• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அணு - 7

Member
Messages
64
Reaction score
2
Points
8
"என்ன இது D4 என திடீர்ன்னு ஸ்கிரீன்ல காட்டுது.... வித்தியாசமா இருக்கே...." என ஏர்போர்ட்டில் உள்ள திரையை பார்த்து திலீப் கேட்க,
"அதுதான் சார் தெரியல....வாங்க சார் நாம போய் ஆபரேட்டர் ரூம்ல போய் கேட்டு பார்ப்போம்...."என ரங்கா கூற,
திலீப் மற்றும் அவருடன் வந்த மற்ற போலீஸ் அதிகாரிகள் ஆபரேட்டர் ரூமிற்கு செல்கிறார்கள்.
"ஹலோ....நாங்க போலீஸ்...."என தனது id card காட்டுகிறார் கோகுல்.
"சொல்லுங்க சார்...என்ன விஷயம்..?"என கேட்கிறார் ஆபரேட்டர்.
"கொஞ்ச நேரம் முன்னாடி ஏர்போர்ட் ஸ்கிரீன்ல D4 ன்னு வந்துச்சு....அது எதுக்கு.... ஏன் வந்துச்சு....?"என கேட்கிறார் திலீப்.
"சார் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை....எனக்கு மேல இருந்து ஆர்டர் வந்துச்சு சார்... கன்ட்ரோல் ரூம்ல இருந்து சொன்னாங்க...ஒரு அஞ்சு செகண்ட்க்கு D4 ன்னு போட சொன்னாங்க....அதுனால போட்டேன்....அதுனாலதான் ஒவ்வொரு ஸ்கிரீனா போட்டுட்டு இருக்கேன்....நீங்க போலீஸ்தானே சார்... உங்களுக்குதான் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்ல...."என அந்த ஆபரேட்டர் கூற,
"தெரியும்... கரெக்டா ஸ்கிரீன்ல போட்றியான்னு பார்க்க வந்தேன்..."என திலீப் கூறி வெளியே வருகிறார்.
"நம்ம unofficial ஆ வந்ததுனால தெரியல....இப்போ இந்த கேஸ் எடுத்து இருக்க fbi ஏஜென்ட்ஸ்தான் ஏதோ பிளான் பண்றாங்க போல...."என ரங்கா கூறி கொண்டே ஸ்கிரீனை பார்க்க ஸ்கிரீன் திடீர் என C4 மற்றும் D5 காட்டுகிறது.
"சார் ஒரு வேளை இது செஸ் விளையாட்டா இருக்குமோ..."என குமார் கேட்க,
"செஸ் விளையாட்டா...."என திலீப் கேட்க,
"ஆமா சார்....செஸ்ல இருக்க போர்ட் இடங்கள் இதெல்லாம்....ஒரு வரிசை A ல இருந்து H வரைக்கும் இருக்கும்....இன்னொரு வரிசைல ஒன்னுல இருந்து எட்டு வரைக்கும் இருக்கும்...."என குமார் கூறுகிறார்.
"அப்போ இது செஸ் விளையாட்டா இருந்தா கண்டிப்பா இந்த விளையாட்டோட கடைசி காய்லதான் bomb இருக்கணும்...இது செஸ் விளையாட்டா இருந்தா இப்போ இந்த ஸ்கிரீன்ல காட்டுதுன்னா அப்போ இந்த மொத்த ஏர்போர்ட்டும் ஒரு செஸ் போர்ட் மாதிரிதான் இருக்கணும்...அப்போ இந்த இடத்திலதான் bomb இருக்கு...bomb எடுக்கணும்னா நாம கடைசி காய் வரைக்கும் போகனும்...இது ஒரு வேளை sphinx காட்டுனா நம்ம அவங்களோட சேர்ந்து விளையாண்டு கடைசி காய்க்கு போகனும்...."என திலீப் கூறுகிறார்.
அதே சமயம் ராஜேஷ் ஓடி கொண்டே கேமரா எங்கெல்லாம் இருக்கிறது என பார்த்து கொண்டே ஏர்போர்ட்டில் கூட்டமாக நடந்து போய் கொண்டு இருக்கும் மக்களின் இடையில் புகுந்து அவர்களுடன் கலந்து கேமராவின் பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறான். அங்கே இருந்து தப்பித்து கேமரா அடியில் உள்ள இடத்தில் மறைந்து மறைந்து தப்புகிறான்.
அதை கன்ட்ரோல் ரூமில் இருந்து பார்த்த கிரேஸ், "அவன் எங்கே போனான்...தப்பிச்சிட்டானா...."என யோசித்து விட்டு,
"சரி...அவனோட பழைய footage ல இருக்க அவனோட வீடியோவை அங்கே இருக்க எல்லா guards க்கும் அனுப்புங்க....அதை வச்சு அவனை கண்டுபிடிக்க சொல்லுங்க..."என கிரேஸ் கூற ராஜேஷின் வீடியோ அங்கே உள்ள எல்லா காவலர்கள் போனிற்கும் அனுப்பபடுகிறது.
அதே சமயம் தப்பி சென்ற ராஜேஷ் கழிவறைக்குள் நுழைந்து தனது உடைகளை களைந்து தான் கொண்டு வந்த போலீஸ் உடையை மாட்டி கொண்டு ஒட்டு மீசை வைத்து கொண்டு அங்கே இருந்து வெளியே வருகிறான்.
வெளியே வந்து மற்ற காவலர்களுடன் நின்று கொண்டு அங்கு நடப்பதை பார்த்து கொண்டே தனது கை பேசியை எடுத்து சந்தீப்பிற்கு அழைக்கிறான்.
"நாம் safe ஆயிட்டேன்....நீ தப்பிச்சிட்டயா...இப்போ என்ன பண்றது...."என கேட்க,
"கயலை கூப்பிடு... கயலை நான் சொல்ற மாதிரி பண்ண சொல்லு....அவளை ரெஸ்ட் ரூமுக்கு போக சொல்லு....அங்கே இருந்து அவங்களை திசை திருப்ப சொல்லு....அவகிட்ட நா வரும்போது ஒரு பை குடுத்தேன்....அந்த பைல புகை குண்டு இருக்கு....அதை fire பண்ண சொல்லு..."என சந்தீப் கூறி அழைப்பை துண்டிக்கிறான்.
ராஜேஷ் தனது அலைபேசியில் கயலை அழைக்க, "ஹலோ..."என கயல் பதில் அளிக்கிறாள்.
"ஒரு உதவி கயல்....நீ கேட்டதானே உதவி பண்றேன்னு....இப்போ பண்ணு..."
"என்ன உதவி..."
"பெருசா ஒண்ணும் இல்லை....நீ உடனே ரெஸ்ட் ரூம் போ..."
"இரு..."என கூறி கொண்டே கயல் கழிவறைக்குள் செல்ல,
"இப்போ காலைல சந்தீப் உன்கிட்ட குடுத்த பையை திறந்து பாரு...."என கூற, பையை திறந்த கயல் உள்ளே இருப்பதை பார்த்து,
"என்ன இது ஏதோ பிளாஸ்டிக் பாக்ஸ் மாதிரி இருக்கு..."
"அது பிளாஸ்டிக் பாக்ஸ் இல்லை அது வெடிகுண்டு அதை நீ இப்போ வைக்கணும்னு...."என கூற,
"என்ன சொல்றே அதெல்லாம் முடியாது...."
"பயப்படாத...அது வெடிக்கும் வெடிகுண்டு இல்லை....அது புகை குண்டுதான்.... வெடிச்சா உள்ள இருந்து புகை மட்டும்தான் வரும்... யாருக்கும் அடி கூட படாது...உன்னால முடியும் கயல் பண்ணு..."என கூற,
வேறு வழியின்றி கயல் தன் கையில் இருக்கும் புகை குண்டை எடுத்து திறந்து வெளியே எரிகிறாள்.
புகைகுண்டை வெளியே போட்டு விட்டு அங்கே இருந்து கயல் ஓடுகிறாள்.
அதே சமயம் திரையில் எல்லா இடத்தை பார்த்து கொண்டு இருந்த கிரேஸ் திரையில் புகை வருவதை பார்க்கிறாள்.
"என்ன இது புகை வருது...இல்லை கிளிட்ச் ஆகுதா...."என கிரேஸ் கேட்க,
"இல்லை...அது கிலிட்ச் இல்லை ... உண்மையில் புகை வருது..."என எரிக் கூறுகிறார்.
அதே சமயம் சந்தீப் அந்த புகை மூட்டத்தை கிரேஸ் பார்க்கும் பொழுது அவள் கேமராவில் இருந்து மறைந்து தப்பித்து அருகில் உள்ள ரெகார்ட் அறைக்குள் நுழைகிறான்.
உள்ளே நுழைந்த சந்தீப், "சின்ன வயசுல அகாடெமில இருந்தே எப்போவும் இவ கடைசி காய் G5 ல வைப்பா.... இப்போதும் அப்படி வச்சா ஏர்போர்ட் G5 இந்த ரூம் தான்..."என யோசித்து கொண்டே அந்த அறையில் வெடுகுண்டை தேடி கொண்டு இருக்கிறான் சந்தீப்.
ஆனால் தேடியும் அங்கு எந்த வெடுகுண்டும் கிடைக்காததால் "இப்போ அவளோட pattern மாத்திட்டா போல"என யோசித்து கொண்டே தான் கொண்டு வந்த மற்றொரு செல் போனை அங்கு வைத்து "on"என திரையில் காட்ட அதை தொடுகிறான் சந்தீப்.
அதே சமயம் கேமரா திரையை பார்த்து கொண்டு இருந்த கிரேஸ் அந்த திரையில் பதற்றத்துடன் அங்கே எதிரில் வரும் நபர்கள் மேல் மோதி கொண்டு பயத்துடன் நடந்து செல்லும் கயலை பார்க்கிறாள்.
உடனே தனது மொபைல் ஃபோன் எடுத்து எரிக்கிற்கு கால் செய்து,"அந்த ஆபரேட்டர் ரூம் பக்கத்தில் ஒரு பெண் பயத்தில் எல்லாரையும் இடித்து விட்டு போய்ட்டு இருக்கா....போய் அவளை என்னன்னு பாருங்க....அவளை பார்த்தால் ஏதோ சரிபடல...சந்தேகமா இருக்கு...."என கூற,
"சரிங்க மேம்..."என கூறி எரிக் அழைப்பை துண்டித்தார்.
மீண்டும் திரையை கிரேஸ் பார்த்து கொன்டு இருக்க அந்த கேமரா ஒன்றில் நேரம் தவறாக ஓடுவதை கவனிக்கிறாள்.
"இது என்ன கேமரா....டைம் தப்பா ஓடுது....இப்போ 9: 23 ஆனால் ஸ்கிரீன்ல 9 : 18 காட்டுது....எப்படி தப்பா ஆச்சு...இது ஒரு வேளை ஏற்கனவே ரெக்கார்டிங் பண்ணுன விடியோவா...."என யோசித்து கொண்டே வேகமாக கிரேஸ் ரெக்கார்டிங் அறைக்குள் நுழைந்து பார்க்க அங்கே சந்திப்பின் மொபைல் இருப்பதை கவனிக்கிறாள்.
"ஹேக் பண்ணி பழைய ரெக்கார்டிங் போட்டுட்டாங்க....இதுக்குதான் அந்த புகையை போட்டு கவனத்தை திசை திருப்புனாங்களா..."என யோசித்து கொண்டே கிரேஸ் திரும்பி மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு செல்ல திரும்ப பின்னால் இருந்து அந்த அறையில் ஒளிந்து இருந்த சந்தீப் கை துப்பாக்கி வைத்து நின்று கொண்டு,
"அசையாத...அசைஞ்சா மூளை சிதறிடும்..."
"ஓ சந்தீப்....நீ வெளிய போய்ட்டேண்ணு நினைச்சேன்...."என கிரேஸ் சிரிக்க,
"நம்ம அகாடெமில இருந்தப்போ நீதான் எப்போவும் முதலா இருப்பே....எல்லாத்துலயும்...ஆனால் நீ இன்னும் ஒழுங்கா செஸ் விளையாட்டு விளையாட கத்துக்கல... ஏன்னா செஸ் போர்ட் நல்லா விளையாண்டா தெரிஞ்சிருக்கும் எது கடைசி காய்ன்னு..." என சந்தீப் கூற,
"அப்போ முடிஞ்சா கண்டுபிடி....என்ன பண்ணிட்டு இருக்க இங்கே....ஒழுங்கா விளையாடு போ..."என கிரேஸ் கூற,
"ஜஸ்ட் உனக்கு ஹாய் சொல்ல வந்தேன்...."என சந்தீப் கூறுகிறான்.
அதே சமயம் அங்கு வந்த காவலர் தனது துப்பாக்கி வைத்து சந்திப்பின் பக்கத்தில் சுட சந்தீப் அங்கே இருந்து ஓடி இருட்டில் மறைந்து தப்பிக்கிறான்.
அதே சமயம் கயல் நடந்து போக அவள் முதுகில் தனது துப்பாக்கி வைத்து நேராக நிற்கிறார் எரிக்.
"நான் சொல்றதை செய்....இப்போ என்னோட வா...."என எரிக் கூற, வேறு வழியின்றி கயல் எரிக் உடன் நடந்து செல்கிறாள்.
திரையில் இருக்கும் எண்களை பார்த்து கொண்டே வேகமாக திலீப் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் ஓட, எதிரில் சந்தீப் ஓடி வந்து கொண்டு இருக்கிறான். இருவரும் கடந்து செல்ல திலீப் நின்று திரும்பி சந்தீப்பை பார்க்கிறார்.
"சார் வாங்க நேரம் இல்லை..."என கோகுல் கூற அங்கே இருந்து மீண்டும் ஓடுகிறார் திலீப்.
போலீஸ் மாறுவேடத்தில் இருந்த ராஜேஷ் கடைசி காய் இருக்கும் கட்டத்திற்கு வர அங்கு சந்தீப் வந்தடைகிறான்.
"இங்க ஒரு இடத்துலயும் ஒரு வெடிகுண்டும் இல்லை....நான் எல்லா இடங்களிலும் பார்த்துட்டேன்..."என ராஜேஷ் கூற,
"என்ன சொல்றே...அப்போ அந்த வெடிகுண்டு எங்க இருக்கு..."என சந்தீப் கேட்க, ராஜேஷின் மொபைல் போன் அலறுவதை கவனிக்கிறான் ராஜேஷ். எடுத்து கயலிடம் இருந்து வருவதை பார்த்து கொண்டே "ஹலோ..."என பதில் அளிக்கிறான்.
"நான் மூவிங் பிளான் ல இருக்கேன்...என்னை ஒருத்தர் அடைச்சு வச்சிருக்காரு...என் பக்கத்துலதான் bomb இருக்கு..."என கயல் கூற,
"நீ பயப்படாத நாங்க பாத்துக்கறோம்...நீ முன்னாடி போய் டோர் ஓபன் பண்ணி பைலட் இருக்காங்களான்னு பாரு...."என ராஜேஷ் கூற கயல் முன்னாடி சென்று பார்த்து,
"இல்லை இங்க பைலட் இல்லை...ஆட்டோ பைலட் மூட்ல ஓடுது...."என கயல் கூற, சந்தீப் திரையில் புறப்பட இருக்கும் விமானங்களை பார்க்கிறான் சந்தீப்.
"ஒரே ஒரு plane மட்டும்தான் கிளம்ப போகுது... மத்தது எல்லாமே கேன்சல் ஆயிருக்கு...இப்போ வேற வழி இல்லை....ஒரே ஒரு ஆள்கிட்ட மட்டும்தான் நம்மளால உதவி கேட்க முடியும்..."என கூறி கொண்டே சந்தீப் தனது கைபேசி எடுத்து அதில் உள்ள எண்களை அழுத்தி அழைக்கிறான்.
"Unknown call"என தனது கைபேசியில் வருவதை கண்ட திலீப் அதை எடுத்து திரையை தேய்த்து "ஹலோ..."என கூறுகிறார்.
"சார்...நாங்க sphinx பேசரோம்... உங்களுக்கு ஒரு தகவல் வச்சு இருக்கோம்... ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கறேன்...இந்த bomb நாங்க வைக்கல....உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க வச்சு இருக்காங்க..."என சந்தீப் கூற,
"அதெல்லாம் எனக்கும் தெரியும்....என்ன தகவல்....அதுவும் இல்லாம நீ சொல்றதை நம்புவேன்னு நினைக்கிறாயா...."என திலீப் கூற,
"நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்....நீங்க நினைச்சா இங்க இருக்க மத்தவங்களை நீங்க காப்பாத்தலாம்... நீங்க போலீஸ்தானே...மக்களை காப்பாத்திறதுக்குதானே இருக்கீங்க...நீங்க பாத்துக்குங்க...உடனே கன்ட்ரோல் ரூம் போங்க..."என கூறி அழைப்பை துண்டிக்க,
திலீப் யோசித்து விட்டு மற்ற காவலர்களை அழைத்து கொண்டு கன்ட்ரோல் அறைக்கு செல்ல அங்கே உள்ள fbi காவலர்கள் இவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள்.
அதேசமயம் ராஜேஷ் மற்றும் சந்தீப் களத்தில் இறங்கி விமானத்தை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறார்கள்.
"அந்த விமானத்தில் இருக்கும் seat covers எல்லாத்தையும் எடுத்து கயிறு மாதிரி கட்டி அதில் இருந்து குதித்து விடு...நாங்க கீழ இருந்து உன்னை பிடிச்சுக்கறோம்...."என ராஜேஷ் கூற, கயலும் அங்கே உள்ள எல்லா seat covers உம் எடுத்து ஒன்றாக கயிறாக மாற்றி கொண்டு இருக்கிறாள்.
அதே சமயம் தடுத்து நிறுத்திய மற்ற காவலர்களை தாண்டி எகிறி குதித்து உள்ளே நுழைந்த திலீப் தனது ரிவோல்வரை எடுத்து அங்கே உள்ள கிரேஸ் மீது வைத்து,
"இப்போ ஓடிக்கிட்டு இருக்க விமானத்தை நிறுத்துங்க... இல்லைன்னா சுற்றுவேன்..."என திலீப் கூற,
"சார்....ஸ்லோ மட்டும்தான் பண்ண முடியும்.... நிறுத்த முடியாது..."என மற்றொரு காவலர் கூற,
"சரி ....ஸ்லோ பண்ணுங்க...."என திலீப் கூற,
அதே சமயம் காவலர் அதன் வேகத்தை குறைக்க அங்கே இருந்து கயல் குதிக்கிறாள். கீழே இருந்த ராஜேஷ் மற்றும் சந்தீப் கயலை பிடித்து கொண்டு அங்கே இருந்து ஓட அவர்கள் சிறிது தூரம் சென்ற பின் அந்த விமானத்தில் உள்ள வெடிகுண்டு வெடித்து சிதறியது.
அங்கே உள்ள கேமரா ஒன்றில் தனது Sphinx முகமூடி அணிந்து முன்னே வந்து ராஜேஷ் மற்றும் சந்தீப் நன்றி சொல்வது போல் கைகளை உயர்த்தி salute செய்ய அதை பார்த்து எரிச்சல் அடைந்த கிரேஸ்,
"என்னோட பிளான்ல எதுக்கு குறுக்க வந்தீங்க..."என திலீப் பார்த்து கேட்க,
பதிலேதுவும் பேசாமல் அங்கே இருந்து வெளியே ஓடி வந்து Sphinx பிடிக்க வேண்டும் என அந்த கேமரா இருக்கும் திசையை நோக்கி ஓடுகிறார் திலீப். முன்னால் இருக்கும் காவலர்கள் திலீப்பை இடம் மறுக்க அதற்குள் அங்கு இருந்து ராஜேஷ் கயல் மற்றும் சந்தீப் தப்பித்து சென்று விடுகின்றனர்.
அப்பொழுது கீழே ஏதோ கிடப்பதை பார்த்த கிரேஸ் அதை எடுத்து பார்த்து சிரிக்கிறாள்.
"மாட்டிகிட்டயா..."என கயல் என பெயர் போடப்பட்டு இருந்த அந்த பள்ளி அடையாள அட்டையை பார்த்து சிரிக்கிறாள் கிரேஸ்.
(தொடரும்.....)
1000186290.jpg

1000186260.jpg
1000186218.jpg
 
Top