Member
- Messages
- 47
- Reaction score
- 3
- Points
- 8
சொல்லாமல்...!
மௌனம் 07(ii)
இன்று....
மறுநாள் காலை பொழுதில் ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்த மகனை தட்டிக் கலைத்தார்,
சாரதா.
மகனோ அவரைப் பார்த்து மென்மையாய் முறுவலித்திட அவன் முகத்தில் இருந்த சிந்தனை கோடுகள் அவருக்கும் புரியத் தான் செய்தது.
"ஆதி..என்னடா பிரச்சன..இப்டி டல்லா இருக்க..?"
"ஒன்னுல்ல மா..அந்த செத்துப் போன கிரியோட கேஸ ரீ இன்வெஸ்டிகேட் பண்ண சொல்லி கொடுத்துருக்காங்க..ரொம்ப நாள் ஆச்சு ல..அதான் கேஸ எந்த எடத்துல ஆரம்பிக்கிறதுனே தெரியல.." அவன் சொல்லச் சொல்ல இவரின் முகம் வெளிறிப் போனது.
கொலையாளி யார் என்பது அவருக்கு தெரியாதா..?
அவரது மூத்த மகன் ஆயிற்றே.
பின்னர் தாயுள்ளம் எப்படி நெருடாமல் இருக்கும்..?
தாயின் முகத்தில் வந்த உணர்வுகளை கவனிக்கத் தவறித் தான் போயிருந்தான்,
ஆதித்யன்.
ஒரு வேளை அவரின் வெளிறிய முகத்தை கண்டிருந்தாலும் அவனுக்கு சந்தேகம் துளியாய் கிளம்பிடும் சாத்தியமும் இல்லையே.
ஓரிரு நிமிட அமைதிக்கு பின்னர் தன்னை சமப்படுத்திக் கொண்டு "சரி விடுப்பா..ஏதாவது சொல்யூஷன் கெடச்சுடும்.." என்றவரின் குரலில் மெல்லிய மாற்றம்.
"இல்லமா..அவனோட சாவுக்கு காரணம் தற்கொலனு தான் ஆரம்பத்துல கெஸ் பண்ணி இருந்தாங்க..அத கொலன்னு கண்டுபிடிக்கவே ரொம்ப டைம் ஆச்சு..அப்டி இருக்குறப்போ கொல பண்ணுனவன கண்டுபிடிக்கிறத அவ்ளோ ஈசியா அமயாது மா..ரொம்ப ஸ்மார்ட்டா தான் பண்ணியிருக்கான்..எனக்கே லைட்டா ஷாக் தான்.." நெற்றியை தடவிய படி கூறிய மகனின் வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்லிட அவரும்..?
மூத்தவனின் துல்லியமான வேட்டையாடலை நினைத்து ஆனந்தப்படுவதா..?
இளையவனின் தலை மேல் சுமத்தப்பட்டிருக்கும் பழுவை எண்ணி மருகித் தவிப்பதா..?
தெரியவில்லை, தாய் உள்ளத்திற்கு.
"இவ்ளோ துல்லியமா ப்ளேன் பண்ணி கொல பண்ணி இருக்கான்னா அவனோட மோட்டிவ் நிச்சயம் ரொம்பப் பெருசா இருக்கனும்..ஒன்னுமே புரியல மா.." தலையை பிடித்துக் கொண்ட மகனின் தோளை அழுத்திக் கொடுக்க மட்டுமே முடிந்தது அவரால்.
அதற்குள் கதிர் வந்திட மெல்ல விலகிச் சென்றிருந்தார், சாரதா.
மகனின் அறையை ஒதுங்க வைத்திட அவனில்லாத நேரம் அறைக்குள் நுழைந்திருந்தார்,
தேவேந்திரனின் தாயார்.
ஒரு ஆண் பிள்ளையின் அறை போல் இல்லை அது.
அத்தனை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது.
அந்த அறையைப் பார்த்திடும் போது அவருக்கு அத்தனை அழுகையாய் வந்தது.
இந்த இடத்தில் தானே உண்மை தெரியாமல் மகனுக்கு கை நீட்டி அவன் சொல்ல வருவதைக் கேளாமல் புறக்கணித்து விட்டு நகர்ந்தது..?
மூத்தவன் செய்த தவறை மறைத்து இவன் மீது பழி சுமத்தியிருக்க அது தெரியாலம் எத்தனை வருட தண்டனை கொடுத்திருந்தார்,
அவனுக்கு.
ஒன்றா..?
இரண்டா...?
மொத்தமாய் பத்து வருடங்கள் அவனுடன் பேசவில்லையே.
அவர் இடத்தில் வேறு பெண் இருந்தால் அது நிச்சயம் சாத்தியப்படாது.
ஆனால்,அழுத்தமும் இறுக்கமுமாய் இருக்கும் அவருக்கு அது சாத்தியப்படாவிடின் தான் அதிசயம்.
மகனுக்கு தேவையானது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாலும் அவனுடன் ஒரு வார்த்தையாவது பேசியதில்லையே.
எப்படி வலித்திருக்கும் அவனுக்கு..?
தவறு தன் புறம் இருக்கும் பொழுதே நேசிப்பவர்களின் புறக்கணிப்பு கொடுமை என்றாகும் பொழுது தவறே இல்லாத பொழுது அவர்களின் கோபமான பாரமுகம்..
பெரும் வலியல்லவா..?
ஓரிரு வருடங்கள் முன் வரை அந்த வலியைத் தானே மகனுக்கு கொடுத்திருந்தார்.
அதிலும் அவன் பெரும்பாலும் பாட்டி வீட்டில் தானே தங்கிக் கொள்வது.
ஏனோ அதை நினைக்கும் போதே மனம் ஆறவில்லை.
தாயாக தான் ஒரு இடத்தில் தவறிய எண்ணம் இன்னும் அவரின் மனதை அலைக்கழித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த அறையில் ஒழுங்குபடுத்த வேண்டி இருக்கவில்லை எதனையும்.
மேசையில் இருந்த புத்தகத்தை அவரின் கவனத்தை ஈர்த்திட நகர்ந்தவரின் விரல்கள் அந்த புத்தகத்தை கையில் எடுத்தது.
தர்ஷினிக்காக வாங்கியிருப்பான் போலும்.
சேயின் மனது தாயிற்கு தெரியாதா..?
அவரிடமிருந்த ஏக்கப் பெருமூச்சொன்று.
என்ன வகையான காதல் இவனது..?
முன்பிருந்தவனுக்கும் இப்பொழுது இருப்பவனுக்கும் எத்தனை வித்தியாசங்கள்..?
இவன் தான் அவளின் திருமணத்தை நிறுத்த மணமகனை கடத்த முற்பட்டவன் என்று சொன்னால் அவருக்குமே அந்த எண்ணம் தோன்றாது என்பது சர்வநிச்சயம்.
யோசனையில் இருந்து கலைந்த புத்தகத்தை எடுத்த படி நகர்ந்தாலும் மனம் மட்டுமே அமைதியடையவே இல்லை, அவரின்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன.
காய்ச்சல் நன்றாக குறைந்திருக்கவே இருள் மெல்ல படரத் துவங்கி இருந்த நேரத்தில் யன்னலின் அருகே நின்றிருந்தாள், தர்ஷினி.
அன்று அவனிடம் கன்னத்தை காட்டி விட்டு வந்து களைப்புடன் தூங்கியிருக்க காய்ச்சல் கண்டிருந்தது, நன்றாகவே.
கடிந்து கொண்ட படி தாய் அக்கறையாக பார்த்துக் கொண்டாலும் உள் மனச் சோர்வை தகர்த்திட யாராலும் இயலவில்லை.
முன்பென்றால் காய்ச்சல் வந்திடும் பொழுது இப்படி உறங்கிக் கிடக்கும் ரகமல்ல அவள்.
மனதின் அலைச்சல் உடலையும் களைத்திடச் செய்தது.
வெளியே பார்வையை அலைய விட்டுக் கொண்டிருந்தவளுக்கு சற்றுத் தள்ளி நின்றிருந்த பக்கத்து வீட்டு சிறுவன் ஏதோ ஒன்று செய்து கொண்டிருப்பது புரிய சிறு புன்னகை இதழ்களில்.
"ரமேஷ்..என்னடா பண்ற..?" யன்னலின் கம்பியில் முகத்தை அழுத்திக் கொண்டு கத்தியவளின் செயலில் அவனின் பார்வை இவள் புறம் திரும்பிற்று.
"அக்கா..நீங்க வந்துருக்கீங்களா..?" முகத்தில் ஆர்வம் மின்ன அவளருகே வந்து வெளியே நின்றான், அவன்.
"ஆமாடா..இப்போ மூணு நாள் ஆச்சு.."
"ஐ..அப்போ ஜாலி தான்.."
"சரிடா..இது என்ன பண்ணிட்டு இருக்க..? காயினும் துணியும் வச்சு.."
"அது ஒரு வேண்டுதல் கா.."
"வேண்டுதலா..? டேய் என்னடா சொல்ற..?"
"ஆமாக்கா..என் ப்ரெண்டு கண்ணன் தான் சொன்னான்..இப்டி செஞ்சு பாருன்னு..உனக்கு தெரியாதா..?"
"என்னன்னு சொன்னா தான தெரியும்..இப்டி மொட்டயா கேட்டா என்னடா சொல்றது..? சரி என்ன பண்ணிகிட்டு இருக்க நீ..?"
"அதுக்கா இன்னிக்கு நம்ம மிஸ் டெஸ்ட் ஒன்னு வச்சாங்க..பாதில நா தூங்கிட்டேன்..டெஸ்ட முழுசா செய்யல.."
"டேய் பிப்த் ஸ்டேன்டர்ட் பையன் மாதிரியா பேசற நீ..சரி விஷயத்த சொல்லு..?"
"இப்போ எனக்கு டெஸ்ட்ல நல்ல ஸ்கோர் வரனும்.."
"அதுக்குஉஉஉஉஉ..?"
"கண்ணன் சொன்னான் தோ..சூரியன் மறையுற டைம்ல நமக்கு வேண்டியத ஒரு தாள்ல எழுதி அத மடிச்சு ரெண்டு காய்ன்கு நடுவுல வச்சி சின்ன துணி துண்டால கட்டனும் மூனும் சேந்தமாறு..அப்றம் அத இன்னொரு துணில போட்டு சின்ன பை மாதிரி கட்டி எடுக்கனும்.."
"வேற அடுத்தது..?"
"அப்றமா நம்ம கைல இருக்குற அந்த பைய சூரியன் மறையுற டைம் போய் நேரா வானத்த பாத்துட்டு நம்மளுக்கு வேண்டியத மனசுல நெனச்சுட்டு அப்டியே கண்ண பொத்தி கைய ஒரு சுத்து சுத்தி வீசிரனும்..எங்க விழுந்துச்சுன்னு எல்லாம் பாக்க போயிர கூடாது.."
"ஹம்ம்ம்ம்.."என்றவளின் முகத்தில் அத்தனை முறைப்பு.
"அப்றம் நமக்கு அத கடவுள் கொடுத்துருவாரு.."
"போடாஆஆ..நீயும் உன்னோட மக்கு ஐடியாவும்..வந்துட்டாரு புளுக.."
"போக்கா..வேணும்னா பாரு..நடக்குதா இல்லயான்னு.." அவளிடம் கத்தி விட்டு தன் கையில் இருந்த பையை எடுத்துக் கொண்டு ஓடினான்,
அவனின் வீட்டு மொட்டை மாடிக்கு.
பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
தனக்கு வேண்டியதை கண் மூடி நினைத்திட இமைகளை தாழிட முனைந்த சமயம் அவன் விழிகளில் ஒரு உருவம்.
தன் கையில் ஏதோ மறைத்து வைத்த படி படியேறி தன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தாள், தர்ஷினி.
பார்த்தவுடனே விடயம் புரிந்திற்று அவனுக்கு.
"என்னக்கா யாரோ முட்டதாள் தனம்னு சொன்னாங்க.." கேலியுடன் தன் வீட்டு மொட்டை மாடியில் இருந்த அவன் கத்திட பதில் சொல்லத் தெரியவில்லை, அவளுக்கு.
எதுவும் பேசாமல் மௌனமாய் அஸ்தமிக்க இருந்த கதிரவனைப் பார்த்து விழிகளை மூடிக் கொண்டவளின் விழிகளுக்குள் வந்து நின்றான் அவன்,
தன் அழுத்தமான பார்வையோடு.
மூடிய விழிகளுக்குள் முட்டிக் கொண்டு நின்ற விம்பத்தில் இதழ்கள் மெல்லியதாய் விரிந்திட அவன் பெயரை மனதில் நினைத்து தன் தேவையை வேண்டியவளாய் சுழற்றி அந்த பையை எறிந்திட அது முன்னே வந்து விழுந்தது, என்னவோ தன் வீட்டின் முன் நின்றிருந்த தேவேந்திரனின் காலடியில் தான்.
மொட்டை மாடியில் யாரோ நிற்பது தெரிந்திட அந்த வாண்டு கத்தி அழைக்கும் குரலில் தான் புரிந்தது நின்றிருப்பது, தர்ஷினி என்பது.
படர்ந்திருந்த மரக்கிளைகள் நின்றிருப்பவளை தெளிவாய் அவதானித்திட விடவில்லை.
அந்த துணியாலான சிறு பையை கையில் எடுத்தவனுக்கு அந்த வாண்டின் பேச்சைக் கேட்டு இப்படி செய்திருப்பாள் என்பது புரிய வாய் விட்டே சிரிப்பு வந்தது.
அவனிடம் கூட அந்த சிறுவன் இந்த கதையை அளந்து விட்டுக் கொண்டிருந்தானே.
சிறு புன்னகையுடன் தன் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டவனுக்கு பிரித்துப் பார்த்திடும் போது மனம் நொருங்குவது தெரிந்திட வேண்டுமென்றால் அவன் மனிதனாய் இருந்திட இயலாதே.
வலியைத் தந்திடும் என்று அவனும் உணரவில்லை.
வலியைக் கொடுத்திடுவோம் என்று அவளுக்கும் தெரியவில்லை.
அவளின் மனதில் வேறோருவன்.
அவனின் மனதில் அவளொருத்தி.
வேறொருத்தியின் மனதில் அவன் மட்டும்.
முக்கோண காதலில் மூன்று பக்கங்களும் சமமாய் இருக்கையில் எதை தான் பெரிதென்றிட..?
காலத்தின் சுழற்சியில் நாட்கள் கரைந்திடும் போது யாரோ ஒருவரது காதல் கோடுகளை அழித்துக் கொண்டு மையத்தில் வந்து நிற்கத் தான் போகிறது.
அந்தக் காதலின் ஆழத்தில் இந்த பக்கங்கள் எல்லாம் வேறாகி நிற்காவிடின் அர்த்தமில்லை.
அது யாரினது என்பதை காலமே சொல்லட்டும்.
இரவு முழுக்க உறக்கம் வரவில்லை, தர்ஷினிக்கு.
சில நினைவுகளின் பிடியில் சிக்கித் தவித்தவளுக்கு சிரிப்பும் வந்தது.
அன்றும் அப்படித்தான்.
பொழுது புலர்ந்த வேளையில் எழுந்து வெளியே வந்து கைகளை தேய்த்துக் கொண்டவளுக்கு குளியலறையில் இருந்து வந்த சத்தமே அவன் விழித்திருப்பதை காட்டிக் கொடுத்தது.
அவர்களின் வீட்டைச் சுற்றி பசுமையான சூழல்.
வெளியே அமர்ந்து கதைப்பதற்கு இடம் இருக்க அதைச் சுற்றி முழுதாக நின்றிருந்த ஹேன்ட் ட்ரில் கம்பி.
எப்போதும் அந்த ஹேன்ட் ட்ரில்லில் கையை பதித்த படி ஓரிரு நிமிடம் சுற்றுப் புறத்தை நோட்டமிடுபவளோ அவனின் வருகைச் சத்தம் கேட்டதும் அகன்றிடுவாள் அவ்விடத்தில் இருந்து.
அன்று என்ன நடந்ததோ யோசனையில் மூழ்கியிருந்தவளை கலைத்தது அவனின் கனைப்புச் சத்தம் தான்.
பதறி கலைந்து தள்ளி நின்றிட அவளின் கை ரேகை பதிந்திருந்தது இரு இடங்களில்.
ஏனோ அதைக் கண்டவுடன் சடுதியாய் ஒரு எண்ணம்.
இன்னும் சற்று நேரத்தில் மறைந்திடப் போகும் அவளின் கை ரேகையின் மீது அவனின் கைகள் பதிந்தால் அவனின் மனதில் தனக்கொரு இடம் கிடைத்திடும் என்று தோன்றிற்று அவளுக்கு.
"கடவுளே ப்ளீஸ்..ப்ளீஸ்..அப்டி மட்டும் நடந்தா நா விரதம் இருப்பேன்..ப்ளீஸ்..ப்ளீஸ்.." சடுதியாய் தோன்றிய எண்ணத்தின் காரணம் அவள் சற்றும் அறியாதது.
கைகளை பின்னே வளைத்து சோம்பல் முறித்தவனின் கரங்கள் ட்ரில்லில் பதியும் வரை அவள் காத்திருக்க அவனின் புருவங்கள் கண்டதும் சுருங்கிற்று.
பாதி மறைந்திருந்த அவளின் கை ரேகையை கண்டதும் ஏதோ புரிந்திட அதை நெருங்கக் கூட இல்லாமல் தன் கைகளை வேறிடத்தில் பதித்திட அவளின் முகம் வாடிப் போயிற்று.
ஏனோ அந்த சிறு ஏமாற்றமும் அவளை வெகுவாய் தாக்கிட அந்நேரம் இதை விட அவள் காயப்படத் தான் போகிறாள் என்பது அவளுக்கு தெரியாதே.
சோர்ந்த முகத்துடன் அவள் நகர்ந்தாலும் அன்றில் இருந்து தான் அந்த வீட்டில் இருந்து கிளம்பும் தினம் வரை தன் கை ரேகை பதிந்து அதன் மீது அவனின் கை ரேகை பதிகிறதா என்று அவள் எதிர்ப்பார்த்து நிற்பது வாடிக்கையே.
ஒரு பொழுதும் நடந்தேறியது இல்லயே அது.இப்போழுது நினைத்து பார்த்திடும் சிரிப்பாய் வந்தாலும் மனதின் ஓரம் துளியாய் சிறு ஏக்கம்.
இந்தக் காதல் யாரைத் தான் மாற்றுவதில்லை.
அவளாக இருந்தவள்,
இப்போதோ அவனின அவள் தானே.
காதலால் மாற்றங்கள் வந்திடலாம்.
மாற்றங்களும் காதலைத் தந்திடலாம்.
காதல் எப்போதும் புதிர் தான்.
தொடரும்.
அதி...!
2023.08.08
சாரி பா..
கொஞ்சம் பிஸி அதான் லேட்