• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 4



யாஷிற்கு சலிப்பை மீறிதொரு ஆயாசம் வந்து தொற்றிக் கொள்ள வகுப்பறையை விட்டு வெளியில் வந்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். ஆடவனின் பார்வையும் இதழ் வளைவும் தன்னை உதாசினம் செய்திட்டது போலொரு மாயை கொடுத்திருந்தது. அதுவும் அவன் தன்னை தடுக்காது அமர்ந்திருந்த நிலை இன்னும் பெண்ணவளை தாக்க, 'இவனை ஏன் எனக்கு பிடித்து தொலைத்தது?' என்ற மிகப்பெரிய வினாவொன்று உதித்தது. 'அவன் எப்பொழுதும் அப்படி தானே' என்று மனது கூறிய சமாதானங்களெல்லாம் வீணாய் போக கண்கள் நீரை தேக்கி கொண்டு விட்டது.


அவளுக்கு எதிர்மாறான சிந்தனையில் ஆடவன் உழன்றான். இன்னும் பாவையின் வார்த்தைகளிலிருந்து மீளவே இல்லை. 'ஏன் என்னை விட்டுச் சென்றாய்?' என்ற அவளின் குற்றச்சாட்டே அவனது காதுகளில் ரீங்காரமிட அந்த வார்த்தைகளோடு சேர்ந்து பெண்ணின் வாடி வதங்கிய வதனத்தையும் மெதுவாக மிக மெதுவாக கிரகித்து உள்வாங்க முயன்றான். எப்பொழுதும் அவளை அதிர வைப்பவன் இன்று அதிர்ந்து தான் அமர்ந்திருந்தான். இது அவனின் இயல்புக்கு மாறான ஒன்று தான்.



யாஷ்வி வீட்டிற்கு கிளம்பி இருந்தாள். அதற்கு பின் நவீனை காண்பதற்கு மனதிற்கு ஒப்பாமல் சென்று விட அந்த வகுப்புகளோடு சேர்த்து நவீனையும் புறக்கணித்து விட்டாள். அவன் தன்னை நிராகரித்து விட்டதை மனதால் ஏற்க முடியவில்லை. 'நீ அவனிடம் பேசியே இருக்க கூடாது' என்ற எண்ண அலைகள் முகத்தில் வந்து அறைய ஓய்ந்தே போனாள் பெண்.


மாதங்கள் இரண்டை கடந்து அவளின் தேர்வும் நெருங்கியிருக்க நவீனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் வந்திருக்கவில்லை. அதுவே பெண்ணை தளர செய்திருந்தது. ஆனாலும் அதிலே அமிழ்ந்து போகாது தன்னை மீட்டுக் கொண்டவள் மனது நவீனை கடந்து வர முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. நவீனிற்கு அவளிடம் பேச வேண்டுமென்று நினைத்தால் எப்படியாவது அதாவது அவளை வற்புறுத்தி நடிக்க அழைத்துச் சென்றது போல் ஏதோ ஒரு வகையில் அவளை தொடர்பு கொண்டிருப்பான். 'ஒரு வேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ?' என்ற எண்ணமெழ, மனது அடித்துக் கூறியது அவனது கண்களில் கண்டு கொண்ட காதலில். காதலா??ம்ம், இருக்கலாம்...யாஷ்வி அவ்வாறே பெயரிட்டுக் கொண்டாள்.




தேர்வையும் நல்ல முறையில் எழுதி கல்லூரியையும் முடித்திருந்தவள் நவீனை ஒதுக்கி வைத்திருந்தாள். ஆம், அவனை குறித்து சிந்தனை எழும் நேரமெல்லாம் கொஞ்சமல்ல நிறையவே உடைந்து போகிறாள். தன்னை பலவீனமாக்கிக் கொள்வதில் பாவைக்கு விருப்பமிருந்திருக்கவில்லை. நவீன், அப்படியொருவன் தான் கண்டே இருக்கவில்லையென்று மனதை சமன்படுத்த, 'அதான் கண்டு விட்டாயே!' என்று மனது வேறு கேலி பேசியது. அவளது அதிகப்பட்ச பொழுதுகள் ஷமீயுடனே கழிந்தது. நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு நான்கைந்து நிறுவனங்களில் தேர்வாகியிருக்க, "என்ன டிசைட் பண்ணியிருக்க யாஷ்? எங்க ஜாயின் பண்ணப் போற?" என்று நின்றான் மனோ.


'தெரியலைண்ணா' என்று யாஷ் இதழை பிதுக்க, "நீ இந்த ஆஃபரை கன்சிடர் பண்ணு யாஷ், இவங்க பேஸ் கலிபோர்னியால்ல இருக்கு. ப்யூச்சர்ல்ல பாரின் போற வாய்ப்பு கிடைக்கும். இன்னும் நிறைய பெனிபிட் உண்டு இவங்ககிட்ட" என்று ரூபா இரண்டு நிறுவனங்களை பரிந்துரை செய்ய, அண்ணனும் தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டான் ஆனால் பெண்ணின் மனம் தாயை தேடியது. இப்பொழுதெல்லாம் அவரின் மடியை அதிகமாக கேட்டு மனது ஏங்கியது. சவீதாவை அவள் அதிகமாக பிரிந்து இருந்ததே இல்லை. அதுவும் நவீன் வருகைக்கு பின் பெண்ணின் மனதோ நிலையில்லாமல் அலைப்புற தான் தொடங்கியிருந்தது. ரூபாவிடமும் அண்ணனிடமும் தலையசைத்தவள் சவீதாவிற்கு அழைத்து பேசினாள். வாரத்தில் நன்கைந்து முறை அழைத்து பேசிட்டாலும் இப்பொழுது அழைப்பை ஏற்றவுடன் பெண்ணின் குரல் உடைய துவங்கியிருந்தது. "என்ன யாஷ்ம்மா?" என்று பெற்றவரும் அவளின் குரல் பேதத்தை உணர்ந்து பரிவாய் பேச, "ம்மா, ஜாப் கிடைச்சிருக்கு. ஆனா ஜாய்னிங் டேட் இன்னும் டூ மந்த் கழிச்சு தான். நான்..எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு. நான் வந்து உங்களை பார்த்திட்டு திரும்பி வந்திடுறேனே?" என்று தயங்கிய குரலில் வினவ என்ன நினைத்தாரோ, "சரி, நான் மனோக்கிட்ட பேசுறேன். நீ கிளம்ப ரெடியாகு" என்று அழைப்பை துண்டித்து விட்டார்.



சவீதா மனோவிடம் உடனே பேசியிருக்க யாஷ்வி பயணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டான் ஒரே வாரத்தில். கிளம்ப இன்னும் இரண்டு தினங்களே மீதமிருக்க, "ண்ணா, எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் போகணும். போய்ட்டு வந்திடுறேன்" என்று கிளம்பியவளை இலவச இணைப்பாக ஷமீ தொற்றிக் கொண்டாள்.


"நீ என்ன வேணும்னாலும் வாங்கி கொடு யாஷ் ஆனா ஐஸ்கீரிம் மட்டும் வேண்டாம். டாக்டர் ஸ்ரிக்டா சொல்லி இருக்காங்க, இவ அடம்பிடிச்சா அங்கயே மால்லே விட்டுட்டு வந்திடு. நமக்கு சமத்து புள்ளை தான் வேணும்" என்று ரூபா ஷமீயை முறைத்துக் கொண்டே கூற அவளோ அதை காதில் வாங்காது தந்தை போன முறை தனக்காக வாங்கி தந்த அந்த குட்டி கைப்பை தோளில் போட்டுக் கொண்டு, "அத்தை நான் ரெடி, போகலாமா?" என்றாள் விழிகளை உருட்டி அபிநயம் படித்து.


அவளின் செயலில் யாஷ்வியை மட்டுமல்ல ரூபாவையும் புன்னகை தொற்றிக் கொள்ள, "இரு உங்க அத்தை ஊருக்கு போகட்டும் அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன். எதாவது கேட்டு வா" என்று ரூபா மகளின் காதை பிடிக்க வர ஷமீயோ லாவகமாக தப்பி யாஷின் கால்களை கட்டிக் கொண்டு அவளின் பின்புறம் ஒளிந்து கொண்டாள்.


"டூ மந்த் தான, அப்புறம் வந்திடுவேன். நீங்க ரொம்ப மிரட்டாதீங்க" என்ற யாஷ்வி புன்னகையுடன் ஷமீயை கைகளில் அள்ளிக் கொண்டு அருகிலிருந்த பல்லங்காடியை நோக்கி பறந்திருந்தாள். மனதில் ஒரு இதம், எதனால் என்று புரியவில்லை. ஒரு விதமான ஆர்பரிப்பான புன்னகையுடனே தனக்கு சில உடைகளை வாங்கிக் கொண்டவள் மேலும் தேவையான சில பொருட்களை வாங்கி முடித்து, "உனக்கு என்ன வேணும் ஷமீ?" என்று அருகில் நடந்து வந்தவளிடம் பேசியப்படி உணவகத்தை நோக்கி நகர்ந்தாள்.


அந்த முயலோ கள்ளப்புன்னகையுடன் இடையில் அமைந்திருந்த பனிக்கூழ் கடையின் வாயிலில் நின்றுக் கொண்டது. தன் அருகிலிருந்தவளை காணாது தேடிய யாஷ் சட்டென்று திரும்பி பார்க்க அவளுக்கு இரண்டடி பின்னால் நின்ற ஷமீயின் விழிகள் நிலைத்திருந்த இடத்தை கண்டவள், "ஹோய்? என்னது இது? உனக்கு ஸ்கிரீம் வாங்கி கொடுத்தா உன்னோட சேர்த்து என்னையும் வெளிய தள்ளிடுவாங்க உங்க மம்மி" என்ற யாஷ்வி புன்னகையுடன் ஷமீரா கைகளை பிடித்து இழுக்க முனைய, 'க்கும்....' என்று சலிப்புடன் இதழை சுழித்த ஷமீரா கடை வாயிலே அமர்ந்து கொண்டாள் கைகளை முகத்திற்கு முட்டுக் கொடுத்து 'நீ ஐஸ்கீரிம் வாங்கி தராது நான் நகர மாட்டேன்' என்று குறிப்பைக் காட்டி.


"ஷமீ...ப்ளீஸ் டா" என்ற யாஷ்வி அவளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள். ஆம், யாஷ்வியை பொறுத்தவரை அதிர்ந்து அதட்டி பேசத் தெரியாத ரகம். அதனால் தானே நவீனை கண்டு அரண்டு ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
ஆக, சின்னக்குட்டி அந்த கடை வாயிலிலே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருக்க யாஷ்விக்கு தான் சற்று ஆயாசமாக இருந்தது. ரூபா கூறியதற்காக இப்படி வாங்கி தராமல் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவெல்லாம் உறங்க விடாது ஷமீயின் உடல் படுத்தி எடுத்து விட அந்த இரவிலே மருத்துவமனை நோக்கி அடித்து பிடித்து ஓடியிருந்தனர். அதன் பொருட்டே இந்த கட்டுப்பாடு.



"வா அத்தை உனக்கு பீட்சா வாங்கி தரேன் இல்ல வேற ஏதாவது வேணும்னாலும் வாங்கி தரேன்" என்று ஒப்பந்த உடன்படிக்கை எழுத முயன்றவளை தூரத்தில் இருந்தே இரு விழிகள் கபளீகரம் செய்தது. ஆம், அது நவீன். அங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவர்களின் பேச்சு கேட்கவில்லையென்றாலும் சம்பாஷனைகள் புரிய யாஷ்வியை தான் மனது கடிந்து கொண்டது. 'சிறுகுழந்தையை கூட இவளால் அடக்க முடியவில்லையாம்? இதில் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாளே!' என்று கேலியான புன்னகையுடன் அவளை நோக்கி விரைந்திருந்தான்.


ஷமீயின் விழிகள் யாஷை தாண்டி அவளருகில் வந்து நின்ற நவீனின் மீது படிய யாஷூம் உந்துதலில் தலையை திருப்பினாள். வெகு அருகில் மூச்சுக்காற்று உரசும் தொலைவில் நின்றிருந்தவனை கண்டு மூச்சடைக்க பின்னால் சரிய விழைந்தவளை சுதாரித்து கைப்பிடித்து நிறுத்தினான், "ஹேய் பார்த்து" என்ற உரிமைமையான அதட்டுதலோடு.


அவனை முறைக்க முயன்று யாஷின் விழிகள் தோற்க, 'மறுபடியும் இவனா?' என்ற ஆயாசத்தை அப்பட்டமாய் பிரதிபலித்தது. 'யெஸ் நானே தான்!' என்றதொரு இதழ் வளைந்த புன்னகையை பரிசளித்தவன் மண்டியிட்டு ஒருக்காலில் ஷமீ அருகில் அமர்ந்து கொள்ள, 'ப்ச்..இதற்கொன்றும் குறைச்சல் இல்லை' என்றெண்ணிய யாஷ் சட்டென்று விலகி சென்று விட்டாள் உணவகத்தை நோக்கி. அவர்களுக்கு சற்று தொலைவிலிருந்த நாற்காலியில் அமர்ந்து அங்கிருந்த நீரை எடுத்து வாயில் சரித்தவள் அவர்களை பார்த்தப்படி அமர்ந்து கொண்டாள் கன்னத்தில் கைக்கொடுத்து.


இரண்டே நிமிடத்தில் ஷமீ அந்த இடத்தை விட்டு எழுந்து நவீனின் கைகளை பிடித்துக் கொள்ள விழிகள் யாஷ்வியை தேடியது.

"அங்க இருக்காங்க பார்" என்று நவீன் கைக்காட்ட அத்தையை நோக்கி கையசைத்த ஷமீ நவீனுடன் எங்கோ புறப்பட்டு விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த யாஷூம் அசையாது அமர்ந்து கொண்டு தலையை மட்டும் ஆட்டி சம்மதம் கொடுக்க இருவரும் கிளம்பியிருந்தனர்.

அவர்கள் பத்து நிமிடங்கள் விழுங்கியே யாஷ்வியை நோக்கி வந்தனர். ஷமீ கையிலிருந்த சாக்லேட்டை பிரித்து மும்மரமாக உண்ணுக் கொண்டிருக்க, தன் கையில் அமர்ந்திருந்தவளை யாஷ்வி அமர்ந்திருந்த டேபிளின் மேல் நடுவில் அமர வைத்த நவீனும் சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.


யாஷின் விழிகள் இப்பொழுது தான் நவீனை ஆராய்ந்தது. எந்தவொரு மாற்றமுமின்றி அப்படியே பாவம் மாறாமல் இருந்தான். யாஷூம் உடலளவில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் மனதளவில் தளர்ந்து தான் போயிருந்தாள். நவீனின் விழிகளும் யாஷ்வியை தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.


அந்த பார்வை வீச்சை தாங்க இயலாது சட்டென்று எழுந்து கொண்டவள், "கிளம்பலாமா?" என்று முணுமுணுத்து ஷமீயை பார்க்க, "நான் உன்கிட்ட பேசணும் யாஷ்" என்றவன் குரலில் பெண் தடுமாறினாலும், 'உன்னிடம் பேச எனக்கு எதுவுமில்லை' என்று பாவனை காட்டியது பேதையின் விழிகள்!...

'ஓஹோ அப்படியா! எங்கே வாயை திறந்து தான் கூறி பாரேன்' என்றதொரு பாவனையை கொடுத்தவன் இதழ்கள் வளைய யாஷ்வின் கால்கள் தளர்ந்து தான் போனது. மீண்டும் மடிந்து அமர்ந்து கொண்டவள் அவனுக்கு கட்டுப்படும் மனதை அறவே வெறுத்தாள். 'இவன் கூறினால் ஏன் கேட்டு தொலைக்கிறாய் மனமே!' என்று அதனுடன் போராடியவளை, "என்ன சாப்பிடுற யாஷ்?" என்ற நவீன் குரல் கலைத்தது.


"டையமாகிடுச்சு, கிளம்பணும்" என்றவளின் வார்த்தைகள் இயல்பை விட வேகமாக வெளி வர அதை காதில் போட்டுக் கொள்ளாதவன், "ப்ரெஷ் ஜூஸ் குடிப்ப தானே?" என்று எழுந்து கொண்டான்.


அவனையே பாவமாய் பார்த்த விழிகளில் தொலைய முயன்ற மனதை இழுத்து பிடித்தவன் தலையை கோதிக் கொண்டான், 'இப்படி பார்த்து தொலைக்காதே பெண்ணே! அது உனக்கு தான் ஆபத்தென்று' என்று எண்ணி சட்டென்று இடத்தை விட்டு அகல யாஷ்வியும் செல்பவனையே சலிப்பாய் பார்த்தாள். ஏனோ உடனடியாக அவனை ஏற்க முடியவில்லை, அதாவது இரண்டு மாத அலைப்புறுதல்கள் மீண்டும் பிரவாகமாக, 'இவனை ஏன் கண்டு தொலைத்தேன், படுத்துகிறானே!' என்றதிலே மனது வந்து நின்றது.


பத்து நிமிடங்களில் பழச்சாறு குவளையுடன் அவள் முன் அமர்ந்திருந்தான். யாஷ்வியின் கைகள் குவளையை தீண்டவே இல்லை. ஏனோ தொண்டை சட்டென்று வறண்டு போக ஆடவனின் அருகாமை ஒரு பதற்றத்தை கொடுத்திருந்தது. 'என்ன பேச போகிறான்? அன்று நான் கேட்டதை பற்றியா..?' என்றவளின் எண்ணங்கள் மட்டுமின்றி விழிகளுமே அவனிடத்திலே நிலைத்தது அதிர்வுடன்.


குவளையை வாயில் சரித்துக் கொண்டவனுக்கே பெண்ணவளின் அவஸ்தையை கண்டு இதழோரத்தில் மந்தகாசமான புன்னைகை அரும்பியது. ஆனால் மெதுவாக ஒவ்வொரு மிடறாக உள்ளிறக்கி வெறும் குவளையை டேபிளில் வைத்தவன் நிமிர்ந்து அமர்ந்தான். அதிலே பெண்ணின் கிலி கூடிற்று. 'ஐயோ! யாஷ், என்ன செய்து வைத்திருக்கிறாய்? உன் வாய் இருக்கிறதே அது தான் வினையே' என்றவளுக்கு முகம் முழுவதும் குப்பென்று வியர்த்து விட கைக்குட்டையெடுத்து துடைத்தாள்.




ஆடவன் நன்றாக சாய்ந்தமர்ந்து அவளின் அசைவுகளை தான் விழுங்கி கொண்டிருந்தான். ஷமீ, சாக்லேட்டை முடித்து யாஷ்வி முன்னிருந்த பழச்சாறு நிரம்பிய குவளையை கையில் தூக்கியிருந்தாள் அவளது தனியுலகில். யாஷின் விழிகள் அவளை தான் அப்பட்டமாய் முறைத்தது. தான் அழைக்கும் பொழுதே வந்திருந்தால் இவனிடம் அகப்படாது தப்பி வீட்டிற்கு ஓடியிருப்பேனே!, ஒவ்வொரு முறையும் ஷமீ தான் தன்னை அவனிடம் கோர்த்து விடுவது போல் எண்ணமெழுந்தது.



நாற்காலியிலிருந்து முன்னால் சாய்ந்து டேபிளில் கையூன்றி முகத்தை அதில் வைத்துத் கொண்டவன், "ஜஸ்ட் ரிலாக்ஸ், நான் ஒன்னும் உன்னை கடிச்சு திண்ணுட மாட்டேன்" என்றான் எப்பொழுதும் போல் இதழ் வளைத்து. அவனிதழ் இயல்பை விட நன்றாகவே மலர்ந்திருக்க அதை தான் பெண்ணவள் விழிகள் ஆச்சரியமாய் பார்த்திருந்தது, 'க்கும்..இவனுக்கும் சிரிக்க தெரியும் போலவே!' என்ற நக்கல் தொனியுடன்.


அதை கண்டு கொண்டவனின இதழோரத்திலும் புன்னகை ஜனிக்க, "யாஷ்.." என்றான் உள்ளார்ந்து. அவனுக்கும் தொண்டையில் ஏதோ சிக்குவது போலொரு உணர்வு. 'அட நவீனே நீயா இது?' என்று மனது கேலி பேசினாலும் அதை சட்டை செய்யவில்லை. முதலில் கூட எதுவும் தோன்றியிருக்கவில்லை ஆனால் பெண்ணவளின் வார்த்தைகளுக்கு பின்னால் அதிகமாகவே சிதைந்து தான் போனான், அவளின் நினைவுகளால். அவளை மறந்து கடக்க முயற்சித்தவன் அது ஆகாத காரியமென்பதை ஊர்ஜிதப்படுத்தவே இரண்டு மாதங்கள் தேவைபட்டது போலும். ஆக்கிரமித்திருந்தாள் அவனுள் முழுமையாக, முன்பு கூட அவளை விளையாட்டையாய் தான் பார்வையால் வம்பு செய்தான். ஆனால் இப்பொழுது, 'அவள் வேண்டும்' என்று மனது போராட்டம் செய்யத்துவங்கியிருத்தது. இன்று எதார்த்தமாக கணாவிட்டால் நாளையே வீட்டிற்கு தேடி சென்றிருப்பான். அவன் கிளம்பி வந்தது கூட அவளை காண தான்.


அவனின் அந்த இதமான வார்த்தைக்கு வலிக்காத அழைப்பு அவளையும் தீண்டி உருகி கரைய தான் செய்திற்று. கடினப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள், 'என்ன தான் வேணும் சொல்லி தொலையேன்டா கிராதகா' என்றதொரு பார்வையை கொடுக்க, "நீ என்னை ஹாண்டில் பண்ணிடுவியா? ரொம்பவே காம்ளீக்கேட் நான், அம்மாவே ரொம்ப திணறுவாங்க" என்றவன் விழிகள் அவளிடமே நிலைத்து.




அவனின் வார்த்தைகளை கிரகித்து உள்வாங்க முயன்றவளின் அலைபேசி அலறியது அந்தோ பரிதாபம். ஆடவனிடமிருந்து கவனம் கலைத்து அலைபேசியை காதிற்கு கொடுக்க, "ஷாப்பிங் முடிச்சிட்டீயா யாஷ், நான் வாசல்ல தான் நிற்கிறேன். கிளம்பலாமா?" என்று மனோவின் குரல் ஒலித்தது. ஆம், ரூபாவிற்கு வெளியில் செல்லும் வேளை இருப்பதால் தன்னுடைய வண்டியை அவளுக்காக வீட்டில் விட்டு மகிழுந்தை பதிவு செய்து கிளம்பிய யாஷ் போகும் வழியில் தங்களை அழைத்து செல்லுமாறு அண்ணனுக்கு குறுஞ்செய்தியை தட்டி விட்டிருந்தாள்.


"டூ மினிட்ஸ்ண்ணா" என்றவள் அழைப்பை துண்டிக்க அவளையே பார்த்திருந்த நவீனின் செவியையும் மனோவின் குரல் மெலிதாக தீண்டியிருந்தது. "நான் சென்னை கிளம்புறேன், எனக்கு அர்ஜெண்ட் வொர்க் இருக்கு" என்று புருவத்தை நீவியபடி, "இங்க உன்னை பார்க்க தான் வந்தேன்" என்றவனிடமிருந்து பெருமூச்சுக்கள் வெளியேறியது.


'ஊப்ஸ்..' என்று இதழ் குவித்து ஊதியவன் கரங்கள் தன் நெஞ்சை சுட்டிக் காட்டி, "ரொம்பவே டிஸ்டர்ப் பண்ற நீ?" என்றான் தலையை கோதியப்படி. இது நவீனின் அகராதியில் புதிது, இரண்டு வார்த்தைகளுக்கு மேல் வெளி வந்ததே கிடையாது. யாஷிடம் காட்டாற்று வெள்ளம் போல கொட்ட விழைந்த மனதை முயன்று அடக்கியவன், "நெக்ஸ்ட் வீக் திரும்ப வருவேன், இப்ப கிளம்பு நீ" என்று அனுமதியளித்தான் மனோவின் காத்திருப்பை கருத்தில் கொண்டு.


யாஷின் மனது, 'இரண்டு நாளைக்கு பிறகு அமெரிக்கா கிளம்ப இருப்பதை நவீனிடம் கூறலாமா?' என்ற ஆகச்சிறந்த சிந்தனையிலிருக்க மனோ மீண்டும் அழைத்தான். 'இத்தனை நாள் என்னை சுற்ற விட்டான் தானே! இரண்டு மாதம் அலையட்டுமே' என்ற நினைப்பில் ஷமீயை அள்ளிக் கொண்டு பறந்திருந்தாள் பாவை.


தொடரும்....




தாமதத்திற்கு மன்னிக்கவும்😁...அடுத்த அப்டேட் சன்டே வந்திடும்..விமர்சனம் அளித்து அனைவருக்கும் மிக்க நன்றி❤️❤️❤️...
 
Last edited:
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Superrrrrrrr superrrrrrrrr
Yash US kilambattum, Naveen ah konja naal suthal laye vidu ma🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Yash ne us kilambura idea ok naveen ah suthal vida idea vum nalla than iruku aana avanum unna follow pannitu pinnadi yae vandhuta enna panrathu
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Yash ne US kelampu 👍👍Naveen ku ethu theyvai tha unaya 2months feel panna vidan la eppo Avan suthatum 😁😁😁aii entha shami muyal kutty naveen kuda nalla odikitta la🤩🤩 ava panna settai la yash naveen kitta matikitaa 😂😂😂😂
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
சூப்பர், யாஷோட நேரம் அவளை தவிக்க விட்டான்ல இப்போ நவீன் தவிக்கட்டும் 🙄🙄🙄🙄
 
Top