• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,173
Points
113
நெஞ்சம் – 3 💖

நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கையில் அந்த வண்ணக் கல்லை உருட்டியபடியே தேவா, தன் முன்னே அமர்ந்திருந்த திவினேஷை அங்குலம் அங்குலமாக அளந்திருந்தான்.

“சொல்லுங்க திவினேஷ், பிரது ஏதோ சொன்னா?” எனக் கேள்வியாய்ப் புருவத்தை உயர்த்தினான். திவினேஷ், பிரதன்யாவின் அண்ணன் அவளைப் போல பார்க்க சாதுவாக இருக்க கூடுமென எண்ணி வந்திருக்க, இங்கு தேவாயின் ஆகிருதியில் மிரண்டு போயிருந்தான். ஆறடிக்கு மேல் உயரம் போல. நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அவனது உயரம் விழிகளைத் தொட்டது‌. சிரிப்பு மருந்துக்கும் இல்லை. கருப்பு என்று முழுதாய் கூற முடியாவிட்டாலும் மாநிறத்தில் இருந்தான். முகம்‌ மட்டும் இறுக்கமாய் இருந்தது.

சில நொடிகள் தயங்கிய திவினேஷ், “சார், ஐ லவ் பிரதன்யா. காலேஜ் முடிஞ்சதும் நானே உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி நீங்களே கூப்பிட்டுடீங்க!” என்றான் நிமிர்ந்து அமர்ந்து.

“ஓ... என்ன ஏஜ் தம்பி உனக்கு?” தேவா இவன் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.

“சார்... அது எனக்கு ட்வென்டி த்ரீ ஆகப் போகுது. பிரதுவை விட ரெண்டு வயசு மூத்தவன் நான்!” அவன் படபடவென ஒப்பித்தான்

“ஓஹோ... இந்த ஒரு ரீசன் போதும் அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க. ரைட்?” என தேவா புருவத்தை உயர்த்தியதும் எதிரிலிருந்தவன் சில நொடிகள் விழித்தான்.

“லீவ் இட்... வாட்ஸ் யுவர் ப்ளான் ஆப்டர் காலேஜ்?” அவன் கேட்டதும் திவினேஷ் முதலில் திணறினான்.

“சார்... அது, அப்பா ட்ராவல்ஸ் வச்சிருக்காரு. சோ எனக்கு வெளிய ஜாப் தேட்றதுல இஷ்டம் இல்ல. அதைப் பார்க்கலாம் இல்ல, உங்களை மாதிரி பிஸ்னஸ் பண்ண போறேன்!” என்றான் சமாளிப்பாக.

“ஓ... என்ன பிஸ்னஸ், என்னை மாதிரி பால் பண்ணையா? ஆர் வேற எதுவுமா?” தேவா கேட்டதும் இவனுக்குப் பொறுமை பறந்தது.

“சார்...நான் என்ன உங்களை மாதிரி உழைச்சாதான் சாப்பிட முடியும்னற குடும்பத்துலயா பொறந்து இருக்கேன். எங்கப்பா சேர்த்து வச்ச சொத்தே இன்னும் பல தலைமுறைக்கு காணும். அதனால உங்க தங்கச்சியை நல்லா வச்சுப்பேனான்னு கவலையெல்லாம் வேணாம் உங்களுக்கு!” அவன் கடுப்புடன் கூறினான்.

“ஓஹோ... அப்போ என் தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்னு நம்பிக்கை வேற இல்ல தினேஷ்?” தேவா எதிரிலிருந்தவனை உறுத்து விழித்தான்.

“ஏன்... ஏன் பண்ணித் தர முடியாதுன்னு சொல்வீங்களோ?” அவன் எகிற, இவன் சாவகாசமாக தலையை அசைத்தான்.

“இன்னும் படிச்சு முடிக்கலை, லைஃப்ல அடுத்து என்ன பண்ண போறோம்ன்ற ஒரு அக்கறை இல்லை. அப்பா சேர்த்து வச்ச சொத்துல ஊரை சுத்தீ ஊதாரியா சுத்துற உன்னை நம்பி எப்படி என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சொல்ற. மோர் ஓவர் இது இந்த வயசுல வர்ற ஈர்ப்பு. நீயா லவ்னு நினைச்சுட்டு பிரதுவை தொல்லைப் பண்ற!” என்றவன் எழுந்து நின்று முன்னே வந்து மேஜையின் முனையில் அமர்ந்தான்.

“ஹம்ம்... நான் பிரது மாதிரி சாஃப்ட் கிடையாது. இதுதான் லாஸ்ட், இனிமே இந்த மாதிரி எல்லாம் என் தங்கச்சி பின்னாடி சுத்துற வேலை வச்சுக்கிட்டே, தொலைச்சுப்புடுவேன்!” என்றவன் முகத்தில் இருந்த கோபத்திலும் சிறிதே இழையோடிய நக்கலிலும் திவினேஷின் தனமானம் அடிவாங்கியது. சிறுபிள்ளை போல இவன் தன்னை மிரட்டுவதா என இளம் வயது எகிறியது.

தெனாவெட்டாக சாய்ந்து அமர்ந்தவன், “ஹம்ம்... உங்க தங்கச்சிதான் எனக்குப் பொண்டாட்டி. உங்களால கூட அதை மாத்த முடியாது!” என்றான் திமிராக.

“ஓ... ஐ சீ... என்னைத் தாண்டி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. பட் பீ கேர் புல், பின் விளைவுகளை யோசிச்சுக்கோ!” தேவா கூற, திவினேஷ் முகத்தில் இகழ்ச்சியானப் புன்னகை.

“அட மச்சான்... இது என் டயலாக். என் அப்பா எம்.எல்.ஏ, என் தாத்தா பாலிடிக்ஸ்ல ஊறிப் போனவரு. அதனால நான்தான் இந்த டயலாக்கை சொல்லணும் மச்சான்!” என இழுத்தவன், “நீ சம்மதிச்சா உன் குடும்பத்துல இருக்க எல்லாரோட விருப்பத்தோட தாலி கட்டுவேன். இல்லைன்னா உன் தங்கச்சியைத் தூக்கிட்டுப் போய் என் பொண்டாட்டியாக்குவேன்!” என்றவன் முகத்திலே தேவா ஓங்கி ஒரு குத்து குத்தியிருக்க, திவினேஷின் மூக்கிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது.

“யாரு மேலடா கையை வச்ச, நான் யார்னு காட்டுறேன் உனக்கு. என்னைப் பத்தி உனக்குத் தெரியாது டா!” மூக்கிலிருந்து வழிந்த குருதியைக் கையால் துடைத்தவாறே அவன் பேச, அவன் சட்டையின் நுனியைப் பிடித்திழுத்த தேவா ஒரே தள்ளாக வெளியே தள்ளியிருந்தான். திவினேஷ் இதை எதிர்பாராது தடுமாறி நிலத்திலே பொத்தென குப்புற விழுந்திருக்க, முகம் முழுவதும் காயமாகியிருந்தது. அவன் வலியில் கத்த, அந்த சப்தத்திற்கு மொத்த ஊழியர்களும் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் அலுவலக அறையை முற்றுகையிட்டனர்.

“அக்கா... தேவா சார் யாரையோ அடிச்சு வெளுக்குறார் போல!” தர்ஷினி கையிலிருந்த சோதனைக் குழாயை மேடையில் வைத்துவிட்டு ஓட, அவளைத் திரும்பி முறைத்த ஆதிரை அதை எடுத்து அவளுடைய வேலையையும் சேர்த்து தானே தொடர்ந்தாள். சப்தம் கேட்டதும் முதல் ஆளாக கோமதி வெளியேறியிருந்தார். அவர்கள் இருவரையும் மனதிற்குள்ளே வசைபாடிய ஆதிரை நேரத்தைப் பார்த்துவிட்டு விறுவிறுவென பாலை சோதனை செய்து கணினியில் அதைப் பதிந்தாள்.

“என்னோட பேக்ரவுண்ட் என்னென்னு தெரியாம கை வச்சுட்ட டா. உனக்கு நான் யாருன்னு காட்டுறேன்!” என அவன் கத்தினான். முகம் முழுவதும் சிராய்ப்புகளுடன் ரத்தம் வழிந்தது. அனைவரும் நடப்பதை திகிலுடன் பார்க்க, தேவா பெரிதாய் சட்டை செய்யவில்லை.

அசட்டையுடன் நின்றவன், “ஒழுங்கா எழுந்திரிச்சு ஓடிடு டா. இல்ல உன் உசுரு உடம்புல இருக்காது. கேஸ் வந்தாலும் எப்படி டீல் பண்றதுன்னு எனக்குத் தெரியும்!” என்றான் எள்ளலாய்.

அதிலே திவினேஷ் முகம் லேசாய் வெளுத்துப் போனது. எழுந்து தேவாவை வன்மத்துடன் பார்த்தவன் மெதுவாய் நடந்தான். கீழே விழுந்ததில் கால்சராய் கிழிந்து முட்டியிலிருந்து குருதி வழிந்தது. ஒரு காலைத் தாங்கி சுவரில் கையை வைத்து மெல்ல எட்டு வைத்தான். அவனுடைய இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்தியிருந்தான்.

“இங்க என்ன மூவி ஓடுதா? எல்லாரும் போய் வேலையைப் பாருங்க!” தேவா கூட்டத்தைப் பார்த்து கோபத்தில் கத்த, அனைவரும் குடுகுடுவென ஓடிச்சென்று தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

ஆதிரை கடைசி குடுவை பாலையும் சோதனை செய்து முடிவைப் பதிந்தவள், மெதுவாய் வெளியே எட்டிப் பார்த்தாள். தேவா கையிலிருந்த இரத்தத்தைக் குழாயில் கழுவிக் கொண்டிருந்தான். அவனை சில நொடிகள் யோசனையாய்ப் பார்த்தவளின் செவியில் மெல்லிய முனங்கல் விழ, வாயிலைப் பார்த்தாள். அவளது இருசக்கர வாகனத்தின் அருகேதான் நின்றிருந்தான் திவினேஷ். இரத்தம் வழிய நின்றவனைப் பார்த்து சட்டென இவளுக்கு இரக்கம் சுரந்தது. அதுவும் வலியில் முகம் சுளித்தபடியே அவன் நிற்பதைப் பார்த்தவளுக்கு என்ன பிரச்சனையாக இருப்பினும் இத்தனைக் கடுமையாய் தேவா அடித்திருக்க வேண்டாம் என மனம் திவினேஷூக்காகப் பரிதாபப்பட்டது.

இவளது இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்று யாருக்கோ அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன். தன்னால் இப்போது இருசக்கர வாகனத்தை இயக்க முடியாது எனத் தோன்றவும் நண்பனை அலைபேசியில் அழைத்தான். ஆதிரை விறுவிறுவென உள்ளே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவனருகே செல்ல, அவளணிந்திருந்த மெல்லிய கொலுசின் ஒலி தேவாவைக் கலைக்க, இவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

“எக்ஸ்யூக்ஸ்மி, உங்களுக்கு பஸ்ர்ட் எய்ட் பண்ணி விடவா? யூ ஆர் நாட் வெல்?” என இவள் அனுமதி கேட்டு அவன் பதிலளிக்கும் முன்னே அவன் மூக்கிலிருந்த இரத்தத்தை சுத்தம் செய்தாள்.

“பரவாயில்லை... இருக்கட்டும்ங்க!” என அவன் தடுக்க, “ப்ம்ச்... எனக்கொரு தம்பி இருந்தா பண்ணி இருக்க மாட்டேனா?” என அவள் கேட்டு அவன் குருதியைத் துடைத்து பஞ்சை வைத்து அழுத்த, “ஷ்...” என முகத்தை சுளித்தவன், “என்னங்க பொசுக்குன்னு தம்பின்னு சொல்லிட்டீங்க. பார்க்க சின்ன பொண்ணா தெரியுறீங்க...” என அவன் கூற, கீழக் கண்ணால் அவனை முறைத்து காயத்தில் பஞ்சை வெடுக்கென அழுத்திவிட்டாள்.

“ஐயோ... வலிக்குதுங்க!” அவன் அலற, பின்னர் முகத்திலிருந்த சிராய்ப்புகளுக்கும் காலிலிருந்தவற்றிற்கும் மருந்தை தடவிவிட்டவள், “ரொம்ப வலிச்சா இந்த டேப்லெட்டைப் போடுங்க!” என்றாள் அவன் கையில் மாத்திரையைக் கொடுத்து.

“நீங்க டாக்டரா? அதான் பார்க்க க்யூட்டா இருக்கீங்க? பார்பி டால் மாதிரி!” அவன் கூறவும், நிமிர்ந்து அவனை முறைத்த ஆதிரை, “இப்படித்தான் தேவா சார் வீட்டு கேர்ள்ஸ் கிட்டே வம்பிழுத்தீங்களா என்ன? அதான் வெளுத்து விட்டுட்டாரா?” எனக் கேலியாகக் கேட்பாள்.

அதில் ரோஷம் வரப் பெற்றவன், “ப்ம்ச்... வம்பு எல்லாம் பண்ணலைங்க. நான் அவர் தங்கச்சியை சின்சியரா லவ் பண்றேன். பொண்ணு கேட்டேன். கொடுக்க மாட்டேன்னு சொல்லி அடிச்சுட்டான்!” என இவன் கடுப்புடன் கூற,

“இன்னும் காலேஜ் கூட கம்ப்ளீட் பண்ணலை. இந்த வயசுல இதெல்லாம் வர்றது சகஜம்தான். பட் லவ்னு நம்ப கன்ப்யூஸ் பண்ணிக்கிறோம். இது ஜஸ்ட் ஈர்ப்புதான். இதைக் கடந்துடணும். அப்போதான் லைஃப் நல்லா இருக்கும்!” என்றாள்.

“ஏங்க... அவனும் அப்படித்தான் சொல்றான். நான் என்ன சின்னக் குழந்தையா? காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்யாசம் தெரியாத வயசுலயா இருக்கேன். ஐ யம் ட்வென்டி த்ரீ. ஐ க்நோ எவ்ரிதிங்க்!” அவன் ரோஷமாய்க் கூற, இவளுக்கு முறுவல் பிறந்தது. ஏனோ இருபதுகளின் தொடக்கத்தில் தன்னைப் பார்ப்பது போலிருந்தது. அவளும் இப்படித்தானே கட்டுபாடற்ற சுதந்திரத்தின் ஒவ்வொரு நொடியையும் யோசிக்காது தன்னிஷ்டத்திற்கு வளைத்திருந்தாள். அதை நினைக்கையில் உதடுகள் கசந்து வழிந்தன.

அவனைப் பார்த்தவள், “உங்களைப் பார்க்கும் போது என்னை சின்ன வயசுல பார்க்குற மாதிரியே இருக்கு. இப்போ பேசுறதுக்கு எல்லாம் நல்லா இருக்கும். பட் ஆப்டர் தேர்ட்டி லைஃபை தொலைச்சுட்டு நிப்போம். அப்போ வருத்தப்பட்டா தொலைச்ச வாழ்க்கை கிடைக்காது. நல்லா படிச்சு முடிச்சு சொந்தமா சம்பாரிச்சு ஒரு பொண்ணைப் பார்த்துக்க முடியும்னு நம்பிக்கை வரப்போ வந்து உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ண அப்ரோச் பண்ணுங்க. கண்டிப்பா அப்போ யாரும் உங்களை ரிஜெக்ட் பண்ண மாட்டாங்க. கன்சிடர் பண்ண வாய்ப்பு அதிகம். நம்ப யார்ன்றதை விட நம்ப எப்படி இருக்கோம்ன்றதுதான் முக்கியம். பக்குவமில்லாத வயசுல படிச்சு கூட முடிக்காம கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து நின்னா யாரா இருந்தாலும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்க!” என்றாள் பொறுமையாய்.

“அதுக்காக அவன் அடிச்சது சரின்னு சொல்ல வர்றீங்களா?” இவன் கோபத்தில் இரைந்தான்.

“அவர் அடிச்சதை நான் நியாயப்படுத்தலை ப்ரதர். உங்களோட தகுதியை வளர்த்துட்டு வந்து பொண்ணு கேளுங்க. அவரே உங்களை ரிஜெக்ட் பண்ண முடியாத அளவுக்கு நீங்க நல்ல பொஷிசன்ல இருக்கணும். உண்மையா அந்தப் பொண்ணை லவ் பண்ணா, நல்லா படிச்சு முன்னேற வழியைப் பாருங்க!” என்றவள் இரண்டு எட்டுகள் வைத்தாள்.

“ஏங்க, உங்கப் பேரை சொல்லலை?” அவன் மெலிதாய்க் கத்த, “ஆதிரையாழ்...” தேவா பல்லைக் கடித்து அவளை அழைத்தான்.

“நைஸ் நேம்ங்க!” என்ற திவினேஷ், “தேங்க் யூ ஃபார் அட்வைஸ். பொதுவா அட்வைஸ் பண்ற யாருக்கிட்டேயும் நான் பொறுமையா கேட்டது இல்ல. பட் நீங்க அழகா இருந்தீங்க. அதனாலே கேட்டேன். ஐ வில் ட்ரை டூ ஃபாலோ!” என அவன் கூற மென்மையாய் அவனை முறைத்து விட்டு தேவாவின் முன்னே சென்று நின்றாள் ஆதிரை.

“ஹம்ம்... வெல், நான் என்கிட்டே வேலை பார்க்க உங்களுக்கு சேலரி தர்றனா? இல்ல இப்படி போற வர்றவங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண தரேனா?” என பல்லைக் கடித்தான் அவன்.

“சாரி சார், டைம் இப்போ ஃபைவ் டென் ஆகிடுச்சு அண்ட் என் வொர்க் எல்லாத்தையும் முடிச்சுட்டுத்தான் நான் அவருக்கு ஹெல்ப் பண்ண போனேன். யூ கேன் செக்!” ஆதிரை ஆய்வகத்தை நோக்கி கையைக் காண்பிக்க, அவளை உறுத்து விழித்தான்.

“உங்க பொது சேவையை என் கேம்பஸ்குள்ள பண்ண ரைட்ஸ் இல்ல!” இப்போது அவன் எள்ளலாய்க் கூற, மெல்லிய பெருமுச்சுடன் அவன் முகத்தை ஊன்றிக் கவனித்தவள், “யெஸ், உங்க ப்ளேஸ்ல பொது சேவை செஞ்சது தப்புதான் சார். பட், ஒன் திங்க், அவரை நீங்க இப்படி மேன் ஹேண்டில் பண்ணி இருக்க வேணாம். திஸ் இஸ் பார் தி சேக் ஆஃப் யுவர் சிஸ்டர். இந்த வயசுல ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம வந்து நிக்கிற சின்ன பையன்கிட்டே பொறுமையா பேசி இருக்கலாம். யாரு வேணா கோபப்படலாம், கத்தலாம் அடிக்கலாம். பட், எல்லா சிட்சுவேஷனையும் நிதானமா கையாள்றது ரொம்ப கஷ்டம். ஏன்னா அந்தப் பையன் ரிவெஞ்ச் எடுக்குறேன்னு உங்க தங்கச்சிக்கிட்டே வம்பு பண்ண கூடாதுல்ல. ட்வென்டி போர் இன்டு செவன் நீங்க உங்க தங்கச்சிக்கு காவல் காப்பீங்களா என்ன?” எனக் கேட்டவள், “
அண்ட் சாரி டூ... திஸ் இஸ் நாட் மை பிஸ்னஸ். சொல்லணும்னு தோணுச்சு!” என்றாள்.
 
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,173
Points
113
.

“தேங்க் யூ ஃபார் யுவர் அட்வைஸ் மிஸ் ஆதிரையாழ். திஸ் இஸ் மை ப்ராப்ளம். ஆஸ் யூ டோல்ட் திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ். குடுக்குற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதும். இந்த வேலையெல்லாம் அவசியம் இல்லாதது!” என்றான் பல்லை நறநறத்து.

அவன் முகத்தைப் பார்க்காது விறுவிறுவென உள்ளே சென்ற ஆதிரையாழ் எல்லாவற்றையும் எடுத்து தன் மேஜையில் வைத்துப் பூட்டிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப, தர்ஷினியும்‌ கோமதியும் அவள்பின்னே தேவாவின் அலுவலக அறைக்குள் நுழைந்து கையெழுத்திட்டு வெளியேறினர். தேவாவின் பார்வை தன்னை துளைப்பதை ஆதிரையாலும் உணர முடிந்ததுதான். ஆனாலும் பெரிது படுத்தவில்லை அவள்.

பெரிதாய் யார் விடயத்திலும் தலையிட மாட்டாள்தான். ஆனால் இன்றைக்கு திவினேஷை அத்தனை காயங்களுடன் கண்டதும் மனது கேளாமல் உதவி செய்திருந்தாள். தேவாவிடம் தான் பேசியது அதிகப்படி என்று புத்தி எடுத்துரைத்தாலும் ஒரு பெண்ணின் விஷயம் என்பதால் அவளால் பேசாதிருக்க முடியவில்லை. அவள் வரையில் தோன்றியதை கூறிவிட்டாள். பின்னர் தேவாவின் பாடு, அவன் தங்கையின் பாடு என மனம் கூற, வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

அடுத்தடுத்த நாட்கள் வேகமாய் ஓடின. தேவா ஆதிரையைக் கடித்துக் குதறும் எண்ணத்தில் இருந்தான். அவள் எதாவது சிறு தவறு செய்துவிட மாட்டாளா என அவன் கண் கொத்திப் பாம்பாய் கவனிக்க, அவள் அத்தனை கவனமாய் இருந்தாள். சாதாரண நாட்களிலே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க காத்திருப்பான் தேவநந்தன். அப்படி இருக்கையில் இவள் அவன் முகத்தில் எண்ணெயை அல்லவா ஊற்றிவிட்டாள். தானே கடுகாய் மாறிவிடக் கூடாது என்று வெகு சிரத்தையாக வேலை செய்தாள். எங்கேயும் சிறு பிழைகள் கூட இடவில்லை. நேரத்திற்கு வந்து வேலை நேரம் முடிந்ததும் கிளம்பினாள். ஓரிரு வாரங்கள் கழிந்திருந்தது.

அன்றைக்கு காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து முடித்து இரவு உடையை ஒன்றை அணிந்து கொண்டு பரபரப்பாய் சமையலில் ஈடுபட்டாள். அபினவ்க்கு எட்டாவது பிறந்தநாள் இது. யாருமற்று தனித்து கிடந்த வாழ்வின் கசப்பை ஒட்டு மொத்தமாக நீர்த்துப் போகச் செய்த நாள் இது. முழுதாய் எட்டு வருடங்கள் யாரும் இல்லாது ஒரு குழந்தையைத் தனியாளாக வளர்த்திருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு மலைப்பாய் இருந்தது. இதைப் பத்து வருடங்களுக்கு முன்பு யாராவது கூறி இருந்தால் சிரித்திருப்பாள். ஆனால் இப்போது எல்லாம் நடந்து முடிந்திருந்தது.

எட்டு வருடங்கள் ஒன்றும் அத்தனை எளிதாய் எல்லாம் கடந்துவிடவில்லை. குழந்தையை தனியாகப் பெற்று எப்படி வளர்ப்பது எனத் தெரியாது தடுமாறி, அபினவ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாட்களில் அழுது கரைந்து, பின்னர் யாரும் தேற்ற மாட்டார்கள் என உணர்ந்து அவளே அனைத்தையும் கடக்கப் பழகி இருந்தாள். பத்து வருடத்திற்கு முன்னர் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என தான் தோன்றித்தனத்துடன் அசட்டையாய் இருந்த
ஆதிரை எங்கோ தொலைந்திருந்தாள். இப்போதெல்லாம் இவளிடம் நிறைய முதிர்ச்சி வந்திருந்தது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யவில்லை. எல்லாவற்றையும் நிதானமாக நான்கு முறை யோசித்தே செய்கிறாள். அதற்கு அபினவும் ஒரு காரணம். அவளுக்கு எப்படி அவனை விட்டால் வேறு உறவு இல்லையோ, அதே போல அவனுக்குமே ஆதிரையைத் தவிர யாருமில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாய் நாட்களை கடத்திக் கொண்டிருந்தனர்.

இவள் மகனுக்கு விருப்பமான உணவுகளைத் தயாரித்து முடித்து அவனை எழுப்ப சென்றாள். “என்னோட தங்கப்புள்ளை எழுந்திரிங்க, அபி கண்ணா எழுந்திரி டா!” என உறங்குபவனை மெல்ல உசுப்பினாள். கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்தவன் தாயைக் கட்டிக் கொண்டு அவள் தோளில் தலையை சாய்த்தான்.

“ஹேப்பி பெர்த் டா டா அபி!” எனக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட, படக்கென்று கண் விழித்திருந்தான் சிறுவன்.

“ம்மா... டுடே என் பெர்த் டே வா?” அவன் கண்ணை விரித்து ஆச்சரியமாகக் கேட்க, இவளுக்கு புன்னகை முளைத்தது.‌

“ஆமா டா செல்லம். என் தங்கத்துக்கு இன்னைக்குத்தான் பெர்த் டே. ஹேப்பி ஹேப்பி பெர்த் டே டூ யூ அபிமா!” என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“தேங்க் யூ மா!” என அவனும் தாயின் கன்னத்தை எச்சில் செய்தான்.

“இன்னைக்கு அம்மா உன்னைக் குளிக்க வைக்கிறேன் டா, வா!” அவனைக் கைகளில் அள்ளினாள்.

“நேமா... நான் பிக் பையனாகிட்டேன். நானே குளிச்சிக்கிறேன்...” என அவன் கூறுவதை கேட்காது அவள் குளியலறைக்குச் சென்று சுடுநீர் குழாயைத் திறந்துவிட்டாள். பின்னர் அவனுடைய கால் சராயில் கையை வைக்க, “ம்மா... நானே குளிச்சிக்கிறேன் மா...” என அவன் நெளிய, இவளுக்கு சிரிப்பு வந்தது.

“டேய்... நான் உன் அம்மா டா. என்ன வெட்கம் வேண்டி கிடக்கு!” என அவன் உடைகளைக் களைய, “ம்மா... ஷைய்யா இருக்குமா...” என அவன் சிணுங்க, சிரிப்புடனே அவனைக் குளிக்க வைத்தாள்.

அவள் வாங்கி வந்திருந்த இளம்பச்சை நிற சட்டையும் கருப்பு கால்சராயும் வெகு பாந்தமாய் அபிக்குப் பொருந்திப் போனது. கண்ணாடி முன்னே சென்று முடியைக் கோதியவன், “ம்மா... எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.

“என் மகனுக்கு என்ன குறை? ராஜா மாதிரி இருக்க டா...” என அவனைத் தூக்கி சுழற்றி முகம் முழுவதும் முத்தமிட்டாள். அவன் வெட்கத்துடன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

“இன்னைக்கு உனக்குப் பிடிச்ச மெனுதான் அபிமா!” என அவனுக்குப் பிடித்த பூரி, பன்னீர் மசாலா, முட்டைப் பொரியல்,
மதியத்திற்கு நெய் சோறு, உருளைக் கிழங்கு வறுவல், காய்கறி குருமா, வெங்காய அப்பளத்தோடு இனிப்பிற்காக குலோப் ஜாமுன் மற்றும் பாயசம் என அனைத்தையும் சமைத்திருந்தாள். தானே அவனுக்கு ஊட்டிவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள்.

“ம்மா... ருக்கு பாட்டீக்கு சாக்லேட் கொடுத்துட்டு வரேன்!” என டப்பா நிறைய இன்னெட்டுகளோடு அவன் எழுந்து ஓட, இவள் அறைக்குள் நுழைந்து ஏற்கனவே எடுத்து வைத்திருந்த அடர் காயாம் பூ நிறத்திலிருந்த காதிப் புடவையை உடுத்தி தோளில் ஒற்றையாய் தவழவிட்டிருந்தாள். அதற்குத் தோதாக கருப்பும் வெள்ளையும் கலந்த மேல்சட்டை எடுப்பாய் இருந்தது.

தலையை உலர்த்தியவள் குதிரை வாலிடாமல் சிறிய க்ளிப் ஒன்றில் அதை அடக்கி நேற்றைக்கு வாங்கி வைத்த மல்லிகைப் பூவை சூடி நெற்றியில் பொட்டை இட்டுக் கண்ணாடியில் பார்க்க, வெகு நாட்களுக்கு கழித்து தானே அழகாய் இருப்பதாய் ஒரு எண்ணம் தோன்றியதும் முகம் மலர்ந்தது. எப்போதென்று சரியாய் தெரியவில்லை எனினும் உடைகள், அலங்காரங்கள் மீதிருந்த மோகம் வடிந்திருக்க, இப்போதெல்லாம் பெரிதாய் சிரத்தை எடுத்து தன்னை அலங்கரிக்க மாட்டாள். ஒருவேளை யாரேனும் உடனிருந்து அழகாய் இருக்கிறாய் அது நன்றாக இருக்கிறது இந்த உடை பாந்தமாய் இருக்கிறது எனக் கூறியிருந்தால் தன்னை அலங்கரித்திருப்பாளோ என்னவோ?

கீழே சென்றிருந்த அபினவ் பத்து நிமிடங்கள் கழித்தே மேலே வர அவன் கையில் இருநூறு ரூபாய் தாள் ஒன்றிருந்தது. ஆதிரை அவனைக் கண்டனமாய்ப் பார்க்க, “நோம்மா... அபி வேணான்னுதான் சொன்னான். பட் தாத்தா தான் கம்பெல் பண்ணாங்க. நான் போய் திருப்பிக் கொடுத்துட்டு வரவா மா?” என அவன் பயந்த விழிகளுடன் கேட்டான்.

பிறந்த நாளன்று அவனைத் திட்ட மனமற்றவள், “இட்ஸ் ஓகே அபி, இனிமே யார்கிட்டேயும் காசு வாங்க கூடாது!” என்றாள் சிறு கண்டிப்புடன்.

“ஷ்யூர் மா...” எனப் புன்னகையுடன் ஓடிச் சென்று இன்னெட்டு டப்பாவை பள்ளிப் பையில் வைத்து அதை தோளில் மாட்டினான். இருவரும் அருகிலிருந்த கோவிலுக்குச் சென்றனர். மகன் பெயரில் அர்ச்சனை செய்தாள் ஆதிரை. பின்னர் அவனைப் பள்ளியில் இறக்கிவிட்டாள்.

“ஐ லவ் யூ மா... பாய் மா!” என அவன் உற்சாகத்துடன் உள்ளே ஓட, சின்ன சிரிப்புடன் அவனைப் பார்த்திருந்தாள். மாலை சீக்கிரம் வந்து தானே அவனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொள்வதாகவும் அப்படியே வெளியே ஊர் சுற்றலாம் என ஆதிரை வரும் வழியில் உரைத்திருக்க, அதனாலே படு உற்சாகத்துடன் பள்ளி சென்றான் சிறியவன்.

ஆதிரை புன்னகை வாடாது பால்பண்ணைக்குள் நுழைய, புதிது புதிதாய் ஆங்காங்கே வாகனங்கள் நிற்க, வாயில் வரை யார் யாரோ நின்றிருந்தனர். இவள் வாகனத்தை நிறுத்திவிட்டு யோசனையுடன் உள்ளே எட்டிப் பார்த்தாள். உணவுத் தரக்கட்டுப்பாட்டு துறையிலிருந்து சோதனைக்கு ஆட்கள் வந்திருப்பார்களோ என இவளுக்கு எண்ணம் ஓடியது. இதற்கு முன்னே இரண்டு முறை சோதனை நடந்திருக்கிறதே.

கொஞ்சம் உள்ளே நுழைந்து அவள் எட்டிப் பார்க்க, கையில் புகைப்பட கருவியுடன் நிறைய ஆட்கள் நிற்க, நடுநாயகமாக வெளை வெளீரென இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் நின்றிருந்தனர்.

“அண்ணா, என்ன பண்றாங்க?” ஆதிரை ஊழியர் ஒருவரிடம் கேட்க, “விளம்பர படம் எடுக்குறாங்க மேடம். நம்ப பண்ணை இனிமே டீவில வருமாம்!” அவர் ஆர்வத்துடன் கூற, “ஓ...” எனக் கேட்டவளுக்கு அதைப் பார்க்கும் ஆர்வம் கிஞ்சிற்றும் இல்லை.

நேரே ஆய்வகத்திற்குள் நுழைந்தவள் வருகைப் பதிவேட்டில் பதிந்துவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். வழக்கத்தை விட அனைத்து இயந்திரங்களும் இன்னுமே பளபளவென்றிருந்தது. தரையும் பளிச்சென மின்ன, கண்டிப்பாக இது விளம்பரத்திற்காக சிரத்தை எடுத்து செய்திருப்பார்கள் என புரிய, அங்கே இடையில் நுழைய அவளுக்கு விருப்பமில்லை.

இவள் சென்றால் அனைவருடைய பார்வையும் தன் மீதுதான் விழும் என்று உணர்ந்தவள் குளிரூட்டும் அறைக்குச் சென்று வெப்பநிலையைக் குறித்துக் கொண்டு அப்படியே எத்தனை பால் பொத்தல்கள் உடைந்திருக்கின்றன என்பதை மட்டும் சோதித்து வந்து பதிந்தாள்.

அன்றைக்கு வெறும் ஐந்து பால் மாதிரிகள் மட்டுமே இருந்தன. இங்கு விளம்பரம் எடுப்பதால் தேவா அந்தப் பண்ணைக்கு பாலை கைமாற்றியிருக்கக் கூடுமென எண்ணியவள் வேலை குறைந்தால் நல்லது என்ற எண்ணத்தோடு வேலையைத் தொடங்கினாள். தர்ஷினியும் கோமதியும் எப்போதடா வேலையில் இருந்து தப்பிக்கலாம் என எண்ணுபவர்கள். அப்படி இருக்கையில் இன்றைக்கு கண்டிப்பாக வர மாட்டார்கள் என புரிய, சற்றே கோபம் வந்தது. வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்க்க முடியாதவர்கள் ஏன் வேலைக்கு வர வேண்டும் என மனதிலே அவர்களை அர்சித்தவாறே வேலையைத் தொடர்ந்தாள்.

பிரபல தொலைக்காட்சியில் கதாநாயகியாக நடிக்கும் அந்த நடிகை ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு ஒப்பனைகள் நடந்து கொண்டிருந்ததது. நாற்பதை தொட்டாலும் இன்னும் முப்பது போலிருந்தது அவரது தோற்றம். அருகே இன்னுமோர் துணை நடிகை அமர்ந்திருக்க, இரண்டு ஆண் நடிகர்கள் உடனிருந்தனர். மொத்தக் கூட்டமும் அவர்களைத்தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“மச்சான், நீ கொடுத்த ஐடியாதான் டா. ஒரு ட்ரையல் பார்த்துட்டு ஷூட் போகலாம்!” ராகேஷ் தேவாவிடம் கூறிவிட்டு, இயக்குநரிடம் தலையை அசைக்க, நடிகர்கள் தங்களுக்குரிய வசனங்களை ஒருமுறை மனதில் கூறிக் கொண்டே அவர்கள் எழுந்து நிற்க, “ஆக்ஷன்...” என இயக்குனர் கத்தியதும் காணொளி தொடங்கியது. முதலில் இரண்டு பெண்கள் பேசுவதைத் தொடர்ந்து அப்படியே பத்து நொடிகள் மொத்த பண்ணையும் சேர்த்து காணொளியாய் பதிவு செய்து அப்படியே அவர்கள் குடும்பத்தோடு கையில் ஒரு குழந்தையுடன் உழவர் துணை பால் பொத்தலுடன் முடிந்தது.

“ட்ரையல் ஓகே,‌ பட், மேடம் உங்க டையலாக்கை ரொம்ப ஸ்லோவா பேசுறீங்க அண்ட் எக்ஸ்ப்ரஷன் பத்தலை!” என இயக்குநர் திருத்தங்கள் கூற,‌ தேவாவும் அவர் கூற்றை ஆமோதித்தான். அவனுடைய திட்டம்தான், ஆனாலும் இன்னும் சிறப்பாய் வர வேண்டும் என்று எதிர்பார்த்தான். யோசனையுடன் கால்சராயில் கையை வைத்து அலைபேசியைத் துழாவினான். அது அகப்படாமல் போக, அறையில் வைத்திருப்போம் என அதை எடுக்க அகன்றான்.

அலைபேசியை எடுத்துக்கொண்டு நடந்தவனின் நடை நிதானப்பட, அப்படியே பின்னோக்கி எட்டுகள் வைத்து சோதனைக் கூடத்தை எட்டிப் பார்க்க, ஒருவருமற்று ஆதிரை மட்டும் வேலையில் கவனமாய் இருந்தாள். சோதனைக் குழாயில் அமிலத்தை அவள் வெகு சிரத்தையாக நிரப்ப, இவன் எதுவும் பேசாது அவளைப் பார்த்தான். சில பல நாட்களுக்கு முன்னர் நடந்த வாக்குவாதத்திற்குப் பின்னர் இருவரும் பெரிதாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஆதிரை வேலை சம்பந்தமாக அவனிடம் அனைத்தையும் கூறுவாள். இவன் தலையை மட்டும் அசைத்து ஏற்றுக் கொள்வான்.

ஆதிரைப் பேசியதன் நியாயம் அவனுக்குப் புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள ஆண் என்ற அகந்தை தடுத்துவிட்டதா? என்றால் அவனின் பதில் இல்லை. ஏனோ தன்னுடைய குடும்ப விடயத்தில் மூன்றாவது பெண் தலையிடுவதில் விருப்பம் இல்லாததினால்தான் அன்றைக்கு சுள்ளென்று பேசிவிட்டான். மற்றபடி ஆதிரை மேல் தனிப்பட்ட கோபம் இல்லை. அதுவும் அல்லாது அன்றைக்கு அனைவரும் வேலையை விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க, அவள் மட்டும்தானே அலுவலில் கவனமாய் இருந்தாள். இன்றைக்கும் அவள் மட்டும் வேலை பார்த்ததில் இவனது புருவங்கள் ஏறியிறங்கின.
காயாம் பூ நிறப் புடவை அவளைப் பளிச்சென காட்டியது. ஆதிரைக்கு யாரோ தன்னை ஊற்று நோக்குவதாய் ஓர் எண்ணம் தோன்ற, படக்கென திரும்பி பார்த்தாள்.‌ தேவநந்தன்தான் நின்றிருந்தான்.

அவள் அப்படி திரும்பியதும் அவனிடம் தடுமாற்றமோ அதிர்ச்சியோ இல்லை. வெகு நிதானமாக அவளைப் பார்த்தவன், “ஆதிரையாழ், வொர்க்கை ப்ரேக்குக்கு அப்புறம் கூடப் பார்க்கலாம். யூ கேன் ஜாய்ன் வித் தெம்!” என்றான் கையை அங்கே காண்பித்து.

“நோ சார், நான் இன்னைக்கு டூ ஹவர்ஸ் பெர்மிஷன் கேட்டிருக்கேன். சோ, வேலையை சீக்கிரம் முடிச்சா பெட்டரா இருக்கும் சார்!” அவள் கூற, தேவா சில நொடிகள் யோசித்தான்.

“கோமதியும் தர்ஷினியும் இருக்காங்களே ஆதிரையாழ். அவங்ககிட்டே வொர்க்கை கொடுத்துட்டு போங்க!” அவன் கூறியதும் நிமிர்ந்து பார்த்தவளின் உதடுகளில் கேலிப் புன்னகை.

“அவங்ககிட்டே கொடுத்துட்டு போனா நாளைக்கு பால் டெலிவரி பண்ண முடியாம கூட போகலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ் சார். யு க்நோ தெம்!” என்றாள். அவனுக்குமே கோமதி மற்றும் தர்ஷினியின் வேலை பற்றி தெரியுமே. அதனால் எதுவும் கூறாது அகன்றான்.

விளம்பரம் எடுக்கும் பணிகள் வேக வேகமாக நடக்க, “ஓகே கைய்ஸ், எல்லாரும் போய் வொர்க்கைப் பாருங்க!” என அனைவரையும் அனுப்பி வைத்தான்.

“க்கா... நீங்க ஏன் வரலை? அந்த லட்சுமி சீரியல் ஹீரோயினை கிட்ட பார்த்திருக்கணும். என்ன கலரு, என்ன அழகு?” என தர்ஷினி சிலாகிக்க, ஆதிரை பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

“இந்த சாம்பிளை போட்டு முடி தர்ஷினி!” என அவள் கூற, இவள் முகத்தைக் கோணிவிட்டு வேலையை செய்தாள். மதிய உணவு உண்டு முடிய, ஆதிரை எல்லாவற்றையும் கணினியில் சேமித்து அதை மூடி வைத்துவிட்டு நேரம் பார்க்க, மூன்றைத் தொட்டிருந்தது. தேவாவின் அறைக்குள் நுழைந்தாள். அவன் அங்கில்லை, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு அவனை நோக்கிச் சென்றாள்.

இன்னும் விளம்பரம் எடுத்து முடியவில்லை. ஏனோ துணை நடிகையின் நடிப்பு அவனுக்குத் திருப்தியாய் இல்லை‌. அவள் வேற்று மொழியினத்தவள் என்பதால் வசனங்கள் கூட சரியாய் வரவில்லை. வாயையும் சரியாய் அசைக்காது போக, இவனுக்கு மண்டைக் காய்ந்தது.

“மச்சான், அந்தம்மா நைட் வரைக்கும் இருந்து கூட ஷூட்டை முடிச்சுக் கொடுத்துட்றேன்னு சொல்லிட்டாங்க. கூட இருக்க கோ ஆர்டிஸ்ட்தான் சொதப்புறாங்க. வேற ஆள் திடீர்னு எப்படி ரெடி பண்ண? நாளைக்கு பண்ணலாம்னா டபுள் பேமெண்ட் கேட்கும் அந்தம்மா!” என ராகேஷ் புலம்ப, தேவாவிற்கும் அதே யோசனைதான்.

நாளைக்கும் வேலை கெட்டுவிடும். வேறு எதாவது செய்யலாமா என இருவரும் கலந்தாலோசிக்க, “சார்...” என்ற குரல் தேவாவைக் கலைத்தது.

“யெஸ்...” என அவன் திரும்ப, “நான் கிளம்புறேன் சார்!” என்றாள். அவன் தலையை அசைக்க ஆதிரையாழ் அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

“மச்சான், இந்தப் பொண்ணு?” என ராகேஷ் இழுக்க, “ஆதிரையாழ், லேப்ல வொர்க் பண்றாங்க!” என்றான்.

“சூப்பர் டா... அவங்களை கூப்பிடு அந்த கோ ஆர்டிஸ்ட்க்கு ரிப்பிளேஸ் பண்ணிடலாம். அவங்களை விட இந்த பொண்ணு பார்க்க நல்லா இருக்காங்க. கொஞ்சம் மேக்கப் அண்ட் காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணா போதும் டா. ஷீ வில் பெர்பெக்ட்லி சூட் ஃபார் திஸ் ஆட்!” என ராகேஷ் கூற, தேவா யோசனையுடன், “நோ ராக்கி, அவங்க ஒத்துக்க மாட்டாங்க!” என்றான்.

“டேய்... இதென்ன சீரியல் மாதிரி டெய்லியா எடுக்கப் போறோம். ஒன் மினிட் ஆட். மிஞ்சி போனா டூ ஹவர்ஸ்ல ஓவராகிடும். நீ கூப்ட்டு பேசுடா. நமக்கும் வேலை முடியும்!” ராகேஷ் நச்சரிக்க, “மிஸ் ஆதிரையாழ்!” என தேவா கத்தி அழைத்தான்.

தன் வாகனத்தில் சாவியை நுழைக்கச் சென்றவள் அவன் அழைத்ததும் மீண்டும் உள்ளே நுழைந்தாள். “சார் கூப்டீங்களா?” என அவள் கேட்க, தேவா அவளைத்தான் பார்த்தான். பருக்கள் இல்லாத மாசு மருவற்ற முகம். துடைத்து வைத்தது போலிருக்க, குதிரை வாலில் அடக்காது முடியை தளர விட்டிருக்க அது தோள்பட்டையைத் தாண்டி சற்றே கீழிறங்கி இருந்தது. மடிப்பெடுக்காதுவிட்டு இழுத்து போர்த்தியிருந்த சேலையோடு நின்ற ஆதிரை இந்த விளம்பர படத்திற்கு வெகு சரியாய் இருப்பாள் என தேவாவின் மனமும் ஒப்புக் கொண்டது.

“சிஸ்டர், நான்தான் கூப்பிட சொன்னேன். நீங்க இந்த ஆட்ல நடிச்சு கொடுக்கணும். கோ ஆர்டிஸ்ட் எங்களுக்கு சாட்டிஸ்பைடா இல்ல!” ராகேஷ் அவள் முகம் பார்த்து உரைத்தான்.

ஒரு நிமிடம் அவன் கூற்றில் திகைத்தவள், “நோ சார், எனக்கு ஆக்டிங்க்ல விருப்பம் இல்ல!” என்றாள் மறுப்பாக.

“சிஸ்டர், பெருசா எல்லாம் ஆக்ட் பண்ண வேணாம். ஒரு நிமிஷம் கூட இருக்காது ஆட். அதுல நீங்க டென் செக்ண்ட்ஸ்தான் வருவீங்க. உங்க ஃபேஸ் இதுக்கு நல்லா சூட் ஆகும். இது மூலமா பெரிய பெரிய சான்ஸ் கூட கிடைக்கும்!” ராகேஷ் என்னென்னவோ கூறி அவளை சம்மதிக்க வைக்க முயல, ஆதிரை முடியாது என்று ஒரேடியாய் மறுத்துவிட்டாள்.

“ஆதிரை, நீங்க இதுல நடிக்கணும்!” இத்தனை நேரம் அமைதியாய் இருந்த தேவா பேச, அவன் புறம் திரும்பியவள் அழுத்தமாய் தலையை முடியாது என அசைத்தாள்.

“நீங்க நடிச்சு கொடுத்தே ஆகணும். இது என்னோட ஆர்டர்!” என்றவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தவள், “சாரி சார், லேப்ல வொர்க் பண்றதுதான் என் வேலை. ஆட் ஷூட்டிங்க் நடிக்கிறது எல்லாம் என் வேலை இல்ல!” என்றாள் வெடுக்கென்று. நேரம் வேறு சென்று கொண்டே இருந்தது. தனக்காக அபி ஆசையாய் காத்திருப்பானே என தாயாய் மனம் மகனைச் சுற்றியது.

“வெல், நடிக்கலைன்னா நீங்க இங்க வேலையைக் கண்டினியூ பண்ண முடியாது!” என்றான் அழுத்தமாய்.

ஒரு நொடி அவன் கூற்றில் அதிர்ந்த ஆதிரை, “கம் அகைன் சார்!” என்றாள்.

“நீங்க கேட்டது சரிதான். ஆட்ல நடிச்சா இங்க வேலை. இல்லைன்னா யூ கேன் லீவ் த ஜாப்!” என்றான் அவளை உறுத்து விழித்து.

“ஓ... பைன் சார், அப்படி ஆக்ட் பண்ணித்தான் இந்த வேலையைத் தக்க வச்சுக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. நாளைல இருந்து நான் வேலைக்கு வர மாட்டேன் சார். லாக் புக் எல்லாம் கரெக்டா சப்மிட் பண்ணிட்டேன். மந்த் எண்டிங் என்னோட சேலரியைக் கொடுத்துடுங்க. என்னோட ரிசைக்னேஷன் லெட்டரை ஈமெயில் பண்ணிட்றேன். தேங்க் யூ சார்!” அதிராமல் புன்னகைத்தவள் விறுவிறுவென நடக்க, “என்னடா இப்படி ஆட்டிட்யூட் காட்டுறா!” என ராகேஷ் முணுமுணுக்க, தேவா ஆதிரையைத்தான் பார்த்
திருந்தான். யாரையும் அலட்சியம் செய்யாது அவள் கிளம்ப, இவன் அவளை உறுத்துப் பார்த்தான்.

தொடரும்...














 
Well-known member
Messages
377
Reaction score
262
Points
63
Rendu perumae avanga vishyathula correct ah irukaga so velai ah thavira vera ethachum keta no na ra response than varuthu.
Deva ku avan family vishyathula third person involve aagurathu pidikkala na ra mathiri avaluku add la act panna pidikkala avolo than ivan attitude kattuna bathil ku aval um atha than kattuva ah
 
Top