• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 12

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் 12



இருள் முழுமையாக கவிழ்ந்திருக்க அந்த பால்கனியின் மூலையிலிருந்த மூங்கிலால் வேயப்பட்ட இருக்கையில் கால்களை குறுக்கி எதிரே தெரிந்த நிலவை வெறித்திருந்தான் அவன். ஒரு மாதமாக மழிக்கப்படாத தாடி, சில நாட்களாக மாற்றப்படாத உடை, சரியாக உண்ணாததால் கருவளையம் தோன்றி உள்ளிறங்கி கன்னங்கோடு அமிழ்ந்த போயிருந்த விழிகள் என்று பரிதாபத்துக்குரிய தோற்றம் தான். இது நவீன் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள், ஆம் அந்த அலட்சியமான இதழ் வளைவு, அசட்டையான திமிரான உடல் பாவனை, மிடுக்கான உடை எல்லாம் ம்ம்...எல்லாமே கரைந்து ஓடியிருந்தது மறைந்திருந்தது அவளோடு. இன்னும் அவள் இல்லை என்பதை உணர முடியவில்லை. அவளோடு அந்த நிகழ்வுகளை மூளை புரட்ட துவங்கினாலே சுவற்றிலே ஓங்கி குத்த துவங்கி விடுகிறான் ஆற்றாமையில். அதன் விளைவாக கைகளிலே நான்கு முறைக்கு மேல் தையலிட்டிருந்தனர் மருத்துவர்கள்.


'உனக்கு எப்படி என்னை விட்டு போக மனசு வந்துச்சுடி அப்படியே போனலும் என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமே!' என்று மானசீகமாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவளையும் அப்படியே பிடித்து உலுக்கி, 'ஏன் போனாய் ஏன் போனாய் என்னை தனியே விட்டு?' என்று கத்தி கன்னம் கன்னமாய் அறைய தோன்றியது. அவள் என்பவள் அவளோடு மட்டும் சென்றிருந்தால் பரவாயில்லை அப்படியே அவனின் உயிரையும் வாரிச்சுருட்டி மொத்தமாக கையோடு எடுத்து சென்று விட்டாளே!....கிட்டதட்ட மனநிலை பிறழ்வான நிலை, மீள முனைந்தால் அந்த முயற்சிகள் கூட கசந்து தொண்டையை விட்டு இறங்க மறுக்கிறது.

உதடுகளோடு இணைந்து மனதும் விடாமல், "யாஷ்வி" ஜபம் படித்துக் கொண்டிருக்கிறது. 'எப்படி டி என்னை விட்டு ஒரு மாதம் உன்னால் தனியாக தாக்கு பிடிக்க முடிகிறது. அழைத்து சண்டையிடு யாஷ், எனக்கு ஏன் போன் பண்ணலை நவீன் என்று கேட்டு, ஒரே ஒரு தடவை' என்ற எண்ண போக்கில் அருகிலிருந்த அலைபேசியை வெறித்தது ஆடவன் விழிகள். அவனுடைய அலைபேசி அருகிலே அவளின் அலைபேசியும் வீற்றிருந்தது ஒய்யாரமாய். கண்களில் நீர் வழிய முயல என்றோ ஒரு நாள் சிறு வயதில் வாணி, "ஆம்பளபிள்ளை பிள்ளை அழக்கூடாது நவீன்" என்று சீண்டலோடு அவனின் அழுகையை நிறுத்த கூறியது நினைவில் எழ, 'என்னால் முடியலைம்மா, ரொம்ப ரொம்பவே வலிக்குது' என்று கத்தி கதற மனது பிரயத்தனப்பட்டாலும் அடக்கி அப்படியே அமர்ந்திருந்தான். வண்ண வண்ணமாய் மின்னிக் ஒளிர்ந்து கொண்டிருந்த வாழ்வில் ஒரே நாளில் சில நிமிடங்களில் எங்கிருந்தோ சுழன்று வந்த சூறாவளியால் கும்மிருள் சூழ்ந்து கொண்டது. 'இதிலிருந்து எப்படி வெளி வரப்போகிறாய் நவீன்?' என்று மூளை கேள்வியெழுப்ப, 'ஆஹா...முடியுமா உன்னால் அவளிலிருந்து வெளி வர, அத்தனை இயல்பான காரியமா என்ன?' என்று ஆயாசமாக பார்த்து மனது சிரித்தது. ஆம், சில வருடங்களே ஆயினும் ஊனோடு கலந்து உயிரில் ஊடுருவி விட்டவள் அல்லவா? 'எப்படி என்னிலிருந்து அவளை பிரித்தெடுப்பேன்?' என்ற வினாவே பிரளயமாய் அவனுள் உழன்றுக் கொண்டிருந்தது. இறந்து விடுவதை விட ஆகச்சிறந்த கொடுமையான தருணம் இழப்பு, அதிலுமே அதை கிரகித்து உணர்வது தான் கொடுமையிலும் கொடுமை. ஒரு இழப்பு அவனையே ஒன்னுமில்லாமல் ஆக்கிருந்தது.


அறையை திரும்பி பார்த்தவனது இதயம் வெளி வந்து விடுமளவிற்கு வேகமாய் துடித்தது. அவளின் சிரிப்பொலியும் சீண்டலும் அவனை தீண்டி தீண்டி மீள 'அப்படியே அந்த சுவற்றில் ஏறி கீழே குதித்து விடலாமா?' என்று கூட சிந்தித்து விட்டான். ஏற்கனவே பத்து நாட்களுக்கு முன் செய்ய முனைந்த பொழுது கடைசி நொடியில் வந்து காப்பாற்றிய வாணியின் விழிகளிலும் ராகவனின் விழிகளிலும் தெரிந்த கண்ணீரிலே அதை கைவிட்டிருந்தான். அவனுக்காக அவனை மட்டுமே உலகமாய் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு அப்பாவி ஜீவன்கள்! 'ம்கும்...போடி, நான் ஒன்றும் உன்னைப் போல சுயநலவாதி அல்ல. என்னை, நீயின்றி எப்படி இருப்பேன் என்று ஒரே ஒரு கணமாவது யோசித்திருந்தால் சென்றிருக்கவே மாட்டாயடி அறிவிலி பேதையே' என்று மேலும் மேலும் இறுகி உறைந்து தான் போனான் எதுவும் செய்ய முடியாத இயலாமையில். அன்று இறுதியாக அவளது வயிற்றில் கை வைத்து சிலிர்த்த நினைவெழ அன்னிச்சையாக கைகளை தூக்கி பார்த்து விரக்தி புன்னகை சிந்தி, "யாஷ்" எனற முணுமுணுப்போடு தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்ட நவீன் முதல் முறையாக வாழ்க்கை தன்னை மிகவும் மோசமான முறையில் வஞ்சித்து விட்டதாக உணர்ந்தான். அதிலும் இறுதியாக அவளின் விழிகள் அவனுக்கான சுமந்திருந்த நேசத்தை எண்ணும் பொழுது இதயம் நின்று விடுகிறது. எவ்வளவு பூரிப்பு அவளின் முகத்தில், நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்து விடுமளவிற்கு வலித்தது. "ஏன் எனக்கெதற்கு இத்தனை பெரிய தண்டனை" என்றவன் விழிகள் அப்படியே மூடிக் கொள்ள இமையோரம் வழிந்த நீரை துடைப்பதற்கு ஆளில்லாது அனாதையாய் தான் நின்றான். ஆம், கடந்த ஆறு மாதத்தில் அவனின் சிறு அசைவு, சுணக்கம் கூட யாஷ்க்கு அத்துப்படி. "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க நவீன்? என்னாச்சு?" என்பவள் ஏதாவது கூறி அவனை சீண்டி சிரிக்க வைத்தே அகல்வாள் அவ்விடத்தை விட்டே. ஏதோ எல்லாமே நழுவி போய் நடுக்கடலில் தத்தளிப்பது போல் மூச்சடைக்க நெஞ்சை நீவி கொண்டிருந்தான். இதழ் கடித்து கண்ணீரை உள்ளிழுத்தவனால் உண்மையிலுமே தன்னை சுற்றி நடப்பதை எதையுமே உணர இயலவில்லை. காலை எழுந்ததிலிருந்து இரவு வரை அவனையே உரசிக் கொண்டும் சீண்டிக் கொண்டும்
வளைய வந்து வீட்டை நிறைத்தவள் இனி இல்லை, நிரந்தரமாக இவ்வுலகையும் அவனையும் விட்டு போயே விட்டாள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. 'நானும் அப்படியே போயிருக்கலாம் எத்தனை நிம்மதியாய் இருந்திருக்கும்' என்பதே கடந்த ஒரு மாதத்தில் சதா எந்நேரமும் அவனின் மனதை ஆக்கிரமிக்கும் எண்ணங்கள். உணவு, உறக்கம்,அப்பா, அம்மா ஏன் இவ்வுலகம் கூட அவனுக்கு அன்னியமாய் போனது தான் பரிதாபம்! வீழ்ச்சி தான், இனி எதுவுமில்லை என்ற அளவிற்கு அதாளபாதளத்தினுள் சென்று விட்ட அளவிற்கு... ஏதோ வாழ்க்கை தலைகீழாய் மாறி நின்று அவனை பார்த்து ஏளனமாய் நகைப்பதாய் ஒரு சுயபச்சாதாபம்!... எல்லா சூழலையும் இலகுவாக கையாள வேண்டி அவளை தயார் செய்தவன் தன்னை தொலைத்து நிற்பது தான் ஆகச்சிறந்த பரிதாபம். அவளின் இழப்பு அவனை உருக்கவில்லை, உருக்குலைத்து போய் விட்டது எனலாம். நம் எண்ணங்களை தவிர வேறு யாராலும் நம்மை உயர்த்தவும் முடியாது வீழ்த்தவும் முடியாது, நவீன் எண்ணங்களாலும் நினைவுகளாலும் வீழ்ந்து மடிந்து புதைந்து விடும் முனைப்பில் இருந்தான். அதை தவிர வேறு வழியும் இருந்திருக்கவில்லை அவனுக்கு.




தொற்றிக் கொண்ட உற்சாகம் சிறிதும் குறைவின்றி யாஷ் உடலை வளைத்து நெளித்து பாடலுக்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்க நவீனும் இதழ் கடித்து புன்னகையுடன் அமர்ந்திருந்தான் இருக்கையின் நுனியில் அசட்டையான உடல்பாவனைவுடன். அவளது முகபாவனைகளையும் உடலின் வளைவுகளையும் அளவெடுத்து கண்களாலே வம்பிலுத்தப்படி. யாஷூக்கும் புரிகிறது அவனின் பாஷைகள் ஆனாலும், 'போடா டேய், உன்னை பிறகு பார்த்துக்கொள்கிறேன்' என்று தோள் குலுக்கலுடன் உதட்டை வளைத்து முகத்தை திருப்பிக் கொண்டாள். கேரளாவை நோக்கி இது இவர்களது இரண்டாவது பயணம், திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் வந்திருந்தவர்களுக்கு இம்முறை நண்பர்களுடன் செல்வதை தவிர்க்க மனதில்லை. நவீனின் நண்பர்களும் மனைவிமார்களும் யாஷ்விக்கு கடந்த ஆறு மாதத்தில் வெகு பரிட்சயமாகி போயிருந்தனர். விமானத்தில் இருந்து நவீன சொகுசு பேருந்திற்கு மாறியிருந்த அந்த வானரனப்படைகளோ அப்படியொரு ஆட்டம் தங்களை மறந்து போட்டுக் கொண்டிருந்தது. பெண்கள் மட்டுமே, அப்பாவி கணவர்களோ ஆளுக்கொரு குட்டிகளை கவ்விக்கொண்டு வாயை பிளந்து அவர்களின் நடனத்தை வேடிக்கை பார்த்துக் ரன்னிங் கமன்ட்டரி கொடுத்து அவ்வப்பொழுது தர்ம அடிகளை பரிசாக பெற்றுக் கொண்டிருக்க மகிழுந்தோ அவர்கள் தங்கவிருக்கும் இடத்தை நோக்கி பயணித்தது.


யாஷ் முகத்தை திருப்பிக் கொள்ள சட்டென்று முளைத்த வீம்போடும் அவளை வம்பிலுக்கும் பொருட்டும் நண்பன் விலக்கி தாவி முன்னே வந்த நவீன் அவளை நோக்கி புருவம் உயர்த்த அவளோ, 'ஓஹோ...அப்படியா?' என்ற ரீதியில் ஆடும் சாக்கை கொண்டு மீண்டும் திரும்பிக் கொள்ள, 'ப்ச்...திமிரை பாரேன்' இவளுக்கு என்று மீண்டும் பாவையை நோக்கி நகர்ந்தான். அவனின் செயலை கண்டு அவனின் நண்பர்களோ, "ஹோ..நவீனே!" என்று கூச்சலிட அந்த இடமே அதகளப்பட்டுக் கொண்டிருந்தது அவர்களால்.



'டேய், ஏன்டா இப்படி படுத்தி தொலைக்கிறாய். உன் மூஞ்சியை பார்த்தாலே எனக்கு தெரிந்து அரை குறை டான்ஸூம் மறந்து போய் விடும் போலயே' என்ற புலம்பலுடன் முறைத்தவள் நவீனருகிலே அமர்ந்து கொள்ள பார்வையோ மகிழுந்து செல்லும் வழியை அவதனித்தது. விழிகள் மின்ன, "போன முறை போன அதை ரெஸ்டாரன்ட்டா, ஹோய் இது உங்க வேலை தானா?" என்று நவீன் கைகளை சுரண்ட கண் சிமிட்டி அவளின் காதோரம் சாய்ந்தவன், "யெஸ், செகன்ட் ஹனிமூனை செலிபிரேட் பண்ண போறோம்" என்று புன்னகையை விழுங்க அவனை முறைக்க முயன்றவளால் அது முடியாமல் போக சிவந்து தான் போனாள். இருப்பிடம் மட்டுமின்றி அன்றைக்கு தங்கியிருத்த அறையையும் நவீன் கேட்டே வாங்கியிருந்தான். கண்டு கொண்ட யாஷ், "டேய், ப்ராடு.." என்று யாருமறியாது அவனின் இடையில் கிள்ளி வைக்க துள்ளி விலகிய நவீனே புன்னகையுடன் புருவமேற்றி இறக்க அன்றைய நினைவுகளில் சிலிர்த்து தான் போனாள் பெண்.



கீழிறங்கியவர்கள் தங்களுக்கான அறையில் ஓய்வெடுக்க சென்று விட்டனர். நேரம் மாலை பொழுதை நெருங்கியிருக்க குளித்து குட்டி உறக்கம் போட்டு இரவுணவோடு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அதிகாலையில் விரைவில் மலையேறி அங்குள்ள அருவியில் குளித்து ஆட்டம் போட்டு சமைத்து உண்டு, மறுநாள் தேயிலை அருங்காட்சியகம், படகு பயணம் என்று அவர்களின் திட்டங்கள் பத்து நாட்களுக்கு மேல் விரிந்து கொண்டிருந்தது.



மாலையில் அலுப்பாக இருக்கிறது என்று யாஷ் பார்ட்டிக்கு வர மறுத்து விட அவளின்றி தனியாக செல்ல மனதின்றி நவீனும் அவளோடு ஐக்கியமாகி போனான். கூடவே இலவச இணைப்பாக அவன் நணபனின் ஒரு வயது குழந்தையையும், "நீங்க வரலை தான, இவனை மட்டும் பார்த்துக்கோ யாஷ், அழுதா கால் பண்ணு உடனே வந்திடுறேன்" என்று அவனின் தாய் யாஷ்வி வசம் ஒப்படைத்து விட்டு உற்சாகமாக ஓடி விட்டாள்.


யாஷ், அந்த குட்டியுடனே ஆழ்ந்து போக அவளையே பார்த்து அமர்ந்திருந்த நவீனின் நிலை தான் அந்தோ பரிதாபம். பொறுத்து பார்த்தவன், 'போங்கடா டேய், எனக்குன்னே வருவீங்களா?" என்று முணுமுணுத்து குப்புறப்படுத்து தலையணையில் முகம் புதைத்துக் கொள்ள இதழ் கடித்து புன்னகையை விழுங்கிய யாஷோ வேண்டுமென்றே குழந்தையை நவீன் முதுகில் அமர வைத்து வம்பிலுத்துக் கொண்டிருந்தாள்.

(தொடர்ந்து கீழே படிக்க)
 
Last edited by a moderator:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93

"ஹே யாஷ், படுத்தாதடி" என்றவன் கை நீட்டி அவளை இழுக்க முயல இதழ் வளைத்தப்படி தள்ளி குழந்தையுடன் நகர்ந்து அவனை கொஞ்ச துவங்கி விட, "என்னையும் கொஞ்சம் கொஞ்சேன்" என்று முகத்தை அவளது மடியில் வைத்துக் கொண்டான் சீண்டலான புன்னகையோடு.


"ப்ச், ஆறு மாசமா அதை தானே பண்றேன். நவீன்" என்றவள் சலிப்பது போல் முகத்தை சுருக்க, "அதுக்கு தான் வேற ஏற்பாடு பண்ணலாம் பார்த்தா நீ ஒத்துழைக்கவே மாட்ற..க்கும்.." என்று ஆயாசமாக கூறுவது போல் பாவனை காட்டிக் கொண்டிருந்தான் பொங்கி வரும் மந்தகாச புன்னகையை அடக்கியபடி. அப்படியே யாஷோடு குழந்தையை அணைத்து பிடித்துக் கொண்டவன் சில பல சுயமிகளை எடுத்து தள்ள குழந்தையை அழைத்து செல்ல அவனின் தாயும் வந்து விட்டாள்.


உணவை முடித்து யாஷோடு பால்கனியில் ஐக்கியமாகி போனான். கடந்த முறை நடந்ததை நினைவு படுத்தி நவீன் அவளை வம்பிலுத்துக் கொண்டிருக்க யாஷூம் முறைப்பும் சிவப்புமாய் அவனின் வாயை அடக்க முடியாமல் தவித்து முழுவதுமாக அவனுள் அமிழ்ந்து தான் போனாள். அதிகாலை விரைவாக எழ வேண்டும் என்பதையே மறந்து இருவரும் அதிகாலை தான் உறங்கவே சென்றிருந்தனர்.


கிளம்பி விட்டு நவீனின் நண்பர்கள் அவனுக்கு அழைக்க கடினப்பட்டு கண்களை திறந்த நவீன் நேரத்தை பார்த்து , 'ப்ச்..' என்று ஆயாசமாக நெற்றியை தேய்த்துக் கொண்டு, "டென் மினிட்ஸ்ல்ல வந்திடுவோம்டா, வெயிட் பண்ணுங்க" என்று அடித்து பிடித்து எழுந்தான். உடையை ஆராய்ந்தப்படி அவனின் விழிகள் யாஷிலே நிலைக்க அசைவே இல்லாது நடுநிசியில் பயணித்துக் கொண்டிருந்தாள் பெண்.


அவளுக்கான உடையும் எடுத்து வைத்து விட்டு, "ஹேய் யாஷ், எழுந்திரு டி. டையமாகிடுச்சு, ட்ரெக்கிங் கிளம்பணும். வெயில் வந்திட்டா மேலேறது கஷ்டமாகிடும்" என்று அவளை உலுக்க, "ப்ச்..டிஸ்டர்ப் பண்ணாதீங்க நவீன்" என்று மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள் கீழிறங்கிய போர்வை இழுத்து முகத்தை மூடியபடி. இருபுறமும் தலையசைத்து சலித்துக் கொண்டவன் அவசரமாக குளியலறை புகுந்து தயாராகி வர, அவனின் உபயத்தால் எழுந்தமர்ந்திருந்த யாஷோ தலையை பிடித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி செய்யுது" என்றவன் அவளை ஆராய ஆடவனை விலக்கி வேகமாக குளியலறை புகுந்து கொண்டவள் வாந்தி எடுக்க துவங்கியிருந்தாள். பயந்து போய் அவளருகில் விரைந்த நவீனோ, அவளுக்கு தண்ணீர் கொடுத்து முகம் கழுவ செய்து வெளியில் அழைத்து வந்து, "மஞ்சுவை வரச் சொல்லவா, செக் பண்ண சொல்லலாம். இன்னைக்கு எங்கயும் நாம போக வேண்டாம்" என்றபடி அலைபேசியை கையில் எடுத்தான். மஞ்சுளா, அவனின் தோழி மருத்துவரும் கூட. தற்பொழுது குவிந்திருந்த வானரப்படைகளில் ஒருத்தி.



"நோ, சரியா தூங்காதது தான் இப்படியாகிருக்கும். எல்லாம் உங்களால தான்" என்று முறைத்து அவனை குற்றம் சுமத்தி தோள் குலுக்கியவள் உடையுடன் குளியலறை புகுந்து கொண்டாள். ஆம், ஏற்கனவே நேற்று மாலையில் அறையில் அடைந்திருந்ததே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. இதில் இன்றுமா, ஜாலியாக இருக்க தானே வெளியில் வந்தது. அதுமில்லாமல் நவீன் அவளில்லாமல் எங்குமே நகர மாட்டான். தன்னோடு சேர்த்து அவனின் மகிழ்ச்சியையும் கெடுக்க வேண்டுமா என்ற குற்றவுணர்ச்சி வேறு.



எதுவோ ஒரு சோர்வு அவளை ஆட்கொண்டாலும் இயல்பாய் இருப்பதை போல் காட்டிக் கொள்ள முனைந்தாள். அவள் வருவதற்கு முன்பே குளம்பியுடன் நவீன் தயாராய் நின்றிருந்தான். ஆனால் அவனின் முகம் இன்னும் தெளியாதிருக்க, "நவீன் ஹேய் ஈஸி, எனக்கொன்னும் இல்லை" என்று அவனின் தோள் தட்டி புன்னகைத்தவள் குளம்பியை பருகி அவனுடன் கிளம்பியிருந்தாள்.



கிளம்பும் பொழுது இருந்த சோர்வு கூட அந்த அதிகாலை பனியோடு சேர்ந்த இசையில் கரைந்து போக யாஷின் விழிகள் அந்த இயற்கையின் ரம்மியத்தில ஆழ்ந்து போக நவீனின் விழிகள் அவ்வப்பொழுது அவளை ஆராய்ந்து தழுவி மீள உண்மையிலே நெகிழ்ந்து தான் போனாள் தன் மீதான அவனின் அக்கறையில். தலையை ஆடவனது தோளில் சாய்த்துக் கொண்டு மகிழுந்தின் உட்புறம் கவனத்தை செலுத்த இன்று குட்டிகள் மட்டும் பாடலுக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தனர் உற்சாகமாக துள்ளிக் கொண்டு. அந்த உற்சாகம் பெரியவர்களையும் தொற்றிக் கொள்ள முகம் நிறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தனர். யாஷின் முன்புறமிருந்த இருக்கையிலிருந்து ஒரு குட்டிக் கை நீள அடுத்ததாக தலையும் புதிதாக முளைத்திருந்த பல்லைக்காட்டி புன்னகைத்துக் கொண்டும் நேற்று அவளோடு இருந்த சிட்டு கண் சிமிட்ட யாஷின் முகமும், "ஹோய்" என்ற சிறு ஆரவாரத்தொடு விகாசித்தது அவனின் நடவடிக்கையில். தந்தையின் தோளில் ஒருக்காலை வைத்து ஏறி பின்புற சீட்டில் எட்டிப்பார்க்க யாஷோடு இணைந்து நவீனின் இதழும் விரிய அப்படியோ கைக்கொடுத்து அந்த குட்டியை தூக்கி யாஷின் மடியில் அமர்த்தியிருந்தான்.


பாலக்காட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் தோனி என்ற கிராமத்தில் அமைந்திருந்த நீர்வீழ்ச்சியை நோக்கி தான் அவர்களின் பயணம். மலையேறும் பாதையான தேக்கு தோட்டங்களுக்கருகில் மலையடிவாரத்தில் மகிழுந்தை நிறுத்தியிருந்தனர்.



மாவட்ட வன அலுவலரிடம் முன் அனுமதி பெற்றிருந்தவர்களுடன் கையாள நன்கு அனுபவம் வாய்ந்த வழிகாட்டி ஒருவர் இணைந்து கொண்டார். மேலும் அங்கிருந்த வாகனமொன்றை ஏற்பாடு செய்து குழந்தைகளையும் அவர்களுக்கு துணையாக ஓரிரு தாய்மார்களையும் சமையல் செய்வதற்கு ஆட்களுடன் பொருட்களோடு ஏற்றி விட்டு இவர்களின் பயணம் துவங்கியிருந்தது. ஆம், குழந்தைகளால் அவ்வளவு தூரம் ஏற முடியாதென்பதால் சாலை வழி மகிழுந்தில் செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்திருந்தனர். வெகு நேரமல்ல மூன்றே மூன்று மணி நேரத்தில் மலையேறி விடலாம். "நீ கூட வேன்ல்ல போ யாஷ்" என்று நவீன் அவளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கூறியிருக்க மறுத்து தலையசைத்தவள் நவீன் தோளோடு கைக்கொடுத்து சோபையான புன்னகையுடன் மேலேற துவங்கிமிருந்தாள்.


அந்த அதிகாலை தென்றலும் பச்சை பசேலென்ற பசுமையான சூழலும் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்க வழிகாட்டி முன்னாடி சமிக்ஞை கொடுத்து மேலேற இவர்களும் நான்கு மூன்று குழுக்களாக முந்தி பிந்தி என்று நடந்துக் கொண்டிருந்தனர். முதல் முறை என்பதால் யாஷ் அதிகமாகவே தடுமாறிக் கொண்டிருக்க நவீன் தான் அவளை தன் கைப்பிடியிலே வைத்துக் கொண்டு நகர்ந்தான். முதுகில் பை வைத்து தண்ணீர் சிற்றுண்டி என்று அவ்வப்பொழுது ஏதோவொன்று வலம் வர ஆங்காங்கே நின்று கொண்டு சுயமி புகைப்படம் என்று முக்கால் வாசி தூரத்தை கடந்திருக்க வெயிலும் சற்று படர துவங்கியிருந்தது.


ஒரு இடத்தில், "என்னால முடியலை நவீன்" என்று வெகுவாக அசந்து போய் அமர்ந்து விட்ட யாஷ்விக்கு தண்ணீர் கொடுத்து தேற்றிக் கொண்டிருக்க அப்படியே அவன் தோளில் கண்கள் சொருக அரை மயங்கில் ஆழ்ந்திருந்தாள்.


"யாஷ் யாஷ்" என்று பரிதவிப்புடன் அவளின் கன்னங்களை நவீன் தட்டியெழுப்ப முனைய, "ம்ம்..நவீன்" என்று முனங்கியவளால் கண்களை திறக்க முடியாது போக முழுதுமாகவே மயக்கத்தை தழுவி இருந்தாள்.


"நவீன் ரிலாக்ஸ், அவளுக்கு ஒன்னுமேயில்லை தள்ளு நீ" என்று அவனை விலக்கி யாஷ் அருகில் அமர்ந்து தாங்கிக் கொண்ட மஞ்சு, "என்னோட பேக்" என்று கணவனிடம் கை நீட்டி தன்னுடைய மருத்துவ உபகரண பெட்டியை எடுத்து அவளை பரிசோதிக்க துவங்கியிருந்தாள்.


"எல்லாரும் முதல்ல தள்ளி நில்லுங்க" என்றொருவன் நவீனை தவிர மற்ற அனைவரையும் விலக்கி யாஷ் முகத்தில் காற்று படுமாறு செய்து கையில் வைத்திருந்த அட்டையொன்றை கொண்டு வீச தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி விட்டு பரிசோதித்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா.



அப்பொழுது தான் நவீனிற்கு சற்று ஆசுவாச மூச்சு வெளியேற கைகளோ யாஷ்வியின் கைகளை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. 'என்னாச்சு?' என்று நவீன் மஞ்சுவை ஒரு பார்வை பார்க்க, "எல்லாம் நல்ல விஷயம் தான்டா, சீக்கிரமா தகப்பனாக போற நீ. புள்ளையாவது உன்னை மாதிரி அடாவடியா வளர்க்காம அடக்க ஒடுக்கமா வளர்த்து விடுடா நவீனே" என்று அவனை வம்பிலுத்து மஞ்சு புன்னகைக்க சற்று முன் சூழ்ந்திருந்த இறுக்கம் தளர்ந்து ஒரு வித இதமான சூழல் பரவியிருந்தது அங்கு.

யாஷின் இதழோ சோர்வை மீறி நவீனை கண்டு மலர்ந்து புன்னகைக்க அவனோ புருவங்களை உயர்த்தியபடி தோளோடு அவளை அணைத்துக் கொண்டான். அனைவரும் நவீனை அணைத்து வாழ்த்து தெரிவிக்க மீண்டும் பயணம் துவங்கியிருக்க, "உன்னால நடக்க முடியுமா யாஷ்?" என்று கவலையாக வினவியவனை முறைத்து மேலும் கீழும் பார்த்து வைத்த மஞ்சு, "வேற ஆப்ஷன் நமக்கு இல்ல நவீன், போன்ல்ல கூட சிக்னல் இல்லை, ட்ரைவரை கூப்பிட்டு வேன் கொண்டு வர சொல்றதுக்கு. திரும்ப கீழ இறங்கி போறதுக்கு மேல ஏறி போறது பெட்டர், டிஸ்டன்ஸ் குறைவு தான். அவளை போட்டு படுத்தாத நீ, ஷீ வில் பீ பர்பெக்ட்லி ஆல்ரைட்" என்று அவனை சமாதானம் செய்திருந்தாள்.



தலையசைத்தாளும் நவீனின் கைகள் இன்னுமே யாஷை தன் கைகளுக்குள் இறுக்கிக் கொண்டது. யாஷூம் புன்னகையுடன் அவனின் கைகளை பிடித்தப்படி மேலேறினாள். "மெதுவா நட, காலை அழுத்தி வைக்காத...ப்ச், பள்ளத்தில கால் வைக்காத பாறையில கால் வைக்காத, ஸ்லிப்பாகிட்டா என்ன பண்ணுவ?. இந்த நேரத்திலையா தெரியணும் முதல்லயே தெரிஞ்சிருந்தா அப்படியே பத்திரமா உன்னை சென்னைக்கு பேக் பண்ணி அழைச்சுட்டு போயிருப்பேன்" என்று நவீனின் புலம்பலில் ஆயாசமான பார்வை பார்த்த யாஷ் தன்னை பிடித்திருந்த அவனின் கைகளை உதறி இடுப்பில் கையூன்றி முறைக்க துவங்கி விட்டாள்.


நவீனின் தலையில் தட்டிய மஞ்சு, "இவன் சொல்றதையே கேட்க மாட்டான்டா. இவன் புலம்புறதை பார்த்தா எனக்கே ப்ரெஷர் வந்திடும் போல். நல்லா மண்டையிலே நாலு போடு யாஷ். வா டா நம்ம போகலாம்" என்று அருகில் வந்த மற்ற இரு நண்பர்களை இழுத்துக் கொண்டு போய் விட நவீனும் யாஷூம் மட்டுமே எஞ்சி நின்றனர்.


அவளின் முறைப்பை கண்டு, 'சரி இனிமே பேசலை போகலாம் வா' என்று பார்வை கொடுத்து வாயில் கை வைத்துக்காட்டி தலையை கோதியவன் கைகள் மீண்டும் அவளை நோக்கி நீள அதை பிடித்துக் கொண்டவள் புன்னகையுடன் தன் வயிற்றில் வைக்க சட்டென்று சிலிர்த்துக் கொண்டவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அந்த நிமிடங்கள் இருவருள்ளும் ஆர்பரித்த மகிழ்ச்சியை வரையறைக்க அளவுகோலே இல்லை தான். அவர்களுக்கு சற்று தள்ளி சலசலத்து ஓடிக் கொண்டிருந்த நீரை போல் அவர்களின் அந்த நிமிட உணர்வுகளும் பிரவாகமாகியிருந்தது. சிறிது நேரத்தில் தெளிந்த நவீன் நண்பர்கள் தொலைவில் நகர்ந்து விட்டதை உணர்ந்து மனைவியோடு மீண்டும் நடக்க துவங்கியிருந்தான். அந்த ஆள் அரவமற்ற மரங்களடர்ந்த காட்டுப்பகுதியும் நீர்விழ்ச்சியின் குளுமையினை சுமந்து வந்த தென்றலும் நவீனின் அருகாமை என்று பெண்ணவளிற்கு சோபையை மீறியதொரு உற்சாகத்தை கொடுத்திருந்தது. மூன்றரை மணி நேரத்தில் மேலேறியவர்கள் அருவியில் நீராட துவங்கியிருந்தனர்.



அவர்களுக்கு சற்று தள்ளி ஓரளவு சமதளமான இடத்தில் அவர்களுக்காக உணவு தயாராகி கொண்டிருக்க இவர்களோ தங்களை மறந்து நீரில் உழன்று ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். யாஷ், பிடித்திருந்த நவீனின் கையை விடவேயில்லை. காலை ஊன்ற முடியாது அவ்வப்பொழுது தடுமாற முயன்றவளை இடையோடு அணைத்து பிடித்துக் கொண்டான் நவீன். அத்தனை ஆர்பாட்டம் மகிழ்ச்சியோடு , 'ஓஓஓ' வென பெரியவரகள் முதல் சிறியவர்களை வரை கூச்சலோடு ஆர்பரிக்க திடீரென்று எங்கிருந்து வந்ததோ தெரியாதளவு நீர் அவர்களை சூழந்திருந்தது. அதாவது நீர்வீழ்ச்சிகளில் அவ்வப்பொழுது எதிர்பாராது நடைபெரும் வெள்ளப்பெருக்கு, காட்டாற்று வெள்ளம் அது...


கண நேரம் தான் அனைவரையும் சுழற்றி சுழன்று கொண்டிருந்தது அது! யாருமே சடடென்று சுதாரிக்க முடியவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட வழிகாட்டி சட்டென்று அறிவிப்பு கொடுத்து தன்னால் முடிந்தளவு எல்லாரையும் வெளியேற்றி காப்பாற்ற முயற்சிக்க நவீனின் கால்கள் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டது.


"ஹேய் நவீன் மேலேறு டா" என்று அவனின் நண்பர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்ய வழிகாட்டியோ யாஷிற்கு கைக்கொடுக்க முனைய, "மேல போ யாஷ்" என்றான் நவீனும் சூழ்ந்து கொண்ட பயத்தை வெளியில் காட்டாது அதட்டுதலாக காலை லாவகமாக வெளியே எடுக்க முயன்றப்படி.



தங்களின் இடுப்பை தாண்டிய தண்ணீரை ஒரு பார்வை பார்த்த யாஷின் விழிகளில் சட்டென்று நீர் சூழ்ந்து கொள்ள உதட்டை அழுத்தி கடித்தவள், ' உன்னை விட்டு நகர மாட்டேன்' என இடவலமாக தலையசைத்து நவீனின் மார்போடு மேலும் ஒன்றி நின்றாள். மீண்டுமொரு முறை பொங்கிய வெள்ளம் அவர்களை முழுவதுமாக அமிழ்த்தி இருக்க அதுவரை மட்டுமே நவீனின் நினைவிடுக்கில் இருந்தது. எப்படி தன்னுடன் நின்றிருந்த யாஷ் அடித்து செல்லப்பட்டாள் என்று நினைவில்லை. அவனின் கால் நன்றாகவே இடுக்கில் மாட்டியிருக்க வெள்ளமோ யாஷை தான் தழுவி தன்னோடு அழைத்து சென்றிருந்தது. நவீனின் நண்பர்கள் அவனின் முடியை பிடித்து மேலே இழுத்திருந்தாலும் அவன் சுய நினைவை முழுவதுமாக இழந்திருந்தான். யாஷ் மட்டுமின்றி மேலும் மூன்று குழந்தைகளும் நீரோடு அடித்து செல்லப்பட்டிருக்க எல்லோருக்கும் அந்த சூழல் மூச்சடைக்க செய்திருந்தது.


மஞ்சு தன்னால் முடிந்தளவு முதலுதவி செய்து மகிழுந்தில் நவீனையும் மேலும் தலையிலும் கழுத்திலும் அடிப்பட்ட தன் இரு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்திருந்தாள். வழிகாட்டி மீதமிருந்தவர்களை பத்திரபடுத்தி அமர வைக்க தீயணைப்பு வீரர்களும்
வந்திருந்தனர் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பொருட்டு. வழியில் ஒரே ஒரு சிறுமியின் உடல் மட்டும் மரத்தின் இடுக்கில் மாட்டி கிடைத்திருக்க மீதமிருந்த மூவரும் நிலை என்னவென்றே தெரியவில்லை.


நவீனின் தலையில் பலத்த அடிபட்டிருக்க சுயநினைவு பெற்று கண் விழிக்கவே நான்கு நாட்கள் கடந்திருந்தது. வாணி, ராகவன், சவீதா, கேசவன் மற்றும் மனோ
குடும்பம் மட்டுமின்றி ரிதனுமே தகவல் தெரிந்த அன்று குடும்பத்துடன் இந்தியா திரும்பியிக் கொண்டிருந்தனர்.



சவீதாவிற்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதித்திருக்க குடும்பமே அல்லோல்கல்லோலபட்டு போனது. தீயணைப்பு வீரர்களிடம் கெஞ்சி யாரை யாரையோ பிடித்து தேடுதல் வேட்டையை மேலும் நான்கு நாட்கள் நீடித்த மனோவும் அவர்களுடனே இருந்து கொள்ள எல்லாமே வீணாய் போனது. யாஷை குறித்த தகவலும் இல்லாமல் அப்படியே அமிழ்ந்து போக நவீனின் நிலை தான் மிகவும் பரிதாபமானதாய் போனது. எழுந்தவுடன் வாணியிடம் முதலில் கேட்டது, "யாஷ் எப்படி இருக்கிறாள்?" என்பது தான். "நன்றாக இருக்கிறாள்" என்று கூறி அவனை சமாதானம் செய்ய விழைய "உடனே பார்க்க வேண்டும்" என்று முரண்டு பிடித்து தாயின் வாயிலிருந்து உண்மையை பெற்றுக் கொண்ட நவீன் அதற்கு பின் உணர்வுகளற்று சிலையாகி போனான்.



நவீன் மீண்டும் தனியாக பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தேடுதல் வேட்டை செய்திருக்க தொலைந்திருந்த மற்றொரு சிறுமி கிடைத்திருந்தாள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் ஒரு மூலையில். நம்பமுடியவில்லை ஆனால் அந்த நிகழ்வு சிறிது தெம்பளித்து இருக்க தேடுதலை மேலும் பத்து இருபது என்று ஒரு மாதத்திற்கு மேலும் நீட்டித்து இறுதியில் வேறு வழியின்றி சென்னை திரும்பியிருந்தனர் அனைவரும்.


கண்டது ஓடி வந்து காலைக்கட்டிக் கொண்டு, 'யாஷ் எங்கே' என்ற பார்வையை அவனை நோக்கி செலுத்திய ஷமீயின் செயலில் முற்றிலுமாக உடைந்து மரித்தே போனான் ஆடவன்!



தொடரும்....
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Appovae nenachen enna indha nethra sis enna endha vilangamum illama yash ah yum naveen ah yum.serthu vachaga nu partha ipadi motham.ah oppu vachitaga ithu la keta nan nalla ponnu nambunga nu solla vendiyathu aana panrathu ellam villa thanam ozhunga yash ah naveen kooda sethu vachiduga illa kolla vizhum
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Naveen yash evaluyu santhosama Kerala😟😟 ponaga epadi pannitaga negga yash ku athuyum aga kudathu Ava sikirama vanthuranum muyal kutty yash ya kekkura naveen enna solla poran naveen ya pakka kastama iruku 🥺🥺🥺
 
Top