• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
575
Reaction score
832
Points
93
தேனும் இனிப்பும் 13:

நானும் அவனும்
பாட்டும் உரையும்…


இருவரும் பிள்ளைகள் சகிதமாக ஜீவாவின் பெற்றோர் காலில் விழ, லிங்கமும் பரமேஸ்வரியும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினர்.

பிறகு கண்ணாயிரம் மற்றும் திலகவதியின் காலில் விழ, மஹிமா, “ஆசிர்வாதம் பண்ணு” என்று விழிகளால் தாயை மிரட்டினாள்.

மனதிற்குள் பிடிக்கவில்லை என்றாலும் முயன்று வரவழைத்த புன்னகையுடன், “நல்லா இருங்க” என்று வாழ்த்தினார் கணவனுடன் சேர்ந்து.

அதனை கேட்டதும் தான் பரமேஸ்வரிக்கு நிம்மதியாக இருந்தது.‌ எங்கே இவர் மகளை திருமணம் செய்யவில்லை என்று சாபம் விட்டுவிடுவாரோ என்று நாத்தனாரை எண்ணி பயத்துடனே இருந்தார்.

பிறகு இருவரும் தீபா மற்றும் நரேன் அருகில் செல்ல நரேன், “கங்கிராட்ஸ் டா” நண்பனை அணைத்து கொண்டான்.

தீபா ஜானுவின் கையை பிடிக்க விழைய, “அண்ணா அண்ணி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்திட்டாள்.

அதில் பதறிய தீபா, “ஜானு என்னடி இது எழுந்திடு” என்று அதட்ட, “ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று மீண்டும் கூறினாள்.

இருவரும் மனம் நிறைந்த மகிழ்வுடன், “சந்தோஷமா இருங்க” என்று வாழ்த்தினர்.

ஜானு புன்னகையுடன் எழுந்து கொள்ள, “என்னடி ஆசிர்வாதம் பண்ற அளவுக்கு எங்களுக்கு வயசாகிடுச்சா” என்று அதட்ட, “வயசு ஆகலைன்னாலும் எனக்கு அம்மா அப்பா ஸ்தானத்தில நீங்க தான் இருக்கீங்க” என்று புன்னகைக்க, அதில் இருந்த பாசம் இருவரையும் நெகிழ செய்தது.

மஹிமா வந்து, “கங்கிராட்ஸ் அக்கா மாமா” என்று இருவரையும் அணைத்து கொண்டாள்.

அடுத்து ஷியமளாவும் அனிதாவும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். அடுத்ததாக ஜானுவின் தோழிகள் கனி, அனிகா மற்றும் கீர்த்தி மூவரும் வந்து அணைத்து கொண்டனர்.
பிறகு இன்னும் சிலர் வர நேரம் சென்றது.

பின்னர் மேலும் சில சம்பிரதாயங்கள் முடிந்ததும் கோவிலில் இருந்து உணவுன்ன சென்றனர்.

எல்லோருக்கும் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு முடிந்ததும் எல்லோரும் கூறிவிட்டு விடை பெற்று சென்றனர்.

ஜீவாவின் வீட்டினர் மற்றும் நரேன் குடும்பம் மட்டும் தான் உடன் வந்தது.

எல்லோரும் வீட்டை அடைந்ததும் சிறிது நேரத்தில் சீர் வரிசைக்கான பொருட்கள் வந்து இறங்கியது.

ஜானு சடுதியில் தீபாவை காண, “நாங்க தான் டி எல்லாத்தையும் வர வச்சு இருக்கோம்” என்று மொழிந்திட, “எதுக்கு அண்ணி” என்று சங்கடத்துடன் மறுத்தாள்.

ஜீவா, “எதுக்கு டா இதெல்லாம்” என்று கேட்க, “நான் என் தங்கச்சிக்கு செய்யிறேன். அதுல என்ன தப்பு” என்று வினவினான்.

தீபா, “ஆமா நாளைக்கு யாரும் ஜானுவ என்ன கொண்டு வந்தேன்னு கேட்ற கூடாது. அவளுக்கு எல்லா முறையும் நாங்க தான் செய்வோம் எப்பவும். யாருமில்லைன்னு யாரும் நினைச்சுட கூடாது” என்று திலகவதியை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே கூறினாள்.

அவளும் வந்ததில் இருந்து திலகவதியை கவனித்து கொண்டு தானே இருக்கிறாள். தான் எதுவும் பேசவில்லை என்றால் நிச்சயம் ஒரு நாள் ஜானுவை பேசுவார். அவளுக்கு ஒன்று என்றால் கேக்க தாங்கள் உள்ளோம் என்று அவருக்கு தெரியப்படுத்தவே பேசினாள்.

ஜானு, “அண்ணி ஆல்ரெடி நகை சேரி எல்லாமே நீங்க தான் செஞ்சிங்க” என்று தயக்கத்துடன் பார்க்க, “நீதான சொன்ன நாங்க ரெண்டு பேரும் உனக்கு அம்மா அப்பா இடத்தில இருக்கோம்னு. அப்பா நாங்க தான் எல்லாம் செய்யணும்” என்று வினவ, ஜானுவிடம் பதில் இல்லை.

நரேன் வேறு, “ஏன் இதெல்லாம் செய்ய‌ எங்களுக்கு உரிமை இல்லையா? நீ என்னை கூட பிறந்தவனா தான பாக்குற?” என்று கேட்டுவிட, அவ்வளவு தான் இதற்கு மேலும் மறுக்க இயலாது அமைதியாகி போனாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த திலகவதி முகத்தை திருப்பி கொண்டார். அவரும் ஜானுவிற்கு யாருமில்லை அதனால் சீர் வரிசை எதுவும் வராது இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் சொல்லி காண்பிக்க வேண்டும் என்று எண்ணியிருக்க தீபாவும் நரேனும் அதற்கு வாயப்ப்பே அளிக்கவில்லை‌.

அதுவும் லாவண்யா கொண்டு வந்த அளவிற்கு சீர் நகை என அனைத்தையும் செய்திருந்தனர். இதனை கண்டு எல்லாரும் வியப்பு தான். உடன் பிறந்த சகோதரன் என்றாலும் பரவாயில்லை இவன் பழகிய பழக்கத்திற்கு இவ்வளவு செய்கிறானே என்று.

தீபாவும் நரேனும் தங்களிடம் இருக்கிறது என்பதனை காண்பிக்க இவ்வளவும் செய்யவில்லை. அவளுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று உணர்த்தவே இதனை செய்திருந்தனர்.

நரேன் தானே முன்னின்று அனைத்தையும் செய்து பெரியவர்களிடமும் முறையாக பேசினான். தங்கை வாழ போகும் வீடு அவளுக்கு எந்தவித சிறு வருத்தமும் நேரிட கூடாது என்று சிறு சிறு விடயத்தையும் சிந்தித்து செய்தான்.

ஒருவாறாக நேரம் இரவை தொட இருந்து இரவுணவை முடித்துவிட்டு தான் நரேனும் தீபாவும் கிளம்பினர்.

என்னவோ அவர்கள் கிளம்பும் சமயம் ஜானுவிற்கு விழிகள் கலங்கியது.

தீபா, “ஹேய் என்னடி இது சின்ன புள்ள மாதிரி அழுதிட்டு இருக்க” என்று அதட்ட, “இனிமே நீ உன் வாழ்க்கையில அழவே கூடாது டா” என்று நரேன் தங்கையின் கைகளை பிடித்து கொண்டான்.

“ஹ்ம்ம்…” என்று கண்ணீருடன் தலையசைத்தவளுக்கு அழுகை பெருகியது. இத்தனை வருடங்கள் தன்னுடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் துணை இருந்தவர்கள் இப்போது தனக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர் என்று நெஞ்சம் விம்மியது.

“டெல்லியை விட சென்னை பக்கம் தான் ப்ளைட் ஏறுனா டூ அவர்ஸ்ல வந்திடுவோம் ஜானு” என்று நரேன் சமாதானம் செய்ய, “பாத்து இருடி. யாராவது ஏதாவது சொன்னா வாயை திறந்து பதிலுக்கு பேசிவிடு. ஊமை கொட்டான் மாதிரி எல்லாத்தையும் வாங்கிட்டு தனியா அழக்கூடாது. அதுக்கும் மேல எதுவும் பிரச்சனைன்னா உனக்கு நாங்க எப்பவுமே இருக்கோம் அதை ஞாபகம் வச்சிக்கோ” என்று அறிவுரை வழங்கினாள்.

“சரிங்கண்ணி” என்று ஜானு தலையசைக்க, “ஜீவா உனக்கும் தான் எவ்ளோ கஷ்டத்தை கடந்து அவ உன் வாழ்க்கையில வந்து இருக்கான்னு உனக்கு தெரியும் தான. யாரும் எதுவும் பேசுனாங்கன்னு கேள்விப்பட்டேன் முதல் உதை உனக்கு தான்” என்று உரிமையுடன் அதட்டினாள்.

“இனிமேல் அவ எப்பவும் சந்தோஷமா தான் இருப்பா” என்று ஜீவா உறுதியளிக்க, “ஹ்ம்ம் லைஃப் எல்லாருக்கும் செகெண்ட் சேன்ஸ் கொடுக்காது உனக்கு கிடைச்சிருக்கு சந்தோஷமா இரு” என்று வாழ்த்தி விடைபெற்றனர்.

நரேனுக்கு தான் தங்கையை பிரிய மனமே இல்லை. அவளது கையை இறுக பிடித்து விடுவித்தவன் தலையைசைத்து சென்றான்.

ஜானுவுமே அவர்கள் சென்ற திசையை வெகுநேரம் வெறித்தபடி நின்றுவிட்டாள்.

ஜீவா அவளது கரத்தை பற்றி, “கோயம்புத்தூர் பக்கம் தான் தோணும் போது போய் பாத்துக்கலாம் ஜானு” என்று ஆறுதல் கூறி அழைத்து வந்தான்.

ஷியாமளா, “அண்ணா இன்னைக்கு பசங்களை எங்க கூட வச்சிக்கவா?” என்று வினவ, மஹியும், “ஆமா மாமா எங்க கூட விளையாட அவங்களும் ஆசை பட்றாங்க” என்று கேட்டாள்.

எல்லாம் பெரியவர்களது வேலை என்று புரிந்திட, “இல்லை எங்க கூடவே தூங்கட்டும்” என்று மறுத்தான்.

மஹி ஏதோ கூற வர, “அவங்க எங்க கூட இருந்தா தான எங்களோட அட்டாச் ஆவாங்க. பசங்க ரெண்டு பேரும் என்கிட்டவே வரமாட்றாங்க” என்று கவலையாக உரைக்க, இளையவர்களுக்கும் புரிந்தது.

மஹி, “சரிங்கக்கா அதுவும் சரிதான். ஜீவியும் மாமா கூட ஒட்டணுமே உங்க கூடவே இருக்கட்டும்” என்றவள் அறையில் விளையாடி கொண்டிருந்தவர்களை அழைத்தாள்.

ஜீவி வந்து தாயின் கையை பிடிக்க அர்னவ் மற்றும் அதிரன் இருவரும் ஜீவாவின் கையை பிடித்து ஜானுவின் கூற்றை உண்மையாக்கினர்.

பெரியவர்கள் ஏற்கனவே உறங்க சென்றிருந்தனர். ஜீவா, “நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்று அனுப்பிவிட்டு மனையாள் மற்றும் பிள்ளைகளுடன் அறைக்கு சென்றான்.

ஜானு மற்றும் ஜீவியை கண்ட அதிரன், “ப்பா இவங்களும் நம்ம கூட தான் தூங்க போறாங்களா?” என்று வினவ, அவனது தோரணையில் இருவருக்கும் புன்னகை எழுந்தது.

ஜீவா, “ஆமா அதி. இனிமே இவங்க ரெண்டு பேரும் நம்ம கூட தான் ரூம்ல இருப்பாங்க. இது ஜீவிதா உனக்கு அக்கா. அப்புறம் இது ஜானவி உனக்கு அம்மா” என்று விளக்கம் கொடுக்க, “அம்மாவா?” என்று கேட்டவன், “அம்மா தான் சாமிக்கிட்ட போய்ட்டாங்கன்னு சொனீங்களே ப்பா” என்று வினவினான்.

அவனது கேள்வியில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

“இதோ இந்த போட்டோல இருக்கதுனா என்னோட அம்மா” என்று அதிரன் சரியாக கேள்வியை கேட்டிட, ஜானுவிற்கு சிறிதான பதட்டமும் தவிப்பும். இவர்கள் தன்னை ஏற்று கொள்ள மாட்டார்களோ என்று.

ஜீவா அமைதியாக மகனருகே மண்டியிட்டவன், “அதி உன்னோட அம்மா சாமிக்கிட்ட போய்ட்டதால நீ அம்மா இல்லாம கஷ்டப்பட்டேல” என்று கூற, “ஆமப்பா” என்று மகனும் தலையசைத்தான்.

“அதான் சாமி உனக்கு புதுசா ஒரு அம்மா கொடுத்திருக்காரு. இனிமே ஜானும்மா தான் லாவண்யாம்மா இடத்துல இருந்து பாத்துப்பாங்க” என்று எடுத்து கூற, “அப்படியா?” என்பது போல அதிரன் ஜானுவை கண்டான்.

“ஆமாம்” என்று தலையசைத்த ஜானு, “வா” என்று அழைத்தாள். அவளருகே வந்தவன், “இனிமே நீங்க தான் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு குளிக்க வச்சு ஸ்கூலுக்கு அனுப்புவீங்களா?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம் ஆமா” என்று புன்னகையுடன் தலையசைத்தவள், “உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?” என்று ஜானு வினவினாள்.

“எனக்கு சேமியா கிச்சடி ரொம்ப பிடிக்கும் நீங்க செஞ்சு தருவீங்களா?” என்று அதி கேட்க, “நாளைக்கே செஞ்சு தர்றேன் செல்லம்” என்று அவனை அணைத்து கொண்டாள்.

ஜீவி வந்து, “ம்மா நானு” என்று தாயை அணைக்க, மகளின் மனம் உணர்ந்தவள் அணைத்து கொண்டாள்.

அர்னவ் மட்டும் அருகில் வராததை கண்டு, “நீயும் வா” என்று அழைக்க, “ம்ஹூம்” என்று தலையசைத்தவன் தந்தையின் காலை கட்டி கொண்டான்.

ஜீவா, “அர்னவ் அம்மா கூப்பிட்றால போ” என்று கூற, “ம்ஹூம்” என்று தலையசைத்தான்.

“அவன் புதுசா பாக்குறவங்ககிட்ட அவ்ளோ சீக்கிரம் வர மாட்டான். போக போக வந்திடுவான்” என்று மனையாள் மனம் வருந்த கூடாதென எண்ணி கூற, “ஹான்” என்று புரிந்ததென தலையசைத்தாள்.

நேரத்தை பார்க்க பத்தாக பத்து நிமிடம் இருந்தது. “டைம் ஆச்சு தூங்கலாமா?” என்று ஜானு கேட்க, “ம்மா ஸ்டோரி சொல்லும்மா” என்று மகள் ஆசையாக கேட்டாள்.

அதியும், “எனக்கும் ஸ்டோரி” என்று கையை உயர்த்தினான்.

“என்ன ஸ்டோரி சொல்றது ட்ராகன் ஸ்டோரி சொல்லவா?” என்றவள் ஓரக்கண்ணில் அர்னவ்வை காண அவனும் இவர்களை தான் பார்த்திருந்தான்.

ஜீவி, “ட்ராகன் ஸ்டோரியா?” என்று கேட்க, “ஆமா உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தான். என்கிட்ட பேசாதவங்களுக்கு ஸ்டோரி கிடையாது” என்று கூற, அர்னவ் தந்தையின் முகம் கண்டான்.

அவனுக்கும் மனையாளது எண்ணம் புரிய, “உனக்கும் ட்ராகன் ஸ்டோரி வேணுமா?” என்று வினவ, “ஹ்ம்ம்” என்று தலையை மேலும் கீழும் அசைத்தான்.

“அப்போ அம்மாட்ட போ. அப்பாக்கு ஸ்டோரி தெரியாது” என்று ஜீவா கூற, “தெரியாதா?” என்று தந்தை முகம் காண இவனுக்கு உருகிவிட்டது.

இருந்தும் மனையாளுடன் மகனை சேர்க்கும் எண்ணத்தில், “அம்மா பெரிய பெரிய ட்ராகன் ஸ்டோரி சொல்லுவாங்க போ” என்றான்.

அர்னவ் இப்போது செல்லலாமா வேண்டாமா என்ற எண்ணத்துடன் ஜானுவை காண, “வா நான் தினமும் ஸ்டோரி சொல்லுவேன்” என்று ஜானு கை நீட்டி அழைத்தாள்‌.

அதியும், “வா அர்னவ் ஸ்டோரி கேக்கலாம்” என்க, மறுநொடி ஜானுவிடம் தாவியிருந்தான்.

“என் செல்லக்குட்டி நீ” என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டவள், “மூனு பேரும் படுத்துக்கோங்க நான் ஸ்டோரி சொல்றேன்” என்றவள் மூவரையும் படுக்க வைத்து கதை சொல்ல துவங்கினாள்.

இடையில் அது ஏன் இது எப்படி என அதியிடமிருந்து நிறைய கேள்விகள் அனைத்திற்கும் சிரிப்புடன் பொறுமையாக பதில் அளித்தாள் ஜானு.

நீள்விருக்கையில் அமர்ந்து அவர்களை அவதானித்த ஜீவாவின் இதழ்களில் வற்றாத புன்னகை. மனையாளுடன் பிள்ளைகளை சேர்த்து வைத்து பார்க்க கவிதையாக இருந்தது.

இப்படி ஒரு கவிதையை ரசிக்கத்தான் துன்பங்களை கடந்து வந்தேனோ என்றெல்லாம் தோன்றியது.

ஜானுவும் ஜீவாவின் பார்வையை உணர்ந்தாலும் பிள்ளைகளை உறங்க வைப்பதில் மும்மரமானாள்.

சரியாக அரைமணி நேரம் ஆனது அவர்கள் உறங்க இடையில் ஜீவாவிற்கு அழைப்பு வர எடுத்து பேச பால்கனி சென்றுவிட்டான்.

ஜானு குழந்தைகளை உறங்க வைத்துவி
ட்டு கணவனை தேட இருளில் வானத்தை பார்த்தவாறு நின்றிருந்தான் ஜீவா.

குழந்தைகள் உறங்கியதை உறுதி செய்தவள் எழுந்து ஜீவாவை நோக்கி எழுந்து சென்றாள்…

 
Well-known member
Messages
1,058
Reaction score
763
Points
113
Superrrrrrrrrrrrrrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
488
Reaction score
349
Points
63
Janu kum jeeva avanga love avanga serndhu vazha innoru chance kuduthu irukku athuvum ivolo kastathuku appuram
 
Top