• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,363
Reaction score
4,166
Points
113
நேரம் – 56 💜 (இறுதி அத்தியாயம்)

எப்போதும் வேலை முடிந்ததும் கடைமைக்கு சோர்வுடன் வீட்டிற்கு வரும் பரிதி இன்றைக்கு உற்சாகத்துடன் முதல் ஆளாக அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தான். அவசர அவசரமாக தொடர்வண்டியிலேறி வீட்டை அடைந்தான். வீட்டிற்கு சென்றதும் தன்னை வரவேற்கும் வாணியின் முகத்தைப் பார்ப்பதிற்காகவே விரைந்து வந்தான்.

அவனை ஏமாற்றாமல் மனைவி கூடத்தில்தான் அமர்ந்திருந்தாள். ஒரு கையைத் தலைக்கும் நீள்விருக்கைக்கும் இடையே கொடுத்து மற்றொரு கரத்தில் ஒரு ஆங்கில நாவலை வைத்திருந்தாள். புதிதாய் ஒரு மூக்கு கண்ணாடி வேறு அவள் முகத்தில் அறிவுக் களையை கூட்டியது போல நீட்டிக் கொண்டிருந்தது. இவன் அரவம் உணர்ந்ததும் நிமிர்ந்தவளின் உதடுகளில் மெல்ல முறுவல் படர, கண்களாலே அவனை வரவேற்றாள். பரிதிக்கு பொத்தான் போட்டது போல முகம் பளிச்சென மின்னியது.

“ஃபைவ் மினிட்ஸ் வானு... ப்ரெஷாகிட்டு வரேன்!” என அவன் அகல, இவள் எழுந்து சென்று தேநீரோடு நெய் பனியாரத்தையும் சுட்டு வைத்தாள்.

கமகமவனெ நாசியை நிரடிய தேநீர் அவன் பசியை மெல்ல கிளப்பிற்று. அத்தோடு வேறு ஏதோ வாசனை வேறு. சரியாய் அவனால் இனம் காண முடியாமல், சமையலறைக்குள் சென்று அவள் பின்னே எட்டிப் பார்த்தான். அவனுக்குப் பிடித்த கருப்பட்டி நெய் பனியாரம். பார்த்ததும் மனதும் வயிறும் நிறைந்து போனது.

“வாவ், வானு எனக்காகவா பனியாரம்?” எனக் கேட்டு ஆர்வத்துடன் ஒன்றை எடுத்து வாயிலிட்டவன், “ஆ...” என்ற அலறலோடு அதை துப்பினான். அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கியதால், சூட்டை தாங்காது அவன் உதடு, நாக்கு சிவந்தன.

“ப்ம்ச்... என்ன அவசரம் உனக்கு? இப்போதான் சுட்டு வச்சேன்!” கணவனைக் கடிந்த வாணி, குளிர்ந்த நீரை அவனுக்குப் புகட்டினாள்‌. இருந்தும் அவனுக்கு எரிச்சல் அடங்கவில்லை.

“சதிகாரி... சூடா இருக்குன்னு சொல்றதுக்கு என்ன? வயெல்லாம் பொத்துப் போச்சு எனக்கு!” என எரிச்சல் தாளமாட்டாமல் உளறிக் கொட்டினான்.

“கொஞ்ச நேரத்துல சரியாகிடும் பரிதி. ஐஸ் க்யூப் வச்சு விடவா?” என கவலையோடு கேட்டாள் வாணி.

“ஒன்னும் வேணாம்... பழைய கோபத்தை எதாவது மனசுல வச்சு பழி வாங்குறீயா வானு? நான் அவ்வளோ எல்லாம் வொர்த் இல்ல டீ. பார்க்கத்தான் டெரர். ஆனால் உண்மையிலயே டம்மிதான்!” வேறு என்னவோ அவன் புலம்ப செல்ல, மனைவி அவன் பேச்சை தடை செய்திருந்தாள். அவளது செயலில் பரிதியிடம் சின்ன திகைப்பு. பின்னர் அவளிடையில் கைக்கோர்த்து இழுத்தணைத்து அரைகுறையாக முத்தமிட்டவளுக்கு, முத்தப் பாடம் சொல்லிக் கொடுத்தான். நிமிடங்கள் கடந்து மீண்டனர் இருவரும். வாணி அவன் முகம் காண கூச்சப்பட்டு திரும்பிக் கொள்ள, இவன் அவளைப் பின்னோடு அணைத்தான்.

பின்னர் அவள் கழுத்தில் மென்முத்தமிட்டு, “எரிச்சல் போயே போச்சு வானு!” என்றான் கிறங்கிய குரலில். அவளுக்கு சிரிப்பும் வெட்கமும் சேர்ந்தே வந்தது.

உதட்டைக் கடித்து அதை மென்றவள், “போய் ஹால்ல உட்காரு. நான் எடுத்துட்டு வர்றேன்!” என அவனை அனுப்பிவிட்டு, அடுப்பிலிருந்த பனியாரம் வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுத்துச் சென்றாள்.

அவள்கொண்டு வந்த கோப்பையை பரிதி எடுக்கச் செல்ல, “வெயிட்! வெயிட். சூடா இருக்கு டீ. அப்புறம் வாய் எரியும் உனக்கு!” என்றவள், அதை குடிக்கும் பதத்திற்கு பொறுமையாக ஆற்ற, பரிதி கையைக் கட்டி சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான்.‌ சிறு வயதில் சிந்தாமணி அவனுக்கு இப்படித்தான் சூடான தேநீரை ஆற்றித் தருவார். அவர் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. இப்போதும் தாய் உணவு தருவாள் எனக் காத்திருக்கும் குழந்தையைப் போலொரு ஆர்வம் அவனிடம், தாயைப் போல ஆதுரம் அவளிடம். மனைவியின் அருகாமையை ஒவ்வொரு நொடியும் ரசித்து தன்னுள் நிரப்பினான் பரிதி.

“இப்போ குடி...” என கோப்பையை அவனிடம் நீட்டியவள், பனியாரத்தை ஒரு தட்டில் கொட்டி, சூடு குறைந்ததை இரண்டிரண்டாகப் பிரித்து வைத்தாள்‌.‌ பரிதி அவள் செய்கையில் அன்பாக மனைவியைப் பார்த்தான். தன் மீதான அவளின் பிரியத்தின் வெளிப்பாடு இப்படி சின்ன சின்ன செய்கையில் வெளிப்படும்போது ஒரு மாதிரி மனம் இதமாக உணர்ந்தது. தன்முனைப்பையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு அவள் காலில் விழுந்து மீண்டும் தன்னை ஏற்றுக்கொள்ள உந்தியது இந்த தன்னலமில்லாத அன்பிற்காகத்தானே? இப்போது அதை மிச்சம் சொச்சமில்லாமல் சுகமாக அனுபவித்தான்.

“இந்தா... இப்போ சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!” என்றவளின் வாயில் ஒரு பனியாரத்தை அடைத்தான் பரிதி. அவள் அவனை முறைத்துக்கொண்டே அதை மென்றாள். சின்ன சிரிப்புடன் தானும் உண்ட பரிதி, எழும்போது அவள் நெற்றியோரம் முத்தமிட்டான். வாணி தலையை உயர்த்தி கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள்.

“பனியாரத்துக்கு டீ!” என கேலியுடன் அகன்றவனின் முதுகை இவளின் கோபப்பார்வை துளைத்தது. சிரிப்புடன் அவளை இடித்துக்கொண்டு வந்து அமர்ந்தவன், அவள் மீது சாயப் போக, அவனை தள்ளிவிட்டாள் இவள்.

“என்ன டீ?” எனக் கேட்டு தன் அணைப்பில் அவளைக்கொண்டு வந்தான். மென்மையாய் அவனை முறைத்தவாறே சாய்ந்தமர்ந்தாள்.

“அண்ணே... வேலைவிட்டு வந்துட்டீயா? அம்மா உன்னையும் அண்ணியையும் வீடியோ கால்ல பார்க்கணும்னு சொல்லுச்சு!” கீர்த்தனா குரல் வழி செய்தியை இவனுக்குத் தட்டிவிட்டாள். பரிதி உடனே அவளுக்கு காணொளி அழைப்பை விடுத்தான். வாணி அவனிடமிருந்து தள்ளியமர்ந்தாள். பெரியவர்கள் பேசி முடித்து சின்னவர்களும் பேசினர்.

அழைப்பைத் துண்டிக்கும் முன்னே சிந்தாமணி என்ன நினைத்தாரோ, “வாணி... நீயே உன்னையும் அவனையும் சுத்திப் போட்ரு. எங்கண்ணே பட்டிருக்கும்!” என்றார் அவர்கள் மலர்ந்த முகத்தைப் பார்த்து கணித்தவராக. இவள் சங்கடத்துடன் தலையசைத்தாள்.

“வானு... எனக்கு வயிறு ஃபுல்லாருக்கு. சோ, நைட் டிபன் வேணாம்!” என அறிவித்தவனைக் கேள்வியாகப்‌ பார்த்தாள் அவள்.

“உனக்குப் பசிக்குதா என்ன?” அவளைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கேட்டான். அவளுக்கும் பெரிதாக பசிக்கவில்லை. அதனாலே இல்லையென்பதாக தலையை அசைத்தாள்.

“அப்போ வா... ரூமுக்குள்ளே போகலாம்!” எனக் கையைப் பிடித்தவனைப் பார்த்தவள், “பரிதி...” என்றாள் கண்டிப்போடு.

“ஏய்... சீ... அதில்ல டீ. நீ வா முதல்ல!” என அவள் கையைப் பிடித்திழுத்துச் சென்றவன், நிலை பேழையிலிருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இது... முன்னாடியே உனக்காக வாங்கி வச்சேன் வானு. ஆனால் கொடுக்க முடியலை. இப்படி நீயும் நானும் கம்பர்டபிளா பழகுனத்துக்குப் பிறகு கொடுக்கலாம்னு நினைச்சு வச்சிருந்தேன். இப்போ எனக்காக இதைப் போட்டு காட்டு!” என்றவனை சந்தேகமாகப் பார்த்து அந்தப் பையைப் பிரித்த வாணியின் முகம் அஷ்டக்கோணலானது.

“சீ... என்ன ட்ரெஸ்டா இது? நான் போட மாட்டேன், போ...” அவன் முகத்திலே அந்த உடையைத் தூக்கியெறிந்து முறைத்தாள்.

“ஏய் வானு.‌‌.. ப்ளீஸ்..‌ ப்ளீஸ்‌.‌ என் முன்னாடி மட்டும்தானே? போட்டு காட்டு டீ” என இறைஞ்சினான். அவள் முடியாது என பார்வையாலே மறுத்தாள்.

“வானு!” பாவமாய் அவன் இழுத்தான்.

“இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸாடா?” அவளின் மறுப்பு இப்போது மெல்ல பலகீனமடைந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கெஞ்சி அவளைக் குளியலறைக்குள் அனுப்பினான். வாணி அந்த உடையை அணிந்துவிட்டு குளியலறைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். வலை வகையிலான துணி அது. தொடைக்கு மேலே உயர்ந்திருந்ததை முடிந்தளவு முட்டி வரை இழுத்துவிட்டாள். கையில்லாமல் மெல்லிய கயிறு கழுத்தோடு உடையை இறுக்கிப் பிடித்தது.

“பரிதி... கண்டிப்பா வரணுமா நான்?” கதவைப் பாதியாகத் திறந்து எட்டிப் பார்த்தாள். படக்கென உள்ளே நுழைந்தவன், கண்களில் அவள் மீதான மயக்கம் படர்ந்தது. சுருட்டை முடி முதல் வெண்பாதம் வரை அவன் விழிகள் ரசனையாய் அவளை வருடின.

“வாவ்! என்ன டீ இவ்வளோ அழகா இருக்க!” என்றான் பார்வையாலே கொஞ்சம் கொஞ்சமாக அவளை மென்று விழுங்கியபடியே‌.

அதில் முகம் சிவந்தவள், “பார்த்துட்டீயா? போதுமா? நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன். வெளியே போ...” என அவனைத் துரத்த முயன்றாள்.

“நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணவாடி இவ்வளோ நேரம் கெஞ்சுனேன் நான்?” என விஷமத்தோடு கேட்டவன், மெலிதாய் அவள் கைகளை சுண்டியிழுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“பரிதி!” என அவள் சிணுங்கல் எல்லாம் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. நாகரீகம் மறந்து மனைவியைக் காதல் செய்தான். அவள் வெட்கம், கூச்சம் அனைத்தையும் தயக்கமில்லாமல் கடந்து தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டான். அவளை முழுவதுமாக ஆராதித்து, இருவருக்குமே உடல் அலண்ட பின்னரே விட்டான்.

தன்னருகே வரும்போது கணவன் கண்களில் தெரிந்த மயக்கத்தில் இவளுக்கு சகலமும் மறந்து போனது. அவன் பிரிந்ததும்தான் சுற்றுப்புறம் உறைத்தது. அவளது ஆற்றலை மொத்தமாக வாங்கியவன், சுகமாகத் தூங்க, இவளுக்கு உறக்கமே வரவில்லை.

சிறிது நேரம் படுத்திருந்தாள். பின்னர் கழிவறை சென்று வந்தவளுக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது. நேற்றைக்கு அவர்கள் வாங்கி வந்த உருளைக்கிழங்கு வறுவல் கண்ணில் தென்பட்டதும், அதன் முனையை மெல்லியதாக கீறிவிட்டு, ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக எடுத்து வந்து தொலைக்காட்சி முன்னே அமர்ந்தாள்.

பரிதி அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முயன்றான். அருகில் வாணி இல்லையென்றதும் கண்களைத் திறக்காமல் மெதுவாய் கைகளைத் தடவி அவளிருப்பை உணர முயன்றான். ஆனால் அவள் இல்லாது போனதில் எரிந்தக் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டே எழுந்து வந்தான். வெளியே கூடத்தில் அமர்ந்து காலாட்டிக் கொண்டே உருளைக்கிழங்கு வறுவலை மென்று கொண்டிருந்தாள் வாணி. அவளைப் பார்த்தவனுக்கு சின்னதாய் சிரிப்பு வந்தது. அவள் பார்வை எங்கோ மையம் கொண்டிருக்க, இவனும் திரும்பி பார்த்தான்.

ஏதோ ஒரு ஆங்கில படத்தில் நாயகனும் நாயகியும் ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அதைத்தான் இவள் விழியகலாமல் பார்த்திருந்தாள். கண்களைத் தேய்த்துவிட்டு மீண்டும் உற்றுப் பார்த்தவனுக்கு தூக்கம் எங்கோ ஓடியிருந்தது. இப்போது அவன் மீசைக்கு கீழே தாராளமாக சிரிப்பு முளைத்தது.

“அடிப்பாவி! பிட்டுப் படம் பார்க்குறீயா?” அவ்வளவு நேரம் நிசப்தமாக இருந்த அறையில் படக்கென அவன் குரல் கேட்டு அதிர்ந்து திரும்பிய வாணி, அவன் பேச்சில் முகம் சிவந்து, உடனே தொலைக்காட்சியை அணைத்துவிட்டு கால்களை சம்மணம் போட்டு அமர்ந்தாள்.

“வானு!” அவன் கேலியாக அழைக்க, இவள் உள்ளங்கையால் முகம், கண்களை மறைத்தாள். சும்மாவே அவன் கேலி செய்வான். இதில் இவள் முத்தக் காட்சியை ஆவென பார்த்ததைக் கண்டு என்ன சொல்வானோ என மனம் சிணுங்கிற்று.

“என்ன டீ பண்ற? பசிக்குதுன்னு சிப்ஸை கொறிக்கிற. இதென்ன சைட்டிஷ் பிட்டு படமா!” அடக்க முயன்றும் அவனுக்கு சிரிப்பு வந்தது‌.

அவனை நேராகப் பார்க்காத வாணி முகத்தைச் சுருக்கி, “அதொன்னும் பிட்டு படமில்ல. ஜஸ்ட் கிஸ்ஸிங் சீன்!” என்றாள் ரோஷமாய்.

“சரி... இருந்துட்டுப் போகட்டும். அதை ஏன் டீ இப்படி தனியா இந்நேரத்துல உக்கார்ந்து பார்க்குற?” என அவளை ஒட்டி உரசி அமர்ந்தான் பரிதி. அவன் சிரிக்கிறான் என குலுங்கிய உடல் உணர்த்திற்று. முசுட்டு முகத்துடன் தள்ளியமர்ந்தாள் வாணி.

அவள் பதிலளிக்கவில்லை என்பதால், “வானு...” என அவள் நாடி பிடித்து தன் முகத்தைப் பார்க்க செய்தான்.

“என்ன?” உர்ரென கேட்டாள்.

“சரி சொல்லு... எதுக்கு அந்த கிஸ்ஸிங் சீனை பட்டிக் காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்குற மாதிரி பார்த்த?” உதட்டைக் கடித்து சிரிப்பை விழுங்கியபடி அவன் கேட்க, வெடுக்கென தன் நாடியிலிருந்த அவன் கையைத் தட்டிவிட்டாள் மனைவி.

“சரி.. சரி. நான் சிரிக்கலை!” அவன் ஒற்றைக் கரத்தால் தன் வாயை மூடினான்.

அவனை முறைத்த வாணி, “ப்ம்ச்... அது...” கீழுதட்டைக் கடித்து தயங்கியவள், “எனக்கு எப்படி பெர்ஃபெக்டா கிஸ் பண்ணணுன்னு தெரியலை பரிதி. ஈவ்னிங் உன்னைக் கிஸ் பண்ணும்போது சொதப்பிட்டேன்ல. அதான் ப்ராப்பரா கிஸ் பண்றது எப்படின்னு கத்துக்கலாம்னு!” என இழுத்தவள், கூச்சத்துடன் அவனைப் பார்த்தாள். பரிதிக்கு முகம் முழுவதும் மலர்ந்தது.

“அதென்ன பெர்ஃபெக்டா கிஸ் பண்றது? இதுல கூட உனக்கு பெர்ஃபெக்ஷன் வேணுமா என் அருமை பொண்டாட்டியே!” என அவளை இழுத்து தோளில் கைப்போட்டவன், “புருஷன் நான்‌ இருக்கேன்ல‌. நீ ஏன்டி வீடியோ பார்த்துக் கத்துக்கணும். லைவா நானே சொல்லித் தரேன்!” என அவள் முகத்தை தன்னருகே கொண்டு வந்தான். வாணி கொஞ்சம் வெட்கமும் சிரிப்புமுமாக அவனைப் பார்த்தாள்.

“நானே பண்றேன் பரிதி!” சின்ன குரலில் அவள் கூறியதும், “ரைட்.. ரைட். ஐ யம் ரெடி!” என அவன் உற்சாகத்துடன் கண்ணை சிமிட்டினான். அவன் தாடியடர்ந்தக் கன்னத்தைக் கைகளில் தாங்கியவள்,
மூச்சை இழுத்து அதை அவன் உதட்டிலே புதைத்தாள். அவனைப் போல அரக்கப்பறக்க அவசரமாக அவள் முத்தமிடவில்லை. மிக மென்மையாக ஒரு லாளிதத்தோடு அவனை அணுகினாள். பரிதிக்கு கண்களில் மயக்கம் கூடிற்று.

அவள் பிரிந்ததும் இழுத்தணைத்தவன், “யூ ஆர் டூ மச் பெர்பெக்ட் தென் மீ வானு. செம்ம கிஸ் டீ!” என்றான் மயக்கத்துடன். அவள் வெட்கத்துடன் அவனுள் புதைந்தாள். சற்று நேரம் அப்படியே இருந்தார்கள்.

“வானு... நாளைக்கு எனக்கு லீவ்தான். அதுக்காக இப்படி தூங்காமலே இருக்கணுமா என்ன? வாடீ ரூமுக்குப் போகலாம். ஐ ஃபீல் ஸ்லீப்பி!” அவன் கொட்டாவி விட்டதும், “நீ போய் படு பரிதி. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்!” என்றாள் வாணி.

அவளைப் போலிக் கோபத்தோடு முறைத்தவன் அப்படியே அந்த நீள்விருக்கையில் உடலை குறுக்கி அவள் மடிமீது தலை சாய்த்துப் படுத்தான்.

சில நிமிடங்கள் கடக்க, “உனக்கு இங்க கம்பர்டபிளா

இருக்காது. ரூம்ல போய் படு பரிதி!” என இருமுறை அவள் கூறியும், பரிதி அசையவில்லை. அப்படியே விட்டுவிட்டாள்.
 
Last edited:
Administrator
Staff member
Messages
1,363
Reaction score
4,166
Points
113
சற்று நேரத்தில் அவளை நோக்கித் திரும்பிப் படுத்தவன், “வாட் இஸ் ஈட்டிங் இன்‌ யூ? நீ ஏன் இப்படி இருக்க?” எனக் கேட்டான். அவன் கேள்வியில் அவளது புருவங்கள் மெல்ல உயர்ந்தன.

பின்னர் முறுவலித்தவள், “எனக்கென்ன... நான் நல்லாருக்கேன்!” என்றாள்.

“பொய் சொல்லாத வானு... உன் மூளையைப் போட்டு என்னக் குடையுது?” அவன் அழுத்திக் கேட்டுவிட்டு எழுந்தமர்ந்தான்.

“அம்மாப்பா ஞாபகம் வந்துடுச்சு பரிதி‌. நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நிம்மதியா வாழ்றேன். ஆனால், அதைப் பார்க்க அவங்க என் பக்கத்துல இல்லைல?” வருத்தமாக முறுவலித்தாள். பரிதி அவளைத் தோளோடு அணைத்தான்.

“ஆன்ட்டி நம்மளைப் பார்த்துட்டேதான் இருப்பாங்க வானு. நீ வா.‌.. வந்து சும்மா படு. தூக்கம் வரும்...” என அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.

மறுநாள் காலையில் பதினொரு மணிக்குத்தான் அவர்களுக்கு விடிந்தது. காலை உணவாக நொறுக்குத்தீனியோடு அமர்ந்துவிட்டான் பரிதி. வாணி நீண்ட நேரமாக சமையலறையிலே இருக்க, இவன் எட்டிப் பார்த்தான். என்னென்னவோ சமைத்தாள் அவள்.

“ரெண்டு பேருக்கு எதுக்கு டீ இவ்வளோ?” அவன் யோசனையுடன் கேட்க, “ஸ்பெஷல் கெஸ்ட் ஒருத்தர் வர்றாங்க!” என்றாள் அவள். அவன் யாரெனக் கேட்டும் வாணி பதிலுரைக்கவில்லை. சரியாக அந்நேரம் அழைப்பு மணி ஒலித்தது.

“அவர்தான் வந்துட்டாரு. ஒழுங்கா இன்வைட் பண்ணி அவரை உக்கார வச்சு பேசு!” என கண்டிப்புடன் வாணி கூற, இவன் யார் அந்த அப்பாடக்கர் என்ற யோசனையுடன் கதவைத் திறக்க, விக்னேஷ் நின்றிருந்தான்.

“வானு... கெஸ்ட் கெஸ்ட்னு பில்டப் விட்டது இந்த வெங்காயத்துக்காகத்தானா?” என கடுகடுத்த முகத்தோடு கேட்க, அவனை முறைத்தாள் மனைவி.

“வாங்க விக்னேஷ்... உட்காருங்க!” என விக்னேஷை வரவேற்று அமர்த்தினாள். பரிதி அவ்விடத்தைவிட்டு அகலப் பார்த்தான். வாணி அவனை உக்கிரமாகப் பார்க்கவும், முகத்தை தூக்கிவாறே அமர்ந்தான்.

“அடடே! முழுசா பொண்டாட்டி தாசனாகிட்ட போல பரிதி?” விக்னேஷ் இவனை நக்கலடிக்க,

“ஆமாடா... அவ என் பொண்டாட்டி. அவ கண்ணசைச்சா போதும். மலையைக் கூட நகர்த்துவேன்!” ரோஷத்தோடு பரிதி கூற,

“பொண்டாட்டியா? அப்போ வாணி உனக்கு அக்கா இல்லையா டா? நான் கூட எனக்கு நீ மச்சான்னு நினைச்சேன்!” விக்னேஷ் இவனை வெறுப்பேற்றினான்.

“வாயை உடைச்சிடுவேன் விக்கி...” பரிதி பொங்க, அவன் வேண்டுமென்றே இவனை வம்பிழுக்க என அவர்கள் பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டே தேநீர் தயாரித்தாள் வாணி.

“இவனுக்கெல்லாம் எப்பத்தான் அறிவு வளருமோ? மெச்சூர்டா நடந்துப்பானோ?” கணவனை சடைத்தபடி வாணி தேநீரோடு வெளியே வர,

பரிதி விக்னேஷ் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ் டா!” எனக் கட்டிப் பிடித்தான்.

இவள் அதிர்ச்சியில் திகைத்து நிற்க, “சீ...‌ சீ. கருமம்... கருமம். அவனாடா நீ?” என விக்னேஷ் போலியாக அலறி பரிதியை தள்ளிவிட்டு சிரிக்க, வாணியும் அடக்க‌ முடியாது பொங்கிச் சிரித்தாள். அவன் இருவரையும் முறைத்துவிட்டு கோபம்கொண்டு அறைக்குள் அடைய, இவள்தான் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள். அது அத்தோடு முடியவில்லை. உணவுண்டு முடித்துக் கிளம்பும் வரை விக்னேஷ் பரிதியைக் கலாய்த்துவிட்டே சென்றான்.

நாட்கள் அப்படியே சிரிப்பும் மகிழ்வுமாக கடந்தது. வாணி இங்கு வந்து ஒரு மாதம் முடிந்து போயிருந்தது. அவள் கணவனோடு வெளியே சுற்றிய பொழுதுகள் மிக குறைவு. உண்மையில் பரிதியும் வாணியும் ஒருவரையொருவர் சுற்றினர் என்பதே தகும். மூன்று வருடங்களுக்கும் சேர்த்து காதல் செய்தனர். வாணி கிளம்பும் நேரம் வர, மனதே இல்லாமல் விடை கொடுத்தான் பரிதி.

***

சில பல மாதங்களுக்குப் பின்னரான பின்மாலை பொழுது அது. பொள்ளாச்சி வந்ததும் நடத்துநர் போட்ட சப்தத்தில் கண்விழித்த பரிதி, தன் பொதியோடு இறங்கி ஒரு தானியில் வீடு வந்து சேர்ந்தான். வாணி லண்டன் சென்று வந்தப் பின்னர் இப்போதுதான் அவனுக்கு விடுப்பு கிடைத்தது. முதலில் மனைவியைக் காணத்தான் அவன் உடலும் உள்ளமும் பரபரத்தது. சில மாதங்களுக்கு முன்னே அவள் வேலையை கோயம்பத்தூருக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட, நேரே பிறந்தகம் வந்துவிட்டான்.

சிந்தாமணி விச்ராந்தையாக கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க, அவரருகே ஒரு பாயில் படுத்து காலாட்டியவாறே அலைபேசியில் மூழ்கியிருந்தாள் கீர்த்தனா. வெயில் மெல்ல தாழ்ந்து கொண்டிருந்தது‌. வீட்டு வாயில் நின்று உள்ளே தன் பையைத் தள்ளிய பரிதி, முகம் முழுவதும் புன்னகையுடன் நுழைந்தான். மகனை அந்நேரத்தில் எதிர்பாராத சிந்தாமணி திகைத்து எழுந்துவிட்டார்.

“டேய் பரிதி... என்ன டா... ரெண்டு மாசம் கழிச்சுத்தான் லீவுன்னு சொன்ன. இப்போ திடுதிப்புன்னு வந்து நிக்கிற?” சந்தோஷத்துடன் கேட்ட தாயை இறுக்கி அணைத்தவன்,

“எங்கம்மாவைப் பார்க்கணும் போலருக்குன்னு அழுது அடம்பிடிச்சு லீவ் வாங்கிட்டு வந்துட்டேன்மா!” என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி. அவர் அவனை மென்மையாய் முறைத்தார்.

“ண்ணா... என்கிட்டே கூட நீ சொல்லலை பார்த்தீயா?” கீர்த்தனா முகத்தைச் சுருக்க,

“சர்ப்ரைஸா வரலாம்னு நினைச்சேன் கீர்த்தி... போய் ட்ராலியை ஓபன் பண்ணு. உனக்குத்தான் நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்!” என்றான் அண்ணன்காரன். அவள் உடனே ஓடிப் போய் அவன் பையைத் திறக்கும் வேலையிலிறங்கினாள்.

“ம்மா...‌ என் பொண்டாட்டி எங்கம்மா? ரூம்ல இருக்காளா?” பரிதி கண்களை சுழலவிட, சிந்தாமணி திருதிருவென விழித்து தலையை அசைத்தார். அதெல்லாம் அவன் கண்களில் படவேயில்லை.

ஆசையோடு அறைக் கதவை திறந்து, “வானு... நான் வந்துட்டேன்!” என்றான். மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் சப்தத்தில் திடுக்கிட்டுப் போக, வலக்கரம் அனிச்சையாய் தன் ஏழு மாத வயிற்றில் பதிந்தது.

“வானு...” பரிதி ஆர்வத்துடன் அவளை நெருங்க, வாணிக்கு அவன் வந்ததை நம்ப முடியவில்லை. படக்கென அப்படியே எழ சென்றவள், வயிறு இடிக்கவும், பதறி நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். ஆசையோடு அவளை அணைக்க சென்ற பரிதியின் முகம் சட்டென மாறியது. இதயம் திடுக்கிட, அவள் வயிற்றையும் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். அவனுக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. பெரும் அதிர்வு தாக்கிற்று. நிதர்சனம் உணர்ந்து பிடரியைப் பரபரவென கோதியவன், “என்ன டீ இது?” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.

வாணி தயக்கத்துடன், “பரிதி... சாரி!” என விளக்கம் கொடுக்க முனைய, அவன் அதைக் கேட்க விரும்பாமல் விருட்டென வெளியே சென்று, “ம்மா‌‌...” எனக் கத்தினான். அவனுக்கு கோபம், ஆற்றாமை பெருகிற்று. எவ்வளவு பெரிய விடயம். எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டார்களே என சினம் கனன்றது‌.

“பரிதி...” அவர் தயங்க, “ஏன் என்கிட்ட யாருமே சொல்லலை? என் புள்ளைமா இது...” என்றான் கடுப்பான குரலில்.

“டேய்... சொல்லக் கூடாதுன்னு இல்ல. இந்த விஷயம் தெரிஞ்சா அவ பக்கத்துல இல்லைன்னு நீ வருத்தப்படுவ. உனக்கு லீவும் கிடைக்காது. அதான் டா!” அவர் சின்ன குரலில் பேசினார்.

“சோ... எப்போ சொல்றதா ஐடியா! புள்ளை பொறந்து ஸ்கூல் அனுப்புன பின்னாடியா?” என அவரை உறுத்துப் பார்த்தான்.

“பரிதி... அவங்கிட்ட ஏன் கத்துற நீ? நான்தான் சொல்ல வேணாம்னு சொன்னேன். எதுனாலும் என்கிட்ட கேளு நீ!” வாணி இருவருக்கும் இடையில் நுழைய, அவளைக் காட்டமாய்ப் பார்த்த பரிதி‌, கோபத்தோடு சென்று வாயிற்படியில் அமர்ந்தான். சிந்தாமணி மருமகளைக் கலக்கத்துடன் பார்த்தார்.

‘நான் பார்த்துக்கிறேன் அத்த!’ எனக் கண்களாலேயே அவருக்கு சமாதானம் உரைத்தவள், “கீர்த்தி எனக்கொரு சேர் எடுத்துட்டு வந்து வெளியப் போடு!” என்றவாறே வெளியே சென்றாள். கீர்த்தனா நாற்காலியை எடுத்து வந்ததும் எந்த இடத்தில் சமதளமாக இருக்கிறதெனப் பார்த்து வாணி நாற்காலியை வைக்க, அது சரி வரவில்லை.

அவள் கவனிக்காமல் அமர செல்ல, “ஏய்... அறிவிருக்கா டீ உனக்கு?” எனப்‌ பதறி எழுந்த பரிதி அவள் கைகளைப் பற்றினான்.

“ஒழுங்கா வீட்டுக்குள்ள போ. இங்க தரை நல்லா இல்ல!” என்றான் கண்டிப்புடன்.

“அப்போ நீ ரூம்க்குள்ளே வா. நான் உன்கிட்ட பேசணும்!” அவள் அடத்துடன் நிற்க, “போ... வரேன்!” எனக் கடித்தப் பற்களோடு அவள் பின்னே சென்றான்.

அறையின் கதவை அடைத்துவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்த வாணிக்கு லேசாக மூச்சு வாங்க, பரிதி தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசம் செய்தான்.

“பரிதி, கோபப்படாம நான் சொல்றதைக் கேளு.‌ உன்கிட்டே சொல்லக் கூடாதுன்னு இல்ல. சொல்ற சிட்சுவேஷன் அமையலை. உனக்கு லீவ் இல்ல. இப்படின்னு தெரிஞ்சா என் கூட இருக்க முடியலைன்னு புலம்பிட்டே இருப்ப. எனக்கும் நீ பக்கத்துல வேணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு. ஆனால் இந்த வேலை உனக்கு எவ்ளோ முக்கியம்? எவ்ளோ கஷ்டப்பட்டு கிடைச்சதுன்னு எனக்குத் தெரியும். இப்போதான் வீட்டு லோனை அடைச்சு மாமாவுக்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறந்திருக்கோம். அந்தக் கடனை வேற அடைக்க இந்த ஜாப் ரொம்ப இம்பார்டெண்ட்‌.
அதான் சொல்லலை. வளைகாப்பு டைம்ல எப்படியும் நீயா வரேன்னு சொன்ன. அப்படி வரலைன்னா நானே கால் பண்ணி இந்த விஷயத்தை ஷேர் பண்ணிருப்பேன்!” எனப்‌ பொறுமையாக அவள் விளக்கம் தர, பரிதி இளகாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தான். அவனுக்கு‌ மனதே ஆறவில்லை.

“ப்ம்ச்... ஏன் இவ்ளோ கோபம் பரிதி. ஃபர்ஸ்ட் டைம் என்னையும் பேபியையும் சேர்த்துப் பார்க்குற. கொஞ்சம் இறங்கி வாயேன். உன் கோபத்தை அப்புறமா காட்டிக்கலாம்!” என அவன் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள். பரிதியால் அதற்கு மேலும் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

அவளை முறைத்துக் கொண்டே குனிந்து வயிற்றில் இரண்டு கரத்தையும் பதித்தவன், கன்னத்தையும் மென்மையாய் அழுத்தினான். பின்னர் மெதுவாய் உதடுகளை அவள் வயிற்றில் ஒற்றியெடுத்தான். வாணி சின்ன சிரிப்புடன் அவன் தலையைக் கலைத்தாள்.

வெடுக்கெனத் தட்டிவிட்டவன், “இன்னும் என் கோபம் போகலை!” என்றான்.

“சரி... நீ அப்புறமா கோபப்படுவீயாம். இப்போ போய் அத்தைகிட்டே பேசு. அவங்க கவலைப்பட்டுட்டே இருப்பாங்க!” என அவனை சமாதானம் செய்து அனுப்பினாள். தாயிடம் முறுக்கிக் கொண்டான் பரிதி. அவரும் அவனைக் கெஞ்சித்தான் பேச வைத்தார்.‌ மார்த்தாண்டமும், அஜித்தும் வந்துவிட்டனர். தந்தையிடம் பல்பொருள் அங்காடி பற்றிக் கேட்டான். வியாபாரம் எப்படி நடக்கிறது எனத் தெரிந்து கொண்டான். இரவுணவு முடிந்ததும் அனைவரும் ஆசுவாசமாக அமர, இவனை அழைத்துக்கொண்டு தெருவில் நடக்கலாம் என வாணி இழுத்துச் சென்றாள்.

பரிதி இன்னமும் முகத்தைத் தூக்கிதான் வைத்திருந்தான். வாணி அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அவன் தோளில் தலை சாய்த்து அவன் கையோடு தன் கரத்தைப் புதைத்தாள். இவன் லேசாய் உடலைத் தளர்த்தி அவளுக்கு வசதி செய்து கொடுத்தான்.

“நீ வந்தது ரொம்ப சந்தோஷம். ம்கூம்... பெரிய நிம்மதியா இருக்கு பரிதி. டூ மந்த்ஸ் கழிச்சுத்தான் நீயில்லாம வளைகாப்பு வேணாம்னு நான் அத்தனை பேரையும் கன்வின்ஸ் பண்ணி நைன்ந்த் மந்த் வைக்கலாம்னு சம்மதம் வாங்குனேன். ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம். வளைகாப்பு நாளுக்கு முன்னாடி பேபி பொறந்துட்டா என்ன பண்றது? எனக்கு டெலிவரி அப்போ நீ என்கூட இருக்கணும்னு டெய்லி நினைச்சுட்டே இருந்தேன். அதான் உனக்கு கேட்டுடுச்சா பரிதி?” எனத் தலையை உயர்த்தி ஆசையாகக் கேட்டவளிடம் சாத்தியமாக அவனால் கோபம் கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை.

அவளை ஆதுரமாகப் பார்த்தவன், “ஃபோன் பண்ணி வான்னு சொல்லிருந்தா வேலையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு விட்டுட்டு என் பொண்டாட்டி புள்ளையைப் பார்க்க வந்திருப்பேன் டீ கிறுக்கச்சி!” என்றான் பரிதி. வாணி அவனை முறைத்தாள்.

“அதான்... இந்த அவசரக் குடுக்கதைத்தனம் உன்கிட்ட அதிகம். இதனாலதான் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணோம். பட், நீ இல்லாம ஒவ்வொரு மாசமும் கஷ்டமா இருந்துச்சு பரிதி. ஒவ்வொரு மந்த் பேபி பம்பை ஃபோட்டோஸ் நிறைய எடுத்திருக்கேன், உன்கிட்டே காட்டலாம்னு!” என ஆசையாக அலைபேசியை கணவனிடம் காண்பித்தாள் வாணி. அவனும் ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்து ஏதேனும் கேலி செய்து அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான்.

“ஸ்கேன்ல பையனா, பொண்ணான்னு சொல்லிட்டாங்களா வானு?” நினைவு வந்தவனாக பரிதி கேட்க,

“அது இல்லீகல் நம்ப நாட்டுல. ஆணா இருந்தா என்ன? பொண்ணா இருந்தா என்ன?” இடுப்பில் கையை வைத்து கண்கள் இடுங்க அவனைப் பார்த்தாள்.

“ஆம்பளை புள்ளைன்னா உன்னை மாதிரி ப்ரௌனியா சுருட்டைத் தலையோட பொறக்கும். பொம்பளை பிள்ளைன்னா நல்லா ஆப்பிள் மாதிரி வெள்ளையா என்னை உரிச்சு வச்சுப் பொறக்கும்!” அவன் வெகுசிரத்தையுடன் கூற, வாணி தீயாய் முறைத்தாள்.

“ஏன் டீ இதுல முறைக்க என்ன இருக்கு? பேசாம உன்னை மாதிரி ஆணொன்னு பொண்ணொன்னும், என்னை மாதிரி ஆணொன்னு பொண்ணொன்னும் பெத்துக்கலாம். நாலு புள்ளையும் ஆச்சு. ரெண்டு பேருக்கும் சண்டையும் இல்ல!” அவன் எளிமையாக கூற, வாணி முடியாது என அலறினாள்.

“அடப்பாவி.‌‌... ஒன்னே வெளிய வர முன்னாடி என்னை என்னா பாடுபடுத்துது தெரியுமா? மிஞ்சிப் போனா இன்னொன்னு. அவ்ளோதான்!” அவள் சன்னமாய் அலற, பரிதி வாய்விட்டு சிரித்திருந்தான்.

தன்னிடம் அவன் விளையாடியிருக்கிறான் எனப் புரிந்ததும் வாணி கடுப்புடன் பார்த்தாள். ஆனாலும் அவன் சிரிப்பு குறையவில்லை. இவளின் முறைப்பு மெல்ல மட்டுப்பட்டது. அவன் சிரிப்பதை ஆதுரமாகப் பார்த்திருந்தாள். அந்த இரவு நேரத்தில் பரிதியின் சப்தம் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துப் போட்டிருந்தது. மனைவியையும் நிறைந்திருந்தான் அவன்.

*சுபம்*


இதுவரைக்கும் கதை படிச்சு ஒரு கருத்தைக் கூட சொல்லாம இருந்த எல்லாரும் இப்போ கதை எப்படியிருந்துச்சுன்னு சொல்லாலம். அப்புறம் பிரிதிலிபி மக்களே, மறக்காம என்னை ஃபாலோ பண்ணுங்க. அப்போதான் கதை போடுறது தெரியும். பரிதியையும் வாணியையும் நான் மிஸ் பண்ணுவேன். நீங்களும் மிஸ் பண்ணா கமெண்ட்ல சொல்லுங்க. இப்படியொரு செல்ஃபிஷ் ஹீரோவான்னு நீங்க நினைக்கலாம். ஆனால் யோசிச்சு பார்த்தா இந்த மாதிரிதான் நிறைய பேர் இப்போ இருக்காங்க. லைக், பக்கத்து வீட்டு பையன் ஃபீல் வருதா உங்களுக்கு? எனக்கு அப்படித்தான் இருந்துச்சு. இப்படியொரு அக்ரீமெண்ட் ஸ்டோரியைக் கண்டிப்பா படிச்சிருக்க மாட்டீங்க 😆😆😆 சோ, கமெண்ட்ஸ்ல உங்க மனசுல இருக்கதை கொட்டிட்டு போங்க. அடுத்த வாரத்துலருந்து என்றென்றும்
அன்புடன் சந்தனா கதையோட உங்களை மீட் பண்றேன் 😎🤩 அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் ஜானு 💜🌺🦋

இது என் ஃபேஸ் புக் ப்ரொபைல். ஃபாலோ பண்ணிக்கோங்க மக்களே! தொடர்ந்து கதைகளை வாசிக்க ஈஸியா இருக்கும் உங்களுக்கு


இது நம்ப ஜானு முருகன் நாவல்ஸ் குரூப்


இது இறகி தளத்திற்கான முகநூல் குழு. ஜாய்ன் பண்ணிக்கோங்க மக்களே! நம்ப சைட்ல போட்ற எல்லா கதையும் படிக்கலாம் 💐


கதைப் படிக்க முடியாதவர்கள் இறகி தமிழ் நாவல்ஸ் யூட்யூப் சேனல்ல கதையைக் கேட்டு மகிழுங்கள். மறக்காம சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க 💜




 
Well-known member
Messages
627
Reaction score
433
Points
63
அப்பாடா எப்படியோ ஒரு வழியா சமாதானமாகி அடுத்த சந்ததியும் வந்தாச்சு, பரிதி, வானு 💕💕💕💕💕💕💕
 
Administrator
Staff member
Messages
1,363
Reaction score
4,166
Points
113
அப்பாடா எப்படியோ ஒரு வழியா சமாதானமாகி அடுத்த சந்ததியும் வந்தாச்சு, பரிதி, வானு 💕💕💕💕💕💕💕
Thank you so much kothai ma 💖🫶
 
Member
Messages
56
Reaction score
4
Points
8
நீங்க சொன்ன மாதிரி தான் இருக்காங்க 😏😏😏😏🤗🤗🤗
பரிதி 🙄🙄🙄😡😡😡 🤗🤗🤗

அவ்ளோ கோவம் வந்துச்சு இவன் அவளை காயப்படுத்துற மாதிரி பேசும் போது எல்லாம் 😏😏😏😏 ஆனாலும் அடி எல்லாம் வாங்கிட்டு அவளை சமாதானம் பண்ணி சேர்ந்துட்டான் 😍😍
வானு 🥰🥰❤️❤️
enjoyed it 🥰🥰🥰
 
Well-known member
Messages
1,112
Reaction score
801
Points
113
Superrrrrrrrr jaanu ma
Azhagana ending
Ipdi oru character poyi hero va pottirukkiye nu niraya thittirukken

Aana ellathukkum serthu ending la niraya score pannittan parithi
Vaani chance eh illa,
Parithi family members um superrrrrrrrr

Vicky verupeathi verupeathi ye onnu sera vachittan rendu perayum


Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
1,112
Reaction score
801
Points
113
Superrrrrrrrr jaanu ma
Ipdi oru charactera poyi hero va pottirukkiye nu niraya thittirukken

Aana ellathukkum serthu ending la niraya score pannittan parithi
Vaani chance eh illa
Parithi family members um superrrrrrrrr
Vicky verupeathi verupeathi ye onnu sera vachittan rendu perayum

I Miss parithi and vaani
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top