• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 2

வீட்டின் கதவை திறந்த யாஷ்வி எதிரில் அதாவது இரண்டு வீடு தள்ளியிருந்த கதவை நோக்கி செல்ல அவளுக்கு முன்பாக ஷமீரா தன் பிஞ்சு பாதங்களை கொண்டு ஓடியிருந்தாள்.

"ஹேய் மெதுவா போ ஷமீ, கீழ விழுந்து வைக்காத" என்று அதட்டலுடன் அவ்விடம் விரைந்த யாஷ்வி அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்த ஐம்பதை கடந்திருந்த பெண்மணி வந்து கதவை திறந்தார்.

அவர்களை கண்டு அவரது முகத்தில் லேசாக புன்னகை அரும்ப, "வா யாஷ், ஷமீ குட்டி" என்று வரவேற்றப்படி ஷமீராவை கையில் அள்ளிக் கொள்ள மூவரும் உள்ளே நுழைந்திருந்தனர்.

"என்ன சாப்பிடுறீங்க ரெண்டு பேரும் காபியா? டீயா?" என்றவர் அடுப்பறை நுழைய முனைய, "எதுவும் வேணாம் ஆன்ட்டி, இப்ப தான் சாப்பிட்டு வந்தோம்" என்று யாஷ் அவரின் கைகளை பிடித்து மறுக்க அறையிலிருந்து நெடிய உருவம் ஒன்று வெளியில் வந்து ஷமீராவின் தலையில் லேசாக தட்டி விட்டு தோளை தொட்டுக் கொண்டிருந்த ஒரு பக்க குடுமியை லேசாக பிடித்து இழுத்தது.


"டேய் பிரபு, என்ன பழக்கம் பொம்பளை பிள்ளை மேல கை வைக்கிறது" என்று அந்த பெண்மணி அந்த நெடியவனை கடிய அதை காதில் வாங்காது ஷமீராவை கைகளில் அள்ளி மேலும் சில பல நிமிடங்கள் வம்பு வளர்த்தான். அவர்கள் ரூபாவின் சொந்தம், தூரத்து உறவினர்கள். பிரபுவிற்கும் யாஷ்விக்கும் மனோ திருமணத்தில் இருந்து அறிமுகமுண்டு. அவன் மூலம் தான் கல்லூரியின் இடமாற்றமும் கூட. ஆக, யாஷ்வியின் தோழன் நலம்விரும்பியும் ஆவான்.



சிறிது நேரத்தில் அந்த பெண்மணி யாஷ்வி கைகளில் ஒரு சின்ன பாக்ஸை கொடுத்திருந்தார். அவ்வப்பொழுது யூட்யூப்பில் எதையாவது பார்த்து புதிது புதிதாக ஆராய்ச்சி செய்து அடுத்தவர்களுக்கு கொடுத்து சோதனை செய்து மகிழ்வதில் அவருக்கொரு அலாதி இன்பம். மோசமில்லை என்றாலும் ஓரளவு சுமாராக சமைப்பார். ஆக, யாஷ்வியும் ஷமீராவும் சோதனை எலிகளாக தான் வந்திருந்தனர்.


"சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குணு சொல்லு யாஷ்ம்மா, ரூபா ரெசிபி கேட்டா, நான் வாட்சப்ல அனுப்புறேன் சொல்லு" என மேலும் சில நிமிடங்கள் பேச்சை வளர்த்தே அவர்களை கிளம்ப அனுமதியளிக்க யாஷ்வியின் விழிகள் ஷமீயிடம் நிலைத்தது. அவளோ பிரபுவின் கைகளை பிடித்து கிள்ள அடிக்க என சாகசம் செய்ய அவனோ மேலும் கீழும் என்று கைகளை இழுத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் முயல்குட்டிக்கு.


"ஷமீ, கிளம்பலாமா?" என்று யாஷின் வினாவிற்கு, "நீ போ யாஷ், இவளை அனுப்ப முடியாது" என்ற பிரபுவின் குரல் புன்னகையுடன் வெளிவர யாஷும் புன்னகைத்து தலையசைப்புடன் நின்றிருக்க மேலும் அவர்களின் விளையாட்டு நீடித்தது.

யாஷ் செய்து கொண்டிருந்த எழுதும் வேலையை பாதியில் விட்டு வந்திருக்க, "பிரபு, டையமாகிடுச்சு. எனக்கு வொர்க் இருக்கு" என்று முணுமுணுக்க, "நீ போ யாஷ், நான் இவளை அழைச்சுட்டு வரேன்" என்றவன் கரங்கள் ஷமீராவை இறுக்க, "அத்தை போகாதீங்க, நானும் வரேன்" என்று ஷமீயின் குரல் கீச்சிட்டது.

இருவரது விளையாட்டிலும் ஆயாசமாக தலையசைத்த யாஷ் லேசான முறைப்புடன், 'என்னமோ பண்ணித் தொலையுங்கள்' என நினைத்து, "போய்ட்டு வரேன் ஆன்ட்டி" என்று இதழசைத்து தூரத்தில் நின்று அலைபேசியில் ரூபாவிடம் உரையாடிக் கொண்டிருந்த பெண்மணியிடம் கையசைத்து கதவை திறந்து வெளியேற, "அத்தை" என்று கூக்குரலோடு ஷமீ எழுந்து ஓட பிரபுவும் புன்னகையுடன் முயல்குட்டியின் கையை பிடித்து இழுக்க என்று ஒரு அக்கப்போரே நடைபெற யாஷின் இதழ் நன்றாகவே விரிந்து கொண்டது. இதில் பிரபு வேறு ஷமீயை போலவே, "அத்தை" என்று குரல் மாற்றி கீச்சிட யாஷ்வியால் தான் தன் சிரிப்பை அடக்க இயலவில்லை. இது எப்பொழுதும் வழக்கமான ஒன்று தான்.


யாஷ்வியின் பின்பே தான் ஷமீயும் பிரபும் வந்து கொண்டிருந்தனர். திரும்பி பார்த்து புன்னகைத்தப்படி முன்னேறியவளின் கால்களை ஓடி வந்து ஷமீ கட்டிக் கொள்ள பிரபுவும் 'ஷமீ விழுந்து விடப் போகிறாள்' என்ற எண்ணத்தில் பாதுகாப்பாய் யாஷின் அருகில் வந்திருந்தான்.. நடந்து கொண்டிருந்த அலப்பறையில் யாஷ்வி தன்னெதிரில் வந்திருந்தவனை கவனிக்காது மோதியிருக்க கையிலிருந்த பாக்ஸ் திறந்து அவனின் உடையை அபிஷேகம் செய்திருந்தது அந்தோ பரிதாபம்.


அலைபேசியில் காது கொடுத்து அவசரமாக வெளியேற முனைந்தவனிற்கும் இவர்களின் வரவு கவனத்தில் ஏறியிருக்கவில்லை. அப்படியொரு கோபம் துளிர்க்க எதிரிலிருந்தவனிடம் "இடியட்.." என்று கத்திய கத்தலில் ஷமீ மட்டுமின்றி யாஷூமே பதறி பயத்தில் விழிகளை
மூடிக் கொண்டனர். யாஷின் இதயத்துடிப்பு எகிறித் தான் துடித்தது, பார்வையால் மட்டும் துரத்திக் கொண்டிருந்தவனின் அதட்டல் அவளை உறைய செய்திருந்தது. ஆம், அவன் நவீன்.


அழைப்பை துண்டித்த நவீனை கண்ட பிரபு ஆடவனின் அதட்டலான உடல் பாவனையில் சட்டென்று யாஷின் கைகளை பிடித்திருந்தான் ஆதரவாக. அந்த செய்கை நவீனை இன்னும் பிரவாகமாக பொங்க செய்ய எரிச்சலுடன் நெற்றியை தேய்த்தவன் யாஷை நோக்கி ஓரடி முன்னேற, "தெரியாம நடந்திடுச்சு பாஸ், விட்டுடுங்களேன்" என்ற பிரபு யாஷ்விக்கு பரிந்து அவர்களுக்கிடையில் வர பெண் அப்பொழுது தான் விழிகளை மலர்த்தி நவீனை பார்த்தாள் அதிர்வோடு. அவனது விழிகளோ யாஷின் மீதிருந்த பிரபுவின் கைகளிலே அதிருப்தியாய் அழுத்தமாய் படிந்து மீள, 'அவ தான இடிச்சா, ஏன் அவ பேச மாட்டாளா! ஊமையா என்ன? இவன் யார், இடையில் வர?' என்று நவீனின் பார்வை பிரபு மீது பாய்ந்தது. ஒரு வித அலட்சியமான பார்வையும் கூட.


பேதை சட்டென்று ஆடவனின் விழிகளை படித்தவளாக தன் மீதிருந்த பிரபுவின் கையை நாசூக்காக விலக்கி விட்டாள். முறைப்பு பிரபுவிடமிருந்தாலும் யாஷின் நடவடிக்கையை கண்டு கொண்டவன் இதழில் குறுஞ்சிரிப்பொன்று உதிர்ந்து மறைந்தது கண நேரத்தில். பெண்வளின் விழிகளும் அதை சிறைப்பிடித்துக் கொண்டது.
ஆக, அவளுக்கு தன்னை தன்னுடைய பார்வையை புரிகிறதென்ற உவகை ஆடவனை சிலிர்க்க செய்தது.


"பிரபு, டேய்" என்று அவனுடைய வீட்டிலிருந்து அழைப்பு வர, "நீங்க போங்க பிரபு, நான் பார்த்துக்கிறேன்" என்று அவனை அனுப்பிய யாஷ்வி தன் காலை இறுக்கி பிடித்திருந்த ஷமீராவை கைகளில் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நவீனை பார்த்தவள், "சாரி" என்ற முணுமுணுப்போடு நகர்ந்தாள். யாஷின் விழிகள் கலங்கியிருந்தது. சில அடிகள் நகர்ந்தவள் தன்னையும் மீறி திரும்பி ஆடவனை பார்க்க, அவனும் நகராது கால்சராயில் கை விட்டுக் கொண்டு அவளை தான் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்.


எப்பொழுதும் போல் அவனின் புருவம் 'என்ன?' என்பதாய் ஏறியிறங்க இதழ்களோ வளைந்தது எந்தவித அலட்டலுமின்றி. அதாவது இப்படியொரு நிகழ்வே நடைபெறாதது போல் இயல்பான உடல் மொழியுடன்!


இருபுறமும் தலையசைத்தவள், 'போடா' என்று தலையை சிலுப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். நடந்து விட்ட நிகழ்வை அசைபோட்டவளுக்கு புரிந்ததென்னவோ அவனின் கோபம் யாஷின் செய்கையின் விளைவல்ல, அது முற்றிலும் பிரபுவின் செயலுக்கான பிரதிபலிப்பு என்று மனது அடித்துக் கூற அப்படியொரு ஆயாசம் தோன்ற நெற்றியை தேய்த்துக் கொண்டாள் பெருமூச்சு விட்டப்படி.

'யாரடா நீ? இப்படி திடீரென்று முளைத்து என்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாய் கிராதகா!' என்று அவனிலே எண்ண அலைகள் சீரான அலைவரிசையில் பயணிக்க துவங்க தன் எண்ணப்போக்கை கண்டு திடுக்கிட்டு, 'இது தவறென்று' மூளை பெண்ணை இறுக்கி பிடித்து களவாளமிட்டது, அதற்கு மேல் சிந்திக்க விடாது. அன்றைக்கு பின் அந்த நிகழ்வை மறந்து போயிருந்தாலும் ஆடவனின் மீது சற்று கிலி கூடியிருந்தது. ஒரு வாரமாகிற்று அவனின் தரிசனம் கிடைத்து. இரண்டு நாட்கள் அவனின் மீதான கோபத்தில் அதை கண்டு கொள்ளாத பாவையின் உள்ளம் தடுமாறியது என்னவோ உண்மை. மின்தூக்கியில் ஏறியதிலிருந்து அவன் தென்படுகிறானா என்று அலைபாயும் விழிகளுடனே ஸ்கூட்டியை உயிர்ப்பித்தும் நிற்பாள் சில நொடிகள், எங்கிருந்தாவது ஹாரன் ஒலிகள் கேட்டு விடாதா என்று!


தன்னுடைய செய்கை அபத்தமென்று மூளை எச்சரித்தாலும் ஏனோ அவனை நோக்கி செல்லும் மனதை இழுத்துப்பிடிக்கும் வழி தெரியவில்லை. மின்தூக்கி ஒவ்வொரு தளங்களிலும் திறந்து மூடும் பொழுதும் கண்கள் ஆர்வமாய் வெளியில் அலைபாயும் உள்ளே நுழைபவர்களை நோக்கி. வெகுநாட்களல்ல ஒரே ஒரு வாரம் மட்டுமே, அந்த வார இறுதியில் ஞாயிறன்று கடைவீதிக்கு சென்று திரும்பியவளுக்கு வண்டி நிறுத்துமிடத்தில் காட்சியளித்தான்.


அன்றைக்கு போல் முதுகில் பையொன்று தொற்றியிருக்க இலகு உடையில் நின்றிருந்தவனின் பார்வை தன்னருகில் வண்டியில் அமர்ந்திருந்தவள் மீது படிந்தது. 'அவனுக்கு ஏதுமில்லையே' என்று மேலிருந்து கீழாக பரிதவிப்புடன் ஆராய்ந்த பெண்ணவளின் விழிகள் கலங்கியது தன்னையறியாமல். கவனித்து விட்டவனின் விழியோரம் சுருங்க இதழ் விரிந்தது ஒரு மந்தகாசமான புன்னகையுடன், 'நீ என்னை தேடினாயா என்ன?' என்ற ரீதியில்.


'ப்ம்ச்..' என்று சலித்தவள் தன்னை மறைத்து ஓட்டம் பிடித்து மின்தூக்கியில் தஞ்சமடைந்து, 'அவன் வருவதற்குள் கதவு மூடி விட வேண்டும்' என்று கண்களை மூடி பிராத்தனை செய்திருக்க அதை பலிக்க விடாது ஓடி வந்து ஏறியிருந்தவன் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டை அவளின் தோளை வலுவாக உரசியிருந்தது.

"ஷ்ஷ்.." என்றவளின் முகம் வலியில் லேசாக சுருங்க, அதை கண்டு கொண்டவன் மட்டையை வலது கையிலிருந்து இடது கையிற்கு இடம் மாற்றி அவளின் மீது பார்வையை படர விட்டான்.

'க்கும்..இதுக்கொன்றும் குறைச்சலில்லை. அட டேய், ரொம்ப படுத்துற நீ!..' என்று நொந்தவளுக்கு அவனை தேடி ஏங்கியதெல்லாம் மறந்தல்ல மறைந்து போக முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள் அவனை பார்க்கவே கூடாதென்ற உறுதியில்.


கீழிறங்கி வீட்டை நோக்கி நடந்தவளுக்கு உந்துதல் எழ கழுத்து அவளையும் மீறி திரும்பியது. அவள் பின்பே தான் வந்துக் கொண்டிருந்தான், ஒரு விதமான தளர்வான நடையோடு அவளை பார்வையால் துளைத்துக் கொண்டு.


ஏனோ மனது முழுவதும் ஒரு வித படபடப்பு தொற்றிக் கொள்ள திரும்பி திரும்பி பார்த்தவள் ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு நுழைந்த பின்பே இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளியிட்டாள். ஆனால் அவளின் ஆசுவாசத்திற்கு ஆயுள் காலம் அற்பமென்பதை யார் கூறுவது.


உள்ளே நுழைந்த யாஷின் கால்களை ஓடி வந்து, "அத்தை" என்று ஷமீரா கட்டிக் கொள்ள அவனிலிருந்து வெளி வந்து அந்த முயல்குட்டியை கையில் ஏந்திக் கொண்டு அவளுடனே ஒன்றி போனாள்.

மனோ உணவு மேஜையில் உண்டு கொண்டிருக்க ரூபா அவனருகில் அமர்ந்திருந்தாள். யாஷ்வியும் ஷமீயும் ஷோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மும்மரமாகியிருக்க அழைப்புமணி ஒலித்தது.

ரூபா எழ விழைய அவளுக்கு முன்பே யாஷ்வி கதவை நெருங்கி அதை திறந்திருக்க மூச்சு வெளி வர மறுத்து தர்ணா செய்தது. அவனே தான், காலையிலிருந்தது போல் அல்லாது பளிச்சென்று வசீகரித்தான். ஆனால் அந்த திமிரான உடல் மொழி மட்டும் மாறவேயில்லை. பெண்ணின் விழிகள் மேலும் கீழும் என எல்லாபுறமும் சுழன்று தடுமாற கால்களும் நிற்க வலுவின்றி நடுங்கியது. நகரும் எண்ணமின்றி கதவின் கைப்பிடியை இறுக்கி பிடித்துக் கொண்டு ஸ்தம்பித்து நின்றவளை, "எக்ஸ்கியூஸ்மீ" என்று சொடக்கிட்டு அழைத்த ஆடவன் நிகழ்விற்கு கொண்டு வந்தான். சட்டென்று திரும்பி டேபிளில் அமர்ந்திருந்த மனோவை கண்டவளின் விழிகள் மீண்டும் எதிரிலிருந்தவனிடம் நிலைக்க உடலோடு இணைந்து இதழும் நடுங்கியது. 'ப்ம்ச்.., என்ன செய்து கொண்டிருக்கிறாய் யாஷ்? அவனை கண்டு எதற்கு இப்படி பயம் கொள்கிறாய்? யார் இவன்?' என்று மூளை அவளிற்கு தைரியம் கொடுத்து ஊக்குவித்தாலும் மனது ஏனோ இனம்புரியாமல் தடுமாறியது.



தொடரும்....

 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Hero sir name Naveen ah, superuuuuuuuuu
Ippo ethukku veettukku vanthirukkan
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Yash vai theduna lift person oda hero sir per naveen ah avan parvai kae rombha jerk agura
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Hero sir name Naveen ah, superuuuuuuuuu
Ippo ethukku veettukku vanthirukkan
யெஸ் நவீன் தான்😍, நாளைக்கு தெரியும்க்கா
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
யாஷ் ஏன் இவ்வளவு பயப்புடுறா 🙄🙄🙄🙄🙄🙄
 
Top