• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 23

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 23



விழிகளில் உயிரை தேக்கி நின்ற அக்ஷிதா அதிர்ச்சியிலிருந்து வெளி வர இயலாது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே பின்னால் சரிந்து மூர்ச்சையாக முனைய சட்டென்று சுதாரித்த ஜோஷ்வா எழுந்து அவளை கீழே விழ விடாது பிடித்திருந்தான் இடையோடு சேர்த்தணைத்து. அமீத் டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளிக்க பெண் அசைவதாக தெரியவில்லை. ஜோஷ்வாவிற்கு பதற்றத்தில் எதுவுமே தோன்றவில்லை அதுவும் ஹர்ஷித்தைக் கண்டு அதிர்ந்து கலங்கும் மனதை அடக்கும் வழி தெரியவில்லை. குழந்தை என்று தெரிந்த பிறகு எத்தனை கொண்டாடி தீர்த்தார்கள். "ம்ம்...நான் தான் யாருமில்லாம எதுவுமில்லாம அனாதையா வளர்ந்துட்டேன் அக்ஷி. எனக்கு எப்பயுமே சாய்ஸ் இருந்தது இல்ல, கிடைக்கிறதை வைச்சு வாழ்ந்தேன். எது தேவைனாலும் அப்படியொரு தயக்கம் வரும், முதல்ல யார்கிட்ட கேட்கிறதுன்னே தெரியாது. ப்ச், வலிக்கிறதை கூட யார்கிட்ட சொல்றதுன்னே தெரியாது...ஆனா என் பிள்ளைக்கு, அவங்க என்ன கேட்டாலும் கிடைக்கணும், அவங்களுக்கு பிடிச்ச ஸ்கூல், காலேஜ் ஏன் ட்ரெஸ், ஃபுட் எல்லாமே. நான் எல்லாமே செய்து தருவேன் கண்டிப்பா" என்று அக்ஷியின் வயிற்றில் கை வைத்து வருடியபடி ஆர்பரித்தவனை இமைக்க மறந்து பார்த்திருப்பவள் மார்போடு அணைத்துக் கொள்வாள். ஆம், யாருமில்லாது எதுவுமில்லாது இவ்வளவு தூரம் வளர்ந்தது ஒன்றும் அத்தனை சுலபமில்லையே!.. இது தான் பெண் வீழ்ந்த இடம், அவன் இயல்பிலே ஒரு இளகிய மனம் கொண்டவன். அதிர்ந்து கூட பேச மாட்டான். அக்ஷிதா சண்டையிட்டால் கூட அத்தனை பொறுமையாக அவளை கையாள்வான் புன்னகை மாறாது.


எத்தனை எத்தனை கனவுகள் ஆனால் அப்பிள்ளையை கையில் தூக்க கூட தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும் பொழுது நெஞ்சே வெடித்து விடுமளவிற்கு வலித்தது. அதிலும் அக்ஷியை அவன், "ம்மா" என்று விளித்த பின்பே ஜோஷின் விழிகள் ஆழமாக டேபிளில் அமர்ந்திருந்தவன் மேல் படிந்தது. சுருளான அடர்ந்த மயிரிழைகள் முதல் முகம், மூக்கு என்று அவனையே நகலெடுத்திருப்பான் போலும். இதழ் துடித்தது, தன் பிள்ளையையே யாரோ மூன்றாவது மனிதர் போல தெரிந்து கொள்ள!


"ஜோஷ்.." என்று அமீத் அவனை உலுக்க உணர்வற்ற பார்வை பார்த்தவன் உண்மையிலுமே சுயநினைவிலே இல்லை. தொண்டைக்குழி ஏறி இறங்க தன் முன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த அக்ஷியை தான் வெறித்திருந்தது ஆடவன் விழிகள். 'இது சரி வராது' என உணர்ந்த அமீத் சட்டென்று விரைந்து விமானநிலையத்தில் பணிபுரியும் தங்களின் நண்பனை அழைத்து அக்ஷியை அங்கிருந்த மருத்துவ உதவி அறைக்கு மாற்றியிருந்தான். ஜோஷ், அவன் இருந்த நிலையில் எதையும் சுதாரிக்கவோ உணரவோ முடியவில்லை. அமைதியாய் ஹர்ஷித்தை கையில் ஏந்தி வெளியில் அமர்ந்து கொண்ட ஜோஷ் விரல்களோ நடுங்கி சிலிர்த்தது மகனின் ஸ்பரிசத்தில். அமீத் தான் அவன் நண்பனுடன் அக்ஷியை பரிசோதித்துக் கொண்டிருந்தான். ஆம், அவர்களுடைய தோழனொருவன் விமானநிலைய மருத்துவமனையில் பணிபுரிய அவனை காண்பதற்காக தான் வந்திருந்தனர் இருவரும்.


சிறிது நேரம் அமைதியாய் இருந்த ஹர்ஷித்தோ அன்னையை காணாது வீறிட துவங்க ஜோஷின் நிலை சற்று பரிதாபத்துக்குரியது தான். எழுந்து நின்று வேடிக்கை காட்டினான். 'ஏதாவது வேண்டுமா?' என்று கடையை நோக்கி நகர்ந்தான் சிகையை வருடியபடி. ஆனால் மகனோ உதடு பிதுக்கி, "ம்மா" என்று அழுகையோடு கூறினானே தவிர ஜோஷின் எவ்வித சமாதானங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியே அக்ஷியை போல். அவளை சமாளிப்பதற்குள் தலையால் தண்ணீயே குடித்து விடுவான். படுத்தி எடுப்பாள், அப்படி தான் மகனும் செய்து கொண்டிருக்க ஜோஷிற்கோ அவனையும் அறியாது கடந்தகால நினைவுகளின் பிம்பங்களால் கீற்று புன்னகை இதழை நிறைந்தது. விழி விரித்து தன் கையிலிருந்த சிட்டின் பாவனைகளையும் செய்கைகளையும் அத்தனை ஆர்பரிப்போடு அவதானித்துக் கொண்டிருந்தான்.



அப்பிஞ்சின் அழுகை மேலும் அதிகமாக வேறு வழியின்றி அறைக்குள் நுழைய, "இன்னும் கொஞ்ச நேரத்தில கான்சியஸ் வந்திடும்" என்ற அவர்களின் நண்பன் வெளியேற முனைய அமீத்தும் அவனோடு பேசியபடி அறையை விட்டு நகர்ந்திருந்தான். ஹர்ஷித் ஜோஷின் தாடையை பிடித்து இழுத்து தன் பிஞ்சு கரங்களினால் அக்ஷியை காட்டினான், 'அவளிடம் என்னை இறக்கி விடு' என்பதாய் கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனையில். அழுகை நின்றிருந்தது அன்னையை கண்டவுடன். ஜோஷ் அமைதியாய் படுக்கையில் ஹர்ஷித்தை அமர வைக்க அக்ஷியின் கன்னம் தட்டினான், "ம்மா.." என்றழைத்து. அவளின் இமைகளை பிடித்து மேலே இழுத்தான், 'எழுந்து கொள்' என உலுக்கி. இரவில் அவன் விளையாடும் பொழுது இப்படி தான் தூங்கி வழிவாள், ஹர்ஷித்தோ விளையாட்டை கை விட்டு அவளை சுரண்டி எழுந்து அமருமாறு கூறுவான் இமைகளை மேலிழுத்து கன்னங்களில் பற்கள் பட கடித்து என. "உன்னோட அராஜகத்துக்கு அளவே இல்லாம போய்ட்டு இருக்குடா, மனுசிய தூங்க விடுறீயா? நீ நான் பேய் மாதிரி நைட் முழுசும் வீட்டை சுத்துறனா நானுமா?" என்று அலுத்து சலித்து முறைப்போடு கூறுவளை உறுத்து விழிப்பான். தன்னை தான் ஏதோ திட்டுகிறாள் என புரியும் ஆனால் பற்கள் தெரிய தலையை சாய்த்து புன்னகைப்பான் கண் சிமிட்டியபடி. "ப்பா..இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல" என்று அவனின் கன்னத்தில் தட்டுபவள் மீண்டும் படுத்துக் கொண்டால் அவள் மீது ஏறி அமர்ந்து கொள்வான்.


அவன் அழைத்தும் அக்ஷ எழாமல் இருக்க அருகில் நின்றிருந்தவனை பாவமாய் பார்த்த ஹர்ஷித் உதடு பிதுக்கினான் அடுத்த அழுகைக்கு தயாராகி விட்டதாக அறிக்கை விட்டு. ஜோஷிற்கு அப்பிஞ்சின் பாவனையில் கரைந்து உருகிற்று மனது. உணர்வுகள் மேலெழும்பி பிரவாகமாகி பிழம்புகளாக பொங்க முனைய கட்டுப்படுத்த வழியறியாது தலையை கோதிக் கொண்டான் அடைக்க முயன்ற தொண்டையை செருமி சரி செய்தவாறு. யாரோ கழுத்தை அழுத்தி நெரிப்பது போலொரு உணர்வுகளை அச்சூழல் கொடுக்க பிடறியை வருடிக் கொண்டவன் மூச்சுக்கள் ஆழந்து விட்டு தன்னை சமன் செய்ய விழைந்தான் மனைவியையும் மகனையும் ஆழந்து பார்த்தவாறே.


லேசாக விசும்பியவன் அப்படியே அன்னையை கழுத்தைக் கட்டிக் கொண்டு மார்பில் தலை சாய்ந்து படுத்துக் கொண்டு ஜோஷை ஓர விழிகளால் நோட்டமிட அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை ஆடவனால். கலங்கும் கண்களை அழுத்தி துடைத்தப்படி வெளியேறியவன், "ஜோஷ்.." என்ற அமீத்தின் அழைப்பைக் கூட பொருட்படுத்தாது காரை கிளம்பிக் கொண்டு பறந்து விட்டான். மிகமோசமாக தோற்று விட்ட உணர்வு, எதிலிருந்து தப்பித்து விடுபட்டது போல் ஓடினான். மனமோ, 'ஓஓஓ..' வென சத்தமாக கத்தி கதறவே பிரயத்தனப்பட்டது. 'அப்படி என்ன தவறு செய்து விட்டேன். பெற்றவர்கள் இல்லாமல் வளர்ந்தது என் தவறா? அனாதை என்றால் குடும்பமாக வாழ ஆசைப்பட தகுதி இல்லையா? இல்லை அவளின் மதத்தில் பிறக்காது போனது என்னுடைய குற்றமா? இருவரின் உடலிலும் ஓடும் குருதியின் நிறமென்னவோ செம்மை தானே!' என்றெல்லாம் மனது அதீத ஆற்றாமையில் குமுறிக் கொண்டிருந்தது. எதுவுமில்லை என்ற இடத்தை எல்லாவுமாக நிரப்பியவள் அக்ஷி, அவள் வந்த பின்பே கருமையான உலகம் வண்ணமயமானது போல் உணர்ந்திருக்கிறான். இதுவரை, 'உனக்கு என்ன வேண்டும்?' என்று யாருமே கேட்டதில்லை. அவள் கேட்வில்லை அவன் பார்வையை உணர்ந்தே பார்த்து பார்த்து எல்லாமே வாங்கி கொடுப்பாள். விழிகளில் அவனின் வலிகளை உணர்ந்து ஆறுதலாக அணைத்து மடி சாய்த்து சமாதானம் கூறுவாள். ஆம், அவனுக்காக யாருமே இத்தனை சிரத்தை எடுத்ததில்லை. அமீத் செய்வான் தோழனாக ஆனால் அக்ஷி வேறல்லவா..? அவளிடம் பகிர இயலும் உணர்வுகளை வேறு யாரிடமும் காட்ட விரும்ப மாட்டான். அவனின் விருப்பமான இடம் பெண்ணவளின் மடி, அதில் இதமாய் தலைசாயந்து கொள்ள பாவையின் கரங்கள் மேலெழுந்து ஆதுரமாய் வருடும். அன்னையோ தந்தையோ இல்லை அரவணைக்கவோ, சிகை கோதவோ தட்டிக் கொடுத்து பாராட்டவோ! பெண் செய்தாள், அவனை அரவணைத்து அவனின் வெற்றியை கொண்டாடி தளரும் கணங்களில் தோள் தட்டி என. அவன் இழந்த சிறு சிறு ஏக்கங்களை இரண்டு வருடங்களில் நிரப்ப முயற்சி செய்திருக்கிறாள் தன்னால் முடிந்தளவில். யாருமில்லாது இருந்ததை விட அக்ஷி தனக்கில்லை எனும் பொழுது அவனின் அடைந்த தவிப்பை வடிக்க வார்த்தைகள் இல்லவே இல்லை தான்.



ஜோஷூக்கு அழைத்து ஓய்ந்து போய் அறைக்குள் நுழைந்த அமீத் கண்டது என்னவோ தாயின் கழுத்தைக் கட்டியபடி அழுது கொண்டிருந்த ஹர்ஷித்தை தான். அவனை சமாதானம் செய்யும் பொருட்டு தூக்க முயல ஹர்ஷித்தின் குரலோ மேலும் உயர்ந்தது. 'ப்ச்..' என்று சலிப்பாக நெற்றியை தேய்த்துக் கொண்ட அமீத்தோ அவ்வறையின் மூலையில் கிடந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்து விட்டான். ஹர்ஷித்தின் அழுகுரலோ படிப்படியாக தேய அமீத் மெதுவாக அவனை அவதானித்தப்படி தான் இருந்தான். அக்ஷி விழித்தெழ மேலும் அரை மணி நேரம் ஆகிற்று. விழி மலர்த்தி எழ முயன்றவள் மார்பிலிருந்த மகனை உணர்ந்து அவனை தூக்கி அமர வைத்து தானும் எழுந்து அமர்ந்தாள். அன்னை எழுந்து விட்ட ஆனந்தத்தில் கைத்தட்டி புன்னகைத்த ஹர்ஷித்தோ அவளின் கழுத்தைக் கட்டிக் கொள்ள தாங்கள் இருக்குமிடம் அறிய அறையை துலாவிய பாவையின் விழிகளில் சற்று முன் பார்த்த ஜோஷின் முகமே நிழலாட அப்படியொரு அழுகை பொங்கி பெருகியது.


அவளின் அருகில் எழுந்து வந்த அமீத், "அக்ஷி ஆர் யூ ஓகே?" என்று அவளின் நலத்தை விசாரிக்க அவனை வெறித்தாளே தவிர பதில் கூறவில்லை. பெருமூச்செடுத்த அமீத், "உங்க வீட்டில யார் நம்பராவது கொடு. நான் இன்பார்ம் பண்றேன் வந்து கூட்டிட்டு போவாங்க இல்ல அட்ரெஸ் சொல்லு நான் கூட்டிட்டு போறேன்" என்றபடி நெற்றியை நீவ அவனை அப்படியொரு பார்வை பார்த்தாள் அக்ஷிதா இதழை கடித்து பிரவாகமாகும் அழுகையோடு.



அமீத்திற்கும் புரிகிறது சூழல் ஆனால் என்ன செய்ய? இவளாவது பரவாயில்லை நண்பன், அவனின் நிலை தானே மிகவும் பரிதாபமானது. எல்லாவற்றையும் உடனிருந்து பார்த்தவனாயிற்றே! ஜோஷை விட அவனின் நிலையை கண்டு அதிகமாக தவித்திருக்கிறானே!


"அக்ஷி" என்றவன் சலிப்பான பார்வையில் அவனை முறைத்தாள் சற்று தேறியவளாக. ஆம், 'எல்லாவற்றையும் செய்தது அவன். இப்பொழுது கூட எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான். எந்த தவறும் செய்யாது நான் ஏன் பயம் கொள்ள வேண்டும்?' என்ற எண்ணம் பெண்ணினுள் ஆழமாக வேரூன்றியது நொடியில்.

அவள் அசைய மாட்டாள் என உணர்ந்த அமீத் ஹர்ஷித்தை வலுக்கட்டாயமாக கைகளில் அள்ளிக் கொண்டு, "கெட் அப் அக்ஷி, கிளம்பலாம்" என்றிட, "எங்க உங்களோட ப்ரெண்ட், ஓடிட்டாரா அவ்வளவு பயமா என் மேல? நான் என்ன தப்பு பணணேன். எதுக்கு என்னை ஏமாத்திட்டு விட்டுட்டு போனார். அவருக்காக என்னோட அப்பா,அம்மா, அண்ணா எல்லாத்தையுமே விட்டு ஓடி வந்தேனே, நடுத்தெருவுல நிறுத்தி செருப்பால அடிச்சிட்டீங்க, நீங்களும் அவரோட கூட்டு தானா? துரோகிங்களா" என்று ஆக்ரோஷமாக கத்தி அவனது சட்டையை இழுத்து பிடித்து விட்டாள் கோபத்தோடு.


"ப்ச்...அக்ஷி" என்றவன் அவளிடமிருந்து சட்டை காலரை விடுவிக்க முயல பெண்ணோ அத்தனை இறுக்கமாக பிடித்து உலுக்கினாள், "அவரை வரச் சொல்லுங்க" எனும் விதமாக. நடந்த தள்ளுமுள்ளில் ஹர்ஷித்தோ சத்தமாக அழ துவங்க அவனை படுக்கையில் அமர வைத்த அமீத் பெருங்கோபத்தோடு அவளின் கையை தட்டி விட்டு, "நீ கேள்வி கேட்க வேண்டியது ஜோஷை இல்ல, போய் உங்கப்பன் சட்டையை பிடி. அவனெல்லாம் ஒரு மனுசனா? ப்ளடி.." என்று சில ஆங்கில கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்திய அமீத் அருகிலிருந்த இருக்கையை கோபத்தோடு எட்டி உதைத்து தலையை கோதி தன்னை நிதானப்படுத்தினான்.



"நீ வந்தா உன்னை உங்க வீட்டில ட்ராப் பண்றேன். இல்லைன்னா உன் இஷ்டம் என்னமோ பண்ணிக்கோ" என்றவன் வெளியேற முனைய அக்ஷி எழுந்து அவனின் வழியை மறைத்து நின்று விட்டாள்.


"தள்ளு அக்ஷி" என்றவன் அவளின் கையை பிடித்து தள்ளி நிறுத்த முயல அவனின் முழங்கையை இறுக பிடித்துக் கொண்டவள், "என்ன நடந்தது அமீத்ண்ணா, நீ உண்மையிலே என்னை தங்கச்சியா நினைச்சா சொல்லு ப்ளீஸ்" என்று தவிப்போடு இதழ் கடிக்க கையை உதறி, 'மாட்டேன்' என இருபுறமும் தலையசைத்தவன் ஓரடி முன்னோக்கி நகர அக்ஷியோ அப்படியே மடங்கி அமர்ந்து முகத்தை மூடி கதற துவங்கியிருந்தாள்.


அவளின் அந்த அழுகுரல் அமீத்தை தாக்கி அடுத்த அடி நகர விடாது தடுத்தது. அவனுக்கு அக்ஷியை நிறையவே பிடிக்கும். அத்தனை அண்ணா போட்டு பின்னால் சுற்றி வம்பிலுப்பாள். எப்பொழுதும் முட்டிக் கொண்டாலும் அதற்கு பின் இருவருக்குமிடையில் ஆழமான சகோதர பிணைப்பொன்று உண்டு.


பெருமூச்செடுத்து ஒற்றைக்காலில் அவளருகிலே மடங்கி அமர்ந்தவன், "அக்ஷி கெட்அப்" என கையை பிடித்து அவளை எழுப்பி படுக்கையில் அமர வைத்தான், "கண்ணை துடை முதல்ல நீ?" என்று அதட்டலிட்டு.


அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவனையே பரிதாபமாக பார்த்து அமர்ந்திருந்தாள் மகனை இறுக அணைத்து பிடித்தப்படி.


சிவக்குமார் அன்று மகளின் திருமணத்தை நிறுத்த முடியாது தோற்று விட்டாலும் அவர்களை பிரிக்க சந்தர்ப்பம் பார்த்து கழுகை போல காத்திருந்தார். அவரால் சுத்தமாக மகள் ஓடி போனதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் ஜோஷ்வாவின் வேற்று மதமும் அவருக்கு அப்படியொரு கோபத்தை துளிர்க்க செய்திருந்தது. அன்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவனின் மகிழுந்தை வழி மறைத்து இரு காவலர்கள் வலுக்கட்டாயமாக காரணம் கூறாது காவல்நிலையம் அழைத்துச் சென்றனர் அவனது அலைபேசியையும் பறித்துக் கொண்டு. கிட்ட தட்ட இரண்டு மாதங்களாக அவனை உள்ளே வைத்திருந்தவர்கள் பொய் வழக்கு பதிவு செய்து அடித்து துன்புறுத்தி உடல் முழுக்க காயத்தை ஏற்படுத்தியிருந்தனர். சிவக்குமார் பணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவன் உள்ளே இருப்பதையே யாருக்கும் தெரியாது மறைத்து விட்டிருந்தார். இறந்து போய் விடுவானோ என்று பரிதாபப்பட்ட காவலர் ஒருவர் சிவக்குமாருக்கு தகவல் கொடுக்க அமீத் வரவழைக்கப்பட்டான். குற்றுயிரும் கொலை உயிருமாய் துடித்து கொண்டிருந்தவனை காண அமீத்திற்கு பொறுக்கவே முடியவில்லை. ஆவேசத்துடன் சிவக்குமார் மீது பாய அவனை காவலர்கள் பிடித்து இழுத்துக் கொள்ள, அக்ஷியின் புறம் திரும்பவே கூடாது, அப்படி மீண்டும் அவள் வாழ்வில் குறுக்கிட்டால் அடுத்த முறை ஆளை வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டி கையெழுத்தல்லாம் வாங்கிய பின்பே அமீத்துடன் அனுப்பப்பட்டான். கைக்கால்கள் எல்லாம் அடித்தே உடைத்து விடப்பட்டிருக்க எழுந்தே நிற்க முடியாதிருந்தவனை அமீத் தனது சொந்த ஊரான தஞ்சையில் ஒரு மருத்துவமனையில் வைத்து மீட்கவே வெகு நாட்கள் தேவைப்பட்டது. கைக்கால்களை அசைக்க இயலாது படுத்த படுக்கையாக கிடந்தவனை பார்க்க பார்க்க அமீத்தால் பொறுக்க முடியவில்லை. ஆனால் அவன் முழுதாக குணமடைந்த பின் சிவக்குமாரை ஒரு வழியாக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். தினமும் அக்ஷியின் நலத்தை குறித்து சைகையிலே கேட்கும் நண்பனை சமாளிப்பதற்குள் வெகுவாகவே திணறி தான் போவான் அமீத்.


ஜோஷ் நன்றாகவே தேறி ஓரளவு எழுந்து நடக்க துவங்கியிருக்க அமீத்துடன் மல்லுக்கட்டி அக்ஷியை பார்க்க கிளம்பி விட்டான். அவனை தனியே விட மனது வராது அமீதும் உடன் சென்றான். ஆனால் அவர்கள் கண்டது என்னவோ நவீனின் மனைவியாக மணக்கோலத்தில் நின்ற அக்ஷிதாவை தான்.


"இவளை...உன்னோட வாழ்க்கையே அழிச்சிட்டு எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மனசு வந்திச்சு, ச்சை...அப்பனோட கேவலமான புத்தி தான பொண்ணுக்கும் இருக்கும். இவ உன்னை உண்மையிலே லவ் பண்ணாளா என்ன?" என்ற அமீத் சீறிக் கொண்டு அக்ஷியை நோக்கி முன்னேற விழைய நண்பன் கையை இறுத பற்றி இறைஞ்சுதலாக பார்த்த ஜோஷ், "விடு அமீத், அவளாவது நல்லா இருந்திட்டு போகட்டும். நம்ம கிளம்பலாம்" என்று கட்டாயப்படுத்தி இழுத்து சென்று விட்டான்.



உடலளவில் மெதுவாக தேறிய ஜோஷ் மனதளவில் மனைவியின் செயலால் மரித்தே போயிருந்தான். ஒரு வருடம் ஆகிற்று அவன் தன்னை மீட்டுக் கொள்ள, பழையபடி தஞ்சையிலே ஒரு மருத்துவமனையில் பணிபுரிய துவங்கியிருந்தவன் மேற்படிப்பிற்காக தேர்வெழுதி வெற்றியும் பெற்றிருந்தான். ஆக, இன்னும் நான்கே மாதத்தில் பறந்து விடுவான்.

அமீத் கூறியதை கேட்ட அக்ஷி மீண்டும் அழுகையோடு மயங்கி சரிந்தாள் அவனின் வார்த்தைகளின் வீரியத்தில்.




தொடரும்.....

 
Member
Messages
45
Reaction score
31
Points
18
Oh ohoo ipo antha main culprit aashi Avanga appa thana directah Josh indirectah aashi ithula ethir pakkama vanthu sikkunathu naveen intha sivakumarnala na naveenah thappa ninaichuta Josh aashiya purinjuko ava unoda aashi tha
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Nenachen akshi oda appa andha sivakumar than josh ah ethachum panni iruparu nu manushan ah avaru evolo azhaga plan panni irukaru ithula akshi pidivatham ah pappa ah abortion panna maten nu sollavo naveen ava vazhkkai la entry aagura nilamai vandhutuchi andha aalu panna sathi la akshi joshi mattum illa naveen yash nu.ellar oda vazhkkai yum.nasam ah poi irukum.ippo kooda yash ah pathi theriyala ah na akshi yum harshi oda naveen oda nizhal la mattumae vanzhuntu irundhu irupa ah joshi oda ninavu oda mattumae
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Paavam Josh
Ithellam akshi APPA velaya
Ellaroda feelingsayum azhagha sollirukka ma, superrrrrrrrr
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Aakshi appa nalla plan panni Josh ya epadi pannidaru☹️ josh aakshi athuyum theritathu avalum ne illa evaluyu kasta patta naveen matum varama iruthu iruthu aakshi illama poe irupa🥺🥺🥺 josh aakshi kum ellam sikirama theriyum ini aakshi avaga appa va summa vitta mataa ellaroda lifeyum epadi mathidaru 😠😠
 
Top