• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 21 இறுதி...

Administrator
Staff member
Messages
1,328
Reaction score
3,957
Points
113
தேனும் இனிப்பும் 21 இறுதி

மெய் நிலை ஊர

மெய் மெலிந்தேனே
என் இமை மீற

உயிர் நெகிழ்ந்தேனே

“யானை வருது யானை வருது வழியை விடுங்க” என்று ஜீவி கூற, “ஆமா யானை வருது பெரிய யானை வருது” என்று கத்தியபடி அதி தந்தையின் முதுகில் அமர்ந்திருந்தான்.

“யானைக்கு என்ன வேணும்” என்று ஜீவி வினவ, “யானைக்கு ஐஸ் வேணும் அப்புறம் சாக்லேட் வேணும்” என்று அடுக்கினான் அதி.

ஜீவா திகைத்து திரும்பி மகனைப் பார்த்து “எந்த ஊர்லடா யானை ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் சாப்பிட்டு இருக்கு” என்று வினா தொடுத்தான்.

“ஏன் யானை ஐஸ் கிரீம் சாக்லேட் எல்லாம் சாப்பிடாதா?” என்று அதி அப்பாவியாய் வினவ, “அதி நீ புக்ஸ்ல படிச்சது இல்லையா? யானை ஃப்ரூட்ஸ் அப்புறம் சுகர்கேன் தான் சாப்பிடும்” என்று ஜீவி விளக்கம் அளித்தாள்‌.

“ம்ஹூம் எனக்கு அதெல்லாம் தெரியாது என்னோட யானை ஐஸ்கிரீம் சாக்லேட் தான் சாப்பிடும் இப்ப அதுக்கு பசிக்குது பெரிய சாக்லேட் வேணும்” என்று அதி அடமாக கூற, அவனது பாவனையில் இருவரும் சத்தமாக சிரித்து விட்டனர்.

அவர்களது சிரிப்பில் சமையலறையில் இருந்த ஜானவி எட்டிப் பார்த்து, “சத்தம் போடாம விளையாடுங்க தம்பி தூங்குறான்” என்று அதட்ட, மூவரது பார்வையும் சற்று தள்ளி மெத்தையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த அர்னவ்வின் மீது விழுந்தது.

“அம்மா நான் சத்தம் போடலம்மா அக்காவும் அப்பாவும் தான் சத்தமா சிரிச்சாங்க” என்று அதி அவர்கள் இருவரையும் தாயிடம் போட்டுக் கொடுக்க, “அடப்பாவி” என்று வாயில் கையை வைத்து இருவரும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினர்.

அவனது கூற்றில் ஜானவி சிரிப்புடன், “எனக்கு தெரியும்டா நீ சமத்து பையன் சத்தம் போட மாட்டேன்னு. அப்பாவும் மகளும் தான் எப்ப பார்த்தாலும் சத்தம். சேட்டை பண்ணிக்கிட்டே இருப்பாங்க” என்று மகனை கொஞ்சினாள்.

“எதே சமத்து பையனா? அம்மா உங்க சமத்து பையன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னான்னு கேட்டீங்களா?” என்று ஜீவி அதிர்ந்து வினவ, “என்ன?” என்பது போல் ஜானவி பார்த்து வைத்தாள்.

“அவனோட யானை ஐஸ்கிரீம் சாக்லேட் தான் சாப்பிடுமாம் யானைக்கு பசிக்குது சாக்லேட் ஐஸ்கிரீம் குடுங்கன்னு கேட்டுட்டு இருந்தான்” என்று பதிலுக்கு தம்பியை தாயிடம் போட்டுவிட்டாள் ஜீவி.

“அப்படியா?” என்பது போல் ஜானவி மகனை காண, அவன் பதில் இல்லாமல் திருதிருவென விழித்தான். அவனது பாவனையில் மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

ஜானவி மாறாத சிரிப்புடன், “என் பையன் சமத்து ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் கேட்டிருக்க மாட்டான்” என்று கூற, “ஆமாம்மா நான் கேட்கவே இல்லை” என்று அதி உடனடியாக பதில் அளித்தான்.

“அப்பாவும் மகளும் என் மகனை வம்பு இழுத்துக்கிட்டே இருக்காதீங்க நீ அம்மாக்கூட வாடா” என்று அதியை தூக்கிக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

“பாத்தியா உங்க அம்மாவ மகனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு நம்ம ரெண்டு பேரையும் கண்டுக்க மாட்றா” என்று ஜீவா போலியாக முறைக்க, “ஆமாப்பா” என்று மகள் பின்பாட்டு பாடினாள்.

“சரி நம்ம ரெண்டு பேர் மட்டும் வீடியோ கேம்ஸ் விளையாடலாமா?” என்று ஜீவா அதி காதில் விழுமாறு கூற, “அம்மா நானும் வீடியோ கேம்ஸ்” என்று மகன் உதடு பிதுக்கினான்.
“ஜீவா…” என்று ஜானு முறைத்துப் பார்த்தாள்.

“ம்மா அப்பாவ எதுக்கு முறைக்கிறீங்க நான் தான் அப்பாவ விளையாட கூப்பிட்டேன்” என்று மகள் ஆதரவாக வர, “அம்மா என்னையும் சேர்த்துக்க சொல்லுங்க” என்று அதி தாயிடம் முறையிட்டான்.

“முடியாது” என்று ஜி.வி மறுக்க, அதி அழுகைக்கு தயாரானான். ஜானு பதில் கூறுவதற்குள் இவர்களது அலப்பறையில் உறங்கிக் கொண்டிருந்த அர்னவ், “ம்மா” என்ற சிணுங்களுடன் எழுந்து கொண்டான்.

“அதி நீ அக்காகிட்ட போ” என்று அவனை இறக்கி விட்டவள், “அர்னவ் செல்லம் அதுக்குள்ள எழுந்துட்டீங்களா?” என்று மகனை கையில் தூக்கினாள்.

“ம்மா…” என்று அவளது கழுத்தை கட்டிக் கொண்டவன் கலையாத உறக்கத்துடன் அவள் தோளில் தலையை சாய்த்துக் கொண்டான்.

“பாருங்க தம்பிக்கு தூக்கம் கலையவே இல்லை சத்தம் போடாதீங்கன்னு சொல்லியும் எழுப்பி விட்டீங்க” என்று அவர்களை முறைத்தவள், “பால் குடிக்கிறீங்களா தங்கம்?” என்று கேட்டவாறு மகனுடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

“ம்மா பால் வேதா” என்று மகன் சிணுங்க, “பால் குடிச்சா தான் தங்க புள்ள அண்ணன் மாதிரி பெரிய பையனாக முடியும் கொஞ்சம் குடிக்கிறியா?” என்று கொஞ்சியவள் குவளையில் பாலையாற்றி மகனுக்கு புகட்ட துவங்கினாள்.

இங்கு மூவரும் மீண்டும் யானை விளையாட்டை துவங்கியிருந்தனர். இப்போது ஜீவி தந்தையின் மீது ஏறி கொள்ள அதி அருகில் அமர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

சிறியவன் பாலை குடித்ததும் ஜானு வெளியே தூக்கி வர அவர்கள் மூவரும் விளையாடுவதை கண்டவன் குஷி ஆகி, “ம்மா நா நா விளாத” அன்று ஆர்ப்பரித்தான்.

“என் தங்க புள்ளையையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்க” என்று அவர்களிடம் இளையவனை விட்டவள் சமையலறையில் பாதியில் விட்ட வேலையை மீண்டும் துவங்கினாள். இடையிடையே கூடத்தில் இருந்து வந்த சத்தத்தினால் இதழில் புன்னகை எழுந்தது.

ஜானவிக்கு வாழ்க்கை மிகவும் அழகானது போல தோன்றியது. தான் மட்டும் ஒரு அறைக்குள் வாழ்ந்து பிறகு மகளுடன் வாழ்ந்தது. இப்போது இத்தனை பிள்ளைகளுடன் வீடே கலகலவென சிரிப்பும் ஓசையும் கேட்கவே அவ்வளவு அழகாய் இருந்தது. வெகு நாட்களாய் மனதில் ஆசைப்பட்டு ஏங்கிய ஒரு வாழ்வு கைகூடியிருந்தது.

இவை அனைத்தும் ஜீவாவால்தான் என்று தோன்றியதும் புன்னகை இமை நீண்டது.

“என்னவாம் மேடம்க்கு சிரிப்பு” என்றபடி சமையலறை வாசலில் நின்றிருந்தான் ஜீவா. “ஒன்னுமில்ல…” என்று தோளை குலுக்கியவள் தனது வேலையை கவனித்தாள்.

“ம்ஹூம் ஏதோ இருக்கு” என்றவாறு உள்ளே வந்தவன் மனைவியை பின்னிருந்து அணைத்து, “என்ன பத்தி தான நினைச்சு சிரிச்சுட்டு இருந்த சொல்லு” என்று சிரிப்புடன் கேட்க, “இல்லையே…” என்றவளது இதழிலும் கள்ள புன்னகை.


“ஆஹான் நம்பிட்டேன்” என்று சிரிப்புடன் கூறியவன் மனைவியின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க,
“ஜீவா என்ன இது பிள்ளைங்க இருக்கும்போது” என்று சிணுங்களுடன் முறைத்தாள் மனைவி.

“அவங்களுக்கு கார்டூன் போட்டு கொடுத்து இருக்கேன் இப்போதைக்கு வர மாட்டாங்க” என்று ஜீவா கூற, “யாரு உன் பிள்ளைங்க தானே இன்னும் அஞ்சு நிமிஷத்துல அம்மா அம்மானு வந்து நிப்பாங்க பாரு” என்று ஜானு சிரிப்புடன் கூறி முடிக்க, “அம்மா…” என்று கூவியபடி சமையல் அறைக்குள் ஓடி வந்தான் அதி.

மகன் வருவதற்குள் பட்டென்று விலகி இருந்தான் ஜீவா. ஜானு திரும்பி, “என்ன அதி?” என்று கேட்க, “எனக்கு தண்ணி வேணும்மா” என்று பதில் உரைத்தான்.

‘பாத்தியா’ எனும் விதமாக கணவனை பார்த்து கண் சிமிட்டியவள் குவளையில் தண்ணீரை நிரப்பி மகனுக்கு கொடுத்தாள்.

நீரை பருகியவன், “அப்பா நீங்களும் வாங்கப்பா கார்ட்டூன் பாக்கலாம்…” என்று தந்தையின் கரத்தை பிடித்திழுத்தான்.

“போ ஜீவா” என்று குறும்பு சிரிப்புடன் மனைவி கூற, “பசங்க தூங்குன பின்னாடி பார்த்துக்கிறேன் உன்ன” என்று தானும் போலியாக முறைத்து அவளது காதில் முணுமுணுத்தவன் மகனோடு கூடத்திற்கு சென்றான்.

மூவரும் விளையாட ஜீவா சிரிப்புடன் அவர்களை அவதானித்தபடி இருந்தான் நாளை பள்ளி விடுமுறை அதுதான் இருவரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்

சிறிது நேரத்தில் ஜானவி சமைத்து முடித்து வந்தவள், “எல்லாரும் சாப்பிட வாங்க டைம் ஆச்சு” என்று இளையவனை கையில் தூக்கிக் கொண்டாள்.

ஜானவி அர்னவ்விற்கு உணவினை ஊட்ட ஜீவா, “நான் இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு சர்வ் பண்றேன் நீ தம்பியை பாரு” என்றவன் பிள்ளைகள் இருவருக்கும் பரிமாறிவிட்டு தானும் உண்ண துவங்கினான்.

ஜானவி மகனுக்கு விளையாட்டு காட்டி அங்குமிங்கும் ஓடி என்று ஒரு வழியாக உணவை ஊட்டி முடித்தவள் மகனை அருகில் அமர வைத்து தானும் உண்ண துவங்கினாள்.

சாப்பிட்டு முடித்ததும் ஜானு உணவு பாத்திரங்களை ஒதுங்க வைக்க ஜீவா அவளுக்கு உதவி செய்தான்.

ஜீவி, “அப்பா வாங்கப்பா விளையாடலாம்” என்று கூப்பிட, “வாங்கப்பா…” என்று இளையவர்களும் கோரஸ் பாடினர்.

“இவ்ளோ நேரம் விளையாடிட்டு தான இருந்தீங்க சாப்பிட்டாச்சுல டைம் ஆச்சு நான் வந்ததும் மூணு பேரும் தூங்க வரணும்” என்று ஜானு கண்டிப்புடன் கூற, “அம்மா நாளைக்கு லீவு தானே மா கொஞ்ச நேரம் விளையாடுறோமே” என்று ஜிவி கெஞ்சலுடன் தாயைப் கண்டாள்.

“லீவா இருந்தா விடிய விடிய விளையாடுவீங்களா காலையில எந்திரிச்சு விளையாடுங்க போங்க” என்று ஜானு அதட்ட, “அப்பா…” என்று மகள் தந்தையை கண்டாள்.

“லீவு தானே ஜானு விளையாடட்டுமே பிள்ளைங்க” என்று ஜீவா அவர்களுக்கு ஆதரவாக பேச, “இப்போதைக்கு விளையாட ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க நீ தான் அப்புறம் அவங்களை தூங்க வைக்கணும்” என்று ஜானு பதில் உரைத்தாள்.

“நான் தூங்க வச்சுக்கிறேன். நீங்க போய் விளையாடுங்க அப்பா இத முடிச்சுட்டு உங்க கூட வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றவன் மனைவிக்கு உதவி செய்தான்.

“வரவர நீ ரொம்ப செல்லம் கொடுக்கிற ஜீவா. இவ்வளவு செல்லம் கொடுத்தா பசங்க ரொம்ப பிடிவாதமா வளருவாங்க” என்று ஜானு கண்டிக்க, “உனக்கு கொடுக்கிறதை விட அவங்களுக்கு கம்மியா தான் டி கொடுக்கிறேன்” என்று ஜீவா குறும்பு சிரிப்புடன் இயம்பினான்.

“எனக்கு என்ன செல்லம் கொடுத்த நீ?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள் மனைவி. “என்ன கொடுக்கல சொல்லு நீ” என்றவன் இடையோடு அவளை சேர்த்தணைத்தான்.


“எதுவுமே கொடுக்கல நீ” என்ற மனைவியின் இதழில் கள்ள புன்னகை. அவளது முகத்தை வைத்து அகத்தை கண்டு கொண்டவன், “அடி கள்ளி நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா பிள்ளைங்க தூங்கட்டும் நீ கேட்காத எல்லாத்தையும் கொடுக்கிறேன்” என்று சிரிப்புடன் கூறியவன் அவளது கழுத்தில் முகத்தை புதைத்தான்.

அவனது மீசையின் உரசலில் சிலிர்த்தவள், “காலையில இருந்து பிள்ளைங்க தூங்கட்டும் தூங்கட்டும்னு சொல்லிட்டு இருக்க. பாக்குறேன் நீ என்ன பண்றேன்னு” என்று விடாமல் வம்பிழுத்தாள்.

“வாயை விடாதடி சேதாரம் உனக்கு தான் அதிகமா இருக்கும்” என்று ஜீவா அவள் தோளில் அழுத்தமாக முத்தம் வைத்தான். “ப்ச் மீசை குத்துது ஜீவா” என்று சிணுங்கினாள் ஜானு.

“நல்லா குத்தட்டும்” என்றவன் அவளது தோள்களில் முகத்தை பிரட்ட, “ஜீவா…” என்று அவஸ்தையுடன் அவனை தன்னோடு இறுக்கினாள்.

“ஹ்ம்ம் ஜீவா தான் உன்னோட ஜீவா தான்” என்று எப்போதும் போல் கிறக்க குரலில் மொழிய, “ஆமா எனக்கு மட்டுமே சொந்தமான ஜீவா” என்றவள் இன்னுமே அவனை அணைத்தாள்.

ஜீவா பதில் மொழிவதற்குள், “அப்பா விளையாட வரலையா?” என்று மகள் குரல் கொடுத்தாள்.

“ஹ்ம்ம் வரேன்டா” என்று தலையை உயர்த்தாமலே பதில் அளித்தவன் மனைவியின் கன்னத்தில் மீசை அழுந்த படியும்படி ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு வெளியேறினான்.

கூடத்திற்கு வந்தவன், “இப்பதான் சாப்பிட்டு இருக்கீங்க ரொம்ப குதிச்சு விளையாடாதீங்க” என்று மக்களிடம் கூற அவனது அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

எடுத்து பார்க்க தாய் பரமேஸ்வரி தான் அழைத்திருந்தார். அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்கம்மா” என்று கூறினான்.

“ஜீவா நாளைக்கு லீவு தானே பசங்க இங்க வந்து தூங்கட்டுமே அனுப்பிவிட்றியா?” என்று பரமேஸ்வரி வினவினார்.

“சரிம்மா அனுப்புறேன் ரொம்ப நேரம் முழிச்சிருக்க விடாதீங்க. சீக்கிரம் தூங்க வச்சுருங்க அர்னவ் எங்க கூட இருக்கட்டும்” என்று கூற, “இங்கே இருக்கட்டும் பா எந்திரிச்சு அழுதா நானே உங்கள கூப்பிடுறேன்” என்று பதில் அளித்தார்.

“ஜீவி உன் மூணு பேரையும் பாட்டி அங்க தூங்க கூப்பிடுறாங்க போறிங்களா?” என்று வினவ, “ “ஹ்ம்ம் போறோம்…” என்று மூவரும் கோரஸாக கூறினர்.

“வாங்க நானே விட்டு வரேன்” என்று கதவைத் திறந்து பக்கத்து வீட்டிற்கு சென்று மக்களை விட்டு வந்தவன் கதவை பூட்டிவிட்டு சமையலறையை எட்டி பார்க்க, மனைவி மீதமிருந்த உணவை சூடு செய்து குளிர்சாதன பெட்டியில் வைப்பது தெரிந்தது.

இதழில் மர்ம சிரிப்புடன் உள்ளே வந்தவன் மனைவியை தன் புறம் திருப்பி நெருக்கமாக அணைத்துக்கொள்ள, இதனை எதிர்பாராதவள் திகைத்து, “என்ன திரும்பவும் செகண்ட் ரவுண்டு வந்து இருக்கீங்க பசங்க தேட போறாங்க” என்று கேலி புன்னகையுடன் கூறினாள்.

“இனிமே காலையில தான் அவங்க தேடி வருவாங்க. இப்பதான் கொண்டு போய் அம்மா கிட்ட விட்டுட்டு வந்தேன்” என்று ஜீவா கள்ளச் சிரிப்புடன் கூற, “மூணு பேரையுமா?” என்று கேட்டாள் ஜானவி.

“ஆமா மூணு பேரையும் தான் இப்ப நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம்” என்றவன் அவளின் முகத்தில் காற்றை குவித்து ஊதினான்.

“ஜீவா, அர்னவ் நான் இல்லாம தூங்க மாட்டான்ல. அதி, ஜீவி இருக்கட்டும் அவனை மட்டும் தூக்கிட்டு வந்துடலாமா?” என்று மனைவி பரபரக்க, “அதெல்லாம் இருந்துக்குவான். அப்படியே அழுதாலும் அம்மா தூக்கிட்டு வரேன்னு சொன்னாங்க. எப்ப பாத்தாலும் பிள்ளைங்களயே கவனிச்சிட்டிருக்க, கொஞ்சம் அந்த பிள்ளைகளோட அப்பாவையும் கவனிக்கிறது” என்று சிரிப்புடன் மொழிந்தான்.

“ஓ… கவனிக்கலாமே” என்று ஜானுவும் சிரிப்புடன் இழுத்தாள்.
“ஹம்ம்… கவனி” என்றவன் மேலும் அவளை தன்னோடு நெருக்கி கொள்ள, “கிச்சன்ல எப்படி ஜீவா கவனிக்கிறது” என்று விடாது பதில் கூறினாள்.

“அவ்வளவுதானே? தோ இப்பவே பெட்ரூம் தூக்கிட்டு போறேன்” என்றவன் மனையாளை கையில் ஏந்தி கொண்டான்.

இதை எதிர்பாராது திகைத்து அதிர்ந்தவள் அவனை கழுத்தோடு பிடித்துக்கொண்டு “ஐயோ ஜீவா! பாத்திரம் விளக்குற வேலையிருக்கு எனக்கு” என்று பதறினாள்.

“அதெல்லாம் நாளைக்கு செய்யலாம். இப்ப நமக்கு செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருக்கு” என்று சிரிப்புடன் மனைவியை அறைக்கு தூக்கி சென்றான்

“இப்ப மட்டும் பிள்ளைங்க இருந்திருக்கணும் என்னை தூக்குங்கப்பா, என்னை தூக்குங்கப்பான்னு ஒரு போராட்டமே பண்ணிருப்பாங்க” என்று ஜானு சிரிப்புடன் கூற ஜீவாவும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டான். அறைக்கு வந்ததும் மனைவியை இறக்கி விட்டவன் கதவை பூட்ட அவனது அலைபேசி அழைத்தது.

‘யாரு இந்த நேரத்தில் கரடி மாதிரி’ என்று மனதில் முணுமுணுத்தவன், அலைபேசியை எடுத்து பார்க்க அவனது உதவியாளன் தினேஷ் அழைத்திருந்தான்.

ஜானுவின் இதழ்களில் நமட்டுச் சிரிப்பு வந்தமர்ந்தது. “போங்க சார் போய் பேசிட்டு வாங்க” என்று கூற, “டூ மினிட்ஸ் ஜானு” என்றவாறு அலைபேசியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றான்.

ஜானவின் பார்வை கலைந்திருந்த படுக்கையின் மீது விழுந்தது. இந்நேரம் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் மெத்தையின் மீது ஏறி குதித்துக் கொண்டிருப்பார்கள் என நினைத்து புன்னகை பூத்தாள்.

மாலை அவர்கள் விளையாடியதின் விளைவாக கலைந்திருந்த படுக்கையை சரி செய்து விட்டு கணவனை காண அவன் இன்னும் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் பால்கனிக்கு சென்று, “என்ன ஜீவா எதுவும் பிராப்ளமா?” என்று வினவ, “நத்திங் ஒரு சின்ன வொர்க்” என்று பதில் அளித்தவன் மீண்டும் பேச துவங்கினான்.

ஜானு அவன் அருகில் நின்று பேசுபவனையே விழியெடுக்காது ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மனைவியின் பார்வையை உணர்ந்தவன் சிரிப்புடன், ‘என்ன’ என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இருக்க, “அழகா இருக்க ஜீவா” என்று மென் குரலில் கூறியவள் அவனது கன்னத்தை கிள்ளி கொஞ்ச இவனுக்கு புன்னகை இமை நீண்டது.

“ஓகே தினேஷ் மத்ததை நாளைக்கு நேர்ல பாத்துக்கலாம்” என்று அழைப்பை துண்டித்தவன், சிரிப்புடன் மனைவியின் புறம் திரும்பி “என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு?” என்று வினா தொடுக்க, “என் புருஷன் நான் பார்ப்பேன்” என்று சிரிப்புடன் பதில் கூறினாள் அவள்.

“பாக்கலாமே! தாராளமா பாக்கலாம். பாக்க மட்டும் இல்ல, என்ன வேணா செய்யலாம். எல்லா உரிமையும் உனக்குத்தான் இருக்கு” என்று மோகனமாய் சிரித்தவன், அவளிடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்தணைத்தான்.

உடலைத் தழுவும் குளிர் காற்றிற்கு கணவனின் அணைப்பு கதகதப்பாக இருக்கவும் அவனது கழுத்தோடு கைகோர்த்து அணைத்துக் கொண்டாள்.

குளிர் காற்றோடு சடுதியில் பொழிய துவங்கிய மழை இருவரது மேலும் சாரலைத் தூவியது. அதனை உணர்ந்த இருவரும் தலையை ஒரு சேர உயர்த்தி பார்க்க, “மழை பெய்து ஜீவா” என்று குதூகலத்துடன் கூறி கையை நீட்டினாள் மனையாள்.

சாரலாய் துவங்கிய மழை மெது மெதுவாய் அவர்களை நினைக்கத் துவங்க ஜீவாவின் பார்வை ஜானுவின் மீது நிலைத்தது.

நெற்றியில் துவங்கிய மழைநீர் அவளது நாசியை கடந்து இதழ் மேல் வந்து மையம் கொள்ள இவனது பார்வையும் அங்கேயே தங்கிவிட்டது.

“மழை சூப்பரா இருக்குல ஜீவா…?” என்று ஜானவி ஆர்ப்பரிக்க, “ஹ்ம்ம்…” என்றவனின் விரல்கள் அவளது இதழை வருட ஜானவியின் பேச்சு தடைபட்டு போனது.

“மழைய விட நீ தான் அழகா இருக்க” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறியவன் மெதுவாய் தனது இதழ்களால் அவளது முகத்தில் இருந்த நீர் துளிகளை ஒற்றியெடுக்க துவங்கினான்.
நெற்றி துவங்கி நாசியை கடந்து அவளது இதழில் தன்னிதழை உரச இருவருக்கும் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

அவளை தனக்குள் பதிந்து கொள்வது போல் இறுக்கி அணைத்துக் கொண்டவன் மெதுவாய் ஆர்ப்பரிப்பில்லாமல் முத்தமிட துவங்கினான்.

நொடிகள் நிமிடங்களாக நீள அவள் மூச்சுக்கு சிரமப்படுவதை உணர்ந்து விடுவித்தவன் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்து மனைவியை மடியில் அமர வைத்து கொண்டவன் அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து ஜானவின் வாசத்தை ஆழ்ந்து உள்ளுக்குள் இழுத்தான்.

அவனது மூச்சுக்காற்றில் வெம்மை அவளை தகிக்க வைக்க, “ஜீவா…” என்று மெதுவாய் முனங்கியவள் விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

“ஹ்ம்ம்…” என்ற முனங்களுடன் அவளது செவி மடலில் இதழை பதித்தவன், “என்ன?” என்று கரகரத்த குரலுடன் கேட்க அந்தக் குரல் அவளை போதையேற்றியது.

“குளிருது ஜீவா” என்று பலவீனமாக அவள் முணுமுணுக்க, அடுத்த நொடி அவளை கையில் ஏந்தியவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அறைக்கு வந்ததும் வெளிச்சத்தில் அவன் முகம் பார்த்தவளுக்கு தான் இருந்த நிலையில் கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது.

அதை அறிந்தவன் மெத்தையில் அவளோடு சரிந்தான். “டிரஸ் எல்லாம் ஈரமா இருக்கு ஜீவா” என்றவள் மெலிதாக மொழிய, “இங்க டிரஸ்க்கு என்னடி வேலை” என்று அவளது காதில் இதழ் உரசக் கூறியவன் மெதுவாய் இதழ்களாலும் கரங்களாலும் அவளை உணரத்துங்கினான்.

“ஜீவா ஜீவா…” என்று ஜபித்துக் கொண்டிருந்தவளது மறுப்புகளையும் தவிப்புகளையும் தன்னிடத்தில் மொத்தமாய் நிரப்பிக் கொண்டவன் ஆர்ப்பரிப்பின்றி அவளுள் நிறைந்து போனான்.

வியர்வை பெருக களைத்து அவள் அருகில் விழுந்தவன் ஜானுவை தன்னருகே இழுக்க விழியை மூடிக் கொண்டவள் முதுகோடு கரம் கொடுத்து அவனோடு ஒன்றினாள்‌. சில நிமிடங்கள் அமைதியாய் இருவரும் ஆசுவாசம் கொள்ள, “ஜானு…” என்று நேசம் நிறைந்த குரலில் அழைத்தான்.

“ஹ்ம்ம்…” என்றவள் விழிகளை திறக்காமலே பதிலளிக்க “கண்ண திறந்து என்னை பாருடி” என்று கன்னம் வருடினான்.

என்றும் இல்லாமல் ஒரு வித கூச்சம் வந்து ஒட்டிக்கொள்ள, திறக்க மாட்டேன் என்பது போல் தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“ப்ச் திறந்து பாருடி” என்ற மீண்டும் கொஞ்சல் குரலில் அவன் கூற, மெதுவாய் விழிகளை திறந்து கணவன் முகம் கண்டாள்.

அவளது கன்னம் தாங்கி தாடையில் இதழ் பதித்தவன் “லவ் யூ டி” என்க, அவளது முகம் புன்னகையில் மலர்ந்தது. “நானும் லவ் யூ சோ மச்” என்றவள் எக்கி அவனது நெற்றியில் இதழ் ஒற்றினாள்.

பின் நெற்றியோடும் நெற்றியை முட்டியவள், “தேங்க்யூ ஃபார் என்டரிங் மை லைஃப் அண்ட் மேக்கிங் இட் ஹேப்பியர்” என்று மொழிய, “இதை நான் சொல்லணும்” என்றவனது இதழில் புன்னகை பூத்தது.

ஜானு பதில் மொழிவதற்குள் ஜீவாவின் அலைபேசி அழைக்க, “அத்தை தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். தங்கப் பிள்ளை என்னைத் தேடுது போல” என்று சிரிப்புடன் கூற, ஜீவா திரையில் தாயின் பெயரை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் பொருத்தினான்.

“சொல்லுங்கம்மா தம்பி அழறானா?” என்று கேட்க, “ஆமப்பா அம்மா வேணும்னு ஒரே அடம் நானும் சமாளிச்சுடலாம்னு பார்த்தேன் ஆனா முடியல” என்று பரமேஸ்வரி பதிலளித்தார்.

“சரிங்கமா தான் நான் வந்து தம்பிய தூக்கிக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தவன், “நீ போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா’ என்றுவிட்டு மகனை அழைத்து வர சென்றான்.

தந்தையை கண்டதும் இளையவன், “அப்பா…” என்று அவனிடம் தாவினான். “என்னடா தங்கம்” என்று ஜீவா மகனை கொஞ்ச, “அம்மா அம்மா கிட்ட போவதும்” என்று அழுகை குரலில் பதில் கூறினான்.

“போகலாம் டா தங்கம்” என்று சமாதானம் செய்தவன் தாயிடம் தலையசைத்து விட்டு தனது வீட்டிற்கு வந்தான். அதற்குள் ஜானவி உடைமாற்றி வந்திருக்க மகனைக் கண்டதும் “தங்கப்பிள்ளை அம்மாவை தேடுச்சா?” என்று தூக்கிக் கொண்டாள்.

“ஆமா…” என்றவன் தலையசைக்க, “அம்மா கூடவே இருக்கேன் தூங்குடா செல்லம்” என்று அவனைத் தோளில் போட்டு தட்டியபடி அறைக்குள் நடைபயில மெத்தையில் சாய்ந்து அமர்ந்தவாறு மனைவியையும் மகனையும் பார்த்திருந்தவனது இதழ்களில் ரசனை புன்னகை மின்னியது.

அவனைக் கண்டவள் என்னவென விழியுயர்த்தி பார்க்க இதில் குவித்து முத்தம் ஒன்றை மனைவிக்கும் மகனுக்கும் பறக்க விட்டான்.

அதனைப் பிடித்தவள் தன் கன்னத்தில் ஒட்டிக் கொள்ள இருவருக்கும் புன்னகை இமை நீண்டது. பட்ட துன்பத்திற்
கு எல்லாம் சேர்த்து காதலோடான ஒரு அழகான வாழ்வு அவர்களை அரவணைத்துக் கொண்டது….

முற்றும்…








 
Top