• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 20

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 20



யாஷ்வியை விட நவீனுக்கு தான் அந்த சூழல் அப்படியொரு அவஸ்தையை கொடுத்தது. பேதையின் பார்வை கொடுத்த குற்றச்சாட்டில் அப்படியே மரித்து போக மனம் ஊக்கியது. மூச்ச விட கூட சிரமமான மனநிலை, தன் முன் கதறிக் கொண்டிருப்பவளை கண்டு அதை விட பரிதாபமாய் தோன்றியது. "அக்ஷி" என்று கமறிய குரலில் அழைத்தவன் அவளின் தலையை வருடி அழுகையை குறைக்க முயன்று தவிப்போடு திணறிக் கொண்டிருந்தான்.


மகனின் நிலை கண்டு வாணிக்கு அதற்கு மேல் நெஞ்சடைத்தது. 'இதற்காக தானே நான் அத்தனை மருகி யாஷிடம் யாசித்தேன்' என்றெண்ணியவருக்கு யாஷின் விழிகளில் தெரிந்த அந்த பாவனையில் தொண்டையிலுள்ள நீர் முற்றிலும் வற்றி போனது. முயன்று தன்னை சரி செய்து, "யாஷ், பாப்பாவை உள்ள ரூம்ல்ல படுக்க வைம்மா" என்று அவளை தன் அறைக்கு அழைத்துச் செல்ல அவரின் குரலில் தான் அக்ஷி சற்று தெளிந்தாள்.


நவீனிடமிருந்து விலகியவளின் பார்வை யாஷ்வி மீதும் ஶ்ரீயின் மீதும் படிய கண்ணீர் இன்னும் பிரவாகமாகியது. "அக்ஷி, எதுக்கு இப்படி அழுகிற நீ" என்று அதட்டி அவளின் கண்ணீரை நவீன் துடைக்க முற்பட பெண் அமர்ந்த வாக்கிலே மயங்கியிருந்தாள் பின்னால் சரிந்து.


"ஹேய், அக்ஷி" என்ற நவீன் தொற்றிக் கொண்டு பதற்றத்தோடு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயல அவனின் சத்தத்தில் வாணியோடு மகளை படுக்கையில் படுக்க வைத்த யாஷூம் அவர்களை நோக்கி விரைந்திருந்தாள்.


"ம்மா...தண்ணீ கொண்டு வாங்க" என்ற நவீனின் கரங்கள் அக்ஷியின் கழுத்தை தாங்கி கீழே விழாதவாறு தன் மீது சாய்த்து பிடித்திருக்க மற்றொரு கரத்தில் அமர்ந்திருந்த ஹர்ஷித்தோ சத்தமிட்டு அழ துவங்கியிருந்தான் சூழலின் அசௌகரியத்தின் பொருட்டு. நவீனிடம் முன்னேறிய யாஷ் யோசிக்காது சட்டென்று ஹர்ஷித்தை கைகளில் வாங்கிக் கொண்டாள்.


அவனோ புதிதாக வதனத்தைக் கண்டு மேலும் வீறிட முதுகை வருடி அவனை சமாதானம் செய்ய முயன்றாள் அவர்களை விட்டு சற்று தள்ளி சாரளத்தின் புறம் நகர்ந்து. வாணி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அக்ஷியின் முகத்தில் தெளித்த நவீன் அவள் எழுந்தமரவும், "ஆர் யூ ஓகே அக்ஷி? டாக்டர்கிட்ட போகலாமா?" என்றான் தேங்கிய பதற்றத்தோடு. அவனின் கிலி விலகாத வதனமும் தனக்கான கரிசனமும் மேலும் பெண்ணவளை தளர்த்த இன்னும் அழுகை பிரவாகமாகும் போல் தோன்ற, "வாஷ்ரூம் போகணும் மாமா" என எழுந்து கொண்டாள் பெண்.

"சரி வா" என்று அவளின் கையை பிடித்தான் அழைத்துச் செல்வதற்காக. "ப்ச்...நோ" என்று சலித்து அவனின் கைகளை விலக்கி சென்று விட அழுத்தி தலையை கோதிக் கொண்டான் சூழலின் கணத்தை தாங்க முடியாது. அதை விட, 'இருவரையும் காயப்படுத்தாது சூழலை எப்படி கையாளப்போகிறாய்?' என்ற ஆகப்பெரும் வினாவொன்று ஆக்கிரமிக்க தலையே வெடித்து விடுமென தோன்றியது.

ஹர்ஷித்தோ சாரளத்தின் கடைசி கம்பியில் நின்று கொண்டு கால்களை மேலே தூக்கி வைக்க முயன்றபடி வெளியில் வேடிக்கை பார்த்து அவ்வப்பொழுது திரும்பி தன்னை பின்னிருந்து விழாதவாறு பிடித்துக் கொண்டிருந்த யாஷ்வியை பார்த்து தன் முன்னிரு பற்களை காட்டி புன்னகைக்க, அப்பிஞ்சின் கள்ளமில்லா புன்னகையை காணும் பொழுது அவளையும் அறியாதொரு வலி இதயம் முழுவதும் பரவியது பாவைக்கு. 'ஏன் இங்கு வந்தோம்?' என்ற வினாவே மனம் முழுவதும் வியாபிக்க ஏதோ மொழி தெரியாத தேசத்தில் தொலைந்த போன குழந்தையாகவே உணர்ந்தாள். தனக்கு சம்பந்தமில்லாத உரிமையில்லாத தெரியாதவர்களின் மத்தியில் தனித்து விடப்பட்டு போனது போல் மனது சஞ்சலமாக உணர அக்ஷியின் முகத்தை எதிர்கொள்ளுமளவு திராணி இல்லை போலும்.



"அவளுக்கு என்னாச்சும்மா? ஏன் மயங்கி விழுந்தா சாப்பிட்டாளா இல்லையா?" என்று நவீன் அன்னையை பார்க்க வாணியோ அவனை முறைத்து பதில் கூறாது ஶ்ரீ இருந்து அறைக்குள் நுழைந்து கொண்டார். அவருக்கும் அச்சூழல் கசந்தது, அதை விட இரு பெண்களின் மனநிலையில் சிந்திக்க தங்களின் கையறு நிலை மீது தான் அப்படியொரு கோபம் பொங்கியது. ஶ்ரீ அருகிலே அப்படியே பேத்தியின் மீது கைகளை படர விட்ட சுருண்டு கொண்டார் பெண்மணி அடைத்து விம்மிய நெஞ்சத்தோடு.



யாஷ் எல்லா சம்பாஷனைகளை கேட்டாலும் அசையாது முதுகுகாட்டியபடி ஹர்ஷித்தையும் சாரளத்தின் கம்பியையும் இறுக பிடித்தப்படி நின்றிருந்தாள். உடலுமே சற்று இறுகி விரைத்து தான் போயிருந்தது.


முகம் கழுவி சிறிதளவு தேறி அக்ஷி வெளியே வர, "நீ சாப்பிட்டியா என்ன?" என்றான் வினாவாய் நவீன்.

அவனையே வெற்று பார்வை பார்த்தவள் மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்த முயல, "வா" என்று அழைத்துச் சென்று உணவு மேஜையில் அமர வைக்க மறுக்காது நடந்தாள் அவனோடு. அடுப்பறை நுழைந்தான் என்ன இருக்கிறது என ஆராய்வதற்காக.


டேபிளில் அப்படியே தலை சாய்த்துக் படுத்துக் கொண்டவள் பார்வை முழுவதும் தூரத்தில் மகனுடன் நின்றிருத்த யாஷின் மீது தான். அவளாலும் தன்னை துளைக்கும் பார்வையை உணர முடிகிறது ஆனால் திரும்பும் எண்ணமின்றி இருந்தவளின் தலையோ அவளையும் மீறி அக்ஷிதா புறம் திரும்பியது. நன்றாகவே தெளிந்திருந்தாள் பெண், யாஷை பார்த்து லேசாக சிநேகித பாவத்தோடு அக்ஷியின் இதழ் விரிய யாஷின் இதழும் லேசாக விரிய முனைந்தது பதிலுக்கு.



இருந்த உணவை தட்டில் எடுத்து போட்டு தண்ணீரோடு அவளருகில் வந்து நவீன் அமர அரவத்தில் எழுந்து நேராக அமர்ந்து கொண்டாள் பெண். 'சாப்பிடு' எனும் விதமாக தட்டை அவளின் புறம் நகர்த்தி வைக்க உண்ணத் துவங்கியவள், "ஏன் இத்தனை நாள் எங்களை பார்க்க வரலை, அத்தை மேல கோபம், நானென்ன செய்தேன்?" என்றாள் நவீனை நேராக பார்த்து.


தலையை கோதியவன், "ப்ச்..." என்று சலிப்பான பார்வையை அவளை நோக்கி கொடுக்க, "சரி அதை விடுங்க, அவங்க திரும்பி வந்ததை ஏன் என்கிட்ட சொல்லலை" என்றாள் யாஷை கைக்காட்டி. யாஷ் இப்பொழுது ஹர்ஷித்தோடு ஷோபாவிற்கு இடம் பெயர்ந்திருந்தாள். ஆம், அவளின் கழுத்தை இறுக கட்டிக் கொண்ட ஹர்ஷித் ஷோபாவை நோக்கி கைக்காட்டியிருந்தான் அதில், 'அமர வை' எனும் விதமாக.



அவர்களிலிருவரின் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாது அமைதியாய் அமர்ந்திருந்தாள் யாஷ்வி. பாவைக்கு அங்கு அமர்ந்திருப்பது ஒரு வித அசௌகரியத்தை கொடுத்தது கூட எனலாம். ஏதோ தொடர்பில்லாத இடத்தில் கட்டாயப்படுத்தியது போல் அசூசையான மனநிலையில் அமர்ந்நிருந்தாள். நவீனின் மீது கோபம் வேறு வந்து தொலைத்தது, 'தன்னை இப்படி நிறுத்தி விடடானே!' என பொங்கி பெருகிய ஆதங்கத்தோடு.



நவீனுக்கு என்ன கூறுவதென்ற தெரியவில்லை, "நீ முதல்ல சாப்பிடு, அப்புறம் பேசலாம் அக்ஷி" என்று அவளின் வினாக்களிலிருந்து நழுவ முயல, "என்னை ஏன் அவாய்ட் பண்ணீங்க? உங்களை என் கூட பிடிச்சு வைச்சுப்பேன் நினைச்சிங்களா?" என்றவளுக்கு அதற்கு மேல் பேச இயலாது தொண்டை அடைத்தது. "அக்ஷி" என்று அதட்டி, 'என்ன பேச்சிது' என்று ஆயாசமாக பார்த்தவன் விழிகள் யாஷிடம் நிலைக்க அவள் சட்டென்று எழுந்து ஶ்ரீ படுத்திருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஹர்ஷித்தை அவனது பொம்மைகளுக்கருகில் அமர வைத்து. ஏனோ இறுக்கமான அறையில் அடைத்து வைத்தது போல் மூச்சு முட்ட பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. 'அடுத்து என்ன?' என்றெண்ணியவளுக்கு கண்களை கட்டிக் கொண்டு வர மனதோ, 'இங்கிருந்து கிளம்பி செல்' என்றதொரு கட்டளையை கொடுக்க தளர்ந்து தொய்ந்து போய் ஷோபாவில் சுருண்டு படுத்துக் கொண்டாள் உறங்கும் மகளை பார்த்தவாறே. அக்ஷியின் கேள்வி கணைகளும் அதற்கு நவீனின் தவிப்பும் தடுமாற்றமும் பாவைக்கு காண பொறுக்கவில்லை.


அப்படியே அழுதபடியே இருந்த யாஷ் அவளையும் அறியாது உறங்கியும் போயிருந்தாள். அவளுக்கு விழிப்பு தட்டும் நேரம் மாலைப் பொழுதாகியிருந்தது.
எழுந்து முகம் கழுவி வெளியே வர ஶ்ரீ, ஹர்ஷித்தின் சிரிப்பொலியே அவளை வரவேற்றது. ஹர்ஷித் ஓட முனைந்த ஶ்ரீயை புன்னகையோடு எட்டி பிடிக்க முயல, அவனிடம் சிக்காது ஓடிய ஶ்ரீயின் இதழிலும் பொங்கிய புன்னகை அவ்விடத்தை நிறைத்திருந்தது. உறங்கி எழுந்த யாஷ் சற்று ஆசுவாச மனநிலையை உணர அப்பிஞ்சுகளின் சிரிப்பலைகள் தன்னையும் அறியாது பாவையின் இதழின் இறுக்கத்தையும் தளர்த்தியிருந்தது.


யாஷின் விழிகள் அவ்விடத்தை சுற்றி அலைபாய வாணி மட்டும் சமையலறையில் நின்று எதையோ தீவிரமாய் உருட்டிக் கொண்டிருந்தார். அக்ஷிதா மற்றும் நவீனிற்கான அரவமே அங்கில்லை.


யாஷை கண்ட ஶ்ரீயோ, "ம்மா.." என்று ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொள்ள அவள் செய்வதை பார்த்த ஹர்ஷித்தும் தடுமாறி வந்து யாஷின் மற்றொரு காலைக் கட்டிக் கொண்டான் பற்களை வெளிக்காட்டி. அவர்களின் சத்தத்தில் வெளியில் எட்டிப் பார்த்த வாணி, "எழுந்திட்டியா யாஷ், மதியம் சாப்பிடாம தூங்கிட்ட போல. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று இயல்பாய் பேசி வெளியே வர தலையசைத்த யாஷூம் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையோடு ஶ்ரீயையும் ஹர்ஷித்தையும் அள்ளிக் கொண்டு உணவு மேஜையில் அமர வைத்து அருகில் அமர்ந்து கொண்டாள்.


"சாப்பிட்டியா நீ?" என்று மகளிடம் வினவ, "ம்ம்..அவங்க கொடுத்தாங்க" என்று உள்ளே நின்றிருந்த வாணியை கைக்காட்ட, "அவங்க இல்லை, பாட்டி சொல்லணும்" என்று யாஷ் மெதுவாக மகளுக்கு சொல்லிக் கொடுக்க ஶ்ரீ தலையை உருட்டினாள். ஹர்ஷித்தோ வாயை குவித்தப்படி அருகிலிருந்த குவளையை பிடித்திழுத்து நீரை கீழே சாய்க்கும் முயற்சியில் தீவிரமாய் இருக்க அவனின் பாவனையை பார்த்து சிரிப்பு பொங்கி வரும் போலிருந்தது யாஷ்விக்கு. இதில் அவ்வப்பொழுது வாணியை வேறு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் ஓரக்கண்களால். பிறகு அவரிடம் யார் திட்டு வாங்குவது. எல்லாவற்றையும் செய்து விட்டு நழுவி நவீனின் மடியில் முகத்தை மறைத்து அமர்ந்து கொள்ள ஹர்ஷித்க்கு கொடுக்க வேண்டியதெல்லாம் வஞ்சனையின்றி நவீனுக்கு தான் போய் சேரும். இதில் அவ்வப்பொழுது தலையை தூக்கி வாணி அறியாது நவீனை பார்த்து கண் சிமிட்டி புன்னகைக்க, 'அடப்பாவி' என்ற நவீன் பாவனையில் அக்ஷிதா தான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பாள். அவள் மடியில் அமர்ந்தால், "இந்தாங்க அத்தை, அந்த பேன்ல்ல கட்டி தொங்க விடுங்க அப்ப தான் எதையும் கொட்டி கவிழ்க்க மாட்டான் இந்த பையன்" என்று வாணியிடம் தூக்கி கொடுத்து, 'மாட்டுனீயா நீ?' என்று நக்கல் பார்வையல்லவா கொடுப்பாள். ஆக, எதையாவது செய்து விட்டு நவீனிடம் தான் தஞ்சமடைவான்.


"இந்தா வந்துட்டேன், நீ இப்படி தான் செய்வனு தெரியும் ஆளை பார். எனக்கு வேலையே இல்ல, வேலை கொடுக்கிற நீ" என்று பொய்யாய் முறைத்த
வாணி கொண்டு வந்திருந்த தட்டை யாஷ் முன் வைத்து விட்டு ஶ்ரீயும் ஹர்ஷித்தையும் தள்ளி அழைத்துச் சென்று அவர்களுக்கு காய்ச்சி எடுத்து வந்த பாலை குவளையில் ஊற்றி கொடுக்க யாஷ் எதுவும் பேசாது அமைதியான புன்னகையோடு உண்டு முடித்தாள். அப்பொழுது தான் நவீன் உறக்கம் கலைந்து கீழிறங்கி வந்தான் அவனது அலுவலக அறையிலிருந்து. மேலிருந்த தங்களின் அறையை ஹர்ஷித்திற்காக கீழே மாற்றி மேலிருப்பதை அலுவலக அறையாக மாற்றி இருந்தான்.


யாஷ் அருகிலிருந்த நாற்காலியில் சோபையான புன்னகையோடு அமர்ந்து கொண்டவன், "ம்மா, காபி வேணும்" என்று விட்டு தங்களின் அறை புறம் பார்வையை செலுத்தினான், "அக்ஷி இன்னும் எழலையாம்மா?" என்ற வினாவோடு.


"இன்னும் இல்லப்பா" என்றவர் எழுந்து மகளுக்கு தேநீர் தயாரிக்க செல்ல அவனோ எழுந்து அறைக்குள் நுழைந்தான் 'அக்ஷிதா என்ன செய்கிறாள்' என ஆராயும் பொருட்டு. ஆம், யாஷ் உள்ளே சென்ற பின்பு அவனுக்கும் அவளுக்கும் இடையில் பெரிய வாக்குவாதமே நடைபெற்றிருந்தது. 'நான் வீட்டை விட்டு கிளம்புறேன்' என நின்றவளை அமைதி படுத்துவதற்குள் நவீனிற்கு மூச்சே முட்டியது. எப்படியோ அதட்டி உருட்டி அவளை உறங்க வைத்தே மேலே சென்றிருந்தான்.


அவன் உள்ளே நுழைய அக்ஷி மும்மரமாக தன்னுடைகளையும் ஹர்ஷித் உடைகளையும் பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பார்த்திருந்தவனுக்கு ஆயாசமாக இருக்க, அவனின் அரவம் உணர்ந்தாலும் அக்ஷி தீவிரமாய் தன் வேலையில் இருந்தாள், "ப்ச்..அக்ஷி" என்றவனின் சலிப்பை பொருட்படுத்தாது.


"சொல்றதையே கேட்க மாட்டியா நீ?" என்றவன் அவளின் கைகளை பிடிக்க முனைய, "தயவு செய்து கிட்ட வராதீங்க" என்றாள் தீவிரமான பாவையில் இரண்டடி பின்னால் நகர்ந்து. அடிபட்ட பார்வை கொடுத்தவன் தளர்ந்து இருக்கையில் அமர்ந்து, "சரி கிட்ட வரலை, நீ எங்க போவ?" என்றான் தவிப்போடு.


"அது என்னோட பிரச்சனை அதை நான் பார்த்துக்கிறேன்" என்ற பதிலில் எரிச்சலானவன், "லூசு மாதிரி பேசாத டி" என்று கத்த அவனை கண்டு கொள்ளாது அறையை விட்டு வெளியே வந்தவள் சட்டென்று மகனை கைகளில் அள்ளிக் கொள்ள அவனின் பின்பே வெளியேறி வந்த நவீன் ஹர்ஷித்தை ஏறக்குறைய பிடிங்க முயற்சித்திருந்தான்.


"அத்தை" என்று குரல் கொடுத்த அக்ஷி, "அவனை குடுங்க மாமா, ப்ளைட்க்கு டையமாகிடுச்சு" என்றிட வாணியும் வெளியே விரைந்திருந்தார், 'என்ன?' என்பதாய் இவர்களின் தள்ளுமுள்ளில்.


ஹர்ஷித்தோ இருவருக்குமிடையில் அல்லாடியபடி மலங்க மலங்க விழிக்க ஶ்ரீயோ விழிகளில் தோன்றிய அச்சத்தோடு யாஷ் மடியில் தஞ்சமடைந்திருந்தாள்.


"நீ எங்க கிளம்பிட்ட அக்ஷி?" என்ற வாணி அவளின் கையிலுள்ள பயணப்பையை கண்டு வினவ, அமைதியாய் வெறித்த பார்வை பார்த்து நின்றாள் பதில் கூறாது அழுகையை அடக்கியபடி.


"கேளுங்கம்மா, உங்களுக்காவது பதில் சொல்றாளானு பார்ப்போம்" என்ற நவீன் ஹர்ஷித்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்ள, "சரி நான் போகலை, அவங்களை போக சொல்லுங்க" என்று யாஷ்வியை நோக்கி கைக்காட்ட நவீனோடு வாணியும் அதிர்ந்து யாஷை பார்க்க அவளும் அலைபாயும் உணர்வுகளை கட்டுப்படுத்த வெகுவாகவே பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.


"என்ன பேசுற அக்ஷி நீ?" என்று வாணி அதட்ட நவீனோ அவளை பாவமாய் பார்த்து, 'பேசாதே!' என்பது போல் யாசித்து நின்றான். "முடியாது தான? இது அவங்களோட இடம், நான் எப்படி இருக்க முடியும். தப்பு நடந்திடுச்சு ஆனா அதுக்காக அந்த தப்போடவே வாழ்க்கை முழுக்க வாழ முடியுமா? நம்ம எல்லாமே சூழ்நிலை கைதி தான், யாராலையும் யாரையும் குறை சொல்ல முடியாது. தென் அவங்களை விட்டு உங்களால இருக்க முடியாது, ப்ச்...உங்களை இழுத்து பிடிச்செல்லாம் எனக்கு வாழ விருப்பமும் இல்லை. இது தான் சரி, அக்சப்ட் பண்ணலைன்னா கடைசி வரை இரண்டு பேர்ல்ல யாராவது ஒருத்தர் காயப்பட்டுட்டே தான் இருக்கணும்" என்று நீளமாக பேசியவளுக்கு மூச்சு வாங்க அருகிலிருந்த தண்ணீரை எடுத்து வாயில் சரித்து தன்னை நிதானப்படுத்தியவள், "இது இன்னைக்கில்ல, அவங்க வந்திட்டாங்கன்னு தெரிஞ்ச அனைக்கே டிசைட் பண்ணிட்டேன். யெஸ், அப்கோர்ஸ் நான் நிறையவே தடுமாறுனேன் தான், ஆனா அப்போ இருந்து அக்ஷி இவ இல்லை. என்னால என்னை மட்டுமில்ல என்னோட பையனையும் நல்லாவே பார்த்துக்க முடியும், அந்த நம்பிக்கையை கொடுத்தது கூட நீங்க தான். ஆபீஸ்ல்ல டிரான்ஸ்பர் வாங்கிட்டேன். அவங்களே ஸ்டே பண்றதுக்கு வீடும் கொடுத்திட்டாங்க" என்றவள் யோசிக்காது சட்டென்று நவீன் கட்டிய தாலியை கழற்றி அவன் கையில் கொடுத்தாள், "முடிஞ்சுக்குவோம் மாமா எல்லாத்தையுமே, நீங்க சொல்ல மாட்டிங்க உங்களால முடியவும் முடியாது. ஆனா உங்களை கஷ்டப்படுத்தி என்னாலையும் வாழ முடியாது. அவங்களை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியும்" என்றாள் வழியும் கண்ணீரை துடைத்து யாஷை கைக்காட்டி. கொடுத்தவளுக்கு அத்தனை சுலபமாக தோன்றினாலும் அதை பெற்றுக் கொண்டவனுக்கு அப்படியொரு கனமாக இருந்தது கரங்களோடு இணைந்து மனமும்.

மனம் முழுவதும் பாரமேறிய நவீனிற்கு அவளின் வார்த்தையில் நெஞ்சம் அடைக்க, யாஷூம் அதிர்ந்த விழிகளோடு அவளை பார்த்திருக்க, பேச முயன்ற வாணியை கைநீட்டி தடுத்தவள், "இந்த விஷயத்தில நான் யார் சொல்றதையும் கேட்கிறதா இல்லத்தை, நான் முடிவு பண்ணிட்டேன். மாமா வரடடும் தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். நான் கிளம்புறேன்" என்றவள் சட்டென்று நவீனை அணைத்துக் கொண்டாள்.


தொண்டை அடைக்க, "இன்னைக்கு நீங்க இல்லைன்னா நானும் ஹர்ஷித்தும் இருந்திருக்க மாட்டோம். தாங்க் யூ சோ மச் அன்ட் லவ் யூ. என்னைக்குமே உங்களை மறக்க மாட்டேன்" என்று அவனின் மார்பில் முகத்தை வைத்து ஒரு நிமிடம் அழுத்தி நவீனின் கழுத்தை கட்டிப் பிடித்திருந்த மகனை இழுத்துக் கொண்டவளின் கைகளை பிடித்துக் கொண்டான் நவீன் தவிப்புடன். அத்தனை வலித்தது ரணமாய் மனது முழுவதும். "ஹர்ஷித்தை எப்படி நான் பார்க்காம இருப்பேன் அக்ஷி, அவன் என்னோட பையன்" என்றான் இயலாமையோடு வலியை விழிகளில் தேங்கி. கண்கள் கலங்கும் போல் தோன்றியது ஆர்பரிப்போடு கைத்தூக்கி தன்னிடம் தாவ முயலும் மகனைக் கண்டு.


இதழை அழுத்திக் கடித்துக் கொண்டவள் அவனின் கூற்றை உறுதியாக மறுத்து தலையசைத்து, "எப்பயுமே அவன் என்னோட பையன் மட்டும் தான் மாமா" என்றாள் உடைய முயன்ற மனதை தேற்றியவாறு.

"ப்ச்..அக்ஷி" என்றவனின் வார்த்தைகளில் ஆதங்கம் மேலோங்க, "நான் இந்த முடிவை மனப்பூர்வமா தான் எடுத்தேன். உங்க கூட இருந்த கொஞ்ச நாளுமே நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன், வேற யார் என்னோட லைப்ல்ல வந்திருந்தாலும் எதாவது ஒரு விதத்திலையாவது என்னையோ ஹர்ஷித்தையோ காயப்படுத்தி இருப்பாங்க பட் நீங்க அப்படி இல்ல. உடைஞ்சு போயிருந்த என்னை மீட்டுக் கொடுத்திருக்கீங்க. அத்தையும் அப்படி தான், ஹர்ஷித்தை அவங்களோட பேரனா தான் பார்த்தாங்க சோ ஸ்வீட் நீங்க ரெண்டு பேரும். உங்களையும் அத்தையையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் ஆனா உரிமையில்லாத இடத்தில இருக்க முடியாது. அதுவும் அவங்க இருக்கும் போது நானும் இருந்தா அது ரொம்பவே கஷ்டம் எங்க ரெண்டு பேருக்குமே. அதை விட உங்களுக்கும், எங்களுக்கு இடையில் நின்னு நீங்க தவிக்க வேணாம். இதோட முடிச்சுக்கலாமே மாமா" என்று அழும் வாணியை அணைத்துத் தோள் தட்டி யாஷ் முன்பு வந்து நின்றாள்.


யாஷின் விழிகளிலும் கண்ணீர் தேங்கி நிற்க வார்த்தை வரவில்லை. "உங்களை நம்பி தான் நவீன் மாமாவையும் அத்தையையும் விட்டு போறேன், பார்த்துக்கோங்க" என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வெளி வராது மூச்சடைக்க சட்டென்று அவளை பேச விடாது இழுத்து அணைத்துக் கொண்டாள் யாஷ்வி. அப்படியொரு அழுகை இரு பெண்களிடமும். பார்த்திருந்த நவீனுக்கும் லேசாக நீர் படலம் மேலிட வாணி தளர்ந்து அமர்ந்து விட்டார் முகத்தை மூடிக் கொண்டு அதற்கு மேல் எதையும் தாங்கும் சக்தியின்றி...





தொடரும்...

 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Akshi sollurathu ah partha appo harshi naveen oda paiyan illaiya athu na la than ava appa kita poga bayapadrala ah akshi sattunu kelambita aana naveen eppo varuvan nu avan kita sollurathu than wait pannitu irundha la
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Ithu Enna ma puthu twistuuuu, akshi Enna solraa. Appo arshith Naveen kulanthai illaya. Iva Enna sudden ah kilambitta
Romba kastama irukku
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ethu enna puthu twist ya iruku harshith yaru payan 🙄🙄ennoda payan nu sollura aashi epadi sudden ya mudiyu edutha naveen eppo enna panna pora ne 😢😢😢
 
Top