• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 10

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 10

நானும் அவனும்

சொல்லும் பொருளும்…

தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த ஜீவா கையில் இருந்த கோப்பை மூடி வைத்தான்.

நேரம் மதியம் ஒன்றை கடந்திருந்தது. பதினொரு மணிக்கு குடித்த தேநீரும் பிஸ்கெட்டும் பசி உணர்வை மந்தமாக்கின.

இரண்டு மணிக்கு மேல் உண்ணலாமா? என அவன் சிந்திக்க, “சார் உங்களுக்கு லஞ்ச் கொண்டு வர சொல்லட்டுமா?” என்று வந்து நின்றான் உதவியாளன்.

“இப்போ வேணாம். ரெண்டு மணிக்கு மேல கொண்டு வர சொல்லுங்க” ஜீவா கூற,
“சரிங்க சார்” என்றவன், “இது பர்னிச்சர்ஸ் வாங்க லிஸ்ட். நீங்க ஒரு டைம் பாத்துட்டா பர்சேஸிங்க்கு அனுப்பிடலாம்” என்று சில காகிதங்களை நீட்டினான்.

அதனை வாங்கி கொண்டவன், “நான் பாத்து வைக்கிறேன் நீங்க சாப்பிட்டு வாங்க” என்று அவனை அனுப்பி வைத்தவன் அந்த காகிதத்தை ஆராய துவங்கினான். சரியாக அதே நேரம் அவனது அலைபேசி இசைத்தது.‌ எடுத்து பார்க்க தீபா தான் அழைத்தாள்.

அவளது பெயரை கண்டவுடன் புன்னகை முகிழ்ந்தது. அழைப்பை ஏற்றவன் காதில் பொருத்த, “யூ நெவெர் டிசர்வ் ஜானு ஜீவா” என்று காட்டமாக தீபா கத்த, அதில் அதிர்ந்தவன், “என்ன என்ன தீபா ஏன் இப்படி பேசுற?” என்று வினவினான்.

“உன்னால அவ ஆல்ரெடி பட்ட கஷ்டமே போதாதா ஜீவா. ஏன் ஏன் இப்படி அவளை அழுக வைக்கிறதுகுன்னே வர்றீயா அவ லைஃப்ல” என்று தீபா குறையாத கோபத்துடன் பொரிய, “என்ன ஜானு அழறால. என்னாச்சு ஏன் அவ அழறா. யார் என்ன சொன்னது” என்று ஜீவா பதறினான்.

“உன்னால தான் ஜீவா. முதல்ல உன்னால கஷ்டப்பட்டா இப்போ உன்னை சார்ந்தவங்களால கஷ்டப்பட்றா. இனியாவது அவ வாழ்க்கையில சந்தோஷம் வரும்னு நினைச்சேன். அவ தலைவிதி கடைசிவரை அழுதுட்டே தான் இருக்கணும்னு எழுதி இருக்கோ என்னவோ” என்றவளது குரலில் ஜானுவிற்கான வேதனை கொட்டி கிடந்தது.

“உன்னால எப்பவுமே அவ சந்தோஷமா இருக்க மாட்டா ஜீவா” என்று வருத்தத்தை தாங்கிய குரலில் மொழிய, ஜீவாவை அது மொத்தமாய் தாக்கியது.

“என்ன நடந்ததுன்னு சொன்னாதான தெரியும் தீபா” என்றவனது தொண்டை குழி வேதனையில் ஏறி இறங்கியது.

“என்ன சொல்லணும் ஜீவா. நீ ஜானுவை பத்தி அவளை கல்யாணம் பண்ணிக்க போறதை பத்தி யார்க்கிட்ட சொன்ன?” என்றவளது குரலில் அனல் பறந்தது.

“மஹிமா…” என்றவன் நிறுத்த, “அவ தான் அவளே தான் அவ பேர் சொல்ல கூட எனக்கு விருப்பம் இல்லை. சீ அவ எல்லாம் பொண்ணா. வயசு என்ன இருபது இருக்குமா? என்ன பேச்சு பேசி இருக்கா. இவக்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கணும்னு அவளுக்கென்ன தலையெழுத்தா?” என்று காட்டமாக கேட்க,

“என்ன பேசுனா அவ?” என்று உணர்ச்சி துடைக்கப்பட்ட குரலில் வினவினான்.

“என்ன பேசுனாளா அதெல்லாம் சொல்ல எனக்கு வாய் கூசுது. பணமிருந்தா என்ன வேணா பண்ணுவாளா? எங்ககிட்டயும் தான் பணம் பதவி எல்லாம் இருக்கு. நாங்க பதிலுக்கு பண்ணா அவ தாங்குவாளா?” என்றவளது குரலில் அவ்வளவு ஆத்திரம்.

“தீபா ப்ளீஸ் நடந்தது என்னன்னு சொல்லு” என்று ஜீவா கேட்க, “அவ டெல்லிக்கு போய் ஜானுவோட ஆபிஸ்ல அவளை மீட் பண்ணி இருக்கா. என்னென்ன பேசி இருக்கா அவ. உன்கிட்ட இருக்க பணத்துக்காக ஜானு உன்னை மயக்கிட்டாளாம். நாலு வருஷத்துல பொண்ணு காலேஜ் போய்டுவா இந்த வயசுல உனக்கு இது தேவையா? நீ ஒரு வேலைக்காரி உன் இடத்துல இருக்கணும். உனக்கு எவ்ளோ வேணும்னு சொல்லு பிச்சையா போட்றேன் பொறுக்கிட்டு போ. அதைவிட்டுட்டு நல்லவ வேஷம் போட்டு அழுதா உன்னையும் உன் பொண்ணையும் ரோட்ல பிச்சை எடுக்க விட்ருவேன்னு மூஞ்சில செக்கை வீசிட்டு போய் இருக்கா” என்றவளது குரலில் இருந்த உஷ்ணத்தை ஜீவாவால் உணர முடிந்தது.

“அப்புறம் என்ன சொல்லி இருக்கா உருத்தெரியாம அழிச்சிடுவாலாம். காசிருந்தா என்ன வேணா பேசுவாளா அவ. எங்ககிட்டயும் அவள விட பலமடங்கு நிறைய இருக்கு ஜீவா. யாரு யாரை உருத்தெரியாம அழிக்கிறதுனு பார்க்கலாமா?” என்று தீபா சண்டைக்கு வர, இங்கு ஜீவா மஹிமா பேசியவற்றை கேட்டு ஏகமாய் அதிர்ந்து போயிருந்தான்.

தான் சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த மாமா பெண் மஹிமாவா இதெல்லாம் பேசியது என்று நம்ப இயலவில்லை.

அவள் பேசிய வார்த்தைகளின் வீரியம் இவனை அதிர செய்தது. எவ்வளவு பெரிய வார்த்தைகள். இதனை என் ஜானு எப்படி தாங்கியிருப்பாள் என்று உள்ளம் அவளுக்காக பரிதவித்தது. தீபா கூறியது உண்மை தான் தன்னால் அவள் துன்பம் மட்டும் தான் படுகிறாள் என்று வேதனை நெஞ்சை அடைத்தது.

“உன்னை காதலிச்சதுக்கு அவ இன்னும் என்னென்ன பேச்செல்லாம் கேக்க வேண்டி வரும்னு எனக்கு தெரியலை ஜீவா. அவ உன்னை ஏத்துக்க யோசிச்சதுக்கான காரணமே உன் பேமிலி தான். நான் தான் ஜீவா எல்லாத்தையும் பாத்துப்பான் நான் பேசிக்கிறேன்னு அவளுக்கு தைரியம் சொன்னேன். பட் இப்போ அவ சொன்னது தான் சரியோன்னு தோணுது ஜீவா. அவ பயந்தது உண்மை தான் ஜீவா”

“...”

“இவ ஒரு ஆளே இப்படி பேசுறான்னா மத்தவங்க என்னென்ன பேசுவாங்க. ஒரு நாளைக்கே இப்படின்னா அவ எப்படி வாழ்நாள் முழுக்க அங்க இருக்க முடியும். நான் தப்பு பண்ணிட்டேன் ஜீவா. உன்கிட்ட ஜீவி பெரிய பொண்ணு ஆனதை சொல்லி இருக்க கூடாது. அவ வாழ்க்கையில திரும்பி நீ வரணும்னு நான் நினைச்சிருக்க கூடாது. நீ அவ வாழ்க்கையில வந்தா இனிமேலாவது அவ சந்தோஷமா இருப்பான்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்”


“...”

“நீ திரும்பி வந்ததுல அவளோட இருக்க நிம்மதியும் போச்சு. உனக்கு அவளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதாமே. எதுல ஜீவா எட்டாது நீயே உன் மனசாட்சிய தொட்டு சொல்லு யாருக்கு எட்டாதுனு. நீ கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அவளோட காதலுக்கு ஈடாகுமா? எத்தனை வருஷம் உன் பொண்ணை தோளுலயும் உன் நினைப்பை நெஞ்சுலயும் சுமந்துட்டு இருக்கா இவ. ஜானு இடத்தில வேற ஒருத்தி இருந்தா இந்நேரம் வேற ஒரு வாழ்க்கைய தேடி போயிருப்பாங்க. நானுமே அதான் சொன்னேன்.”

“...”

“ஆனால் அவ கேக்கலை. இந்த ஜென்மத்துக்கும் நீ ஒருத்தன் போதும்னு வாழ்ந்துட்டா. ஏன் லாவண்யா உயிரோட இருந்து கடைசி வரை நீ வராமலே போயிருந்தாலும் அவ இப்படியே உன் நினைப்பை மட்டும் வச்சு வாழ்ந்துட்டு இருந்திருப்பா ஜீவா. இப்படிப்பட்ட காதலை நீங்க கொண்டாடலைன்னாலும் தூக்கி போட்டு மிதிக்காதீங்க. அவ பாவம் இதுக்கு மேல வாங்குறதுக்கு அவக்கிட்ட சக்தி இல்லை ஜீவா” என்று வேதனையாக கூறினாள்.

ஜீவா தான் தான் தன்னுடைய செயல்களால் தன்னை சார்ந்தவர்களால் ஜானு அடையும் துன்பத்தில் விக்கித்து போய் அமர்ந்திருந்தான்.

“வேணாம் ஜீவா அவளுக்கு இதுக்கு மேல கஷ்டம். உன் குடும்பத்து ஆட்கள் என்ன பண்ணுவாங்கன்னு இப்போவே தெரிஞ்சிடுச்சு. இனியும் அவளை என்னால உன்கூட அனுப்ப முடியாது. என்னை மாதிரி ஆளுங்க கூட வாய்க்கு வாய் பேசி கோபத்தை காட்டிடுவோம். ஆனால் அவ அப்படி இல்லை. எல்லாத்தையும் அமைதியா வாங்கிக்குவா. எல்லாத்துக்கும் மேல உனக்கு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவேன்னு எல்லா கஷ்டத்தையும் அவளே தாங்கிக்குவா. அவளை விட்ரு” என்று தீபா முடிக்க,

“நோ…” என்று தீர்க்கமாக மறுத்தவன், “என்னால என் ஜானுவையும் மகளையும் இனி தனியா விட முடியாது. கிவ் மீ அ லாஸ்ட் சேன்ஸ். இனிமேல் என் ஜானுவ எதுவும் சொல்ல மாட்டாங்க விட மாட்டேன் நான். மஹிமாவை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். ஒன் லாஸ்ட் சேன்ஸ்” என்று கேட்க, தீபாவிடம் ஒரு கணம் அமைதி. ஜானுவை எண்ணி பார்த்தாள்.

“ஜானுக்காக மட்டும் தான் இது” என்று தீபா அழுத்தம் திருத்தமாக கூற, “இனிமே எப்பவும் அவ அழ மாட்டா” என்று வாக்கு கொடுத்து அழைப்பை துண்டித்தவன் அடுத்து ஜானுவிற்கு தான் அழைத்தான்.

அழைப்பு சென்று துண்டாகியது. மீண்டும் அழைக்க, “ஐ ஆம் இன் அ மீட்டிங் கால் யூ லேட்டர்” என்று செய்தி வந்தது.

நேற்று பேசும் போது இந்த மீட்டிங்கை பற்றி கூறியது நினைவிற்கு வந்தது. “சாரி பார் எவ்ரிதிங்க். வில் கால் யூ அட் செவென்” என்று செய்தி அனுப்பியவன் உடனடியாக வீடு நோக்கி சென்றான்.

இடையில் மஹிமாவிற்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை. கோபம் கோபம் மனமெங்கும் கோபம் கொதித்தது.

எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னுடைய ஜானுவிடம் இவ்வளவு பேச்சு பேசி இருப்பாள் என்று ஆத்திரம் பெருகியது.

எவ்வளவு பொறுமையாக தான் எடுத்து கூறினோம். இவள் என்னவென்றால் தேடி சென்று தன்னவளை காயப்படுத்தி வந்திருக்கிறாள்.

இனி வாழ்நாளில் துன்பத்தை பார்க்க விட கூடாது என்று தான் எண்ணியிருக்க தன்னாலே மீண்டும் மீண்டும் காயப்படுகிறாளே என்று மனது புழுங்கியது.

தீபா கூறியது உண்மை தான் போல தான் அவளுக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லையா? என்று மனது கனத்தது.

இந்த வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கும். எப்படி தாங்கியிருப்பாள் என்று உள்ளே துடித்தது.

எப்படியும் தன் வீட்டில் தான் இருப்பாள் என்று ஊகித்தவன் தாயிடம் அழைத்து கேட்க அங்கே தான் இருக்கிறாள் என்று பதில் வந்தது.

மஹிமாவும் இப்போது தான் விமான நிலையத்தில் இருந்து வீட்டை அடைந்திருந்தாள்‌. அமர்ந்து வீட்டினரிடம் பேசி கொண்டு இருந்தாள்.

கோபத்தை மகிழுந்தில் காண்பித்தவன் பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்திருந்தான்.

ஜீவா விறுவிறுவென உள்ளே நுழைய அவனை கண்ட பரமேஸ்வரி, “என்னப்பா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று வந்து கையை பிடிக்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா” என்று அவரது கையை நாசுக்காக விலக்கிவிட்டவன் மஹிமாவின் அருகில் வந்தான்.

“என்ன மாமா எதுவும் பைல் எடுக்க வந்தீங்களா?” என்று எதுவும் அறியாத பாவனையில் வினவினாள்.

காரணம் தான் மிர்ட்டியதில் அவள் நிச்சயம் பயந்திருப்பாள். அதுவும் மொத்தமாக இருபது லட்சத்தை கொடுத்து வந்துள்ளோம் அதுவே அவள் வாயை அடைந்திருக்கும். அவள் தன் வாழ்வில் குறுக்கிட எந்த வாய்ப்பும் இல்லை என்று உறுதியாக நம்பியிருந்தாள்.

பதில் கூறாது அவளை உறுத்து விழித்தவனுக்கு அவள் பேசிய பேச்சுக்கள் நினைவில் வர சப்பென்று அவளது கன்னத்தில் அறைந்திருந்தான்.

அவனது அறையில் மஹிமா சுருண்டு நீள்விருக்கையில் அப்படியே விழுந்திருந்தாள்.

இந்த அறையினால் அதிர்ந்து எழுந்த அனிதா, “அண்ணா” என்று அவனது கையை பிடிக்க,


“ஜீவா…” என்று பரமேஸ்வரியும் ஓடி வந்து மஹிமாவை தூக்கிவிட்டு அவனை மாறாத அதிர்வுடன் நோக்கினார்.

ஜீவா அசையவே இல்லை முகத்தில் அவ்வளவு ரவுத்திரம் கண்கள் இரண்டும் சிவந்திருந்தது. இத்தனை கோபத்தை யாரும் அவனிடம் இதுவரை பார்த்ததில்லை.

மஹிமா வீங்கிய கன்னமும் அழுத விழிகளுமாக எழுந்து நிற்க, அதனை கண்டு மேலும் அதிர்ந்த பரமேஸ்வரி, “ஜீவா எதுக்குடா அவ மேல கை வச்ச?” என்று தாயாய் உரத்த குரலில் அதட்ட,

“அவ பண்ண வேலைக்கு இன்னும் என் கோபம் தீரலை” என்று கையை குத்தினான்.

“என்ன வேணா அவ பண்ணியிருக்கட்டும் ஒரு பொம்பிளை பிள்ளையை கை நீட்டி அடிப்பியாடா நீ. என் வளர்ப்பு தப்பாகிடுச்சா” என்று கலங்கிய குரலில் கேட்க, “ம்மா…” என்று பதறியவன் தாயை பிடித்து கொண்டாள்.

மஹிமா விழிகளை துடைத்துவிட்டு அழுகையுடன் அறைக்குள் ஓடினாள்.

“ஏன்டா அவளை அடிச்ச. அவ சின்ன பொண்ணு டா. தெரியாம ஏதாவது தப்பு பண்ணியிருந்தாலும் எடுத்து சொல்லியிருக்கலாம்ல. அவளும் எனக்கு அனிதா ஷியாமா மாதிரி தானடா. அவங்க தப்பு பண்ணாலும் இப்படித்தான் அடிச்சு காயப்படுத்துவியா” என்று தாய் வருந்தி கேட்க, இவனிடத்தில் பதில் இல்லை.

“அவ எப்படி அழுதுட்டு போறா பாருடா. எங்கண்ணனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். போ போய் அவளை சாமாதானம் செய்” என்று பரமேஸ்வரி கட்டளை இட இவன் அசையாது நின்றான்.

“இப்போ நீ அவளை சமாதானம் செஞ்சு அழைச்சிட்டு வரலை இனி எப்பவும் என்கிட்ட பேச கூடாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட, நெற்றியை விரலால் தேய்த்தவன் அறைக்கு சென்றான்.

அங்கு மஹிமா அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். இவனை கண்டதும் அழுகையுடன் நிமிர்ந்து பார்க்க அவளது கலங்கிய தோற்றம் இவனை அசைத்து விட்டது.

“ப்ச்” என்று தன்னையே நொந்து கொண்டவன் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவளதெரில் அமர்ந்தான்.

“மஹிமா இங்க பாரு” என்று அழைக்க, அவளிடம் எதிர்வினை இல்லை. கண்ணீரோடு முகத்தை திருப்பி கொண்டாள்.

“மஹி உன்னைத்தான் இங்க திரும்பி பாரு” என்று அதட்டல் குரலில் நிமிர்ந்து அவனை கண்டாள்.

“அழுகைய நிறுத்திட்டு முகத்தை கழுவிவிட்டு வா” என்று அழுத்தமாக கூற, அந்த குரலை மீற இயலாது எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள்.

அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டியவன், “ஹ்ம்ம் குடி” என்று கூற, அதனை வாங்கி பருகிய பின்னரும் தேம்பி கொண்டு இருந்தாள்.

“நீ பேசுனது எல்லாம் தப்புன்னு உனக்கு தெரியலையா?” என்று அமைதியாக வினவ, “எது தப்பு நான் பேசுன எல்லாம் சரிதான் அவ பணத்துக்காக தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க பாக்குறா” என்று தேம்பியபடி கூறினாள்.

“எதுவுமே தெரியாம ஒருத்தர் மேல அபாண்டமா பழி போட கூடாது மஹிமா. உனக்கு என் ஜானுவை பத்தி என்ன தெரியும்?” என்று பொறுமையை இழுத்து பிடித்து வினவ, “ஓ… உங்க ஜானவியா நேத்து வந்தவ உங்களுக்கு முக்கியமா போய்ட்டா அவளுக்கு ஏத்துக்கிட்டு என்னை அடிப்பீங்களா. அப்படி என்ன என் லவ்வ விட அவ உசத்தியா போய்ட்டா” என்று வினவ,

“லவ்… லவ்னா உனக்கு என்னன்னு தெரியுமா மஹிமா?” என்று ஆவேசமாக வினவிட, மஹிமா அதிர்ந்து விழித்தாள்.

அதில் தன்னை நிதானித்தவன் பிடரியை தேய்த்துவிட்டு பின் பொறுமையாக, “லவ்னா என்னன்னு உனக்கு தெரியுமா மஹிமா?” என்று ஆழ்ந்த குரலில் வினவ, எதிரில் இருந்தவள் பதில் அளிக்காது தேம்பினாள்.

“காதலுக்கான அர்த்தம் என்னன்னு உனக்கு தெரியுமா மஹிமா?” என்றவன், “காதலோட மொத்த அர்த்தமும் என் ஜானவி தான்” என்றவனது குரல் முழுவதும் ஜானவிக்கான நேசம் கொட்டிக்கிடக்க குரல் ஆழ்ந்து ஒலித்தது.

அந்த குரலில் பேதத்தில் அதிர்ந்து போனவள் அவனை விழி விரித்து பார்க்க, “என்னோட இந்த ஜென்மத்துக்கான வரம் அவ. ஏழெழு ஜென்மமும் தவம் இருந்தாலும் யாருக்கும்
கிடைக்காத வரம் அவ. அப்புறம் ஜீவிதா என்னோட பொண்ணு. என் சொந்த ரத்தம்” என்றவனது பதிலில்,

மஹிமா, “என்ன?” என்று அதிர்ந்து எழுந்து விட்டாள்.





 
Well-known member
Messages
480
Reaction score
345
Points
63
Deepa oda kobam niyam than illa nu sollala aana athuku Jeeva ah ivanga pesunathu seri illayae avan therinchi aval ah kastapaduthu la yae irukirathu la yae periya thandanai guilt oda vazhurathu than atha than Jeeva ku memory thirumbi vandhathu la irundhu face panran suppose lavanya uyir oda irundhu irundha atha avan kadaisi varaikkum anubavachi irukanum ithu ellam therinchum mahima pesunathu oda kobam ah tha jeeva mela katti iruku ah venam la
 
Top