• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 15

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 15



கண்களில் நிரம்பிய உறக்கத்தை முயன்று விலக்கியப்படி அமர்ந்திருந்த நவீனின் தோளில் சாய்ந்திருந்த அக்ஷிதா எப்பொழுதோ உறக்கத்தை தழுவியிருந்தாள். ஹர்ஷித், அவன் மகன். "ங்ங்..ம்ம்..ப்பூ.." என்று குரலெழுப்பியபடி தன் முன்னிருந்த விளையாட்டு பொருட்களை கலைத்து மும்மரமாக விளையாடி கொண்டிருந்தான் அந்த நள்ளிரவில். நவீனின் விழிகள் கடிகாரத்தில் நிலைக்க அந்தோ பரிதாபம் அதுவோ பனிரெண்டை தொட முயற்சித்துக் கொண்டிருந்தது. "அடேய் உனக்கு விளையாட நேரமே கிடைக்கலையாடா? நடுராத்தியில இப்படி உட்கார்ந்திருக்க" என்று கண்களை கசக்கி கொட்டாவி விட்டபடி மகனை முறைக்க அவனுக்கு என்ன புரிந்ததோ சட்டென்று தன் கையில் வைத்திருந்த பொம்மையொன்று நவீனின் முகத்தில் வந்து விழுந்தது. அவனின் செய்கையில் நவீனின் இதழ் விரிய தந்தையின் சிரிப்பில் என்ன கண்டானோ புதிதாக முளைத்த இரண்டு பால் பற்களை நன்றாகவே வெளிக்காட்டி புன்னகைத்தவன் மீண்டும் திரும்பிக் கொள்ள நவீன் ஆசையாய் மின்னும் விழிகளோடு மகனை பார்த்து அமர்ந்திருந்தான் தலையை கோதியபடி. அக்ஷிதா தான் அரை உறக்கத்தில் ஹர்ஷித் உடன் அமர்ந்திருந்தாள். உறக்கத்தில் புரண்ட நவீன் அருகில் மனைவி இல்லாததை கண்டு எழுந்து தேட ஹாலில் விளக்குகளை ஒளிர விட்டு அக்ஷிதா சுவற்றில் சாய்ந்தப்படி அமர்ந்திருக்க அவளருகில் மகன் தன் முன் குவிந்திருந்த விளையாட்டு பொருட்களை கைக்கெட்டும் தூரம் வரை தூக்கி போட்டுக் கொண்டிருந்தான். இடையில் அதை எடுத்து வந்து கொடுக்குமாறு வேறு அக்ஷிதா புடவையை பிடித்திழுத்து கைக்காட்ட நன்றாக முறைத்தவள், "அடேய், இந்த நேரத்தில உனக்கு துணைக்கு உட்கார்த்திருக்கதே பெரிசு. ஏதாவது வேலை சொன்ன பிச்சிடுவேன்" என்று விழிகளை உருட்டியிருக்க ஏதோ திட்டுகிறாள் என்று புரிந்து உதட்டை பிதுக்கி கழுத்தை வெட்டியவன் அவளுக்கு பரிசாய் ஒரு பொம்மையை முகத்தில் எறிந்து விட்டு அதற்கு பின் அவள் புறம் திரும்பவேயில்லை.


நவீன் வரவை உணர்ந்த ஹர்ஷித் கைதட்டி புன்னகைத்து ஆர்பாட்டமாய் அவனை அருகில் அழைக்க புன்னகையுடன் மகன் அருகில் அமர்ந்தவன் அக்ஷியின் தோள் தட்டி எழுப்ப கண்களை கசக்கி அவனை பார்த்தாள். "நீ உள்ள போய் தூங்கு. நான் பார்த்துக்கிறேன்" என்றவனுக்கு, "நோ, நீங்க தூங்குங்க நான் மேனேஜ் பண்ணிடுவேன். நீங்க மார்னிங் ஆபீஸ் போகணும். நாங்க வீட்டில தான இருப்போம் மதியம் தூங்கிடுவோம்" என்று விளக்கம் கொடுத்தவள் அசைய மறுக்க நவீனுக்கும் களைத்து போய் அமர்ந்திருந்தவளை விட்டு செல்ல மனது வராது போக அப்படியே அவளருகிலே கால்களை நீட்டி அமர்ந்து விட்டான் மீண்டும், "நீங்க போங்க மாம்ஸ்" என்று அவள் கூறியதை காதில் வாங்காது. விழிகளை விரித்து பார்த்தவளுக்கு, 'நான் போக மாட்டேன் போடி' என்ற பாவனையை நவீன் கொடுக்க, "க்கும்...இரண்டு பேரும் அடங்க மாட்டிங்க, எப்படியோ போங்க" என்று புலம்பி தந்தையை மகனையும் ஒரு பார்வை பார்த்தவள் நவீன் தோளில் சாய்ந்து உறங்கியும் போனாள்.



நெற்றியை தேய்த்த நவீன் மகனை பார்க்க அவனோ தூங்குவதற்கான சிறு அறிகுறியுமின்றி கண்களை அகல விரித்து விளையாடிக் கொண்டிருக்க தன் தோளிலிருந்த அக்ஷி தலையை கீழே சரித்து படுக்க வைத்து அவளருகிலே மகனை பார்க்குமாறு ஒருக்களித்து படுத்துக் கொண்டான்.
மணி ஒன்றை தாண்டிய பிறகே
சிறிதாக சுணங்கிய ஹர்ஷித் தாயை தேட அவளோ சுகமாக நவீனின் தோளில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருக்க நவீனின் விழிகளும் தன்னையறியாது மூடியிருந்தது. அவனும் அழுகாது மெதுவாக தவழ்ந்து வந்து நவீன் மீதேறி படுத்துக் கொள்ள அன்னிச்சையான உணர்வில் நவீனின் கரங்களை மகனை அணைத்துப் பிடித்துத் கொண்டது உறக்கத்தினூடே. பிறந்ததில் இருந்து எப்பொழுது அவன் படுக்குமிடம் நவீன் மார்பு தான், அக்ஷியை கூட அவ்வளவாக தேட மாட்டான் உணவுக்கன்றி. உறங்கும் பொழுது நவீன் இருக்க வேண்டும். ஆக இது வழக்கமாக ஒன்று தான்.




குழந்தை பிறந்து ஆயிற்று ஒரு வருடம். போன வாரம் தான் ஹர்ஷித் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். நவீனின் உலகம் மீண்டும் வண்ணமயமானது போலொரு மாயை சூழ்ந்து கொண்டது. வீட்டிற்குள் நுழைந்ததும், 'ஆஆ..ஊஊ' என்று தனக்கு தெரிந்த மழலை மொழியில் மிழற்றி கைகளை ஆர்வமாக தூக்கி எச்சில் வழிய பல் இல்லாத பொக்கை வாயைக் கொண்டு விரிந்த சிரிப்புடன் வரவேற்கும் மகனை கைகளில் அள்ளிக் கொஞ்சும் பொழுது மற்றதெல்லாம் பின்னுக்கு சென்று விடுகிறது. நவீன் விளையாட்டாய் அவனது கன்னங்களை கடித்தாலும் மகனும் மீண்டும் அதே போல் அவனின் கன்னங்களை எச்சில் செய்திடுவான் ஆர்வமாய் வாயை பிளந்து. அக்ஷிதா தான் ஹர்ஷித் பின்பே சுற்றி, மாலை நவீன் வரும் பொழுது அலண்டு போய் விடுவாள். நவீன் கூறியது போல் அதிக சேட்டை தான், ஓரிடத்தில் நிற்க மாட்டான். வீட்டையே நூறு முறை வலம் வந்து விடுவான், ஓரளவு நடக்கவும் நன்றாக தவழவும் செய்ய அக்ஷிதாவிற்கு அவனை கன்காணிப்பதே ஆகப்பெரும் வேலை. அவள் லேசாக அசந்தாலே வாயில் எதையாவது எடுத்து வைத்து விடுவான். ஒரு பொருளை கூட கீழே விட்டு விடக் கூடாது என்று நவீன் கட்டளையிட்டிருக்க வீட்டை அத்தனை சுத்தமாக வைத்திருப்பாள். வாணி நடனப்பள்ளியின் பொருட்டு அக்ஷிதாவிற்கு அதிகமாக உதவ முடியாது. ஆனால் தன்னால் முடிந்தளவு எல்லா வேலையும் செய்து கொடுத்தே செல்வார். ஆட்களும் உண்டு,சமையலுக்கு சுத்தம் செய்வதற்கு என்று.


"நீ ரொம்பவே டயர்டா தெரியுறீயே அக்ஷி, பேசாம பேபியை பார்த்துக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்யவா?" என்று அவளின் ஓய்ந்த தோற்றம் பார்த்து நவீன் வினவியிருக்க உறுதியாக மறுத்து விட்டாள், "அதெல்லாம் எதுக்கு மாம்ஸ், நான் வீட்டில தான இருக்கேன். அவனை பார்த்துக்கிறதை விட பெரிய வேலை ஒன்னும் எனக்கு இல்லை" என்பதாய். அதற்கு மேல் நவீன் அவளை கட்டாயப்படுத்தவில்லை, இரவில் அவள் அசந்து உறங்கி விட்டாலும் மகனோடு அல்லாடுவது அவனுடைய பொறுப்பாகி போனது. ஆனால் அதில் ஒன்றும் கஷ்டமொன்றும் இல்லை ஆடவனுக்கு. புன்னகையோடே விழிகளில் பொங்கி வழியும் நித்திரையோடு மகனுடன் அவனது செயல்களை இரசித்து லயித்து போவான். அவனோ அக்ஷியை படுத்துவது போல் நவீனிடம் அதிகமாக அலைப்புற மாட்டான். "உனக்கு கூட ஆளை ஏய்க்க தெரியுது இப்ப உங்கப்பாவை பார்த்தும் சமத்தா உட்கார்ந்திருக்க நீ. ஆனா இவ்வளவு நேரம் என்னை எத்தனை சுத்து சுத்த வைச்ச?" என்று நவீனின் மடியில் அழகாக அமர்ந்திருக்கும் மகனிடம் விழிகளை உருட்ட அவனுக்கு என்ன புரியுமோ அக்ஷியை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்துக் கொண்டு நவீன் மார்பில் முகத்தை மறைத்துக் கொள்வான் அந்த குட்டி ஹர்ஷித். அவனது செயலில் நவீனுக்கு அப்படியொரு சிரிப்பு பொங்கும். அக்ஷி இருவரையுமே, 'என்ன செய்ய?' என்பது போல் இடுப்பில் கையூன்றி முறைத்து நிற்பாள். ஒரு வருடம் எவ்வாறு கடந்ததென்று இருவருக்குமே தெரியவில்லை. அந்தளவிற்கு மகன் இருவரின் வாழ்வையும் இட்டு நிரப்பியிருந்தான்.


காலையில் எழுந்து வந்த வாணி கண்ட காட்சி என்னவோ நவீன் மீது ஹர்ஷித்தும் அவனது தோளில் தலை வைத்து படுத்திருந்த அக்ஷிதாவும் தான். சட்டென்று அவரின் இதழ் நிறைய விழிகள் பேரனை தான் ஆராய்ச்சி செய்தது. விழித்தே படுத்திருந்தான். ஆனால் அசையாது நவீனின் கழுத்தை கட்டிக் கொண்டு ஓரக்கண்களால் வாணியை பார்க்க, "ஹர்ஷித் குட்டி, பாட்டிக்கிட்ட வாங்க" என்று அவனை தூக்கி கொஞ்சியவர் நவீனையும் அக்ஷியையும் எழுப்பி உள்ளே படுக்குமாறு அனுப்பி விட்டு பேரனுக்கு பால் காய்ச்சி கொடுத்து தனக்கு தேநீர் தயாரித்து என்று வேலையில் மூழ்கி விட்டார்.

அக்ஷியும் ஹர்ஷிதையும் நவீனின் வாழ்வில் இடைச்செருகல் என்பதை உணர இயலாத வகையில் மிககச்சிதமாகவே பொருந்தி போனார்கள். வாணிக்கும் அவ்வபொழுது மகனை குறித்தெழும் ஆற்றாமை எல்லாம் இப்பொழுது மறைந்தே போயிருந்தது. ஹர்ஷித் வரவு அவர்களுடைய வாழ்வை முழுமையாகவே மாற்றியிருந்தது. அவனின் அழுகுரலாலும் சிரிப்பொலியாலும் வீடு மட்டுமின்றி மனதும் நிறைந்தே போனது.


இதோ அடுத்த வாரத்திலிருந்து அக்ஷிதா அலுவலகம் செல்ல போகிறாள் மகனை வாணியிடம் விட்டு. பழைய அலுவலகத்திலிருந்து நவீனின் நண்பன் அழைத்து, "வேலைக்கு வர்றீங்களா அக்ஷி?" என்று அழைப்பு விடுத்திருக்க நவீனும், "போ" என்றிருந்தான். ஆம், ஹர்ஷித் ஓரளவு வளர்ந்திருக்க அவன் விழித்திருக்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அக்ஷிதாவிற்கு வெறுமையாக தான் கழிந்தது. மேலும் வீட்டிலும் எல்லாவற்றிற்கும் ஆட்கள் உண்டு தனிதனியாக. நவீனிற்கும் வீட்டிலே ஹர்ஷித்தோடு அவளின் வாழ்வு முடிந்து விடுவதில் விருப்பமில்லை. அதற்காக தானே வம்படியாக அவளை படிக்க வைத்திருந்தான்.


முதல் நாள் வேலைக்காக வேகமாக உண்டு பரபரப்பாய் கிளம்பியிருந்தாள் நவீனின் காரில். வாணி தன் காரில் பேரனை தூக்கிக் கொண்டு கிளம்பி விட அவனோ அக்ஷியை விட மாட்டேன் என்று புடவையை பிடித்துக் கொண்டு ஒரு களேபரமே செய்திருந்தான். கண்களை கசக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளை முறைத்த நவீனின் கரங்கள் மகிழுந்தை வேகமாக இயக்கிக் கொண்டிருந்தது.
அலுவலகம் வாயிலில் மகிழுந்தை நிறுத்தியவன் மனைவியை அணைத்துக் கொண்டு, "அக்ஷி, ஹர்ஷித் தான் குட்டி பையன் நீ ஒன்னுமில்லை. அம்மாகிட்ட தான இருக்கான். இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிருக்க. ஒரு வாரத்தில அவனே பழகிடுவான் நீ வேணா பார்" என்று மனைவியை சமாதானம் செய்து கிளம்பியிருந்தான். அவன் கூறியது போல் மாலையில் அக்ஷிதா நடனப்பள்ளி செல்ல மகனோ புன்னகையுடன் ஓடி வந்து அவளின் கால்களை கட்டிக் கொள்ள சட்டென்று கண்கள் பனித்து போக வாரிச்சுருட்டி அணைத்துக் கொண்டாள் மகனை. "பார் அவனோ ஹாப்பியா சிரிச்சிட்டு இருக்கான் நீ தான் முகத்தை தூக்கி வைச்சு மனுசனை கடுப்பேத்துற" என்று நவீன் மனைவியை முறைக்க தவறவில்லை. வாணி இரவு சற்று தாமதமாக தான் வருவார் என்பதால் மனைவி மகனோடு நவீன் வீடு திரும்பியிருந்தான்.



முதல் இரண்டு நாட்கள் மனைவியும் மகனும் செய்யும் அலப்பறையை நவீன் ஆயாசமாக பார்த்திருந்தான். அடுத்தடுத்து வந்த நாட்கள் ஹர்ஷித் தெளிந்து கொண்டு சமத்தாக நவீனுக்கும் அக்ஷிதாவிற்கு கையசைத்து விடை கொடுத்து வாணியுடன் கிளம்பிடுவான். நடனப்பள்ளிக்கு வரும் சில தாய்மார்கள் குழந்தைகளோடு வர விளையாட துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் ஹர்ஷித் அவர்களோடு ஒன்றி போனான். அவனது இலகுவான பாவனையில் அக்ஷியும் ஆசுவாசமடைந்து வேலையில் மூழ்கி தான் போனாள். ஆனாலும் அவ்வப்பொழுது வாணிக்கு அழைத்து மகனின் இருப்பு குறித்து விசாரித்துக் கொள்வாள்.


அன்று நவீன் குடும்பத்துடன் சென்னை கிளம்பியிருந்தான். மறுநாள் விஜயனுக்கு நிச்சயம் அதற்கடுத்த நாள் திருமணம். நவீனின் வீடு தான் தாய்மாமன் என்பதால் சிவக்குமாரும் மங்கையும் முறையாக வந்து அழைத்து சென்றிருந்தனர். சிவக்குமாருக்கு மகளை அதிகமாகவே பிடிக்கும் அவளின் ஒரு சில செயல்களை தவிர்த்து. ஆக, பெரிதான இடைவெளி யொன்று விழுந்து போனது அவர்களுக்கிடையில். அக்ஷியை கொண்டு தான் அவருக்கும் நவீனுக்குமிடையில் கூட அவ்வப்பொழுது கசப்புகள் எழுவதுண்டு.



"அக்ஷி ரெடியா?" என்ற நவீன் பயணப்பைகளை மகிழுந்தில் ஏற்ற வாணியும் ஹர்ஷித் எப்பொழுதோ தயாராய் மகிழுந்தில் அமர்ந்திருந்தான். ஹர்ஷித்க்கு மகிழுந்தை கண்டு விட்டாலே அப்படியொரு உற்சாகம் எழும். கைகளை தூக்கி ஆர்பாட்டம் செய்து கண்ணாடியை கைக்கொண்டு தட்டி கீழிறக்க செய்து தலையை வெளியில் நீட்டி அருகில் போவோர் வருவோரை சத்தம் எழுப்பி அழைத்து ஒரு பாடே படுத்தி விடுவான்.

எல்லாத்தையும் சரி பார்த்த நவீன் மீண்டும், "அக்ஷி" என்று சத்தமாக அழைத்த பின்பே அவசரமாக புடவையை நீவியபடி வெளியேறியவள் கதவை பூட்டி வர விமானநிலையம் நோக்கி அவர்களின் பயணம் துவங்கியது.


எப்பொழுதும் போல் ஹர்ஷித் ஆர்பாட்டம் செய்ய நவீனோ புன்னகையோடு மகனின் செயல்களை இரசித்து வர வாணி தான் அவன் இழுத்த இழுப்பக்கெல்லாம் போராடிக் கொண்டிருந்தார். அக்ஷிதாவோ, "ஹர்ஷித், அமைதியா வர மாட்டியா நீ?" என்று விழிகளை உருட்டி மிரட்ட வாணியை பாவமாய் பார்த்தவன் உதட்டை பிதுக்க வாணியோ பொய்யாய் அக்ஷிதாவை அடிக்க முனைய வாணியின் புடவையில் தலையை மறைத்துக் கொண்டு புன்னகைத்தவன் செயலில் மூவரும் உருகி கரைந்து தான் போனார்கள்.


விமானத்திற்காக காத்திருந்த ஹர்ஷித்தோ ஓரிடத்தில் அமராமல் அங்குமிங்கும் ஓட அக்ஷிதாவும் மகனின் பாதுக்காப்பிற்காக பின்பே ஓடிக் கொண்டிருந்தாள். ஒருக்கட்டதில் பொறுமையிழந்த அக்ஷிதா வலுக்கட்டாயமாக மகனை கைகளில் அள்ளிக் கொள்ள துள்ள முயன்றவன் கிளுக்கி சிரிக்க அஷியும் முகம் கொள்ள புன்னகையுடன் நவீனை நோக்கி நகர்ந்தாள் அவளை இரு விழிகளை கூறிடுவதை அறியாது! ஆனால் சிறிது நேரத்தில் பார்வை வீரியத்தில் ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அவ்விழிகளும் அவசரமாய் பார்வையை திருப்பிக் கொண்டது தேங்கிய நீரோடு.



தொடரும்.....














 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Enna pa next twist ya yara partha yash ya irukumo 🙄🙄🙄
 
Top