• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 4

Messages
31
Reaction score
13
Points
8
அத்தியாயம் - 4


மாலை நேரம் ஓரளவு உடல் தேறியிருக்க சமர் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து எறும்புகள் சாரை சாரையாய் ஊர்வதை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணிக்கு வீடு வர வேண்டிய அஹானா வீட்டில் சமரும் சஹானாவும் இருப்பது அறியாமல், கவினுடன் ஊரை சுற்றி விட்டு ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தாள்.

அவளை வெறுமையாகப் பார்த்தவன் கேட்டிற்கு வெளியே நின்ற கவினைக் கண்டான். கோபம் தலைக்கேற எழுந்து வேகமாகச் சென்றான். ஆனால் அவனது கோபத்திற்கும் மனதிற்கும் இருக்கும் வேகம் உடலிற்கு இல்லை என்பதை மறந்துவிட, எழுந்த சில நொடியில் உடல் தளர்ந்து கொண்டது. உடல் நடுக்கம் காண, கூடவே இருமல் வந்து ஒட்டிக் கொண்டது. வாசலில் நின்றிருந்த சஹானா எழுந்துவர, அவளைத் தடுத்தாள் அஹானா.

அவளை ஒரு பார்வை பார்த்தவள் அவளின் கையைத் தட்டி விட்டு சமரிடம் சென்றாள். அது அஹானாவிற்கு எதோ அவமானமாக இருப்பது போன்று தோன்றியது. " சனா க்கா " என்று காட்டுக் கத்தலாய்க் கத்த,


" என்னடி வேணும்... நான் என்ன பொம்மையா அவருக்கு உனக்கு னு பங்கு வைக்க... தங்கச்சி வேணுமா இல்ல என் புருஷன் வேணுமா னு கேக்குறது உன்னோட இதயம் வேணுமா இல்ல மூளை வேணுமா னு கேக்குறதுக்கு சமம். இரண்டு ல எது இல்லனாலும் இறப்பு நிச்சயம்... அப்படி தான் நானும்... இரண்டு பேரையும் வச்சுட்டு என்னால என்ன பண்ண... இரண்டு நாள் உன்கூட இருந்ததுக்கு இதோ சாப்பிடாம தூங்காம னு சாகாத குறையா வந்து நிக்குறாரு... நீ லிமிட் மீறி நடக்குற... " என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியவள், எதுவும் சொல்லாமல் அவனை அறையில் படுக்க வைத்தாள்.

சமர்ஜித்திற்கு சனாவின் ஆதங்கம் ஒரு பிரச்சனை அல்ல... கவின் வீடு வருகிற காரியமே மனதில் உழன்றது. கவினைப் பற்றிய நிலை தெரிந்து தான் அஹானா பழகுகிறாளா இல்லை தெரியாமல் இருக்கிறாளா என்று பயத்தில் இருந்தான்... சனா அன்றைய தினம் கண்டும் காணாமலும் தனியாகவே இருந்து கொண்டாள்.

மறுநாள் காலையில் போர்க்களம் மூண்டது. சனாவிற்கு அலுவலக வேலை வீடு பிரச்சனை என்றதோடு மனதும் சரியின்றி இருந்தது. இன்றைக்குத் தான் தெருநாய் தொல்லைக்கு முடிவாக பேச வேண்டியது... அதனால் போகாமலும் இருக்க முடியாது...

அவசரம் அவசரமாக கிளம்பியவளை வழிமறித்து நின்றான் சமர்ஜித். " என்ன வேணும் சமர்.. டைம் ஆகுது கிளம்பு... " என்று சோர்வாகக் கேட்க, " சனா நம்ம அனா அ நாம ஒழுங்கா கவனிக்கணும் டா... " என்று பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

" உனக்கு என்ன ஆச்சு சமர்... இரண்டு மூன்று நாளா அனா கிட்ட இருந்து விலகி போற... அவள பாத்து என்னமோ ஏதோ னு ஓடுற... நேத்து அதுக்கு எழும்பி தானே நிலை கொள்ளாம உடம்பு நடுக்கம் வந்துச்சு... இப்ப என்ன னா அவள கவனிக்கணும் ங்குற... உன்கிட்ட விலகுறதா நினைக்கிறியா ... " என்று மென்மையாய் அதே சமயம் ஒரு வித கண்டிப்புடன் கேட்டாள்.

" நான் அப்படி சொல்ல வரல... நீ அவளை கவனி புரியும்... நேத்து எவனோ ஒருத்தன் வந்து விட்டுட்டு போறான்... அது உனக்கு ஏன் னு தோணலயா... மூன்று மணிக்கு வர வேண்டியவ ஐந்து மணிக்கு வர்றா... அது உனக்கு உறுத்தலயா... " என்று கேட்டு வைத்தான்.

" ஸ்டாப் இட் சமர்... இப்ப எதுக்கு அக்கியூஸ்ட் போல அவளை விலா வாரியா பாக்குற... " என்று பெண்ணவள் கேட்க, இடை மறித்தாள் அஹானா. "ஏன் பையன் கூட வந்தா அது லவ் தானா... இல்ல ஐந்து மணிக்கு வந்தா என்ன... நாம வர எவ்வளவு நேரம் ஆகுது... கொஞ்சம் வெளில ரிலாக்ஸ் ஆகிட்டு வரலாமே... சப்போஸ் நான் லவ் பண்றானே வச்சுப்போம்... அதுல உனக்கு என்ன பிரச்சனை... உனக்கு குழந்தை பெத்துக்கணும் ... அதுக்காக என்ன வெளிய கல்யாணம் வாழ்க்கை ல தள்ள பாக்குறியா... ச்ச கேவலமா இல்ல... " என்று எரியும் அடுப்பில் எண்ணெயை ஊற்றி விட்டாள்.

திரும்ப சஹானா நடக்கும் பிரச்சனையை உணராமல், " அது சரி... நீயும் நானும் லவ் மேரியேஜ் தானே... நீ லவ் பண்ணலாம்... அவ பண்ண கூடாதா.. டூ யு நோ... அவ சொன்னதால தான் இந்த கல்யாணமே நமக்கு நடந்துச்சு... முதல் குழந்தை னு அவளை சொல்றதுலாம் வேஷம்... பேச்சு ல அமுதம் போல விஷம் வச்சுருக்க...

லுக் ... வீட்டுக்கு வெளிய போலீஸ் ஷூ அ கழற்றும்போதே மறக்காம போலீஸ் மூளையையும் கழற்றி வச்சுட்டு வா ... இல்ல நான் உன் தாலிய கழற்ற வேண்டி வரும் " என்று கோவமாய்க் கத்தினாள்.

" அப்ப அவள பத்தி நான் எதும் சொல்ல கூடாது... தப்பு நடந்தாலும் ஏன் னு கேட்க கூடாது அப்படி தானே... " என்று சமர்ஜித் கேட்க, " அவளப் பற்றி நான் பாத்துப்பேன்... நீ கேக்க வேண்டாம்... " என்றவள் கடுப்புடன் வேலைக்குக் கிளம்பினாள்.

சில நேரத்தில் மனதில் இருக்கும் வலிகள் வேதனைகள் மூண்டு எரிச்சல் மண்டி இருக்கையில் நாம் பேசும் வார்த்தைகள் என்ன என்று நாம் உணருவதே இல்லை... தற்சமயம் அந்த பிரச்சனையை அல்லது அந்த நபரை அங்கிருந்து அனுப்பும் நோக்கில் பேசிவிடுகிறோம். ஆனால் அதன் விளைவை உணர்வதில்லை. கொட்டிய தண்ணீரைக் கூட அள்ளலாம். ஆனால் கொட்டிய வார்த்தையை அள்ள இயலாதே... அஹானாவின் வார்த்தைகளைத் தாண்டி சஹானாவின் வார்ததைகள் இதயத்தில் வலியை ஏற்படுத்தின.

கண்களில் நீர் நிறைந்து வழிய தயாராக நிற்க , தலலயை உலுக்கி விழிநீரை யாரும் அறியாது வெளியேற்றிக் கொண்டான். பின்னர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப, கேட்டினருக்கில் கவின் தன் பைக்கில் நின்றிருந்தான்.

அன்றைய தினம் மதிய நேரம் மீட்டிங்கில் தெருநாய்களை முன்பு போல கார்பரேஷனில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது .

அப்பொழுது நேரம்மாலை நான்கு மணி போல இருக்கும். தனது மேசையில் வைக்கப்பட்ட தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு சமரின் நினைவு வந்தது. அத்தனை நேரம் அலுவலக கோப்பில் நுழைந்திருந்தவளை மீட்டதே அந்தத் தேநீர்... காலையில் பேசிய வார்த்தைகள் அவளுக்கும் வலிக்கத்தான் செய்தன... ஆனாலும் இருவரையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறாள்.

அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற, தனது மேசையில் உள்ள மணியை அடித்தாள். வெளியே நின்றவர் வந்தார்.

" மிஸ்டர். சமர்ஜித் அ கூப்டதா சொல்லுங்க... " என்று சொல்லி அனுப்ப, அரைமணிநேரம் கழித்து தனது பைக்கில் வந்து சேர்ந்தான். அந்த அரைமணிநேரமும் வாயிலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் .

உள்ளே வந்தவன் சல்யூட் அடித்து நின்றிருக்க , அதன்பிறகே காரணமின்றி வெறுமனே அழைத்தது சஹ்னாவிற்கு நினைவு வந்தது. அலுவலகத்தில் வீட்டு காரியத்தை பேசும் பழக்கம் இருவருக்கும் இல்லை.. தன்னையே நொந்தவள் ஒருவாறாக, " க்கும்... நுங்கம்பாக்கம் ல எதோ ரைட் போனதா கேள்விபட்டேன்... எதாவது அங்க விபச்சாரம் பற்றி கிடைச்சுதா " என்று கேட்டு வைத்தாள்.

" எஸ் மேம்.. 2 டேஸ் முன்னாடி போனோம்... அன்னைக்கு சிலரை கைது பண்ணினோம். அவர்களில் சிலர் கடத்தப்பட்ட பெண்கள்... அவங்களை பேரன்ட்ஸ் கிட்ட சேஃபா ஒப்படைச்சுட்டோம். அதைப்பற்றி ஒரு ஃபைல் உங்க டேபிளில் இருக்கு. அன்ட் வன் மோர் திங் ... இந்த கேஸ் ல இருந்து நான் காலைலயே விலகிட்டேன் . இப்ப மிஸ்டர் ஆரியன் தான் இந்த கேஸ் அ டீல் பண்ணுறாரு... " என்று கூறி முடிக்க, அதிர்ச்சியில் தலை வெடிக்காத குறை தான் சஹானா.

காலையில் நடந்த நிகழ்விற்கு சரியாக ஒரு வேலையை வைத்து விட்டான். சமர் இருக்கும் தைரியத்தில் தானே இந்த பிரச்சனையைக் கையிலெடுத்தது... " ஓகே யு மே கோ நௌ " என்றவள், அரசியை அழைத்தாள்.

" எஸ் மேம் " என்று அரசி வந்து நிற்க, " மிஸ்டர் . சமர்ஜித் ஏன் கேஸ் ல இருந்து ரிமூவ் ஆகுறாரு... " என்று கேட்டாள். " மேம் அவரு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்காரு. நெக்ஸ்ட் வீக் எண்ட் ல அவரு கிளம்ப வேண்டி வரும்... இந்த நாட்களில் அவர் ஹேண்டில் பண்ணுன மொத்த கேஸ்ஸூம் ஃபினிஷிங் பண்ணவும் மற்ற போலீஸ்கள் கிட்ட எக்ஸ்பிளெயின் பண்ணவும் டைம் கேட்டிருக்காரு " என்று அடுத்த குண்டை போட்டு சென்றாள் அரசி.


வீட்டு நிகழ்வை அலுவகத்தோடு இணைப்பதாக இதையும் தவறாக புரிந்து கொண்டாள் சஹானா... சுற்றிலும் நிகழும் பிரச்சனையை உணராமல் மேம்போக்காக பார்பது அவள் பிழையா... அல்லது நிகழும் பிரச்சனையை அவளிடம் பகிராமல் தான் செய்வதை நம்பி உதவுள் என்ற எண்ணதோடு செயல்படுவது தான் அவனின் பிழையா... இதற்குக் காலமே பதில் சொல்ல வேண்டும்....


தொடரும் ...

கதையோட போக்கு எப்படி இருக்கு னு சொல்லிட்டு போங்க மக்களே ... 🙃

- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿
 
Messages
31
Reaction score
13
Points
8
அருமை அருமை டா ♥️♥️♥️♥️♥️♥️♥️
சனா இவ்வளவு பேசுனதுக்கப்புறம் சமர் transfer கேட்டிருக்குறது சரிதான், இதை சனா உணர்வாளா 🤔🤔🤔🤔🤔
சீக்கிரம் பதில் தெரியும் 😌🙃🙃


தேங்க்ஸ் சிஸ் 😍
 
Member
Messages
40
Reaction score
19
Points
8
Super Akka
 
Top