• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 04

Messages
47
Reaction score
3
Points
8
சொல்லாமல்...!

மௌனம் 04

சில வருடங்களுக்கு முன்பு...


ஒற்றைக் காலை ஆட்டியடி ஒய்யாரமாய் ராஜ தோரணையில் அமர்ந்திருந்தவனை பார்ப்பவர்களுக்கு ஒரு நொடியேனும் ரசிக்கத் தான் தோன்றிடும்.
ஆனால், அவள் அதற்கு விதி விலக்கல்லவா..?

தலை தாழ்த்தி விழிகளால் தரையை மேய்ந்த படி நின்றிருந்தவளை கண்டதும் நிமிடங்கள் கரைந்திட அவனுக்கும் சினம் எகிறிற்று.

படாரென அவன் அமர்ந்திருந்த மேசையில் தட்டிட அது தந்த அதிர்வில் ஓரமாய் வைக்கப்பட்டிருந்த நீர்க்குவளை துள்ளி கீழே விழுந்து நொருங்கிப் போய் விட பாதி இருந்த நீர் தெறித்து அவளின் பாதங்களை நனைத்தது.

அவனின் அதிரடிச் செயல் தந்த அதிர்வில் விலுக்கென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்கு தன் கால்கள் உணர்ந்த ஈரம் எல்லாம் கவனத்தை ஈர்த்துக் கொள்ளவில்லை,
துளியேனும்.

"ம்ம்..ஓகே ரைட்ட்ட்ட்ட...இப்டி தல குனிஞ்சே நின்னுட்டு இருந்தா நா எப்டி பேச...நா என்ன உன்ன பொண்ணு பாக்கவா வந்துருக்கேன்.. தல நிமித்தி பாக்காம இருக்குற.." சொடக்குப் போட்டு அவன் கேட்டிட அவளால் பதில் பேச இயலவில்லை.
அவனைப் பொறுத்த வரையில் அவள் குற்றவாளி தானே.

பெண்கள் என்றாலே கண்ணியம் கொடுக்கத் தெரிந்தவன் தான் அவன்.
வளர்ப்பு அப்படி.

அப்படி இருப்பவன் அவளிடம் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்வதன் காரணம் தன்னைக் காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது தானே.

அதிலும் எதைப்பற்றியும் யோசியாமல் யாருக்கும் பயப்படாமல் காதல் கடிதம் கொடுத்து விட்டது,
அவள் தான் என்கிற எண்ணமே அவன் மனதில்.

"நா உங்கிட்ட கொஸ்டின் கேட்டேன்..ஆன்சர் மீ.." அழுத்தம் திருத்தமாய் அவன் கணீர்க் குரல் காற்றில் கலந்து வந்து அவள் செவியை மோதிட கோபமும் பயமும் ஒரு சேர எழுந்தது, அவளுள்ளே.

"காது கேக்குதா..இல்லன்னா ஸ்பீக்கர் அவுட்டா..?" ஏளனமாய் அவன் கேட்டிட தோழனின் நடவடிக்கையில் பெரிதும் திகைத்து நின்றது பாலா தான்.

தங்களுள் அதிகமாய் பெண்களை மதித்து அவர்களுக்குரிய மரியாதையை தந்து நடப்பது தோழன் தானே.
அதிலும் தன் தங்கையைக் கூட இத்தனை நாட்களில் "வா.." "போ"அவன் ஒருமையில் அழைத்துக் கேட்டதில்லை,
இதுவரை.

அப்படி இருப்பவனோ இன்று யாரென்று அறியாத ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொண்டால் அதிராமல் என்ன தான் செய்வான்..?

"ஹேய்..என்ன இது..வேணும்னே பதில் சொல்லாம நிக்குற..திமிரா..?"
கேட்டவனின் ஐவிரல்கள் சிகையை அழுந்தக் கோதி முட்டிய முன்னுச்சி முடிகளை பின்னே தள்ளின.

அவளுக்குள்ளும் தப்பிக்கும் எண்ணம் துளிர்த்திருக்க வேண்டும்.

"சாரி சீனியர்.." என்றவளின் விழிகள் அவனை விழிகளை நேராய் பார்த்திட்டன.

'வாட்..சாரியா..ஓகே ரைட்ட்ட்ட்...நீ செஞ்சது சரியா தப்பான்னு சொல்லு..?"அழுத்தமான அவனின் பார்வையின் மொழி பெயர்ப்பு "பதில் கிடைத்திடாமல் உன்னை விட மாட்டேன் பெண்ணே.." என்பதே.

"தப்பு தான் சீனியர்..இனிமே அப்டி பண்ண மாட்டேன்.."

"என்ன சொன்ன...இனிமே இப்டி பண்ண மாட்டியா..அப்போ பண்ண தப்புக்கு தண்டன தர வேணாமா..?"

"............"

"ஓகே ரைட்ட்ட்ட்ட..பெரிய பனிஷ்மன்ட் ஒன்னும் இல்ல..இனிமே இந்த காலேஜ்ல நீ என் முன்னாடி வரக்கூடாது...அப்டி வந்தன்னா உங்கப்பா கிட்ட நீ தந்த லெட்டர கொடுத்துருவேன்.."

"சீனியர்ர்ர்ர்ர்.."

"ஏதோ பாக்க பாவமா இருக்கு..அதான் பேசாம விட்டுருக்கேன்..இல்லன்னா கண்டிப்பா சும்மாலாம் விட்ருக்க மாட்டேன்..மைன்ட் இட்.." வழமையான தன் மேனரிசமான பின்னந் தலை சிகையில் விரல் நுழைத்து அழுந்தக் கோதி அவன் சொல்லி முடிக்கும் வரை அவன் பார்வை அவள் விழிகளை விட்டு நகராமல் நிமிர்வாய் படிந்தது.

நேர்ப் பார்வை பார்த்து சுருக்கமாய் பேசுவதே நிமிர்வு என நினைத்துக் கொண்டு சுற்றுபவனும் அவள் முன் விழி தழைத்து கருமணி அலைந்திட வார்த்தைகளில் கோர்வையின்றிப் போக தடுமாறி தடம் மாறிய இதயத்துடன் நிற்கப் போவது தெரிந்திருந்தால்..?

கொஞ்சம் தன்மையாகவே நடந்து கொண்டிருப்பானோ..?

உடைத்து பாயும் நதியும் அணையின் முன் அடங்கித் தானே போகிறது.

"சரி சீனியர்.." அவளும் இயல்பான குரலில் பதில் சொல்லிட ஆழமாய் ஊடுருவி அழுத்தமாய் பார்த்து விட்டு "ஓகே ரைட்ட்ட்ட்ட்ட்.." அதே தொனியில் சொல்லி விட்டு அவன் நகர்ந்தது தான் தாமதம்,
தொப்பென அவள் அமர்ந்திருந்தாள்,
இருக்கையில்.

இதயத் துடிப்பு பயத்தில் பன்மடங்காக எகிறி இருந்ததே.

"தர்ஷினி.."

"ம்ம்ம்ம்ம்ம்.."

"உண்மய சொல்லி இருந்துருக்கலாம்ல.."

"சரி விடுடி..அவருக்கும் நமக்கும் தொடர்பே இல்ல...அவரு மனசுல இருக்குற நெனப்புக்கு நாம எதுக்கு பீல் பண்ணனும்..ஜஸ்ட் யாரோ தான.."
அவள் அமைதியாய் சொல்லி முடித்திட்டு தோழியை பார்த்திட அவள் விழிகளில் புரியாத பாவம்.

"இங்க பாரு..கார்த்தி அவரு யாருன்னு எனக்குத் தெரியாது..
நான் யாருன்னும் அவருக்கு அந்தளவு தெரியாது..அப்றம் எதுக்கு சும்மா யோசிச்சிகிட்டு விடு..
அது நோ மிஸ்டேக் கண்ணுல படாம சுத்துவோம்.."
அவனின் " ஓகே ரைட்.."இனை மனதில் நிறுத்தி சிறு சிரிப்புடன் சொல்லிட தோழிக்கும் அவள் சொன்ன பாணியில் சிரிப்பு பீரிட்டது.

இது தான் அவள்.
மற்றவர்கள் மனதில் தன்னை பற்றி எவ்வித எண்ணங்கள் உலாவரும் என்பதை அதிகம் யோசிப்பதில்லை.
அதை விட அதைப் பற்றி எண்ணுவதை விரும்புவதுமில்லை.

அதனால் தான்,
தேவாவை இலகுவாக கடக்க முடிந்திட்டது.

தோழியின் பையில் ஒரு டிஷ்ஷு
தாளை
எடுத்து அவன் பாதம் ஊன்றியிருந்த இருக்கையை துடைத்திட "கால கீழ வச்சா தான் என்னாகப் போகுது..பெரிசா கெத்து காட்ட வருது.." இதழ்கள் தமக்குள் தொட்டுக் கொண்டு அவனுக்கு திட்டித் தீர்த்தன.

அன்றைய நாள் கல்லூரி முடிந்திட தன் முகத்தை மறைத்து இன்னொரு துப்பட்டாவை கட்டிக் கொண்டு நிமிர்ந்தாள்,
தர்ஷினி.

"தர்ஷினி.."

"ம்ம்.."

"இது எப்டி டி இன்னொரு துப்பட்டா..?"

"பேக்ல எதுக்கும் வச்சிப்பேன்..இன்னிக்கு யூஸ் ஆயிடுச்சு.."கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டு நடந்தவளின் பை தோளில் தொங்கியது.

அவர்களில் வகுப்பைக் கடந்து கல்லூரி வாயிலை அடையும் நேரம் தற்செயலாய் கிடைத்தது,
தேவாவின் தரிசனம்.

வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தவனின் பின்னே அமர்ந்திருந்த பாலா ஏதோ காதில் இரகசியமாய் சொல்லிட அதைக் கேட்டு தலையசைத்து எதிர்வினையாற்றியவனின் நெற்றியில் தவழ்ந்த முடிக்கற்றைகளை அடிக்கடி பின்னே தள்ளிக் கொண்டிருந்தன,
மூவிரல்கள்.

"இந்த நோ மிஸ்டேக் விதம் விதமா மேனரிசம் காட்டுது.." தனக்குள் நினைத்தவளாய் அவள் இயல்பாய் கடந்து விட அவனின் பார்வையோ அவளின் மீது புருவ முடிச்சுக்களுடன் படிந்து மீண்டது,
"யாரிந்த பெண்..?" என.

அவன் பார்வை தன் புறம் தாவியதை கண்டவளுக்கு சற்றே பயமெடுக்க கூட்டத்தினுள் புகுந்து வேக எட்டுக்களை எடுத்து வைத்திட தன்னை கேளாமல் அவளை பின் தொடர்ந்த விழிகளில் நிரம்பிய விம்பங்களால் அவனிதழோரம் விரிந்து கொடுத்தது,
மெல்லமாய்.

வீட்டுக்கு வந்த தர்ஷினி முதல் வேலையாக ரம்யாவுக்கு அழைப்பெடுத்து திட்டித் தீர்த்து விட்டு மெதுவாக தாயிடம் விடயத்தை உரைத்திட மகளின் மீது சிறு கோபம் எழுந்தது உண்மையே.

"அறிவிருக்கா தர்ஷினி உனக்கு..? இப்டி பண்ணி வச்சிருக்க..அப்பாகு தெரிஞ்சா என்ன ஆகும்..?"

"நா வேணும்னே பண்ணல மா..அவ தான் டார்ச்சர் பண்ணி கேட்டா..அதுவும் அந்த சிடுமூஞ்சிகுன்னா நா தொட்டே இருக்க மாட்டேன்.."

"தர்ஷினி யாருக்கும் எதுவும் சொல்லாத..ஆனா உன்ன வச்சிட்டு பயமா இருக்குடி.."

"யேன் மா..?"

"இப்டி வெவரம் கெட்டு நடந்துக்குற..கொஞ்சமாச்சும் சமக்க தெரியுமாடி..?
நேத்து பக்கத்து வீட்டு நிலாவ பொண்ணு பாக்க வந்தாங்க..எனக்கு அத யோசிக்கும் போதே பக்கு பக்குனு இருக்கு.."

"அட..என்னால அப்டி காபி எல்லாம் கொடுக்க முடியாது..மாப்ளய அவருக்கு தெரியாம வாட்ச் பண்றோம்..அவருக்கு என்ன வாட்ச் பண்ண சொல்றோம்..ஓகே பண்றோம்..சிம்பிளா மேரேஜ் பண்றோம்.."

"ஏன் என்னடி இது..?"

"சரி விடுங்கம்மா..அப்பாகிட்ட மட்டும் இந்த விஷயம் போகாம பாத்துக்கோங்கம்மா.."
"சரி..சரி என்னவாச்சு பண்றேன்.." தாய் உறுதி கொடுத்திடவே சேயின் மனம்.

விழியெடுக்காது தாயின் முகத்தை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தவளின் இதழ்கள் விரிந்தன.

"ஏன்டி வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டுருக்க.."

"ச்சே..ஒன்னுல்லயே.."அவள் சொல்லி முடிக்கும் முன்பே அருகே இருந்த சுவற்றின் முனையில் தாய் நெற்றியை இடித்து கொள்ள பதறி விட்டாள், அவள்.

"என்னம்மா இது...ஒழுங்கா பாக்க மாட்டா..எப்ப பாரு கவனமில்லாம.." கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அவரை கடிந்து கொண்டிட முகம் சுருக்கிய தாயாரிடம் எதுவும் சொல்லவில்லை,
அவள்.

அவள் அப்படித்தான்.
அதீத நெருக்கம் உள்ளவர்களிடம் அன்பாக வார்த்தைகள் பேசத் தெரியாது.
அதட்டலுடன் வெளிவந்தாலும் அவற்றில் ஒளிந்திருப்பது அக்கறை கொட்டிக் கிடக்கும் ஒரு வகை நேசமே.

"வலிக்குதாம்மானு கேக்காத..நல்லா திட்டு...இதே வெளிய யாருக்காச்சும் நடந்தா பாசமா பேசு"

"மத்தவங்க கிட்ட எறிஞ்சு விழவா முடியும்...சரி வாங்க ஐஸ் க்யூப் எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம்.." இழுத்துக் கொண்டு வந்தாள், தாயை.

தாயிற்கு ஒத்தடம் கொடுத்து விட்டு அவள் நிமிர்ந்திட அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்கவே நேரத்தை பார்த்திட்டவளுக்கு அது தம்பி பள்ளி விட்டு வரும் நேரம் என்பதை உணர்ந்ததும் வந்ததே கோபம்.

"இந்த சுதர்ஷன் பக்கிக்கு அறிவே இல்ல..எப்ப பாரு காலிங்க் பெல் அடிச்சிகிட்டு.." கலைந்த சிகையை ஒதுக்கக் கூட கோபம் மறக்கடிக்க துப்பட்டாவை மட்டும் சரி பார்த்த படி கதவைத் திறந்தவளின் எண்ணம் பொய்யாகிடவில்லை.

பள்ளிப்பையுடன் நின்றிருந்த தம்பியைக் கண்டதும் சினம் எகிற வார்த்தைகள் பாய்ந்தது,
தாவி.

"எரும மாடு..அறிவிருக்காடா..நொய் நொய்னு காலிங்க் பெல் அடிச்சிகிட்டு இருக்க..பக்கீஈஈஈஈ.." தன் பாட்டில் இதழ்கள் திட்ட பதிலேதும் பேசாமல் நின்றிருந்த தம்பியை கண்டதும் சந்தேகம் துளிர்த்தது.

என்ன தோன்றியதோ..
சட்டென வெளியே எட்டிப் பார்த்திட கதவின் ஒரு புறச் சுவரின் பின்னே மறைந்து ஒற்றைப் பாதத்தை சரித்து நின்ற தேவாவின் விழிகளில் அத்தனை முறைப்பு தேங்கிக் கிடந்தது.

●●●●●●

இன்று....

பொழுது விடிந்து சில நிமிடங்களே கடந்திருந்த அந்த காலைப் பொழுதிலும் அவன் உடல் தொப்பலாய் நனைந்திருந்தது,
வியர்வையால்.

ட்ராக் ஷுட் சகிதம் ஜாகிங்கை முடித்துக் கொண்டு உள் நுழைந்தவனை கண்டதும் முகம் திருப்பிக் கொண்டார்,
தந்தை ரகுவரன்.

கைகள் விரித்து வைத்திருந்த பத்திரிகையில் பெரிய எழுத்துக்களில் இருந்த தலைப்புச் செய்தியை படிக்க முயன்று தோற்றன,
அவன் விழிகள்.

வாடிக்கை தான் என்பதால் அவன் முகத்திலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

வீம்புக்கென்று தந்தையின் நேரேதிரே இருந்த சோபாவில் வந்தமர தொண்டைச் செருமலொன்று பெரிய மனிதரிடமிருந்து.

அதில் நகைத்தவனோ சோபாவில் சற்று சரிந்தமர்ந்திட கோர்த்த கைகள் பின்னந்தலையை தாங்கிக் கொண்டன.

"அம்மா..காபி.." அடுக்களைக்குள் இருந்த தாய்க்கு இங்கிருந்தே குரல் கொடுத்த மகனின் செயலில் கடுப்பாகி அவர் தன் அறைக்குள் நுழைய அதில் திருப்தி அடைந்தவனாய் அடுக்களைக்குள் நுழைந்தான்,
ஆதித்யா.

"அம்மா என்னம்மா உன் புருஷ் அதுக்குள்ள உள்ள பொய்ட்டாரு.."

"படவா..நீ தான் கடுப்பாக்கி உள்ள அனுப்பி இருப்ப.."கடிந்து கொண்டவரின் கைகளில் இருந்த காபிக் கோப்பை அவனை நோக்கி நீண்டது.

குறும்புடன் அதைப் பெற்றுக் கொண்டவனின் அலைபேசி ஒலிக்க சிறு யோசனையுடன் அதை ஏற்றவனின் முகத்தில் பலவித குழப்ப ரேகைகள்.

"ஓகே..ஐ வில் பீ தேர் இன் பிப்டீன் மினிட்ஸ்.."சொல்லி முடித்தவனின் குரலில் அத்தனை கடுமை விரவியிருந்தது.

டேபிளில் தட்டிய படி அமர்ந்திருந்த ஆதியின் முன்னே இருந்த கதிர்வேலுக்கு அவன் சிந்தனைக்கான காரணம் புரியாமல் இல்லை.

"பாஸ்.."

"ம்ம்.."

"கோபமா வருதா பாஸ்..?"

"கொலவெறியே வருதுடா..இவ்ளோ நாள் இவன் எங்க இருந்தான்..? என்ன பண்ணிகிட்டு இருந்தான்...? இடியட்ட்ட்..பெத்த பையன காணோம்னு அப்பங்காரன் குடுத்த டார்ச்சர் தாங்காம அவன தேடுனா அவன் ஏதோ நடுக்காட்டுல இருக்குற ஆத்துல பொணமா கெடந்தான்..எவ்ளோ தேடியும் எந்த டீடெய்ல்ஸும் கலெக்ட் பண்ண முடியல..அப்டியே பைல க்ளோஸ் பண்ணலாம்னு பாத்தா..இப்ப புதுசா ஒரு டார்ச்சர்..சரி அவன் என்ன சொன்னான்..?"

"சார்..செத்துப் போனது பிஸ்னஸ் மேக்னட் ராமச் சந்திரனோட ஒரே பையன்.."

"சரிடா.."

"கொஞ்சம் கேளுங்க பாஸ்..எனக்கு ப்லோல தான் பேச வரும்.."

"சரி..கன்டினியூ பண்ணு.."

"ரொம்ப நாளா கணோம்னு தேடிட்டு இருந்தப்போ பாடி கெடச்சது நடுக்காட்டுல இருக்குற அந்த ஆத்துல தான...நெத்தில வேற புல்லட் பாஞ்சுருக்கு..நாமளும் அந்த பில்டிங்க் அது இதுன்னு எல்லா யெடமும் தேடிப் பாத்துட்டோம் எதுவும் சிக்கல.."

"ம்ம்.."

"இப்போ அந்த செத்துப் போன கிரி எக்சேக்டா அவன் பாடிய கண்டுபிடிக்க ஒரு வாரம்..அப்டின்னா அவன் காணாம போய் ரெண்டு நாளக்கி அப்றய் அவன் ப்ரெண்டுக்கு கால் பண்ணி இருக்கான்.."

"ம்ம்.."

"என்ன யாரோ ரெண்டு பேர் கடத்தி வச்சுருக்காங்க டா..அவனுங்கள ஏமாத்திட்டு தப்பிச்சிட்டேன்னு சொல்லியிருக்கான்..ஆனா அப்டி சொல்லிட்டு தான் இருந்த எடத்த வேற சொல்லி அவன் ப்ரெண்ட வர சொல்லியிருக்கான்..
ஆனா போய் பாக்குறப்போ அவன் அங்க இல்ல.."

"ஸோஓஓஓ...அந்த கேப்ல அவன திரும்ப அவனுங்க கடத்தி இருக்கனும்...இல்லன்னா வேற ஏதாவது நடந்து இருக்கலாம்.."

"ஆமா பாஸ்..எனக்கு என்னமோ இந்த கொலய பண்ணுனது ரொம்ப அழகா ப்ளேன் பண்ணி தான்னு தோணுது.."

"ஹ்ம்ம்..அது மாதிரி தான் இருக்கு..சரி அவன் போன்ல சொன்ன யெடத்துக்கு போய் சீசீடிவி புட்டேஜ் செக் பண்ணனும்னு இப்போ.."

"ஆமா சார்..ஒரு வருஷத்துக்கு முன்ன இருக்கறத திரும்ப பாக்கனும்ல.."

"சரி..அவன் கேரக்டர் எப்டி..?"

"செத்துப் போனவன் ரொம்ப நல்ல கேரக்டர்னு தான் சொல்றாங்க..தென் அவனோட பிஸினஸ் எதிரிங்க கொல பண்ணி இருக்கலாம்னு ஒரு தாட்.."

"ம்ம்.." என்று விட்டு அவன் நிமிர்ந்திட்டாலும் மனதில் இன்னும் குழப்பமே.

நேரத்தின் சுழற்சியின் மணித்துளிகள் நகர்ந்திட இரவும் கவிழ்ந்திருந்தது.

அடை மழை வெளியே பெய்து கொண்டிருக்க அந்த மழைச் சத்தத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் லயித்து இருந்தாள்,
தர்ஷினி.

கொட்டும் மழைச் சத்தத்திலும் மௌனாய் அவள் மனதில் அவன் நினைவுகளின் தூறல்.

அன்று அவன் மழைக்கு ஒதுங்கி தன்னருகே நின்றதும் வெட்டிச் சென்ற மின்னல் வெளிச்சத்தில் பயந்து தன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதும் நினைவில் வந்து அவளின் இதழ்களை விரியச் செய்தன.

நிஜங்கள் ஒரு வித இனிமை என்றால் நினைவுகள் மூழ்கடிக்கச் செய்யும் ஒரு வித சுகமல்லவா..?

அலைபேசியையாவது துழாவலாம் என்றெண்ணி மேசையின் புறம் நகர்ந்தவளுக்கு கைப்பையில் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் கீ செய்னை காணாது போக பரபரவென மேசையைக் கலைத்து துழாவின,
விரல்கள்.

இதயம் படபடக்க உடல்மொழியில் அத்தனை பதட்டம்.

கீ செய்ன் அறுந்து விழுந்திருப்பதை எடுத்தியம்ப பாதியாய் பையுடன் தொங்கிக் கொண்டிருந்தது,
மேற்பகுதி.

சட்டென மின்னல் வெட்டியது,
உள்ளுக்குள்.
இன்று கடைத்தெருவுக்கு சென்று வரும் போது வழியில் ஏதோ விழும் சிறு சத்தம் கேட்டதும் தான் கண்டு கொள்ளாமல் கடந்து வந்ததும்.

சரியாக தேவேந்திரனின் வீட்டின் பக்கமாய் இருக்கும் அந்த வெற்று நிலப்பரப்பில் தான் விழுந்திருக்கும் என்பதை கணித்துக் கொண்டது,
அவள் மனது.

கையில் குடையையும் டார்ச் ஒன்றையும் எடுத்தவளாய் சத்தம் காட்டாமல் கதவை அடைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியிறங்க காற்றின் திசையில் அசைந்தாடிய சாரல் துப்பட்டாவை தாண்டி அணிந்திருந்த ஸ்வெட்டரை நனைக்கும் அளவு வலுவாய் இருந்தது,
மழை.

முகத்தில் தெறித்த நீர்த்துளிகளை அடிக்கடி ஒற்றி எடுத்துக் கொண்டிருந்த
துப்பட்டா நுனியில் இருந்து தப்பிக்கும் அளவில் விழிகளில் சிறிய நீர்க் கசிவு.

வெளியே ஆள் நடமாட்டம் இல்லாதிருக்க தேவேந்திரனின் வீட்டு வெளி விளக்கின் வெளிச்சம் கூட அந்தப் பரப்பை பெரிதாக எட்டி இருக்கவில்லை.

வேகவேகமாய் நடந்து வந்து அவ்விடத்தில் டார்ச் வெளிச்சம் கொண்டு தேடத்தான் செய்தன,
அவள் விழிகள்.

காலையில் தேடிக் கொள்ளலாம் என புத்தி எடுத்துரைத்தாலும் அவனிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மனம் ஏற்றுக் கொள்ளுமா..?

"இந்த கீ செய்ன் உன்ன விட்டு வெலகி போனா அர்ஜுனும் உன்ன விட்டு வெலகி போய்ருவான்..அதனால பத்ரம் தங்கச்சீஈஈ"
அன்று விளையாட்டுக்கென அவனின் தோழன் கூறியது அன்றில் இருந்து இன்று வரை அவளை ஆட்டுவிக்கிறதே.

எத்தனை தெளிவாக சிந்திக்கும் மனமும் யாரோ ஒருவரின் விடயத்தில் சறுக்குவதுண்டல்லவா..?

அந்நிலையில் தான் அவள்.

ஆட்டுவிக்கிறது..
அவன் மீதான நேசம்..
அவளைக் கைப்பாவை போல்.

தொடரும்.

🖋️அதி...!
2023.08.01
 
Top