• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 19

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 19



யாஷ்விக்கு ஆடவனருகாமையில் மூச்சடைத்தது, ஆடவனின் விழிகளை நேருக்கே நேர் சந்திக்கும் தைரியம் துளியும் இல்லாது போக இறுகி அமர்ந்திருந்தவளின் கரங்கள் மகளை அழுத்தி பிடித்திருந்தது.


பயணிகளுக்கு அழைப்பு வந்து கொண்டேயிருக்க அவர்களை சுற்றியிருந்த எல்லோரும் கலைய துவங்கியிருக்க, "யாஷ்.." என்றார் சவிதா மகளை பரிதாபமாக பார்த்தப்படி. அவளின் நிலைமை அதை விட மோசமாக இருந்தது. நவீன், வாயை திறக்கவே இல்லை மெதுவாக அவர்களை அவதனித்து கிரகித்தப்படி அசட்டையாக அமர்ந்திருந்தான்‌, 'எங்கே செல்லுங்களேன், நானும் அதை பார்த்தே விடுகிறேன்' என்றதொரு பாவனையை கொடுத்து தாடையை தடவியபடி.

யாரும் அசைவதாய் தெரியாது போக மனோ சூழலை கையில் எடுத்துக் கொண்டான். அவனுக்கு நவீனையும் அவனின் பிடிவாதத்தையும் முன்பே தெரியும் தானே!..யாரோவாக இருக்கும் பொழுது யாஷ்வியை நடிக்க அழைக்கவே அத்தனை பேரை படையெடுக்க செய்தவன் இப்பொழுது அவனின் மனைவி மகளை அத்தனை சுலபத்தில் விட்டு விடுவானா என்ன?..ஆக, வந்து மிரட்டி சென்ற அன்றே முடிவு செய்து விட்டான் தங்கையை நவீன் விடவே மாட்டான் என்று. அதன் பொருட்டே யாஷ்வியிடம், 'செல்ல வேண்டுமா?' என்று தயக்கமாக வினவியதும் கூட.


"ம்மா..நம்ம கிளம்பலாம்" என்று சவிதாவை பார்க்க, 'என்ன சொல்கிறான் இப்பையன்?' என்று அன்னையும் அதிர்ந்து மகனை பார்க்க, "ப்ச்..." என்று சலிப்பாக நெற்றியை நீவியவன், "வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்" என்றபடி மனைவியை பார்த்தான்.
அவனின் பார்வை உணர்ந்து குழந்தையோடு அமர்ந்திருந்த ரூபா எழுந்து ஷமீ கைகளை பிடித்து கிளம்ப ஆயத்தமாக சவிதாவோ கையை பிசைந்தப்படி அப்படியே மகளின் அருகிலே நின்றிருந்தார் ஓர விழிகளால் நவீனையும் தீண்டியபடி.


"ம்மா..." என்று மனோ அழுத்தமாக அழைத்து அதிருப்தி பார்வையை கொடுக்க, "வா சவி கிளம்பலாம்" என்று சூழலை உணர்ந்த கேசவன் மனைவியின் கைகளை பிடித்து வாயிலை நோக்கி நகர ஆரம்பித்தார். யாஷ் அனைத்து உரையாடலையும் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள் தலையை தாழ்த்தியப்படியே.


தங்கை தோளில் ஆறுதலாக கை வைத்து அழுத்தம் கொடுத்த மனோ நவீனிடம், 'பார்த்துக் கொள்' என்ற பார்வையை கொடுத்து கிளம்பியிருந்தான். ஆக எஞ்சியிருந்தது யாஷூம் நவீனும் ஶ்ரீயோடு....



செல்பவர்களையே பார்த்தப்படி இதழ் கடித்து அமர்ந்திருந்த யாஷின் செவியை நிறைத்தது, "என்னை விட்டு போய்டுவியா யாஷ், உன்னால முடியுமா?" என்ற நவீனின் அடிவாங்கிய ஆழ்குரல். அந்த குரலே அவனின் அத்தனை வலியை பிரதிபலித்து பாவையின் உயிர் வரையிலுமே ஊடுருவி சென்று தாக்கியது. உடலோடு மனமும் அதிர்ந்து நடுங்கியது பெண்ணிற்கு.


அவ்வளவு தான் இதற்கு மேல் என்னால் தாங்கவே முடியாது என்பது போல் விழிகளை நீர் படலம் சூழ்ந்து கொண்டது ஆர்பரிப்பாய். அப்படியொரு கேவலுடன் கூடிய அழுகை பிரவாகமாக பொங்கியது. இத்தனை நிமிடம் தேக்கி பிடித்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்து சிதறி கண்ணீராய் கரைய முயன்றது ஆடவனின் கேள்வி கணையில்.


எழுந்து அவளின் முன் நின்று கொண்டவன் அழுத்தமான பார்வைகளுடன், "சொல்லுடி போய்டுவியா நீ, நான் வேண்டாமா உனக்கு?" என்று அவளின் தோளை பிடித்து உலுக்க, ஶ்ரீ தான் அவனின் நடவடிக்கையில் அரண்டு போய் யாஷ்வி மார்பில் மேலும் ஒன்றினாள் விழிகளில் பயத்தை தேக்கி. மகளின் பாவனையை கண்டு கொண்ட நவீனின் மனது மேலும் அடி வாங்க சட்டென்று யாஷ்வியிடமிருந்து கையை இழுத்து பின்னதலையை அழுத்தி கோதினான். பொங்கி வரும் உணர்வுகளை அடக்க இயலாது யாஷ்வியை அடிபட்ட பார்வை பார்த்து, 'இதற்கு காரணம் நீ தான்' என்று தன்னையும் மகளையும் சுட்டிக் காட்டி புகார் படித்தான் விழிகளாலே உறுத்து விழித்தப்படி.


புறங்கையால் கண்ணீரை துடைத்தவள் மகளை தூக்கி ஆடவன் புறம் நீட்டி
அவளிடமும், 'போ' என்று பார்வையால் கூறினாள். மகளை ஒருக்கையால் தூக்கி அணைத்துக் கொண்ட நவீனின் விழிகள் பனிக்க ஶ்ரீயோ அவனையே மலங்கமலங்க விழித்து பார்த்தாள். ஆனால் இப்பொழுது பயமில்லை, 'யாரிவன்' என்றதொரு ஆர்வம் பளிச்சிட்டது அப்பிஞ்சிடம். நவீனின் மற்றொரு கரமுமும் விரிந்து நின்றது யாஷிற்காக. யோசிக்கவெல்லாம் இல்லை, எழுந்து நின்றவள் அப்படியே அவனது மார்பில் முகத்தை வைத்து அழுத்த கண்ணீர் ஆறாய் பெருகி ஆடவனின் சட்டையை நனைக்க துவங்கியது. அவனது விழியிலும் நீர் படலம் மேலிட மெதுவாக ஒருக்கையால் மனைவியின் தலையை வருடினான், 'எல்லாம் சரியாக போய் விட்டது' எனும் விதமாக. ஆனால் மனதோ, 'ம்க்கும்..இல்லை இல்லை இனி தான் ஆரம்பமே' என்று கூக்குரலெழுப்பி ஆடவனை நிலைகுலைய செய்ய முனைய இழுத்து பிடித்து மனதிற்கு கடிவாளமிட முயன்றான். அக்ஷியையும் ஹர்ஷித்தையும் நினைக்கும் பொழுது அவனின் இதயதுடிப்பும் பன்மடங்கு பெருகியது.

நிமிடங்களில் தெளிந்த யாஷ் தலையை மட்டும் உயர்த்தி, "சாரி" என்று முணுமுணுக்க பெருமூச்செடுத்து லேசாக இதழை வளைத்த நவீன், "பேஸ் வாஷ் பண்ணிட்டு வா யாஷ்" என்று அவளை ஓய்வறை விரட்டியிருந்தான்.

யாஷ் சென்று முகம் கழுவி வர ஶ்ரீயோ நவீனின் மடியில் அமர்ந்து சாக்லேட்டை பிரித்து சாப்பிட்டப்படி புன்னகையுடன் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருக்க நவீனும் நன்றாகவே இதழ் விரித்து புன்னகைத்தப்படி அமர்ந்திருந்தான். தூரத்திலே அவர்களிலிருவரையும் பார்த்து விட்ட யாஷின் விழிகள் மீண்டும் பனிக்க முயல அவசரமாக கண்ணீரை துடைத்து இயல்பாக்க முயன்றபடி நவீனிடம் வந்தமர்ந்தாள். அவளை நோக்கி தண்ணீர் பொத்தலை நீட்டியவன் கைக்கடிகாரத்தில் பார்வையை அலைய விட்டு, "இன்னும் ப்ளைட்டுக்கு ஒரு மணி நேரமிருக்கு. நீ சாப்பிட்டியா?" என்று வினவ தண்ணீரை உள்ளிறக்கிய யாஷின் தலையோ எல்லா புறமும் உருண்டது. அதிலே அவள் உண்ணவில்லை என்று உணர்ந்தவன், "வா" என்று மகளுடன் எழுந்து உணவகம் நோக்கி செல்ல யாஷூம் அவனுடன் நகர்ந்தாள்.



ஶ்ரீக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு யாஷின் புறம், 'உனக்கு' என திரும்ப, "ஏதாவது வாங்கி வாங்க" என்று மௌனமாய் அமர்ந்து கொள்ள எழுந்து சென்று மூவருக்கும் உண்பதற்கு வாங்கி வந்தான். ஆடவன் உண்ட வேகத்திலே அவனும் காலையில் உண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்த யாஷ் மகளை ஒருக்கண்களால் பார்த்தப்படி அமைதியாய் உண்டு முடித்தாள். நிறைய நாட்களுக்கு பின் இருவருக்குமே ஒரு வித ஆசுவாச மனநிலை. ஏதோ சட்டென்று வாழ்க்கை நிறைந்து விட்ட உணர்வு நொடியில்!...


அதற்கு பின் எந்த பேச்சுகளுமே எழவில்லை இருவருக்குள்ளும். நவீன் ஆசையோடு மகளிடம் நிறைய பேசினான். "அப்பா கூப்பிடு ஶ்ரீ" என்று கூறுவதற்குள் அத்தனை திணறினான். ஆம், நான் உயிருடன் இருந்தென்ன பயன்? என்னுயிரை அனாதையாக அல்லவா வளர விட்டிருக்கிறேன் என்ற எண்ணமே ஆடவனுக்கு அப்படியொரு அழுத்தத்தை கொடுத்தது. ஶ்ரீயோ அவனின் யாசிப்பில் யாஷை புருவம் சுருக்கி பார்க்க நவீனுக்கு அத்தனை ஆற்றாமை பொங்கியது.

பிரவாகமாகிய கோபத்தோடும் நொடியில் தலை தூக்கிய உரிமையுணர்விலும் ஆடவன் யாஷை முறைக்க அசட்டையாக தோளை குலுக்கியவள், 'கூப்பிடு' என்று மகளிடம் கண்காட்டி அவனின் தோளில் முகத்தை ஆழ புதைத்துக் கொண்டாள்.
ஹைதராபாத் செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தனர் மூவரும். ஏற்கனவே தயாராய் வைத்திருத்த அவனின் பயணச்சீட்டை அவதனித்த யாஷின் மனது, 'எல்லாவற்றையும் முடிவு செய்து தான் தன்னை தேடி வந்திருக்கிறான். நான் ஒப்புக் கொடுக்கா விட்டாலும் என்னை எப்படியாவது அழைத்துச் சென்றிருப்பான்' என்பதை உணர்த்தினாலும் வாயை திறந்து கேட்க எண்ணமில்லாது அமைதியாய் அமர்ந்து கொண்டாள். 'எங்கே? ஏன்?' என்ற எந்த கேள்வியுமின்றி அவனின் பின்னாலே சென்றாள். விமானத்திலிருந்து தற்பொழுது மகிழுந்திற்கு இடம் பெயர்ந்திருந்தனர். எங்கு செல்கிறோம் என்று தெரியா விட்டாலும் வேடிக்கை பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். அவனோ மகளில் தான் லயித்து போயிருந்தான். அவளின் பேச்சுக்களையும் வளையும் அந்த செப்பு இதழும் பாவனையாய், 'என்ன?' என்று உயரும் புருவமும் என்று தன்னையே பிரதிபலிக்கும் உருவத்தை மெதுவாக இரசித்து உள்வாங்க முயன்று கொண்டிருந்தான். முதலில் தயங்கிய ஶ்ரீயும் யாஷின் விழியசைவிலே ஆடவனுடன் சட்டென்று ஒட்டிக் கொண்டாள்.


வீட்டு வாயிலில் மகிழுந்து நிற்க இறங்கிய யாஷின் கால்கள் நிமிடமேணும் தடுமாற தான் செய்தது அக்ஷியை நினைத்து. 'இவன் என்ன நினைக்கிறான்' என்று நவீனை காண அவனோ வெகு இயல்பாய், 'வா' என்று தலையசைத்து முன்னால் நடக்க யாஷூம் உள்ளே நுழைந்தாள் மகளுடன். ஶ்ரீ உறங்கியிருந்தாள் யாஷின் தோளில் படுத்து.



நவீனின் கரங்கள் அழைப்புமணியை அழுத்த வாணி வந்து கதவை திறந்தார். அன்று விடுமுறை நாளென்பதால் மாமியாரும் மருமகளும் வீட்டிலே தான் இருந்தனர். நவீனை கண்டு விழி விரிந்தாலும் யாஷை கண்டு பனித்து போனது. அவருக்கும் அவளை நிறைய பிடிக்கும் தானே! முந்தானையை கொண்டு கண்ணீரை துடைத்து, "வாம்மா" என்றிட தொண்டை வறண்டே போனது அவளின் கழுத்தைக் கட்டி சுகமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சிட்டைக் கண்டு. அப்படியே நவீனை அல்லவா பிரதி எடுத்து வைத்திருந்தாள். சமீபத்தில் பேச்சுவாக்கில் சவிதா ஶ்ரீயை குறித்து கூற உடைந்தே போனார் பெண்மணி. அழைபேசியில் யாஷூடன் சின்ன சண்டையே போட்டிருக்க, "சொல்லி மட்டும் என்ன ஆகப் போகுது அத்தை" என்பதோடு அப்பேச்சிற்கு யாஷ் முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். அதற்கு மேல் பேசுவதற்கு வார்த்தை வராது வாணி தான் விக்கித்து போனார்.


நவீன் வீட்டினுள் நுழைய அக்ஷி ஹாலில் இருந்த இருக்கையில் அமர்ந்து தலையை பின்னால் சாய்த்து கண்களை இறுக மூடியிருந்தாள். அவள் காலுக்கருகில் தரையில் அமர்ந்திருந்த ஹர்ஷித்தோ பொம்பையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த நவீனை கண்டு, "ப்பா.." என்று விளித்து பொங்கிய உற்சாகத்தோடு அருகிலிருந்த அக்ஷியின் புடவையை இழுத்து பிடித்து எழ முயல மகனின் செயலில் திடுக்கிட்டு விழித்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.


அவள் விரும்பாலோ விழிகளில் நிரம்பிய நவீனின் பிம்பத்தில் நீர் சூழ்ந்து கொள்ள உயிரை விழியிலே தேக்கி அமர்ந்திருந்தாள் உருகி பாதியாக கரைந்து. இருவரையும் பார்த்த நொடி நவீனின் மனது சட்டென்று சுணங்கியது. 'எங்கே தவறினேன்?' என்று ஆர்பரித்தெழும் குற்றவுணர்வை அடக்கும் வழி தெரியவில்லை.


இருவரின் விழிகளும் மோதிக் கொள்ள ஹர்ஷித்தோ தத்தி தடுமாறி விழுந்து எழுந்து நவீனை நெருங்கி முயல இரண்டெட்டுகளில் மகனை கைகளில் அள்ளிக் கொண்டவன், "அக்ஷி" என்று அவளின் அருகில் செல்ல பொங்கிய அழுகையோடு நின்றிருந்தவனை அமர்ந்தவாக்கிலே இடையோடு அணைத்துக் கொண்டாள் இத்தனை நாள் பிரிவினால் பொங்கிய ஆற்றாமையில்.



எச்சிலை விழுங்கிய நவீனின் விழிகள் பின்னால் நின்றிருந்த யாஷை நோக்கி தவிப்புடன் அலைபாய வெறித்து நின்றிருந்தவளுக்கு அக்காட்சியை ஏற்பதொன்றும் அத்தனை சுலபமாக இருந்திடவில்லை. தொண்டை அடைத்தது, 'இதை காணவா என்னை இவ்வளவு படுத்தி இங்கு அழைத்து வந்தாய்? இதற்காக தானே விழுந்தடித்து ஓடினேன்' என்று எண்ணியவளால் தொண்டையில் இருந்த கசப்பை உள்ளிறக்க முடியவில்லை. தவிப்புடன் துடித்து போய் இதழை அழுத்தி கடித்தப்படி நின்றவளுக்கு அழுகை பொங்கி வரும் போல் தோன்ற அந்த இடத்தில் கூட நிற்க பிடிக்கவில்லை. யாரையும் குற்றம் சொல்ல விருப்பமில்லை, அவ்வாறு சொல்வது ஆகப்பெரும் தவறென்று தெரியும். ஆனால் ஏனோ கசந்தது அச்சூழலோடு சேர்த்து நவீனும், அக்ஷியுடன் அவனின் நெருக்கமும். வீடு முழுவதும் ஆக்கிரமித்திருந்த அவர்களின் புகைப்படங்களில் விழிகள் தீண்டி மீள மீண்டும் மனது தளர்ந்தது, 'உறுதியாக நவீனை மறுத்து கிளம்பியிருக்க வேண்டும்' என மனது ஓலமிட அப்படியே மடங்கி அமர கால்கள் உந்தியது. நவீனின் கழுத்தில் படுத்திருந்த ஹர்ஷித்தோ பின்னால் நின்றிருந்த யாஷ்வியை கண்டு இதழ் பிதுக்கி ஒரு புன்னகையை கொடுத்து விளையாட்டாய் முகத்தை மறைத்துக் கொள்ள, அக்ஷிதாவோ அப்படியொரு அழுகை அழுது கொண்டிருந்தாள் அவனை இறுக பிடித்து அசைய விடாதவாறு அணைத்தப்படி.



தொடரும்....
 
Last edited:
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Romba azha vakkura ma neenu
Sathiyama mudiyala
Yaash Naveen akshi situation ah ninachale kastama irukku
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Romba azha vakkura ma neenu
Sathiyama mudiyala
Yaash Naveen akshi situation ah ninachale kastama irukku
சீக்கிரமே சரியாகிடும்க்கா❤️
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Enna sollurathu nu yae theriyala yae yaru ah yum blame panna mudiyala indha nilamai la situation rombhavae ganam ah iruku naveen oda manasula yash iruku ah than aana akshi ah yum harshi ah yum.enna pandrathu avan life la avangalum iruka gala yae avalukku yash vandha inga irundhu pogarathu ah vida enga poradhu than theriyala nu yosikum pothu ithu la yarukku sathagam ah mudivu edukkirathu
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Naveen yash ya V2 ku kudidu poetan harshith kutty enna oru santhosam Sri yum appa kuda otikita aashi yash naveen enna panna poraga 😢😢😢😢 feeling
 
Top