• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 24

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 24



அமீத் கூறியதை கேட்டு அக்ஷி முழுவதுமாக உடைந்தே போனாள். தன்னை திருமணம் செய்திருக்கா விட்டால் அவனாவது நிம்மதியாக இருந்திருப்பான் என்று வந்து மோதி செல்லும் எண்ண அலைகளை கட்டுப்படுத்த இயலாது கண்ணீர் பிரவாகமாக பொங்கி பெருகியது. "நான் அவரை பார்க்கணும் அமீத்ண்ணா, ஒரே ஒரு முறை ப்ளீஸ்" என்று நீரோடு யாசித்தவளை மறுக்க ஆடவனுக்கு மனதில்லை. தலையை கோதி தன்னை சமன் செய்தவன் சில நிமிட அமைதிக்கு பிறகு, 'போகலாம்' என்ற ரீதியில் எழுந்து கொள்ள மகனை கைகளில் அள்ளிக் கொண்டவள் அவனோடு விரைந்தாள்.


மகிழுந்தை ஜோஷ்வா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி செலுத்தியவன் செல்லும் வழியிலே யாருக்கோ அழைத்து நண்பனின் இருப்பை உறுதி செய்து கொண்டான். பதினைந்து நிமிட பயணங்களில் ஜோஷ் குடியிருப்பில் மகிழுந்தை நிறுத்தி, "தேர்ட் ப்ளோர், டோர் நம்பர் பிப்டின் சி" என்று வீட்டு விலாசத்தை கூறியவன் மகிழுந்தை திருப்பிக் கொண்டு பறந்து விட்டான்.


மகனோடு மின்தூக்கியில் ஏறிக் கொண்டவளுக்கு இதுவரையில் உடன் வந்த தைரியம் ஏதோ கரைந்து போனது போல் உணர மனதோ நிலைகொள்ளாமல் அலைப்புற்றது. அவனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற எண்ணமே பாவையின் கால்களை தளர்ந்து துவள செய்தாலும் திரட்டிக் கொண்ட தைரியத்தொடு அழைப்புமணியை அடித்து காத்திருக்க சில நிமிடங்களில் வந்து கதவை திறந்தான். விழிகள் அதிர்ச்சியோடு விரிந்தது, 'உன்னை எதிர்பார்க்கவில்லை' என்பதாய். அக்ஷியிடமிருந்த பார்வை அவளது மார்பில் தலை சாய்த்தப்படி ஓர விழிகளால் தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மகனிடம் தாவியது. நன்றாக பற்கள் தெரியும் படி புன்னகைத்தான் ஆடவனை கண்டு. பின்பு மீண்டும் முகத்தை அவளது மார்பில் மறைத்துக் கொண்டு தலையை லேசாக திருப்பி அவனை பார்த்து விழிகளை சிமிட்ட, சட்டென்று கனமேறிக் கொண்டது பெற்றவர்களின் மனது அச்சிட்டின் செய்கையில். ஜோஷின் தொண்டை குழி ஏறி இறங்கியது தவிப்பான பார்வையோடு. அக்ஷி எதுவுமே பேசவில்லை அமைதியாய் அவனை விலக்கி உள்ளே நுழைந்து ஷோபாவில் கண் மூடி அமர்ந்து விட்டாள் மகனை அருகில் அமர வைத்து. செல்பவளையே இயலாமையோடு பார்த்து நின்றிருந்தவன் கதவை பூட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.


அக்ஷி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க ஹர்ஷித்தோ இருக்கையிலிருந்து மெதுவாக கீழிறங்கி அந்த இடத்தை வட்டமடித்து கைக்கெட்டிய பொருட்களை பிடித்து இழுத்து இதழ் பிதுக்கியப்படி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். மகனின் செயலில் புன்னகை உதித்தாலும் அக்ஷியை காணும் பொழுது அப்படியொரு தவிப்பு மனதில். இமைக்க மறந்து பார்த்து நின்றான் பாவையை கலங்கிய விழிகளுடன். முழுவதுமாகவே மாறி இருந்தாள் தலை முதல் கால் வரை. அன்று விமானநிலையத்தில் கண்டதை விட லேசாக கருத்து கன்னமெல்லாம் வற்றி போயிருந்தது.

பெருமூச்செடுத்து தன்னை சமன் செய்தவன் தலையை உலுக்கி விட்டு தேக்கிய தைரியத்தோடு, "அக்ஷி" என அழைத்தான் வெளி வராத சின்னக்குரலில். விழி மலர்த்தி நிமிர்ந்து பார்த்தாள் ஆடவனின் அழைப்பு செவியை தீண்டி உடல் முழுவதும் மெதுவான அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அந்த விழிகளில் கோபமா அழுகையா இயலாமையா என பிரித்தறிய முடியாத பாவம், இதழ் கடித்தாள் கண்ணீரை உள்ளிழுத்தப்படி.


அந்த பார்வையில் ஜோஷின் கால்களோடு இணைந்து மனமும் தளர்ந்து தொய்ந்து போக முனைய இரண்டெட்டில் அவளின் அருகில் போய் நின்றான் திணறலோடு, அவளை சமாதானம் செய்யும் பொருட்டு. யோசிக்காது சட்டென்று அவனை இடையோடு கட்டிக் கொண்டவள் அப்படியொரு அழுகை அழுது தீர்த்தாள் பெருங்குரலெடுத்து மூச்சு வாங்கியபடி அவ்விடமே அலறும்படி.


"ப்ச்..அக்ஷி..அக்ஷிம்மா, ஏய் அழாத டி" என்றவனின் குரலில் வழிந்தோடிய தவிப்பும் துடிப்பும் சிறிது கூட பெண்ணை அசைக்கவில்லை. அழுது கரைந்தாள் இத்தனை நாள் ஏக்கங்களையும் வலிகளையும் அப்பொழுதே அந்த நொடியே தீர்த்துக் கொள்ளும் பொருட்டு. அழுகை அதிகமாகியதன் பொருட்டு மூச்சு வாங்கியது ஸ்பரிசிக்க இயலாது வெகுவாக திணறினாள். பதறி அவளின் முதுகை நீவி, "அக்ஷி..." என்று அதட்டுதலோடு ஆசுவாசம் செய்ய முயன்றான் அவளை மேலும் தன்னுடன் இறுக்கியபடி.


தூரத்திலிருந்து அவர்களையே பார்த்திருந்த ஹர்ஷித் அன்னையின் செய்கையில் ஏதோ புரிந்தவனாக எழுந்து வந்து அவளின் புடவையை பிடித்து இழுக்க ஜோஷ் மகனை உணர்ந்து கைகளில் அள்ளிக் கொண்டான். வெகு நேரம் பிடித்தது அக்ஷி தேறுவதற்கு. தேம்பிக் கொண்டே இருந்தவளை சமாளிக்கும் வழியறியாது ஜோஷ் ஆயாசமாக பார்த்தப்படி அருகில் அமர்ந்திருந்தான்.


"எங்கப்பா பண்ணதுக்கு என்னை ஏன் விட்டீங்க ஜோஷ்? நான் விரும்பி நவீன் மாமாவை கல்யாணம் பண்ணிருப்பேன் நினைக்கிறீங்களா நீங்க?" என்று கேட்பதற்குள் தடுமாறி திணறினாள்.


"ப்ச்...அக்ஷி, பேசாத. கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்று ஜோஷ் அவளின் நிலையை கணடு கைகளை ஆதரவாக தட்டிக் கொடுக்க மறுத்து தலை அசைத்தவள், 'பதில் வேணும்' என்ற ரீதியில் அவனை பார்த்திருந்தாள் விழிகளில் கலவரத்தோடு.


தலையை கோதிக் கொண்டவன் அமைதியாய் அவளை மார்பில் சாய்த்துக் கொள்ள இமையோரம் தேங்கி நின்ற நீர் துளிகள் கீழ் நோக்கி வழிய அப்படியே விழிகளை மூடிக் கொண்டாள். அதற்கு பின் இருவருக்கும் பேச்சு இருந்திருக்கவில்லை. அக்ஷி ஏதோ தோன்றியவளாக அப்படியே அங்கேயே சுருண்டு படுத்துக் கொண்டாள், "அக்ஷி உள்ள போய் பெட்ல்ல படு, கீழ படுக்காத" என்ற ஜோஷின் வார்த்தைகளை கண்டு கொள்ளாது. ஜோஷூம் அவளை விட்டு அசையவே இல்லை, அருகிலே சம்மனமிட்டு அமர்ந்திருந்தான் சுவற்றில் சாய்ந்தபடி. இடையில் ஹர்ஷித் வேறு உணவுக்காக அழ துவங்க அடுப்பறை நுழைந்து பாலைக் காய்ச்சி மகனுக்கு கொடுத்து அக்ஷியை எழுப்ப முயன்றான், "எந்திரிச்சு சாப்பிட்டு படு அக்ஷி" என்பதாய். பெண் அசையவே இல்லை, ஆனால் உறங்கவும் இல்லை என நன்றாகவே தெரிகிறது. ஜோஷ் எதுவும் செய்ய இயலாதவனாக ஆற்றாமையில் மீண்டும் அவளருகிலே மடங்கி அமர்ந்து கொண்டான்.



சுவற்றில் சாய்ந்து கால் நீட்டிய படியே உறங்கி போயிருந்த ஜோஷ் உறக்கம் கலைய, காலில் ஏதோ அழுத்துவது போல் தோன்றியது. ஒருபக்க தொடையில் அக்ஷி தலை வைத்து படுத்து உறங்கிக் கொண்டிருக்க அவளை பார்த்து அதே போல் ஹர்ஷித்தும் மறு பக்கம் படுத்திருந்தான். கால் வலித்தாலும் அமைதியாய் இதழை நிரப்பிக் கொண்ட புன்னகையோடு விழியசைக்காது பார்த்து அமர்ந்திருந்தான். முன்பு நடந்ததெல்லாம் ஏதோ முன் ஜென்மம் போல் மாய பிம்பம் எழ அந்த நிமிடத்தையும் அதன் ஏகாந்தத்தையும் மகன் மனைவியோடு அப்படியே இழுத்து பிடித்து வைத்துக் கொள்ள ஆடவனின் மனது வெகுவாக பிரயத்தனப்பட்டது.


தேங்கிய ஏக்கங்களோடு அப்படியே விழி மூடி மீண்டும் தலையை சுவற்றில் சாய்த்துக் கொள்ள சற்று நேரத்தில் அக்ஷி எழுந்து அமர்ந்து விட்டாள். அரவத்தில் விழி திறந்த ஜோஷ் நேரத்தை பார்த்தப்படி, "நீ இன்னும் சாப்பிடலை" என்பதை நினைவுப்படுத்தி, "பேஷ் வாஷ் பண்ணிட்டு வா" என்றிட மறுத்து பேசாது எழுந்து அறைக்குள் இருந்த ஓய்வறை நுழைந்து கொண்டாள். டேபிளில் இருந்த அலைபேசியை எட்டி எடுத்து இருவருக்கும் உணவு ஆர்டர் செய்தவன் மகனை கைகளில் அள்ளிச் சென்று படுக்கையில் கிடத்தியிருந்தான்.


அக்ஷி முகம் கழுவி உணவு மேஜையில் அமர்ந்து டேபிளில் தலை சாய்த்துக் கொண்டாள். முன்பிருந்ததை விட மனது லேசாக இளகி கனம் குறைந்திருந்தது ஆனால் அதன் அலைப்புறுதல் நின்றபாடில்லை. ஏதேதோ எண்ணியவளாக விழி மூடியிருக்க ஜோஷ் ஓய்வறை சென்று வெளியில் வர அழைப்புமணி சரியாக ஒலித்தது. தலையை தூக்கி பார்த்து எழ முனைந்த அக்ஷி ஜோஷை கண்டு அப்படியே அமர்ந்து கொள்ள கதவை திறந்து உணவை வாங்கி வந்து தட்டிலிட்டு அவளுக்கு கொடுத்தவன் தனக்கும் உணவுடன் அமர்ந்து கொண்டான். எவ்வித பேச்சுக்களுமின்றி உணவு உள்ளே இறங்கியது இருவருக்கும்!



அவளின் தட்டையும் தானே அப்புறப்படுத்தியவன் நிதானமாக அவளின் எதிரில் அமர்ந்தான். பேசுவதற்கும், விளக்குவதற்கும் யாசிப்பதற்கும் ஆயிரமாயிரம் விஷயங்கள் இடையில் நீந்தினாலும் இருவருக்குமே வாய் திறக்கும் எண்ணமில்லை. எங்கே உடைந்து போய் விடுவோமோ என்ற அதீத பயம், ஏற்கனவே விரிசலோடு தான் அமர்ந்திருந்தனர். அக்ஷிக்கு சூழல் அதிக கனமாக தோன்ற ஏனோ கண்ணீர் பொங்கி பெருகும் போல் இருக்க தன்னை இயல்பாய் காட்டிக் கொள்ள வெகு பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. தங்களை இப்படியொரு நிலையில் நிறுத்தி விட்ட காலத்தின் மீதும் தகப்பன் மீதும் அப்படியொரு கோபம் வியாபித்திருந்தது. எத்தனை எத்தனை வண்ணமயமான கனவுகள், சிதைந்து போனதென்ன காலத்தின் மாயமா...? மீண்டும் புதுப்பிக்க இயலுமா? சாத்தியமா? என்றெல்லாம் மனது அலைப்புற நேரத்தை பார்த்து அவள் வந்து வெகு நேரமாகியதை உணர்ந்து குரலை செருமிய ஜோஷ், "வீட்டுக்கு கூப்பிட்டு பேசு அக்ஷி, தேட போறாங்க உன்னை" என்று அவளின் அலைபேசியை நகர்த்தி வைத்தான். அடைத்தது தான் தொண்டை ஆனால் என்ன செய்ய பேசியே ஆக வேண்டிய கட்டாயம்.


எச்சிலை விழுங்கி சலிப்புடன் நெற்றியை தேய்த்தவள், "ப்ச்...எங்களை யார் தேடுவா? நானும் என் பையனும் தான் அனாதையாச்சே" என்றாள் ஒரு வித விரக்தி புன்னகையை இதழில் தவழ விட்டு. ஆம்,அழ வேண்டும் ஏதாவது உரிமையான இடத்தில் சாய்ந்து இறுக பற்றி எல்லாவற்றறையும் கூறி காலையில் அழுததை விட சத்தமாக கதறி என்று மனது ஆரவாரமாய் பொங்கியது. அதை தவிர தன் கனத்தை இறக்கி வைக்க வேறு வழியே இல்லையென பெண்ணினின் மனது அடித்து கூறியது.


எத்தனை முறை தான் அந்த வார்த்தை கூறும் பொழுது கடிந்து சண்டையிட்டு இனி பேசக் கூடாதென்று வாக்குமூலம் வாங்கி பெண்ணவள் செய்த ரகளைகள் என்ன கொஞ்சமா..? இப்பொழுது அவளின் வாயிலிருந்தே அப்படியொரு வார்த்தை, கேட்ட நொடி நடுங்கினான், வலியை விழிகளில் தேக்கி, 'இப்படி பேசாதே!' என யாசிப்போடு பெண்ணை பார்த்தான். இருபுறமும் தலையசைத்து பின்னால் நன்றாக சாய்ந்தமர்ந்தவள் ஆடவனை தான் கிரகிக்க முயன்று கொண்டிருந்தாள். ஜோஷிற்கு தயக்கம், அடுத்து என்ன பேசுவது, கேட்பது என. வலுவான மௌனங்கள் சில நிமிடங்கள் சூழ்ந்து கொள்ள, "எங்கப்பாவால ரொம்பவே கஷ்டப்பட்டுடீங்க, அதுக்கு நானும் ஒரு காரணம், ரியலி சாரி பார் எவ்ரிதிங்க், நான் உங்க லைப்ல்ல வரலைன்னா நீங்களாவது நிம்மதியா இருந்திருப்பீங்க" என்றவளுக்கு கண்ணீர் தழும்ப ஜோஷின் கரங்கள் மேலெழுந்து நீண்டது அதை துடைப்பதற்கு, 'பேசாதே' என கண்டன பார்வையோடு.


பெண்ணின் கன்னத்தை மெதுவாக வருடி நீர் துளிகளை துடைத்த ஆடவன் விரல்கள் கொடுத்த ஸ்பரிசத்தில் அப்படியே பூமியினுள் புதைந்து விட வேண்டுமென பாவையின் மனது விரும்பியது. இருவரின் போராட்டத்தை கலைக்கும் விதமாக ஹர்ஷித் எழுந்து சிணுங்கலோடு கண்களை கசக்கியபடி அன்னையை தேடி வந்திருந்தான்.


ஜோஷை விட்டு மகனின் புறம் திரும்பியவள் தூக்கி அணைத்துக் கொண்டு அவனை கொஞ்சியபடி உணவிற்காக அடுப்பறை நுழைய முனைய, "நீ இரு நான் எடுத்திட்டு வரேன் அக்ஷி" என உள்ளே நுழைந்து தட்டில் உணவை போட்டு கொண்டு வந்து கொடுத்து மீண்டும் அடுப்பறை நுழைந்து குளிர்சாதனபெட்டியில் இருந்து பாலை எடுத்து காய்ச்ச துவங்கியிருந்தான் ஜோஷ்வா.


அங்கு நின்றிருந்தவன் பார்வை முழுவதும் தூரத்தில் அன்னையை கொஞ்சியபடி புன்னகையுடன் உணவு உண்டு கொண்டிருந்த மகனின் மீது தான். அவனை டேபிளின் மேல் அமர வைத்து நாற்காலியில் அமர்ந்தபடி அக்ஷி உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். ஹர்ஷித்தோ அவளின் கன்னம் பிடித்து தன்னை பார்க்க செய்து பிறகு முத்தம் கொடுத்து, கையசைத்து சைகை செய்து விழிகளை உருட்டி அவளின் பேச்சுக்கு மறுத்து இருபுறமும் தலையசைத்து, பாவையின் கழுத்தில் முகம் தேய்த்து என்று ஒவ்வொரு செய்கை மூலமாகவும் ஜோஷை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தான். அப்படியே அவர்கள் இருவருடன் ஒன்றி போக மனது பிரயத்தப்பட்டாலும் இழுத்து பிடித்த பொறுமையோடு வேடிக்கை பார்த்து நின்றிருந்தவன் பாலை காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆற வைத்து அவர்களருகில் வர ஹர்ஷித் அவனை பார்த்து புன்னகைத்தான் அக்ஷியின் மடியிலிருந்தபடி விழிகளை உருட்டி.



ஜோஷ் கொடுத்த பால் குவளையை லாவகமாக வாங்கி கொண்ட ஹர்ஷித் பருக துவங்க அக்ஷிக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. 'பார்த்துக் கொள்' என்று சைகையில் கூறி அலைபேசியுடன் அறைக்குள் நுழைய ஜோஷ் மகனருகில் நகர்ந்து அமர்ந்து கொண்டான். குவளையை காலி செய்தவனின் சிகையை ஜோஷின் கரங்கள் மேலெழுந்து வருடியது உறைந்த புன்னகையுடன்.





தொடரும்...


சாரி மக்களே, லேட்டாகிடுச்சு, இடையில் சில பல வேலைகள்...அடுத்த அப்டேட் சீக்கிரமே கொடுக்க முயற்சி செய்றேன். விமர்சனம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி❤️❤️...

 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Josh ku innum ashi harshith oda nilamai theriyala pola naveen ashi ah parthu ka nu.sollurathu ah vida harshu ah va kapatha than avan ashi ah marriage pannan thu varaikkum ippo eppo theriyumo azhaga irundha ivanga vazhkkai ashi oda appa ah va la than ah ipadi ava aanadhai nu sollura alavuku kondu vandhathu
 
Last edited:
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Josh ku athuyum theriyala avan aaskhi naveen pathi sikirama avanuku theiryanum🥺 apathaan aaskhi josh haristh santhosama irupaga 😊josh aaskhi pavam thaa avaga appa ku iruku oru nall 😒😒😒
 
Top