- Messages
- 1,351
- Reaction score
- 4,092
- Points
- 113
நேரம் – 56
(இறுதி அத்தியாயம்)
எப்போதும் வேலை முடிந்ததும் கடைமைக்கு சோர்வுடன் வீட்டிற்கு வரும் பரிதி இன்றைக்கு உற்சாகத்துடன் முதல் ஆளாக அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தான். அவசர அவசரமாக தொடர்வண்டியிலேறி வீட்டை அடைந்தான். வீட்டிற்கு சென்றதும் தன்னை வரவேற்கும் வாணியின் முகத்தைப் பார்ப்பதிற்காகவே விரைந்து வந்தான்.
அவனை ஏமாற்றாமல் மனைவி கூடத்தில்தான் அமர்ந்திருந்தாள். ஒரு கையைத் தலைக்கும் நீள்விருக்கைக்கும் இடையே கொடுத்து மற்றொரு கரத்தில் ஒரு ஆங்கில நாவலை வைத்திருந்தாள். புதிதாய் ஒரு மூக்கு கண்ணாடி வேறு அவள் முகத்தில் அறிவுக் களையை கூட்டியது போல நீட்டிக் கொண்டிருந்தது. இவன் அரவம் உணர்ந்ததும் நிமிர்ந்தவளின் உதடுகளில் மெல்ல முறுவல் படர, கண்களாலே அவனை வரவேற்றாள். பரிதிக்கு பொத்தான் போட்டது போல முகம் பளிச்சென மின்னியது.
“ஃபைவ் மினிட்ஸ் வானு... ப்ரெஷாகிட்டு வரேன்!” என அவன் அகல, இவள் எழுந்து சென்று தேநீரோடு நெய் பனியாரத்தையும் சுட்டு வைத்தாள்.
கமகமவனெ நாசியை நிரடிய தேநீர் அவன் பசியை மெல்ல கிளப்பிற்று. அத்தோடு வேறு ஏதோ வாசனை வேறு. சரியாய் அவனால் இனம் காண முடியாமல், சமையலறைக்குள் சென்று அவள் பின்னே எட்டிப் பார்த்தான். அவனுக்குப் பிடித்த கருப்பட்டி நெய் பனியாரம். பார்த்ததும் மனதும் வயிறும் நிறைந்து போனது.
“வாவ், வானு எனக்காகவா பனியாரம்?” எனக் கேட்டு ஆர்வத்துடன் ஒன்றை எடுத்து வாயிலிட்டவன், “ஆ...” என்ற அலறலோடு அதை துப்பினான். அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கியதால், சூட்டை தாங்காது அவன் உதடு, நாக்கு சிவந்தன.
“ப்ம்ச்... என்ன அவசரம் உனக்கு? இப்போதான் சுட்டு வச்சேன்!” கணவனைக் கடிந்த வாணி, குளிர்ந்த நீரை அவனுக்குப் புகட்டினாள். இருந்தும் அவனுக்கு எரிச்சல் அடங்கவில்லை.
“சதிகாரி... சூடா இருக்குன்னு சொல்றதுக்கு என்ன? வயெல்லாம் பொத்துப் போச்சு எனக்கு!” என எரிச்சல் தாளமாட்டாமல் உளறிக் கொட்டினான்.
“கொஞ்ச நேரத்துல சரியாகிடும் பரிதி. ஐஸ் க்யூப் வச்சு விடவா?” என கவலையோடு கேட்டாள் வாணி.
“ஒன்னும் வேணாம்... பழைய கோபத்தை எதாவது மனசுல வச்சு பழி வாங்குறீயா வானு? நான் அவ்வளோ எல்லாம் வொர்த் இல்ல டீ. பார்க்கத்தான் டெரர். ஆனால் உண்மையிலயே டம்மிதான்!” வேறு என்னவோ அவன் புலம்ப செல்ல, மனைவி அவன் பேச்சை தடை செய்திருந்தாள். அவளது செயலில் பரிதியிடம் சின்ன திகைப்பு. பின்னர் அவளிடையில் கைக்கோர்த்து இழுத்தணைத்து அரைகுறையாக முத்தமிட்டவளுக்கு, முத்தப் பாடம் சொல்லிக் கொடுத்தான். நிமிடங்கள் கடந்து மீண்டனர் இருவரும். வாணி அவன் முகம் காண கூச்சப்பட்டு திரும்பிக் கொள்ள, இவன் அவளைப் பின்னோடு அணைத்தான்.
பின்னர் அவள் கழுத்தில் மென்முத்தமிட்டு, “எரிச்சல் போயே போச்சு வானு!” என்றான் கிறங்கிய குரலில். அவளுக்கு சிரிப்பும் வெட்கமும் சேர்ந்தே வந்தது.
உதட்டைக் கடித்து அதை மென்றவள், “போய் ஹால்ல உட்காரு. நான் எடுத்துட்டு வர்றேன்!” என அவனை அனுப்பிவிட்டு, அடுப்பிலிருந்த பனியாரம் வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுத்துச் சென்றாள்.
அவள்கொண்டு வந்த கோப்பையை பரிதி எடுக்கச் செல்ல, “வெயிட்! வெயிட். சூடா இருக்கு டீ. அப்புறம் வாய் எரியும் உனக்கு!” என்றவள், அதை குடிக்கும் பதத்திற்கு பொறுமையாக ஆற்ற, பரிதி கையைக் கட்டி சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான். சிறு வயதில் சிந்தாமணி அவனுக்கு இப்படித்தான் சூடான தேநீரை ஆற்றித் தருவார். அவர் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. இப்போதும் தாய் உணவு தருவாள் எனக் காத்திருக்கும் குழந்தையைப் போலொரு ஆர்வம் அவனிடம், தாயைப் போல ஆதுரம் அவளிடம். மனைவியின் அருகாமையை ஒவ்வொரு நொடியும் ரசித்து தன்னுள் நிரப்பினான் பரிதி.
“இப்போ குடி...” என கோப்பையை அவனிடம் நீட்டியவள், பனியாரத்தை ஒரு தட்டில் கொட்டி, சூடு குறைந்ததை இரண்டிரண்டாகப் பிரித்து வைத்தாள். பரிதி அவள் செய்கையில் அன்பாக மனைவியைப் பார்த்தான். தன் மீதான அவளின் பிரியத்தின் வெளிப்பாடு இப்படி சின்ன சின்ன செய்கையில் வெளிப்படும்போது ஒரு மாதிரி மனம் இதமாக உணர்ந்தது. தன்முனைப்பையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு அவள் காலில் விழுந்து மீண்டும் தன்னை ஏற்றுக்கொள்ள உந்தியது இந்த தன்னலமில்லாத அன்பிற்காகத்தானே? இப்போது அதை மிச்சம் சொச்சமில்லாமல் சுகமாக அனுபவித்தான்.
“இந்தா... இப்போ சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!” என்றவளின் வாயில் ஒரு பனியாரத்தை அடைத்தான் பரிதி. அவள் அவனை முறைத்துக்கொண்டே அதை மென்றாள். சின்ன சிரிப்புடன் தானும் உண்ட பரிதி, எழும்போது அவள் நெற்றியோரம் முத்தமிட்டான். வாணி தலையை உயர்த்தி கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள்.
“பனியாரத்துக்கு டீ!” என கேலியுடன் அகன்றவனின் முதுகை இவளின் கோபப்பார்வை துளைத்தது. சிரிப்புடன் அவளை இடித்துக்கொண்டு வந்து அமர்ந்தவன், அவள் மீது சாயப் போக, அவனை தள்ளிவிட்டாள் இவள்.
“என்ன டீ?” எனக் கேட்டு தன் அணைப்பில் அவளைக்கொண்டு வந்தான். மென்மையாய் அவனை முறைத்தவாறே சாய்ந்தமர்ந்தாள்.
“அண்ணே... வேலைவிட்டு வந்துட்டீயா? அம்மா உன்னையும் அண்ணியையும் வீடியோ கால்ல பார்க்கணும்னு சொல்லுச்சு!” கீர்த்தனா குரல் வழி செய்தியை இவனுக்குத் தட்டிவிட்டாள். பரிதி உடனே அவளுக்கு காணொளி அழைப்பை விடுத்தான். வாணி அவனிடமிருந்து தள்ளியமர்ந்தாள். பெரியவர்கள் பேசி முடித்து சின்னவர்களும் பேசினர்.
அழைப்பைத் துண்டிக்கும் முன்னே சிந்தாமணி என்ன நினைத்தாரோ, “வாணி... நீயே உன்னையும் அவனையும் சுத்திப் போட்ரு. எங்கண்ணே பட்டிருக்கும்!” என்றார் அவர்கள் மலர்ந்த முகத்தைப் பார்த்து கணித்தவராக. இவள் சங்கடத்துடன் தலையசைத்தாள்.
“வானு... எனக்கு வயிறு ஃபுல்லாருக்கு. சோ, நைட் டிபன் வேணாம்!” என அறிவித்தவனைக் கேள்வியாகப் பார்த்தாள் அவள்.
“உனக்குப் பசிக்குதா என்ன?” அவளைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கேட்டான். அவளுக்கும் பெரிதாக பசிக்கவில்லை. அதனாலே இல்லையென்பதாக தலையை அசைத்தாள்.
“அப்போ வா... ரூமுக்குள்ளே போகலாம்!” எனக் கையைப் பிடித்தவனைப் பார்த்தவள், “பரிதி...” என்றாள் கண்டிப்போடு.
“ஏய்... சீ... அதில்ல டீ. நீ வா முதல்ல!” என அவள் கையைப் பிடித்திழுத்துச் சென்றவன், நிலை பேழையிலிருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இது... முன்னாடியே உனக்காக வாங்கி வச்சேன் வானு. ஆனால் கொடுக்க முடியலை. இப்படி நீயும் நானும் கம்பர்டபிளா பழகுனத்துக்குப் பிறகு கொடுக்கலாம்னு நினைச்சு வச்சிருந்தேன். இப்போ எனக்காக இதைப் போட்டு காட்டு!” என்றவனை சந்தேகமாகப் பார்த்து அந்தப் பையைப் பிரித்த வாணியின் முகம் அஷ்டக்கோணலானது.
“சீ... என்ன ட்ரெஸ்டா இது? நான் போட மாட்டேன், போ...” அவன் முகத்திலே அந்த உடையைத் தூக்கியெறிந்து முறைத்தாள்.
“ஏய் வானு... ப்ளீஸ்.. ப்ளீஸ். என் முன்னாடி மட்டும்தானே? போட்டு காட்டு டீ” என இறைஞ்சினான். அவள் முடியாது என பார்வையாலே மறுத்தாள்.
“வானு!” பாவமாய் அவன் இழுத்தான்.
“இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸாடா?” அவளின் மறுப்பு இப்போது மெல்ல பலகீனமடைந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கெஞ்சி அவளைக் குளியலறைக்குள் அனுப்பினான். வாணி அந்த உடையை அணிந்துவிட்டு குளியலறைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். வலை வகையிலான துணி அது. தொடைக்கு மேலே உயர்ந்திருந்ததை முடிந்தளவு முட்டி வரை இழுத்துவிட்டாள். கையில்லாமல் மெல்லிய கயிறு கழுத்தோடு உடையை இறுக்கிப் பிடித்தது.
“பரிதி... கண்டிப்பா வரணுமா நான்?” கதவைப் பாதியாகத் திறந்து எட்டிப் பார்த்தாள். படக்கென உள்ளே நுழைந்தவன், கண்களில் அவள் மீதான மயக்கம் படர்ந்தது. சுருட்டை முடி முதல் வெண்பாதம் வரை அவன் விழிகள் ரசனையாய் அவளை வருடின.
“வாவ்! என்ன டீ இவ்வளோ அழகா இருக்க!” என்றான் பார்வையாலே கொஞ்சம் கொஞ்சமாக அவளை மென்று விழுங்கியபடியே.
அதில் முகம் சிவந்தவள், “பார்த்துட்டீயா? போதுமா? நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன். வெளியே போ...” என அவனைத் துரத்த முயன்றாள்.
“நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணவாடி இவ்வளோ நேரம் கெஞ்சுனேன் நான்?” என விஷமத்தோடு கேட்டவன், மெலிதாய் அவள் கைகளை சுண்டியிழுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“பரிதி!” என அவள் சிணுங்கல் எல்லாம் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. நாகரீகம் மறந்து மனைவியைக் காதல் செய்தான். அவள் வெட்கம், கூச்சம் அனைத்தையும் தயக்கமில்லாமல் கடந்து தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டான். அவளை முழுவதுமாக ஆராதித்து, இருவருக்குமே உடல் அலண்ட பின்னரே விட்டான்.
தன்னருகே வரும்போது கணவன் கண்களில் தெரிந்த மயக்கத்தில் இவளுக்கு சகலமும் மறந்து போனது. அவன் பிரிந்ததும்தான் சுற்றுப்புறம் உறைத்தது. அவளது ஆற்றலை மொத்தமாக வாங்கியவன், சுகமாகத் தூங்க, இவளுக்கு உறக்கமே வரவில்லை.
சிறிது நேரம் படுத்திருந்தாள். பின்னர் கழிவறை சென்று வந்தவளுக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது. நேற்றைக்கு அவர்கள் வாங்கி வந்த உருளைக்கிழங்கு வறுவல் கண்ணில் தென்பட்டதும், அதன் முனையை மெல்லியதாக கீறிவிட்டு, ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக எடுத்து வந்து தொலைக்காட்சி முன்னே அமர்ந்தாள்.
பரிதி அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முயன்றான். அருகில் வாணி இல்லையென்றதும் கண்களைத் திறக்காமல் மெதுவாய் கைகளைத் தடவி அவளிருப்பை உணர முயன்றான். ஆனால் அவள் இல்லாது போனதில் எரிந்தக் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டே எழுந்து வந்தான். வெளியே கூடத்தில் அமர்ந்து காலாட்டிக் கொண்டே உருளைக்கிழங்கு வறுவலை மென்று கொண்டிருந்தாள் வாணி. அவளைப் பார்த்தவனுக்கு சின்னதாய் சிரிப்பு வந்தது. அவள் பார்வை எங்கோ மையம் கொண்டிருக்க, இவனும் திரும்பி பார்த்தான்.
ஏதோ ஒரு ஆங்கில படத்தில் நாயகனும் நாயகியும் ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அதைத்தான் இவள் விழியகலாமல் பார்த்திருந்தாள். கண்களைத் தேய்த்துவிட்டு மீண்டும் உற்றுப் பார்த்தவனுக்கு தூக்கம் எங்கோ ஓடியிருந்தது. இப்போது அவன் மீசைக்கு கீழே தாராளமாக சிரிப்பு முளைத்தது.
“அடிப்பாவி! பிட்டுப் படம் பார்க்குறீயா?” அவ்வளவு நேரம் நிசப்தமாக இருந்த அறையில் படக்கென அவன் குரல் கேட்டு அதிர்ந்து திரும்பிய வாணி, அவன் பேச்சில் முகம் சிவந்து, உடனே தொலைக்காட்சியை அணைத்துவிட்டு கால்களை சம்மணம் போட்டு அமர்ந்தாள்.
“வானு!” அவன் கேலியாக அழைக்க, இவள் உள்ளங்கையால் முகம், கண்களை மறைத்தாள். சும்மாவே அவன் கேலி செய்வான். இதில் இவள் முத்தக் காட்சியை ஆவென பார்த்ததைக் கண்டு என்ன சொல்வானோ என மனம் சிணுங்கிற்று.
“என்ன டீ பண்ற? பசிக்குதுன்னு சிப்ஸை கொறிக்கிற. இதென்ன சைட்டிஷ் பிட்டு படமா!” அடக்க முயன்றும் அவனுக்கு சிரிப்பு வந்தது.
அவனை நேராகப் பார்க்காத வாணி முகத்தைச் சுருக்கி, “அதொன்னும் பிட்டு படமில்ல. ஜஸ்ட் கிஸ்ஸிங் சீன்!” என்றாள் ரோஷமாய்.
“சரி... இருந்துட்டுப் போகட்டும். அதை ஏன் டீ இப்படி தனியா இந்நேரத்துல உக்கார்ந்து பார்க்குற?” என அவளை ஒட்டி உரசி அமர்ந்தான் பரிதி. அவன் சிரிக்கிறான் என குலுங்கிய உடல் உணர்த்திற்று. முசுட்டு முகத்துடன் தள்ளியமர்ந்தாள் வாணி.
அவள் பதிலளிக்கவில்லை என்பதால், “வானு...” என அவள் நாடி பிடித்து தன் முகத்தைப் பார்க்க செய்தான்.
“என்ன?” உர்ரென கேட்டாள்.
“சரி சொல்லு... எதுக்கு அந்த கிஸ்ஸிங் சீனை பட்டிக் காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்குற மாதிரி பார்த்த?” உதட்டைக் கடித்து சிரிப்பை விழுங்கியபடி அவன் கேட்க, வெடுக்கென தன் நாடியிலிருந்த அவன் கையைத் தட்டிவிட்டாள் மனைவி.
“சரி.. சரி. நான் சிரிக்கலை!” அவன் ஒற்றைக் கரத்தால் தன் வாயை மூடினான்.
அவனை முறைத்த வாணி, “ப்ம்ச்... அது...” கீழுதட்டைக் கடித்து தயங்கியவள், “எனக்கு எப்படி பெர்ஃபெக்டா கிஸ் பண்ணணுன்னு தெரியலை பரிதி. ஈவ்னிங் உன்னைக் கிஸ் பண்ணும்போது சொதப்பிட்டேன்ல. அதான் ப்ராப்பரா கிஸ் பண்றது எப்படின்னு கத்துக்கலாம்னு!” என இழுத்தவள், கூச்சத்துடன் அவனைப் பார்த்தாள். பரிதிக்கு முகம் முழுவதும் மலர்ந்தது.
“அதென்ன பெர்ஃபெக்டா கிஸ் பண்றது? இதுல கூட உனக்கு பெர்ஃபெக்ஷன் வேணுமா என் அருமை பொண்டாட்டியே!” என அவளை இழுத்து தோளில் கைப்போட்டவன், “புருஷன் நான் இருக்கேன்ல. நீ ஏன்டி வீடியோ பார்த்துக் கத்துக்கணும். லைவா நானே சொல்லித் தரேன்!” என அவள் முகத்தை தன்னருகே கொண்டு வந்தான். வாணி கொஞ்சம் வெட்கமும் சிரிப்புமுமாக அவனைப் பார்த்தாள்.
“நானே பண்றேன் பரிதி!” சின்ன குரலில் அவள் கூறியதும், “ரைட்.. ரைட். ஐ யம் ரெடி!” என அவன் உற்சாகத்துடன் கண்ணை சிமிட்டினான். அவன் தாடியடர்ந்தக் கன்னத்தைக் கைகளில் தாங்கியவள்,
மூச்சை இழுத்து அதை அவன் உதட்டிலே புதைத்தாள். அவனைப் போல அரக்கப்பறக்க அவசரமாக அவள் முத்தமிடவில்லை. மிக மென்மையாக ஒரு லாளிதத்தோடு அவனை அணுகினாள். பரிதிக்கு கண்களில் மயக்கம் கூடிற்று.
அவள் பிரிந்ததும் இழுத்தணைத்தவன், “யூ ஆர் டூ மச் பெர்பெக்ட் தென் மீ வானு. செம்ம கிஸ் டீ!” என்றான் மயக்கத்துடன். அவள் வெட்கத்துடன் அவனுள் புதைந்தாள். சற்று நேரம் அப்படியே இருந்தார்கள்.
“வானு... நாளைக்கு எனக்கு லீவ்தான். அதுக்காக இப்படி தூங்காமலே இருக்கணுமா என்ன? வாடீ ரூமுக்குப் போகலாம். ஐ ஃபீல் ஸ்லீப்பி!” அவன் கொட்டாவி விட்டதும், “நீ போய் படு பரிதி. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்!” என்றாள் வாணி.
அவளைப் போலிக் கோபத்தோடு முறைத்தவன் அப்படியே அந்த நீள்விருக்கையில் உடலை குறுக்கி அவள் மடிமீது தலை சாய்த்துப் படுத்தான்.
சில நிமிடங்கள் கடக்க, “உனக்கு இங்க கம்பர்டபிளா
இருக்காது. ரூம்ல போய் படு பரிதி!” என இருமுறை அவள் கூறியும், பரிதி அசையவில்லை. அப்படியே விட்டுவிட்டாள்.