• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 28

Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
ஜென்மம் 28:

ஒரு பெண்ணின்

நினைவென்ன செய்யும்
உனை கத்தியில்லாமல்
கொய்யும் இதில் மீள
வழி உள்ளதே இருப்பினும்

உள்ளம் தடுமாறுதே

“கனி கண்ணை திறந்து பாருடி” என்று பார்த்தீ கன்னத்தில் தட்ட,

மெதுவாக இமைகளை பிரித்து பார்த்தவளுக்கு எதிரில் இருந்தவர்களை கண்டு இதயம் எகிறி குதித்தது.

அவளது வதனத்தை கண்டவன்,

“ஒன்னுமில்லை ஈஸி. அவங்க தான் உன்னோட பயலாஜிகல் பேரன்ட்ஸ்” என்று எடுத்து கூற,

இவளுக்கு தொண்டை வறண்டு பேச்சே வரவில்லை.

அவளது நிலையை உணர்ந்தவன்,

“மதி தண்ணீ கொண்டு வா” என்க,

“ஹான் மாமா” என்றவள் ஓடி சென்று நீரை எடுத்து வர,

பார்த்தீயே மெதுவாக அவளுக்கு புகட்டினான்.

தண்ணீர் குடித்ததும் சிறிது தெம்பு வர பெற்றவள் எழுந்து அமர்ந்தாள்.

விழிகள் எதிரே இருந்த கோதாவரி மீது படிந்தது.

உள்ளுக்குள் பெரும் இரைச்சல் கேட்க இதழை பிரித்து,

“அம்மா…” என்று தழுதழுத்த குரலில் அழைக்க,

இதற்காகவே காத்திருந்த கோதாவரி,

“மதி” என்று அழுகையுடன் அணைத்து கொண்டார்.

இருபது வருடங்களுக்கு மேலாக மகளை பிரிந்திருந்த மொத்த ஏக்கமும் அந்த குரலில் பிரதிபலித்தது.

“உன்னை பாக்காம இவ்ளோ நாளா நான் நடை பிணமா தான் வாழ்ந்திட்டு இருந்தேன் மதி” என்றவரது அழுகை குரல் கனியை மொத்தமாய் வதைத்தது.

“அழாதீங்க மா”என்று தானும் அணைத்து கொண்டாள்.

கனிக்கும் உணர்ச்சி பெருக்கில் வார்த்தை வரவில்லை. இத்தனை நாட்கள் யாருமில்லாத அநாதை என்று ஏங்கி இருந்தவளுக்கு தாய் தந்தை தமக்கை என்று குடும்பத்தை கண்டதும் பேச்சே வரவில்லை.

எத்தனை நாளைய ஏக்கம் நொடியில் தீர்ந்துவிட்டதே.

“இத்தனை நாள் என்னை ஏன்மா தனியா தவிக்கவிட்ட. எல்லாரும் அநாதை அநாதைன்னு சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று கண்ணீருடன் கூறியவள் சிறு பிள்ளையாகவே மாறியிருந்தாள்.

“இத்தனை வருஷமா உன்னை தேடிட்டு தான் மா இருந்தோம். ரெண்டு வயசுல திருவிழால நீ காணாம போய்ட்ட. உன்னை தேடாத இடமில்லை. நீ கிடைக்க நான் போகாத கோவிலில்ல. இப்போதான் அந்த கடவுளுக்கு கண்ணு தெரிஞ்சு மாப்பிள்ளை மூலமா உன்னை எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்காரு” என்று அழுகையும் நடந்தவற்றை கூற,

“ரெண்டு பேரும் அழாதீங்க. இது ஹாப்பி மொமண்ட்ஸ்” என்று கலங்கிய குரலில் கூறிய இளமதியும் இருவரையும் அணைத்து கொண்டாள்.

கனியின் பார்வை ஒரு கணம் கணவன் மீது படிய, ‘எனக்காகவா?’ என்று விழிகள் கேள்வி கேட்டது.

‘ஆம்’ எனும் விதமாக அவன் விழியசைக்க இவளுக்கு அழுகை பெருகியது.

“அக்கா உன்னை கடைசிவரை பாக்கவே முடியாதோன்னு நான் நினைச்சிட்டேன் கா. அம்மாவும் அப்பாவும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணாங்க கா” என்று அணைத்து கொள்ள,

தனக்கு ஒரு குட்டி தங்கையா? என அழுகையிலும் சிரிப்பு வந்தது.

“உன்னை தொலைச்சு இத்தனை வருஷம் கஷ்டப்படவச்சிட்டேன். இந்த பாவிய மன்னிச்சிடும்மா” என்று அழுகையுடன் கோதாவரி கூற

“ம்மா…” என்றவளுக்கு வார்த்தே வரவில்லை.

“ம்மா ரொம்ப அழுறீங்க தண்ணீயை குடிங்க” என்று இளமதி அதட்டி நீரை கொடுத்த பின்பு தான் அழுகை சற்று மட்டுப்பட்டது.

பின்பு சில பல நிமிடங்கள் உணர்வு போராட்டம் நீடிக்க இளமதி தான் இருவரையும் சமாதானம் செய்தாள்‌.

பார்த்தீபன் எதுவும் செய்யாது உணர்வு போராட்டத்தை அமைதியாக பார்த்திருந்தான்.

தாயை கட்டியணைத்து அழுகையை கொடுத்தவளுக்கு அப்போது தான் தந்தை நினைவு வந்தது.

திரும்பி பார்க்க அவரும் கலங்கிய விழிகளுடன் தான் இவர்களை பார்த்திருந்தான்.

“மதி நீயில்லாம என்னைவிட உங்கப்பா தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு. நீ பொறந்ததுல இருந்து உன்னை கீழயே விடாம பாத்துக்கிட்டாரு. திடீர்னு நீ காணாம போகவும் திக்கு திசை தெரியாம‌ நிறைய நாள் சுத்திட்டு இருந்தாரு” என்று கணவனை காண்பிக்க,

“அப்பா” என்று அடக்கப்பட்ட அழுகையுடன் கூற,

“மதிம்மா” என்று அவளது கைப்பிடித்து காலடியிலே அமர்ந்துவிட்டார்.

அவளது கையில் முகத்தை புதைத்தவர், “இவ்ளோ நாள் உன்னை தனியா தவிக்கவிட்டதுக்கு மன்னிச்சிடும்மா” என்று கண்ணீரால் கரத்தை நனைத்தார்.

அவர் காலடியில் அமர்ந்தவிதத்தில் பதறியவள்,

“அப்பா” என்று அதிர,

“இன்னொரு முறை கூப்பிடும்மா” என்று அவளது முகம் காண,

அதில் தெரிந்த பாசத்திலும் ஏக்கத்திலும் உருகி போனவள்,

“அப்பா” என்று அவரது கையை தனது கன்னத்தில் வைத்து கொண்டாள்.

“உன்னை பாக்காமலே இந்த உசிரு போய்டுமோன்னு பயந்திட்டே வாழ்ந்திட்டு இருந்தேன் மா. இனி சாவு வந்தாலும் கவலைப்படாம போய் சேர்ந்திடுவேன்” என்று தழுதழுக்க,

“ப்பா என்ன பேசுறீங்க. இன்னும் உங்களுக்கு நிறைய கடமை இருக்கு. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். என்னோட பிள்ளைங்களை நீங்க தான் பாத்துக்கணும். அதெல்லாம் யார் பார்ப்பா” என்று அழுகையுடன் அதட்டினாள்.

“இனி எனக்கும் குடும்பம் இருக்கு. அம்மா வீடு இருக்குனு நான் வந்துட்டு போவேன்” என்றவளது குரலில் தான் எத்தனை ஏக்கம்.

“கண்டிப்பாக்கா. இனிமேல் யாரும் உனக்கு குடும்பம் இல்லைன்னு சொல்ல முடியாது. மாமா சொன்னாங்க அந்த ராட்சஷி கும்பல பத்தி. அதுங்க மட்டும் எதாவது சொல்லட்டும் சொந்தக்காரங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து சண்டை கட்டிட்றேன்” என்று இளமதி பதில் கூறினாள்‌.

மதி தான் அவ்வபோது பேசி ஓரளவு சகஜமாக்க முயற்சித்தாள்.

அழுகையை நிறுத்த வழி தேடியவள்,

“ம்மா லஞ்ச் டைம் வந்திடுச்சு. அக்காக்கும் மாமாக்கும் பாத்து பாத்து சமைச்சிட்டு அதை சாப்பிட வைக்க மாட்டியா?” என்று கேட்ட பிறகு தான் கோதாவரி,

“ஆமா நேரமாகிடுச்சு. நான் ஒரு மடச்சி” என்று தன்னையே நிந்தித்தவர்,

“மாப்பிள்ளை நீங்களும் கனியும் கொல்ல புறத்துல போய் கை கால் அலம்பிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றார்.

“சரிங்கத்தை” என்ற பார்த்தீபன் மனையாளை காண,

அவள் தந்தைக்கு இன்னும் ஆறுதல் கூறி கொண்டு இருந்தாள்.

வீர பாண்டியன், “நீயும் மாப்பிள்ளையும் போய் சாப்பிடுங்கம்மா” என்று அவர் ஓரளவு தேறி மகளிடம் கூறினார்.

இளமதி, “வாங்க மாம்ஸ் வாக்கா” என்று கொல்லைப்புறம் அழைத்து சென்று காண்பித்தாள்.

இருவரும் கை கழுவிவிட்டு வர பெரிய இலை போடப்பட அதில் ஊர்வன பறப்பன என எல்லாம் இருந்தது.

அதனை கண்டு மலைத்த கனி,

“இவ்வளவா?” என்று திகைக்க,

பார்த்தீபனுக்கும் அதே எண்ணம் தான் ஆனால் கேட்கவில்லை. மனைவி கேட்டுவிட்டாள்.

“இதுவே கம்மி. நான் இன்னும் நிறைய செய்ய நினைச்சேன் மதிம்மா. நேரம் தான் இல்லை” என்றவர் அனைத்தையும் பரிமாற,

“சரிதான் இவ்வளவையும் சாப்பிட ஒரு வயிறு போதாது” என்று சிரிப்புடன் கூறினாள்.

வீர பாண்டியன் வேறு, “மாப்பிள்ளைக்கு அதை வை இதை வை” என்று கூற,

இளமதியும் அவன் இலையில் தீர தீர நிரப்பிவிட்டாள்.

அவன் தான் சாப்பிட முடியாது திண்டாடினான்.

அவன் நிலையை உணர்ந்த கனி தான்,

“மதி போதும் அவரால முடியலை” என்று உதவினாள்.

கோதாவரி உண்ட பிறகு ஓய்வெடுக்க கூற அதற்குள் உறவினர்கள் ஒவ்வொருவராக வர துவங்கி இருந்தனர்.

இருவரும் ஹாலிலே அமர்ந்து கொண்டனர். வந்து கனியிடம் பேசி நலம் விசாரித்து இத்தனை நாள் எங்கிருந்தாள் என்று ஒவ்வொன்றாக கேட்க கனியும் பொறுமையாக பதில் கூறினாள்.

இளமதி அருகில் அமர்ந்து வந்திருப்பவர் யார் என்ன உறவு என்பதை விளக்கினாள்.

பார்த்தீபனிடமும் நலம் விசாரித்து கனியை நன்றாக பார்த்து கொள்ளுமாறு கூறி சென்றனர்.

இப்படியே மாலை பொழுதும் வந்துவிட தேநீரோடு நிகழ்வு தொடர்ந்தது.

கோதாவரி தான், “ஏங்க எதுக்கு இன்னைக்கே அம்புட்டு பேர்க்கிட்டயும் சொன்னிங்க. புள்ளைங்க ஓய்வெடுக்க கூட விடாம ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துட்டே இருக்காங்க” என்று கணவனை திட்ட,

“ஏய் நான் எங்கடி எல்லார்க்கிட்டயும் சொன்னேன். உங்கண்ணன் சோனைமுத்தன் ஒருத்தன்கிட்ட தான் சொன்னேன். அவன் ஊர் முழுக்க தண்டோரா போட்டுட்டான் போல” என்று பதிலுக்கு கூற,

“ஆமா என் வீட்டு ஆளுக மேல எதுக்கெடுத்தாலும் பழிய போட்டுட்றது. அதான் இந்த மாச கடைசில குலசாமிக்கு கெடா வெட்டி சோறு போட்றோம்ல அப்போ எல்லாரையும் கூப்டா தெரிஞ்சிட போவுது” என்று கோதாவரி சடைத்து கொண்டார்.

இதனை கண்ட கனிக்கு புன்னகை எழுந்தது.

இதே போல ஒரு சூழ்நிலையில் தான் வளர வேண்டும் தம்பி தங்கையிடம் வம்பு வளர்க்க வேண்டும் என்று எவ்வளவு ஆசைகள் இருந்தது.

அதெல்லாம் இப்போது கண் முன்னே நடக்க நடத்தி வைத்தவன் மீது காதல் பெருகியது.

யாருமறியா வண்ணம் கணவனை சிரிப்புடன் பார்த்துவிட்டு திரும்ப,

“என்னக்கா மாமாவ சைட்டிங்கா?” என்று காதிற்குள் கிசுகிசுத்தாள் இளமதி.

“மதி” என்றவளுக்கு புன்னகை பெரிதானது.

“நீ நடத்து” என்றவள்,

“நீ சைட்டடிக்கிற அளவுக்கு மாமா வொர்த் தான் கா” என்று கண்ணடிக்க,

“அவர் உனக்கு மாமா டி” என்று போலியாக முறைக்க,

“அதான் சைட்டிங்” என்றவள்,

“ஆமா உன் லவ் ஸ்டோரிய சொல்லு கா” என்று ஆர்வமாக வினவினாள்.

“லவ் ஸ்டோரியா?” என்று கனி திகைக்க,

“ஆமா லவ் ஸ்டோரி தான்”

“எங்களோடது அரேன்ஜ் மேரேஜ் தான்”

“ஆஹான் யாரை ஏமாத்த பாக்குற. உன்னோட பத்து வருஷ காதல் கதை கொஞ்சமா தெரியும் எனக்கு” என்று கண்ணடிக்க,

இப்போது கனியின் பார்வை முறைப்புடன் கணவன் மீது படிந்தது.

பார்த்தீயோ இதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்ற ரீதியில் அருகில் இருந்த மாமானாரிடம் உரையாடி கொண்டிருந்தான்.

“அங்க என்ன முறைப்பு எனக்கு பதில் சொல்லு” என்று இளமதி கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை.‌ எனக்கு அவரை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும் அவ்ளோ தான்” என்று முடிக்க,

“பாக்குறேன் எத்தனை நாளைக்கு இதை சொல்லி தப்பிப்பேன்னு” என்று சிரித்தாள்.

நேரம் மெதுவாய் நகர்ந்திட இரவு உணவு நேரம் வந்தது‌.

மதி, “அக்கா மாமா சாப்பிட வாங்க” என்க,

“அதுக்குள்ளவா? இப்போ தான் ஸ்நாக்ஸ் சாப்டோம்” என்று பார்த்தீ மெதுவாய் அலற,

“பதறாதீங்க மாம்ஸ். மதியம் மாதிரி ஹெவியா இருக்காது.‌ இங்க எல்லாம் எட்டு மணிக்கே சாப்டு ஒன்பது மணிக்கு போர்த்தி படுத்திடுவாங்க” என்று சிரிப்புடன் கூற,

இருவரும் உண்ண சென்றனர்.

கனி, “எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாமே. எனக்கு ஆசையா இருக்கு” என்க,

அதற்கு மறுப்பு ஏது? அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவை உண்டனர்.

கனிக்கு மனதிற்குள் அத்தனை நிறைவாக இருந்தது. வார்த்தைகளால் வடிக்க இயலாத மகிழ்ச்சி அது.

உண்ட பிறகும் சிறிது நேரம் பேசிவிட்டு தான் உறங்க சென்றனர்‌‌.

கனிக்கும் பார்த்தீக்கும் ஒரு பெரிய அறையை ஒதுக்கி இருந்தனர்.

ஏற்கனவே அவர்களின் வரவை அறிந்திருந்தபடியால் அறை நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பொருட்கள் எல்லாம் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

ஏன் புதிதாக குளிரூட்டி கூட போடப்பட்டிருந்தது. எல்லாம் கனிக்கும் பார்த்தீக்கும் பார்த்து பார்த்து செய்தது என்று இளமதி கூறினாள்.

அறைக்குள் நுழைந்து பார்த்தீ அறையை சுத்தி பார்க்க கனி,

“அத்தான்” என்று அழைத்தாள்.

அவ்வழைப்பில் ஆனந்தமாக அதிர்ந்தவன் திரும்பி பார்க்க,

கனியின் விழிகளில் நீர் நிறைந்து இருந்தது.

“என்ன கூப்ட?” என்று நம்பவியலாதவனாக பார்த்தீ வினவ,

“அத்தான்” என்று அழுத்தி அழைத்தவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.

காலையில் இருந்து நடந்ததை நினைக்க நினைக்க அழுகை பெருகியது.

“ஏன் இவ்ளோ லேட்டா வந்தீங்க?” என்று அழுகையூடே கேட்க,

“என்ன?” என்றவனுக்கு புரியவில்லை.

“ஏன் இவ்ளோ லேட்டா என் லைஃப்ல திரும்ப வந்தீங்க. சீக்கிரமா வந்து இருக்கலாம்ல” என்று வினவ,

இவ்விடத்தில் பிரித்தரிய முடியாத புன்னகை.

“என்ன பண்றது விதில அப்படி திரும்பி எழுதி இருக்கு” என்க,

“விதியெல்லாம் இல்லை. நீ நினைச்சு இருந்தா வந்திருக்கலாம்” என்று அழுகையுடன் உதட்டை சுழிக்க,

இவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஆமா இட்ஸ் மை மிஸ்டேக். நான் ரொம்ப வருத்தப்பட்டேன் ஏன் உன்னை முன்னாடியே நான் உணராம போனேன்னு” என்று வருத்தத்தை தாங்கிய குரலில் முடிக்க,

இவள் ஆதரவாக அணைத்து கொண்டாள்.

“நான் தனியா ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அதுக்கெல்லாம் சேத்து தான் நீங்க என்னை சந்தோஷமா பாத்துக்கிறிங்க. யாருமே என் வாழ்க்கையில கொடுக்க முடியாததை நீங்க கொடுத்து இருக்கிங்க” என்றவள்,

“இதெல்லாம் எனக்காவா?” என்று வினவ,

“உனக்காக மட்டும் தான்” என்றவனது குரலில் நேசம் தளும்பியது.

“எப்படி தோணுச்சு இது‌. அந்த பவுண்டேஷன் கூட என்னோட ஆசை. ஆனால் இது?” என்றவள் வார்த்தை வராது தேங்க,

“தோணுச்சு. என்னவோ உனக்காக செய்யணும்னு. அதான்” என்றவனுக்கும் அதற்கு மேல் விளக்க முடியவில்லை.

“எப்படி கண்டுபிடிச்சிங்க? இத்தனை வருஷம் கழிச்சு?”

“ஹ்ம்ம் எத்தனை வருஷமா இருந்தா என்ன? உனக்காக செய்யணும்னு முடிவு பண்ண பின்னாடி எதுவுமே பெருசில்லை. ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட் மூலமா கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சு கண்டுபிடிச்சிட்டேன்” என்க,

இவளுக்கு தான் மறுமொழி வரவில்லை.

“உன்னை அத்தையும் மாமாவும் திருவிழால தொலைச்சு இருக்காங்க.‌ மே பீ யாரோ உன்னை கடத்தி இருக்கணும். ஆனால் எப்படி நீ ஆசிரமத்துக்கு வந்தேன்னு தெரியலை. அத்தையும் மாமாவும் கூட உன்னை தேடிக்கிட்டே தான் இருந்திருக்காங்க. உன்னை அழைச்சிட்டு வந்து நீ ஏமாந்துட கூடாதுனு நான் முதல்லயே வந்து பாத்து பேசுனேன்”

“...”

“நான் வந்த காரணம் தெரியவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. உடனே உன்னை பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க நான் தான் நேர்ல அழைச்சிட்டு வர்றேன்னு சொல்லி உன்னை கூட்டிட்டு வந்தேன்” என்று நடந்ததை கூற,

தனக்காக இத்தனையும் பார்த்து பார்த்து செய்தவன் மீது நேசம் பொங்கியது.

அவனது கன்னத்தை தனது இரு கரங்களாலும் தாங்கியவள் விழியோடு விழி கலந்து,

“இதை உன்கிட்ட கடைசி வரை சொல்லவே முடியாம போய்டுமோன்னு நினைச்சிட்டு இருந்தேன். பட் வாய்ப்பு கிடைச்சிருக்கு. எனக்கு இந்த உலகத்திலே உன்னை மட்டும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அத்தான். சின்ன வயசுல இருந்து உன் மேல இந்த பிடித்தம் இருக்கு. இதுக்கு பேர் காதலா அன்பா என்னன்னு தெரியலை. பட் ஒன்னு மட்டும் தெரியும் உன் மேல இருக்க இந்த உணர்வு நான் உயிரோட இருக்கவரை என்கிட்ட இருக்கும். இந்த ஜென்மத்தில வேற யார் மேலயும் வராது. லவ் யூ சோ மச்” என்று அவன் நெற்றியில் இதழை ஒற்றி எடுத்தாள்.

பிறகு இரண்டு கன்னங்களிலும் முத்தத்தை கொடுத்தவள் அவன் இதழில் மெதுவாய் தன்னிதழை உரசினாள்.

இருவருக்கும் தீ பற்றி கொண்டது. சட்டென்று இரண்டு இதழ்களும் இணையுடன் சேர்ந்து கொண்டது.

காதலின் முதல் இதழ் முத்தம் நொடிகள் கடந்து நிமிடங்கள் நீடித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கனிக்கு மூச்ச முட்ட துவங்க அவனிடமிருந்து விலகியவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்‌.

அவனுக்கும் மூச்சு வாங்கியது. பிடறியை கோதியபடி சிரிப்புடன் சாளரத்தினை நோக்கினான்.

கனி சிரி
ப்புடன் அவனது வெட்கத்தை ரசித்திருந்தாள்.

அவளது சிரிப்பை உணர்ந்தவன்,

“என்ன?” என்று புருவம் உயர்த்த,

“ம்ஹூம்” என்று தலையசைக்க,

இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

பார்த்தீ கையை விரிக்க கனி அவனுக்குள் பாந்தமாய் பொருந்தி போனாள். நேசம் கொண்ட நெஞ்சங்கள் இன்பத்தில் திளைத்திருந்தது…







 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Wow wow innaiku emotional ah na ud andha emotions full and full happy.ah na thu than and finally parthi avan oda love ah la kani alais venmathi oda anbu avanuku kedaichiduthu
 
Top