• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 03

Messages
47
Reaction score
3
Points
8
சொல்லாமல்...!

தேவாவோட ப்ளேஷ் பேக்கும் லவ் ஸ்டோரியும் வேற பார்டாவும்
ப்ரசன்ட் வேற பார்ட்டா வர்ர மாதிரி போகும்..
ஓகே தான குழம்பிற மாட்டீங்களே..

மௌனம் 03

சில வருடங்களுக்கு முன்பு...

துப்பட்டாவால் தன் முகத்தை
ஒற்றிய படி நின்றிருந்தாள்,
தேவதர்ஷினி.
பதட்டத்துடன் பேரூந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்ததால் முகத்தில் வியர்த்துப் போட்டிருந்தது.

அதை துடைக்கும் எண்ணமில்லை அவளுக்கு.
பாவையின் பார்வை பாதையிலேயே படிந்து மீண்டது,
அடிக்கடி.

சரேலென தன்னைக் கடந்து சென்ற வண்டியைக் கண்டதும் அவளின் இமைகள் ஒரு கணம் அழுந்த மூடித் தான் திறந்தன.

ஏனோ வேகம் என்றால் அவளுக்கு கொஞ்சம் பயம் தான்.

அவள் அங்கு பேரூந்துக்கு காத்து நின்றிட சில நிமிடங்களில் பின்னர் அவனின் இருசக்கர வாகனம் காலேஜ் வாயிலை அடைந்திட அவனுக்கென காத்துக் கிடந்த தோழர்களில் இருந்து பெரும் கூச்சலொன்று.

ஹெல்மெட்டை கழற்றி விரல் கொண்டு தலை கோதியவனின் விரல்கள் தன் புல் ஸ்லீவ் ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட பாதங்கள் நீண்டது,
தோழர்களை நோக்கி.

இறுக மூடியிருந்த இதழ்களின் ஓரம் தோழர்களை கண்டதன் வெளிப்பாடாய் சிறு புன்னகை ஒன்று மின்னி மறைந்தது.

"தேவா..வா..வா.." அவனின் உயிர்த்தோழன் பாலா அழைக்க பின்னங்கழுத்தை அழுந்தக் கோதியவாறு அவனுக்கென அந்த கல் இருக்கையில் அமர்ந்து கொண்டவனின் கரம் பாலாவின் தோற்பட்டையில் விழுந்தது.

"என்னடா..இப்டி ஆர்வமா கூப்புர்ர..?"

"ஒன்னுல்லடா..நேத்து பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ் வந்தாங்களே..செகன்ட் இயர் ரொம்பத் தான் ரேக் பண்ணிட்டாங்களாம்.."

"யாராவது போய் கம்ப்ளைன் பண்ணுணாங்களாமா..?"

"இல்ல மச்சான்..அப்டி எதுவும் இல்ல.."

"அப்போ விடு மச்சீ...லிமிட்டோட இருக்குற ரேகிங் தான் அவங்க பேட்ச்குள்ள பிட்டா இருக்க ஹெல்ப் பண்ணும்.."என்றவனின் பார்வை நுழைவாயிலில் படிய ஒரு நிமிடம் வாயிலில் படிந்திட மேலெழுந்து நின்று வில்லென வளைந்து நின்ற புருவங்கள் சட்டென மறுநொடியே இயல்பாகின.

அவள் தான் வந்து கொண்டிருந்தாள்.கொஞ்சம் பயமும் நிறையவே வெற்றுப் பாவமும் நிறைந்திருந்த விழிகளை சுழற்றி சுற்றும் முற்றுப் பார்த்து வந்து கொண்டிருந்தவளின் கரமோ புத்தகமொன்றை நெஞ்சோடு சேர்த்தணைத்து பற்றிக் கொண்டிருந்தது.

அதைக் கூர்ந்து அவதானித்தவனுக்கு கொஞ்சமாய் மின்னிய பயத்தை கண்டதும் ஏனோ மனதில் சிறு எரிச்சல் கிளம்பியது.

அவளின் சில வெகுளித் தனங்களை கண்டும் இதே போன்றதோர் எண்ணம் எழத்தான் செய்திருக்கிறது,
ஆடவனின் மனதில்.

அவனுக்கு இப்படி இருப்பது பிடிக்காது.
ஆணாயினும் பெண்ணாயினும் தைரியமாக வெகுளித்தனமின்றி கம்பீரமாக இருந்திட வேண்டும் என்பது அவன் கொள்கை.
விதிகள் தான் அனைவருக்கும் பொது..
கொள்கைகள் அவரவருக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் என்பதை அவனுக்கு யார் தான் புரிய வைப்பது..?

அவளின் பார்வை வீச்சில் இவன் விழவேயில்லை.
அவனைக் கடந்து செல்லும் போது ஏதோ யோசனையில் சென்றவளின் பார்வை தவறியேனும் அவன் புறம் திரும்பி இருந்தால்..?
பயத்தில் கொஞ்சம் தடுமாற்றமாவது வந்திருக்குமோ என்னவோ..?

கடந்து சென்றவளை இரண்டாம் வருடம் கற்கும் மாணவியர் கூட்டம் அழைத்திட திக்கென்றது உள்ளுக்குள்.

ஏதோ ஒரு நல்ல எண்ணம் போல் அவளை சீண்டி விட்டு அவர்கள் அனுப்பி விட விட்டால் போதுமென விடுவிடுவென நடந்தவளின் செய்கையை அவன் ஓரவிழியால் ஆராய்ந்தது,
தான் கொஞ்சம் அவன் நடத்தைக்கு முரணாய்.

தங்களின் வகுப்பில் நுழைந்த பின்னரே அவளிடமிருந்து ஒரு ஆசுவாசப் பெருமூச்சொன்று.

"ஹப்பாடா..தப்பிச்சிட்டோம்.." என்று நினைத்தவளாய் அருகில் அமர்ந்திட கார்த்திகாவின் பார்வை தோழி மீது சிறு யோசனையுடன் படிந்தது.

"தர்ஷினி.."

"என்னடி...?"

"நீ அவர பாக்கல..?"

"யாரடீஈஈஈஈ...?"

"அந்த அண்ணாவ.."

"யார் டி..?"

"அன்னிக்கி ரோட்ல வச்சி செம்மயா திட்டினாரே..க்ராஸ் பண்ணும் போது.."

"அந்த..பயர்பால் அதயா சொல்ற..ஆமா அது இங்க எங்க..?"

"அவரு இந்த காலேஜ் தானாம்..செம்ம பவரான ஆளாம்..நா வரும் போது விசாரிச்சிட்டு தான் வந்தேன்.."

"ஆத்தாடி..இதுக்கப்றம் அந்த பயரு பக்கத்துல தல வச்சிக் கூட படுக்க மாட்டேன் மா.."

"ஆமா..இன்னிக்கு யேன் லேட்..?"

"லைட்டாஆஆஆ தூங்கிட்டேன்.."

"லைட்டாஆஆஆஆஆ..த்துதூஊஊஊஊஊஊ.."

"போடி..போடி.." என அவள் திட்டிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் வகுப்பறையினுள் நுழைந்திருந்தனர்,
தேவாவும் பாலாவும்.

தர்ஷினிக்கு பகீரென்றாக அப்படியே கீழே குனிந்திருக்க அதை கண்டு கொண்டாலும் எவ்வித எதிர்வினையும் இல்லை,
அவனிடமிருந்து.

தன் அத்தை மகனை பார்த்து நலம் விசாரித்து விட்டு தேவா கிளம்பி விட்ட பின்னே நிமிர்ந்து அமர்ந்தவளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தாள்,
கார்த்திகா.

"ஏன்டீஈஈஈ..இவ்ளோ பயப்பட்ற..?"

"தெரிலடி..பேசிக்கலி ஐ ஆம் வெரி தைரியம்...யூ க்நோ.."

"தெரியும்..தெரியும்..இங்கிலிஷால சொல்லி காதுல ரத்தம் வர வச்சுராத.."

அவள் திட்டி முடிக்க முன்னமே பேராசிரியர் நுழைந்து விட பாடத்தில் கவனமாயினர்,
இருவரும்.

இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச்சாலை சென்றிருக்க அங்கு தேவாவைக் கண்டதும் பட்டென தன் துப்பட்டாவை எடுத்து தலைக்கு போட்டு கை கொண்டு முகத்தை மறைத்தவளாய் நகர்ந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தன,
பலரின் விழிகள்.

தேவாவின் பார்வை வீச்சின் வாடை கூட இல்லாத பக்கத்தில் ஒரு ஓரமாய் அமர்ந்து அவள் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கவே அவளின் பயத்தை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை,
தோழிக்கு.

"எதுக்குடி இப்டி பயப்பட்ற..?"

"தெரிலடி..அத பாத்தாலே கை கால் எல்லாம் நடுங்குது.." என்றவளுக்கு தன்னை அறைந்ததும் தன் கண் முன்னே வராதே என அவன் எச்சரித்ததும் நினைவில் வந்திட முகம் வெளிறிற்று.

ஏனோ தெரியவில்லை,
ஆடவனின் மேல் தனை கேளாமலே துளிர்த்திருந்தது அப்படி ஒரு பயம்.

"தர்ஷினி.."

"ம்ம்..அன்னிக்கு எதுக்கு அறஞ்சாரு.."

"அது பெரிய கத டி.."

"அதான் சொல்லு.."

"எங்க ரம்யா இருக்கால..அதான் எங்க பெரியப்பா பொண்ணு.."

"ஆமா..அவ என்ன பண்ணா..?"

"இப்போ ஒரு ரெண்டு மாசம் இருக்கும்..அவ எங்க வீட்டுக்கு வந்துருந்தா..அப்றம் அந்த பயர பாத்ததும் அவளுக்கு புடிச்சு போச்சு போல..எனக்கு ஒரு லவ் லெட்டர் எழுதி தான்னு ஒரே நச்சரிப்பு..தாங்க முடியாம எக்கேடோ கெட்டுத் தொலன்னு நானும் எழுதி கொடுத்துட்டேன்.."

"அப்றம்.."

"இந்த பக்கி சும்மா வெளயாட்டுக்கு கேக்குதுன்னு நா நெனச்சிகிட்டு இருக்க இவ போய் அது கிட்ட கொடுக்காம அவளோட தங்கச்சி கிட்ட கொடுத்துருகஅவளோ...அதான் வேதா கிட்ட..அவ போய் அது கிட்ட கொடுத்துருக்கு போல.."

"சரி டி..அதுக்கு யேன் நீ பயப்டனும்..?"

"விஷயத்த கேளு டி..அதுக்கு எப்டியோ அது என்னோட ஹேண்ட் ரைட்டிங்க்னு தெரிஞ்சுடுச்சு..ஒரு தடவ நோட்டு தர்ர மாதிரி எங்க வீட்டுக்கு வந்து சுத்தும் முத்தும் பாத்துட்டு சப்புன்னு ஒரு அற..இனிமே லவ் பண்றன்னு சுத்துனா கொன்னுருவேன்னு மெரட்டிட்டு போயிருச்சு.."

".........."

"எனக்கு யேன் அப்டி பண்ணுச்சுன்னு புரிஞ்சிக்கவே ஒரு டைம் எடுத்துச்சு..அப்றம் ரம்யா கிட்ட சொன்னா அவ அவ தான் அனுப்புனான்னு சொல்ல வேணான்னு ரொம்ப கெஞ்சுறா.."

"சரி..நீ யேன் இப்டி பயப்டனும்..?"

"ஒழுங்கா நடந்துக்கலனா வீட்ல சொல்லிருவேன்னு மெரட்டி இருக்கு..வீட்ல சந்தேக பட மாட்டாங்க டி..நீ எழுதுனதா கேட்டா ஆமான்னு தான சொல்லனும்..ரம்யான்னு சொன்னா பெரிப்பா என்ன செய்வார்னு தெரியும்ல.. அதான் அவன்னும் சொல்ல முடியாது.."

"அட இந்த சப்ப மேட்டர்கா இவ்ளோ பயந்துட்டு இருக்க.."

"உனக்கு சப்ப மேட்டரா இருக்கலாம்..ஆனா எனக்கு இட்ஸ் அ பிக் ப்ரச்சன.."

"போடீஈஈஈஈஈஈ.." என்று அவள் கத்தும் போதே அழுத்தமான காலடியோசை அவர்கள் புறம் கேட்டிட அதிர்வில் விரிந்தன,
அவளின் விழிகள்.

சட்டென தலையை திருப்பி பார்த்திட கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி அழுத்தமாய் அவளைப் பார்த்து நின்றிருந்தான்,
தேவா.

தடித்த புருவத்தின் கீழ் அமைந்திருந்த அந்த கூர் விழிகளில் இருந்து தப்பவில்லை,
அவள் முகத்தில் சடுதியாய் வந்து போன மாற்றங்கள்.

முதலில் அதிர்வும் மிரட்சியுமாய் இருந்த விழிகளில் அடுத்த நொடியே பயம் வந்து குடி கொண்டிட அலட்சியமாய் வளைந்தன,
அவனிதழ்கள்.

ஏதோ தோன்றவே விழிகளை சுழற்றி சுற்றுப் புறம் ஆராய்ந்தவளுக்கு அந்த பகுதியில் தம்மைத் தவிர யாருமில்லை என்பது புரிந்திட விழிகளில் இன்னும் மிரட்சி.

அவர்களின் மேசையின் அருகே நிதானமான நடையுடன் அவன் வந்திட அவனின் காலடிக்கும் இவளுக்கு இதயத் துடிப்பு எகிறியது.

அவர்கள் அருகே வந்து அவர்களின் பக்கம் இருந்த மேசையில் ஏறி அவன் அமர்ந்திட அவளுக்கு பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கிட அத்தனை பயம் உள்ளுக்குள்.

ஒற்றைக் காலை ஒரு கதிரையில் தரிக்க மறு கால் சுவாதீனமாக தொங்கிக் கொண்டிருக்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி ஒரு பக்கம் வளைந்து அமர்ந்தவனாய் அவளை தன் கத்தி முனை விழிகளை கொண்டு ஆராய்ந்திட தலை நிமிர்த்தி பார்க்கவில்லை,
அவள்.

●●●●●●

*இன்று....*

தன் முன்னே எதிர்பாராமல் தோழியைக் கண்டதும் திக்கென்றது,
தர்ஷினிக்கு.

முன்பென்றால் அவளைக் கண்டதும் எழும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாத தோழியின் உறைநிலை அவளைக் கொஞ்சம் உலுக்கிப் போட்டது.

"தர்ஷினி.." அவள் அழைக்க சடுதியாய் கலைந்தவளின் புன்னகையை பூசிக் கொண்ட இதழ்களில் இருந்து "வாடி..வா.." என்று வார்த்தைகள் உதிர்ந்தாலும் அந்த புன்னகையில் இருந்த உயிர்ப்பற்ற தன்மை கொன்று போட்டது,
அவளை.

ஆராயும் பார்வையை தோழியின் நடவடிக்கைகளில் படரவிட்டவாறு அவள் வந்தமர கதவை அடைத்து விட்டு தோழியின் அருகே அமர்ந்து கொண்ட தர்ஷினியின் விழிகள் அலைபாய்ந்து கண நேரத்தில் இயல்பாகின.

"எப்டி இருக்க கார்த்தி..?"

"நா நல்லா தான் இருக்க..நீ எப்டி இருக்க..?" கேள்வியில் ஒரு வித சந்தேகத் தொனி.

"நா நல்லா தான் இருக்கேன்..எனக்கென்ன ப்ரச்சன..."

"நா ப்ரச்சனன்னு சொல்லவே இல்லியே தர்ஷினி.."இருபுருவமுயர்த்தி அவள் கொக்கி போட்டிட கொஞ்சம் திணறித் தான் போனாள்,
தர்ஷினியும்.

"சரி..எப்போ தர்ஷினி வந்த வீட்டுக்கு..?" அவள் பேச்சை மாற்றும் பொருட்டு கேட்டிடவே இயல்பாக சுவாசிக்க முடிந்தது,
அவளால்.

"நேத்து தான்டி..சரி உன் கல்யாண வேல எப்டி போகுது.."

"அது போகுது டி..ராகுல் பாரின்ல இருந்து வந்ததும் டேட் பிக்ஸ் பண்ணிட்றதா சொல்லியிருக்காங்க.."

"அட...அப்போ இனி மிஸஸ்.ராகுலா தான் நாங்க பாப்போம் போல இருக்கு.."

"போடி நீ வேற..அவனுக்கு என்ன புடிச்சு இருக்கான்னே தெரியல...ஏதோ அம்மா அப்பா சொன்னதுக்காக தான் மண்டய ஆட்டி இருக்கான் போல.." ஒரு வித வருத்தத்துடன் வந்த தோழியின் குரலில் இவளுக்குள்ளும் பல நினைவுகளின் அலைமோதல்.

"கண்ணு இவன் அப்பா பேச்சுக்கு தான் டா கல்யாணத்துக்கே சம்மதிச்சு இருக்கான்...கவனமா நடந்துக்கடா.."திருமணம் முடிந்த கையோடு அவன் தன்னை தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற நேரம் அவனின் தாயார் காதோரம் சொல்லிச் சென்றது நினைவில் வர அந்த நேரம் வலிக்காததற்கும் சேர்த்து இப்போது வலித்தது.

முயன்று தன்னை கட்டுப்படுத்தியவளால் உயிர்த் தோழியின் முன் கூட அவனை விட்டுக் கொடுக்க முடியாமல் போனதன் காரணம் ஆழமான காதலன்றி வேறேது..?

விட்டு வந்தாலும் காதல் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதில்லையே.

"தர்ஷினி.."

"ம்ம்ம்ம்.."

"என்னடி யோசனைல இருக்க..?"

"ஹான் ஒன்னுல்ல..சொல்லு.."
"நீ பக்கத்து வீட்டு தேவேந்திரன் அண்ணாவ பத்தி என்ன நெனக்கிற..?"

"யாரு நம்ம சீனியர் தேவேந்திரனயா சொல்ற..?"

"ஆமா..ஆமா.." சிறு புன்னகையுடன் சொன்னவளுக்கு தோழியின் மனதை ஆழம் பார்க்க வேண்டி இருந்தது.

"என்ன சொல்ல..முன்னவெல்லாம் சிடு சிடு கடுகடுன்னு இருப்பாரு..அப்றம் கொஞ்சம் நல்லா பேசுவாரு..அதுக்கப்றம் சாதாரணமாவே பழக ஆரம்பிச்சுட்டாரு..ரொம்ப நல்ல மனுஷன்.."
என்றவளின் மனதில் பலவித நினைவுகளின் ஊர்வலம்.

"ஆனா அவர் ரொம்ப பாவம் டி.."

"யேன்..யேன் அப்டி சொல்ற.."

"அவரு நம்ம காலேஜ்ல ஒரு பொண்ண லவ் பண்ணாரு டி.."

"யெதேஏஏஏஏ..இது எப்போ நடந்துச்சு.."

"வேறெப்போ நடக்கும்..அவரு படிக்கிற டைம்ல தான்..வன் சைட் லவ்.."

"ஐயோ..இப்போ எப்டி இருக்காங்க..சேந்துட்டாங்கலா..?"

"இல்லடி..அவர் லவ்வ சொல்ல முன்னாடியே அந்த பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.."

"ஐயோஓஓ..பாவம்ல..அதான் அவரு இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காரா..?"

"ம்ம்..ஆனா..?"

"ஆனா...?"

"இப்போ அந்த பொண்ணுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சாம்..அப்போ அவரு அந்த பொண்ண திரும்ப போய் கேக்குறது தப்பில்ல தான.."

"டிவோர்ஸ் ஆகினதுக்கு அப்றம்னா..கேக்குறது தப்பில்ல டி..ஆனா அவரு லவ் என்னமோ பண்ணுது மனச...காதலிச்ச பொண்ணு கெடக்காம போனாலும் அவளுக்கு எந்த விதமான டார்ச்சரும் பண்ணாம இப்போ அவ டைவர்ஸ் ஆகி நிக்கிறது தெரிஞ்சும் ஏத்துக்குறதுகு முன் வந்திருக்காறே..சான்ஸ்லெஸ் லவ் ல.." இயல்பாய் அவள் சிலாகித்துக் கூறிட கார்த்திக்காவின் மனதில் அத்தனை நிம்மதி.

"அப்போ நெஜமாவே அந்த பொண்ண திரும்ப கல்யாணம் பண்ணிக்க ட்ரை பண்றதுல தப்பில்ல தான.."

"தப்பில்ல டி..இப்போ தான் டைவோர்ஸ் ஆயிடுச்சே...ஆனா.." என்று ஏதோ சொல்லிடப் பார்க்கும் முன்னர் கதவு தட்டப்பட பாதியில் நின்று போனது,
இருவரினதும் உரையாடல்.

"ஆனா அந்த பொண்ணு மனசுல வேற யாரும் இல்லாம இருக்கனும்.." தொடர்ந்து தோழி சொன்ன முனைந்ததை கேட்டிருந்தால் கார்த்திகாவுக்கும் கொஞ்சம் அவளின் காதல் புரிந்திருக்குமோ...?
நடக்க இருப்பது தானே நடக்கும்.

தர்ஷினியின் தாய் இருவருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்து விட்டு நகர்ந்திட கார்த்திகாவின் மனதில் பலவித யோசனைகள்.

அவளுக்கு விவாகரத்து நடக்க இருக்கும் விடயம் அவர்களுக்கு தெரிந்தால்..?
நிச்சயம் தாங்கிக் கொள்ள இயலாமல் தான் போகும்.
சரியாகத் தான் கணக்கிட்டுக் கொண்டது,மனது.

"கார்த்தி என்ன யோசனடி..?"

"ஹான் ஒன்னுல்ல..சரி உன் புருஷன் அர்ஜுன் எப்ப உன்ன கூட்டி போக வர்ராராம்..?"
வேண்டுமென்ற கேட்ட கேள்வியில் சடுதியாய் ஒரு தடுமாற்றம் அவள் விழிகளில்.

அவளுக்கு அவ்வளவாய் அவனை பிடிக்காது.
ஒரு வேளை தேவேந்திரன் தான் தோழிக்கு பொருத்தம் என்று அவள் கீறி வைத்திருந்த கோட்டை அழித்து விட்டது கூட காரணமாய் இருக்கலாம்.

என்ன தான் மறைக்க முயன்றாலும் அதை தெளிவாகவே இனங்கண்டு மனதுக்குள் குறித்துக் கொண்டன,
அவள் விழிகள்.

"தர்ஷினி..எப்ப வர்ராறாம்..?"

"வர்ரேன்னு சொன்னாரு டி..புது வீடு வாங்குறதுக்கு பாத்துகிட்டு இருக்காரு..அதான் இங்கயும் அலய முடியாதுல.."
விழிகளை பாராமல் எங்கெங்கோ பார்வையால் அலசிய படி அவள் சொல்லிட ஏனோ தோழியின் மீது கடுங்கோபம் மனதுக்குள்.

தன்னிடம் கூட அவனை விட்டுக் கொடுக்காததில் துளியும் விருப்பம் இல்லை அவளுக்கு.
அதன் காரணத்தை அந்தக் கணம் ஆராய்ந்து இருந்தால் தேவேந்திரனையும் கொஞ்சம் வலிகளில் இருந்து காப்பாற்றி இருக்கலாமோ..?

இருள் சூழ்ந்திருந்த இரவு நேரம் அதில் துளியும் உறக்கம் வரவில்லை,
தர்ஷினிக்கு.

ஒரு புறம் சரிந்து படுத்திருந்தவளின் விழிகள் சிவந்து கிடக்க காரணம் தான் சொல்லிட வேண்டுமா...?

அவன் தான்..
இது வரை யாரும் தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என அவள் நினைத்ததில்லை.
அவள் வளர்ந்த சூழல் அப்படி.

அப்படி இருந்தவளை எப்படி மாற்றியிருந்தான்..?
நினைக்கும் போதும் இன்னுமே அதிர்வு தான் மனதில்.

"எனக்கு இந்த சிடுசிடு கேரக்டர் எல்லாம் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல..நல்ல அன்பா கெயாரிங்கா இருக்கனும்.." முன்பெல்லாம் அவள் சொல்லிக் கொண்டு திரிந்தது இந்த வசனங்களைத் தான் என்றால் கல்லெடுத்தாவது அடித்து விடுவார்கள்,
கேட்போர்.

அவளின் வரையறைகளுக்கு வெளியே நின்று அவள் கீறிய வட்டத்தை அவள் கைகலாளே அழிக்க வைத்தவன் அல்லவா அவன்..?

நேரத்தைப் பார்த்திட பதினொரு மணி எனக்காட்டிட இனியும் படுத்துக் கிடந்தால் உறக்கம் எட்டும் என்கின்ற நம்பிக்கை கொஞ்சமேனும் இன்றிப் போக சத்தமின்றி கதவைத் திறந்து கொண்டு மொட்டை மாடிக்கு நகர்ந்தவளின் துப்பட்டா குளிருக்கு தோதாய் சுற்றப்பட்டிருக்க கொட்டாவி விட்ட படி வானை இலக்கின்றி வெறித்தவளுக்கு இதழோரம் ஒரு விரக்திப் புன்னகை.

அவர்களின் வீட்டின் முன்னே இருக்கும் அந்த பாதையின் வழியே பெரியளவு வாகனங்கள் செல்லாத போதும் இரவு நேரங்களின் விதிவிலக்காய் சிலது நகர்வதும் உண்டு.

ஏனோ வாகன சத்தத்தில் வீதியை எட்டிப் பார்த்தவளுக்கு அங்கு ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்த வண்டி கொஞ்சம் சந்தேகத்தை கிளப்பிட்டாலும் கீழிறங்கிச் சென்றிட பயம் தான்.

அவளின் சந்தேகம் பொய்யென்பது போல அடுத்த நொடியே அந்த வண்டி கிளம்பியிருக்க அவளிடம் நிம்மதிப் புன்னகையொன்று.

விளக்கு வெளிச்சத்தில் பெரிதாக தெளிவாக தெரியவில்லை என்றாலும் எதிர் வீட்டு மொட்டை மாடியில் நிற்கும் நிழலுருவத்தை கண்டவளுக்கு சிறு புன்னகை இதழ்களில்.

தொடரும்.

🖋️அதி...!
2023.07.31
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Ada dharshi deva patha en intha payam karthika unnoda aasai konjam ne yosikalam Deva solluratha vachu avaluku Arjun na romba pidikum
 
Top