• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 26

Administrator
Staff member
Messages
521
Reaction score
800
Points
93
ஜென்மம் 26:

இசையால் ஒரு உலகம்

அதில் நீ நான் மட்டும்
இருப்போம் கனவால்
ஒரு இல்லம் அதில்

நாம் தான் என்றும் நிஜமாய்…

கனி காலை எழுந்து குளித்து கீழே வர கஸ்தூரியும் குளித்து புதுபுடவை அணிந்து இருந்தார்.

“வாவ் அத்தை பாக்க ஹீரோயின் மாதிரி இருக்கிங்க” என்று சிரிப்புடன் கனி மொழிய,

“கலாய்க்காதம்மா” என்று போலியாய் முறைத்தார்‌.

“அத்தை நிஜமா தான் சொல்றேன். இந்த பிங்க் சேரில அப்படியே அந்த காலத்து ஹீரோயின் போல இருக்கிங்க. நான் கூட யார்டா இது புது ஹீரோயின் நம்ம வீட்டுலன்னு தான் நினைச்சிட்டு வந்தேன்” என்க,

“ஓவரா ஐஸ் வைக்காத கனி” என்று கஸ்தூரி சிரிக்க,

“ப்ச் அத்தை நான் சொன்னா நம்ப மாட்டிங்க நீங்க” என்றவள் ஹாலில் அமர்ந்து இருந்த கிரியிடம்,

“மாமா நீங்களே சொல்லுங்க அத்தை இந்த சாரில எப்படி இருக்காங்க?” என்று வினவ,

“அவளுக்கென்ன எந்த சாரிலயும் ஹீரோயின் மாதிரி தான் இருப்பா” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

“சும்மா இரு கனி” என்றவரது முகத்தில் வெட்க புன்னகை,

“ஆஹான் என் அத்தைக்கு வெட்கத்தை பாருங்க மாமா” என்று கனி கூற,

“இந்த மாதிரி வெட்கப்பட்டு தான் பர்ஸ்ட் மீட்டிங்லயே என்னை கவுத்திட்டா” என்று சிரிக்க,

“ரியல்லி? உங்களோடது லவ் மேரெஜா?” என்றவளது குரலில் எவ்வளவு ஆர்வம்,

கிரி, “ஆமாம்” என்க,

கஸ்தூரி, “இல்லை” என்றார்.

“ரெண்டு பேரும் ஆளுக்கொரு பதில் சொல்றீங்களே” என்று கனி பார்க்க,

“எனக்கு லவ் மேரேஜ் அவளுக்கு அரேன்ஜ் மேரேஜ்” என்க,

“ஓஹோ… மாமா உங்க லவ் ஸ்டோரி சொல்றீங்களா?” என்று ஆர்வமாக செல்ல,

“அதெல்லாம் அப்புறமா கேட்டுக்கோ. இப்போ நாங்க முக்கியமான இடத்துக்கு போகணும்”என்று கஸ்தூரி கூற,

“பங்க்ஷனுக்கா அத்தை?” என்றாள் கனி.

“ஆமா கனி. நம்ம நாகேஷ் அண்ணன் இருக்காருல அவர் பொண்ணுக்கு வளைகாப்பு” என்க,

“ஓ… யாருன்னு எனக்கு தெரியலைத்தை”

“உங்க கல்யாணத்துக்கு கூட வந்து இருந்தாங்களே” என்று கஸ்தூரி கூற,

“தெரியலைத்தை”

“சரி விடு. அடுத்த டைம் பாக்கும் போது இன்ட்ரோ பண்றேன்” என்க,

“சரிங்கத்தை பாத்து போய்ட்டு வாங்க”

“ஹ்ம்ம். பொங்கலும் சாம்பாரும் வச்சு இருக்கேன். அவனுக்கும் பரிமாறிட்டு நீயும் சாப்பிடு” என்க,

“சரிங்கத்தை” என்றாள்.

இருவரும் கிளம்பி செல்ல பார்த்தீபன் கீழிறங்கினான்.

நிவிஷாவிற்கு செங்கல்பட்டில் பயிற்சி என்பதால் அங்கேயே விடுதி எடுத்து தங்கி இருக்கிறாள்.

“எங்க யாரையும் காணோம்?” என்று பார்த்தீ வினவ,

“அத்தையும் மாமாவும் பங்க்ஷனுக்கு போய் இருக்காங்க” என்றாள்.

“ஓ… எங்க?” என்று வினவ,

“எனக்கு தெரியலை” என்று முடித்துவிட்டாள்.

அவன் வந்து அமர்ந்ததும் இருவருக்கும் சேர்த்து பரிமாறியவள் உண்ண துவங்கினாள்.

மதிய உணவை வெளியே பார்த்து கொள்வோம் என்று எண்ணியவள் பார்த்தீயுடன் புறப்பட்டாள்.

அந்த நிகழ்விற்கு பிறகு பார்த்தீயிடம் சற்று சுமூகமாக நடக்க முயற்சித்து சிறிது வெற்றியும் பெற்றிருந்தாள்.

வழக்கம் போல அமைதியான பயணம்.

இறங்கியதும் கனியின் பார்வையில் பட்டது அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களுடைய அலுவலக கட்டிடம் தான்.

பார்த்தீயின் அலுவலகத்தின் மேல்தளத்தில் ஏதோ விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த தளம் உபயோகப் படுத்தபடாமல் இருந்ததால் பார்த்தீபன் யாருக்கோ வாடகைக்கு விட்டிருப்பதாக தகவல் வந்தது.

ஒரு மாத காலமாக ஏதோ வேலை நடந்து கொண்டிருக்கிறது. என்ன நிறுவனம் என்று கனிக்கு தெரியவில்லை.

பார்த்தீயிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.

சிந்தனையுடன் தனது இருக்கைக்கு சென்று அமர,

“கனி மேல் ப்ளோர்ல இன்னைக்கு தான் இன்னாகுரேஷன் பங்க்ஷன் போல” என்று தாரிகா கூற,

“அப்படிதான் போல தெரியிது”

“என்ன பிஸ்னஸ் கம்பெனி எதாவது தெரியுமா உனக்கு?”

“தெரியலை” என்ற கனி தனது மடிக்கணினியை திறக்க,

“எனக்கு என்னன்னு தெரியலை. பார்த்தா ஏதோ பெரிய இடம் போல தெரியுது போய் பாப்போமா?” என்க,

“அதெதுக்கு நமக்கு‌. வந்த வேலையை பாப்போம்” என்று தனது பணியை துவங்க,

ஒவ்வொருவராக வர துவங்க அலுவலகம் வழக்கம் போல இயங்க துவங்கியது.

சரியாக பத்தே முக்காலுக்கு அலுவலக புலன குழுவில் எல்லோருக்கும் மேல நடக்கும் திறப்பு விழாவிற்கு அழைப்பு வந்துள்ளதாகவும் பதினொரு மணிக்கு மேலே வருமாறும் செய்தி போடப்பட்டிருந்தது.

தாரிகா, “நான் சொன்னேன்ல போய் பாக்கலாம்னு. பாரு அவங்களே கூப்பிட்டாங்க. வா போகலாம்” என்க,

“எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. நீ போய்ட்டு வா”என்று மறுத்தாள்.

“ப்ச் வா கனி. எப்போ பார்த்தாலும் ஜாப்பை கட்டி அழுவியா?” என்க,

“வேலை இல்லை.‌ எனக்கு வர விருப்பம் இல்லை” என்று கூற,

தாரிகா, “காய்ஸ் கனி இன்னாகுரேஷன் பங்க்ஷனுக்கு வரலையாம்”என்று மற்றவர்களிடம் கூற,

“கனி‌ ஏன் வரலை?”

“நல்லா இருக்கும் வா கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிட்டு வருவோம்”

“முதலாளியம்மா யாரும் இல்லாதப்ப கம்பெனிய யாரும் தூக்கிட்டு போய்ட மாட்டாங்க. வாங்க போகலாம்” என்று வரிசையாக குரல்கள் வந்தது.

இறுதியாக, “கனி நீ வரலைன்னா நாங்க யாரும் போக மாட்டோம்” என்று கூறிவிட,

கனிக்கு ஆயாசமாக வந்தது.

“சரி வாங்க நமக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான். வொர்க்க பாருங்க” என்று விஷ்ணு கூற,

எல்லோரது முகத்தையும் ஒரு முறை கண்டவள்,

“சரி போகலாம் வாங்க” என்று சலித்தபடியே கூற,

“நீ அவ்ளோ சலிச்சிக்கிட்டு வர வேணாம்” என்று தாரிகா முறுக்கி கொள்ள,

‘இவ ஏன் இன்னைக்கு இவ்ளோ படுத்துறா’ என்று எண்ணியவள் முகத்தை சிரித்தாற்போல வைத்து,

“போலாமா?” என்று வினவ,

“ஹ்ம்ம் இப்போ தான் நல்லா இருக்கு. போலாம் வாங்க” என்றவள் நடக்க,

அலுவலகமே காலியாக இருந்தது.‌ எல்லோரும் செய்தி வந்தவுடனே போய்விட்டனர் போலும்.

“எல்லாரும் போய்ட்டாங்க போல. நமக்கு லாஸ்ட் ரோ தான் கிடைக்கும்” என்று தாரிகா கூற,

“ஸ்பீச்சா கொடுக்க போறோம். வேடிக்கை பாக்க லாஸ்ட் ரோ போதும்” என்று கனி அலுத்து கொள்ள,

“யாரு கண்டா‌. திடீர்னு உன்னை ஸ்பீச் கொடுக்க கூப்டா என்ன பண்ணுவ?” என்றபடி படியில் ஏற,

“நீ ஏன் இன்னைக்கு வியர்டா பிகேவ் பண்ற?” என்று கனி மேலும் கீழும் பார்க்க,

“எல்லாத்துக்கும் ஒரு ரீசன் இருக்கு” என்று சிரித்தவள்,

“சார் எப்போவாது உனக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்காரா?” என்று வினவ,

‘இப்போ எதுக்கு இந்த கேள்வி’ என்று நினைத்தவள்,

“ஹ்ம்ம் பண்ணி இருக்காங்க” என்றவள்,

“எதுக்கு இந்த கொஸ்டீன் இப்போ?” என்று வினவ,

எல்லோரும் உள்ளே சென்றனர்.

கனியும் தாரிகாவும் இறுதியாக செல்ல,

“அப்போ இது தான் பெஸ்ட் சர்ப்ரைஸா இருக்கும். என்ஜாய்” என்றவள் கைப்பிடித்து உள்ளே இழுக்க,

“சர்ப்ரைஸ்‌‌…” என்ற கோரஸாக கூறி உள்ளே இருந்த அனைவரும் எழுந்து நிற்க,

கனியின் மீது மலர்கள் தூவப்பட்டது.

ஒரு நொடி என்ன நடக்கிறது என்று புரியாமல் கனி திகைத்து விழிக்க,

“கனி சர்ப்ரைஸ் எப்படி?” என்றபடி அவளது வலப்புறம் வந்து நின்றான் மகேஷ்.

“மகி” என்றவள் ஆனந்த அதிர்ச்சியாக விழிகளை விரிக்க,

“சர்ப்ரைஸ் பிடிச்சு இருக்கா கனி” என்று மறுபுறம் வந்து கஸ்தூரி புன்னகைக்க,

“அத்தை நீங்களுமா?” என்று திகைத்தாள்.

“ஆமா நானும் தான்” என்று சிரித்தவர் அவளது முகத்தை மேடை நோக்கி திருப்ப,

“ஈகை பவுண்டேஷன்” என்று பெரிய எழுத்துக்களில் போடப்பட்டிருக்க அதற்கு கீழே பவுண்டர் மிஸஸ் கன்னல்மொழி பார்த்தீபன் என்று பெரிய எழுத்துக்களில் மின்னியது‌.

அதன் அருகே சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தான் பார்த்தீபன்.

சட்டென்று ஆனந்த அதிர்வில் விழிகளை விரித்தவள் ஒரு கணம் உறைந்து போயிருந்தாள்‌.

“அக்கா எவ்ளோ நேரம் இப்படியே நிக்கிறதா ஐடியா” என்று தோளை இடித்த பிரவீனது குரலில் நடப்புக்கு வந்தவள்,

“பிரவீன் நீயுமா?” என்க,

“ஆமா. அத்தான் தான் எதுவும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டாங்க” என்று கண்சிமிட்டியவன்,

“போய் ரிப்பன் வெட்டி ஸ்டார்ட் பண்ணு” என்க,

“நானா?” என்றவள் பார்க்க,

“நீ தான் வா” என்றவன் கைப்பிடித்து இழுத்து வந்து மேடையில் நிறுத்த,

“ஹே…” என்று கரகோஷம் எழுந்தது.

சடுதியில் கனிக்கு கூச்சமாகிட அருகில் இருந்தவனது கையை பிடித்து கொண்டாள்.

பார்த்தீ அருகில் இருந்த கத்தரி கோலை எடுத்து,

“கட் பண்ணு” என்று கொடுக்க,

“நீங்களும் வாங்க” என்று அவனை அழைக்க,

“நோ இட்ஸ் யுவர் டே‌‌. நீயே பண்ணு” என்று மறுக்க,

“இல்லை வாங்க சேர்ந்து ஸ்டார்ட் பண்ணுவோம்” என்று அவனது கரத்தை பிடித்து கொள்ள,

இருவரும் சிரிப்புடன் ஈகை தொண்டு நிறுவனத்தை துவங்கி வைத்தனர்.

எல்லோரும் கை தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்க, தாரிகா ஒலிப்பெருக்கியில், “கனி மேம் ஸ்பீச் கொடுங்க” என்று சிரிப்புடன் கூற, மற்றவர்களும் அதையே கூற துவங்கினர்.

“நோ வேணாம்” என்று மறுத்துவிட்டாள்.

பார்த்தீபன் ஒலிப்பெருக்கியை வாங்கி பேச துவங்கினான்.

எனது அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள் என்று கூறி உரையை துவங்கியவன் தொண்டு நிறுவனத்தை பற்றி பேசினான்‌.

இந்த தொண்டு நிறுவனம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கும் படிப்பு மற்றும் இதர உதவிகள் செய்யும். அதுமட்டுமின்றி தன்னுடைய கல்வி நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு இருபது மாணவர்களுக்கு வெளிநாட்டில் விரும்பிய படிப்பை படிக்க உதவி செய்யப்படும்.

தனது தொழில் நிறுவனங்களின் பத்து சதவீத பங்கு வருடந்தோறும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் என்று கூற, பெரிய கரகோஷம் எழுந்தது.

கனி தான் அவன் கூறுவதை கண்டு சற்று அதிர்ந்து பார்த்தாள். தன்னுடைய ஆசைக்காக இதனை துவங்கியிருக்கிறான் என்று எண்ணினாள் இவன் எத்தகைய உதவி செய்ய முன் வந்துள்ளான்.

தான் எத்தனை வருடங்கள் உழைத்தாலும் வெளிநாட்டு படிப்பெல்லாம் கொடுக்க இயலாது. அதற்கு எத்தனை லட்சங்கள் செலவாகும். இவ்வளவு சுலபத்தில் கூறிவிட்டானே. அதுவும் நிறுவனத்தில் லாபத்தில் பத்து சதவீதம்.

அதனை வைத்தே நான்கு காப்பகங்களை பார்த்து கொள்ளலாமே என்று சிந்தித்திருந்தாள்.

பார்த்தீபன் பேசி முடித்ததும் கிரிதரன் வந்து பேசினார். தன்னுடைய நிறுவனத்தில் இருந்தும் பத்து சதவீத பங்களிப்பதாக கூறினார்.

அடுத்து சிவப்பிரகாசம் வந்து உரையாற்றினார்‌. அவரும் தனது பங்களிப்பை கூற மேலும் சில பார்த்தீபனது நண்பர்கள் சிலர் வந்து தங்களது பங்களிப்பை கூற, சட்டென்று விழிகள் கலங்கியது கனிக்கு.

அருகில் இருந்த மகி, “ப்ச் கனி எதுக்கு இப்போ அழுதிட்டு இருக்க. திஸ் இஸ் ஹாப்பி மொமன்ட்ஸ்” என்று கூற,

“பேசாதடா என்கிட்ட‌. நீ கூட சொல்லலைல?” என்று முறைக்க,

“எல்லாம் உன் ஹஸ்பண்ட் ஆர்டர். வொய்போட ஆசையை சர்ப்ரைஸா நிறைவேத்த ஆசைப்பட்டாரு அதுக்கு ஹெல்ப் பண்ணேன்” என்றும் அவளது முறைப்பு தொடர,

“நீ முறைக்கணும்னா இந்த ஹால்ல இருக்க அத்தனை பேரையும் முறைக்கணும்” என்றதும் அவளது பார்வை தாரிகாவின் மீது படிந்தது.

‘கல்ப்ரிட்’ என்று இதழ்கள் முணுமுணுக்க விழிகள் முறைத்தது.

“ஹிஹி” என்று சிரித்தவள்,

“பாஸ் ஆர்டர் எம்பிளாயி மீற முடியலை” என்க,

“வெளிய வா உனக்கு இருக்கு” என்று முனங்கினாள்.

“அப்புறம் பாப்போம்” என்று தாரிகா திரும்பிவிட்டாள்.

எல்லோரும் பேசி முடித்ததும் தேநீர் மற்றும் இதர உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

பார்த்தீபன் தனது நண்பர்களுடன் அமர்ந்து கொள்ள கனியின் பார்வை அடிக்கடி கணவன் மீது படிந்து மீண்டது‌.

யாரும் பார்க்காத வண்ணம் தான் இதனை செய்து கொண்டிருந்தாள். இதழில் வேறு அழகான புன்னகை வீற்றிருந்தது‌.

“சர்ப்ரைஸ் எப்படி இருந்துச்சு கனி?” என்று கஸ்தூரி வர,

“வாங்கத்தை வாங்க. இதான் அந்த வளைகாப்பு பங்க்ஷனா. இங்க ப்ரக்னென்ட் லேடீஸ் யாரையும் காணோம்” என்று விழிகளால் துழாவ,

“எல்லாம் உன் புருஷனோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அதான் நானும் கொஞ்சம் நடிக்க வேண்டியதா போச்சு” என்று சிரித்தவர்,

“எப்படி நம்ம ஆக்டிங்?” என்க,

“சுமார் தான் என் மாமா அளவுக்கு இல்லை” என்று அவரை வம்பிழுத்தவள் அடுத்து தம்பியிடம் வந்தாள்.

“நேத்து நைட் கூட பேசுனியேடா அப்போ கூட சொல்ல தோணலையா?” என்று வினா தொடுக்க,

“தோணுச்சு தான். ஆனால் என்ன பண்றது. நீ சர்ப்ரைஸ் ஆகுறதை பாக்க வேணாமா அதான்” என்று புன்னகைக்க,

கனிக்கும் புன்னகை முகிழ்ந்தது.

அதனை மறைத்தவள், “யூ டூ ப்ரூட்டஸ் ப்பா” என்று போலியாக முறைக்க,

“மருமகன் சொன்ன பிறகு நோ அப்பீல்” என்று சிரிக்க,

“எல்லாரும் அவர் பக்கம் சாஞ்சிட்டிங்க” என்று போலியாக கோபம் கொள்ள,

“நீ தான் பர்ஸ்ட் சாஞ்ச” என்று மகி காதில் முணுமுணுக்க,

“ப்ச் அமைதியா இருடா” என்று அதட்டியவளது பார்வை கணவன் மீது படிய,

அந்நேரம் அவனும் மனைவியை தான் பார்த்திருந்தாள்.

சடுதியில் பார்வையை திருப்பிக் கொண்டவளது மனமெங்கும் மழைச்சாரல் வீசியது.

“ஆஹான் இங்க ஒருத்தவங்க மனசுக்குள்ள டூயட் பாட ஸ்டார்ட் பண்ணிட்டாங்கப்பா” என்று சிரிப்புடன் தாரிகா வந்து அமர,

“ஹேய் கல்ப்ரிட் எத்தனை நாளா இது நடக்குது?” என்று வினவ,

“ஜெஸ்ட் ஒன் மந்த்” என்று தோளை குலுக்கினாள்.

“ஒரு மாசமா?”

“ஆமா”

“எனக்கு தெரியாம எப்படி? நான் எப்பவும் கூட தான இருப்பேன்”

“அதெல்லாம் எங்க திறமை. எப்படியோ சர்ப்ரைஸ் ஆகிட்டேல அது போதும். எங்க சார் தான் மெனக்கெட்டு நிறைய வொர்க் பாத்தாரு”

“ஓ…”

“சாருக்கு அவர் வொய்ப் மேல லவ்வோ லவ்வு அதான்” என்று இழுக்க,

கனியின் முகத்தில் என்ன முயன்றும் புன்னகை தோன்றியது.

கூடவே கணவன் மீது ரசனை பார்வையும் படிந்தது.

அதன் பிறகு மதிய உணவு எல்லோருடனும் கழிந்தது.

மதியம் அலுவலக வேலை அதன் போக்கில் நகர கனி தான் கணவனிடத்தில் எப்படி தன் நன்றியை கூறுவது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்று சிரிப்பும் சிந்தனையுமாக திரிந்தாள்.

சரியாக கிளம்பும் நேரம் பார்த்தீபன் தனக்கு ஒரு வேலை இருப்பதால் கனிக்கு வீட்டில் இருந்து மகிழுந்தை வர வைத்துள்ளேன் அதில் சென்றுவிடு என்று செய்தி அனுப்ப,

“சரி” என்று பதில் அனுப்பியவளுக்கு உள்ளுக்குள் சிறிது ஏமாற்றம் ஜனித்தது‌.

வீட்டிற்கு சென்று உடை மாற்றி மாமியாருடன் அளவளாவி இரவு உணவை சமைத்த பிறகுமே அவன் வரவில்லை.

எட்டு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தான்.

கணவனை கண்டதும் முகம் பூவாய் மலர்ந்தது.

கணவன் படியேறி மாடிக்கு செல்வதை கண்டவள்,

“வந்திட்
றேன்த்தை” என்றவள் அவன் பின்னோடு அறைக்கு சென்றாள்.

பார்த்தீபன் அறைக்குள் நுழைந்தும் தானும் சென்றவள் அடுத்த கணமே அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.

மனையாளின் இன்ப தாக்குதலை எதிர்பாராதவன் திகைத்து, “கனி” என்றிட,

“ஹ்ம்ம்” என்றவள் அவனை மேலும் இறுக்கியணைத்து,

“தாங்க் யூ சோ மச்” என்றவள் நிமிர்ந்து அவனது கன்னத்தில் தனது இதழை பதித்தாள்…


 
Well-known member
Messages
377
Reaction score
262
Points
63
Parthi oda surprise nijamavae super aval oda kanavu ah nijamaki kuduthu irukan
 
Top