• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 3

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 3


யாஷிற்கு சட்டென்று முகம் முழுவதும் வியர்வை துளிகள் தேங்கி விட்டது ஆடவனின் வருகையில். மூளை கூறிய அத்தனை தைரியமும் காற்றோடு கரைந்து காணாமல் போக ஸ்தம்பித்து நின்றிருந்தாள் மருண்ட விழிகளோடு.

நவீனின் தோற்றம் வசீகரித்தாலும் அவனின் அலட்சியமான உடல்மொழி, வம்பிலுக்கும் கேலியான புன்னகை எல்லாம் சேர்ந்து பெண்ணை சற்று கலங்க தான் செய்திருந்தது ஆரம்பத்திலிருந்தே. ஆக, பயம் என்பதை மீறி ஒரு வித அதிர்வலைகள் அவளுள். அது அது தான் ஏனோ ஆடவனுக்கும் பிடித்தது போலும்!


நகராது அவள் நின்றிருந்த நிலையை கண்டு ஆடவன் கரங்கள் தலையை கோதிக் கொள்ள ரூபா எழுந்து வந்திருந்தாள் வாயிலுக்கு, "யார் யாஷ்?" என்ற வினாவோடு.


'அப்பாடா தப்பித்தோம்' என்றெண்ணியவள் சட்டென்று விலகி ரூபாவிற்கு வழி கொடுத்து மறைந்து விட்டாள். ஆம், டேபிளில் இருந்த அலைபேசியை காதிற்கு கொடுத்து வாராத அழைப்பை ஏற்பதை போல் பாவனை செய்து அறைக்குள் நுழைந்து கொண்டாள். ஏனோ இதயம் இரயிலை விட வேகமாக துடித்தது மீண்டுமொரு பார்வை கபளீகரத்தில். அதுவும் தன் வீட்டு வாயிலில் நடந்து விட்டதில். 'அவன் யார்? எதற்கு வந்திருக்கிறான்?' என்பதெல்லாம் பின்னுக்கு சென்று விட ஒரு வித பதற்றம் அவளுள் ஊடுருவியிருந்தது.


கண்களை மூடி படுக்கையில் அமர்ந்து விட்டவள் ஷமீரா அறைக்கதவை தட்டிய பின்பே வெளியில் வந்தாள். விழிகள் சட்டென்று ஷமீராவை தாண்டி வீட்டை ஆராய ஆள் அரவமில்லை. ரூபா மட்டும் அடுப்பறையில் நின்று ஏதோ செய்து கொண்டிருக்க மனோ எப்பொழுதோ வெளியில் பறந்திருந்தான். "அத்தை" என்று யாஷின் கால்களை கட்டிக் கொண்ட முயல்குட்டி தன் உயரத்தில் பாதியிலிருந்த ஒரு சாக்லேட்டை கையில் வைத்திருந்தாள் முகம் கொள்ள புன்னகையுடன். 'அவன் தான் கொடுத்திருப்பான்' என்று யாஷின் மூளை கூற மனதோ வீட்டின் இயல்பு நிலையை கருத்தில் கொண்டு தான் கண்டது கனவோ என்று சற்று குழம்பி தவித்து தான் போனது.

ரூபாவிடம் கேட்கலாம் என்று நினைத்தாலும் வார்த்தை வராது போயிற்று பாவைக்கு. "யாஷ், நீ இன்னும் சாப்பிடலை தான?" என்ற ரூபா அவளை உணவுண்ண அழைத்து சென்று விட யாஷின் கவனம் உணவின் மீதிருந்திருக்கவில்லை தான்.


அன்றைக்கு பிறகு வழக்கமாக நாட்கள் நகர்ந்தாலும் யாஷூம் நவீனும் அவனின் பார்வை பரிமாற்றமும் மாறவேயில்லை. 'ஏன் வீட்டிற்கு வந்தான்?' என்று பேதைக்கு தெரிந்திருக்கவும் இல்லை. யாரிடமும் சென்று வினவும் அவசியத்தை மீறி தைரியம் அவளுக்கு இருந்திருக்கவில்லை. நவீனிடம் அவளிற்கிருந்த அதிர்வுடன் தற்பொழுது குழப்பமும் சேர்ந்து கொண்டது. அவன் எப்பொழுதும் அதே அலட்சிய பாவனை தான் சிறிதும் மாற்றமின்றி....


அன்று யாஷ் கல்லூரி விட்டு வீட்டிற்குள் நுழையும் பொழுதே மனோவுடன் ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்தவள் அவரை கண்டு புருவம் சுருக்க, "யாஷ் இங்க வா" என்ற மனோ, "இவ யாஷ் என்னோட சிஸ்டர். இது என்னோட பொண்ணு ஷமீரா" என்று இருவரையும் அறிமுகப்படுத்த யாஷ்வியும் அந்த பெண்மணியிடம் சிநேகித பாவத்துடன் புன்னகை கொடுத்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


சற்று நேரத்தில் யாஷ்வியின் அறைக்கதவை தட்டி தேநீர் குவளையை நீட்டிய ரூபா, "யாஷ், உன்கிட்ட பேசணுமாம். மனோ கூப்பிட்டார்" என்ற தகவலுடன் ஹாலுக்கு சென்று விட யாஷூம் தேநீர் குவளையை காலி செய்து மனோ முன் அமர்ந்திருந்தாள்.



"யாஷ், ஈவ்னிங் வந்திருந்தாங்களே அந்த ஆன்ட்டி அவங்க லலிதா. நம்ம பில்டிங் ஓனர்" என்று நெற்றியை சொறிந்தவன், "அன்னைக்கு ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்திருந்தார் ஞாபமிருக்கா?" என்றான் தங்கையை பார்த்து. நவீனை தான் கூறுகிறான் என்று யாஷின் மூளை சட்டென்று பிடித்துக் கொண்டாலும் அதை வெளியில் காட்டாது அமைதியாய் தலையசைத்தப்படி அண்ணனை பார்த்து அமர்ந்திருந்தாள்.


"அவர் உன்னை பார்த்திருப்பார் போல, அவர் ஏதோ டைரக்டராம். ஆட் தென் ஷாட்பிலிம் எல்லாம் எடுத்திருப்பார் போல. அதில நடிக்க உன்னை கேட்கிறாங்க. அவர் வந்து பேசுனப்பவே நான் விருப்பமில்ல சொல்லி விட்டுடேன். ஆனா இப்ப அந்த ஆன்ட்டி வந்து பேசுறாங்க, அவங்களோட சொந்தம் போல. ரொம்ப நல்ல பையன், நம்பி நீங்க பொண்ணை அனுப்பலாம். பத்திரமா பார்த்துப்பான், எந்த பிரச்சனையும் வராதுன்னு சொல்லி பேசுறாங்க. அம்மாகிட்டயும் நேராவே பேசிட்டாங்க. உனக்கு விருப்பமிருந்தா அம்மாவும் சம்மதம் சொல்லிட்டாங்க" என்று தங்கையை பார்த்தான்.


அதிருப்தியாய் நெற்றியை சுருக்கியவளை கண்டு, "சரி நான் உனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிடுறேன் யாஷ்" என்ற மனோ தகவலை அந்த பெண்மணிக்கு கடத்தியிருந்தான். ஆம், தங்கையின் முக பாவனையே விருப்பமின்மையை அப்பட்டமாய் வெளிக்காட்டியது. அத்தோடு அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டதாக யாஷ் நினைத்திருக்க அது அப்படியல்ல என்று நவீன் நிரூப்பித்தான். இரண்டு நாட்களில் அந்த பெண்மணியின் கணவர் வந்து மனோவிடம் பேச நான்கு நாட்கள் கழித்து அவரின் மகனுமே பேசினான்.


பெண்ணிற்கு கோபத்தை மீறி எரிச்சல் மண்டியிட்டது நவீனை காணும் பொழுதெல்லாம். ஆனால் அவனோ எதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அசட்டையாய் தோள் குலுக்கி இதழ் வளைத்து நிற்பான். 'ஆளைப்பார்!' என்ற பார்வை தான் யாஷிடத்தில் தற்பொழுது. ஆம், முதலில் இருந்த அதிர்வு மறைந்து, 'டேய் போடா' என்ற லகுதன்மையை கொண்டு வந்திருந்தாள் பெண். புரிந்தவனுக்கும் இதழ் நிறைந்த புன்னகை ஆனால் விழிகளோ, 'உன்னை விட மாட்டேன்' என்ற செய்தியை பிரதிபலிக்க கண நேரம் மட்டும் பெண்ணிடம் குளிரெடுக்கும். மற்றப்படி காணும் நேரமெல்லாம் சாக்லேட்டை அள்ளிக் கொடுத்து முயல்குட்டியை துணைக்கு பிடித்திருந்தான். அவனை விட அவனது விழிகள் தான் அதிகம் பேசியது எல்லோரிடமும். ஷமீயின் முகமும் அவனை கண்டவுடன் சட்டென்று பிரகாசமாகி விடும் தேங்கிய புன்னகையுடன். 'ஐயோடா, முடியலைடா சாமி' என்று அந்த குட்டி முயலை யாஷ் முறைக்க ஷமீயோ அவளை கண்டால் தானே!


ஆக, நவீன் படுத்திய பாட்டில் யாஷ் அவனுடைய வழிக்கு வந்திருந்தாள். ம்கும்..வர வைத்திருந்தான் அப்படி கூறினால் தகும். ஆம், அடுத்தடுத்து ஒவ்வொருவராக வீட்டிற்கு படையெடுத்து வர வேறு வழியின்றி மனோவும், "நீ ஒரு தடவை ஷூட் போ யாஷ், விருப்பமில்லைன்னா கண்டிப்பா வேண்டாம் சொல்லிடலாம். இத்தனை பேர் இறங்கி வந்து பேசுறாங்க" என்று கூறி சங்கடமாக தங்கையை பார்க்க அவளுக்கும் தலையசைப்பதை தவிர வேறு வழியிருந்திருக்கவில்லை.

"நீங்க கவலையேபடாதீங்க, அவங்க என்னோட பொறுப்பு" என்று மனோவிற்கு உறுதிமொழி கொடுத்தே யாஷ்வியையும் இலவச இணைப்பாக ஷமீராவையும் அழைத்துச் சென்றான் நவீன். யாஷ்வி கல்லூரி செல்வதால் ஞாயிறன்று மட்டும். காலையில் அவனுடன் செல்பவள் இரவில் தான் வீடு திரும்புவாள். முதல் இரண்டு வாரம் தங்கையுடன் துணைக்கு சென்ற மனோவிற்கு அடுத்தடுத்த வாரங்களில் முக்கியமான அலுவலக வேலைகள் குவிந்து கொள்ள அவளை நவீனுடன் அனுப்பியிருந்தான். ஏனோ அவனை கண்டவுடன் அண்ணனுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றிருந்தது. அவனுக்காக படையெடுத்தவர்களும் அப்படியொன்றை கட்டமைத்து விட்டார்கள் பேச்சின் மூலம். நவீனின் தோற்றமும் உடல் மொழியும் எதிரிலிருப்பவர்களை தானாகவே மரியாதை கொடுக்க செய்து விடும். அதற்கு அவனின் அளவான பேச்சும் தீவிரமான பார்வையும் கூட காரணமாக கூறிடலாம்.



முதல் இரண்டு வாரங்கள் அந்த இடத்தில் பொருந்த முடியாமல் தவித்து போனாள் யாஷ்வி. நவீனை தவிர இன்னும் நிறைய பேர் அங்கு குழுமியிருந்தனர், ஆண் பெண் என்ற பேதமின்றி இயல்பாய் ஆங்காங்கே கலந்து அரட்டையுடன் வேலையில் மூழ்கியிருந்தவர்களுடன் இணைந்து கொண்டாள் யாஷ்வி. உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெண்ணை அழைத்து, "இவங்க யாஷ், நான் சொல்லியிருக்கேனே தீப்ஸ். பார்த்துக்கோ" என்று நவீன் அந்த பெண்ணின் பாதுகாப்பில் விட்டவன் தான் அதற்கு பின் கிளம்பும் கணங்களில் தான் யாஷ்வியை தேடி வந்தான். நவீன் அறிமுகம் செய்து பெண்ணுடன் தான் யாஷ்வி சுற்றித் திரிந்தாள். யாஷ்வி, இயல்பிலே அமைதி என்பதால் அமர்ந்து கொண்டு நடக்கும் வேலைகளை வேடிக்கை மட்டுமே பார்த்தாள். அவளுக்கு எதிர்பதமாக ஷமீரா, அந்த மூன்று மாடி கொண்ட தளத்தை பல முறை வலம் வந்து விட்டாள். பார்ப்பவர்களெல்லாம் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு பறந்து விட அவளும் வாய் ஓயாது பேசி அந்த இடத்தை கலகலப்பாக்கினாள். யாஷ்வியை ஷமீராவை கொண்டு தான் அடையாளம் கண்டு கொண்டனர்.



அது புதிதாக வளர்ந்து வரும் இளைஞர்களை கொண்ட சிறிய படத்தயாரிப்பு நிறுவனம். விளம்பரங்கள், குறும்படங்கள் என்று முதலடியை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அதில் நவீனும் இணைந்திருந்தான். இது எத்தனை நாட்களென்றால், 'தெரியாது' என்று உதட்டை பிதுக்குவான். நவீனின் தந்தை ராகவ் சென்னையில் தோல் பதனிடும் தொழிற்சாலையொன்று வைத்திருக்கிறார். தாய் வாணி ஒரே புதல்வன் நவீன். ஆக சற்று அல்ல வளமான குடும்பம். தந்தை தேவைக்கு அதிகமாகவே பணத்தை சேர்த்து விட அவனுக்கு அதில் நாட்டமே இல்லாமல் போயிற்று. படித்ததற்கு தொடர்பில்லாது ஏதாவது ஒரு வேலையில் எந்த ஊரிலாவது சுற்றித் திரிவான். அவனுடைய தேடல் எதை குறித்தென்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் செய்வதெல்லாம் அத்தனை கச்சிதமாக செய்திடுவான். 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்றால் கண்டிப்பாக தெரியவே தெரியாது என்பதே பதிலாக இருக்கும். அதாவது இலக்கின்றி ஒரு நிர்ணயமற்ற தேடல். தற்பொழுது அவனுடைய நண்பனொருவன் படத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்க அவனுக்காக நிதயுதவி செய்ய முன் வந்த நவீனும் அவனுடன் இணைந்திருந்தான் இயக்குநராக. இந்த அவதாரம் எத்தனை நாட்கள் என்பது அவனுக்கு மட்டுமே புரிபட்ட ஒன்று. ஆம், பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் தற்காலிக பணியில் சேர்ந்திருந்தவன் வார விடுமுறையில் படத்தயாரிப்பில் கழித்திடுவான். அப்படியொரு முறை கதாநாயகிக்கான தேடலில் இருந்த கணத்தில் அவனது விழிகளில் அகப்பட்டவள் தான் யாஷ்வி என்ற மயில். அவளின் அதிர்வும் அந்த பாவனையும் ஆடவனை ஆர்கஷித்தது. அவனுள் ஒரு வித சுவாரசியத்தை முளைக்க செய்திருந்தாள் பேதை. ஆக, பிடித்துக் கொண்டான் சாதரணமாக அல்ல இறுகிய பிடிப்பு.



மூன்று மாதங்கள் ஆடவனுடன் யாஷ்வி பயணித்திருந்தாள். இன்னும் ஒரு வார்த்தை கூட அவனிடம் அவசியத்தை தவிர பேசியதன்று. அந்த உடல்மொழி பேதையை மட்டுமல்ல அனைவரையுமே அவனிடமிருந்து தள்ளி நிறுத்தி விடும். படப்பிடிப்பு தளத்திலும் எல்லோருமே, "நவீன் அண்ணா" என்ற மரியாதை கொடுத்து பவ்யமாக இரண்டடி தள்ளி நின்றே உரையாடுவார்கள். அவனை விட முதிர்ந்தவர்கள் என்றாலும் அத்தனை மரியாதை கிடைக்கும். நவீன் அழைத்து வந்திருந்ததால் யாஷ்விக்கும் அந்த மரியாதை உண்டு. யாரும் கடிந்து கூட பேசிட மாட்டார்கள், உணவிலிருந்து அவளுக்கு தேவையானது எல்லாமே அவளின் இருப்பிடத்திற்கே வந்து விடும். மற்றவர்கள் எல்லாம் தங்களுக்கானதை தேடிச் செல்ல அவளுக்கு மட்டும் ராஜமரியாதை தான். அது அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் நவீனிடம் வாயை திறந்து கூறுமளவிற்கு துணிவில்லை. ஆம், இதுவரை நவீன் யாரிடமும் இதழ் விரிந்த புன்னகையுடன் பேசி அவள் பார்த்தில்லை. ஒரே ஒரு பார்வை தான், எதிரிலிருப்பவர்கள் அடித்து பிடித்து ஓடி விட வேண்டும். 'யப்பா..என்ன பார்வைடா சாமி' என்று யாஷ்வியும் சிலிர்த்ததுண்டு. ஷமீராவிடம் மட்டும் லேசாக இதழ் விரிந்த புன்னகையுடன் பேசுவான். மகிழுந்து பயணத்தில் அவனிடம் வாயடித்து வரும் ஷமீயை கண்டு கூட அவ்வப்பொழுது பொறாமை எழுந்ததுண்டு, 'இவளுக்கு இருக்கும் தைரியம் கூட என்னிடமில்லையா' என!


தன்னையும் அறியாமல் பேதையை ஈர்த்திருந்தான் ஆடவன். அவனின் அளவான பேச்சும் அலட்டலில்லாத பாவனையும் அவளை கவர்ந்திருந்தது. ஆம், அவளும் எப்படியென்று புரியாது அவனை நோக்கி நகர்ந்திருந்தாள் மனதளவில். ஆடவனுக்கும் அவளை புரிகிறது ஆனால் அதை கண்டு கொள்ளாது அசட்டையாக கடந்து கொண்டிருந்தான்.



ஒரு குறும்படம் வெளியிடப்பட்டு வெற்றியடைந்திருக்க யாஷ்விக்கான ரசிகர் வட்டம் உருவாகி அவளை மற்றொரு உலகத்திற்கு அழைத்து சென்றிருந்தது. வெள்ளித்திரையளவு இல்லையென்றாலும் அவர்களவில் அதுவொரு மிகப்பெரிய வெற்றி தானே!...முதலில் தயங்கிய யாஷ்விக்கும் அங்கிருந்தவர்களை பிடித்து தான் போனது. அமெரிக்காவிலிருந்து அழைத்து சவிதா கூட பாராட்டியிருந்தார். "சூப்பரா நடிச்சிருக்க யாஷ்ம்மா, நான் எதிர்பார்க்கவேயில்லை" என்று உற்சாகமாக பேசி. அதுவொரு கலை தான், எல்லாருக்குமே கைவந்து விடாதே. ஆக, பெண் கல்லூரியை தாண்டி மறறொரு பரிமாணத்தில் லயிக்க துவங்கிருந்தாள். அதற்கொரு முக்கிய காரணம் நவீன் என்றாலும் தகும்.



நவீனை கண்டு அலறி ஓடிய காலம் விடுத்து இப்பொழுதெல்லாம் அவனுடனான பொழுதை எதிர்பார்த்து ரசிக்க துவங்கியிருந்தது மனது. ஏனோ பெண்ணின் மனதை நிறைத்து நின்றான். அவனின் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமின்றி அசைவுகளும் பாவனைகளும் பெண்ணை திரும்பி பார்க்க செய்திருந்தது. நெற்றியை தேய்ப்பது, பின்னந்தலையை கோதுவது, புருவத்தை சொறிவது, இதழ் வளைப்பது என்று ஒவ்வொரு அபிநயங்களையும் அச்சுபிசகாமல் ஒப்பித்து விடுவாள் எந்த நேரத்தில் எப்படி பிரதிபலிப்பான் என்பதை.



இரண்டு மூன்று என்று அவர்களின்
பயணங்கள் ஆறு மாதங்களை தாண்டியிருந்தது. முதலில் ஒன்றிரண்டு விளம்பரங்கள் அடுத்து குறும்படம் என்று யாஷின் நகர்வுகள் நீண்டு கொண்டே செல்ல கல்லூரி படிப்பும் முடியும் தருவாயில் நிற்க பெண் கொஞ்சமல்ல அதிகமாகவே பிஸியாகி போயினாள்.


அந்த வாரத்தில் நவீனிற்காக வாகனம் நிறுத்துமிடத்தில் காத்திருக்க அவனுடைய மகிழுந்திற்கு பதிலாக மற்றொன்று அவளருகில் வந்து நின்றது ஓட்டுநருடன். இறங்கி வந்து, "நவீன் சார் பேசணுமாம்" என்று அழைபேசியை நீட்டியிருக்க வாங்கி காதில் பொருத்தினாள். "யாஷ், நீ ட்ரைவர் கூட கிளம்பு. நான் வர முடியாது" என்று அழைப்பை துண்டித்து விட்டான். சட்டென்று பெண்ணின் விழிகளில் நீர் தேங்கியது காரணமறியாது. எதிரிலிருப்பவர் அறியாது மறைத்துக் கொண்டு ஷமீராவை அள்ளிக் கொண்டு மகிழுந்தில் ஏறியவளுக்கு அந்த பயணம் ஏனோ பிடிக்காமல் போனது. நவீனின் காரை போன்று தான் அதுவும் உருவத்தை கொண்டிருந்தது. ஆனால் பெண் தேடியது காரையன்று நவீனை தானே. அவனருகில் இருக்கும் கணங்களில் பெண்ணின் மனது அத்தனை பாதுகாப்புடன் ஆசுவாசத்தை உணரும். இரவில் வீடு திரும்ப சற்று நேரமாகி விட்டாலும் ஷமீயுடன் இணைந்து அவளும் அமர்ந்தவாக்கிலே உறங்கியும் போவாள். பெயரை அழைத்து கூட எழுப்ப மாட்டான். காரின் ஹாரனை அடித்தே எழுப்புவான். ஷமீயுடன் அவள் தடுமாற அவளை கையில் வாங்கிக் கொண்டு தண்ணீர் பொத்தலை அவளிடம் நீட்டுவான், 'முகத்தை கழுவிக் கொள்' என்பதாய். அவனது கரிசனத்திலும் கவனப்பிலும் பெண் கரைந்து நெகிழ்ந்து தான் போவாள்.


மகிழுந்தில் ஏறியவுடனே அவனது வாசனை திரவித்துடன் இணைந்த வளியே அவளது நாசியை தீண்டி நுரையீரலை நிரப்பி சிலிர்க்க செய்திடும். அவ்வப்பொழுது ஸ்டியரிங்கில் தாளமிட்டுக் கொண்டும் ஷமீயிடம் பதில் கூறிக் கொண்டும் வருபவனை பெண்ணவளின் விழிகள் ஏக்கமாய் தேடியது. அன்று மட்டுமல்ல அதற்கு பின் அவள் நவீனை காண்பதற்கான வாய்ப்பே கிட்டாது போனது. மாதங்களின் எண்ணிக்கை கூடியதே தவிர ஆள் வருவதற்கான அறிகுறியே இல்லாது போனது. நவீனில்லாது படப்பிடிப்பு தளத்திற்கு செல்வது யாஷ்வியின் மனதிற்கு அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. எங்குமே எதுவுமே மாறிவில்லை அவனில்லை என்பதை தவிர. ஆனால் பெண்ணின் மனது தலைகீழாய் நின்றிருந்தது அவனின் அருகாமை வேண்டி. ஷமீ கூட அவ்வபொழுது நவீனை கேட்பதுண்டு. தனக்கே தெரியாத பொழுது அவளிடம் என்ன கூறுவது. வாயில் வந்தததை முணுமுணுத்து மலுப்பி விடுவாள் யாஷ்வி.



அன்று வழக்கமாக கல்லூரிக்கு கிளம்பியவள் வீட்டை பூட்டி வெளியில் வர எதிரில் இருந்த நவீனின் வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடிவந்திருந்தது. பார்த்தவுடன் யாஷின் மனதில் பாரமேறிக் கொண்டது. 'அவசர வேலையின் பொருட்டு கிளம்பி சென்று விட்டார், மீண்டும் அவரின் வரவு சந்தேகம்' என்று படப்பிடிப்பு தளத்தில் நவீன் அறிமுகம் செய்த பெண்ணின் வாய் மூலம் தகவல் யாஷின் செவியை வந்தடைந்திருந்தது. அதிலே மனம் கசங்கி போனவளும் கையிலிருந்த ப்ராஜெக்டோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டாள். ஒரு வேளை நவீனிற்கு தகவல் சென்று அவனே அழைத்து, 'ஏன்?' என வினவிட மாட்டானா என்ற எண்ணத்தில் பெண்ணின் மனது அபத்தமாய் சுழன்றது.


அவளது எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் மாற இப்பொழுது நவீன் வீட்டையும் மாற்றியிருந்தான். அதுவும் அவளுக்கு தெரியாமலே. மனது முழுவதும் ஒரு வித வலி ஊடுருவியது, 'ஏன் ஒரு வார்த்தை கூறி கிளம்பியிருக்கலாமே' என. இன்னொரு புறமும், 'அவனை பற்றி கூறுவதற்கு நீ யார்? உனக்கும் அவனிற்கும் என்ன இருக்கிறது?' என்று இடிந்துரைக்க பெண் தளர்ந்தே போனாள். ஆக நன்றாக இருந்த குளத்தில் கல்லெறிந்து குழப்பியிருந்தான் ஆடவன் அவனையும் அறியாமலே.



அவன் கிளம்பி ஆறு மாதங்கள் கடந்திருந்தாலும் பெண்ணவளால் அவனிலிருந்து மீளவே முடியவில்லை. அதுவும் மின்தூக்கியை காணும் கணங்களிலெல்லாம் உடைந்தே போவாள். உடன் பணிபுரிந்த பெண்ணிற்கு அழைத்து நவீனின் எண்களை வாங்கியிருந்தவள் ஒரு வாரமாக தைரியமற்று போய் கிடப்பில் போட்டிருந்தாள். அதன் பின் ஓரளவு தைரியத்தை திரட்டி என்ன பேச வேண்டும் என்றெல்லாம் ஒத்திகை பார்த்து அழைப்பு விடுக்க அந்தோ பரிதாபம் எதிரிலிருப்பவன் அழைப்பை ஏற்கவேயில்லை. இரண்டு முறைக்கு மேல் ஓய்ந்து போனவள் அன்றைக்கு அந்த முயற்சியை தள்ளி வைத்து ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் அழைக்க இம்முறை, 'சுவிட்ச் ஆஃப்' என வந்து பெண்ணிவளின் நெஞ்சிலிருந்த நீரை முழுவதுமாக வற்றச் செய்திருந்தது.




அழுகை வந்தது, யாரிடமுமே பகிர இயலவில்லை. என்ன கூறுவது? தன்னையே அழுத்திக் கொண்டாள் பெண். எல்லாமே சில மாதங்கள் தான், பின் மெல்ல தேறி ஓட்டத்தை துவங்கியிருந்தாள். கல்லூரி, ஷமீ என்று மீண்டும் தன்னை சுருக்கி கொண்டவளின் மனதின் ஓரத்தில் அவளையும் அறியாமல் நவீன் வீற்றிருந்தான். எப்பொழுதாவது அரிதாக வெளி வருபவனின் நினைவுகள் பெண்ணவளை இன்றும் தாக்கியிருக்க அப்படியே நின்று விட்டாள் சமைந்து.


மீண்டும் அண்ணன் அழைத்தே விட்டான். "ஹேய் எவ்வளவு நேரம் கீழ வரதுக்கு. எனக்கு வேலையிருக்கு. உங்களை திரும்ப அழைச்சுட்டு வந்து விட்டுட்டு ஆபீஸ் போகணும்" என்று படப்படவென பொரிந்து தங்கையை கடிய நவீனின் நினைவிலிருந்து தெளிந்து சுதாரித்தவள், "டூ மினிட்ஸ்ண்ணா" என்று ஷமீராவுடன் ஓட்டம் பிடித்து மனோ மகிழுந்தில் ஏறியிருந்தாள்.


முழுதாக ஒரு மணிநேரம் கடந்திருக்க மீண்டும் வீட்டு வாயிலில் வாங்கி வந்த பொருட்களோடு அவர்களை இறக்கி விட்ட மனோ பறந்திருந்தான். யாஷ் மறுநாள் கல்லூரிக்கு தேவையானதை தயார் செய்வதில் மும்மரமாகி போனாள். இன்னும் இரண்டு மாதங்களில் கல்லூரி படிப்பு முடிந்து போக, மாணவர்களை பணியில் அமர்ந்துவதற்காக அவர்களை தயார் செய்வதற்கு கல்லூரி சார்பில் மாபெரும் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருந்தது. வெவ்வேறு கல்லூரியிலிருந்து விரிவுரையாளர்கள், பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் பிறகு அவர்களுக்கென்று பல பயிற்சியாளர்கள் என கல்லூரி கலைக்கட்டிக் கொண்டிருந்தது.

நிகழ்வு துவங்குவதற்கு சில மணிதுளிகளே எஞ்சியிருக்க யாஷூம் அவளது தோழியும் அடித்துப்பிடித்து நிகழ்வு நடைபெறும் அரங்கின் வாயிலுக்கு விரைந்திருக்க அந்த இடம் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. "ஹே யாஷ், நம்ம பசங்களுக்கு கால் பண்ணு எங்க இருக்காங்கனு கேட்டு" என்று அறிவுறுத்திய அவளின் தோழி விழிகளை சுழற்றினாள் தங்களுடைய நண்பர்களை தேடி.

அவர்கள் நின்றிருப்பது நடைபாதையை மறைத்து என்பதால், "எக்ஸ்கியூஸ்மீ" என்று பின்னிருந்த ஒலித்த குரலில் இருவரும் பதறி விலக யாஷ் அதிர்ந்தாள். நவீனே தான், அவனின் பார்வை யாஷ்வியை நொடிப்பொழுதில் தழுவி மீள அதே அலட்டான பார்வையை கொடுத்து நகர்ந்து மேடைக்கு சென்று விட்டான். "யாஷ், அந்த ரைட் சைட் கார்னர்ல இருக்காங்க பார்" என்ற அவளின் தோழி அதிர்ச்சியிருந்த யாஷ்வியை பிடித்து இழுத்து சென்று விட்டாள்.


யாஷ்வியின் விழிகள் நவீனிடமே நிலைக்க மூச்சு விடவே சற்று சிரமமாக இருந்தது. ஏதோ உருண்டு நின்று தொண்டையை அழுத்த தண்ணீர் பொத்தலை எடுத்து வாயில் சரித்தவள் இயல்பிற்கு திரும்ப சற்று நேரம் பிடித்தது. கல்லூரி முதல்வரிலிருந்து துவங்கி ஒவ்வொருவராக உரையாற்றி விழா இரண்டு மணி நேரங்களில் முடிய இருபத்தைந்து மாணவர்களுக்கொரு பயிற்றுநர் என்ற முறையில் வகுப்பறையில் தனித்து விடப்பட்டனர்.


யாஷ்விக்கு தலை கனப்பது போல் தோன்ற அப்படியே பேராசிரியரை பார்த்து விடுப்பு கூறி விட்டு வீட்டிற்கு பறந்து விட்டாள். ஆம், மீண்டுமொரு முறை நவீனை காண்பதில் அவளுக்கு விருப்பமிருந்திருக்கவில்லை. அவனின் மீது கோபத்தை தாண்டிதொரு அதிருப்தி பெண்ணிற்கு. அதிலும் அவளை இயல்பாக கடந்து விட்ட அவனின் பாவனையை அறவே வெறுத்தாள்.
தன்னால் ஏன் அப்படி இயல்பாய் இருக்க இயலவில்லை என்ற கேள்வி மண்டையை துளைக்க அதே அழுத்தத்தில் அன்றைய பொழுதை உறங்கியே கழித்தாள்.



மறுநாள் கல்லூரி செல்லவே சலிப்பாய் தோன்ற இரண்டு மூன்று நாட்கள் விடுப்பை நீட்டித்தே கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள். வார இறுதி விடுப்பு நாட்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ளும்படி கல்லூரி நிர்வாகத்தால் வற்புறுத்தப்பட்டிருந்தனர். ஆக, விடுமுறை பறிபோன சலிப்போடு அந்த வகுப்பில் போய் அமர்ந்து விட்டவளின் விழிகளில் மீண்டும் வந்து விழுந்திருந்தான் நவீன். எதை கண்டு ஓடுகிறோமோ அது மட்டும் தான் நம்மை துரத்துமாம். ஆம் அப்படி அவளை துரத்தி தான் கொண்டிருந்தான். அவன் தான் வகுப்பெடுக்கும் அந்த மாணவர்களின் பயிற்றுநர். 'இவன் என்ன வேலை தான் செய்து கொணடிருக்கிறான்?' என்றதொரு கேள்வி பெண்ணின் மனதை ஆக்கிரமிக்க நிச்சயம் அவளின் கவனம் வகுப்பில் இருந்திருக்கவில்லை.


மதிய உணவு இடைவெளியில் நண்பர்களுடன் செல்ல மறுத்து அப்படியே அசட்டையாக டேபிளில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள் யாஷ்வி. ஒரு கட்டத்திற்கு மேல் அவளை வற்புறுத்த இயலாது அவர்களும் பறந்திருக்க அந்த நிசப்தமான அறை பெண்ணிற்கு ஒரு வித அமைதியை கொடுத்திருந்தது. மனது நவீனிலே நிலைத்திருக்க தன் மீது கோபம் பொங்கி வழிந்தது.


உணவு முடித்த நவீன் விரைவாக மீண்டும் அறைக்கு வந்திருந்தான், அடுத்த வகுப்பிற்கான குறிப்புகளை எடுப்பதற்கு புத்தங்கங்களோடு.


அந்த அறையில் ஒரு மூலையில் யாஷ்வி தலை சாய்த்து படுத்திருக்க, முகம் பார்க்காமலே கண்டு கொண்டவன் இதழில் கேலி புன்னகை தவழ கால்கள் அவளை நோக்கி பயணித்தது. அவள் மட்டும் அவனின் புன்னகையை பார்த்திருந்தாள் நிச்சயம் எதையாவது அவனது தலையில் தூக்கியே போட்டிருப்பாள் இருக்கும் ஆத்திரத்தில்.


(தொடர்ந்து கீழே படிக்கவும்)
 
Last edited:
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
தன்னை நோக்கி யாரோ வருவதை காலடி ஓசை தெரிவுபடுத்தினாலும் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் எண்ணமின்றி கண்களை இறுக மூடியிருந்தவள் அசையவே இல்லை. அவளருகில் வந்த நவீன் அங்கிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர, தனது நாசியை நிரப்பிய வாசனை திரவியம் விழிகளை திறக்காமல் நவீனின் வருகையை பேதைக்கு கூறிற்று.

மூடிய விழிகளுக்குள் கருமணிகள் நிலையில்லாமல் நடனமாட துவங்க இமையோரம் துளி நீர் தேங்கி நிற்க அரைகுறையாக முகத்தை மறைத்திருந்தவள் கரங்கள் நாசுக்காக முழுவதுமாக மறைத்துக் கொண்டது வீம்புடன்.





"யாஷ்" என்றவனின் குரல் மனதின் அடியாளம் வரை சென்று தாக்க உடலின் மயிரிழைகள் சிலிர்த்து நின்றது. கரவென்று கண்ணீர் இறங்க முயல பெண்வளின் உடல் முழுவதுமே அதிர்ந்து அவளையும் மீறி ஆடவனின் குரலுக்கு இசைந்து தலை தன்னை போல் உயர்ந்தது.







முகம் முழுவதும் நொடியில் சிவப்பேறியிருக்க, " ஹெல்த் இஸ்யூ வா? என்ன செய்யுது யாஷ்? சாப்பிட போகலையா நீ?" என்றான் இலகுவான குரலில். அவன் பேசாது கடந்திருந்தால் கூட இத்தனை வலித்திருக்காதே என்னவோ! அவனின் வார்த்தைகள் மனதை தாக்க சொல்ல முடியாத வலியொன்று பேதையை ஆட்கொள்ள மீண்டும் தலையை டேபிளில் சாய்த்துக் கொண்டாள் எஞ்சிய சலிப்புடன். இம்முறை பெண்ணவளின் விழிகள் திறந்தேயிருக்க ஆடவனை தான் நிரப்பியிருந்தது. பெண்ணவளின் செயலில் நெற்றியை தேய்த்தப்படி அமர்ந்திருந்தவனும், 'நீ வாய் திறக்காது நகர மாட்டேன்' என்ற பாவனையை கொடுத்திருந்தான் நன்றாக பின்னால் சாய்ந்தப்படி அவளை பார்வையால் துளைத்துக் கொண்டு.





சில நிமிட மௌனங்களை கிழித்து, "ஏன் என்னை விட்டு போனீங்க?" என்ற பெண்ணவளின் வார்த்தைகள் அவனின் செவியை தீண்டியது. அவளின் கைகள் படுத்திருந்த டேபிளின் கம்பிகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டது, வார்த்தைகள் தடுமாற்றமில்லை ஒரு வித தீட்சண்மாக வெளி வந்து விழுந்தது அவளையும் மீறி.



ஆனால் அவன் அசையவே இல்லை. மெல்ல அவளின் வார்த்தைகள் அசை போட்டு கிரகித்து, 'நீ என்னை தேடினாயா?' என்றதொரு அசட்டையான பாவனை தான் கொடுத்தான் இதழ் வளைத்து கேலியாக. அந்த புன்னகை பெண்ணவளுக்கு அப்படியொரு எரிச்சலைக் கொடுத்திருந்தது.





பதில் பேசாது அவளையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் இலகுதன்மையோடு நன்றாக சாய்ந்தமர்ந்து கால்களை அசைத்து தாடையை தடவியப்படி. பேசுவான் என்று பார்த்திருந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்து நின்று தன்னுடயை உடைமைகளை எடுத்துக் கொண்டு, "சாரி" என்ற முணுமுணுப்போடு வெளியேறி விட்டாள். ஆடவன் நகரவேயில்லை, பார்வை மட்டும் அவளின் பின்னால் பயணிக்க எப்பொழுதும் அவனின் வசம் திரும்பி தரிசனமளிக்கும் தலையை கர்மசிரத்தையாக நேராக்கி கொண்டிருந்தாள் பெண். ஆனால் வாயிலை நெருங்கிய சமயம் அவளின் கட்டுப்பாட்டை தகர்த்து தலை திரும்பி விட ஆடவனின் இதழில் புன்னகை தவழ, "ப்ம்ச்..." என்று சலித்துக் கொண்டது பாவையின் இதழ்கள்.







தொடரும்.....
 
Last edited:
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Naveen oda attitude ah parthu yash sema kaduppu aagura ah yash evolo control ah irundhalum automatic ah naveen ku favour ah vae nadakkuthu avan um rombhavae alatchiyam ah oru parvai ah than kudukiran
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Naveen yash pavom da ne enn epadi pandra Ava ketta question ku answer panna enna paravai pakkura aalachiyam yash tha feeling🥺🥺🥺
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Naveen oda attitude ah parthu yash sema kaduppu aagura ah yash evolo control ah irundhalum automatic ah naveen ku favour ah vae nadakkuthu avan um rombhavae alatchiyam ah oru parvai ah than kudukiran
நன்றிக்கா❤️❤️
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Naveen yash pavom da ne enn epadi pandra Ava ketta question ku answer panna enna paravai pakkura aalachiyam yash tha feeling🥺🥺🥺
அவனை வைச்சு ப்யூச்சர்ல்ல செய்ய சொல்லுவோம் விடுங்க😍..
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
நவீன் ஏன் அலட்சியமாவே நடந்துகிறான், யாஷ்மிக்கு ஆசை காட்டி மோசம் செய்யுறானே 😡😡😡😡😡
 
Top