ஜென்மம் 27:
மீண்டும் மீண்டும்
உனை காண
வேண்டும் என்றே
தோன்றும்…
“கனி…” என்றவனின் கரகரத்த குரல் எங்கோ ஆழ்ந்து கேட்க,
“ப்ச் சும்மா படுங்க. எப்போ பார்த்தாலும்” என்று அடுத்து கேட்காத குரலில் முனுமுனுத்துவிட்டு இன்னும் அவனை கழுத்தோடு கட்டி கொண்டு உறகத்தை தொடர,
“ஏதே நான் இன்னும் எதுவுமே பண்ணலையே? எப்போ பார்த்தாலுமா?” என்று திகைத்தவன்,
“ஏய் எந்திரிடி” என்று மீண்டும் மொழிய,
“ப்ச் என்ன பிரச்சனை உங்களுக்கு நான் கேட்கும் போது வேணாம்னு சொல்லிட்டு இப்போ வந்து கனி கொனின்னுட்டு. எதுவும் கிடையாது போங்க” என்றவள் திரும்பி படுக்க,
“தூங்கும் போது கூட அதே நினைப்பு தானா? சரியான காஜி புடிச்சவடி நீ” என்று சிரிப்புடன் முணுமுணுத்தான்.
“என்ன?” என்று திகைப்புடன் எழுந்தவள் முறைக்க,
“என்ன பார்வை?” என்று பார்த்தீயும் பதில் பார்வை பார்க்க,
“இப்போ என்ன சொன்னிங்க என்ன?” என்று முறைப்புடனே வினவ,
“என்ன சொன்னேன் எப்போ பார்த்தாலும் அதே நினைப்போட இருக்க காஜி பிடிச்சவன்னு சொன்னேன்” என்று நமட்டு சிரிப்புடன் கூற,
தான் கேட்டது சரிதான் என்று தெரிந்ததும்,
“நடு ராத்திரியில ஹஸ்கி வாய்ஸ்ல காதுக்குள்ள கூப்டா. இதான் நினைக்க தோணும்” என்று இதழை சுழித்தாள்.
“நினைப்ப நினைப்ப. ஒழுங்கா எழுந்து குளிச்சு கிளம்பு” என்க,
“இந்த நடுராத்திரியில எங்க போறோம்?” என்றவள் விழிக்க,
“நடு ராத்திரியா? கண்ணை முழிச்சு பாரு நாலு மணி ஆகிடுச்சு” என்றான்.
“நாலு தான ஆகுது. இந்த நேரத்தில எங்க போறோம்?”
“குளிச்சிட்டு வா சொல்றேன்”
“அகெய்ன் சர்ப்ரைஸா? உங்களுக்கு பகல் டைம்ல சர்ப்ரைஸ் பண்ண தெரியாதா?” என்றவள் சிணுங்கி கொண்டே படுக்க முயல,
“கும்பகர்ணி எழுந்து குறிக்கிறியா? நானே குளிக்க வைக்கட்டுமா”என்று படுக்க விடாமல் தடுக்க,
“ஆமா பண்ணிட்டாலும் போங்க நானே குளிக்கிறேன்” என்று சலிக்க,
“அடியே” என்றவனது முகத்தில் முத்தாய்ப்பாய் சிரிப்பு.
“என்ன?” என்று முகவாயை நிமிர்த்தி சிரிக்காமல் பார்த்தாள்.
“வர வர ரொம்ப கெட்ட பொண்ணாகிட்ட டி நீ” என்று சிரிப்புடன் கூற,
“இல்லையே இன்னும் ஒரு டைம் கூட கெட்டு போகலையே” என்று இதழ் பிதுக்க,
இவன் ஒரு கணம் பேச்சற்று போனான்.
“இத்தனை நாள் இந்த பேச்செல்லாம் எங்கடி ஒளிச்சு வச்சிருந்த?” என்று மாறாத அதிர்வுடன் கேட்க,
“ஹான் என் அத்தை மகன் வருவார்னு முந்தானையில சேர்த்து வச்சிருந்தேன்” என்றவள்,
“தள்ளுங்க நான் போய் குளிக்கணும்” என்று எழுந்து கொண்டாள்.
“பிப்டீன் மினிட்ஸ் தான் டைம் அதுக்குள்ள ரெடியாகி வரணும்” என்க,
“ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள்,
“நாம எங்க போறோம்னு சொல்லவே இல்லையே?” என்று இழுத்தாள்.
“ஹ்ம்ம் செகெண்ட் ஹனிமூனுக்கு” என்று அவளை வம்பிழுக்க கூற,
“ஆமா பர்ஸ்ட் ஹனிமூன்லயே ஒன்னும் பண்ண காணோம். இதுல செகெண்ட்” என்றவளது முணுமுணுப்பில்,
“அடியே” என்றவன் அருகில் செல்ல,
இவள் குளியலைறைக்குள் புகுந்திருந்தாள் சிரிப்புடன்.
“வர வர உனக்கு கொழுப்பு கூடி போச்சுடி” என்று சிரிப்பும் முறைப்புமாக கூற,
“ஆமா ஆமா” என்று கதவை சிறிதாக திறந்து கூறியவள்,
“அதை குறைக்க என்கிட்ட ஒரு நல்ல வழி இருக்கு. ட்ரை பண்ணுவோமா?” என்று விஷமச் சிரிப்புடன் கண்ணடித்தாள்.
அதில் சடுதியில் பார்த்தீக்கே முகம் சிவந்துவிட்டது.
“போடி போய் குளிக்கிற வேலையை பாரு” என்று அதட்ட,
“ஓரே ஒரு டவுட் கேட்டுக்குறேன்” என்று சிரிக்க,
இவனுக்கு புரிந்தது ஏதோ வில்லங்கமாக கேட்க போகிறாள் என்று.
‘வேணாம்’ என்று மறுக்கும் முன்,
“செகெண்ட் ஹனிமூன்லயாவது எதாவது நடக்குமா” என்றவள் அவன் பதில் கூறும் முன் கதவை சாற்றியிருந்தாள்.
இங்கு பார்த்தீ தான்,
‘அம்மாடி’ என்று திகைத்து அதிர்ந்து பார்த்தான்.
இத்தனை நாட்களாய் இந்த அடாவடியை எங்கு ஒளித்து வைக்கிருந்தாளோ என்று எண்ணியவாறே மற்றொரு அறையில் உள்ள குளியலறையில் குளித்து வர சென்றான்.
பார்த்தீபன் தயாராகி வர கனியும் குளித்து காதி காட்டன் புடவையில் எளிமையாக தயாராகி இருந்தாள்.
“ஹேய் என்னடி இவ்ளோ சிம்பிளா ரெடியாகி இருக்க?” என்று வினவ,
“செகெண்ட் ஹனிமூனுக்கு இதுவே போதும்” என்று அவள் சலித்து கொண்டதில் இவனுக்கு புன்னகை அரும்பியது.
‘ப்பா தெரியாம ஹனிமூனுன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன்’ என்று நினைத்து கொண்டான்.
“ஒரு டூ டேஸ்க்கு மட்டும் ட்ரெஸ் எடுத்து வச்சிக்கோ சீக்கிரம்” என்க,
“ஹ்ம்ம் எடுத்து வைக்கிறேன். ஹனிமூனுக்கு எங்க கூட்டிட்டு போறீங்க ஹில் ஸ்டேஷனுக்கா இல்லை” என்று சிரிப்புடன் கேட்க,
இவன் முறைத்தான்.
“ஹில் ஸ்டேஷன்னா ஸ்வெட்டர் எல்லாம் எடுத்து வச்சிப்பேன்” என்று நமட்டு சிரிப்புடன் கேட்க,
“ஒன்னும் வேணாம் குளிருச்சுனா நான் இறுக கட்டி பிடிச்சிக்கிறேன்” என்று இவனும் அவள் வழியிலே பேச,
“ப்பா இப்போ தான் என் வழிக்கு வந்திருக்கிங்க” என்று சிரித்தவள்,
“அப்போ வேர்த்துச்சுனா விலக்கி வச்சுடுவிங்களா?” என்று அதி முக்கிய சந்தேகத்தை கேட்க,
இவனுக்கு தான், ‘ஐயோ’ என்று வந்தது.
அவனது முக பாவனையை கண்டு நகைத்தாள்.
“உனக்கு எங்க இருந்துடி இப்படி எல்லாம் சந்தேகம் வருது” என்று சிரிப்புடன் முறைக்க,
“அதுக்கெல்லாம் தனி அறிவு வேணும் பாஸ்” என்று சிரித்தவள்,
“முக்கியமான ஒரு டவுட் கேக்கலாமா?” என்று வினவினாள்.
“வேணாம்னா விடவா போற கேளு” என்று சலிக்க,
“ஹனிமூன்ல தான் ட்ரெஸ்ஸே தேவைப்படாதே” என்று துவங்கியவள் என்ன கூறி இருப்பாளோ சடுதியில் கரத்தால் அவளது வாயை மூடியவன்,
“போதும்டி என்னால முடியலை கிளம்பு” என்றிட,
“சரி சரி ரொம்ப அலுத்துகாதிங்க” என்றவள் இருவருக்கும் தேவையான பொருட்களை விரைவாக எடுத்து வைத்தாள்.
இருவரும் வெளியே வர,
“எப்போ பார்த்தாலும் வீட்டுக்கு தெரியாம ஓடி போற மாதிரி நடு ராத்திரியிலே கூட்டிட்டு போறீங்க” என்க,
“ஆமா யாருக்கும் தெரியாம உன்னை கடத்திட்டு போறேன். அதான் இந்த டைம்” என்றவன் வாகனத்தை எடுக்க,
“கடத்திட்டு போய் என்ன பண்ண போறீங்க?” என்று ஆர்வமாக அவன் முகம் காண,
இவனுக்கு சிரிப்பு வந்தது. இவள் இதனை விடவே மாட்டாளா என்று.
“போன பின்னாடி தெரியும் என்ன பண்ணுவேன்னு”
“ஹ்ம்ம் பாக்குறேன். நான் எக்ஸ்பெக்ட் பண்ண அளவு உங்க பெர்பாமன்ஸ் இருக்கான்னு” என்று சிரிப்புடன் வம்பிழுக்க,
“என்ன பேச்சுடி பேசுற நீ. ஊருக்கு போய் உனக்கு இருக்கு” என்று போலியாய் முறைக்க,
“என்ன இருக்கு. ஹக்கா கிஸ்ஸா இல்லை அதுக்கும் மேலயா?” என்று அதற்கும் கலாய்க்க,
“ஹேய் நிஜமாவே இது என் பொண்டாட்டி கனி தானா இல்லை பேய் எதுவும் பிடிச்சிருக்கா இப்படி பேசிட்டு இருக்க” என்று வினவ,
“டக்குனு காரை வீட்டுக்கு திருப்புங்க உங்க டவுட்டை உடனே க்ளியர் பண்ணிட்றேன்” என்று அவனை சிவக்க செய்திருந்தாள்.
“ஏன்டி உனக்கு இந்த வெட்கம்னா என்னன்னே தெரியாதா?” என்று சிரிக்க,
“இதுவரைக்கும் நோ ஐடியா. நீங்க வேணா சொல்லி கொடுங்க பாஸ்” என்றவள்,
“சரி சரி நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன். உங்க கூட பேசி நான் டையர்ட் ஆகிட்டேன்” என்றாள்.
“நீ பேசுன பேச்சுக்கு நான் தான்டி டயர்ட் ஆகணும்”
“இப்போதைக்கு பேச்சு நான் நைட் ஆக்ஷன்ல டையர்ட் ஆக்கிட்றேன்” என்றவள் விழிகளை மூடி கொள்ள,
இவனுக்கு தான் வெட்க புன்னகை பூத்தது.
இவளை மீண்டு வர செய்யாமல் இருந்திருந்தால் இத்தனை காதலை இந்த ஜென்மத்தில் தான் உணராது போயிருப்போம் என்று தோன்ற நினைவு நேற்றைய இரவிற்கு பயணம் செய்தது.
அறைக்குள் நுழைந்ததும் ஓடி வந்து இறுக்கமாக அணைத்து கொண்ட தாக்குதலை எதிர்பாராதவன் இன்மமாய் அதிர்ந்து,
“கனி” என்றிட,
“ஹ்ம்ம்” என்றவள் அவனை மேலும் இறுக்கியணைத்து,
“தாங்க் யூ சோ மச்” என்றவள் நிமிர்ந்து அவனது கன்னத்தில் தனது இதழை பதித்தாள்.
மென்மையாய் கன்னத்தில் மோதியவளது இதழ் உள்ளுக்குள் பூகம்பத்தை தோற்றுவித்தது.
சடுதியில் அவளை தன்னிடமிருந்து விலக்கியவன்,
“என்ன மேடம் ரொம்ப ஹாப்பியா இருக்கிங்க போல?” என்று சிரிப்புடன் வினவ,
“ஆமா ரொம்ப ரொம்ப அதுக்கு நீங்க தான் காரணம்” என்றவள் மீண்டும் அவனை அணைத்து கொள்ள,
இவன், “கனி ஒரே ஸ்வெட்டிங்கா இருக்கு” என்று அவளை விலக்க முயற்சிக்க,
“பரவாயில்லை” என்று அவனோடு ஒன்றியவள்,
“நான் என் லைஃப்ல இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்லை. ஆல் பிகாஸ் ஆஃப் யூ” என்றவளது இதழ் அவனது நெஞ்சில் பதிந்தது.
மீண்டும் இவனுக்குள் ஒரு பூகம்பம்.
‘மனுஷன கன்ட்ரோல இருக்க விட மாட்டா போல. ரொம்ப சோதிக்கிறா’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவன்,
“இதைவிட அதிகமா உன்னை சந்தோஷப்பட வைப்பேன். இன்னும் இருக்கு” என்று மர்ம புன்னகையுடன் கூற,
“என்ன இருக்கு” என்றவளது குரல் முழுவதும் ஆர்வம்.
“சீக்ரெட்” என்று கண்ணடித்தவன்,
“சர்ப்ரைஸ் ஆகிட்டியா?” என்று புருவம் உயர்த்த,
“ரொம்ப” என்றவள்,
“எப்படி தோணுச்சு?” என்று வினவ,
“ஹ்ம்ம் கோவிச்சிக்கிட்டு சுத்துற இந்த கோவக்கார கிளிய எப்படி சமாதானம் பண்றதுனு யோசிச்சேன். அதான்” என்றவன்,
“கோவம் போட்டுச்சா” என்றான்.
“ஹ்ம்ம் இருந்த இடம் தெரியாமல் காணா போய்டுச்சு” என்றவள் மீண்டும்,
“எனக்காகவா?” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் வினவ,
“ஹ்ம்ம் உனக்காக மட்டும் தான்” என்று அழுத்தி கூறினான்.
“இட் மீன்ஸ லாட் டூ மீ” என்றவள்,
“நமக்காக யோசிக்க நமக்கு பாத்து செய்ய நமக்கு ஒன்னுன்னா இருக்காங்கன்றது ரொம்ப பெரிய விஷயம். அதை இப்போ இந்த செகெண்ட் நீங்க கொடுத்து இருக்கிங்க” என்றவளது குரல் உணர்வு மிகுதியில் தழுதழுக்க,
அவளை மென்மையாக அணைத்து கொண்டவன் தான் எப்போதும் அவளுக்காக இருப்பேன் என்று செயலால் உணர்த்தினான்.
அவளது தலையை ஆதரவாக வருடியவன்,
“உனக்காக எப்பவுமே நான் இருப்பேன் எந்த சூழ்நிலையிலும்” என்றான்.
“தாங்க்ஸ் பார் கம்மிங் இன் மை லைஃப்” என்றவள் அணைப்பின் இறுகத்தை கூட்ட,
“அதை நான் சொல்லணும். நீ என் வாழ்க்கையில வராம போயிருந்தா நான் நிறைய இழந்து இருப்பேன்” என்று அவனும் அணைத்து கொண்டான்.
நொடிகள் நிமிடங்களாக நீள பார்த்தீயின் அலைபேசி ஓசையில் தான் இருவரும் சுயத்திற்கு வந்தனர்.
கனி அவனிடமிருந்து விலக பார்த்தீ அலைபேசியின் திரையை பார்த்துவிட்டு,
“ஒரு இம்ப்பார்ட்டன்ட் கால். பேசிட்டு வர்றேன்” என்க,
“ஹ்ம்ம் நானும் போய் அத்தைக்கு ஹெல்ப் பண்றேன். பாதியிலே விட்டுட்டு வந்துட்டேன்” என்றவள் கீழிறங்கி சென்றாள்.
அழைப்பை பேசி முடித்தவன் குளித்து கீழிறங்கி வர இருவரும் இரவுணவை தயாரித்து முடித்திருந்தனர்.
கிரியும் வர உணவு நேரம் அழகாய் சென்றது. நிகழ்வில் நடந்ததை பேசி கொண்டு உண்டனர்.
கிரிதரன் தன்னுடைய நண்பர்களுக்கு கனியினது தொண்டு நிறுவனத்தை பற்றி கூறி உதவ கேட்கிறேன் என்று கூற இவை யாவும் கணவனால் தான் என்று எண்ணம் வர அவன் மீது பார்வை புன்னகையுடன் படிந்து மீண்டது.
வழக்கம் போல மாமியாருக்கு சமையலறையில் ஒதுங்க வைக்க உதவிவிட்டு அறைக்கு சென்றாள்.
இத்தனை நாட்கள் இல்லாது இன்று அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. ஒருவித அவஸ்தையுடன் உள்ளே செல்ல, அங்கோ பார்த்தீ போர்த்தி படுத்துவிட்டிருந்தான்.
அதனை கண்டதும் இவளுக்கு புஸ்ஸென்றாகியது.
எப்போதும் இந்த நேரத்தில் விழித்து இருப்பவன் இன்று மட்டும் உறங்கிவிட்டானா என்று எண்ணத்துடன் இரவு விளக்கை போட்டுவிட்டு தானும் மெத்தை மீது ஏறி அவனருகே நெருங்கி படுக்க சடுதியில் அவள் புறம் திரும்பியவன் இடையோடு சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“தூங்கலையா நீங்க?” என்று இவள் திகைத்து வினவ,
“ஹ்ம்ம் தூங்கிட்டு தான் இருக்கேன் குட் நைட்” என்று விழிகளை திறக்காமலே கூற,
இவள் அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் முறைப்பின் அனல் காற்றை உணர்ந்தவன் விழி திறந்து பார்த்து,
“என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
பதிலுக்கு இவள் முறைப்பு அதிகமானது.
அதில் பார்த்தீக்கு புன்னகை தோன்ற,
“என்னடி?” என்று அதட்ட,
“ஒன்னுமில்லை நல்லா தூங்குங்க குட்நைட்” என்று இதழை சுழித்துவிட்டு திரும்பி படுத்து கொள்ள,
இவனும் அதற்கு மேல் பேசாது படுத்துவிட்டான்.
இவ்வளவு நேரம் தன்னை போட்டு பார்த்தவள் அமைதியாக துயில் கொண்டிருக்க அதனை கண்டவனுக்கு மென்னகை முகிழ்ந்தது.
தான் அழைத்து போகும் இடத்தையும் ஆட்களையும் கண்டால் எப்படி எதிர் வினையாற்றுவாள் என்று எண்ணியபடி வாகனத்தை இயக்கினான்.
மணி ஒன்பதை தொடவும் பார்த்தீக்கு பசித்தது.
உறக்கத்தில் இருந்தவளை மெலிதான சத்தத்துடன் எழுப்பினான்.
“ஹ்ம்ம் எப்போ பார்த்தாலும் தூக்கத்தை கெடுக்குறதே பொழப்பா போச்சு உங்களுக்கு” என்று முனங்கிவிட்டு தலையை திருப்பி விட்ட தூக்கத்தை தொடர முயற்சிக்க,
“பசிக்கிது சாப்டு போகலாம். வா டி” என்று மீண்டும் எழுப்ப,
“ப்ச்” என்று சலித்தபடி விழிகளைத் திறந்தவள் அவனை முறைக்க,
“பசியோட ட்ரைவ் பண்ண முடியலை” என்று விழிகளை சுருக்கினான்.
அதில் சமாதானம் அடைந்தவள் இறங்கி வர இருவரும் உணவகத்தினுள் நுழைந்தனர்.
இருவருக்குமே அன்று அந்த உணவகத்தில் நடந்தது நினைவு வர புன்னகை எழுந்தது.
பார்த்தீபன் சிரிப்புடன், “இன்னைக்கும் எதாவது பொண்ணு வந்தா எனக்கு செட் பண்ணி விடுவியா?” என்று வம்பிழுக்க,
“ஹான் இது ட்யூப்லைட்னு சொல்லி துரத்திவிட்ருவேன்” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு நடக்க,
இவன் தான் ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டான்.
பின்னர் போலி கோபத்துடன்,
“அடியே என்னை ரொம்ப டேமேஜ் பண்றடி நீ” என்று அதட்ட,
“ஆஹான் இல்லாததையா சொல்லிட்டேன்” என்று சிரிப்புடன் அவனருகே அமர்ந்தாள்.
பார்த்தீ பதில் மொழிவதற்குள் சிப்பந்தி வந்துவிட வேண்டும் என்றதை கூறினர்.
உணவு வந்ததும் கனியின் பேச்சுக்களோடு சென்றது நேரம்.
சாப்பிட்டதும் வாகனத்தை எடுக்க செல்ல அன்று போல கனி தானே இயக்கினாள்.
பார்த்தீ வழியை கூறினான்.
கனி, “இப்போவாது எங்க போறோம்னு சொல்றீங்களா?” என்று வினவ,
“மேட்டூர் பௌறோம்” என்றான்.
“ஓ… அங்க எதுக்கு?” என்று வினா தொடுக்க,
“ஒரு முக்கியமான ஆள பாக்க போறோம்”
“யாரது முக்கியமான ஆள்”
“போனா உனக்கே தெரிஞ்சிடும்”
“ஏன் இப்போ சொன்னா ஆகாதா?”என்று முறைத்தாள்.
“போன பின்னாடி நீயே தெரிஞ்சுப்ப. ரோட்டை பாத்து ஓட்டு டி” என்று அதட்டினான்.
“வர வர அதட்டல் ஓவரா இருக்கு. பாத்துக்கிறேன்” என்றவள் சாலையில் கவனத்தை பதிக்க,
இவனுக்கு மென்னகை எழுந்தது.
“எல்லாம் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க தான்” என்று கூற,
“பாக்குறேன் யாரு அப்படி வேண்டப்பட்டவங்க” என்று சடைத்து கொண்டாள்.
பின்னர் சில மணி நேர பயணத்தில் இருவரும் மேட்டூரை அடைந்தனர்.
பார்த்தீபன் செல்ல வேண்டிய இடத்திற்கு வழியை கூற இருவரும் ஒரு பழைய காலத்து வீட்டை அடைந்தனர்.
கனி மகிழுந்தில் இருந்து இறங்கியதும் வீட்டை கவனித்துவிட்டு,
“வாவ் வீடு சூப்பரா இருக்கு. எனக்கு இந்த மாதிரி ட்ரெடிஷன்ல இருக்க வீடு ரொம்ப பிடிக்கும்” என்று புன்னகையுடன் கூற,
“ஹ்ம்ம் உள்ள போனா இன்னும் நல்லா இருக்கும். வா போகலாம்” என்று பார்த்தீ கூற,
வாகனத்தின் ஓசையில் வெளியே வந்த பெரியவர்,
“கோதாவரி பொண்ணும் மாப்பிள்ளையும் வந்துட்டாங்க. சீக்கிரம் ஆரத்திய கொண்டு வா” என்று கூற,
“ஹ்ம்ம் இதோ வந்துட்டேன்ங்க” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கையில் ஆரத்தி தட்டுடன் வந்தார் கோதாவரி.
இருவரும் வாசலுக்கு வந்ததும்,
“ஆரத்தி எடுத்ததும் உள்ள வாங்க மாப்பிள்ளை. முதல் முறையா ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்றீங்க” என்று பெரியவர் வீர பாண்டியன் கூற,
கனி, “இவங்க யாரு?” என்று கணவனிடத்தில் முணுமுணுத்தவாறு அவனருகே நின்றாள்.
கோதாவரி ஆரத்தி எடுக்கும் முன்,
“நான் தான் அக்காக்கும் மாமாவுக்கும் ஆரத்தி எடுப்பேன்” என்று ஓடி வந்தாள் ஒரு பெண்.
பார்க்க கல்லூரி படிப்பவள் போலிருந்தாள்.
கனிக்கு அவளை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல தோன்றியது. எங்கு பார்த்திருக்கிறோம் என்று சிந்திக்க,
அவள் ஆரத்தி எடுத்துவிட்டு, “மாம்ஸ் தட்டு நிறைய காசு போடுங்க” என்று கூற,
“என் கொழுந்தியாவுக்கு இல்லாததா” என்று சிரிப்புடன் இவன் பல தாள்களை எடுத்து போட்டான்.
“மதி என்ன இது” என்று தாய் அதட்ட,
“ம்மா என் மாமாக்கிட்ட நான் கேக்குறேன்” என்று சிலுப்பினாள் மதி என்கின்ற இளமதி.
ஆரத்தி எடுத்தவுடன் கோதாவரி,
“வெண்மதி” என்று கனியின் கையை பிடித்து கொண்டார்.
விழிகளும் குரலும் கலங்கியது.
கனிக்கு அவரிடம் ஏதோ இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.
‘என்ன இது?’ என்று கணவனிடம் கண்களால் வினவ,
“வாசல்லயே நிக்க வச்சு பேசாதடி” என்று கணவன் அதட்டியதும்,
“மன்னிச்கோங்க மாப்பிள” என்றவர்,
“உள்ள வாங்க” என்று இருவரையும் அமர கூறினார்.
கனிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தனக்கும் இவர்களுக்கும் ஏதோ ஒன்று இருக்கின்றது என்று மட்டும் உள்ளுணர்வு கூறியது.
ஆரத்தியை போட்டு வந்த இளமதி,
“மாம்ஸ் அக்காக்கிட்ட இன்னும் சொல்லலையா? என்ன இப்படி முழிக்கிறா?” என்று வினவ,
“ம்ஹூம் இல்லை” என்று பார்த்தீ கூற,
“அக்கா” என்று மகிழ்வுடன் கனியை எழுப்பி அணைத்து கொண்டவள்,
“என்னை கொஞ்சம் நல்லா பாரு” என்று முன்னும் பின்னும் திரும்பி கா
ண்பிக்க,
கனியின் மூளையில் பளீரென மின்னல் வெட்டியது.
எதிரில் இருந்தவள் அப்படியே கனியை உரித்து வைத்திருந்தாள்.
ஆனால் சற்று வெள்ளையாக இருந்தால் அதனால் தான் கனியால் உடனே அடையாளம் காண முடியவில்லை.
சடுதியில் பார்வை எதிரில் நின்று கொண்டிருந்த இருவரிடம் பதிய கனியின் சாயலை கொண்டிருந்தார் கோதாவரி.
நொடியில் எல்லாம் புரிய கனிக்கு கால்கள் தடுமாறியது. கண்கள் இருட்டி கொண்டு வர நொடியில் சாய்ந்திருந்தாள்…