தேனும் இனிப்பும் 3:
அவனும் நானும்
அமுதும் தமிழும்…
“ஜீவி உனக்கு இட்லி வித் காரச் சட்னி ஓகே தான?” என்ற ஜானுவின் கேள்விக்கு குளித்து உடை மாற்றி கொண்டிருந்த ஜீவிதா, “ஓகேம்மா லஞ்சுக்கு எக் ரைஸ் பண்ணி தர்றீயா?” என்று ஆசையாக வினவினாள்.
“ஹ்ம்ம் சரிடா செய்யிறேன். தொட்டுக்க பொட்டேட்டோ ப்ரை பண்ணிட்றேன்” என்று ஜானு திரும்பி கூறினாள்.
“சரிம்மா கொஞ்சம் காரமா” என்றவள் அறைக்குள் நுழைந்து தனது பையில் பொருட்களை எடுத்து வைக்க துவங்கினாள்.
ஜானு மாவை எடுத்து இட்லியை ஊற்றி வைத்தவள் சட்னிக்கு வதக்க தொடங்க, “ஜானு லஞ்ச்க்கு என்ன பண்ற?” என்றபடி கனி உள்ளே நுழைந்தாள்.
“எக் ரைஸ்டி உனக்கும் சேர்த்து செய்யவா?” என்று தக்காளி வெங்காயத்தை வதக்கியபடியே ஜானு வினா தொடுக்க,
“அனிக்கு சேர்த்து பண்ணுடி. அவருக்கு பிடிக்குமேன்னு பீட்ரூட் புலாவ் பண்ணேன் இவன் சாப்பிட மாட்டான் அதை. ஒவ்வொருத்தருக்கும் தனியா செய்யணும் போல” என்று அலுத்துதுக் கொள்ள, ஜானுவின் முகத்தில் புன்னகை நீண்டது.
அவளுக்கு இது போல எதுவும் இல்லை. மகளுக்கு பிடித்த உணவு தான் எப்போதும் இதில் மட்டுமல்ல எதிலும் அவள் விருப்பமே. தனக்கென இருக்கும் ஒரு உறவு ஜீவி தான் அவளுக்காக தான் வாழ்வை வாழ்வதால் எல்லாவற்றிலும் அவள் விருப்பமே முதன்மையாக இருந்தது.
“விடு டி. ஒரு நாள் அப்படிதான் இருக்கும்” என்று ஜானு ஆறுதல் கூற,
“ஹ்ம்ம் இதுல இவங்க அப்பாக்கு செகெண்ட் பேபி வேணுமாம் அதுவும் பொண்ணு தான் வேணுமாம்” என்று இழுக்க, சடுதியில் ஜானுவுக்கு ஜீவாவின் நினைவு. மூன்று குழந்தைகள் தான் பெற்று கொள்ள வேண்டும் என்று அவனிடம் கூறியது நினைவு வந்தது.
முகத்தை முயன்று சாதாரணமாக வைத்தவள், “பெத்துக்கோடி. அதான் அனிக்கு ஏழாகிடுச்சே. பிள்ளைக்களுக்கு நடுவுல நிறைய கேப் இருக்க கூடாது டி” என்று கனிக்கு அறிவுரை கூற,
“அதுவும் சரிதான்…” என்று இழுத்தவள், “திரும்பவும் ப்ரெக்னென்சி வாமிட்டிங் ஹாஸ்பிட்டல் இதெல்லாம் நினைச்சா பயமா இருக்கு டி” என்று கனி தனது எண்ணத்தை வெளியிட்டாள்.
“அதெல்லாம் குழந்தை பிறந்து அது முகத்தை பாக்குற வரை தான் அதுக்கப்புறம் எல்லாமே மறந்து போய்டும்” என்று தனது மகளின் எண்ணத்தில் ஜானு புன்னகையுடன் மொழிய,
“ஹ்ம்ம் யோசிக்கணும். எனக்கு அனி ஒருத்தனே போதும்னு தான் எண்ணம். ஆனா அவரு ஆசைப்பட்றாரே சீக்கிரம் முடிவெடுக்கணும்” என்று முடித்தாள்.
“ஹ்ம்ம் எதையும் நினைச்சு பயந்து நெக்ஸ்ட் பேபி வேணாம்னு முடிவெடுக்காதடி. அதான் பக்கத்துலயே அம்மா வீடு இருக்கு. இதுக்கு மேல நான் இருக்கேன். நான் உன்னை நல்லா பாத்துப்பேன்டி. என் மருமகளையும் கைக்குள்ள வச்சு பாத்துக்குவேன்” என்று ஜானு சிரிப்புடன் கூற, கனிக்கும் ஆசை வந்தது கூடவே பயமும் வந்ததே.
கனி சிந்தனையுடன் தலையசைக்க, “எங்க அனிய?” என்று ஜானு கேட்டாள்.
“அம்மாக்கிட்ட இருக்கான் டி” என்றவள், “சரி டி நான் போய் அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நான் வரலைன்னா சாப்பிட மாட்டாரு” என்றுவிட்டு கனி வெளியேற, ஜானுவிற்கு தானும் கணவன் குடும்பம் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏக்கம் ஜனித்தது.
காலம் கடந்து வந்த ஏக்கத்திற்கு என்ன பயன் என்று நினைத்தவள் சட்னியை அரைத்துவிட்டு முட்டை சாதத்தை செய்ய துவங்கினாள்.
“ம்மா நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் தலை வாரி விட்றீயா?” என்று ஜீவி குரல் கொடுக்க,
“வந்து சாப்பிடு ஜீவி. அதுக்குள்ள நான் கிச்சன்ல வொர்க்கை முடிச்சிட்டு வந்துட்றேன்” என்று ஜானு பதில் மொழிந்தாள்.
“சரிம்மா” என்றவள் உணவுன்ன வர, “போய் தேஜ் சாப்பிட்டானான்னு கேட்டுட்டு சாப்பிடலைன்னா சாப்பிட அழைச்சிட்டு வா” என்று ஜானு அனுப்பினாள்.
ஜீவி கதவை தட்டியதும் வந்து கதவை திறந்த ஆதவன் புன்னகையுடன், “வா ஜீவிதா” என்று அழைக்க,
“அங்கிள் அம்மா தேஜ் சாப்பிட்டானான்னு கேட்டாங்க” என்று ஜீவி தாய் சொல்லியதை கூறினாள்.
அதில் புன்னகை பெரிதாக, “அவனுக்கு தோசை சுட்டு கொடுத்துட்டேன் சாப்பிட்டான். நீயும் சாப்பிட்றீயா?” என்று வினவினான்.
“வேணா அங்கிள் அம்மா எனக்கு இட்லி செஞ்சிருக்காங்க” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
தாயிடம் ஆதவ் கூறியதை சொல்லிவிட்டு உணவுண்ண அமர, ஜானுவும் உருளை கிழங்கு வறுவலை முடித்துவிட்டு மகளுடன் இணைந்தாள்.
உருளைக்கிழங்கு வறுவலை கண்டதும் ஜீவாவின் நினைவு தான். காதலிக்க துவங்கிய பிறகு அவனுக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும் என்பதை அறிந்து அடிக்கடி செய்வாள். இதை அறிந்த நரேன் கூட கலாய்த்து தள்ளிவிட்டான். எதையெதையோ எண்ணியபடி உணவுண்டு முடித்தவள் மகளுக்கு தலையை பின்னினாள்.
பிறகு அனைத்தையும் எடுத்து வைத்தவள் கனியை அழைக்க அவள் வர பத்து நிமிடம் ஆகும் என்க, அதற்குள் நரேனுக்கு அழைத்து பேசலாம் பேசி மூன்று நாட்கள் ஆகிறது என்று எண்ணியபடி உள்ளே வர அலைபேசி இசைத்தது.
அதனை எடுத்து பார்த்த ஜீவிதா, “அம்மா மாமா தான் கூப்பிட்றாங்க” என்று கூற, இவளுக்கு புன்னகை முகிழ்ந்தது.
“இப்போதான் கால் பண்ணலாம்னு நினைச்சேன் அண்ணனே பண்ணிட்டாங்களா?” என்றபடி வந்தவள் அழைப்பை ஏற்க,
காணொளியில், “அத்தை…” என்று ஆர்ப்பரிப்புடன் தோன்றினாள் விதுரன்.
“தங்கம் எப்படி இருக்க?” என்று ஜானவி புன்னகையுடன் கேட்க,
“நல்லா இருக்கேன்த்தை. நான் ரன்னிங் ரேஸ்ல பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருக்கேன்” என்று கையில் இருந்த கோப்பையை காண்பித்தான்
“சூப்பர் கங்கிராஜூலேஷன்ஸ் செல்லம்” என்று பாராட்டியவள், “ஜீவியும் காம்பெடிஷன்ல வின் பண்ணி இருக்கா” என்று மொழிய,
“நான் வாங்குன ப்ரைஸ்” என்று ஜீவி எடுத்து வந்தாள்.
நரேன் ஜீவியை பாராட்ட அப்படியே பேசியபடி பத்து நிமிடங்கள் கடந்திருக்க,
“ஜானு போலாமா?” என்று வந்து நின்றாள் கனி.
நேரத்தை பார்த்தவள், “சரிண்ணா ஈவ்னிங் பேசுறேன். டைம் ஆச்சு” என்று விடைபெற்றவள் பள்ளிக்கு கிளம்பினாள்.
தனது மகிழுந்தை ஜீவாவின் எலிசியன் விடுதியின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியவள் மனதிற்குள் யோசித்து வைத்ததை திரும்ப ஓட்டி பார்த்து இறங்கினாள் மஹிமா.
மஹிமா குழந்தைகளுடன் வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. நேற்று அழைத்த ஜீவா மஹிமாவை நேரில் பார்க்க வர கூறியிருந்தான்.
எப்படியும் தன்னை மறுக்கத்தான் அழைக்கிறான் என்று புரிந்தவள் எப்படியாவது அவனை பேசி சரிக்கட்டிவிட வேண்டும் என்று எண்ணியபடி தான் வந்து சேர்ந்தாள்.
மஹிமாவை அங்குள்ளவர்களுக்கு ஜீவாவின் உறவாக தெரியுமாதலால் புன்னகையை கொடுக்க தானும் மென்னகை புரிந்தவள் அவனது அறையை நோக்கி சென்றாள்.
கதவு திறக்கும் ஓசையில் ஜீவா நிமிர்ந்து பார்க்க, “மாமா” என்று புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள் மஹிமா.
தலையசைத்து அவளை வரவேற்றவன் தனது மடிக்கணினியை அணைத்து வைத்தான்.
அவள் எதிரில் வந்து அமர, ஜீவா கோபப்படாமல் பேச வேண்டும் சிறு பெண் புரியாது செய்கிறாள் என்று தனக்கு தானே கூறி கொண்டவன், “நான் என்ன பேச போறேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்று ஜீவா கூற, “ஹ்ம்ம்” என்று மஹிமா தலையசைத்தாள்.
“மஹி நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. நீ எடுத்திருக்கது ரொம்ப ரொம்ப தப்பான முடிவு” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள், “எது தப்பான முடிவு. ஊர் உலகத்துல யாருமே இதை செய்யலையா?” என்று முறைப்புடன் கூறினாள்.
“எல்லாரும் பண்ணா அது சரியாகிடாது மஹி. உனக்கு வயசு இருக்கு வாழ்க்கை இருக்கு. நீ இன்னும் மனுஷங்களையே பாக்கலை. அதுக்குள்ள தப்பான முடிவு எடுத்து லைஃபை வீணாக்க நினைக்கிற” என்று ஜீவா எடுத்து கூற,
“எது தப்பான முடிவு. உங்களை கல்யாணம் பண்ணா என் லைஃப் வீணா போகுமா?” என்று மூக்கை விடைத்தாள்.
“ஆமா கண்டிப்பா வீணா தான் போகும். நல்லா படிச்சு இருக்க. எதாவது ஜாப் பாரு இல்லை பிஸ்னஸ் பண்ணு நான் கைட் பண்றேன். கொஞ்ச நாள் போனதும் நானே உனக்கு ஏத்த லைஃப் பார்ட்னரை தேடி தர்றேன்” என்று ஜீவா பொறுமையாக இயம்ப,
“எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை மாமா. உங்களை கட்டிக்கிட்டு குழந்தைங்களை பாத்துட்டு ஹவுஸ் வொய்பா இருந்திட்றேன்” என்று முடிக்க, ஜீவாவிற்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
‘காம் டவுன் ஜீவா’ என்று தனக்கு தானே கூறி கொண்டவன், “உனக்கு ஏஜ் என்ன மஹிமா” என்று முழுப்பெயரை விழிக்க,
அதை உணர்ந்தவள், “ஏஜ் எல்லாம் ஒரு விஷயமா? இந்த ஜென்ட்ரேஷன் இருபது வயசு டிஃப்ரென்ஸ்ல கூட கல்யாணம் பண்ணிக்கிறாங்க” என்று தோளை குலுக்கினாள்.
இங்கு ஜீவாவிற்கு தான் ரத்த அழுத்தம் உயர்ந்தது.
“உன்னோட வயசு என்னன்னு கேட்டேன்?” என்று ஜீவா மீண்டும் அழுத்தமாக கேட்க,
“ட்வென்டி ஒன்” என்று மெல்லிய குரலில் பொழிந்தாள்.
“என்னோட ஏஜ் தெரியும் தான? தர்ட்டி பைவ். உனக்கு எனக்கு பதினாலு வயசு டிஃப்ரென்ஸ் நீ பிறக்கும் போது நான் நைன்த் படிச்சிட்டு இருந்தேன். என்னை விட ரொம்ப சின்ன பொண்ணா இருக்க உன்ன பாக்கும் போது எனக்கு தங்கச்சி மாதிரி தான் தோணுச்சு உன்னையும் ஷியாமளாவையும் நான் ஒரே மாதிரி தான் பாக்குறேன்” என்கையிலே கோபமாக இடைநுழைந்தவள்,
“போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல பேசாதீங்க. நான் உங்களை விரும்புறேன்னு தெரிஞ்சும் என்னை தங்கச்சி மாதிரின்னு நீங்க சொல்றது என் காதலை கொச்சைப்படுத்துற மாதிரி” என்று ஆவேசம் குறையாது இரைந்தாள்.
அவளது கோபத்திற்கு எதிர்மாறாக இவனிடத்தில் நிதானம்.
“காதல்?” என்று வினவியவனது இதழ்களில் விரக்தி புன்னகை.
எதிரில் இருந்தவளால் அதனை இனம் கண்டறிய இயலவில்லை.
சில நிமிடங்கள் மௌனத்தில் கடந்தது.
“காதலுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?” என்று ஜீவா மௌனத்தை கலைக்க,
“ஏன் தெரியாது. தெரியாம தான் த்ரி மந்த்தா நீங்க வேணாம்னு சொன்னாலும் உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கேனா” என்று இதழை கோண, இவனுக்கு ஜானுவின் முகம் மனக்கண்ணில் வந்து போனது.
உண்மையான நேசத்திற்கான அர்த்தத்தை என்னை உணர வைத்தவள் என்று எண்ணம் பிறந்தது.
“இதுக்கு பேர் காதல் இல்லை மஹிமா. என் மேல இருக்க பரிதாபம் உன் அக்கா மேல இருந்த பாசம் தான் இதையெல்லாம் உன்னை செய்ய வைக்குது” என்று ஜீவா அவளை பற்றி கூற,
“நீங்க சொல்றது உண்மை தான் எனக்கு என் அக்கா மேலயும் அக்கா பசங்க மேலயும் பாசம் இருக்கு தான். அவங்களை பாத்துக்க தான் இந்த கல்யாணம் ஐ அக்ரி. பட் அதையும் தாண்டி எனக்கு உங்களை பிடிக்கும் மாமா” என்று மஹியும் கோபத்தை கைவிட்டு நிதானத்தை கையில் எடுத்தாள்.
“மாமா பொண்ணுன்ற முறையில எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் மஹிமா” என்று ஜீவா கூறியதும் இவளது விழிகள் மின்னியது.
“இது போதுமே மாமா. விருப்பமே இல்லாம கல்யாணம் பண்றவங்க கூட கொஞ்ச நாள்ல மனசு மாறி சந்தோஷமா சேர்ந்து வாழ்றாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் தான் ஒரு பிடித்தம் இருக்கே. நம்ம லைஃப் நல்லா இருக்கும் மாமா” என்று ஆர்வமாக கூற, இவனுக்கு லேசாக சலிப்பு வந்தது.
“நான் சொன்னதை நீ சரியா கவனிக்கலை மஹிமா. மாமா பொண்ணாதான் பிடிக்கும்னு சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு இல்லை” என்று ஜீவா கூற,
“இருக்கட்டும் மாமா. இன்னைக்கு மாமா பொண்ணா பிடிக்கும் நாளைக்கு பொண்டாட்டியா பிடிக்கும்” என்று மஹிமா கண்சிமிட்ட,
இவனுக்கு அந்த ‘பொண்டாட்டி’ என்ற வார்த்தை ஒவ்வாமையை ஏற்ப்படுத்தியது.
அதனை முகத்தில் காண்பிக்காது இருக்க சிரமப்பட்டவன், “போதும் மஹிமா. யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்ஸ்” என்று கட்டுப்படுத்தி கூற,
“உங்ககிட்ட நான் எந்த லிமிட்டும் பார்க்குறது இல்லை மாமா. நான் முடிவு பண்ணிட்டேன் உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று முடிக்க, இவளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது என்று தோன்றியது ஜீவாவிற்கு.
“நீ இன்பாக்சுவேஷன்ல பேசுற மஹிமா. கொஞ்சம் நாள் போனா உனக்கு நீ செய்யிறது தப்புனு புரியும்” என்று ஜீவா முடிக்க,
“இன்பாக்சுவேஷன்லாம் எப்பவோ கடந்து வந்திட்டேன். கொஞ்ச நாள் என்ன இன்னும் டென் டேஸ் தான் உங்களுக்கு டைம் அதுக்குள்ள என்னை கல்யாணம் பண்ண ஓகே சொல்றீங்க. இல்லைன்னா என் அம்மா அப்பாவ அத்தை மாமாக்கிட்ட பேச சொல்லுவேன். அப்பா கேட்டா மாமா மறுக்க மாட்டாரு” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது எழுந்து வெளியே சென்றாள்.
இங்கு ஜீவா தான் தலையை பிடித்து கொண்டான். தனக்கு இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் சேர்ந்து கொண்டதா? அத்தை மாமாவை எப்படி சமாளிக்க போகிறேன்.
பிள்ளைகளை வளர்க்க தாய் வேண்டும் என்று கூறுவார்களே எல்லோரும் சேர்ந்து என்னை நெருக்கடியில் நிற்க வைப்பார்கள் இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று எண்ணி அவனுக்கு தலை வலி வந்துவிட்டது. இதில் காதல் என்ற வார்த்தையை கேட்டதும் ஜானுவின் நினைவு வேறு வாட்டி எடுக்க விழி மூடி சாய்ந்துவிட்டான்.
இங்கு ஜானு உணவு இடைவேளை முடித்துவிட்டு வர அவளது அலைபேசி அழைத்தது.
அழைப்பை ஏற்று காதில் பொருத்தியவள் மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில், “என்ன?” என்று அதிர்ந்துவிட்டாள்.
இருவரும் சந்திக்கும் நாட்கள் நெருங்கிவிட்டதோ…?