• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    பொழுது - 22 💖

    பொழுது – 22 💖 “உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன் காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே!” அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்ட விவேகா, “சுதி, தாலிக் கட்டும்போது போடலாம்னு எடுத்து வச்சேன். எப்படி இருக்கு. அழாக வீடியோ எடுத்து...
  2. Janu Murugan

    பொழுது - 21 💖

    பொழுது – 21 💖 “முறைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம் மேடம்?” வளைத்த உதடுகளைப் பார்த்து புன்னகையுடன் கேட்டவாறே மெதுவாய் அவளது நடைக்கு ஈடு கொடுத்து நடந்தான் நிவின். சுதி பதிலளிக்கவில்லை. வாகனம் வருகிறதா எனப் பார்த்துவிட்டு அவள் சாலையைக் கடக்க செல்ல, “ச்சு... சுதி... ரூல்ஸை ப்ரேக் பண்ண கூடாது, சீப்ரா...
  3. Janu Murugan

    பொழுது - 20 💖

    பொழுது – 20 💖 அக்ஷா கோபமாய் உள்ளே நுழைய, மகேந்திராதான் கூடத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் இவளுக்கு அழுகைப் பொங்கியது. “அட... அக்ஷா... வாம்மா... உள்ள வா. எப்படி இருக்க?” அவர் அக்கறையாகக் கேட்க, “நான் நல்லாவே இல்லை அங்கிள்!” என அவரருகில் சென்று நீள்விருக்கையில் அமர்ந்தவள் தேம்பியழத்...
  4. Janu Murugan

    பொழுது - 19 💖

    பொழுது – 19 💖 சற்றே உடலைத் தளர்த்தி முட்டியிட்டு அமர்ந்திருந்த சுதி தூசிப் படிந்திருக்கும் பொருட்களை எடுத்து துடைத்து தேதிவாரியாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். எல்லா ஞாயிற்றைப் போலவும் அல்லாது அன்றைக்கு வணிக வளாகத்தில் கூட்டம் வெகு குறைவாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர்...
  5. Janu Murugan

    பொழுது - 18 💖

    சாரி... சாரி. சாரி, சொல்லாம கொள்ளாம லீவ் போட்டுட்டேன். பேக் டூ பேக் திருச்செந்தூர் ட்ராவல் பண்ணதுல டயர்டாகிட்டேன் டியர்ஸ். பட் இருந்தாலும் டைப் பண்ணலாம்னு நேத்து உட்கார்ந்தேன். காத்து தான் வந்துச்சு. சீனே வரலை 🤭 அதான் இவ்வளோ லேட்டு. நெக்ஸ்ட் அப்டேட்‌ல மேரேஜ். பத்திரிகை வச்சாச்சு. எல்லாரும்...
  6. Janu Murugan

    பொழுது - 17 💖

    பொழுது – 17 💖 இரண்டு நாட்கள் அமைதியாய் கழிந்தது. நிவின் எந்தவித தொல்லையும் செய்யாது அமைதியாய் இருக்கவும் சுதிக்கு நிம்மதி பிறந்தது. அன்றைக்கு அவள் வேலை முடிந்து வீடு வர, சந்திராவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. என்னவென புரியாது உடை மாற்றி வந்தாள் இவள். அவர் அமைதியாய் அப்பளத்தை தேய்த்துக்...
  7. Janu Murugan

    பொழுது - 16

    பொழுது – 16 💖 “இன்னொரு தோசை சாப்ட்றீயா சுதி?” சந்திரா வினவிக் கொண்டே அவளுடைய தட்டில் தோசையை நிரப்பினார். “இதோட போதும்மா!” என்றவள் உண்டுவிட்டு அனைத்தையும் சரிபார்த்துக் கைப்பையை எடுத்து மாட்டினாள். “சண்டை எதுவும் போடாத சுதி. பொறுமையா அந்தப் பையன்கிட்ட சொல்லிட்டு வா. தேவையில்லாத வம்பு நமக்கு...
  8. Janu Murugan

    பொழுது - 15 💖

    பொழுது – 15 💖 பெண் பார்க்க வருகிறார்கள் என்ற எண்ணம் காலையில் மலர்வைக் கொடுத்திருந்தாலும், இடையில் நிவினின் செய்கையில் சுதியின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. கடமைக்கென தன்னை அலங்கரித்து அமர்ந்திருந்தாள் பெண். “காலைல நல்லாதானே இருந்த சுதி. என்னாச்சு, ஏன் முகம் டல்லா இருக்கு. எதை நினைச்சு...
  9. Janu Murugan

    பொழுது - 14 💖

    பொழுது – 14 💖 ஆறுமணியைக் கடந்தும் சுதிக்கு விழிப்பு வருவேனா என்றது. ஆறு முப்பதுக்கு வைத்திருக்கும் அலறி அதன் வேலையை சரியாய் செய்ய, நேரமானதை உணரந்து திடுக்கென எழுந்தமர்ந்தவள், கண்களை தேய்த்தாள். “சுதி... இன்னைக்கு ஒருநாள் வேலைக்குப் போக வேணாம். நீ லீவ் சொல்லிடு!” சந்திரா அறையை எட்டிப்...
  10. Janu Murugan

    பொழுது - 13 💖

    பொழுது – 13 💖 சுதி அப்போதுதான் உண்டுவிட்டு அசத்திய உடலை படுக்கையில் சாய்த்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. மெதுவாய் கையை நீட்டி தானே அழுத்திவிட்டுக் கொண்டாள். கொஞ்சம் சுகமாய் இருக்க, ஒருபக்கமாய் சரிந்து படுத்தாள். இடுப்பும் வலித்தது. ஓய்வின்றி ஓடுகிறோம் என்று தெரிந்தாலும் எங்கேயும் இளைப்பாற...
  11. Janu Murugan

    பொழுது - 12 💖

    பொழுது – 12 💖 காலையில் எழுந்து வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் சுதிரமாலா. உடலும் மனதும் வெகுவாய் சோர்ந்திருக்க, ஒருநாள் விடுப்பு எடு என மூளை அனத்தியது. அதைப் புறந்தள்ளிவிட்டு கிளம்பினாள். படுத்தே கிடந்தால் இன்னுமே மனம் அதிகமாய் வலிக்கும். அதற்கு வேலைக்கு செல்வதே மேல் என சந்திரா கட்டிக்...
  12. Janu Murugan

    பொழுது - 11 💖

    பொழுது – 11 💖 சுதி அந்தக் காமைக்கலத்தை விழியகற்றாது பார்த்தாள். நேற்று அவள் சமைத்த உணவுதான். வழக்கத்தைவிட காளான் பிரியாணி நன்றாக வந்திருக்கிறது என அவள் நேற்று எண்ணியவை மொத்தமும் வீணாகிப் போயின. நண்பர்களுடன் வெளியே சென்ற நிவின், சுதி மதியம் சமைத்த உணவை உண்ணவில்லை. அதைத் திறந்து கூட அவன்...
  13. Janu Murugan

    பொழுது - 10 💖

    பொழுது – 10 💖 நிவின் சுதியிடம் கோபமாகப் பேசி ஒரு வாரம் முடிவடைந்திருந்தது. மறுநாள் வேலைக்கு வந்தவள் ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை. வந்தாள், அவளுக்குரிய வேலையை மட்டும் நேர்த்தியாய் செய்து முடித்தாள். நிவினும் சுதியிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. அவளைப் பார்த்ததும் இவன் தலையை மெதுவாக அசைக்க...
  14. Janu Murugan

    பொழுது - 9 💖

    பொழுது – 9 💖 சோர்ந்து களைத்த முகத்துடன் உள்ளே நுழையும் சுதியைத்தான் சந்திரா நிமிர்ந்து பார்த்தார். எப்போதும் அவள் உள்ளே நுழையும்போது அவரது உதடுகள் மட்டுமே பதிலளிக்கும். மற்றபடி குனிந்து அப்பளத்தை தேய்த்துக் கொண்டிருப்பார். இப்போது நிமிர்ந்து மகளைக் கவலையாய் நோக்கினார் பெண்மணி. இவளுக்கு அந்தப்...
  15. Janu Murugan

    பொழுது - 8 💖

    பொழுது – 8 💖 கணினியை நீண்ட நேரம் உற்றுப் பார்த்ததில் நிவினின் விழிகள் பூத்துப் போயிருந்தன. ஒரு முறை சிமிட்டி அதற்கு ஈரபதத்தைக் கொடுத்தவன், மெதுவாய் ஒற்றைக் கையை மட்டும் நெட்டி முறித்தான். பழக்க தோஷத்தில் மற்றொரு கையையும் உயர்த்தச் சென்றவன், நொடியில் சுதாரித்து கீழே இறக்கியிருந்தான்...
  16. Janu Murugan

    பொழுது - 7 💖

    பொழுது – 7 💖 சுதிரமாலா அந்த வார ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் ஓரளவிற்கு உடலையும் மனதையும் தேற்றினாள். நீண்ட நாட்கள் கழித்து எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூக்கினாள். பிள்ளைகளுடன் அளவளாவினாள். சந்திரா கையால் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாய் உண்டாள். மனம் சமன்பட்டிருந்தது. இப்படித்தான்...
  17. Janu Murugan

    பொழுது - 6 💖

    பொழுது – 6 💖 சுதியும் நிவினும் சந்தித்து ஓரிரு வாரங்கள் கடந்திருந்தன. இடையே அவன் வந்திருந்தாலும் முதல் தளத்திலே அவனுக்கு வேண்டிய பொருட்கள் கிடைத்துவிட்டன. உள்ளே நுழைந்ததும் அழையா விருந்தாளியாக சுதி நினைவை நிறைத்தாலும், எந்த மெனக்கெடலும் இவன் மேற்கொள்ளவில்லை. மெதுவாய் பார்வையை உயர்த்தி அவள்...
  18. Janu Murugan

    பொழுது - 5 💖

    பொழுது – 5 💖 சில நொடிகள் நிவினின் பார்வை சுதி பின்னே படர, அவளுக்கு அது அசௌகரியத்தை கொடுத்திருக்க வேண்டும். அவளது உடல் மொழியிலே கண்டு கொண்டவன், தன்னையே நிந்தித்துவிட்டு அலைபேசியை எடுத்துக் காதுக்கு கொடுத்தான். பாலா அழைப்பை ஏற்க, “எங்க இருக்க டா?” எனக் கேட்டான் இவன். “இங்க பாண்டி பஜார்...
  19. Janu Murugan

    பொழுது - 4 💖

    பொழுது – 4 💖 ஒருவாரம் கடந்திருந்தது. நிவினுக்கு உடல்நிலை தேறியிருக்க, மருத்துவர் சில பல அறிவுரைகளைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஒன்பது நாட்கள் கழித்து தையல் பிரித்து கட்டை மாற்ற வேண்டும், மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நிவின் வீட்டிற்கு அழைத்துச்...
  20. Janu Murugan

    பொழுது - 3 💖

    பொழுது – 3 💖 மெதுவாய் ஆதவன் எட்டிப் பார்க்க, பொழுது புலர்ந்தது. ஆங்காங்கு வெளிச்சம் தென்ப்பட்டாலும் இன்னுமே முழுதாய் விடியவில்லை. நேரம் ஆறைத் தொட்டும் இருள் சூழ்ந்திருக்க, தளர்ந்திருந்த போர்வையைக் கைகளால் துழாவி எடுத்து கழுத்துவரைப் போர்த்திய சுதிரமாலாவிற்கு லேசாய் விழிப்பு தட்டியது என்னவோ...
Top