• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 3

Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
ஜென்மம் 3

ஒரு முறை தான்

மழை வருமா?
யாரிடம் கேட்பது?

உனை காணாது நான் இங்கு நான் இல்லையே என்று அலைபேசியின் கானா இசைத்து பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த கனியை அழைக்க,

எடுத்து பார்த்தாள். மகேஷ் தான் அழைத்திருந்தான்.

அவனது பெயரை கண்டதும் இதழ்களில் ஒரு மென்னகை மறந்தது.

இதோ இவனிருக்கும் போதா உனக்கு யாருமே இல்லை என்று தோன்றுகிறது? என்று மனசாட்சி கேள்வி எழுப்ப மென்னகை புன்னகையாக விரிந்தது.

அழைப்பு உயிர்விடும் இறுதி நொடியில் ஏற்றவள் பேசும் முன்,

“கனி ஏன் கால் எடுக்க இவ்ளோ நேரம்? அங்க எல்லாம் ஓகே வா? யாரும் எதுவும் சொல்லலை தான? அப்படி எதாவது இருந்தா சொல்லு நான் வந்து உன்னை அழைச்சிட்டு போய்ட்றேன். எந்த கட்டாயத்துக்காகவும் நீ அங்க இருக்க தேவையில்லை” என்று கேள்வியை அடுக்க,

“டேய் கொஞ்சம் பொறுமையா பேசுடா” என்று சிரிப்புடன் அதட்டினாள்.

“ஹேய் நீ பர்ஸ்ட் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?” என்று அவதிபட,

“நான் நல்லா இருக்கேன். சேஃபா ரீச் ஆகிட்டேன்” என்று மொழிய,

“ஹ்ம்ம் அங்க எதுவும் பிராப்ளம் இல்லையே?”

“இல்லை அதெல்லாம் எதுவும் ஆகலை”

“நிஜமா?”

“உண்மையாவே எதுவும் நடக்கலை”

“அந்த பிசாசுங்க உன்னை எப்படி எதுவும் சொல்லாம வீட்டுக்குள்ள விட்டுதுங்க?”

“அப்பா பேசி சமாளிச்சிட்டார்”

“ஓ… இதை முன்னாடியே பண்ணி இருந்தா என்ன? நீ இவ்ளோ நாள் தனியா இருந்திருக்க வேணாம்”

“என்ன தனியா? நீங்க எல்லாம் இல்லையா?”

“இருந்தாலும் நீ எங்களை ஒரு எல்லைக்கு மேல விடலையே?” என்று அங்கலாய்த்தவன்,

“கனி திரும்ப திரும்ப கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத உண்மையாவே எந்த பிரச்சனையும் இல்லை தான?” என்று மீண்டும் வினவ,

“டேய் உண்மையாவே எந்த பிரச்சனையும் இல்லை. நான் நல்லா இருக்கேன்” என்று இவளும் அழுத்தி கூறினாள்.

“நான் வருத்தப்படுவேன்னு எதையும் மறைச்சு பொய் சொல்லிட்டு இருக்காத?” என்றிட,

இவளிடத்தில் ஒரு நொடி மௌனம். பின்னர்,

“ஹ்ம்ம்…” என்று மட்டும் வந்தது.

இவ்வுலகில் தன்னை மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பவன் இவன் என ஒவ்வொரு முறையும் உணர்த்தி கொண்டே இருக்கிறான்.

“அப்படியே உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் நான் உனக்காக இருப்பேன். மைண்ட் இட்” என்று தெளிவாக திருத்தமாக கூற,

இவள் இதழில் கீற்றாய் புன்னகை பூத்தது.

“தெரியும். நே நீட் டு டெல் திஸ்” என்று மாறாத சிரிப்புடன் கூற,

அவளது கூற்றில் எதிரில் இருந்தவனது மனநிலையும் இலகுவாக,

“ஹ்ம்ம் சரிதான். சாப்பிட்டியா?” என்று வினவ,

“இல்லை பசிக்கலை. ஒரு டீ குடிச்சேன்”

“கரெக்ட் டைம்க்கு சாப்பிடு” என்றவன் மேலும் சில கணங்கள் பேசிவிட்டு வைக்க,

இவளது மனநிலை இலகுவானது.

அறையில் இருந்த பொருட்கள் சிலவற்றை தன்னுடைய விருப்பத்திற்கு இடம் மாற்றி தன்னுடைய பொருட்களை அடுக்கி முடித்தவள் ஒரு காகிதத்தையும் எழுது கோலையும் எடுத்து தனக்கு தேவையான சில பொருட்களை பட்டியலிட்டாள்.

பிறகு எழுந்து குளித்துவிட்டு வந்தவள் அங்கிருந்த ஆளுயுர கண்ணாடியின் முன் நின்று தலையை உலர்த்த துவங்கினாள்.

‘என்ன துவட்டுற கனி. இப்படி துவட்டுனா சளி பிடிச்சிக்கும். நல்லா அழுத்தி துவட்டணும். வா நான் துவட்டி விட்றேன்’ என்று தன்னை அமர வைத்து துவட்டிவிடும் மீனாட்சியின் குரல் செவியில் மோதியது.

கரங்கள் ஒரு நொடி நின்று பின் இயங்கியது‌. எவ்வளவு நல்ல உயிர். கடவுள் ஏன் இப்படி பறித்து கொண்டார் என்று தெரியவில்லை.

இன்றுவரை எத்தனை உயிர்களை பசியில் வாடாது பார்த்து கொண்டவர் என்று எண்ணம் பிறக்க உள்ளத்தினோரம் வலி ஜனித்தது.

இன்னும் எவ்வளவு தூரம் சென்றிருக்க வேண்டியது தன்னை மட்டும் இப்படி பாதியில் விட்டுட்டு சென்றுவிட்டாரே. இதெல்லாம் கனவாக இருந்துவிட கூடாதா என்று மனம் அந்நிலையிலும் நட்பாசை கொண்டது.

சிந்தைனை கடலில் பயணித்து கொண்டிருந்தவளை கதவை தட்டும் சத்தம் நினைவிற்கு கொண்டு வர சென்று கதவை திறந்தாள்.

அங்கு பிரவீன் கையில் உணவு தட்டுடன் நின்றிருந்தான்.

கனி கேள்வியாக காண,

“உனக்கும் எனக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் கா. உள்ள போய் சாப்பிடலாமா?” என்றிட,

அவனுக்கு வழிவிட்டவள் பேச துவங்கும் முன்,

“உன் கூட உக்கார்ந்து சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு. டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் அந்த அம்மாவும் பாட்டியும் எதாவது சொல்லுவாங்கன்னு தான் ரூம்கே எடுத்துட்டு வந்துட்டேன்” என்க,

தலையசைத்து கேட்டு கொண்டவள், “அவங்க வந்துட்டாங்களா?” என்று வினவிட,

“ஹ்ம்ம் போன கொஞ்ச நேரத்திலயே வந்துட்டாங்க. உன்னை வீட்டைவிட்டு விரட்ட போறேன்னு அப்பாக்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. அப்பா அதெல்லாம் காதிலேயே வாங்கிக்கலை”

“ஓ…” என்று கேட்டு கொண்டவள்,

“ஏன் பிரவீன் இவ்ளோ கஷ்டப்பட்டு நான் இங்க இருந்து தான் ஆகணுமா?”

“ஏன் கா உனக்கு எங்ககூட இருக்க விருப்பம் இல்லையா?”

“சே சே அப்படிலாம் இல்லை? என்னால் உனக்கும் அப்பாக்கும் தான் பிராப்ளம் உன்னோட அம்மாவும் பாட்டியும் சண்டை போடுவாங்க அதான்”

“அவங்க எப்பவுமே அப்படிதான் கண்டுக்காத கா. எனக்கும் அப்பாக்கும் உன்னை அங்க தனியா விட்டுட்டு வந்து இருக்க முடியாது கா”

“நான் வேணா இந்த ஊர்லயே லேடிஸ் ஹாஸ்டல் பார்த்து தங்கிக்கவா? நாம அடிக்கடி மீட் பண்ணலாம்”

“உனக்கு இங்க இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கா? நான் வேணா அப்பாக்கிட்ட சொல்லி வேற வீடு அரேன்ஜ் பண்ண சொல்றேன் நாம ரெண்டு பேரும் அங்க ஷிஃப்ட் அகிடலாம்”

“நோ வேற வினையே வேணாம் வந்தவுடனே பையனை பிரிச்சு கூட்டிட்டு போய்ட்டேன்னு உன் அம்மா ஆட்டமா ஆட ஆரம்பிச்சிடுவாங்க. நான் இங்க இருந்துக்கிறேன்” என்று முடித்துவிட பேசியபடி உணவையும் உண்டிவிட்டிருந்தனர்.

கனி எழுந்து சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ செல்ல,

“அக்கா அதெல்லாம் நீ எதுக்கு பண்ற? கூப்பிட்டா சர்வன்ட் வந்து எடுத்திட்டு போய்டுவாங்க” என்று மொழிய,

திரும்பி, “நான் தான சாப்பிட்டோம் அப்போ நான் தான் இதை வாஷ் பண்ணனும். பணம் கொடுக்குற காரணத்தால மத்தவங்க நம்ம எச்சில் தட்டை கழுழணும்னு எந்த அவசியமும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவள் கழுவும் பணியை கவனிக்க,

அதில் உள்ள அர்த்தத்தை உணர்ந்தவன் தானும் எழுந்து வந்து சாப்பிட்டை தட்டை கழுவி வைத்தான்.

தம்பியின் செயலில் புன்னகை எழ அவனது தலையை கலைத்துவிட்டாள்.

உண்டதும் தமக்கையின் அருகில் வந்து அமர்ந்து அவளது கையை பிடித்து கொண்டவன்,

“மிஸ் யூ பேட்லி கா. நம்மகூட இந்த வீட்ல இப்படி உட்கார்ந்து சாப்பிட்டு பேசி எவ்ளோ நாள் ஆகுது” என்று அவளது தோளில் சாய்ந்து கொள்ள, இவனது அன்பில் கனிக்கு மனம் நெகிழ்ந்தது.

“இனிமேல் உன் கூட தான இருக்க போறேன். இனிமேல் தினமும் உன்கூட சேர்ந்து சாப்பிட்றேன்” என்றவள்,

“அப்பா சாப்பிட்டாறா?” என்று வினவ,

“இல்லை கா. ஆபிஸ்ல ஏதோ எமர்ஜென்சின்னு கிளம்பி போய்ட்டாரு. அங்க பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாரு”

“ஓ… அப்பா தனியா பிஸ்னஸ் பாக்க ரொம்ப கஷ்டப்படுறாரு. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா”

“என்னால முடிஞ்ச அளவு பண்ணிட்டு தான் இருக்கேன். இதோ காலேஜ் போர் மந்த்ஸ்ல முடிச்சிடும். அதுக்கு பின்னாடி அப்பாக்கு புல் ரெஸ்ட். நானே டேக் ஓவர் பண்ணிக்கிறேன்” என்று மொழிந்தான்.

பின்னர் சிறிது நேரத்தில் பிரவீனுக்கு கற்பகத்திடமிருந்து அழைப்பு வந்துவிட பிறகு வருவதாக கூறி சென்றுவிட்டான்.

பயணம் செய்த களைப்பில் சிறிது நேரம் படுத்தவள் உறங்கிவிட்டாள்.

பின்னர் எழும் போது நேரம் மாலையை தொட்டிருந்தது. அறைக்கு தேநீரும் சிற்றுண்டியும் வர முகம் கழுவி வந்தவள் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தபடி பருகி கொண்டிருந்தாள்.

தான் இல்லாத இந்த பத்து வருடத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்று விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்‌.

இருள்கவிழ துவங்கியதும் உள்ளே வந்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்ன செய்தாலும் நேரம் நகரவே இல்லை. அங்கு எதாவது வேலை செய்தே பழக்கப்பட்டவளுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது பிடிக்கவில்லை.

சீக்கிரமாக ஒரு வேலையை தேட வேண்டும் என்று நினைத்தவள் அதனை உடனே செயல்படுத்த எண்ணியவள் தனது மடிக்கணினியை எடுத்து சுயவிரவத்தை தட்டச்சு செய்தவள் வேலை வாய்ப்பு வலைதளத்தினை தேடி அதற்கெல்லாம் விண்ணப்பிக்க துவங்கினாள்.

வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்க்க சிவப்பிரகாசம் நின்று கொண்டிருந்தார்.

அவரை கண்டதும் முகம் மலர்ந்து,

“வாங்கப்பா இப்போ தான் வந்திங்களா?” என்று வினவிட,

“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்மா? என்ன பண்ணிட்டு இருக்க?” என்று வினா தொடுக்க,

“ஜாப் அப்ளை பண்ணிட்டு இருக்கேன் பா. இப்போ அப்ளை பண்ணாதான். ஒரு மந்த்குள்ளவாது ஜாப் கிடைக்கும். இப்போலாம் ஹெவி காம்படிஷன்” என்றிட,

“நம்ம‌ கம்பெனி இருக்கும் போது நீ எதுக்குடா வெளிய வேலைக்கு போற?” என்றதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள்,

“உங்களுக்கு வாழ்க்கையில நிம்மதி வேணாமா பா?” என்று வினவ,

சிவப்பிரகாசம் புரியாது நோக்கினார்.

“நான் இந்த வீட்ல இருக்கதே உங்க பொண்டாட்டிக்கும் அவங்க அம்மாக்கும் பிடிக்கலை. நான் மட்டும் ஆபிஸ் பக்கம் வந்தா அவ்ளோ தான் உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க” என்றிட,

“அவங்க கிடக்காங்க. அவங்க பேசுவதெல்லாம் காதுல வாங்கிக்காத. அவங்களால என்னை மீறி எதுவும் செஞ்சிட முடியாது”

“எல்லா நேரமும் கண்டுக்காம இருக்க முடியாது பா. நானும் உயிருள்ள சாதாரண மனுஷி எனக்கும் உணர்வுகள் எல்லாம் இருக்கு. ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்” என்று முடித்திட,

அதற்கு மேல் சிவப்பிரகாசத்தால் இந்த விடயத்தில் பேச இயலவில்லை.

அவரது அமைதியில் தான் பேசிய வார்த்தைகள் அவரை காயப்படுத்திவிட்டதோ என்று எண்ணியவள்,

“சாரிப்பா உங்களை எதாவது ஹேர்ட் பண்ணிட்டேனா?” என்று கேட்டுவிட,

“நீ எதுக்கு மா சாரி சொல்ற. நீ பேசுனதுல எந்த தப்பும் இல்லை. நான் உனக்கு வேற ஜாப் அரேன்ஜ் பண்றேன்” என்றார்.

“வேணாம்பா நான் பாத்துக்கிறேன்” என்றவள் மறுக்க,

“நோ நம்ம ஆபிஸ் வேணாம்னு சொன்ன கேட்டுக்கிட்டேன் தான அதுபோல நான் சொல்ற ஜாப்ல நீ ஜாயின் பண்ணனும்” என்க,

மனமேயின்றி தலையசைத்தாள்.

சிவா அடுத்து ஏதோ பேச வர அலைபேசி அழைப்பு தடுத்தது.

எடுத்து பார்க்க கிரிதரன் தான் அழைத்து கொண்டிருந்தார்.

“கிரிதான் கூப்பிட்றான் பேசிட்டு வர்றேன்” என்று எழுந்து சென்றவர் அழைப்பை ஏற்க மறுமுனையில்,

“சிவா அம்மா கற்பகமும் திரும்பி வந்துட்டாங்களே. எதுவும் பிராப்ளம் இல்லையே?” என்று விசாரிக்க,

“வழக்கம் போல கத்துனாங்க. நான் காதுல வாங்கிக்கலை”

“இவங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்காங்க. இவங்க மட்டுமில்லாம பிரத்யுவயும் கெடுத்து வச்சு இருக்காங்க” என்று கிரி வருத்தப்பட,

“என் பொண்ணு மேல அப்படி என்னதான் வெறுப்பு இவங்களுக்குனு எனக்கு புரியலை” என்று சிவாவும் கூறினார்.

“இவங்க சொல்றதை உண்மைனு நம்பிட்டு பார்த்தியும் கஸ்தூரியும் உன்கிட்ட பேச வர்றேனு சொல்லிட்டு இருந்தாங்க. நான் தான் தடுத்துட்டேன்”

“தெரியுமே இவங்க இப்படி தான்னு ஒரு நாள் பார்த்திக்கும் என் தங்கச்சிக்கும் புரியும் விடு” என்றவர்,

“கனிக்கு ஒரு நல்ல வேலை வேணும் “ என்றிட,

தங்கையை கருத்தில் கொண்டு தான் சொந்த நிறுவனம் இருந்தும் வெளியே வேலை தேடுகிறார்கள் என்பதை உணர்ந்து ஒரு நொடி சிந்தித்தவர்,

“நான் பார்த்திக்கிட்ட பேசுறேன். அவன் கம்பெனியிலயே ஜாயின் பண்ணிக்கட்டும். அதான் சேஃபா இருக்கும். அவனே பாத்துப்பான்” என்க,

“பார்த்தி என்ன சொல்லுவான்?” என்று வினா எழுப்பினார்.

“நான் பாத்துக்கிறேன் அதை. நாளைக்கே வந்து வேணும்னாலும் ஜாயின் பண்ணிக்க சொல்லு” என்றிட பேசிமுடித்துவிட்டு வந்தவர்,

“பாப்பா கிரிக்கிட்ட பேசிட்டேன் அவன் உனக்கு ஜாப் ரெடி பண்ணிட்டான்” என்று மொழிய,

அதில் திகைத்தவள், “அவங்கிட்டயா? வேணாம் பா. வெளியே வேற எங்கயாவது அரேன்ஜ் பண்ணிக்கலாம்” என்று மறுக்க,

“அவன்கிட்டனா அவனோட கம்பெனி இல்லைம்மா” என்றிட,

அதில் சற்று ஆசுவாசம் அடைந்தவள், “சரிங்கப்பா” என்க,

“பார்த்தீ தெரியும்ல அவனோட கம்பெனி” என்றிட,

அவனது பெயரை கேட்டதும் ஒரு முறை இறுகி மீண்டவள்,

“என்ன?” என்று திகைப்பும் அதிர்வுமாக கேட்க,

“என்ன பாப்பா? உனக்கு பார்த்தீய ஞாபகம் இல்லையா? உன்னோட கிரி மாமா கஸ்தூரி அத்தை மகன். சின்ன வயசுல கூட அத்தான் அத்தான்னு அவன் கூடவே சுத்திட்டு இருப்பியே?” என்று மகள் மறந்துவிட்டாளென நினைவு படுத்த,

இங்கோ இவள் பழைய நினைவுகள் மீண்டதில் உள்ளுக்குள்ளே இறுகியவள்,

“ஹ்ம்ம் தெரியும்” என்றிட,

“அதான உன்னோட அத்தானை எப்படி நீ மறந்திருப்ப. பத்து வருஷத்துக்கு முன்னாடி பாத்ததுல. இப்போ ஆளே மாறிட்டான். நீயே பாரு” என்று அலைபேசியில் புகைப்படத்தை எடுக்க,

“பிரவீன் முன்னாடியே காட்டிட்டான்பா” என்று அதனை தவிர்த்தவள்,

“ப்பா அங்க. அவர் கம்பெனியில வேணாம் பா” என்று மறுதலித்தாள்.

“என்ன பாப்பா. அவர் இவர்னு அவன் உனக்கு அத்தான் முறை சொல்லி பழகு” என்க,

சடுதியில்,

“சீ என்னை அப்படி கூப்பிடாதே கேட்கவே பிடிக்கலை. இந்த ஜென்மத்துல நீ என்னை அப்படி கூப்பிட கூடாது” என்றவனது குரல் ஒருவித அருவருப்புடன் ஒலிக்க,

உள்ளே இதயம் மெல்லிய சங்கிலியால் இறுகியது.

“அது ரொம்ப நாள் ஆனதால நேச்சுரலா கூப்பிட வர மாட்டிங்கிது” என்றவள்,

“அதை விடுங்கப்பா எனக்கு அங்க போக விருப்பம் இல்லைப்பா” என்று மொழிய,

“ஏன் பாப்பா என்ன காரணத்துக்காக போக மாட்டேன்னு சொல்ற?”

ஒரு கணம் மௌனித்தவள்,

“காரணம் எதுவும் இல்லைப்பா” என்க,

“அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்காக தான் செய்வேன். மறுக்காம நான் சொல்றதை கேளு பாப்பா” என்று முடித்துவிட அவளால் அந்த குரலை மறுக்க முடியவில்லை.

சரி பணிக்கு தானே செல்கிறோம் என்று மனதை தேற்றி கொண்டாள்‌.

அதன் பிறகு பிரவீன் உணவு கொண்டு வர மூவரும் பேசியபடி உண்டுவிட்டு படுக்க சென்றனர்.

கனிக்கு தான் உறக்கம் அருகிலே அண்டவில்லை. மதியம் உறங்கிவிட்டதால் வரவில்லை என்று தனக்கு தானே கூறி கொண்டவளது மனதிற்கு தெரியும் காரணம் என்னவென்று.

விழிகளை மூடினால் வேண்டாத நிகழ்வெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுக்க நாளை நடப்பதை நாளை பார்ப்போம் என்று உறுதி எடுத்தவள் வெகு தாமதமாக தூங்கி போனாள்.

இருந்தும் காலை விரைவில் எழும் பழக்கம் உள்ளவள் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்தாள்.

காலை கடன்களை முடித்து வந்தவள் தரையில் போர்வையை விரித்து யோகாவை செய்ய துவங்கினாள்.

தன்னுடைய உணர்வுகளை ஒரு நிலை படுத்துதவதற்கும் கவனத்தை சிதற விடாமல் இருக்கவும் துவங்கியது. இன்றுவரை அவளது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய செய்வது யோகா தான்.

செய்து முடித்துவிட்டு நேரத்தை காண ஐந்தே முக்கால் ஆகி இருந்தது.

இந்நேரம் யாரும் கீழே எழுந்திருக்க வாய்ப்பில்லை. என்ன செய்வதென்று யோசித்தவள் அருகில் ஒரு பூங்கா உள்ளது அதுவரை நடந்துவிட்டு வருவோர் என்று முடிவு செய்து அணிந்திருந்த இரவு உடையின் மேல் ஒரு ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டவள் கையில் அலைபேசியையும் காதொலிப்பானையும் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

வாசலில் இருந்த காவலாளி, “அம்மா இந்த நேரத்துல எங்க போறீங்க? எதாவது வேணும்னா சொல்லுங்க நான் வாங்கி தர்றேன்” என்று வினவிட,

“வாக்கிங் தான் அண்ணா போறேன். அப்பா எழுந்து கேட்டா சொல்லுங்க” என்றவள் காதொலிப்பானை காதில் சொருகி தனக்கு பிடித்த பாடலை ஓடவிட்டபடி காலாற நடக்க துவங்கினாள்.

காலை பொழுது அமைதியான சாலையில் நடப்பது கூட ரம்யமாக தான் இருந்தது கன்னல் மொழிக்கு.

அதுவும் காதுக்குள் ஒலிக்கு எஸ்.பி.பியின் பாடலில் முழுவதாய் ஒன்றி போயிருந்தாளே‌.

அதனை கலைக்கும் விதமாகவே அவள் கைகள் ஒரு வலிய கரத்தால் நொடி நேரத்தில் இழுக்கப்பட அதிர்ந்து போனவள் சுதாரிக்கும் முன்பே பின்புறம் சாய்ந்து விழ போயிருந்தாள்.

இம்முறையும் அவ்வலிய கரம் அவளது இடையை தாங்கி பிடிக்க, கண நேரத்தில் என்ன நடந்ததென கிரகிக்கும் முன் ஒரு மகிழுந்து அவளை கடந்து சென்றது.

நடக்க இருந்த விபரீதம் நொடியில் பிடிபட இதயம் படபடவென்று அடிக்க துவங்கியது.

முகத்தை சட்டென்று திருப்பி தன்னை காப்பாற்றிய கரத்திற்கு சொந்தக்காரனை கண்டாள்.

கண்ட கணம் சட்டென்று பிடி நழுவிட கீழே செல்ல மீண்டும் அவளது இடையை பிடித்து தூக்கி நிறுத்தியவன் அவளை முறைத்தான்.

ஆனால் அவள் தான் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவர இயலாது மத்தளம் வாசித்த இதயத்துடன் நின்றிருந்தாள்.

“ஹே கேர்ள் கார் வர்றதை கூட கவனிக்காம அப்படி என்ன மொபைல். நான் பிடிச்சு இழுக்கலைனா உன்னை அடிச்சு போட்டுட்டு போய்ட்டே இருக்கும்” என்று அவளை கோபமாக அதட்ட,

கனியின் விழிகள் எதிரில் இருந்தவனை தானே ஆராய்ந்தது. அவளைவிட சற்று அதிக உயரமாக இருந்தவன் நல்ல சிவந்த நிறத்தில் அந்த காலை நேரத்தில் ஊட்டி ஆப்பிளை தான் நினைவுபடுத்தினான்.

நடை பயிற்சி செய்வதற்கு ஏதுவான டீ சர்ட் பேண்ட் அணிந்திருந்தவனது நெற்றியில் இருந்து சொட்டு சொட்டாக வியர்வை கன்னத்தை நனைத்து கொண்டிருந்தது. தோற்றத்தில் ஏதோ ஒரு பட கதாநாயகனை நினைவு படுத்துவனை கண்ட உள்ளம்,

“பார்த்தீபன்” என்று மெலிதாய் முணுமுணுத்தது.

இவை யாவும் அவன் திட்டி முடிப்பதற்குள் நடந்திருந்தது.

அவனது கோபத்திற்கான காரணத்தை அறிந்தவள் தவறு தன்மீது தான் என்று உணர்ந்து,

“சாரி சார். நான் கவனிக்கலை. ஏதோ திங்கிங்ல இருந்துட்டேன்” என்று வருந்தி மன்னிப்பை யாசிக்க,

“ரோட்ல போகும் போது கவனம் இங்க தான் இருக்கணும்” என்று அழுத்தமாக கூற,

“இட்ஸ் மை மிஸ்டேக்” என்று மீண்டும் ஒப்புக்கொண்டவள்,

“ரொம்ப நன்றி சார். என்னை காப்பத்துனதுக்கு” என்று நன்றி நவிழ்ந்தாள்.

மன்னிப்பையும் நன்றியையும் சேர்த்து ஒரே தலையசைப்பில் ஏற்று கொண்டவன்,

“பார்த்து போ” என்றிட,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் நகர எத்தனிக்க,

அப்போது தான் நினைவு வந்தவனாக, “ஹேய் கேர்ள் ஸ்டாப்” என்று நிறுத்தி,


“நமக்கு ஏற்கனவே அறிமுகம் இருக்கா? எனக்கு உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?” என்று வினவிட,

சடுதியில் அவளது முகத்தில் இறுக்கம் உடல் மொழியில் மாற்றம் வந்தது. “நோ சார். எனக்கு உங்களை தெரியாது. நான் இப்ப தான் பர்ஸ்ட் டைம் உங்களை பாக்குறேன்” என்றவள் விறுவிறுவென அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்திருந்தாள் கன்னல் மொழி…

 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Mozhi ah parthiban aruvaruppu ah pesunathuku karanam avan athai patti prayu than karanam ah irupagalo nu thonuthu athu na la than iva avan per ah keta la yae ipadi irugi porathukum ippo avan kethathukum yaru nu yae theriyathu nu sollita la ah
 
Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
Mozhi ah parthiban aruvaruppu ah pesunathuku karanam avan athai patti prayu than karanam ah irupagalo nu thonuthu athu na la than iva avan per ah keta la yae ipadi irugi porathukum ippo avan kethathukum yaru nu yae theriyathu nu sollita la ah
Ama ama 😂
 
Top