• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 29

Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
ஜென்மம் 29:

கண்கள் உள்ள

காரணம் உன்னை
பார்க்க தானடி
வாழும் காலம் யாவும்
உன்னை பார்க்க இந்த
கண்கள் போதாதே…!


“கோதாவரி சம்மந்திக்கு ஆட்டு கறிய வை” என்று வீர பாண்டி கூற,

“அச்சச்சோ வேணாம். என்னால இதுவே சாப்பிட முடியாது” என்று அலறினார் கிரிதரன்.

“அதெல்லாம் சாப்பிடலாம் சம்மந்தி” என்றவர் தானே குழம்பு வாளியை தூக்கி வந்து இருந்த கறி அனைத்தையும் அள்ளி இலையில் வைத்தார்.

வைத்ததையே எப்படி சாப்பிடுவது என்று எண்ணி கொண்டிருத்தவரது இலையில் மீதியிருந்த இடமும் நிரப்பப்பட்டிருக்க திகைத்து விழித்தார்.

அருகில் இருந்த பார்த்தீபன் சிரிப்புடன், “ப்பா நானும் வந்தன்னைக்கு இப்படிதான் மாட்டிக்கிட்டு முழிச்சேன். இன்னைக்கு நீங்க” என்க,

“டேய் உன் மாமானார்கிட்ட சொல்லி கொஞ்சம் குறைச்சு கவனிக்க சொல்லுடா. அவர் பாசத்துல நான் தத்தளிக்கிறேன்” என்று சிரிப்புடன் அலுக்க,

“மாமா அப்பா உங்களுக்கு எதுவும் வேணுமான்னு கேட்டுட்டு வர சொன்னாரு” என்று கையில் சாதத்துடன் வந்தாள் இளமதி.

‘ஐயோ’ என்று மனதிற்குள் அலறியவர்

“இல்லை எதுவுமே வேணாம். ஆல்ரெடி இலை புல்லா இருக்கு” என்று அவளை அனுப்ப முயல,

“மதி பிரவீனுக்கு குழம்பு ஊத்து” என்று கூற,

“அக்கா எனக்கு எதுவும் வேணாம்” என்று தமக்கையிடம் சன்னக்குரலில் முணுமுணுத்தான்.

இளமதி அதை கவனித்தாலும் கண்டு கொள்ளாத பாவனையில்,

“இதோ ஊத்துறேன் கா” என்று நிறைய குழம்பை ஊற்றி கறியை அள்ளி வைத்தாள்.

“வேணாம்னு சொன்னேன் தான?” என்று பிரவீன் முறைக்க,

மதி பதிலுக்கு இதழை சுழித்துவிட்டு நகர்ந்தாள்.

இதனை கண்ட கனிக்கு புன்னகை எழுந்தது.

கனியுடைய குடும்பத்தை பார்த்தீபன் கண்டறிந்துவிட்டான் என்று அறிந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை.

சிவப்பிரகாசம் கூட கனிக்கு தாய் வீடு இருக்கும் அவர்களே கனியை நன்றாக பார்த்து கொள்வார்கள் இந்த ராட்சஷிகளிடத்தில் என் மகள் அநாதை என்று பேச்சு வாங்க வேண்டாம் என்று அத்தனை மகிழ்ச்சி.

கஸ்தூரி மற்றும் கிரிக்கும் கூட மகிழ்ச்சி தான். பிரவீனும் அவ்வளவு ஆனந்தப்பட்டான்.

எல்லாம் இளமதியை பற்றி தெரியும் வரை தான்‌. அதுவும் தன்னுடைய தமக்கையை அக்கா அக்கா என்று அவள் சுற்றி வருவதை கண்டதும் இவனுக்கு பொறுக்கவில்லை.

தன்னுடைய அக்காவை இவள் உரிமை கொண்டாடுவதா? என்று பொறாமை குணம் தலை தூக்கியது.

இளமதிக்கும் இதே உரிமையுணர்வு தோன்ற அங்கு தொடங்கியது உரிமை போராட்டம்.

பார்க்கும் போதெல்லாம் முறைத்து கொண்டு தான் செல்கின்றனர் இருவரும்.

விடயம் அறிந்த கனி கூட இருவரையும் அழைத்து பேசி பார்க்க எதுவும் ஒத்துவரவில்லை.

இப்போது கோதாவரி வீர பாண்டியன் எல்லோரையும் அழைத்து கோவிலில் கிடா விருந்து வைத்திருக்க அதற்காக தான் எல்லோரும் வந்திருக்கின்றனர்.

கோதை, கற்பகம் மற்றும் ப்ரத்யூ மூவரும் வழக்கம் போல பழி பேசி விலகி கொள்ள மற்றவர்கள் அவர்களை பொருட்டாக கொள்ளாது கிளம்பியிருந்தனர்.

இவர்கள் கிளம்புவதை தடுக்க ஏதேதோ நாடகம் போட பார்த்தீபன் அனைத்தையும் தவிடு பொடி ஆக்கியிருந்தான்.

இப்போதெல்லாம் பார்த்தீபன் அவர்களது திட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்க துவங்கியிருந்தான்.

பிரவீனின் முறைப்பை கண்ட சிவா,

“பிரவீன் சின்ன பொண்ணு கூட என்ன போட்டி உனக்கு?” என்று அதட்ட,

“அவளா சின்ன பொண்ணு போங்கப்பா வேணும்னே பண்றா” என்று முறைத்து விட்டு உண்ண துவங்கினான்.

கனிக்கு தான் இருவரது பாச போராடத்தை கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனது.

கணவனது அருகில் அமர்ந்து உண்டு முடித்தவள் தானும் வந்தவர்களுக்கு பரிமாற துவங்கினான்.

கோதாவரி, “மதி நீயெதுக்கு இதெல்லாம் செய்யிற. புது பொண்ணாட்டம் போய் உட்காரு” என்று அதட்ட,

“ஆமா கல்யாணம் முடிஞ்சு மூனு மாசமாச்சு இன்னும் நான் புதுப்பொண்ணா. போங்கம்மா” என்று சிரித்தவள் உணவை பரிமாற,

“அப்படியே கோதாவரி மாறி இருக்கத்தா” என்று உண்ணுபவர்களிடமிருந்து வார்த்தை வர,

இவளுக்கு புன்னகை முகிழ்ந்தது.

இடையில் நிறைய நல விசாரிப்புகள் கணவனை பற்றிய விசாரிப்புகள் வர பதில் கூறியபடியே பரிமாறினாள்‌.

மதியம் ஆரம்பித்த விருந்து மாலை வரையுமே தொடர்ந்தது.

ஆட்கள் வந்து போவதுமாக தான் இருந்தனர். உணவு தீர்ந்தாலும் மீண்டும் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

கிட்டத்தட்ட ஆறு மணிக்கு மேல் தான் அனைத்தையும் எடுத்து வைத்து மீண்டும் ஒரு முறை கடவுளை வணங்கிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

வீர பாண்டியன் வீட்டிலிருந்து அரை மணி நேர தொலைவில் தான் குலதெய்வம் கோவில் இருந்தது.

வீர பாண்டியன் ஒரு வேணை பிடித்திருக்க எல்லோரும் அதில் தான் பயணம் செய்தனர்.

இளையவர்கள் தங்களுக்குள் பாடி சிரித்து மகிழ்ந்தவாறு வர கனி கணவன் அருகில் அமர்ந்து சிரிப்புடன் வேடிக்கை பார்த்தாள்.

வீட்டை அடைந்ததும் அவரவர் அறைக்குள் அடைந்து உடை மாற்றி சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ண,

கனியும் உடை மாற்றி கண்டவன் அருகில் அவனை அணைத்தவாறு படுத்துவிட்டாள்.

கோதாவரி வந்து இரவுணவுக்கு அழைக்கும் வரை இருவரும் எழவில்லை.

கதவு தட்டும் சத்தத்தில் எழுந்து கொண்ட கனி,

“என்னம்மா?” என்று கூந்தலை அள்ளி கொண்டையிட்டவாரே வந்தாள்.

“சாப்பிட கூப்பிட வந்தேன்மா. மணி ஆகிடுச்சு எல்லாரும் வந்துட்டாங்க” என்க,

கனியின் விழிகள் சுவர் கடிகாரத்தில் ஒரு முறை படிந்து மீண்டது.

மணி எட்டறையை ஆகியிருந்தது.

“ஹ்ம்ம் அஞ்சு நிமிஷத்துல வர்றோம் மா” என்றவள் சென்று கணவனை எழுந்து முகம் கழுவ கூறியவள் தானும் கழுவி வந்தாள்.

கனியை கண்டதும் மதி, “அக்கா இங்க வா என் பக்கத்துல உட்காரு” என்று கூற,

“அக்கா இங்க வா” என்று பிரவீன் அழைத்தான்.

கனி இருவரில் யார் பக்கம் போவது என தெரியாமல் கனி விழிக்க,

“என் பொண்டாட்டி என் பக்கத்துல தான் உட்காருவா” என்று தனது அருகில் அமர வைத்து அவளை காப்பாற்றினான் பார்த்தீ.

“என்ன மாம்ஸ் பொண்டாட்டிய காப்பாத்துறீங்களா?” என்று இளமதி சிரிப்புடன் கேட்க,

“யெஸ் நான் தான் அவளை காப்பாத்தணும்” என்று சிரித்தபடியே பதில் அளித்தான்.

“ரொம்ப தான் லவ்ஸ் போல?” என்று வினவ,

“ஆமா” என்று அதற்கும் புன்னகைத்தான்.

இவர்களது சிரிப்பை சற்று தள்ளி அமர்ந்து பார்த்த பிரவீன் தனது அத்தானையும் உரிமை கொண்டாடுகிறாள் என்று சேர்த்து வைத்து முறைத்தான்.

அதனை கண்ட இளமதி, “மாம்ஸ் அங்க பாருங்க உங்க மச்சானை. உங்ககிட்ட நான் பேசுறதை பாத்து முறைக்கிறாரு” என்க,

பார்த்தீயும் திரும்பி பார்த்துவிட்டு,

“ஆமா” என்று சிரித்தபடி கூற,

“ரொம்தான் பொஸஸீவ் உங்க மச்சான்” என்று இவள் சிலுப்ப,

“சின்ன வயசுல இருந்தே கூட வளர்ந்துட்டதால கொஞ்சம் பாசம் அதிகம். ப்ரத்யூ மாதிரி கிடையாது. நான் கனி கூட பேசாம இருந்தப்போ அவளுக்கு ஆதரவா இருந்தான். அவனுக்கு கனிய ரொம்ப பிடிக்கும்” என்று உணர்ந்து கூற,

“ஹ்ம்ம் தெரியிது. இருந்தாலும் அவர் மொறைச்சு பாக்குறப்போ சீண்டனும்னு தான் தோணுது” என்று சிரிக்க,

“சாப்பிடும் போது என்ன பேச்சு. ரெண்டு பேரும் அமைதியா சாப்பிடுங்க” என்று மென் குரலில் அதட்ட,

“உனக்கென்ன நான் கொலுந்தியாக்கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று பார்த்தீ வம்பிழுக்க,

“ஆமா எனக்கும் என் மாமாக்கும் ஆயிரம் இருக்கும். நீ தலையிடாத” என்று மதி இதழை சுழிக்க,

“சரிதான். ரெண்டு பேரும் சாப்பிட்டு அப்புறம் பேசுங்க” என்றாள்.

“நாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம். ஏன் ஊட்டிவிட்டுட்டு கூட சாப்பிடுவோம்” என்று மதி வம்பிழுக்க,

கனி திரும்பி போலியாக தமக்கையை முறைத்தாள்.

“ப்ச் தப்பு பண்ணிட்டேன். உங்கக்காவ பாக்குறதுக்கு முன்னாடி உன்னை பாத்து இருந்தா. கண்டிப்பா உனக்கு தான் ப்ரபோஸ் பண்ணி இருப்பேன். அவ கூட இதுவரை எனக்கு ஊட்டிவிட்டது இல்லை” என்று போலியாக கண்ணீரை துடைக்க,

கனி திரும்பி நன்றாக கணவனை முறைக்க,

அவனிடத்தில் நமட்டு சிரிப்பு பிறந்தது‌.

“இப்பவும் ஒன்னும் அவசரம் இல்லை. என்னை வெட்டிவிட்டு அவளை கட்டிக்கோங்க”என்று இதழை கோணியவள் உண்ண துவங்கி, இவர்களும் சிரிப்புடன் உண்டனர்.

பிரவீன் தான் காதில் புகை வராத குறையாக அமர்ந்து இருந்தான்.

உண்டவுடன் எல்லோரும் உறங்க செல்ல கனி தாய்க்கு அனைத்தையும் எடுத்து வைக்க உதவினாள்.

தாயுடன் பேசியபடி செய்தவள்,

“ம்மா எல்லாரையும் சேர்த்து வச்சு ஓரே இடத்துல பாக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. எனக்கு கூட்டு குடும்பமா வாழ ரொம்ப ஆசை” என்று கூற,

“அதுக்கென்ன அடுத்த வருஷம் மதி கல்யாணத்தை இதைவிட பெருசா எல்லாரையும் கூட்டி பண்ணுவோம்” என்று சிரிப்புடன் கூறியவர்,

“எல்லாத்துக்கும் மாப்ளை தான் காரணம் அவர் மட்டும் எங்களை தேடி உன்னை கூட்டிட்டு வரலைன்னா இந்நேரம் நாங்க இவ்ளோ சந்தோஷமா இருப்போமா? இத்தனை வருஷம் சாமி கும்பிட்டதுல இந்த வருஷம் தான் நானும் உங்கப்பாவும் மன நிறைவோட இருக்கோம்” என்றார்.

கனியும் அதனை ஆமோதித்தாள்‌.

“மாப்ளை மாதிரி ஒருத்தர் வீட்டுக்காரா வர நீ கொடுத்து வச்சிருக்கணும் மதி” என்க,

“ஆமா” என்றவளுக்கும் கணவனை நினைத்து மனதில் பெருமிதம் தான்.

“ரெண்டு பேரும் சீக்கிரமா பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்தா அதை வளர்த்திட்டு நாங்க பாட்டுக்கு சந்தோஷமா இருப்போம்” என்க,

இவளுக்கு சடுதியில் புன்னகை விரிந்தது‌‌. அவளுமே விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தானே இருக்கிறாள்.

தாயுடன் சிரித்து பேசியபடி வேலைய முடித்தவள் முகம் கழுவி தன்னை ஒரு முறை மேலிருந்து கீழே பார்த்து திருப்தி அடைந்தவள் புன்சிரிப்புடன் அறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் சாளரத்தின் வழியே வானத்தை பார்த்தபடி இருந்தவன் திரும்பினான்.

கனி திரும்பி கதவை தாழ் போட்டவள் அதன் மீதே சாய்ந்து நின்று தலை சாய்த்து அவனை நோக்க,

அந்த பார்வையிலே தொலைந்து போனவன்,

“என்ன?” என்று சிரிப்புடன் புருவத்தை உயர்த்த,

“பார்த்தீபா…” என்று குரலில் மொத்த காதலை சேர்த்து அழைத்தவள் கையை அவனை நோக்கி விரிக்க,

அதில் முழுவதுமாக தடுமாறியவன்,

“என்னடி?” என்று சிரிப்பும் முறைப்புமாக வினவ,

“எடுத்துக்கோ…” என்று காற்றுக்கும் கேட்காத குரலில் மொழிய,

“ஹான்” என்றவன் கேட்காத பாவனையில் கூற,

“எடுத்துக்கோ என்னை மொத்தமா உனக்கு தான்” என்று கைகளை விரித்தவள் அவனை வோரோடு சாய்த்திருந்தாள்.

அவளது குரலில் வழிந்த கிறகத்தில் முழுதாய் தடுமாறி நின்றவன்,

“கேக்கலை?” என்று சிரிப்புடன் அவளை வம்பிழுக்க,

அதில் கடுப்பாகி போனவள்,

“சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்”என்று முறைக்க,

இவனுக்கு சிரிப்பு பொங்கியது.

“சிரிக்காதீங்க. இப்படி சிரிச்சு சிரிச்சு தான் என்னை மயக்கி வச்சிருக்கிங்க” என்று முணுமுணுக்க,

“யாரு நானா? நீதான்டி மொத்தமா என்னை மயக்கி உன் பின்னாடி சுத்தவிட்டுட்டு இருக்க” என்று சிரிப்புடன் கூற,

“ஆமா மயங்கிட்டாலும்” என்று இதழை சுழித்தவள் அடுத்த நொடியில் அவனது அணைப்பில் இருந்தாள்.

“ஆமா மயங்கிதான் இருக்கேன். தீராத மயக்கத்துல இருக்கேன் உன்மேல” என்று கிறக்கமாய் கூற,

இவளுக்கு மேனி சிலிர்த்தது.

“நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்றவளுக்கு லேசாய் வெட்கம் வந்தது.

“ஹேய் என்னடி இதுக்கே இப்படி சிவக்குற அப்போ மத்ததுக்கு” என்றவன் இதழ் மடித்து சிரிக்க,

“அதெல்லாம் நடந்தா பார்ப்போம்” என்று சீண்டியவள் முகத்தை திருப்பியவளது அதரம் அவனது அதரத்தில் சிறை பட்டிருந்தது.

தனது மொத்த நேசத்தையும் ஒற்றை இதழணைப்பில் வழியே அவளிடத்தில் உணர்த்தும் முயற்சியில் இறங்க, கனி அவனுக்கு ஈடு கொடுத்தாள்.

நீண்ட நெடிய முத்தம் இருவரையும் பெரிதாக மூச்சு வாங்க செய்தது.

“எப்படி என்னோட கிஸ்” என்றவன் மெலிதாக அவளது காதிற்குள் முணுமுணுத்து கூச செய்ய,

அதில் சிலிர்த்து அடங்கியவள்,

“ஓகே தான்” என்று போலியாய் சலிக்க,

மீண்டும் அவளது அதரம் சிறைப்பட்டது. இம்முறை மூச்சு முட்டியும் விடவில்லை.

கனி தான் இதற்கு மேல் நாளாவது என்று அவனை தள்ளிவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

கண்களில் முறைப்பு வேறு. முகமும் அதரமும் சிவந்து போலியாய் தன்னை முறைப்பவளை கண்டு ரசனை பொங்கியது ஆடவனுக்கு‌.

“இவ்ளோ நாள் இந்த அழகெல்லாம் எங்கடி ஒளிச்சு வச்சிருந்த” என்றவன் இடையோடு அணைத்து அவளது கழுத்தில் முகம் புதைத்து வாசத்தை ஆழ்ந்து உள்ளிழுக்க இவளுக்கு தேகம் கூசியது.

“ஹ்ம்ம் என்னடி இப்படி வாசமா இருக்க” என்று போதை குரலில் ஆடவன் பிதற்ற இவளுக்கு பித்து பிடித்தது.

கழுத்தில் குட்டி குட்டி முத்தங்களை இட்டு அவளை சிலிர்க்க செய்தவன் தொண்டை குழியில் இதழை பதிக்க இவளுக்கு உயிருக்குள் ஒரு நடுக்கம் ஜனித்தது‌.

அவனது முதுகை ஆதாராமாக பற்றி கொண்டாள்.

மீசை அங்குமிங்கும் உரசி உரசி சிலிர்த்து சிரிக்க வைத்தவனது இதழ்கள் அவளிடத்தில் வஞ்சையின்றி ஊர்வலம் வந்தது.

அதில் கூச்சமடைந்தவள் அவனது கேசத்தில் கைக்கொடுத்து நிமிர்த்த முயற்சிக்க அதனை உணர்ந்தவன் அவளது கரத்தை சேர்த்து பிடித்து மார்பில் முகத்தை அங்குமிங்கும் புரட்டினான்.

அதில் மொத்தமாய் வலுவிழந்து போனவள் பற்றிற்காக மீண்டும் அவனையே பற்றி கொள்ள அவளை கைகளில் வாரியணைத்து கொண்டவன் புதிதாக வேறு ஒரு உலகத்தை காண்பிக்க துவங்கினான்.

முதலில் தயங்கி தடுமாறி அவனை பற்றி கொண்டவள் மெதுவாய் நாணம் துறந்து அவனுடன் ஒன்ற துவங்கினாள்.

வருடக் கணக்கில் தனக்குள் பொத்தி வைத்து ஏங்கி தவித்த காதலை அவனிடத்தில் கொட்டி தகிக்க செய்தவள் அவளிடத்தில் குளிர்காய்ந்தாள்.

மண்ணில் விழும் மழை துளி போல மெதுவாக துவங்கிய காதல் மலர்ந்து மனம் வீசியது‌.

காதலில் தவித்து தகித்தவர்கள் கரையேற வழி தெரிந்தும் விடையறியா பிள்ளை போல தங்களுக்குள்ளே உழன்று தவித்து காதலின் மொத்த பரிமாணத்தை ஒற்றை இரவில் கண்டறியும் முனைப்பில் ஈடுபட்டினருந்தனர்.

ஒருவரில் மற்றொருவர் முழுதாய் மூழ்கி திளைத்து களைத்து மூச்சு விழுந்தனர்.

இரவின் நிசப்தத்தில் வியர்வையில் குளித்து களைத்து மார்புக்கூடு மேலே ஏறி இறங்க மூச்சு வாங்கியவளது மீது கணவன் பார்வை வாஞ்சயாய் காதலாய் ரசனையாய் மோகமாய் படிந்து மீள, அதனை உணர்ந்தவளுக்கு மெலிதான கூச்சம் பிறக்க போர்வையில் தன்னை சுற்றி கொண்டவள் முகத்தை திருப்பி கொள்ள,

அவள் மீது கரத்தை போட்டு அணைத்தவன் காதோரம் மெல்லிய சத்தத்துடன் முத்த
மிட்டு,

“எப்படி என் பர்பாமென்ஸ்” என்று சிரிப்புடன் கேட்க,

“பத்தலை பத்தலை” என்று முகத்தை திருப்பாமலே கூற,

மெல்லிய முறைப்பொன்றை கொடுத்தவன்,

“இரு உனக்கு பத்த வைக்கிறேன்” என்றவன் அவளது போர்வைக்குள் தன்னை நுழைத்து அவளை ஒப்பு கொள்ள வைக்கும் முயற்சியில் இயக்கியிருந்தான்…







 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Praveen oda possessive um madhi praveen oda andha cute fight um pakka rombavae jolly ah iruku .
Madhi parthi avan love life oda next part ah azhaga start pannitaga
 
Top