• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 2:

நானும் அவனும்

உயிரும் உடம்பும்…

“நான் சொன்ன கரெக்ஷெனைப் பண்ணி எடுத்துட்டு வாங்க” என்ற ஜீவா கையில் இருந்த கோப்பை எதிரில் இருந்த தனது காரியதரிசி ராகுலிடம் நீட்டினான்.

“சரிங்க சார்” என்ற ராகுல், “அப்புறம் ரோஜா ஸ்டோருக்கு பேமெண்ட் இன்னும் பண்ணலையே?” என்று கேள்வியாக நோக்க,

“அவங்களை நேர்ல வர சொல்லி இருந்தேனே?” என்று ஜீவா மறு கேள்வி கேட்டான்.

“ஆமா சார். பட் அவங்க வர்ற ஐடியால இருக்க மாதிரி தெரியலை” என்று ராகுல் இழுக்க,

“வரலைன்னா அவங்க அக்ரிமெண்ட்டை கேன்சல் பண்ணிடுவோம்னு சொல்லுங்க. நமக்கு ப்ராடெக்ட் குவாலிட்டி தான் பர்ஸ்ட்” என்று ஜீவா முடித்துவிட்டான்.

“சரிங்க சார் நான் இன்பார்ம் பண்ணிட்றேன்” என்று ராகுல் பதில் கூற,

“யு மே லீவ்” என்று ஜீவா மற்ற வேலையை கவனிக்க துவங்கினான்.

ராகுல் வெளியேறிய சமயம், “அப்பா…” என்ற கூவல் கேட்க,
இவன் இதழ்களில் புன்னகை முகிழ்ந்தது.

“அதி…” என்றவன் அழைக்க,

“அப்பா…” என்று ஓடி வந்து தந்தையின் கால்களை கட்டி கொண்டான்.

“எப்படி வந்த? யார் அழைச்சிட்டு வந்தது உன்னை?” என்று ஜீவா வினவ,

அவன் பதில் மொழிவதற்குள், “மெதுவா வர வேண்டியது தான அதி” என்று கடிந்தபடி உள்ளே நுழைந்தாள் மஹிமா லாவண்யாவின் தங்கை.

மஹியின் கைகளில் ஜீவா லாவண்யா தம்பதியின் இரண்டு வயது மகன் அர்னவ்.

தந்தையை கண்டதும் முகம் மலர்ந்து, “ப்பா…” என்று மழலையில் மிழற்றியவன்,

“தூக்குப்பா…” என்று கையை நீட்டினான்.

“அப்பாவ பாக்க வந்தீங்களா செல்லம்” என்று சிரித்தபடி வாங்கியவனது முகம் மஹிமாவை கண்டு மாறாதிருக்க சிரமப்பட்டான்.

“நீ எதுக்கு பிள்ளைங்களை கூட்டிட்டு அலைஞ்சிட்டு இருக்க?” என்று ஜீவா சாதாரணம் போல வினவினாலும் குரலில் அழுத்தம் இருந்தது.

“ஷாப்பிங் போகலாம்னு அழைச்சிட்டு வந்தேன். சரி பக்கத்தில தான இருக்கீங்கன்னு பாக்க வந்தேன்” என்றவள் அவனது குரலை அசட்டை செய்ய,

“இன்னும் கொஞ்ச நேரத்தில நானே வீட்டுக்கு வந்திருப்பேன்” என்று குரலில் அழுத்தத்தை கூட்டினான்.

“பசங்க தான் மாமா கேட்டாங்க” என்று அவர்கள் மீது பழியை போட்டவள் இருக்கையில் வாகாக அமர்ந்து கொள்ள, அதி அவளருகே அமர்ந்தான்.

தாயிடம் கூறி தான் இவளை கண்டிக்க வேண்டும் என்று எண்ணியவன் அமர்ந்து, “என்ன குடிக்கிறிங்க?” என்று வினவ,

“எனக்கு பூஸ்ட்” என்று அதி கூற,

“எனக்கும்” என்று அர்னவ் இணைந்து கொண்டான்.

“எனக்கு சாக்லேட் மில்க்ஷேக் மாமா” என்று மஹி கூற, ஜீவா அலைபேசியை எடுத்து அவர்கள் கூறியதை எடுத்து வர சொன்னான்.

பிறகு அதிரனிடம், “அதி இனிமேல் அப்பாவ பாக்கணும்னு கேக்க கூடாது. நைட் வீட்டுக்கு வந்திட்றேன் தான?” என்று வினவ,

“சரிப்பா” என்று அதிரன் தலையசைத்தான்.

அர்னவ்விற்கு சொல்லி புரிய வைக்கும் வயதில்லை என்பதால் அவனிடத்தில் கூறவில்லை.

இது தன்னால் தான் என்று தெரிந்தும் மஹிமா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் நகக்கண்களில் பார்வையை பதித்தாள்.

“அப்புறம் எதாவது வேணும்னா அப்பாக்கிட்ட கேளுங்க அப்பா வாங்கி தர்றேன்” என்று ஜீவா மஹியின் மீது பார்வையை பதித்தபடி கூற,

விழுக்கென்று நிமிர்ந்தவள், “ஏன் ஏன் நான் என் அக்கா பசங்களுக்கு நான் வாங்கி தர கூடாதா?” என்று கோபமாக மஹி கேட்டாள்.

“ஹ்ம்ம் வாங்கி தரலாமே. நீ அவங்களுக்கு சித்தியா தாரளமா வாங்கி தரலாம்” என்று அழுத்தம் திருத்தமாக ஜீவா இயம்ப,

மஹிமா பதில் கூறுவதற்குள், “சார்…” என்று பணியாளரின் குரல் கேட்டது, அதில் நிதானித்தவள் அமைதியாகிவிட்டாள்.

“யெஸ் கம் இன்” என்று ஜீவா குரல் கொடுத்ததும்,

கையில் அவர்கள் கேட்ட பானத்தோடு உள்ளே நுழைந்தார் பணியாளர்.

“வச்சிட்டு போங்க” என்று ஜீவா கூறியதும் அவர் அகன்றார்.

“குடிச்சிட்டு கிளம்புங்க எனக்கு வொர்க் இருக்கு” என்று ஜீவா மொழிய, மஹி பூஸ்ட்டை எடுத்து அதிரனுக்கு குடிக்க உதவ விழைந்தாள்.

“அதி நீ பிக் பாய்தான?” என்று ஜீவா வினவ,

எதற்கென தெரியவில்லை எனினும், “எஸ் ப்பா ஐ ஆம் அ பிக் பாய்” என்று சிரிப்புடன் அதி பதில் அளித்தான்.

“பிக் பாய்ஸ் எல்லாம் அவங்க வொர்க்கை அவங்களே பார்ப்பாங்க. ஸோ உன்னோட வொர்க்கை நீ தான பாக்கணும்” என்று கேள்வியாக அதிரனை நோக்க,

“எஸ் ப்பா” என்று ஆமோதித்தான் அதிரன்.

“அப்போ உன்னோட பூஸ்ட்டை எடுத்து நீயே குடி” என்று ஜீவா கூறியதும்,

“ஓகேப்பா” என்றவன் மஹியிடம், “சித்தி நானே குடிக்கிறேன்” என்று வாங்கி அருந்த துவங்கினான்.

தன் மடியில் அமர்ந்திருந்த அர்னவ்விற்கு தானே புகட்டியவன், “உன்னோடதை குடி மஹிமா” என்று அவளைப் பார்க்காமல் கட்டளையிட்டான்.

அவனது செயலில் புசுபுசுவென கோபம் வந்தவள் ஏதோ கூற விழைய, “எனக்கு என் பசங்கள பாக்க தெரியும் மஹி. நீ உன்னோட லைஃபை பாரு. தேவையில்லாம ஆர்க்யூ பண்ணாத எனக்கு நிறைய வொர்க் இருக்கு” என்று தெளிவாக முடித்திட, தனது அத்தையிடம் கூறித்தான் இதனை சரிசெய்ய முடியும் என்று நினைத்தவள் அமைதியாக பானத்தை பருகினாள்.

பதினைந்து நிமிடங்கள் கடக்க, “வீட்டுக்கு போனதும் இன்பார்ம் பண்ணு. இனிமேல் வொர்க்கிங் ஹவர்ஸ்ல வந்து டிஸ்டர்ப் பண்ணாத” என்று சற்று உரத்த குரலில் கூறிவிட, மஹியின் முகம் அனிச்ச மலராய் வாடியது.

அதனை கவனித்த ஜீவாவிற்கும் வருத்தமாக போய்விட்டது. சிறு வயதில் இருந்து தான் பார்த்து வளர்ந்த பெண் என்று மஹியின் மீது பாசம் இருந்தது. இருப்பினும் தான் சற்று இளகினால் இவள் ஏறிக்கொள்வாள் என்று முகத்தை இறுக்கமாகவே வைத்து கொண்டான்.

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் பிள்ளைகளை அழைத்து கொண்டு கிளம்ப, ஜீவா சலிப்புடன் தலையை சாய்த்தான்.

மேலும் இரண்டு மணி நேரம் வேலையை கவனித்தவன் ராகுலிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டை நோக்கி சென்றான்.

இவனுக்காக காத்திருந்த பரமேஸ்வரி ஜீவாவை கண்டதும் எழுந்து வந்து கையில் இருந்த பையை வாங்க முயற்சிக்க, “ம்மா நான் எனக்காக வெயிட் பண்ணாதீங்கன்னு சொல்றேன் தான. சாப்பிட்டு போய் படுக்க வேண்டியது தான” என்று அலுப்பும் சலிப்புமாக சொல்ல,

“கொஞ்சம் நேரம் வெயிட் பண்றதுல என்ன ஆக போகுதுடா” என்று பரமேஸ்வரி பதில் அளித்தார்.

“பேக்கை நான் வச்சிக்கிறேன். நீங்க முட்டி வலியோட மேல ஏறி இறங்காதீங்க” என்று ஜீவா நகர,

“சரிப்பா ப்ரெஷ்ஷாகிட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று தாய் பதில் மொழிந்தார்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன், “பசங்க எங்க?” என்று வினவிட,

“இவ்ளோ நேரம் விளையாடிட்டு இருந்தாங்க இப்போ தான் சாப்பிட்டதும் ஷியாமளா தூங்க வைக்க கூட்டிட்டு போனா” என்று பதில் அளித்தார்.

“சரிம்மா” என்றவன் அறைக்கு சென்றான்.

வழக்கம் போல வெறுமையான அறை வரவேற்க உள்ளுக்குள் சொல்லவியலாத வலி வியாபித்தது. அதனை ஒதுக்கி தள்ளியவன் உடைமாற்றி முகம் கைகால் கழுவி வந்தான்.

பரமேஸ்வரி அமைதியாக உணவை பரிமாறினார். இது தான் சமயம் என்று நினைத்தவன், “ம்மா மாமாக்கிட்ட சொல்லி இனி மஹி என்ன பாக்க வர கூடாதுனு சொல்லுங்க” என்றிட,

“ஏன்பா?” என்று எதுவும் அறியாதது போல வினவினார்.

அவரை உறுத்து விழித்தவன், “ஏன் உங்களுக்கு தெரியாதா?” என அழுத்தமாக கேட்க, அவரிடம் மௌனம்.

“ம்மா அவ சின்ன பொண்ணும்மா புரியாம பண்றா. அவளுக்கு எடுத்து சொல்லாம நீங்களும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிங்க” என்று சிறிது சலித்தபடி கூற,

“எனக்கு முதல் இது ஒத்துவராதுனு தான் தோணுச்சு. ஆனால் அண்ணா அண்ணிதான் மஹி விருப்பம் சரியாத்தான் இருக்கும்ணு என்னை சம்மதிக்க வச்சாங்க. அவளும் ரொம்ப பிடிவாதமா இருக்கா” என்று பரமேஸ்வரி தனது தரப்பை இயம்பினார்.

“அவங்க சொன்னா நீங்க யோசிக்க மாட்டீங்களா?” என்று ஜீவா காட்டமாக கேட்க,

“உனக்கும் ஒன்னும் பெருசா வயசாகிடலையே ஜீவா. இந்த வயசுலே நீ ஏன் தனியா கிடந்து கஷ்டப்படணும்” என்று தாயாய் ஆதங்கம் கொண்டார்.

“ம்மா நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா?” என்று ஆயாசமாக ஜீவா கேட்க,

“எல்லாம் புரியிது டா. தெரிஞ்சு தான் பேசுறேன். அர்னவ்க்கு இரண்டு வயசு தான் ஆகுது. அவனுக்கு தாயோட அரவணைப்பு வேணாமா?” என்று அழுத்தமாக கூறினார்.

“என் பிள்ளைங்களை பாத்துக்க கஷ்டமா இருக்காம்மா?” என்று ஜீவா கேட்டதும், “போட்டேன்னா ஒன்னு” என்று கோபமாக கையை உயர்த்தியவர், “என் பேரன் பிள்ளைகள பாக்க எனக்கு கஷ்டமா?” என்று வேதனை ததும்ப இயம்பினார்.

அதில் தான் இளகியவன் நிதானமான தன்மையான குரலில், “ம்மா ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க. எனக்கு எதுவும் வேணாம். என்னை இப்படியே விட்ருங்க. என் பிள்ளைங்களை வளர்த்து ஆளாக்க எனக்கு தெரியும்” என்று மொழிய,

“இப்போ எதுவும் தெரியாது. வயசான காலத்துல தனிமை கொடுமையா இருக்கும்டா” என்று பரமேஸ்வரி எடுத்து கூறினார்.

‘இப்போவே அப்படிதான் இருக்கு’ என்று மனதிற்குள் நினைத்தவன் ஒரு புன்னகையுடன், “அதை அப்போ பாத்துக்கிறேன் மா. நீங்க மஹிய கூப்பிட்டு தெளிவா சொல்லிடுங்க. அவ இனிமேல் ஆபிஸ் பக்கம் வர கூடாது” என்று கட்டளை போல சொல்ல,

“எனக்கு தெரியாது டா. நீயே அவக்கிட்ட பேசிக்கோ. நான் சொன்னா அவக் கேட்க மாட்டா” என்று பரமேஸ்வரி ஒதுங்கி கொண்டார்.

“நான் கோபமா ஏதாவது பேசுனா அவ அப்சட் ஆகிட்றாம்மா. அதை பாத்து எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு ஷியாமாப் போல தான் அவ தெரியுறா” என ஜீவா தனது எண்ணத்தை வெளியிட,

“இதை அவக்கிட்ட சொல்லிடாதடா. நான் உங்களுக்கு தங்கச்சியான்னு சண்டைக்கு நிப்பா” என்று பரமேஸ்வரி மஹியை அறிந்தவளாக கூறினார்.

“பெரியவங்களா எடுத்து சொல்லாம அவ இஷ்டத்துக்கு ஆட விட்றீங்கள்ல இப்படி தான் பண்ணுவா அவ. நீங்க எதுவும் பேச வேண்டாம் நான் அவளை டீல் பண்ணிக்கிறேன்” என்று கோபமாக எழுந்து கொள்ள,

“டேய் கோபத்தை சாப்பாட்டுல காட்டாதடா” என்று பரமேஸ்வரி தாயாக அக்கறை கொண்டார்.

“எனக்கு போதும்மா” என்றவன் கை கழுவி வர,

“அவ சின்ன பொண்ணு டா கோபமா எதுவும் பேசிடாத” என்று பரமேஸ்வரி பதற,

“நீங்க பேச மாட்டேன்னு சொல்லிட்டிங்கள்ல. நான் எப்படி பேசணும்னு எனக்கு தெரியும்” என்றவன் விறுவிறுவென படியேறி தங்கையின் அறைக்கு சென்றான். ஷியாமளா இளையவர்கள் இருவரையும் உறங்க வைத்திருந்தாள்.

சகோதரனை கண்டதும் படித்து கொண்டிருந்தவள் “அண்ணா” என்று எழுந்து கொள்ள, “உட்காரு” என்று சைகையில் கூறியவனது பார்வை மகன்களிடம் பதிந்தது. இத்தனை நேரம் இருந்த கோபம் விலகி முகம் இளகியிருந்தது.

“சாப்பிட்டு விளையாடிட்டு இருந்தாங்க டைம் ஆனதால நான் தூங்க வச்சிட்டேன்” என்று தங்கை விளக்கம் தர,

அமைதியாக தலையசைத்தவனது கரம் அதியின் சிகை வருடியது. சில நிமிடங்கள் கடக்க, “நான் ரூம்க்கு தூக்கிட்டு போறேன்” என்று ஜீவா நிமிர்ந்து ஷியமளாவை காண,

“வேண்டாம் இங்கயே தூங்கட்டும் ண்ணா‌‌. தூக்கும் போது எழுந்துட்டா அழுவாங்க” என்று ஷியமளா மறுத்தாள்.

எழுந்தால் மீண்டும் உறங்க ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்பதால், “சரி” என்று தலையசைத்தவன் மெதுவாக இருவரது நெற்றியிலும் இதழ் பதித்து விலகினான். அண்ணனின் நிலை உணர்ந்த ஷியாமளாவிற்கும் மனது பாராமாய் போனது.

தங்கையின் புறம் திரும்பியவன், “நைட் அழுதா என்னை கூப்பிடு. உன்னால் தனியா சமாளிக்க முடியாது” என்க, “சரிண்ணா” என்று தலையசைத்தாள் ஷியாமளா‌.

“நாளைக்கு எக்ஸாமா?” என்று ஜீவா கேட்க,

“ஆமா இன்டர்நெல் இருக்குண்ணா” என்று பதில் அளித்தாள்.

“ஹ்ம்ம்…” என்ற ஜீவா நகர விழைய,

“சாப்பிட்டியாண்ணா” என்ற தங்கையின் பாசமான குரல் தடுத்தது.

திரும்பி மெதுவாக புன்னகைத்தவன், “சாப்பிட்டேன்” என்று கூற, அடுத்து என்ன பேசுவதென அவளுக்கு தெரியவில்லை.

“படிச்சிட்டு சீக்கிரமா தூங்கு” என்று அவளது நிலை அறிந்து கூறியவன் வெளியேறினான்.

இங்கு அறைக்குள் வந்து கதவடைத்தவனது விழிகள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் பதிந்தது.

அதில் அழகாய் சிரித்திருந்தாள் லாவண்யா. புகைப்படத்தின் மீது போடப்பட்டிருந்த மாலை அவளது இன்மையை‌ உணர்த்தியது.

வழக்கம் போல ஏன் என்னை தவிக்க விட்டு சென்றாய் மனதிற்குள் மனையாளிடம் கேட்டவன் பதில் வராது என்று உணர்ந்து மெத்தையில் வி
ழுந்தான்.

இரண்டு வருடங்களாக அவனுக்கு போக்கு காட்டிய உறக்கம் இன்றும் அதையே தொடர விழி முடி படுத்துகிடந்தான்.

இந்த தனிமையின் கொடுமையில் சிக்கி தவிப்பனுக்கு எப்போது தான் விடுதலையோ…?







 
New member
Messages
3
Reaction score
1
Points
3
Daily episode update varuma eagerly waiting next episode janu 😍jeeva
 
Well-known member
Messages
480
Reaction score
346
Points
63
Lavanya erandhu poitagala ah. jeeva ku mattum love life eppovum konjam kalam than iruku first jeevi ah piriyura nilamai ippo lavanya pavam jeeva
 
Top