறி அந்த குட்டியை சமாளித்து மனிஷாவின் அறையை அடைந்தாள்.


அன்றைய தினம் முழுவதும் தேவையில்லாமல் அந்த மருத்துவமனையின் தளங்களை சுற்றி வந்தது யாஷின் கால்கள் மீண்டும் நவீனை காண வேண்டி. ஆனால் அவளின் கண்களுக்கு மட்டும் அவன் அகப்படவேயில்லை. ஒரு கட்டத்தில் சலித்து போனவள், 'ப்ம்ச்...போடா' என்பதாய் விட்டு அறையில் தஞ்சமடைந்து கொண்டாள். ஆனால் நவீனை கண்டு விட்ட பின்பு முதலில் இருந்த அலைக்கழிப்பு குறைந்து மனது ஒரு விதமாக இதமான நிலையை உணர துவங்கியிருந்தது.


அவனிலே உழன்றவளை கதவு தட்டும் ஒலி கலைத்தது. மனிஷாவும் ஸ்மிருதியும் உறங்கி கொண்டிருக்க அவர்களின் உறக்கம் கலைந்து விடக் கூடாதென்று அவசரமாக எழுந்து கதவை திறக்க நவீன் நின்று கொண்டிருந்தான். அவனின் முகத்தில் ஏதோவொரு விளக்க முடியாத பாவமிருக்க அது சட்டென்று யாஷையும் தொற்றிக் கொண்டது. ஆம், கண்களெல்லாம் கலங்கி முகமே சற்று இறுகியிருக்க தளர்ந்து தான் நின்றிருந்தான். 'ஏன் இப்படி?' என்று ஆராய்ந்தப்படி யாஷ்வி நின்றிருந்தாள்.

திறந்திருந்த கதவின் வழியாக உறங்குபவர்களை பார்த்த நவீன் என்ன நினைத்தானோ அவள் சுதாரிக்கும் முன் நெருங்கி அணைத்துக் கொண்டான். யாஷின் விழிகள் விரிந்து கொள்ள கரங்கள் கதவினை முழுதாக மூடி விட, "நவீன் என்னாச்சு?" என்றாள் தவிப்பாக. ஆடவனின் அருகாமை அவளை மூச்சடைக்க செய்திருந்தது. சில நொடிகள் நீடித்தவன் விலகி நின்று கொண்டான் தலையை கோதியப்படி. பாவை ஸ்தம்பித்து ஆடவனையே பார்த்து நிற்க அவனின் முகம் அத்தனை களைப்பாய் இருந்தது. இதுவரை இது போல் அவனை கண்டதே இல்லை. ஏதோ விவரிக்க முடியாத அலைப்புறுதல்கள் ஆடவனிடம். அத்தனை நிமிர்வுடன் எப்பொழுதும் அவளிடம் வம்பு பேசும் விழிகள் இன்று தளர்ந்து போய் தான் இருந்தது.


'சற்று முன்புவரை கூட நல்லா தானே இருந்தான். இவனுக்கு என்ன தான் பிரச்சனை? வாயை திறந்து சொல்லித்தான் தொலையேன்டா பாவி!' என்ற பார்வை பார்த்தவளின் கரங்களை எடுத்து தன் கன்னங்களில் வைத்துக் கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டவன் இதழ்கள் முதல் முறையாக, "பயமாயிருக்கு யாஷ்" என்று முணுமுணுத்தது. ஆம், யாரிடமும் வெளிக்காட்ட விரும்பாத உணர்வுகளை அவளிடம் கொட்டிக் கொண்டிருந்தான் பிதற்றல்களாக உணர்வு மிகுதியில். யாஷ்வியிடம் பேசும் பொழுது தன்னிடமே பேசிக் கொள்வது போலொரு உணர்வு. தன்னையும் அவளையும் பிரித்துக் பார்க்க முடியவில்லை ஆடவன் மனதால். 'எப்படி இது சாத்தியம்?' என்று ஆராய்ந்தவன் முடிவென்னவோ முடிவிலி தான்.


"நீங்க உட்காருங்க முதல்ல" என்று அவனை அமர வைத்த யாஷ்வி வேகமாக அறைக்குள் நுழைந்து தண்ணீர் பொத்தலை எடுத்து வந்து நீட்டியிருந்தாள். மறுக்காது வாங்கி பருகியவன் சில நிமிடங்களில் தெளிந்து விட யாஷோ இன்னும் கலக்கம் நிரம்பிய விழிகளோடு ஆடவனையே பார்த்திருந்தாள். "சரி நான் கிளம்புறேன்" என்று எழுந்தவன் நகர விழைய யாஷ் தவிப்புடன் அவனது கைகளை பிடித்துக் கொண்டாள், "என்னாச்சு? ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க நீங்க? என்ன பிரச்சனை? எனக்கு உண்மையிலே உங்களை பார்த்தா பயமாயிருக்கு" என்றவள் விழிகள் அதிர்ந்து தான் போயிருந்தது கிலி கொண்டு.


புருவத்தை நீவியவன், "ஒன்னுமில்லை யாஷ், ஐயம் ஆல்ரைட்" என்று ஒட்ட வைத்த புன்னகையுடன் பறந்து விட்டான். செல்பவனையே வெறித்து பார்த்தவளுக்கு மனது நிலையில்லாமல் தவிக்க தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். ஆனால் எல்லாம் சிறிது நேரம் மட்டுமே, மனிஷாவிற்கு பிரசவ வலி வந்திருக்க பெண் பரபரப்பானாள். அதற்கு பின் யாஷ்விக்கு நவீனை குறித்து சிந்திக்க நேரமே கிடைக்கவில்லை.
அம்மாவிற்கு அழைத்து அடுத்து அண்ணனுக்கு அழைத்து என்று தாயை கண்டு அழும் ஸ்மிருதியை சமாதனம் செய்து என்று ஓய்ந்தே போனாள்.



சவிதாவும், கேசவனும் சற்று நேரத்தில் வந்து விட யாஷ்வி ஓரளவு ஆசுவாச மூச்சை வெளி விட்டாள். வெகு நேரம் காத்திருக்க வைக்காது அழகான ஆண்குழந்தை பிறந்திட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு யாஷ்வியால் அசையவே முடியவில்லை. அதற்கு பின் அவ்வப்பொழுது விழிகள் மருத்துமனையே சுற்றி வரும் நவீனை கண்டு விடும் ஆர்வத்தில் ஆனால் ஆடவன் தரிசனமே கிடைக்காமல் போயிற்று. 'ப்ம்ச்...போடா' என்று எப்பொழுதும் போல் சலித்து அவனை குறித்து சிந்திக்க தொடங்குவதை தவிர்த்தாள்.


ஆக, யாஷிற்கு அடுத்த ஒரு மாதம் எவ்வாறு கடந்தது என்றே தெரியவில்லை. இறக்கை கட்டிக் கொண்டு பறந்திருக்க பெண் மீண்டும் இந்தியாவை நோக்கி கிளம்பியிருந்தாள். நவீனின் சிந்தனை அவ்வப்பொழுது ஆக்கிரமித்தாலும், 'உனக்கு தான் அவனை தெரியாது ஆனால் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் எங்கிருக்கிறாய் என்பது வரை அவன் தெரிந்து வைத்திருப்பான். ஆக அவனே அழைத்து பேசட்டுமே!' என்ற நினைப்பில் அவனை கிடப்பில் போட்டு விட்டாள் கோபத்தில். அதுவும் அவன் அன்றைக்கு நின்ற நிலை இன்று வரை பெண்ணின் மனதை அலைப்புற செய்து கொண்டிருந்தது. ஆனால் தன்னிடம் சொல்லாமல் கிளம்பி விட்டதில் அத்தனை ஆத்திரம் ஆடவன் மீது...!


"பார்த்து இரு யாஷ்ம்மா, இன்னும் ஒரு சிக்ஸ் மந்த் தான் நாங்க வந்திடுவோம்" என்று அறிவுரை கூறி சவிதா அவளை கிளப்பியிருக்க தலையசைத்தவளுக்கு சட்டென்று கண்ணீர் துளிர்க்க அன்னையை அணைத்துக் கொண்டாள். சவிதாவிற்கும் பெண்ணை அனுப்ப மனதில்லை வேறு வழியின்றி அவளை வழியனுப்பி வைத்திருந்தார்.


யாஷ், இந்தியா வந்து ஒரு வாரமாகியிருந்தது. அதுவொரு மாலைப்பொழுது, யாஷ் படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க அலைபேசி ஒலித்து அவளை கலைத்தது. தூக்கத்தை முயன்று விலக்கி கண்களை கசக்கி அழைப்பை ஏற்று காதில் பொருத்த சவிதா தான் அழைத்திருந்தார். சில நிமிடங்கள் பேசி அழைப்பை துண்டித்தவள் நேரத்தை பார்க்க அதுவோ நான்கை தாண்டியிருந்தது. எழுந்து முகம் கழுவியவள் வயிறு பசியை உணர்த்த அடுப்பறை நுழைந்தாள்.


ரூபா தூரத்து உறவினரின் திருமணத்திற்கு காலையிலே மனோவையும் ஷமீயையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள். யாஷ் அடுப்பறையை ஆராய ரூபா சமைத்து வைத்திருந்த உணவெல்லாம் கெட்டு போயிருந்தது. ஆம், காலையில் சமைத்த உணவு அது. "ம்ப்ச்...ப்ரிஜ்ல்ல வைச்சுட்டு கூட தூங்கியிருக்கலாம்" என்று சலித்தவள் மொபைலை தேடிப் பிடித்து உணவை ஆர்டர் செய்து விட்டு ஷோபாவில் அமர்ந்து கொண்டாள். பாதி உறக்கத்திலிருந்து விழித்தது லேசான தலைவலியை கொடுக்க தேநீர் தயாரிக்கலாம் என அடுப்பறை நுழைய அடுப்போ அவளை பார்த்து பல்லிளித்தது.


"கேஸ் காலியாகிடுச்சு யாஷ், இப்ப அதை பார்க்க எனக்கு நேரமில்லை. நான் ஈவ்னிங் பார்த்துக்கிறேன். உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா பிரபுவைக் கூப்பிடு அவன் வீட்டில தான் இருப்பான்" என்று காலையில் அவசரமாக கிளம்பிய ரூபா கூறிச் சென்றது நினைவில் வர நெற்றியை தேய்த்தவள் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டாள் தலையை பிடித்துக் கொண்டு. அவளின் தலைவலியோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியிருக்க, 'இது சரி வராது' என்றுணர்ந்தவள் பிரபுவிற்கு அழைத்து விட்டாள்.

அவனோ யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாய் அலைபேசி ஒலிபரப்ப, 'இதென்னடா நமக்கு வந்த சோதனை' என்றெண்ணியவள் நேராகவே கிளம்பி விடலாம் என்று எண்ணி கதவை பூட்டி திரும்ப பிரபு வீட்டு வாயிலில் மெதுவாக நடைபயின்றப்படி அலைபேசியில் யாருடனோ அளவளாவிக் கொண்டிருந்தான்.


அவன் திரும்பினால் கையசைக்கலாம் என்றெண்ணிய யாஷ் அப்படியே வாயிலே நின்று பிரபுவையே பார்த்திருக்க எதிர்வீட்டிலிருந்து கதவு திறக்கும் ஒலி கேட்டது. யாஷ் கவனமெல்லாம் பிரபுவின் மீதே குவிந்திருக்க அவளை நெருங்கியிருந்த காலடியோசை அவளின் செவியை தீண்டியிருக்கவில்லை தான் ஆனால் அந்த இடத்தை சட்டென்று ஆக்கிரமித்த வாசனை திரவியத்தின் நறுமணம் பேதையின் நாசியை நிரப்பியிருந்தது.
அதிலே கண்டு கொண்ட யாஷின் விழிகள் 'இவனா?' அதிர சட்டென்று திரும்பி பார்க்க நவீனே தான்.



தொடரும்...

 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Ithenna thriller story ah, Naveen tgudir nu varaan, thidir nu kaanama poyiduraan🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
Ennachu avanukku hospital la ean apdi pannan
Interesting ah irukku, aana suspense ah ve poittu irukku, superrrrrrrrr
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
naveen ah pathi yash nenaikirathu pola than iruku avan oda activites correct ava enga irudhalum anga avan entry iruku athu epudi than correct ah na timing ku varan than theriyala ithula ivan oda activities over ah kozhapu thu avan oda thoughts ah catch pannavae mudiyala
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Ithenna thriller story ah, Naveen tgudir nu varaan, thidir nu kaanama poyiduraan🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
Ennachu avanukku hospital la ean apdi pannan
Interesting ah irukku, aana suspense ah ve poittu irukku, superrrrrrrrr
நன்றிக்கா❤️❤️.. அவளை பாலோவ் பண்ணி லவ்வர் பாய் ஆக போறான் போல😝😝😂😂...
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
naveen ah pathi yash nenaikirathu pola than iruku avan oda activites correct ava enga irudhalum anga avan entry iruku athu epudi than correct ah na timing ku varan than theriyala ithula ivan oda activities over ah kozhapu thu avan oda thoughts
வேலை வெட்டி இல்லாம அவ பின்னாடி சுத்துறான் போல😂😂...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Athu enna yash enga ponalum correct ya vanthururan naveen magic tha poola 💫💫💫 yash ninaikura mari athuku hospital epadi panna athuyum sollama suspense ya vanthaan apadiyaay thirumpa poedan 🙄🙄🙄enna va irukum solluga😌😌 paru da eppo enga apadi vanthaa yash tha confuse la irupa 😁😁😁😁💖
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அடடா பிரபுவை பார்த்துகிட்டு இருந்தவளை முரச்சே மிரட்ட போறான் 😄😄😄😄😄😄
 
Top