• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 14

Administrator
Staff member
Messages
575
Reaction score
832
Points
93
தேனும் இனிப்பும் 14:

நானும் அவனும்
சிரிப்பும் மகிழ்வும்…


ஜீவா அமைதியாக வானத்தை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான்.

ஜானு நடந்து சென்று அவனருகே நின்று கொள்ள திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் இருளை வெறித்தான்.

நிமிடங்கள் கடந்தும் இருவரிடத்திலும் மௌனம் ஆட்சி செய்தது.

“இப்படியே மார்னிங் வரை நிக்க போறோமா ஜீவா” என்று அவன் புறம் திரும்பி ஜானு கேட்க, அமைதியாக அவளை பார்த்தவன் இடவலமாக தலையசைத்தான்.

“ஏன் ஜீவா வாயை திறந்து பேச மாட்டீயா?” என்று அவளே இம்முறை கேட்க, அவளது புறமே முழுதாக திரும்பியவன் கைளை பிடித்து அவள் விழிகளோடு கலந்தவன், “தாங்க்ஸ்” என்று உரைத்தான்.

“எதுக்கு?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினாள்.

“எல்லாத்துக்கும்” என்று மறு மொழிந்தான்.

“ஓ…” என்று இழுத்தவள், “அப்போ நானும் தாங்க்ஸ்” என்று அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளது செயலில் இதழில் புன்னகை முகிழ அவளது உச்சியில் நாடியை பதித்தவன், “நீ ஏன்டி இப்படி இருக்க?” என்று கேட்டிட, “எப்படி ஜீவா?” என்று அண்ணாந்து பார்த்தவள் அவன் விழிகளுக்கு தேவதையாக தெரிந்தாள்.

“உன்னோட இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இவ்ளோ பெருந்தன்மையா இருந்திருக்க மாட்டேன்” என்று ஜீவா கூற, அமைதியாக அவனை பார்த்தாள்.

“முழுசா பதிமூனு வருஷம் காத்திருக்க அளவுக்கு நான் உனக்கு என்ன செஞ்சிட்டேன்” என்று ஜீவா ஆற்றாமையாக கேட்க, “அள்ள அள்ள குறையாத காதலை கொடுத்து இருக்க ஜீவா” என்று புன்னகைத்தாள்.

“உன் இடத்துல நான் இருந்தா இத்தனை வருஷம் வெயிட் பண்ணி இருப்பேனான்னு தெரியலை ஜானு” என்று மொழிய, விழியுயர்த்தி பார்த்தவள், “கண்டிப்பா இருந்திருப்ப ஜீவா. நான் உன்னை விரும்புறதை விட நீ என்னை அதிகமா விரும்புற” என்றாள்.

“நீ ஏன்டி என்னை இவ்ளோ நம்புற? உன் நம்பிக்கைக்கு எல்லாம் நான் தகுதியே இல்லை” என்று வருந்தி கூற, “நீ ஏன் ஜீவா இவ்வளோ நம்பிக்கைய எனக்கு கொடுத்த” என்று இமை நீண்ட புன்னகை பூத்தாள்.

“என்ன நம்புனதால தான் உனக்கு இவ்ளோ கஷ்டம்” என்று அவன் முகம் வாட, “எல்லா கஷ்டமும் இப்படி உன்னோட சந்தோஷமா வாழத்தான் ஜீவா” என்று அவனது கன்னம் வருடினாள்.

“லாவண்யா இருந்திருந்தா உனக்கு இந்த வாழ்க்கை கிடைச்சிருக்காது” என்று அவள் முகம் பார்க்காது மறுபுறம் திரும்ப, “தெரியும்” என்று அமர்த்தலாக கூறினாள்.

“தெரிஞ்சும் ஏன் இப்படி அமைதியா இருக்க? இந்நேரம் உன் இடத்தில வேற யாரும் இருந்தா கண்டிப்பா அவ போனதும் நீ என்னை தேடி வர்றீயான்னு சண்டை போட்ருப்பாங்க” என்று வேதனையாக கூற, “ஸோ…” என்று அவனது முகம் நோக்கினாள்.

“நீ ஏன் கேக்கலை?” என்ற வினாவுடன் அவளை காண, “ஏன் கேக்கணும் ஜீவா?” என்று பதில் வினா எழுப்பினாள்.

ஜீவா பதிலற்று அவளை காண, “நீ கேக்குற கேள்வியோட அபத்தம் உனக்கு புரியுதா?” என்று வினவியவள் அவனது முகத்தை கூர்ந்தாள். இருவரிடத்திலும் சில கணங்கள் அமைதி குடிபுகுந்தது.

“லாவண்யா இருக்கும் போது நீ எப்படி என்னை தேடி வர முடியும் ஜீவா? உனக்கு மனைவியா லாவண்யா இருக்கும் போது நீ என்னை தேடி வந்தா நம்ப உறவுக்கு என்ன பேர் தெரியுமா?” என்கையிலே, “ஜானு” என்று அதட்டியவன் இடம் வலமாக தலையசைத்தாள்.

“நீ மறுத்தாலும் பாக்குறவங்க பார்வை அப்படித்தான் இருக்கும். ஏன்னா நடந்த எதுவும் அவங்களுக்கு தெரியாது ஜீவா. லாவண்யா இருக்கும் போது நீ என்னை தேடி என்கிட்ட வந்திருந்தா கண்டிப்பா நான் உடைஞ்சு போயிருப்பேன் ஜீவா” என்றவளது குரல் உள்ளே செல்ல ஜீவா அவளது கரத்தை அழுத்தி பிடித்தான்.

“எனக்கு தெரியும் ஜீவா நமக்குள்ள நடந்தது வேணா உன்னோட நினைவு இல்லாததால நடந்து இருக்கலாம் ஆனால் எல்லாம் தெரிஞ்ச உன்னால லாவண்யாக்கு துரோகம் பண்ண முடியாது. பண்ணியிருக்கவும் மாட்ட”

“...”

“அதான் நான் உன்மேல வச்ச நம்பிக்கை உன் மனசறிஞ்சு நீ லாவண்யாவை கஷ்டப்படவிட மாட்ட. நீ கேட்டியே உன் நம்பிக்கைய நான் காப்பாத்தலைன்னு. இதோ இது தான் என் நம்பிக்கைய நீ காப்பாத்துன விதம் ஜீவா” என்று அழகாய் தலைசாய்த்து கூறியவளின் மீது காதல் பெருகி வழிந்தது.

“ஹ்ம்ம் நீ சொல்றது சரியா இருக்கலாம். ஆனால் நான் லாவண்யாக்கிட்ட‌ உண்மைய சொல்லிட்டு உன்னை தேடி வந்திருக்கலாமே. நான் ஏன் ஞாபகம் வந்தும் அவக்கிட்ட சொல்லலைன்னு உனக்கு ஒரு செகெண்ட் கூட தோணலையா?” என்று அவளுக்காக அவளிடமே வாதாடினான்.

“ம்ஹூம் தோணலை ஜீவா. தோணவும் செய்யாது” என்று தீர்க்கமாக மறுக்க, “ஏன்?” என்று ஒற்றை கேள்வியை விழிகளில் தேக்கினான்.

“உங்க மேல உயிரையே வச்சிருந்த லாவண்யா இந்த விஷயம் தெரிஞ்சு உன்னோட காதல் அவங்க இல்லைன்னு தெரிஞ்சா தாங்குவாங்களா?” என்று வினா தொடுக்க, “ம்ஹூம்” என்று தலையசைத்தவனுக்கு அந்த நினைப்பே அச்சத்தை கொடுத்தது.

தான் மட்டும் நடந்ததை கூறி இருந்தால் அவள் என்ன ஆகியிருப்பாள் என்ற எண்ணமே அதிர செய்தது. காரணம் லாவண்யா ஜீவாவின் மீது கொண்ட பித்துநிலை அத்தகையது.

“தாங்க மாட்டாங்க தான? அதான் நீ சொல்லலை ஜீவா. எனக்கு தெரியும் உன்னால மனசறிஞ்சு யாரையும் காயப்படுத்த முடியாது. அவங்க உடைஞ்சு போறதை பாக்க முடியாது ஜீவா அதான் நீ சொல்லலை” என்று அவள் மென்னகையுடன் கூற, தன்னைவிட தன்னை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாளே இவள் என்று வியப்பை விழிகளில் தேக்கி பார்த்தான்.

ஜானு, “என்ன?” என்று ஒற்றை புருவம் தூக்க, “இந்த புரிதல்” என்றவன் நிறுத்திவிட்டு அவளை பார்க்க, “எனக்கு உன்னை புரியும் ஜீவா. இப்போ இல்லை எப்பவுமே ஏன் லாவண்யா இருந்து கடைசிவரை நீ என்னை தேடி வராமலே இருந்திருந்தாலும்” என்று புன்னகைத்தாள்.

அந்த புன்னகையில் அவனது உலகம் அழகாகியது போல தோற்றம்.

“கடவுள் என் வாழ்க்கையில நிறைய தேவதைகளை கொடுத்து இருக்கார்” என்று ஜீவா புன்னகை சிந்த, “ஆஹான்” என்று பாவனையாய் கூறியவள் சிரிக்க இவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

இருந்தும் விடாமல், “நீ என்னோட தேவதை தான்” என்று அழுத்தி கூற, “ஜீவா நமக்கு தர்ட்டி ப்ளஸ் ஆகிருச்சு. இன்னும் என்ன டீனேஜ் பையன் போல பேசிட்டு இருக்க” என்று சிரிப்பு பொங்க வினவினாள்.

“ஏன் காதலிக்க வயசு ஏதும் இருக்கா என்ன? டீனேஜ்ல தான் காதலிக்கணுமா? நாம இழந்த காலத்துக்கும் சேர்த்து காதலிக்கலாம் டி” என்று விழி உயர்த்தினான்.

“அஹ. ஹ்ம்ம் காதலிக்கலாமே” என்று விழிகளில் அபிநயம் பிடித்தவள், “இப்படி பேசினா தான் ஜீவா நல்லாயிருக்கு. சும்மா நடந்ததையே நீ ஏன் கேக்கலை சண்டை போடலை நான் உனக்கு டிசர்வ் இல்லை இதெல்லாம் நல்லாவா இருக்கு” என்று வினவ, “ஹ்ம்ம்…” என்று அவனும் ஆமோதித்து ஒப்புக்கொண்டான்.

“நமக்கே காலம் போன கடைசில வாய்ப்பு கிடைச்சிருக்கு அதை அனுபவிக்கிறதை விட்டுட்டு நான் லாவண்யாகிட்ட இப்படி பேசி இருப்பியா நடந்து இருப்பியான்னு லாவண்யா கூட கம்பேர் பண்ணி சண்டை போட்டு உன் நிம்மதிய கெடுத்தா நம்ம வாழ்க்கை போராட்டமாதான் இருக்கும்” என்று கூற,

“அதுவும் சரிதான்” என்று சரணடைந்தவன், “அதென்ன காலம் போன கடைசி நம்ம‌ என்ன கிழவன் கிழவி ஆகிட்டோமா” என்று போலியாக முறைத்தான்.

“இல்லையா பின்ன” என்றவள், “பாஸ் மறந்துட்டிங்களா நமக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு. ஆல்ரெடி அங்கிள் ஆன்ட்டி ஆகிட்டோம். இன்னும் பத்து வருஷத்துல தாத்தா பாட்டி ஆக கூட வாய்ப்பிருக்கு” என்று அங்கலாய்த்தாள்.

“ஏதே தாத்தா பாட்டியா? சரிதான்” என்று சிரித்தவன், “விட்டா நீயே சின்ன புள்ளைங்கள தாத்தா பாட்டின்னு கூப்பிட வச்சிடுவ போல. இன்னும் பத்து வருஷம் இருக்கே இருபது வருஷத்துக்கு சேர்த்து காதலிக்கலாம்டி பொண்டாட்டி”என்று அவளது தோளோடு அணைத்தான்.

“ஹ்ம்ம் ஹ்ம்ம் காதலிக்கலாம் நிறைய நிறைய காதலிக்கலாம்” என்று கூற, அவளது பாவனையை கண்டு லேசாக முறைத்தான்.

அதில் சத்தமாய் சிரித்துவிட்டவள், “நான் இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஜீவா” என்றுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“நானும் உன்னைவிட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவளருகே அமர்ந்தான். ஒருவர் அமரும் இருக்கையில் இருவர் அமர்ந்து இருந்தனர்.

சற்று நகர்ந்து அவனுக்கு இடம் கொடுத்தவள் அவன் அமர்ந்ததும் நெருங்கி அமர்ந்தாள். அமர்ந்தவாக்கிலே அவளை அணைத்து கொண்டான் ஜீவா.

“லாஸ்ட் மந்த் வந்து யாராவது என் லைஃப் இவ்ளோ ஹாப்பி ஆகும்னு சொல்லி இருந்தா நான் சிரிச்சிருப்பேன் ஜீவா. ஆனால் பாரேன் பத்து நாள்ல என் வாழ்க்கை எவ்ளோ அழகாகிடுச்சு. அருமையான புருஷன் அழகான முத்து முத்தா மூனு குழந்தைங்க மமானார் மாமியார் நாத்தனார் தங்கச்சி தம்பினு எவ்ளோ பெரிய குடும்பம் எனக்கு கிடைச்சிருக்கு” என்று பெரிதாய் மகிழ, அவளது சிரிப்பை மகிழ்வை வார்த்தைகளை ரசனையுடன் உள் வாங்கி கொண்டிருந்தான்.

“இதெல்லாம் உன்னால தான் ஜீவா. நீ என் வாழ்க்கையில வரலைன்னா இதெல்லாம் எப்பவும் கிடைச்சிருக்காது ஜீவா. எல்லா கஷ்டமும் இவ்ளோ சந்தோஷத்துக்காக தான் போல” என்று அவனது தோளில் முகத்தை பதித்தாள்.

“ஹ்ம்ம் எனக்கும் கூட லைஃப் இவ்வளோ அழகா மாறும்னு நான் நினைச்சு பாக்கவே இல்லை. சில தேவதைகள் என் வாழ்க்கைய வசந்தமாக்கிட்டாங்க” என்று பக்கவாட்டில் திரும்பி பார்த்து கூறினான்.

“தேவதைகள் யாரு உன்னோட முதல் தேவதை ஜீவா” என்று இவள் வினா எழுப்ப, “இதென்ன கேள்வி என்னோட முதல் தேவதை என் பொண்ணு தான்” என்று குறும்பு சிரிப்புடன் பதில் அளித்தான்.

“ஓஹோ…” என்று கோபம் கொண்டவள், “போங்க போய் உங்க முதல் தேவதைய கொஞ்சுங்க” என்று அவனை தள்ளிவிட்டாள்.

அவளது இருகரத்தையும் சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டவன், “ஹ்ம்ம் கொஞ்சலாமே ஆனால் என் மக தூங்குறாளே. மார்னிங் எழுந்ததும் அவள கொஞ்சுறேன். அதுவரைக்கும் போனா போகுதுன்னு உன்னை கொஞ்சிக்கிறேன்” என்று கண்சிமிட்டினான்.

“அப்படி ஒன்னும் போனா போகுதுன்னு என்னை யாரும் கொஞ்ச வேணாம் சாமி. உங்க பொண்ணு எழுற வரைக்கும் காத்து கிடங்க” என்று சிலுப்பி கொண்டு எழ முயற்சிக்க அவளை ஒரே இழுப்பில் தன் மடிக்கு கொண்டு வந்தவன், “கோவக்காரி நீ தான்டி என்னோட முதல் தேவதை” என்று அவளது நெற்றி முட்டினான்.

“நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்றவள் இதழை சுழிக்க, “நீயில்லாம அவ எனக்கு வந்திருப்பாளாடி என் பொண்டாட்டி” என்று அவளது தோளின் பக்கவாட்டில் கன்னத்தை பதித்தான்.

“ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்றவள் இருந்தும் போலியாக முறுக்கி கொள்ள, ஜீவா சத்தமாய் சிரித்திருந்தான்.

“ஷ்… ஜீவா” என்று அவனது வாயை கரம் கொண்டு மூடியவள், “பசங்க தூங்குறாங்க” என்று எச்சரிக்கை செய்தவளுக்கும் சிரிப்பு வந்தது.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து சிரிப்பை கட்டுப்படுத்தினான்.

“ஜீவா உனக்கு நம்ம பர்ஸ்ட் மீட்டிங் ஞாபகம் இருக்கா?” என்று ஜானு கேட்க, “ஹ்ம்ம் இருக்கே. ரெட் கலர் டாப் ப்ளூ கலர் ஸ்கர்ட் போட்டுட்டு பேஸ் வாஷ் பண்ணதோட என்ன எட்டி பார்த்து ஹாய் ஜீவான்னு சொன்னியே அது இப்பவும் காதுல இனிக்கிது” என்று சிலாகிக்க, “ஹ்ம்ம் இப்போ இருந்தே லவ் மோட் ஸ்டார்ட் ஆகிடுச்சு போல” என்று புருவம் உயர்த்தியவள், “ஹ்ம்ம் இதே மாதிரி பால்கனில தான மீட் பண்ணோம்” என்று நினைவுகளை மீட்டினாள்.

“உனக்கு என்மேல எப்போ லவ் வந்துச்சு ஜீவா?” என்று ஜானு கேட்க, அவனிதழில் நமட்டு சிரிப்பு.

காரணம் அவள் காதலிக்க துவங்கிய நாட்களில் இருந்தே கேட்டு கொண்டிருந்தாள் திருமணத்திற்கு பிறகு கூறுகிறேன் என்று தவிக்கவிட்டான்.

“இப்போ தான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுல சொல்லு ஜீவா” என்று ஜானு கேட்க, “ஹ்ம்ம் சொல்றேன் என்ன அவசரம் இன்னைக்கு தான கல்யாணம் ஆகியிருக்கு பொறுமையா சொல்றேன்” என்றவன், “சரி நீ சொல்லு” என்றான்.

“என்ன சொல்லணும்?” என்று முகத்தை உர்ரென வைத்து கொண்டு கேட்க, அவளது பாவனையில் இவனுக்கு சிரிப்பு பீரிட்டது.

குழந்தைகளை எண்ணி கட்டுப்படுத்தியவன், “அகெய்ன் என்கிட்ட பர்ஸ்ட் டைம் மாதிரி ப்ரபோஸ் பண்ணு”என்க, “ம்ஹூம் மாட்டேன்” என்று இவள் இதழை கோணினாள்.

“ஒரு டைம் எனக்காகடி. நீ சொன்னா நானும் சொல்றேன்” என்று கூற, “நிஜமாவா?” என்று விழிகளை விரித்தாள்.

அக்கணம் முதல் முறையாக தன்னிடத்தில் விழி விரித்த பதின் வயது ஜானவி மனதில் நழுவி செல்ல அவளது விழிகளை ஒரு விரல் கொண்டு தீண்டியவன், “ஆமா” என்று தலையசைத்தான்.

அவனது தீண்டலில் கூசி சிலிர்த்து விலகியவள் எழுந்து நின்று கொள்ள ஜீவாவும் எழுந்து கொண்டான்.

“தூங்கிட்டு இருந்தியா ஜீவா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று வினவ, இவனது தலை சிரிப்புடன் எல்லா பக்கமும் அசைந்தது‌.

“டிஸ்டர்ப் பண்ணாலும் பரவாயில்லை உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்” என்றவள் அவன் முகம் காண, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

அப்போது போலவே இப்போதும் முகத்தை அவனை பார்க்காது திருப்பியவள், “இந்த ஜீவாக்கிட்ட தான் என் ஜீவன் இருக்கு” என்றிட, அவன் முன்பு போல திகைக்காமல், “என்னோட ஜீவனும் ஜானுக்கிட்ட தான் இருக்கு” என்று சிரிப்புடன் அவளை அணைத்து கொண்டான்‌.

தானும் அவனை சிரிப்புடன் அணைத்து கொண்டவள், “ஹ்ம்ம் சொல்லு ஜீவா” என்று கேட்க, “ரொம்ப லேட் ஆகிடுச்சு தூங்க போகலாமாடி” என்றவாறு உள்ளே செல்ல, “இது போங்கு” என்று சிணுங்கியபடி பின்னே சென்றாள்.

“சொல்றேன்டி உன்கிட்ட சொல்லாமலா” என்று சமாதானம் சென்றவன் குழந்தைகளை கண்டுவிட்டு சிரிப்புடன் மனைவியை கண்டான்.

அந்த மெத்தையை முழுதாக ஆக்கிரமித்து ஆளுக்கொரு திசையில் படுத்திருந்தவளை கண்டு அவளுக்கும் புன்னகை எழுந்தது‌.

ஜீவா ஒரு போர்வையை எடுத்து வந்து கீழே விரிக்க ஜானு மூவரும் விழுந்து விடாதவாறு தலையணையை சுற்றி பாதுகாப்பு வளையம் வைத்தாள்.

“இன்னைக்கு நாம கீழ தான்” என்று சிரிப்புடன் ஜீவா கூற, “அதுவும் நல்லாத்தான் இருக்கும் ஜீவா” என்று அவனுடன் போர்வையில் சுருண்டு கொண்டாள்.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன், “ஹ்ம்ம் நல்லாதான் இருக்கு” என்று கண்சிமிட்டிவிட்டு,
“குட்நைட்” என்றான்.

“குட் நைட் ஜீவா” என்றவள் அவனது மார்பில் தலைவைத்து விழிகளை மூட இருவரையும் வெகுநாட்கள் கழித்து சுகமான உறக்கம் தழுவியது.


 
Well-known member
Messages
488
Reaction score
349
Points
63
Wow wow super .
Jeeva ithu ellam bongu da ava mattum sonna la ne mattum appuram ah solluran nu escape aagita ah
 
Top