• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 18

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 18


தலையை கோதிக் கொண்ட நவீனின் மனதோ அனலாய் கொதித்தது. நாட்கள் நகர ரணங்களின் வீரியம் கூடியதே தவிர குறைவதற்கான சிறு அறிகுறியுமே தென்படுவதாய் தெரியவில்லை. தலைக்கு கைக்கொடுத்து வானத்தை வெறித்தப்படி படுத்துக் கொண்டவனது விழிகளோ இலக்கில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்க அதை கலைக்கும் விதமாக அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்க்க அக்ஷிதா தான் அழைத்திருந்தாள். யோசிக்காது சட்டென்று அழைப்பை துண்டித்து சட்டை பையனுள் போட்டுக் கொண்டவன் விழிகளை தாமாக இமைகள் தழுவிக் கொண்டது.


ஆகிற்று யாஷ்வியை பார்த்து வந்து ஒரு திங்கள். அதற்கு பின் பெண்ணும் அவனை தொடர்பு கொள்ளவில்லை ஆடவனும் அசைந்தானில்லை. பெங்களூரில் தான் இருக்கிறான்.
ஆனால் யாருக்குமே தெரியாது, வாணி தேடிக் கொண்டிருக்கிறார். அலைபேசியிலாவது பிடித்து விட மாட்டோமா மகனை என்ற ஆதங்கத்தோடு. ஆனால் அவனுக்கு தான் யாரிடமும் பேசிட பிடிக்கவில்லை அதை விட எங்கே தன்னுடைய ஆற்றாமை முழுவதையும் எதிரிலிருப்பவர்கள் மீது கொட்டு விடுவோமோ என்று பயம் வேறு.


அன்று நவீனின் கலக்கம் ஏனென்று அக்ஷிதாவிற்கு புரியவில்லை தான். யாஷை அவளுக்கு சரியாக தெரியாது, நவீனின் திருமணத்திற்கு கூட வரவில்லை, அவனது அலைபேசியில் அபூர்வமாய் ஒன்றிரண்டு முறை கண்டிருக்கிறாள் அவ்வளவே!. அவளையும் ஹர்ஷித்தையும் விமானம் ஏற்றி விட்டு, " ட்ரைவர் உன்னை பிக்கப் பண்ணிப்பார்" என்றவன் முகத்தில் இருந்த கடின தன்மையில் அதற்கு மேல் அக்ஷிதா எதுவுமே கேட்கவில்லை. ஆம், அந்த நவீன் அவளுக்கு புதிது, வார்த்தைகளும் பார்வையுமே அவளை அந்நியப்படுத்திக் காட்ட அமைதியாய் பெண் கிளம்பி விட்டாள்.


வாணி, "என்ன நீ மட்டும் வந்திருக்க? நவீன் எங்க" என்று கேட்க தோள் குலுக்கி இதழ் வளைத்தவளுக்கு தெரியவில்லை என்று கூறுவதற்குள்ளே கண்ணீர் திரண்டு நின்றது. பதறி போய் மருமகளை அணைத்துக் கொண்டவர், "என்னாச்சு அக்ஷிம்மா, உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா?" என்றிட இருபுறமும் தலையசைத்தவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. ஆக, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டவளுக்கு ஏனோ நொடியில் நவீன் தன்னை விட்டு வெகு தொலைவில் விலகி நின்றதொரு உணர்வு, 'ஏன் இப்படி?' என்று புரியாது சிக்கி தவித்தவளுக்கு மூன்றே நாளில் சவிதாவிடமிருந்து தகவல் வந்திருந்தது.


"எப்படி சவி? வேற என்ன சொன்னான்?" என்ற வாணி உணர்ச்சிவசத்தில் அக்ஷிதா இருப்பதை மறந்து சத்தமாக கேட்டு விட்டார். ஏற்கனவே நவீன் மூன்று நாளாக வீட்டிற்கு வராததில் வெகுவாகவே வாடி போயிருந்தவள் அவனை குறித்த தகவலென்று புரிந்து, "என்னாச்சுத்தை? மாமா எங்க இருக்கார் என்று வாணியை பிடித்துக் கொண்டாள். வாணி எதேதோ கூறி சமாளித்து பார்த்து இறுதியில் யாஷ்வி குறித்து கூறி விட, யாஷை விட அக்ஷி தான் அதிகமாக அழுகையில் கரைந்தாள். ஆக, அழைத்தாள் விடாது நவீனுக்கு தினமுமே, அழைப்பு எதிர் புறம் ஏற்கப்படாதென்று தெரிந்தும்!...அதீத கனமேறிக் கொண்டது அவர்களின் மனதில் மட்டுமின்றி வீட்டிலுமே..ஹர்ஷித் அழுகை குரலை தவிர வேறெதுமே ஒலிப்பதில்லை. அக்ஷி எப்பொழுதும் எதையாவது வெறித்து அமர்ந்திருக்க அழும் ஹர்ஷித் சமாதானம் செய்வது கூட வாணியின் பொறுப்பாயிற்று.



"ஏன்த்தை இப்படி பண்ணீங்க? யாஷ்க்காவை நவீன் மாமாவுக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கு தெரியும் தான? அப்புறம் ஏன் இப்படி பண்ணீங்க, பாவம் தான அவங்க ரெண்டு பேரும்" என்பது மட்டுமே அக்ஷிதா கண்ணீரோடு வாணியிடம் இறுதியாக பேசியது. அதற்கு பின் பேசவேயில்லை, ஏனோ பெண்ணிற்கு பிடிக்கவேயில்லை. அங்கிருப்பதே மூச்சு முட்டுவதாய் தோன்றியது. ஏதோ தெரியாத உரிமையில்லாத இடத்தில் நிற்பது போல் மனது தவித்தது நிலையில்லாமல்.


"நான் கிளம்பி போய்டவா அத்தை, மாமா திரும்பி வந்திடுவார் தான. அவரோட வீட்டில நாங்க இருக்கோம் ஆனா அவர் எங்க இருக்கார்னே தெரியலை இல்லை" என்ற அக்ஷியின் இயலாமையின் புலம்பல்கள் வாணியையும் கலங்க செய்தது. அவருக்குமே அதிக தடுமாற்றம் தான், எப்படி கையாள்வது யாருக்கு ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை அதை விட பெரிய கவலை மகன், எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை. தெரியும் நவீனுக்கு அதீத கோபமென்றால் மட்டுமே இப்படி சொல்லாமல் சென்று விடுவான். ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளது. ஆனால் இப்பொழுது இருக்கும் சூழல் வேறல்லவா?


சீராக சென்றிருந்த வாழ்க்கையில் எல்லாருக்குமே ஒரு தேக்கம், வாயிலை கைக்காட்டி நவீனை தேடி உதடு பிதுக்கும் ஹர்ஷித்தை சமாதானம் செய்வதற்குள் வாணிக்கு முழி பிதுங்கியது. இதில் அக்ஷி வேறு என்ன நினைக்கிறாள் என்று பெண்ணின் பாவத்தில் இருந்து அவரால் பிடிக்க முடியவில்லை. இலவச இணைப்பாய் எப்பொழுதும் பெண்ணின் இதழை ஆக்கிரமித்திருக்கும் மந்தகாச புன்னகை நிரந்தரமாகவே விடை பெற்றிருந்தது. எதையோ இழந்தது போல் சுற்றித் திரிபவளுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே சிந்தையில் பதியவில்லை. மனது மூளை இரண்டையும் நவீனும் யாஷூம் நிறைத்திருந்தனர். ஏதாவது சிந்தைனையிலே உழல்பவளை மகனின் அழுகை கூட கலைக்கவில்லை.


எல்லாம் ஒரு புறமிருந்தாலும் வாணி நடனப்பள்ளிக்கும் அக்ஷி வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர். ஆம், வீட்டிலே இருந்தால் சூழலின் கணம் தங்களை விழுங்கி விடுமோ என்றதொரு அச்சம். ஓட்டுநர் தினமும் அக்ஷிக்காக நவீன் மகிழுந்துடன் வந்து நின்று விடுவார். அவன் தான் கூறியிருப்பான் போலும் என்று அக்ஷிக்கு தோன்றினாலும் நேரடியாக கேட்க மனது வரவில்லை. 'அடுத்து என்ன? என்றதோடு நவீனில்லை என்றால் நாங்கள்..?'என்று மிகப்பெரிய வினாவோடு தன் மேலே படுத்திருந்த ஹர்ஷித்தின் மேல் விழிகள் படிய அப்படியொரு கேவலுடன் அழுகை பிரவாகமாக பொங்கியது, உடலே அதிர்ந்து நடுங்க மகனை வருடும் அக்ஷியின் கரங்கள் அந்தரத்தில் நிற்க ஏதோ மகனும் தானும் நிராதரவாக தனித்து விடப்பட்டதொரு பிரம்மை. எந்தப்புள்ளியில் ஆடவன் மீது தனக்கு இப்படியோரு பிடித்தம் தோன்றியது என்று ஆராய தலையே வெடித்து விடுமளவிற்கு வலித்தது. சின்னதிலிருந்தே நவீனை பிடிக்கும் என்றாலும் முழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த தன்னை ஆதரவாக தாங்கி பிடித்து அரவணைத்துக் கொண்டவனை இப்பொழுது அதீதமாகவே பிடித்தது. பிடித்தங்கள் வரைமுறைகளுக்கும் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது தானே!.....




நவீன் ஏதாவது கூறி விட்டால் கூட மனது இத்தனை தவிக்காதே என்னமோ! அவனுடைய தலைமறைவும் மௌனமும் பெண்ணினுள் பிரளயத்தையே உருவாக்கி இருந்தது. இதில் அவ்வப்பொழுது நவீனிற்காக ஏங்கி அழும் மகனை காணும் பொழுது நெஞ்சே வெடித்து விடும் போல வலித்தது. ஏதோவொரு கட்டாயத்தின் பேரில் வலுக்கட்டாயமாக நவீனுடைய வாழ்வில் நுழைந்து விட்டாலும் ஆடவனின் கரிசனமும் அக்கறையும் பெண்ணை முழுவதுமாக வாரிச்சுருட்டி தான் இருந்தது எனலாம். அன்பிற்கு பெண்கள் எப்பொழுதும் அடிமை தானே!


இப்படியொரு நிலையில் நிற்பாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஏதோவொன்று உருண்டு வந்து தொண்டையை அடைத்தது, நவீன், வெகுவாகவே அவனுக்கு பாவையை பழக்கியிருந்தான். அவனுடனே தொடங்கி அவனுடனே முடியும் கணங்கள் இனி வாழ்வில் இல்லை எனும் பொழுது அதை கிரகித்து உள்வாங்கும் பொழுது அப்படியே மடிந்து முகத்தை மூடி கதற மனது விழைந்தது.



'நவீன் தன்னை தவிர்க்கிறான்' என்ற எண்ணங்களே அப்படியொரு அழுத்தத்தை கொடுத்தது. ஹர்ஷித்திற்கு நவீனை காணாத ஏக்கத்தில் காய்ச்சலே வந்து விட்டது. 'எங்காவது சென்று விடலாம்' என்று எண்ணினால் கூட எங்கு செல்வது என்று தெரியவில்லை. 'எங்கு செல்லலாம்? தனக்கு யார் இருக்கிறார்கள்' என்றெண்ணியவளின் சிந்தனையில், 'நாங்கள் அனாதையா?' என்ற வினா வந்து விழ சுயபச்சாதபத்தால் கண்ணீர் பொங்கி பெருகியது. சிவக்குமாரை நினைத்தால் அதை விட குளிரெடுத்தது. அவ்வப்பொழுது அழைத்து பேசும் மங்கையிடம் இயல்பாய் உரையாடுவதற்குள் வெகுவாகவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது பெண்ணிற்கு. ஹர்ஷித்தோடு இணைந்து அவளுமே ஒரே மாதத்தில் ஏங்கி உருகி இளைத்து போனாள்.


வாணிக்கும் மகனின் செயலில் அத்தனை ஆற்றாமை பொங்கியது. அவ்வப்பொழுது வெறும் தரையில் சுருண்டு கொள்ளும் அக்ஷியும் சுவற்றில் மாட்டியிருக்கும் நவீனின் புகைப்படத்தைக் கைக்காட்டி வரச் சொல்லும் ஹர்ஷித்தும் மனதை பிசைந்தனர். வீட்டிலிருந்த அத்தனை மகிழ்ச்சியும் வடிந்து இருள் சூழ்ந்து கொண்டது போல் தோன்ற இயல்பான இதழ் விரிப்புக்கு கூற பஞ்சமாகி போனது.

விமானநிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த யாஷ்வியின் மனது அப்படியொரு தவிப்புடன் அலைபாய்ந்து கொண்டிருந்தது. 'ஓஓஓ..' வென கத்தி கதறி அழ வேண்டும் போலிருந்தது. ஆம், நவீனுக்கும் தனக்குமான உறவு ஏறக்குறைய முறிந்து விட்ட நிலை தானே! நினைக்க நினைக்க பொங்கி பெருகும் கண்ணீரை தடுக்க இயலவில்லை. அவனுடைய இத்தனை நாள் அமைதியும் விலகலுமே பெண்ணினுள் அப்படியொரு கிலியை பரவ செய்திருந்தது. இதோடு நவீன் தங்களின் வாழ்க்கையில் அவ்வளவு தான் என்று நினைக்க நினைக்க நெஞ்சம் அடைத்தது. ஆம், முடிவெடுத்து விட்டாள் அமெரிக்கா கிளம்புவது என்று! வாணி அழைத்து பேசியிருந்தார், "நவீன் எங்க இருக்கானே தெரியலை, வீட்டுக்கு வந்தே ஒரு மாதமாகிறதென்று". அதை கேட்டு பாவையிடத்தினிலிருந்த கொஞ்ச நிம்மதியும் பறிபோயிருந்தது. 'ஏன் திரும்பி வந்தோம்' என்று எண்ணுமளவிற்கு சென்று விட்டாள். உறங்கமும் உணவும் தூர விலகி நின்று கொள்ள அழுத்தி கீழ தள்ள முற்பட்டது வாழ்க்கை.


மனோ கூட, "நீ போய் தான் ஆகணுமா யாஷ்?" என்று நவீனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து கேட்க பெண்ணோ உறுதியாக நின்று விட்டாள் தனது முடிவில்.
மூச்சு முட்டியது யாஷ்விக்கு நவீனின் நினைவுகளோடு. மேலும் நன்றாக இருந்தவன் வாழ்வில் கல்லெறிந்து விட்ட குற்றவுணர்வு வேறு ஒரு புறம் வாட்டியது.


விமானநிலையத்தினுள் நுழைந்தவுடன் யாஷ்விக்கு தொற்றிக் கொண்ட படபடப்பில் உடலே அதிர்ந்து நடுங்கியது. ஷமீ வேறு, "அத்தை எங்க போற நீ? எப்ப வருவ? என்னையும் கூட்டிட்டு போறீயா?" என்று வரிசையாக வினாவெழுப்பி அவளை பிடித்திழுக்க முயல என்ன பதில் கூறினால் என்று கூட சிந்தையில் ஏறவில்லை. நவீன் வந்து பேசிச் சென்ற பின் சவீதாவும் அதிகமாகவே தளர்ந்து போனார், அவனின் குற்றச்சாட்டுக்கள் அவரை நிலை குலைய செய்ய இறுதியில் மகளிடமே ஒப்படைத்து விட்டார் முடிவை, "உனக்கு எது விருப்பமோ அதை செய் யாஷ், வேணும்னா நவீனையும் கலந்துக்கோ" என்று கூறி.


யாஷ் நவீனின் வேண்டாமென்றல்ல அவனின் மீதான அதீத காதலின் பொருட்டு தான் விலகி செல்ல முனைகிறாள். கனத்தது, சுமை தான் சுமக்க முடியாத சுமை தான். ஆடவனுக்காக விரும்பியே ஏற்றாள். நவீனின் விழியசைவிற்கே கட்டுப்படுபவள் அவனின் வார்த்தைகளை மீறி நகர ஆயத்தமாகி விட்டாள். அதுவே பெண்ணை போட்டு அழுத்தியது.


"கவனம் யாஷ்" என்று ரூபா அறிவுரைகளை கூற மனோ இறுக்கி அணைத்துக் கொண்டான் தேங்க முயன்ற கண்ணீரை இழுத்து பிடித்தப்படி தங்கையை. சவிதாவும் கேசவனும் மகனிடமும் மருமகளிடமும் தலையசைத்தனர் விடைபெறுவதாக. இன்னும் சொற்ப நிமிடங்களே எஞ்சியிருப்பதாக அறிவிப்பு வெளியாக மகளை கைகளில் அள்ளி மார்போடு அணைத்தப்படி அமர்ந்திருந்த யாஷின் மனமோ அடித்துக் கொண்டது நிலைகொள்ளாமல். தவிப்பு, துடிப்பு, அழுகை என்று எந்த வரையறைகளுக்குள்ளும் அடக்கவியலாத கலவையான உணர்ச்சி குவியலாக அமர்ந்திருந்தாள் மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை சமன் செய்ய முயன்றபடி....


அருகில் கேட்ட சத்தமாக காலடி ஓசையும் நுரையீரலை நிரப்பிய வாசனை திரவியத்தின் மணமும் அவன் வருகைக்கான அறிவிப்பை கொடுக்க உள்ளிழுத்துக் கொண்ட மூச்சு வெளி வர மறுத்தது யாஷ்விக்கு. எல்லோர் கவனமும் அவனின் மீதே! ஒரு வித அலட்சியபாவத்தோடு இதழ் வளைத்து அமர்ந்து கொண்டான் மனைவி அருகில் இருந்த இருக்கையில். மனோவுமே அவன் அருகில் வந்த பின்பே கவனித்தான், லேசாக அதிர்ச்சியை பிரதிபலித்து விழிகளில். சவிதாவும் கேசவனும் கல்லென சமைந்து நின்று விட யாஷ் முகத்தை திருப்ப கூட விழையவில்லை, ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள். எதிர்பார்த்தது தான் என்றாலும் உள்ளிருந்து பொங்கி வழியும் தவிப்பை அடக்க இயலவில்லை, இதயதுடிப்பு பன்மடங்கு பெருகியது. பாவையின் மார்பில் சாய்ந்து தோள் வளைவில் தலை அழுத்தியிருந்த ஶ்ரீயோ இயல்பாய் தன்னையே பார்த்தப்படி அருகில் அமர்ந்திருந்தவனை நோக்கி புருவமுயர்த்தி இதழ் வளைக்க நவீனின் இதழும் விரிந்தது வலிகளை விழுங்கி விரக்தியோடு...



தொடரும்....
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Rombave kastama irukku ma, paavam Yash Naveen akshi
Enna panna porano Naveen
 
Member
Messages
45
Reaction score
31
Points
18
Naveen enna panna pora ni anga oru family unaku iruku yashku goodbye solla tha vanthaiya naveen Yash unaku entha kastam kutuka kutathunu tha unna vittu poga mudivu eduthuruka
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Actually indha situation ah eppudi handle pandrathu nu yae theriyala naveen yash akshi ellar yum pakka pavam than iruku ithula rombhavae kodumai ah irukurathu harshi yum akshi than thonuthu nama ku yaarumae illa aanadhai ah irukumo nu thonurathu rombhavae kodumai la akshi yum harshi athigam ah vae kayapadraga
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Romba kastama iruku 🥺🥺🥺 enna oru situation 3 payroda life la appa va pakkama harshith kasta padura yash aakshi naveen solla mudiyatha vali💔💔 yash America kelampida sari naveen airport vanthu irukan enna panna poran 🙄🙄😟
 
Top