ஜென்மம் 2:
நந்தவனம் இதோ
இங்கே தான்
நான் எந்தன்
ஜீவனை முதல்
முறை பார்த்தேன்…
பல மணி நேரங்களை கடந்து அவர்கள் சென்ற மகிழுந்து சிங்கார சென்னையை அடைந்திருந்தது.
சாளரத்தின் வழியே பார்த்தபடி வந்த கனிக்கு சென்னையின் மாற்றங்கள் தப்பாமல் விழுந்தது.
பத்து வருடங்களுக்கு முன் இருந்ததை விடவும் சற்று அதிக பரப்பரப்புடன் காணப்பட்டது.
வழியில் அவள் பயின்ற பள்ளி வர மனதிற்குள் பழைய நினைவுகள் வந்து போனது.
வீட்டை நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு வித அச்சம் படர்வதை தடுக்க இயலவில்லை.
எல்லாம் பிஞ்சு வயதில் தான் பட்ட கொடுமைகள் தான் காரணம்.
என்னதான் கிளம்பி வந்திருந்தாலும் உள்ளுக்குள் ஒன்று கூறியது நிச்சயமாக அவர்கள் தன்னை இங்கே இருக்கவிட மாட்டார்கள் கண்டிப்பாக தான் ஊருக்கு திரும்பிவிடுவோம் என்று.
வீட்டிற்குள் விடவில்லை என்றால் நிம்மதி. மகிழ்வுடன் ஊருக்கு திரும்பிவிடலாம். இவர்களை எல்லாம் பார்க்க வேண்டிய சூழ்நிலை இனி ஒரு போதும் ஏற்படாது என்று பலவாறாக சிந்தனை தறிகெட்டு ஓடியது.
அதோ இதோ என்று தான் எதிர்பார்த்த நொடியும் வந்திருந்தது.
மகிழுந்தில் இருந்து இறங்கிய பிரவீன் தமக்கை இன்னும் இறங்காமல் இருப்பது கண்டு,
“அக்கா என்ன திங்க்கிங் இறங்கு கா” என்க,
வெளியே காலை வைத்தவளுக்கு சிறிதான நடுக்கம் கதவின் கைப்பிடியை பிடித்து தன்னை சமன் செய்து கொண்டாள்.
இருந்தும் இத்தனை நாட்கள் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த நினைவுகள் மனக்கண்ணில் நழுவி போனது.
இந்த வீட்டு பக்கமே வர கூடாது என்று இருந்த தனது வைராக்கியத்தை உடைத்து விட்டனரே என்று மனதினோரம் சிறு வருத்தமும் எழுந்தது.
அவளது எண்ணவோட்டத்தை அறிந்த சிவப்பிரகாசம் கனியின் கையை இறுக பிடித்து,
“வா பாப்பா உள்ளே போகலாம்” என்று அழைக்க,
கடினப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்ததவள் சம்மதமாக தலையசைத்து அவ்வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.
“வந்துட்டிங்களா? கணக்கு வழக்கு முடிக்க இவ்வளவு நேரமா?” என்றபடி வந்த கற்பகம் கணவனுடன் கைப்பிடித்து வந்தவளை கண்டு அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டார்.
அதிர்ச்சி எல்லாம் ஒரு நொடி தான் அடுத்த கணமே முகம் கோபத்தில் சிவக்க,
“யாரக்கேட்டு இவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திங்க” என்று ஆக்ரோஷமாய் கேட்க,
“யாரை கேட்கணும் இது என்னோட வீடு. என் பொண்ணை நான் கூட்டிட்டு வந்து இருக்கேன்” என்று சத்தமின்றி அதே நேரம் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
“உங்க வீடுனா அப்ப நான் யாரு?” என்று கற்பகம் கத்த,
கோதை வெளியே வந்திருந்தார். வந்தவர் கனியை கண்டதும்,
“இந்த கொலைகாரியை எதுக்கு மாப்ளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கிங்க. இவலாம் வாசல் வரை கூட தகுதியில்லாத நாய். போடி வெளியே” என்று மகளுக்கு மேல் கத்தி கொண்டு வர,
“அத்தை வார்த்தையை பார்த்து பேசுங்க அவ என் பொண்ணு” என்று சிவப்பிரகாசம் எச்சரிக்க,
“யாரு உங்க பொண்ணு இந்த அநாதை நாயா? சிக்னல்ல சோத்துக்கு வழியில்லாம பிச்சை எடுக்குறதை எல்லாம் நடுவீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து இருக்கிங்க. சீ” என்று அருவருப்பாய் முகம் சுழிக்க,
சட்டென்று கனியின் முகம் இறுகியது. அவர் கூறிய ‘அநாதை’ என்ற வார்த்தையில்.
சிறு வயது முதலே கேட்டு கேட்டு வளர்ந்தாலோ என்னவோ இவ்வார்த்தை அவளிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிவப்பிரகாசம் மாமியாரின் வார்த்தையில் கொதித்து,
“அத்தை வாயை மூடுங்க. இன்னொரு வார்த்தை என் பொண்ணை பத்தி தப்பா பேசுனிங்க. நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று கர்ஜிக்க,
“இந்த அநாதை நாய்க்கு ஏத்துக்கிட்டு என் அம்மாவையே பேசுவிங்களா நீங்க?” என்று கற்பகம் எகிறி கொண்டு வர,
“ஆமா பேசுவேன். என் மகளை பேசுனா இதுவும் பேசுவேன் இன்னமும் பேசுவேன்” என்று சிவப்பிரகாசம் உரைத்தார்.
“மகளாம் மக. நீங்களும் நானும் பெத்த மகளா? பெத்தவளே இந்த தரித்திரியத்தை வச்சுக்க முடியாம குப்பையில தூக்கி போட்டுட்டு போய்ட்டா. இவளை கொண்டு வந்து வச்சு எங்க உயிரை வாங்க பாக்குறிங்களா?” கற்பகம் கத்த,
கனிக்கு தான் அங்கே நிற்க முடியவில்லை. சில வருடங்களாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவிட்டவளுக்கு மீண்டும் இப்பேச்சுக்கள் காயத்தை ஏற்படுத்தியது.
சட்டென்று சிவப்பிரகாசத்தின் கையை உறுவியவள்,
“போதும்பா என்னால இதுக்கு மேல பேச்சை கேக்க முடியாது. இதுக்கு தான் நான் வரலைனு சொன்னேன்” என்று விலக பார்க்க,
சிவா பதில் கூறும் முன் கற்பகம்,
“இதோ வந்தோன்னே ஆரம்பிச்சுட்டாளே நாடகத்தை. அங்க அந்த கெழவி சொத்தை சுருட்னது பத்தாதுனு இங்கேயும் வந்து வாரிட்டு போக நல்லவ வேசம் கட்டி வந்துட்டா. சீ மான ரோசமே இருக்காது போல இவ்ளோ பேச்சு பேசுறேனே? இந்நேரம் மானமுள்ளவனா வீட்டை விட்டு போயிருப்பா” என்று முகத்தை சுழிக்க,
விறுவிறுவென வாசலை நோக்கி சென்றாள் கனி.
“இந்த வீட்டு வாசலை தாண்டுனா உன் அப்பன் செத்துட்டதா அர்த்தம்” என்ற சிவப்பிரகாசத்தின் உறுதியான குரல் அவளது நடையை நிறுத்தியது.
விழிகளை மூடி இறுக திறந்தவள்,
“அப்பா” என்று இயலாமையுடன் அவர் முகம் காண,
“ஐ மீன் இட்” என்று மீண்டும் ஒரு முறை சிவப்பிரகாசம் மொழிய,
அப்படியே நின்றுவிட்டாள்.
“அப்பாவாம் அப்பா. ச்சை ரோட்ல திரியிறது எல்லாம் எம் புருஷனை அப்பான்னு கூப்பிட்டு திரியிதுங்க” என்று கனியை முறைக்க,
“ம்மா போதும் நிறுத்து. ஏம்மா அக்கா உனக்கு அப்படி என்னதான் பண்ணிட்டா. அவ மேல வெறுப்பை கொட்ற” என்று பிரவீன் மனது கேட்காது கூறிவிட,
“அக்காவ ச்சை இவரோட சேர்ந்து உனக்கும் புத்தி கெட்டு போச்சா? அவர் ஊர் பக்கம் போகும் போது உன்னை கூட்டிட்டு போனது இதுக்காக தானா? இந்த கைக்காரி உன்னையும் மயக்கிட்டாளா? அவளுக்கு சப்போரட் பண்ணிட்டு இருக்க? உன் அக்காவ கொல்ல பாத்தவ? நீ எனக்கு தான் பொறந்தியா?” என்று அவனையும் கரித்து கொட்டினார்.
“கற்பகம் இனி ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து வந்துச்சு அவ்ளோ தான். பொண்ணுங்களை இதுவரைக்கும் அடிச்சதில்லை. என்னை செய்ய வச்சிடாத” என்க,
“ஓ… இந்த பிச்சைக்கார நாய்க்கு ஏத்துக்கிட்டு என்னையே அடிப்பிங்களா? என்ன அடிச்ச கேக்க ஆள் இல்லைன்னு நினைப்பா. என் அண்ணன் இருக்காரு வருவாரு”
“யாரை வேணா கூட்டிட்டு வா எனக்கு கவலை இல்லை” என்றவர்,
“கனி வா உன் ரூமை காட்டறேன்” என்க,
“இவ இந்த வீட்ல இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன்” என்றார்.
“தாரளமா வெளிய போகலாம். யாரும் உன்னை இங்க பிடிச்சு வச்சுக்கலை” என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டு மகளை கைப்பிடித்து அழைத்து மேலே சென்றுவிட,
“இந்த அநாதை நாய்க்காக என்னை வீட்டை விட்டு போக சொல்லுவிங்களா? அவ இருக்குற வீட்ல ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன்” என்று ஆங்காரமாய் கத்தியவர்,
“வாம்மா போகலாம்” என்று தாயின் கைப்பிடித்து வெளியேறிவிட்டார்.
சென்னையில் கூட்ட நெரிசலில் அங்கே இங்கே என்று வளைந்து சென்று கொண்டிருந்தது அந்த உயர் ரக மகிழுந்து.
அதன் உள்ளே குளிர்சாதனத்தின் குளிர்ச்சியில் வெளியில் இருக்கும் பேருந்து இருசக்கர வாகனம் என எதுவும் தன்னை பாதிக்காத நிலையில் மடியில் மடிக்கணினியுடன் சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தான் ஒருவன்.
அவன் பார்த்தீபன் முப்பது வயது ஆண்மகன். வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்தவன் என்று அவனது தோற்றமே கூறிவிடும். ஏ.சியின் குளுமையிலே எந்நேரமும் இருப்பதால் பிறந்த போது இருந்த நிறத்தை விட இப்போது சற்று நன்றாக பால் வெண்மையில் இருந்தான்.
கறபகத்தின் அண்ணன் கிரிதரன் அண்ணி கஸ்தூரியின் மூத்த புதல்வன். ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறான்.
இப்போதும் தொழில் தொடர்பான சந்திப்பிற்கே ஆஸ்திரேலியா சென்றுவிட்டு சென்னை திரும்பி கொண்டு இருந்தான்.
மடிக்கணினியில் மும்முரமாக இருந்தவனை அலைபேசியின் கானா அழைக்க, அதனை எடுத்து காதுக்கு பொருத்தியவன்,
“சொல்லுங்கம்மா” என்க,
மறுமுனையில் கஸ்தூரி, “என்னப்பா இன்னும் வீட்டுக்கு வரலை. நாங்க வர்றதுக்கு முன்னாடியே வந்திடுவேன்னு சொன்ன?” என்று கேள்வி எழுப்ப,
“ஃப்ளைட் கொஞ்சம் டிலே மா. ஆன் தி வே. இன்னும் டென் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவேன்” என்று பதில் மெழிந்தான்.
“சரிப்பா பாத்து வா” என்று வைத்துவிட்டார்.
அலைபேசியை வைத்த அடுத்த நொடி,
“அண்ணி உங்க அண்ணன் என்னை வீட்டை விட்டு துரத்திட்டாருண்ணி” என்று அழுகையுடன் கற்பகம் உள்ளே நுழைந்தார்.
அவரது வார்த்தையை கேட்டதும் பதறி,
“என்னண்ணி சொல்றீங்க?” என்றிட,
“என்னத்தை சொல்லை. உங்கண்ணே அந்த அநாதை பிச்சைக்கார நாய வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்திட்டு எங்களை தொரத்திவிட்டுட்டாரு” என்று கோதை பொரும,
“யாரத்தை சொல்றிங்க?” என்று கஸ்தூரி விளங்காதவராக கேட்க,
“அதான் அந்த அநாதை கழுதை ஒன்னை ஆசிரமத்துல இருந்து தூக்கிட்டு வந்து வச்சிருகாரே அதான்”
“யாரு கனியா? அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரா?”
“ஆமா. இந்த அநியாயத்தை கேக்க போனதுக்கு அம்மா வயசுல இருக்க என்னை அவ்ளோ கேவலமா பேசிட்டாரு”
“என்ன? அண்ணே உங்களை பேசிட்டாரத்தை” என்று ஏகமாய் அதிர்ந்து வினவினார் கஸ்தூரி.
“ஆமா கஸ்தூரி. என் வயசை கூட பாக்காம வெளிய தள்ளிட்டாரு. இதுக்கா ஆசையா மகளை பெத்து கட்டி கொடுத்தேன்” என்று கண்ணீரை வடித்தார்.
மாமியார் கண்ணீர் வடிப்பதை கண்டு பொறுக்க மாட்டாதவர்,
“அத்தை அழாதிங்கத்தை. எங்கண்ணணுக்கு புத்தி பிசகி போச்சு அதான் இப்படி நடந்திட்டு இருக்கு. அந்த பொண்ணு பண்ணதெல்லாம் மறந்துடுச்சா” என்று தான் ஆறுதல் கூற,
“ஆமா அந்த கெலைகாரி பண்ணதெல்லாம் மறந்து போச்சு அவருக்கு. கொஞ்ச விட்ருந்தா என் மகளை உயிரோட பாத்ருக்க முடியாது. அவளை எப்படி தான் உள்ள விட மனசு வந்துச்சு” என்று கற்பகம் கூற,
“ஆமா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நாய். அந்த கெழவி செத்ததும் மறுபடியும் நல்லா பணக்கார வாழ்க்கை வாழ உங்கண்ணன் கிட்ட நல்லவ வேசம் போட்டு கிளம்பி வந்துட்டா” என்று கனியை கரித்து கொட்டினார்.
“ம்மா அந்த பிச்சைக்காரிய அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரா?” என்று தான் அலைபேசியில் கேட்டதை நம்பியலாது ஓடி வந்திருந்தாள் பிரத்யுக்ஷா.
“ஆமா பிரத்யு இதை கேட்டதுக்கு எங்களை வீட்டைவிட்டு துரத்திட்டாரு” என்று மகளிர் புகார் வாசிக்க,
“ஏற்கனவே அவ செஞ்சதை மறந்துட்டாரா?” என்று தன் நெற்றியில் இருந்த தழும்பை தடவியவள்,
“எனக்கு இன்னும் அதை நினைச்சா பயமா இருக்கு. முகத்தை எப்படி கோரமா வச்சிட்டு என்னை கொல்லப் பார்த்தா. இப்போ என்ன பிளான்ல வந்து இருக்காளோ? திரும்பவும் என்னை கொல்ல முயற்சி பண்ணுவாளா? எனக்கு பயமா இருக்குத்தை” என்று அழாத குறையாக கஸ்தூரியின் கையை பிடிக்க,
அதில் உருகிவிட்ட கஸ்தூரி,
“பயப்படாத பிரத்யு. நாங்க எல்லாம் இருக்கோமே. அப்படிலாம் உன்னை விட்ருவோமா? என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி அவளை பர்ஸ்ட் எதாவது ஹாஸ்டல்ல சேத்துவிட சொல்லிடலாம்” என்று மருமகளுக்கு ஆறுதல் கூறினார் அந்த அப்பாவி.
இவர்கள் பேசி கொண்டு இருக்க சரியாக பார்த்தீபனும் உள்ளே நுழைந்தான்.
வீட்டில் அத்தையை கண்டதும்,
“வாங்கத்தை வா ப்ரத்யு” என்று வரவேற்றான்.
“எங்க வர்றது. இனிமேல் இங்க தான் பார்த்தி. உன் மாமா என்னை துரத்திவிட்டுட்டாரு” என்று கண்ணை கசக்க,
பார்த்தியின் புருவங்கள் நெறிப்பட்டது. அத்தையை புரியாமல் ஏறிட்டவன்,
“என்ன சொல்றிங்கத்தை?” என்று வினவிட,
“என்னத்தை சொல்றது பா. அந்த அநாதை நாய வீட்டுக்குள்ள மறுபடியும் அழைச்சிட்டு வந்துட்டாரு. அதை ஏன்னு கேட்டதுக்கு அடிச்சு வீட்டை விட்டு துரத்திட்டாரு” என்று நேரத்திற்கு நேரம் விடயத்தை பெரிதாக்கும் நோக்கில் கூற,
“யாரு அது?” என்று சிந்தித்தவனுக்கு நிச்சயமாக கனியின் முகமோ பெயரோ நினைவிற்கு வரவில்லை.
அதனை கண்டதும் பிரத்யுவிற்கு அத்தனை உற்சாகம் மகிழ்ச்சி ஊற்றாக பொங்கியது.
“அத்தான் அது தான் என்னை கொல்ல பாத்தாளே அந்த பிச்சைக்காரி. அவ திரும்பவும் வந்துட்டா. ஏற்கனவே என்னை கொல்ல பார்த்தவ. அவளை பாத்தாலே எனக்கு பயமா இருக்கும். இப்போ என்ன பிளானோட வந்து இருக்காளோ தெரியலை” என்று பயந்த தொனியில் கூற,
பார்த்திபனின் மனக்கண்ணில் சடுதியில் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த குழந்தை முகம் நிழலாடியது.
“கனியை அழைச்சிட்டு வந்திட்டாரா?” என்று கேட்க,
“ஆமா அந்த கெழவி போனதும். அது சொத்து போதாதுனு இங்கேயும் கொள்ளையடிக்க வந்துட்டா. என்னென்ன நாடகம் போட்டு எம்புருஷனை ஏமாத்தி வீட்டுக்குள்ள வந்தாளோ” என்று கஸ்தூரி கூற,
“அத்தான் எனக்கு பயமா இருக்கு அத்தான். அவ மறுபடியும் என்னை கொல்ல முயற்சி செஞ்சா நான் என்ன பண்ணுவேன்” என்று பார்த்திபனின் கையை இம்முறை பிடித்து கொண்டாள்.
அத்தையின் அழுகையும் அத்தை மகளின் பயமும் பார்த்தீபனை சட்டென்று கனியின் மீது கோபம் கொள்ள வைத்தது.
‘இத்தனை நாள் அங்கு தானே இருந்தால். இப்போது என்ன வந்தது? வந்ததுமே இவர்களை வீட்டைவிட்டு விரட்டிவிட்டாளே’ என்று வெறுப்பு படர்ந்தது.
பார்த்தீபனுக்கு கற்பகத்தின் மீது நிறைய மரியாதை அன்பு இருந்தது. காரணம் சிறு வயதில் கஸ்தூரியை விட கற்பகம் தான் பார்த்தீபனை தரையில் கூட விடாது வளர்த்தவர்.
கற்பகத்திற்கும் பார்த்தியின் மீது கொள்ளை பிரியம்.
தன் மரியாதைக்குரிய அத்தையை வெளியே அனுப்பியதற்கு நிச்சயமாக மாமாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணி கொண்டவன்,
“அத்தை நீங்க வருத்தப்படாதிங்க. நான் மாமாக்கிட்ட பேசுறேன்” என்று ஆறுதல் கூறியவன்,
“ப்ரத்யு. நான் இருக்கவரை யாரும் உன்கிட்ட நெருங்க முடியாது. காட் இட்” என்று அழுத்தமாக உரைக்க,
“சரிங்கத்தான்” என்று அவனது கையை இறுக்கி கொண்டாள்.
கோதையும், “கண்ணா வாடா போய் இவ புருஷனை நாக்க புடுங்குற மாதிரி நாலு கேட்டுட்டு வருவோம்” என்று கூற,
“யாரை என்ன கேக்க போறீங்க” என்றபடி வந்தார் கிரிதரன்.
“அண்ணே…” என்று மீண்டும் கற்பகம் முதலில் இருந்து ஆழ ஆரம்பிக்க,
“நான் சிவாகிட்ட பேசிட்டு தான் வந்தேன்” என்று அதனை தடுத்திருந்தார் கிரி.
“கிரி கேட்டுமா இவ்ளோ அமைதியா இருக்க. உன் தங்கச்சிய அவரு வீட்டைவிட்டு துரத்திட்டாரு” என்று கோதை ஆவேசமாக,
“ம்மா அவன் துரத்தலை நீங்களா தான் வந்து இருக்கிங்க. அவ்ளோ பெரிய வீட்ல அந்த பொண்ணு இருக்கதுல உங்களுக்கு என்ன பிராப்ளம்?” என்றிட,
“என்ன பிராப்ளமா? அவ தான் பிராப்ளம். என் பொண்ணை திரும்பவும் கொல்ல முயற்சி பண்ணா என்ன பண்றது? பணத்தாசை புடிச்சவ. ஏற்கனவே கிழவி சொத்துல வர்ற அம்புட்டு பணத்தையும் அவ தான எடுத்துக்குறா. அது பத்தாதுனு இங்க வந்துட்டா? ஒரு ஆளுக்கு எதுக்கு தான் இப்படி பேராசை பட்றா” என்று பொங்கியவர்,
“அவ அந்த வீட்ல இருக்கவரை நான் அங்க போக மாட்டேன்” என்று உறுதியாக கூறிவிட,
தங்கையை பற்றி நன்கறிந்த கிரிதரன்,
“கற்பகம் அது உன் வீடு அந்த பொண்ணுக்கு பயந்து நீ ஓடி வருவியா?” என்று கேட்க,
“யாரு யாருக்கு பயந்தது. அந்த அநாதை நாய்க்கு நான் பயப்பட்றேனா?” என்று பொங்கினார்.
“ஆமா பயந்து தான் வந்து இருக்க. இல்லைனா கனி வந்ததுமே நீ ஏன் இங்க வர? அது உன் வீடு அந்த பொண்ணைவிட உனக்கு தான் உரிமை அதிகம். போய் உன் உரிமையை நிலைநாட்டு” என்று கூற,
கோதையும், “அமா கற்பகம் அந்த பிச்சை நாய்க்கு நாம பயந்து வந்துட்டோம்னு அது சந்தோஷப்படும். நம்ம இடத்துல இருந்து அது நம்மள துரத்துறதா? வா நாம போய் அதை தலைதெறிக்க ஓட விடுவோம்” என்று கிரி கூறியது சரியாக வேலை செய்தது.
“ஆமாம்மா வா போய் அங்க இருந்துட்டே அவளை துரத்திவிட்றலாம்” என்று பிரத்யுவும் கூற,
மூவரும் கிளம்ப முடிவெடுத்தனர்.
பிரத்யு, “அத்தான் நீங்களும் வாங்க வந்து அந்த நாயை எதாவது மிரட்டிட்டு போங்க” என்று அவனது கையை பிடித்து இழுக்க,
கிரி, “பிரத்யு அவன் எதுக்கு அவன் வந்தா பிராப்ளம் பெருசாகும். அவன் வேண்டாம்” என்று தடுத்துவிட்டவர்,
“பார்த்தி உனக்கு ட்ராவலிங் டையரட் இருக்கும் போய் ரெஸ்ட் எடு” என்று மகனுக்கு கட்டளை பிறப்பித்தார்.
மூவரும் அகன்றதும் வீடு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.
பார்த்தீபன் அப்போது தான் நீள்விருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.
கஸ்தூரி, “ஏங்க அண்ணன் ஏன் இப்படி பண்ணுது. அண்ணி பாலம் எப்படி அழறாங்க பாருங்க” என்று வருத்தப்பட,
“நீ ஏன் கஸ்தூரி இப்படி இருக்க?” என்று கிரி ஆயாசமாக கேட்க,
“எப்படி இருக்கேன்” என்று மீண்டும் புரியாது கேட்டு வைத்தார்.
“ப்ச் ஒன்னுமில்லை விடு” என்று முடித்துவிட்டார் கிரி.
இதனை எல்லாம் கேட்டபடி புருவம் நெறித்து சிந்தனை வயப்பட்டிருந்தான் பார்த்தீபன்.
“பார்த்தி இதெல்லாம் யோசிச்சு குழப்பிக்காத. சிவா எதையும் எப்பவும் தப்பா செய்ய மாட்டான். நீ போய் உன் வேலையை பாரு” என்று முடித்துவிட,
அவன் எழுந்து அறைக்கு சென்றான். இருந்தும் அவனது நினைவுகளில் உலா வந்து கொண்டிருந்தாள் கனி என்கிற கன்னல்மொழி.
இத்தனை பேரின் ஏச்சு பேச்சுக்கு ஆளனவளோ தந்தையும் சகோதரனையும் பேசி அனுப்பிவிட்டு சாற்றிய கதவின் மீதே சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
தலையை முட்டியில் சாய்ந்தவாறு விழி மூடி அமர்ந்திருந்தவளது விழிகளில் இருந்து ஒரு துளி நீர் வெளியேறியது.
பிறந்ததில் இருந்து இன்றுவரை அவள் சுமந்து திரியும் அநாதை என்கின்ற பட்டம் அவளை சற்றே அசைத்து பார்த்திருந்தது.
தன்னுடைய இறப்பின் தருவாயில் கூட இந்த அநாதை என்கின்ற பட்டம் கூடவே வருமோ? என்று சிந்தை பிறந்தது.
இவர்கள் கூறுவது போல தான் எதாவது தவறான வழியில் பிறந்திருப்பேனோ? அதுதான் தன்னை தன் தாய் குப்பை தொட்டியில் போட்டு சென்றுவிட்டார் என்றெல்லாம் சிந்தை பிறக்க விழிநீர் பெருகியது.
இத்தனை நேரம் அந்த ஏச்சு பேச்சுகளை வாங்கி கொண்டு கல்லாய் நின்றிருந்தவள் தான் இப்போது தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்.
யார் முன்பும் தான் உடைந்துவிட கூடாது என்பதில் அத்தனை உறுதி அவளிடம். மீனாட்சி அம்மாளிடம் இருந்து எதை கற்றாளோ? இல்லையோ? வைராக்கியத்தை பெரிதாய் கற்றிருந்தாள். அதுதான் இவ்வளவு நேரம் இறுகி போய் நின்றிருந்ததன்
காரணம்.
எல்லாம் ஒரு நிமிடம் சட்டென்று தன்னை தேற்றி கொண்டவள் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு தான் கொண்டு வந்த பொருட்களை வீட்டினுள் அடுக்க துவங்கி இருந்தாள் இந்த அழுத்தக்காரி.
விதி அவளது பொறுமையை நிறைய சோதிக்க காத்திருக்கிறது என அவளுக்கு தெரிந்தால் அப்போதே அங்கிருந்து கிளம்பி இருப்பாளோ?