மௌனம் – 22.2

“போய் கதவைத் திறங்க… ஓடுங்க!” அவள் விரட்டியதும், அவன் சென்று பார்க்க, சஷ்டி நின்றிருந்தாள்.

“மாமா… உங்களோட ஒரு செல்ஃபி எடுக்கலாம்னு வந்தேன். என் ப்ரெண்ட் மீரா நீங்க என் வீட்ல ஸ்டே பண்ணிருக்கீங்கன்னு சொல்லியும் நம்பவே மாட்றா. அதை ப்ரூஃப் பண்ணி அவ நோஸைக் கட் பண்ணணும்னு வந்தேன் நான்!” என அவள் படபடவெனப் பொரிய, தேவா சின்ன சிரிப்புடன் அவள் கையிலிருந்த அலைபேசியை வாங்கி சுயமியைக் கிளிக்கினான்.

“உங்கக்காவையும் கூப்பிட்டுக்கலாம் சஷ்டி…” என்ற குரலில் ஜீவா அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கையிலிருந்த அலைபேசித் திரையில் விரல்கள் எதையோ தேய்த்துக் கொண்டிருந்தன.

“அக்கா வேணாம் மாமா. அவ சுத்த போர். ஒரு செல்ஃபி கூட எடுக்க வர மாட்டா!” எனச் சின்னவள் சிலுப்ப, ஜீவா அவளை முறைத்துவிட்டு மீண்டும் அலைபேசியைப் பார்த்தாள். தேவா சின்ன முறுவலுடன் சஷ்டியிடம் பேசி, மேலும் சில புகைப்படங்களுடன் அவளை அனுப்பிவிட்டு வந்தான்.

ஜீவா வெகு மும்முரமாக எதையோ பார்த்துத் தனக்குள்ளே சிரித்து, சிந்தித்து, பின்னர் முகத்தைச் சுருக்க, இவன் என்னவென எட்டிப் பார்த்தான். அவர்களது திருமணம்தான் நேற்றிலிருந்து எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகியது. சமூக வலைதளங்கள் கூட நிரம்பி வழிந்தன.

“தன் சிறு வயது காதலியைக் கரம் பிடித்தார் இயக்குநர் தேவ்பிரசாத்!”

“பள்ளிப் பருவக் காதலா?”

“லவ் மேரேஜா? இல்ல அரேஞ்ச் மேரேஜா? இவர் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லையா?” என அவர்களது தனிப்பட்ட விஷயத்தை எத்தனையோ வகையில் இட்டுக்கட்டிப் பேசினர்.

“ஐயோ… தேவா என் மனசை உடைச்சிட்டீங்களே. உங்களுக்காக நான் இங்க வெயிட்டிங். இப்படி பண்ணிட்டீங்களே!” எனப் போலியாகச் சில கண்ணீர் பொம்மைகள், உண்மையான வருத்தத்துடன் சில என அவனது சமூக வலைதளப் பதிவின் கருத்துப் பெட்டி நிரம்பி வழிந்தது.

“ஹக்கும்… ம்கும்… ஐயா டிமாண்டைப் பார்த்தீயா?” செவியோரம் குனிந்து அவன் போலியான செருமலுடன் அலட்டிக்கொள்ள, இவளுக்கு வெகு அருகே கேட்ட குரலில் சட்டென இதயம் அதிர்ந்தது.

அதை முகத்தில் காண்பிக்காதவாறு மென்மையான முறைப்புடன் அவனைப் பார்த்தவள், “ரொம்பத்தான்…” என்றாள் உதட்டைச் சுழித்து.

“உண்மையைச் சொன்னா யாரு நம்புறா?” என்றவன், “எதையும் பெருசா கண்டுக்காத ஜீவா. ரெண்டு நாள்ல வேற ஏதாவது டாபிக் கிடைச்சா அவங்களே இதை விட்டிருவாங்க!” என்றான் அவள் தோள் தட்டி.

“இருந்தாலும் உங்க விசிறிங்க ரொம்பங்க. கல்யாண போஸ்ட்ல வந்து ஒரே அழுகை. எனக்கு சிரிப்பா வருது. நிஜமா ஃபேண்டஸி வேர்ட்ல வாழ்றாங்க போல அவங்க?” என இவள் கேட்க, அவன் ஏதோ பதில் சொல்ல எனப் பேச்சு நீண்டது.

இரவு உணவு முடிந்ததும் கிரிஜா மகளை அழைத்து ஒரு குவளையில் பாலைக் காய்ச்சிக் கொடுக்க, இவள் சங்கடத்துடன் மறுத்தாள்.

“ம்மா… என்ன நீங்க? இதெல்லாம் அவசியமா?” அவள் தாயின் முகம் பார்க்காமல் கேட்க,

“இதெல்லாம் முறை ஜீவா. பேசாம இரு…” என்றவர், பாதாம்பருப்பு, முந்திரி என அரைத்துப் பாலில் கலந்தார். இதெல்லாம் இத்தனை நாட்கள் இந்த வீட்டில்தான் இருந்தனவா என இவள் வியப்பு மேலிடப் பார்த்தாள்.

“இந்தா போ… போய் அவருக்குக் கொடுத்துட்டு நீயும் குடி…” என்றவரிடமிருந்து தப்பித்து ஓடியவள், இயல்பாக அறைக்குள் நுழைந்தாள். தேவா ரேணுகாவிடம் பேசி முடித்துவிட்டு அவளுக்காகத்தான் காத்திருந்தான்.

இவள் கவனமாகக் கதவைத் தாழ் போட்டுவிட்டு வந்து, “நான் வேணாம்னு சொன்னேன். ஆனால், அம்மாதான் கேட்கலைங்க!” என்றாள் பாலை அவனிடம் கொடுத்து. இந்தப் பெண் இத்தனை நேரம் தன்னை இயல்பாகக் காண்பிக்க முயன்றதெல்லாம் அவனது ஒற்றைக் குறுகுறு பார்வையில் தொலைந்தோடிட, சட்டெனத் தோன்றிய அவஸ்தையுடன் அவனை மென்மையாக முறைத்தாள்.

“பாலைக் குடிங்க… என் மூஞ்சில என்ன இருக்கு?” அதட்ட முயன்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“இல்ல… மேரேஜ் முன்னாடி தான் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில இருக்க கேப் மெயின்டெய்ன் பண்ணுவ. பட், இப்பவுமா?” அவன் கேலியாகக் கேட்டதில், சின்ன முறைப்புடன் இருவருக்கும் இடையேயிருந்த வெளியை நிரப்பினாள்.

“பேசாம என் மடி மேல வந்து உக்கார்ந்துரு ஜீவா. கேப்பே இருக்காது!” குறும்புடன் கூறியவனை முறைத்தவள், “பாலைக் குடிங்க. ஆறப் போகுது…” என்றாள் கண்டிப்புடன்.

அவன் சன்னச் சிரிப்புடன் பாலைக் குடித்து முடித்து அவளிடம் மிகுதியை நீட்ட, “வேணாம்… வேணாம். எனக்குப் பால் எல்லாம் பிடிக்காது…” அவசரமாக மறுத்தவளைச் சந்தேகமாகப் பார்த்தவன், “தூக்க மாத்திரை எதுவும் கலந்துட்டீயா டீ?” என்றான் அதட்டலுடன்.

“ஐயோ… அதெல்லாம் இல்லங்க. எனக்குத்தான் நீங்க குடிச்ச மிச்சத்தைக் குடிக்க ஏதோ மாதிரி இருக்கு. ஐ ஃபீல் அன் ஈஸி…” என்றவளின் கையில் குவளையைத் திணித்தவன், “ஷ்… இப்போ நீ இதைக் குடிக்கிற…” என்றான் அவன் அதட்டலுடன். இதற்கே இப்படியா என அவனிடம் ஒரு ஆயாசம் தோன்றிற்று.

“ரொம்ப சலிச்சுக்க வேணாம். எனக்கு யார் எச்சில் பண்ணதும் பிடிக்காது!” என ரோஷத்துடன் அவன் குடித்த குவளையின் விளிம்பைத் தவிர்த்து வேறிடத்தில் அவள் உதடு குவித்துப் பாலைப் பருக, தேவா கடுப்பாகி படக்கென அவள் இடையில் கைக்கொடுத்து தன்னோடு இழுத்து அந்த உதட்டில் அழுந்த முத்தம் பதித்ததும், ஜீவா திடுக்கிட்டுக் குவளையைக் கீழே போட்டிருந்தாள். தொம்மெனக் கேட்ட பெரும் சத்தத்தில் இருவரும் பதறி விலக, இன்னும் கடகடவென உருண்டோடிய குவளையை ஜீவா விரைந்து எடுத்தாள்.

தேவா அசட்டுச் சிரிப்புடன் தலையைக் கோத, அவனைத் திரும்பி முறைத்தவள், குவளையை ஓரமாக வைத்துவிட்டுச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். சத்தம் வெளியே வரை கேட்டிருக்கும் என அவள் மனம் சிணுங்கிற்று.

ஒரு முத்தத்திற்கே அவளுக்கு உச்சந்தலையில் யாரோ சுள்ளென அடித்த உணர்வு. வலி கூட இத்தனை சுகமா என மனம் கேலி செய்தது. சொல்லத் தெரியாத தயக்கம், சங்கோஜம் எல்லாம் வந்தமர்ந்தது. ஆனாலும் மயிலிறகால் வருடுவது போலிருந்த உணர்வு பிடித்தும் தொலைத்தது. நொடி நேர இதழொற்றலில் சட்டெனத் தீப்பற்றிக் கொண்டதை உணர்ந்தவளின் முகம் நாணத்தில் சிவந்தது.

‘சை… என்ன இது?’ என அவளுக்கு அவளே சங்கடத்துடன் கேட்டுக் கொண்டாள். இந்த மென்னுணர்வுகள் அவளுக்கு மிகப் புதிது. வெறும் உடல் தேவைக்குத்தானே திருமணம் என அவள் ஆழ்மனத்தில் பதிந்திருந்த எண்ணம் மெல்ல விலகப் பார்த்தது. ஏனென்றால், இது உடலின் தேவை என்பதாக அவளால் வரையறுக்க முடியவில்லை. தேவாவின் அருகே மட்டும்தான் அவளால் இப்படி சுயத்துடன் இருக்க முடிகிறது. ஆனாலும், வார்த்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத சுகானுபவம் இது.

தேவா அவள் கோபத்தில் இருக்கிறாள் போல என எண்ணியவன், ‘போச்சு… மாமியார் வீட்ல ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட நினைச்சது தப்புதான்!’ எனத் தன்னையே நொந்து கொண்டான்.

ஜீவா அவன் முகத்தையே பார்க்காமல் துணியைத் துவைக்கப் போட்டுவிட்டு மின்விளக்கை அணைத்து, இரவு விளக்கைப் போட்டுவிட்டு வந்து படுத்தாள். தேவா தலைக்கு கையைக் கொடுத்துக் கண்ணை மூடியிருந்தான். அவனுக்கு அவன் கவலை. ஜீவா சில நொடிகள் பொறுத்துப் பார்த்தாள். பின்னர் மெதுவாக அசைந்து அவனைத் திரும்பிப் பார்க்க, அவள் வளையல் சத்தத்தில் அவன் சிந்தனை கலைந்தது.

“ஹே… ஜீவா சாரி. நான் ஏதோ ஆர்வத்துல கிஸ் பண்ணிட்டேன்!” சின்ன குரலில் அவள் செவியில் அவன் குரல் நுழைய, மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தாள். அதில் தைரியம் வரப் பெற்றவன், அவளருகே நெருங்கிப் பின்னோடு அணைத்துக் கொண்டான்.

“சாரி… சாரி!” முணுமுணுத்தான் அவன் படபடவென.

“ஷ்… விடுங்க. தெரியாமத்தானே பண்ணீங்க?” அவள் இறங்கி வந்ததும் அவள் செவியில் இவன் மென்முத்தமிடவும், ஜீவாவின் இதயம் திடுக்கிட்டது.

அவன் கையை மெல்ல விலக்கியவள், “லைட்டை ஆஃப் பண்ணுங்க!” என்றாள் குரலின் பேதத்தை மறைத்து. படபடவென இதயம் அடித்துக் கொண்டது.

“ஏன்?” அவன் கேட்க,

“என்ன ஏன்… எனக்கு உங்களை… அது… நீங்க என் பக்கத்துல வரும்போது என்னமோ செய்யுதுங்க. சொல்லத் தெரியலை. ஃபீலிங் லைக் பட்டர்ஃப்ளைஸ் பறக்குற மாதிரி. பிடிச்சிருக்கு. ஆனால், லைட்டா பயமா வேற இருக்கு!” எனப் போர்வைக்குள் முகம் புதைத்தாள். தேவாவிற்குச் சிரிப்பு வரப் பார்த்தது.

“ஜீவா… கூல்… நான் தானே? இங்க என் முகத்தைப் பாரு!” என அவன் அழைக்க, அவள் முடியாது என்றாள்.

“ஹக்கும்… வெறும் பிசிகல் நீட்ஸ்? வாய் கிழிய பேசுனா மட்டும் போதாது டீ பொண்டாட்டி. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணணும்!” அவன் சலிக்க,

“லைட்டை ஆஃப் பண்ணிட்டு பேசுங்க எதுனாலும்…” என அவள் ஒற்றைக் கையைத் தூக்கிக் காண்பித்துக் கூற, தேவா அவள் கையிலிருந்த வளையல் மொத்தத்தையும் கழட்டியிருந்தான். அவள் அதிர்ந்து பார்க்க, அவனிடம் ஒரு வசீகரச் சிரிப்பு. இப்போதும் அவள் மனம் அந்தச் சிரிப்பைக் களவாடத்தான் செய்தது.

“என்னங்க?” அவள் சிணுங்க, அவன் சங்கடம் உணர்ந்தவனும், விளக்கை அணைத்த கையோடு மனைவியையும் இறுக அணைத்தான்.

“டூ மினிட்ஸ் தேவா…” அவன் கையைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவள், “ரொம்ப படுத்துறேனா உங்களை நான்?” என மெல்லிய குரலில் கேட்டாள். அவன் சிரிப்பது தெரிந்து இவள் முகம் மேலும் சிவக்க, படக்கென விளக்கை உயிர்ப்பித்தவன், மனைவியைக் கொள்ளையிடும் வேலையைத் தனதாக்கிக் கொண்டான். ஜீவாவிற்குள் நிறைய தடுமாற்றம், தயக்கம்.

“ரிலாக்ஸ் ஜீவா… ஹம்ம்!” என அவன் மெல்ல அவள் முதுகில் தட்டிக் கொடுத்து, அவளோடு முழுதாகத் தன்னைக் கலந்திருந்தான். ஜீவா அவனை இறுக்கி அணைத்துக் கண்மூடி அவன் கொடுத்த உணர்வினை உணரத் திணறிப் போனாள். அதில் இடையிடையே அவன் கேலி வேறு செய்ததில், இவள் பதிலுக்குப் பேச என மூச்சு வாங்கியது. நாணிச் சிவந்த முகத்தோடு அவனைக் காண முடியாத அவஸ்தையில் கணவன் புஜத்தில் முகத்தை அழுத்தினாள்.

“திஸ் வீக் எண்ட் நம்ம பாரிஸ் போறோம்!” அவன் கிசுகிசுத்தான்.

“நோ… நான் வர மாட்டேன்!” அவள் மறுக்கப் பார்க்க,

“நோவே… உனக்கு ஆப்ஷன் கிடையாது ஜீவா. வரலைன்னு அடம் பிடிச்சா தூக்கிட்டுப் போவேன்!” என்றான் அவன் கண்டிப்பான குரலில்.

“ஆமா… ஆமா தூக்கிடுவாரு இவர். பெருசா வேணாம், ஒரு நாள் மாஸ்க் போடாம வெளிய நடமாட முடியுமா உங்களால?” என அவள் சிலிர்க்க, இவன் நீண்ட நேரம் தன்னைத் தொந்தரவு செய்த அவளது கழுத்தோரத்தில் அழுந்த முத்தமிட்டான். அவள் பேச்சு மெல்லத் தேய்ந்தது.

“ரொம்ப பேசுற நீ…” கிறங்கிய அவன் குரலில் இவளுக்குப் பேச்சு முழுதாக மறந்தது. மீண்டுமொருமுறை அவன் ஆராதித்ததில் ஜீவா மயங்கிப் போனாள். உறக்கம் தொலைந்ததுதான் மிச்சமென இரவோடு அவர்கள் மூழ்கிப் போயினர்.

தொடரும்…

சாரி ஃபார் தி லேட் அப்டேட் மக்களே. எனக்கு பீவர். அதான் நாலஞ்சு நாளா இந்தப் பக்கம் பார்க்கலை. இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவுறும் 🏃‍♀️🏃‍♀️

error: Content is protected !!
Scroll to Top