• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 16

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 16



விமானத்தில் ஏறி அமர்ந்த பின்பே அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை இலகுவாக அக்ஷியால் வெளியிட முடிந்தது. அவ்வப்பொழுது பின்னால் திரும்பி பார்வையை அலைய விட்டாலும் தன்னை துளைத்துக் கொண்டிருந்த விழிகளை கண்டறியவே முடியவில்லை. அந்த விழியின் ஏக்கங்களின் எச்சங்கள் அவளின் உள்ளுணர்வை தொட்டதோ என்னவோ..?ஆனால் மனதினுள் ஏதோவொன்று அபஸ்வரமாய் தோன்ற ஒரு வித அவஸ்தையுடன் தான் அமர்ந்திருந்தாள். 'என்ன இது? ஏன் இப்படி மனது தவிக்கிறது?' என்று பிடிக்க முயன்றவளுக்கு கிடைத்த விடை என்னவோ சுழியம் தான். மனைவியை கண்டு கொண்ட நவீன், 'என்ன?' என்பது போல் புருவமுயற்ற, 'ஏதுமில்லை' என தலையசைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அருகிலிருந்த இருக்கையில் வாணி மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகனை வெறித்தப்படி. ஏதேதோ எண்ண அலைகள் சுழல அப்படியே விழியை மூடியவளின் ஓரத்தில் தேங்கிய நீர் துளியை ஆடவனிறியாது துடைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள். ஆனால் இப்பொழுது அலைப்புறுவது நவீனின் முறையாயிற்று.



சென்னை, அவனுள் பலவித மாற்றங்களையும் சீற்றங்களையும் விரவ செய்து கொண்டிருந்தது. அதீத அவசரத்தை தவிர்த்து சென்னை புறம் அவன் தலைகாட்டுவதில்லை. யாஷூடன் இணைந்து முக்கால்வாசி ஊரையே அலசியிருந்தான். ஆக, திரும்பும் இடமெல்லாம் யாஷூம் அவளின் வார்த்தைகளுமே பிரதிபலிக்கும். இதோ எத்தனை முறை அவளுடன் விமானநிலையத்தை வலம் வந்திருக்கிறான். அவளின் இதழ் விரிந்த புன்னகை, அவன் வம்பிழுக்கும் போது கோபத்தில் சுருங்கும் விழியோரம், சிரிப்புடன் கூடிய முறைப்பு, அவனை நோக்கி அபிநயம் படிக்கும் விழிகள், உச்சுக்கொட்டி வம்பிழுக்கும் இதழ்கள் என்று எண்ணியவனுக்கு இதயமே வெளியில் வந்து விடுமளவிற்கு வலித்தது. வாணியிடமிருந்து தாவி, "ப்பா.." என்ற ஒலியோடு கழுத்தை கட்டிக் கொள்ள முயன்ற மகனின் அரவத்தில் தான் ஆடவன் தவம் கலைந்தது. அவனையே பார்த்திருந்த அக்ஷியை நோக்கி சோபையான புன்னகையை கொடுக்க ஆடவனின் தோள் தட்டினாள் ஆதரவாக, 'இதுவும் கடந்து போகும்' எனும் விதமாக. அவளின் பார்வை புரிந்து தலையை உலுக்கியவன், 'போகலாம்' என்பதாய் மகனோடு சென்று உடைமைகளை கைப்பற்ற சிவக்குமாரின் மகிழுந்து ஓட்டுநருடன் அவர்களுக்காக வாயில் காத்திருந்தது.



மூவரும் ஏறிக்கொள்ள மகிழுந்து வீட்டை நோக்கி பயணமாகியது. மகனை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த நவீனின் விழிகள் சாரளத்தின் வழியாக வெளியே தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நான்கு வருடங்களில் அவ்வழி நிறைய மாற்றங்களை சுமந்திருந்தது ஆங்காங்கே புதிதாக முளைத்த கடைகள், உதித்திருந்த சாலைகள் பாலங்கள் என்று யாஷ்க்கு பிறகு,
பிறந்து வளர்ந்த அந்த ஊர்க்கூட ஆடவனுக்கு அந்நியமாக தான் தோன்றியது. இதழ்கள் சுமந்திருந்த விரக்தி புன்னகையை அவ்வப்பொழுது, 'ஆஆ..ஊஊ..' என்று எழுந்து நின்று அவனின் சிகையை இழுத்து ஹர்ஷித் கலைத்துக் கொண்டிருந்தான். வாணியின் விழிகளும் அவ்வப்பொழுது மகனின் வதனத்தை ஆராய்ந்தபடி அக்ஷியுடன் வளவளத்துக் கொண்டிருந்தது. மறுநாள் விடிந்தால் திருமணம், மங்கை நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே அழைக்க துவங்கி விட்டார். அவரின் வற்புறுத்தலின் பெயரில் முதல் நாளே கிளம்பியிருந்தனர்.


வீட்டு வாயிலில் மகிழுந்து நிற்க, "வாங்க" என்று முகம் கொள்ள புன்னகையுடன் மங்கை வாயிலுக்கே வந்து விட விஜயனும் தாயுடன் வந்து வரவேற்றான். வீடே கல்யாணக்களை கட்டியிருந்தது, ஆங்காங்கே ஆட்கள் குழுமியிருந்தனர். அக்ஷியையும் வாணியையும் கண்டவுடன், "எப்படியிருக்கம்மா?" என்று நலம் விசாரிப்போடு சூழ்ந்து ஹர்ஷித்தை அள்ளிக் கொள்ள நவீனும் எல்லோருக்கும் தலையசைப்பு கொடுத்து அறைக்குள் நுழைந்து கொண்டான். அடுத்து உணவு முடிய நவீன் விஜயனோடு மகனை தூக்கிக் கொண்டு மண்டபத்திற்கு சென்று விட்டான். அங்கிருந்த சிவக்குமார் நவீனையும் பேரனையும் பார்த்து வரவேற்பாய் புன்னகைத்து தலையசைக்க நவீனும் அவரோடு இணைந்து கொண்டான். மாலையில் நிச்சயம் மறுநாள் திருமணம் என்பதால் அதற்குரிய வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தது. வேலையை மும்மரமாக மேற்பார்வை செய்த நவீனின் கண்கள் அவ்வப்பொழுது தனக்கருகில் விளையாடிக் கொண்டிருந்த மகனை கவனிக்க தவறவில்லை.



அடுத்து நவீனிற்கு சிந்திக்க நேரமில்லாது உறவுகள் சூழ்ந்து கொண்டது. வெகுநாட்களுக்கு பிறகு அவனை கண்டிருக்க, "எப்படியிருக்க, என்ன செய்கிறாய்?" என்பதோடு, "ராகவன் இருந்திருந்தா..." என்றும் ஒரு சிலர் துவங்கி தந்தையை குறித்து பகிர அமைதியாய் புன்னகையோடு ஒரு சில வார்த்தைகளோடு முடிந்துக் கொண்டிருந்தான். அக்ஷியும் மகனை நவீனிடம் விட்டு மணமகள் அறையில் ஐக்கியமாகி போனாள். விஜயனுக்கு தங்கை என்ற முறையில் எல்லாமே அவள் தான் செய்ய வேண்டும் என்பதால் மங்கை அவளை தன்னுடனே இழுத்து பிடித்து வைத்துக் கொண்டார். திருமணம வெகுசிறப்பாகவே நடந்தேறியது.

அதுவொரு ரம்மியமான அதிகாலைப்பொழுது. பால்கனியில் அமைந்திருந்த ஊஞ்சலில் இலகுவாக அமர்ந்து தூரத்தில் ஓய்வின்றி சீறிச் செல்லும் அலையின் அசைவிலே அலைப்புற்றுக் கொண்டிருந்தது நவீன் விழிகள். அவனுக்கு பக்கவாட்டாய் இருந்த படுக்கையில் அக்ஷிதாவும் ஹர்ஷித்தும் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். சிவக்குமாருக்கு சொந்தமான சிறய கடற்கரை ஒட்டிய பங்களாவில் அக்ஷிதாவின் அறை தான் அது. திருணத்திற்காக ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்திருக்க குடும்பத்தோடு நேற்றிரவே வந்திருந்தனர். சென்னைக்கு வந்து நான்கு நாட்களுக்கு மேல் நகர்ந்திருந்தது. விஜயனின் திருமணம் முடிந்த மறுநாளே வாணி நடனப்பள்ளியின் பொருட்டு கிளம்பி இருக்க மங்கையின் இறைஞ்சுதலான வேண்டுதலுக்கிணங்க மனைவி மகனோடு நவீனின் வாசம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக நிற்க நேரமில்லை தான், திருமணம், மறுவீடு, விருந்து என்று வீடு முழுவதும் விருந்தினர்களால் நிரம்பி வழிய இன்று தான் சற்று அமைதியாய் இருந்தது. அதோடு அக்ஷியோடு இணைந்து ஹர்ஷித்தும் ஓடி ஆடி களைத்து போய் படுத்திருந்தான். கைகளை தூக்கி சோம்பல் முறித்த நவீனின் விழிகள் மனைவி மீதும் அவளருகில் அமைதியாய் படுத்திருந்த மகனின் மீது தான் நிலைத்தது. சட்டென்று அவனிதழை புன்னகை தொற்றிக் கொள்ள எழுந்து வந்து அப்படியே அவர்களை பார்த்தப்படியே அருகிலே சரிந்து படுத்துக் கொண்டான்.

மகனை தான் ஆராய்ச்சி செய்திருந்தான், 'ப்பா...இரண்டு நாட்களாக என்னவொரு ஓட்டம்' என்று நினைத்தவனுக்கு நேற்றிரவு கால்களை தூக்கி நவீன் மடியில் வைத்து அழுத்தி விடுமாறு கண்களை சுருக்கி யாசித்தது நினைவில் வர அப்படியொரு விரிந்த புன்னகை ஆடவன் இதழில். ஆம், மண்டபத்தில் பாட்டை போட்டு நடனமாட ஹர்ஷித்தும் அதில் அடக்கம். உருவம் மட்டுமே தந்தையை போல் மற்றபடி அப்படியே நடை பாவனை,பேச்சு எல்லாமே அக்ஷியை உரித்து வைத்திருந்தான். ஒன்றிரண்டு வார்த்தைகளை கோர்த்து அரைகுறையாக பேசுவான், இன்னும் தெளிவான பேச்சில்லை ஆனாலும் சைகையிலே எல்லாவற்றையும் கேட்டு முடித்துக் கொள்வான். அதிலும் அவனுக்கு எதாவது காரியமாக வேண்டுமென்றால் தன் பிஞ்சு கரங்களை கொண்டு நவீனின் கன்னத்தை தாங்கி பாவமாய் ஒரு பார்வை பார்ப்பான் அதில் நவீன் உருகி கரைந்தே போவான். ஆனால் அக்ஷி, 'போடா டேய் உன்னை எனக்கு தெரியும் ரொம்ப நடிக்காத' என்ற ரீதியில் நக்கலாக மேலும் கீழும் பாரத்து விழிகளை உருட்டுவாள்.

அவனின் கைக்கால்களை வருடியபடி படுத்திருந்தவன் விழிகளில் அவனை முதல் முதலாக கைகளில் வாங்கியது நினைவில் எழ சட்டென்று உடல் சிலிர்த்தது. நவீனின் ஸ்பரிசம் உணர்ந்த ஹர்ஷித் உருண்டு வந்து அவன் மார்பில் முகத்தை தேய்க்க முதுகை வருடியபடி அணைத்துக் கொண்டான் மகனை. அதற்கு பிறகு எப்படி உறங்கி போனான் என்றே தெரியவில்லை மீண்டும் வந்து அக்ஷிதா எழுப்பும் வரை. நேற்றிரவின் எச்சமான மீண்டுமொரு விருந்து தான் அந்த காலையில். அடுத்து ஷாப்பிங் போக வேண்டும் என்று அக்ஷி கேட்டிருக்க அதை முடித்து மீண்டும் வீட்டிற்கு வந்து மதிய உணவு முடிந்து மாலை போல் விடைபெற்று விமானநிலையம் செல்ல நவீன் திட்டமிட்டிருந்தான். ஆம், மாலை விமானத்தில் தான் பயணச்சீட்டு கிடைத்திருந்தது.


கண்களை கசக்கி நவீன் எழுந்தமர நன்றாகவே ஜொலித்துக் கொண்டிருந்த அக்ஷியோடு ஹர்ஷித்தும் சிறிது பளபளப்பாய் மின்னிக் கொண்டிருந்தான் ஒப்பனையின் உதவியால். இருவரும் நன்றாக மலர்ந்து நின்றிருந்தனர். தந்தையை பார்த்த ஹர்ஷிதோ ஆர்பாட்டமாய் துள்ளலோடு அவனை நோக்கி கையை நீட்ட, "ப்ச்..ஹர்ஷித்" என்று அதட்டி மகனின் கைகளை இழுத்து பிடித்துக் கொண்டவள் "டையமாகிடுச்சு, எழுந்து குளிச்சு ரெடியாகுங்க மாமா எல்லாரும் வந்துட்டாங்க" என்று பரபரத்தாள்.


நவீனோ அவளை பார்த்து இதழ் வளைத்து வம்பிலுக்கும் பொருட்டு மகனை தன்னிடமிழுத்துக் கொள்ள சற்று முன் இதழை பிதுக்கி அழுகைக்கு தயாரான ஹர்ஷித்தும் அவளை பார்த்து புன்னகையை இதழோரத்தில் அடக்க முயன்றான்.

இருவரின் பாவையிலும் கடுப்பான அக்ஷிதா இடுப்பில் கையூன்றி முறைக்க இம்முறை நவீன் சற்று மலர்ந்து சத்தமாகவே சிரித்தான் பெண்ணவளின் பார்வையில். அவனின் சிரிப்பில் என்ன கண்டானோ ஹர்ஷித்தும் முன்னிரண்டு பற்களை காட்டி புன்னகைக்க எதுவும் பேசாது அக்ஷிதா வெளியேறியிருந்தாள் முகத்தை சுருக்கியபடி.


அவள் செல்வதையே புன்னகையோடு பார்த்திருந்த நவீன் இப்பொழுது மகன் புறம் திரும்பி விட அவனும் எழுந்து நிற்க முயன்றான் நவீனின் தோள்பட்டையை பிடித்தப்படி.



"நவீன் நீ இன்னும் கிளம்பலையாப்பா, மாமா உன்னை கேட்டுடே இருந்தாங்க. கெஸ்ட் வர ஆரம்பிச்சுட்டாங்க" என்று மங்கை வர அவருக்கு பின்பே நக்கலாக பார்த்தப்படி அக்ஷிதாவும் வந்து நின்றாள் புருவத்தை உயர்த்தியப்படி.


"இதோ பைவ் மினிட்ஸ்ல்ல ரெடியாகிடுவேன் அத்தை" என்றவன் கைகளிலிருந்த ஹர்ஷித்தை தூக்கிய மங்கை அறையை விட்டு வெளியேற முனைய அவரை மறுத்து பேச இயலாதவனாக, "பிசாசு" என்றபடி பின்னிருந்து அக்ஷிதாவின் கழுத்தை கைக்கொண்டு அழுத்த திடீரென்ற அவனின் தாக்குதலில், "ம்மா.." என்று அலறியே விட்டாள்.

மங்கை அவளின் சத்தத்தில் என்றவென்று பார்க்க நவீனோ புன்னகையை அடக்க முடியாது சட்டென்று முதுகு காட்டி நின்று விட, "ப்ச..ஒன்னுமில்லை, கால் ஸ்லிப்பாகிடுச்சும்மா" என்றிட, "ஒழுங்கா பார்த்து வா அக்ஷி, கீழ விழுந்து வாரி வைக்காத. ஹர்ஷித் குட்டி கூட அழகா நடந்து வரான்" என்று மங்கை தன் கையை பிடித்திருந்த பேரனை அழைத்துக் கொண்டு வெளியேறினார். நவீன் உடல் சிரிப்பில் குலுங்க இடுப்பில் அழுத்தி கிள்ளியவள், "உங்களை அப்புறமா பார்த்துக்கிறேன் கீழ தான வருவீங்க?" என்று மிரட்டல் விடுத்தப்படி கீழிறங்கி செல்ல அவளையே பார்த்து நின்றிருந்தவன் சிறிது நேரத்தில் கீழிறங்கி வந்தான்.


மீண்டும் வீடு பரபரப்பாய் இருந்தது. சிவக்குமார் தனது தொழில் முறை நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து அது. நவீன் வந்தவுடனே அக்ஷி அவனை உணவுண்ண அழைத்து சென்று விட பின்பு மகனை கைகளில் வைத்துக் கொண்டு சிவக்குமாரோடு ஐக்கியமாகி போனான். அவர் தான் அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு வருபவர்களிடமெல்லாம் பெருமையோடு நவீனையும் அவனின் தொழிலையும் குறித்து அறிமுகம் கொடுக்க அவனோ மெலிதான புன்னகையோடும் கைக்குலுக்கலோடும் நின்று கொண்டான்.


சற்று நேரத்தில் நவீன் அக்ஷியோடும் ஹர்ஷித்தோடும் கிளம்பியிருந்தான் பல்லங்காடியை நோக்கி. "கிளம்பும் போது இது தேவையா அக்ஷி, எதாவது வாங்கணும்னா அங்க போய் பார்த்துக்கலாமே" என்று நவீன் கேட்டிருக்க, "இல்லை அண்ணா மேரேஜ்க்கு நான் எதுவுமே செய்யலையே சோ அதான் சின்னதா ஏதாவது கிப்ட் ப்ரெசன்ட் பண்ணலாம்னு நினைச்சேன்" என்றிருந்தாள். நவீனும் வாணியும் நிறையவே செய்திருந்தனர். ஆனால் அக்ஷிக்கு தனியாக எதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. விஜயனுக்கும் அக்ஷிதா மீது அதீத பாசமுண்டு. அவளுக்காக நிறையவே செய்திருக்கிறான். இப்பொழுது அவள் உயிருடன் இருப்பது கூட அண்ணனின் அதீத பாசத்தின் பொருட்டு மட்டுமே!


அண்ணனுக்கும் அவனின் மனைவிக்கும் தங்கத்திலும் வைரத்திலும் சில ஆபரணங்கள் வாங்கிய அக்ஷிதா பிறகு ஹர்ஷித்திற்கும் நவீனிற்கும் உடை பார்க்க துவங்கி விட நவீனோ மகனுடன் கீழ் தளத்தில் நின்றிருந்தான். ஆம், அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பிரிவு இருக்க மகனை காரில் அமர்த்தி தானியங்கி கொண்டு இயக்கி அவனின் ஆர்பரிப்பையும் துள்ளலையும் ரசித்து புகைப்படமாக அலைபேசியில் சேமித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் விளையாட்டை கை விட்டு ஹர்ஷித் சிணுங்க துவங்க தட்டிய கொடுத்து சமாதானம் செய்தபடி அக்ஷிதாவிற்கு அழைக்க அந்தோ பரிதாபம் பாவையின் அலைபேசி கைப்பைக்குள் மூழ்கிக் கிடந்தது.



ஹர்ஷித் உணவிற்காக தவிர வேறெதற்கும் தொடர்ந்து சிணுங்க மாட்டான் என்று உணர்ந்த நவீன் அழைப்பை ஏற்காத அக்ஷிதா மீது கோபம் கொண்டு நெற்றியை ஆயாசமாய் தேய்த்து படியேறினான் ஆபரணங்கள் எடுக்கும் பிரிவை நோக்கி. அவளோ அதற்கடுத்த தளத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்க தேடி தவித்த நவீன் மீண்டும் கீழிறங்கி விட்டான். ஆம், அங்கு கூட்டமாக இருக்க ஹர்ஷித்தோ குரலெடுத்து அழுகவே துவங்கியிருந்தான். ஹர்ஷித்திற்கும் வீட்டில் தயாரிக்கும் உணவை தவிர வேறெதுவும் கொடுக்க நவீன் அனுமதிப்பதில்லை. ஆக அக்ஷிதா கைப்பையில் எப்பொழுது மகனுக்கான உணவோடே அலைவாள்.


நவீன் மீண்டும் அக்ஷியை தொடர்பு கொள்ள முயற்சிக்க வலையில் சிக்கியிருந்தாள். எடுத்தவுடனே திட்ட துவங்கியிருந்தவனை சமாளித்து, "நீங்க எங்க இருக்கீங்க?" என்று விவரம் கேட்டு அவ்விடம் விரைந்தாள்.


நவீன் மகனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடியே இருக்க ஹர்ஷித் அருகில் நின்றிருந்த பெண்ணின் புடவையை பிடித்து இழுத்திருந்தான். அப்புடவையின் நிறமோ ஏறக்குறைய அக்ஷிதா கட்டியிருந்த கருநீல நிறத்தை ஒட்டியே அமைந்திருந்தது.


திடீரென்று தோன்றிய அசௌகரியத்தில், 'யார்டா இது, நம் புடவையை பிடித்திழுப்பது?' என்று திரும்ப, ஹர்ஷித் செயலை தாமதமாக உணர்ந்த நவீனும் அவளை நோக்கி திரும்பியிருந்தான் மன்னிப்பு யாசிக்க. முகம் முழுக்க அப்படியொரு அதிர்ச்சி வியாபிக்க தலையே ஒரு சுற்று சுற்றியது ஆடவனுக்கு. இதயம் அப்படியே கையில் நழுவியது போல் உணர தலையை உலுக்கி மீண்டும் அம்முகத்தை தன்னுள் பதிக்க முயன்றான். "மம்மீ...இந்த ஷமீக்கா என்னோட சாக்கிய பிடுங்கிட்டா" என்று சிணுங்கல் குரலோடு நான்கு வயதே நிரம்பிய இளம் சிட்டொன்று தளிர் நடையிட்டு வந்து யாஷின் கால்களை கட்டிக் கொள்ள அவளின் பின்பே முயல்குட்டியும் ஓடி வந்து கொண்டிருந்தாள் அவர்களை நோக்கி.
ஷமீராவை கண்டவுடன் நவீனின் மூளை நடப்பது எதுவும் மாயை அல்ல நிஜமென்பதை உணர்த்த இதயதுடிப்பு ஒரு நிமிடம் நின்றே போனது. அவனது விழிகள் சட்டென்று யாஷின் கால்களை இறுகப்பிடித்தப்படி கையை சுரண்ட முயன்ற சிட்டை ஆராய அப்படியே மரித்து போனான் உயிருடனே. தொண்டையில் ஏதோ உருண்டு வந்து அடைப்பது போல் தோன்ற மூச்சு விடவே சிரமமாக இருந்தது ஆடவனுக்கு. அக்குட்டி அப்படியே நவீனின் மறுஉருவமே, விழியசைவு, நீண்ட நாசி, அடங்காத கேசம் என்று நவீனையே அச்சில் கொண்டிருந்தாள். நிறம் மட்டும் யாஷை போல பளீர் வெண்மை. தலை முதல் கால் வரை செயலிழந்தது போல் உணர்ந்த நவீனால் உண்மையிலுமே நிற்க கூட முடியவில்லை, கால்கள் தடுமாறி தள்ளாட இதயமோ அதீத பலவீனமாக உணர்ந்தது ஏதோ இறுதி நிமிடத்தை நெருங்கியதை போல். தலை முதல் கால் வரை ஆழமாக தாங்கியதை போலொரு வலியை உணர்ந்தான்.



"கொஞ்ச நேரம் கூட உங்களால பொறுக்க முடியாதா, பில் போடாம எப்படி வர முடியும்" என்றபடி உரிமையாய் வந்து நவீனை உரசியபடி கையை பிடித்த அக்ஷிதா எதிரிலிருப்பவளை கவனித்திருக்கவில்லை தான். மனைவி மகனோடு நின்ற நவீனை கண்டு எகிறி குதித்து கைகளில் நழுவுவது இப்பொழுது யாஷ் இதயத்தின் முறையாயிற்று.

உண்மையிலே யாஷ்வியால் நழுவ முயன்ற இதயத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை தான். கண்களில் உயிரை தேக்கி நின்றவளின் இமையோரம் நீர் துளி வழிய முயல இதழை கடித்து கட்டுப்படுத்தியப்படி சட்டென்று சுதாரித்து மகளை கைகளில் அள்ளிக் கொள்ள அவளை நெருங்கியிருந்த ஷமீரா அவனின் கைகளை, "அத்தை" என இறுக பிடித்திருந்தாள்.


இயலாமையோடு கூடிய அச்சூழலை இருவருமே அறவே வெறுத்தனர். யாஷ் இல்லை என்பதை விட இப்பொழுது தான் அதிகம் காயம்பட்டு போனது நவீனின் மனது. லட்சமல்ல கோடி பாகங்களாத சிதற துவங்கியிருந்தான். உணர்வுகளோ தறிகெட்ட அலைபாய்ந்து தெறிந்தெள முயன்றது...






தொடரும்....
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Yash irukagala 😁enna epadi oru situation naveen yash epadi face panna poraga😢😢 yash ku oru ponnu Iruka naveen oda uyire yash thaa Ava Iruka eppo enna panna poran 🥺🥺🥺
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Sollala indha nethra sis ipadi than pannuvaga nu athukku than title ipadi vachigala villodu anbu rendu nu yash oda annan annaikku naveen ah parthu shock aagum pothu yae etho onnu idichithu athu ithu than pola yash naveen ku kalyanam aana piragu than avanga veetuku kedaichi irupa nu thonuthu athu na la than ava irukkarathu ah naveen ku yara yum solla venam nu solli irupa naveen ku avan illa na ra vali ah vida ippo than athiga vali ah anubavaika poran
 
Top