Member
- Messages
- 47
- Reaction score
- 3
- Points
- 8
சொல்லாமல்...
மௌனம் 05
சில வருடங்களுக்கு முன்பு...
தீர்க்கமான பார்வையை தன்னை நோக்கி இடம் பெயர்த்துக் கொண்டிருந்தவனை கண்டதும் தானாகவே அவளின் ஒற்றைக் கை தன்னாலே மேலெழுந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டது,
கல்லூரி நினைவில்.
தம்பி தான் விசித்திரமாய் பார்த்தான்.
"தர்ஷினி..இந்த அண்ணன் அம்மாவ பாக்க வந்துருக்காங்க.." என்கவே தன் தவறு உரைத்திட "ஸ்ஸ்.." எனும் இடது புறமாய் இதழ்கள் சற்று வளைந்திட ஒற்றை விழி சுருங்கிற்று.
"வாங்க சீனியர்..உள்ள வாங்க.." தன் கையை விலக்காமலே அவனை உள்ளே அழைத்து விட்டு நகர்ந்து தாயை அனுப்பி வைத்தவளோ மீண்டும் அவன் முன்னே வந்திடவேயில்லை.
அதற்குள் அவளின் தந்தையும் வந்திட அந்த அரவம் கேட்டவளின் மனதோ பயத்தை அப்பிக் கொண்டது.
"அந்த பயர்பால் அப்பா கிட்ட சொல்லிருமோ..
பக்கு பக்குனு இருக்கே.." நெஞ்சம் தடதடக்க அறைக்குள் நடை போட்டுக் கொண்டிருந்தவளை ஒரு வித புருவ முடிச்சுக்களுடனேயே பார்த்து விட்டு நகர்ந்திருந்தான்,
தம்பி சுதர்ஷன்.
"என்னாச்சு இவளுக்கு..பைத்தியம் மாதிரி தனியா பேசிக்கிறா..?" தனக்குள் நினைத்தவனின் இதழ்களோ மறந்தும் அவளிடம் கேட்டிடவில்லை.
வெளியே செல்லவும் பயமாய் இருந்தது.
வீட்டில் பெரிதாய் எடுத்துக் கொள்ளாவிடினும் அந்நியர் முன் செல்வதை அவளுமே தவிர்க்கத் தான் செய்திடுவாள்.
அவன் வெளிக் கிளம்ப எத்தனிப்பதை அவர்களின் உரையாடல் உறுதிப்படுத்திட மெல்ல தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்தவளுக்கு திரைச்சீலையின் இடைவெளி வழியே அவன் நகர்வது புரிந்திட நிம்மதிப் பெருமூச்சொன்று.
அவள் நெஞ்சில் கை வைத்து திரும்புவதை கண்டு கொண்ட தாயாரின் முறைப்பு பார்வை அவளைத் தீண்டிச் சென்றாலும் சட்டை செய்யாமல் நகர்ந்தவளை கண்டு நெற்றியில் அறைந்து கொண்டன,
அவர் விரல்கள்.
மறுநாள் கல்லூரி வாயிலுக்கு வந்தவளின் விழிகள் மட்டுமே தெரிய முகத்தை முழுதாக மறைத்திருந்தது,
முகக் கவசமொன்று.
"பைத்தியமே..எல்லாரும் வித்யாசமா பாக்குறாங்கடி.." மற்றையவர்களின் பார்வை தங்கள் மீது படிவதால் எழுந்து கடுப்பில் கொஞ்சம் தடித்தே வெளி வந்திருந்தன,
தோழியின் வார்த்தைகள்.
"பரவால வா.." தோழியை இழுத்துக் கொண்டு அவள் முன்னே நகர்ந்திட வழமையான தன்னிடத்தில் அமர்ந்திருந்த தேவாவின் பார்வை எதேச்சையாக அவள் புறம் படிந்திட நெற்றி சுருக்கினான்.
சுற்றும் முற்றும் பார்த்து பதறிக் கொண்டு பயத்துடன் நடந்து செல்வது அவள் தான் என்பதை சரியாக கணித்தது ஆடவன் மனம், ஓரிரு நொடிகளுக்குள்ளேயே.
"அப்போ நேத்தும் இவ தானா..அப்டி சுத்திகிட்டு இருந்துருக்கா..?"
தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு அவள் மீதிருந்த கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது உண்மையே.
அவளுக்கு அவன் பார்த்தது புரியவில்லை.
அவன் இருக்க மாட்டான் என்கின்ற அசட்டு நம்பிக்கையின் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னே நடந்திட கல் இருக்கையில் எழுந்திட துள்ளி விழுந்த முன் நெற்றியில் முட்டிய சிகையை விரல்கள் சிலுப்பி பின்னே தள்ளி விட அவளின் பாதச்சுவடுகள் அவளை நோக்கி பதிந்து கொண்டன.
"அடியேய்..அந்த பயர் பால் வருதுடி...நமக்கு சைடால வருது" ஆடவனைக் கண்டு கொண்ட தோழி காதில் மெதுமெதுவாய் கிசுகிசுத்திட விழியுயர்த்தி அவனைப் பாராமலே மறுபுறம் திரும்பி நடந்தவளோ அந்த மரத்தின் பின்புறம் போய் தரித்திட கார்த்திகா தான் அந்த இடத்திலேயே பாவமாக நின்றிருந்தாள்,
தனியாக.
பாதச் சுவடுகளின் சத்தம் கேளாது போகவே மெல்ல எட்டிப் பார்த்திட அவன் அங்கு இல்லை.
புன்னகை பூத்த இதழ்களும் விழிகளை நாலாப்புறமும் சுழற்றி தேடி விட்டு துள்ளிக் குதித்த மனதுடன் மரத்தில் சாய்ந்து பெரு மூச்சு விட்டவளுக்கு அடுத்த நொடியே நெஞ்சடைத்த உணர்வு.
அவள் நின்றிருந்த மரத்தின் பின்னே ஓங்கி வளர்ந்திருக்கும் அந்த பெருமரத் தண்டில் சாய்ந்து நின்றிருந்தான்,
அவன்.
ஒரு பாதத்தின் மேல் மறுபாதத்தை பின்னாலிருந்து பதித்து
நீட்டிய சற்றே மடக்கியிருந்த ஒரு கரத்தின் உள்ளங்கைப் பகுதி மரத்தில் அழுந்தப் படிந்திருக்க மடக்கிய மறுகரத்தை இடுப்பில் குற்றியிருந்தான்,
அந்த அழுத்தக்காரன்.
வீசிச் சென்ற காற்றில் அடங்கா சிகைகள் அசைந்தாடிட நெற்றியை முத்தமிட்டுக் கொண்டிருந்த முன்னுச்சி முடிகள் இன்னும் கொஞ்சம் தாழ்ந்தால் அம்பென துளைக்கும் பார்வையை சுமந்து நின்ற விழிகளுக்கு நிகராய் மேலெழுந்து வினாத் தொடுத்துக் கொண்டிருக்கும் புருவத்தை தொட்டுக் கொண்டிடும் சாத்தியம் அதிகம்.
உள்ளுக்குள் மௌனமாய் ஆடவனை வறுத்தெடுத்தாலும்
தீர்க்கமான அவனின் பார்வைக்கு அஞ்சி அவளின் விழிகள் எங்கெங்கோ தாவிட அழுத்தமான காலடியுடன் அவளருகே வந்து நின்றான்,
ஆடவன்.
"க்கும்..." தொண்டைச் செருமிய தொனியிலேயே கொஞ்சம் நடுக்கம் வந்து விட்டது,
அவளுக்கு.
ஏன் ஆடவன் முன்னே இத்தனை வந்து நிற்கிறது என்பதன் காரணம் சத்தியமாய் தெரியவில்லை,
அவளுக்கு.
"ம்ம்..ஓகே ரைட்ட்ட்..நா உங்கப்பா கிட்ட அந்த லெட்டர கொடுத்துர்ரேன்.." அங்குமிங்கும் அலையாது நேர்ப் பார்வை பார்த்த அவள் விழிகளை நோக்கியவனின் இதழ்கள் உதிர்ந்திற்று வார்த்தைகளை.
"சீனியர்ர்ர்ர்ர்ர்.."
"பின்ன இப்போ என்னோட கண்ணு முன்னாடி வந்து இருக்கல.."
"சாரி..சீனியர்..தவறுதலா நடந்துருச்சு.." கொஞ்சமாய் மனதில் நுழைந்து பயமுறுத்திய கலவரத்தை அப்படியே பிரதிபலித்த விழகளை அவள் அணிந்திருந்த கறுப்பு நிற முகக் கவசம் இன்னும் தெளிவாய்க் காட்டியது.
பயத்தில் விழி தழைத்தாலும் தேவையின் போது தன்னை நேர்ப்பார்வை பார்த்திடும் அந்த விழிகளின் நிமிர்வில் அவனுக்குள்ளும் சிறு பிறழ்வு.
"லவ் பண்ணனும்னா என்னோட கண்ண பாத்து தைரியமா பேசனும்.." தோழனிடம் தீர்ககமாய் கூறியது நேரம் பார்த்து நினைவில் வந்து தொலைத்தது.
அவனுக்கு ஏனென்று தெரியால் சட்டென கோபம் மூள அழுத்தமாய் நெற்றியைத் தேய்த்துக் கொண்டன,
பெருவிரலும் ஆட்காட்டி விரலும்.
"ப்ச்ச்ச்...அந்த மாஸ்க கழட்டு.."ஒரு வித எரிச்சலுடன் அவன் சொல்லிட அடுத்த நோடியே தன் முகக் கவசத்தை கீழிறக்கி தாடையில் தடுத்து வைத்தன,
அவள் விரல்கள்.
ஒரு நொடி ஆழ்ந்து மூச்சிழுத்து அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்திட்டது,
தன்னுள் எந்த சலனமும் எழவில்லை என்பதை தனக்கே உறுதிப்படுத்திக் காட்டத் தானோ..?
"ஓகேஏஏஏஏ...ரைட் இதான் லாஸ்ட் வார்னிங்க்..இனிமே என்னோ கண்ணு முன்னாடி வந்துராத ஓகே..."
"சீனியர்ர்ர்ர்..இனிமே திட்டுறதுன்னா இப்டி எடத்துல வச்சி திட்ட வேணாம்..பாக்குறவங்க தப்பா பாக்குறாங்க.."தேவையில்லாமல் தன் ஒழுக்கத்தை பற்றி வதந்திகள் கிளம்புவதை கண்டு கொள்ளாவிடினும் ஒரு பெண்ணின் நடத்தையை கொண்டு அவளை மட்டும் விமர்சித்து விட்டு விடுவதில்லையே இந்த சமுதாயம்.
அவனுக்கும் அவளின் கூற்றில் இருந்த நியாயம் புரிந்திட ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டிட மறு கணமே வேகமாய் அகன்றிருந்தவளின் முதுகை ஒரு கணம் உரசி மீண்டது,
ஆடவனின் ஆட்டுவிக்கும் விழிகள்.
அன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு கிளம்பிட பேரூந்தில் ஏறியவளோ முகக் கவசத்தை கழற்றி விட்டு ஆழமாய் சுவாசித்துக் கொண்டாள்.
பேரூந்தில் அவளருகே ஆர்த்தி வந்தமர்ந்து கொள்ள கொஞ்சம் தள்ளி நகரந்திருந்தாள்,
அவள்.
"ஆமா..என்னடி மாஸ்கோட சுத்திகிட்டு இருக்க..?"
முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்த படி அவள் கேட்டிட என்ன பதில் சொல்ல அவளும்...?
மறுப்பாய் தலையசைத்தவளை சிறு ஆராய்ச்சியுடன் அவள் பார்த்திட அதை உணர்ந்தவளின் பார்வை யன்னலுக்கு வெளியே ஆராய்ந்தது.
ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால் ஆர்த்திக்கும் அவளுக்கும் இடையே நல்ல நட்புறவு நிலைத்தே இருக்க ஒரே கல்லூரி என்பதால் இன்னும் வலுப்பெற்று இறுகியது,
அவர்களிடையேயான நெருக்கம்.
கல்லூரி தரிப்பிடத்தில் பேரூந்து ஆட்களை ஏற்றிக் கொள்ள வேண்டி நின்றிருக்க சடுதியாய் கேட்ட ஹாரன் சத்தத்தில் புன்னகை பூத்த ஆர்த்தியின் பார்வை யன்னலுக்கு வெளியே தாவியது.
தன் வண்டியில் பாலாவை பின்னே அமர்த்திக் கொண்டு இருந்தவனின் முகத்தை தலைக்கவசம் பாதி மறைத்திருந்தாலும் யாரென்று புரியாமல் போகுமா பார்த்திடுபவர்களுக்கு..?
தர்ஷினி படக்கென தலையை முன்னே இருந்த கம்பியில் சாய்த்துக் கொண்டாளெனின் ஆர்த்தியின் பார்வையோ ஆர்வமாய் அவன் மீது படிந்தது.
ஏனோ ஒட்டாத அத்தை மகன் என்பதாலும் அவனின் ஆளுமையிலும் கம்பீரத்திலும் பெண்களுக்கு தந்திடும் கண்ணியத்திலும் அவனின் மீது சிறு ஈர்ப்பு அவளுக்கு.
"அட நம்ம க்ரஷ்ஷு.." விழிகள் மின்னிட அவனைப் பார்த்திட அவனின் பார்வை தவறியேனும் இவர்கள் புறம் திரும்பவேயில்லை.
அவனின் விம்பம் விழிகளில் இருந்து மறையும் வரை அவனையே விழியெடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு ஒரு வித பரவச உணர்வே மனதினில்.
அவளைப் பொறுத்த வரை இப்போதைக்கு அவன் ஒரு கதாநாயகன் அவ்வளவே.
பேரூந்து சிறிது தூரம் நகர்ந்த பின்னரே தலையை உயர்த்தி நிமிர்ந்தமர்ந்தாள்,
தர்ஷினி.
"தர்ஷினி.."
"என்னாச்சுடி..?"
"எதுக்கு இப்போ தலைமறைவா இருக்குற மாதிரி பிஹேவ் பண்ற..?"
"அதுவா..அது பெரிய மேட்டர்..வெளில சொல்ல முடியாது.."
"என்ன ரம்யா ஏதாச்சும் கிறுக்கு தனம் பண்ணி உன்ன மாட்டிவிட்டுட்டாளா..?"
".........."
"ஏய்..உண்மயா அப்போ..ஸ்கூல் டைம்ல தான் அப்டின்னா இப்பவுமா...?" அவள் கேட்டிட பதில் பேசவில்லை,
அவள்.
ரம்யாவும் அவர்களின் வகுப்பு தானே.
அதனாலோ என்னவோ ரம்யாவை பற்றி நன்கு தெரியும் ஆர்த்திக்கு.
●●●●●●
இன்று....
அந்த இருளிலும் கொட்டிய அடை மழையிலும் ஒற்றைக் கையால் குடையை பிடித்து பாதங்கள் அவ்விடத்தை அலசிட அதை தெளிவுபடுத்த உதவிக் கொண்டிருந்தது,
மறுகையில் இருந்த டார்ச் வெளிச்சம்.
அவள் அழவில்லை.
ஆனால், விழிகளில் அப்படியொரு சிவப்பு.
மடத்தனங்கள் என்று தெரிந்தும் வலிக்க வைப்பதென்பது ஆழமான நேசங்களில் மாத்திரமே சாத்தியம்.
அவனின் தோழன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் எதிரொலிக்க ஏனோ உள்ளுக்குள் அப்படி ஒரு பயம்.
ஆங்காங்கே நெற்றியின் ஓரம் வியர்வைத் துளிகள் துளிர்க்க அதை அடிக்கடி துடைத்து விட்டன,
அவளின் புறங்கைகள்.
குடை பிடித்திருந்த கையின் புறங்கையாலே துடைக்க முயன்றிட சற்றே பின்னே அசைந்திட்ட குடையின் தயவால் நனைந்திற்று அவள் உடல்.
மீண்டும் மீண்டும் மனம் கலங்கி பாரமேறிட சுற்றம் மறந்தவளாய் தேடிக் கொண்டிருந்தாள்,
அவள்.
இதையே வேறு யாராவது கண்டிருந்தால் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று நகர்ந்திருக்க கூடும்.
இதற்கா இத்தனை அலப்பறை என்று எண்ணிடவும் கூடும்.
மற்றவருக்கு எப்படியோ அவரவர்க்கு அவரவர் உணர்வுகள் பெரிதல்லவா..?
ஆங்கே ஒரு மூலையில் வெளிச்சம் பட்டு ஏதோ மின்னிட அவள் விழிகளில் சடுதியாய் ஒரு விகசிப்பு.
இதழ்கள் விரிய பட்டென குனிந்து தரையை துழாவிட கிடைத்திட்ட ஏமாற்றத்தில் அவள் மனம் கனமாக இதழ்கள் பிதுங்கிற்று.
இன்னும் விழிகள் சிவக்க அவள் நின்றிருக்க நிற்பது அவளென்பது அறிந்தவனாய் சுருங்கிய புருவங்களுடன் பின்னே வந்து நின்றான்,
தேவேந்திரன்.
"தர்ஷினீஈஈஈ..." அவன் குரலைச் செருமி அழைத்திட அவனை எதிர்பாராத அதிர்வு அவளிடத்தில்.
கொஞ்சமாய் தன்னை சமப்படுத்திக் கொண்டு திரும்பினாலும் சிவந்திட்ட விழிகளை மட்டும் மறைக்க இயலவில்லை.
அவளின் வருத்தம் தோய்ந்திருந்த விழிகளை அவனிடம் வினாக்களை விரட்டி விட்டதோ..?
"என்னாச்சு தர்ஷினீஈஈஈ..இந்த மழைல இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க..?" வெகு சாதாரணமாய் காட்டிக் கொண்டு அவன் கேட்டிட மறுப்பாய் தலையசைத்தாள்,
அவள்.
அவனுக்கு அவள் சொல்வது பொய் என்பது புரிந்தது.
"பொய் சொல்லாதீங்க..தர்ஷினீஈ..இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க..?அதுவும் இந்த நேரத்துல..?"
"ஹான் ஒன்னுல்ல.." எப்போதும் போல் அழுத்தமாகவே வெளிவந்தது, அவள் குரல்.
"சொன்ன தான தர்ஷினி புரியும்..சரி என்னமோ தேடிகிட்டு இருந்தீங்க தான.."கனிவாய் விழுந்த அவன் வார்த்தைகளில் மறுக்க இயலாமல் ஆமோதிப்பாய் அசைந்து ஒப்புக் கொண்டது,
அவள் சிரசு.
"சரி..என்ன காணோம்னு சொல்லுங்க..நானும் ஹெல்ப் பண்றேன்..தேடலாம்.." மிக மென்மையாக அவன் சொல்லிட அவளுக்கும் அதை ஏற்றுக் கொள்ள மனம் வந்திருக்க வேண்டும்.
"சரி..என்ன காணோம்..?"
"என்..என்னோட கீ செய்ன்.." அதை சொல்லி முடிக்கும் முன்னரே அவள் குரல் உடைந்திட அவன் விழிகளில் மெல்லிய அதிர்வு.
எப்போதும் அழுத்தமாய் நிமிர்வாய் பேசுபவளோ அடுத்தவர் முன் தவறிக் கூட தன் உணர்வுகளை வெளிப்படுத்ததுவது இல்லையே.
பக்கத்து வீட்டில் இருந்த தெரிந்தவன் என்றாலும் தன்னிடம் கூட சகஜமாய் பேச மாட்டாளே.
அப்படி இருப்பவள் முதன் முறையாக அவனிடம் தன் உணர்வொன்றை காட்டுவது புதிராய்த் தான் இருந்தது,
அவனுக்கு.
ஏனோ தெரியவில்லை.
அவனுக்கு அவளின் பதிலில் சிரிப்பு வந்திருக்க வேண்டும்.
புன்னகையில் துடித்த இதழ்களை அடக்கினான்,
சிரமப்பட்டு.
"கீ செய்னா..?" அவன் மீண்டும் கேட்டிட ஆம் என்பதாய் தலையசைத்தவளின் முகம் சோர்ந்தது.
"காலைல தேடலாமே.."
"இல்..இல்ல..அது அவசரம்.."
"சரி என்ன அவசரம்னாலும் காலைல பாத்துக்கலாம்.." கனிவாய் சொன்னவனிடம் எப்படித் தான் அவளும் எடுத்தெறிந்து பேச..?
"அது..ரொ..ரொம்ப..ஸ்..ஸ்பெஷல்.." திக்கித் திணறி சொல்லி முடித்திருந்தன,
அவளிதழ்கள்.
"சரி வாங்க தேடலாம்..நானும் ஹெல்ப் பண்றேன்.." என்று உதவியாய் அவனும் தேடிட அவன் விழிகள் அடிக்கடி அவளைத் தொட்டு மீண்டன.
வியக்காமல் இருக்க முடியவில்லை,
அவனால்.
பயம் இருந்தாலும் விழிகள் கலங்கிடாமல் அழுத்தமாய் நிற்கும் அவளிடம் இருந்து இப்படி ஒரு மாற்றத்தை அவன் எதிர்ப்பார்த்து இருக்கவில்லையே,
கனவிலும்.
அதுவும் ஒரு சிறு பொருள் வேண்டி உதடு பிதுக்கி நிற்கும் ஒருத்தியாய்..?
காலத்தால் மட்டுமா மாற்றங்கள் துளிர்த்திடும்..?
காதல் அதற்கு ஒன்றும் விதிவிலக்கு இல்லையே.
அவனுக்குள் காதல் வந்திட்ட போது அவனுள் துவங்கி எழுந்த மாற்றங்களை எல்லாம் மறந்து விட்டிருந்தது
அவன் மனம்,
அந்தக் கணம்.
கொட்டும் மழையை மறந்து தொப்பலாய் நனைந்து தேடிட அவன் விழிகளிலேயே முதலில் சிக்குண்டது,
அறுந்து விழுந்திருந்த அவளின் கீ செய்ன்.
முதலில் கையில் எடுத்தவனின் விழிகளில் சட்டென மின்னலொன்று வந்தாலும் அதில் இருந்தது, அவள் கணவனின் பெயர் எனக் கண்டதுமே முகம் இருண்டது.
ஏதோ விபரிக்க முடியா வலி ஒன்று மனதினுள் ஊடுருவி உள்ளுக்குள் நொருக்கிப் போட்டது.
"தர்ஷினீஈஈ.." அழைத்திட அவன் முன்னே வந்து நின்றவளின் முகத்தில் இருந்த எதிர்ப்பார்ப்பின் ரேகைகள் அவனை இன்னும் வலிக்க வைத்தது.
"இதான்னு பாருங்க.." அவன் நீட்டிட அதை கண்டவளின் விழிகளில் வந்து ஒட்டிக் கொண்டு விகசிப்புடம் இதழ்களில் சடுதியாய் தோன்றிய புன்னகையும் முகத்தில் இருந்த ஆர்வத்தின் சாயலும் அவனுக்கு ஒரு குழந்தையாகத் தான் காட்டியது,
அவளை.
தன் கையில் வாங்கியது தான் தாமதம்..
அதற்கு முத்தமிட்டு உள்ளங்கையில் கீ செய்னை வைத்து இறுகப் பொத்திக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து விழிகளை அழுந்த மூடி நின்றிருந்தாள்,
ஒரு கணம்.
அவளின் அந்த செயல் வார்த்தைகளின்றி வெளிப்படுத்தியதே..
அவளின் தேடலை.
ஏனோ அவனால் அதைக் கண்டிட இயலவில்லை.
ஒரு நொடி நிதானமாகியவள் அவனைப் பார்த்து புன்னகைத்திட பதிலுக்கு புன்னகைத்தான்,
கசப்பான மனதுடன்.
"சரி..நா வர்ரேன்.." என்றவனோ விறுவிறுவென நகர்ந்திட அவள் கத்திய "தேங்க்ஸ்.." காற்றோடு கலந்து மெதுவாய் வந்து அலைமோதியது,
அவன் செவிகளில்.
அறைக்குள் நுழைந்து தலையை துவட்டியவளுக்கு மழையில் நனைந்ததால் இலேசாக ஜுரம் வரும் போல் இருந்தாலும் முதற் பணியாய் முன் வந்து நின்றது அறுந்திருந்த கீ செய்னை சரி செய்வது தான்.
ஈரம் பாதி வற்றாத தலையுடன் அமர்ந்து மிக நுணுக்கமாய் ஆராய்ந்து உடைந்திருந்த கொக்கிகளுக்கு பதில் தன்னிடமிருந்த புதியதை மாட்டி விட்டு திருப்தி பட்டவளாய் அவள் புன்னகைக்கும் போது நேரம் கரைந்திருந்தது.
தலை விண்ணென்று வலித்தாலும் வேலையே முடித்த பின்பே உறக்கம் எட்டியது, விழிகளை.
கட்டிலின் அருகே இருந்த அவள் மேசையில் சரி செய்த கீ செய்ன் வீற்றிருக்க மின் விளக்கை கூட அணைக்க மறுத்து அதை விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உறக்கம் தழுவிடும் போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
ஏனோ அந்த சிறிய நிகழ்வும் அவளுக்குள் பெரும் பயத்தை உண்டு பண்ணியிருந்தது.
விலகலே வேண்டாம் விடாப்பிடியில் நிற்கிறாள் அவள்..
விலகித் தான் செல்வேன் என விடை கேட்கிறான் அவன்...
மொழிகள் தவறினாலும் அவள் விழிகள் அவனிடம் காதலைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றன.
அவளுக்கென்று ஒரு காதல் காத்திருந்தால்..? சொல்லாமல் மௌனமாய் நேசித்து கை கூடிட சாத்தியமில்லை என்பது தெரிந்து அவள் நினைவுகளை சுவாசித்து அவளை மட்டும் தன்னுள் நிரப்பி ஜீவித்துக் கொண்டிருப்பது தெரிந்தால்..?
சொல்லாத அவளின் காதலை தோற்கடிக்குமா அந்தக் காதல்...?
காதலித்தல் இணையை இரசிக்க வைக்குமென்றால்...
காதலிக்கப்படுதல் தன்னையே இரசிக்கக் கற்றுத் தந்திடுமே..
அவளுக்கும் தன்னை ரசிக்கக் கற்றுத் தந்திடுமோ..
அந்தக் காதல்..?
காலையில் எழுந்து ஜாகிங்கை முடித்து விட்டு வந்த தேவேந்திரனின் செவிகளை எட்டியது,
ஆர்த்தியின் சிரிப்பு சத்தமே.
"பச்ச்ச்..வந்துட்டா.." ஏனென்று தெரியாமல் மனதில் ஒரு சலிப்புத் தோன்றிட அதை அப்படியே பிரதிபலித்தது,
அவன் முகம்.
வீட்டுக்குள் நுழைந்தவனின் பார்வை அவளை நொடியும் தீண்டாதிருக்க அவளின் பார்வையை அவனின் விம்பம் மறையும் வரை அவனையே தழுவி மீண்டது.
அவளுக்கும் பலரின் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது தான்.
ஆனால், காதல் என்பது இவன் மீது மட்டும் தானே.
தன் அலுவலகம் கிளம்ப தயாராகி உண்ணக் கூட மறுத்து காரில் ஏறிக் கிளப்பியவனை ரசித்தவாறே ஏறி அவனருகே அமர்ந்து கொண்டாள்,
ஆர்த்தி.
எப்படியும் அவளை அழைத்துச் செல்லாவிடின் தாய் திட்டித் தீர்த்திடுவது வாடிக்கை என்பதால் எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பியவனுக்கு நேற்றைய நிகழ்வின் தாக்கம் மீதமிருந்து எட்டிப் பார்த்து வதம் செய்தது.
நாம் நினைப்பவர் நம்மை நினைக்காவிடினும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனதுக்கு..
நாம் நினைப்பவர் வேறொருவரை நினைப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போவது தான் நேசத்தின் சுயநலம்.
அவனும் அதற்கு விதி விலக்கு இல்லையே.
நேற்று நடந்ததை வைத்து அவனுக்கு ஒரு சந்தேகம் துளிர்த்திருந்தது.
ஏனோ மனம் மட்டும் அப்படி இருக்கக் கூடாது என்று ஆணித்தரமாய் கோரிக்கை வைத்தது,
கடவுளிடம்.
உண்மை தெரிந்தால் அவன் நிலைப்பாடு..?
தொடரும்.
அதி...!
2023.08.03