காதல் 8.3

மகிழுக்கு தான் முதன் முதலாக அவர்களை பிரிந்து உறங்க செல்வது கலங்க வைத்தது.

பின்னர் சில உறவினர் பெண்கள் அலங்காரம் செய்து சில பல அறிவுரைகளையும் வழங்கி கையில் பால் சொம்புடன் குருவின் அறை வாயிலில் விட்டு சென்றனர்.

ஏனோ உள்ளமும் உடலும் நடுங்கியது அவளுக்கு. மெல்ல கதவை திறந்து உள்ளே சென்றாள்.

அவனது அறை அவள் தங்கியிருந்த வீட்டை விட பெரியதாக இருந்தது. குளிர்சாதன பெட்டி முதற்கொண்டு சகல வசதிகளும் இருந்தது. அறையை அளவிட்டபடி அவனை தேட நீள்விருக்கையில் அமர்ந்து இருந்தவன்,

“மகிழ் இங்க வா” என்று அழைக்க,

நடுக்கத்தை மறைத்து அவனருகே சென்றாள்.

“அதை ஏன் தூக்கிட்டு வர. அந்த டேபிள்ல வச்சிட்டு வா” என்றிட அதையும் செய்தாள்.

“உட்காரு” என்று எதிரில் இருந்த இருக்கையை காண்பித்தவன் அவள் அமர்ந்ததும்,

“ஏன் இப்படி பயப்பட்ற நான் உன்னை எதுவும் செஞ்சிட மாட்டேன்” என்றவன்,

“லுக் மகிழ் நம்ம அக்ரிமெண்ட்படி மேரேஜ் ஓவர். இனி டூ இயர்ஸ்க்கு நீ இங்க தான் இருக்கணும். வெளியே நீ என் பேமிலிக்கு மருமகளா நடிச்சாலும் இங்க நான் உனக்கு பாஸ் அது உனக்கு ஞாபகம் இருக்கணும்” என்று அழுத்தம் திருத்தமாக கூற,

‘சரி’ எனும் விதமாக தலையசைத்தாள்.

“உன்னால இங்க என்னோட வீட்ல எந்தவிதமான பிராப்ளமும் வர கூடாது. என் பேமிலிக்கிட்ட நல்லபடியா நடந்துக்கணும்” என்று மொழிய,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள்.

“அண்ட் ஒன் மோர் திங்க் எனக்கு என்னோட திங்க்ஸ மத்தவங்க தொட்டா சுத்தமா பிடிக்காது. ஸோ இந்த ரூம்ல நீ என்னோட எந்த திங்ஸயும் தொடக்கூடாது. காட் இட்”

புரிந்தது எனும் விதமாக தலையசைத்தாள்.

“அண்ட் இந்த அக்ரிமெண்ட் பத்தி யார்க்கிட்டயும் மறந்து கூட வாய திறக்க கூடாது. என் பேமிலி முன்ன ஒரிஜினல் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் மாதிரி தான் நடந்துக்கணும்” என்று தெள்ளத் தெளிவாக கூற,

அதற்கும் தலையசைப்பை கொடுக்க, அவனுக்கு சிறிது எரிச்சல் படர்ந்தது.

“வாயை திறந்து பதில் சொல்ல முடியாதா?” என்று வினவ,

அடுத்த கணம்,

“ஹ்ம்ம் நடந்துக்குறேன் சார்” என்றிட,

“இந்த சார் இந்த ரூம்க்குள்ள மட்டும் தான். வெளியே மறந்துகூட கூப்பிட்ற கூடாது. காட் இட்”

“ஹ்ம்ம் கூப்பிட மாட்டேன்” என்றாள்.

“ஓகே இந்தா இந்த அக்ரிமெண்ட்ட படிச்சு பாத்திட்டு சைன் போடு” என்று ஒரு கோப்பை நீட்ட,

அதனை வாங்கியவள் விழிகளால் அளவிட்டாள்.

குரு ஏற்கெனவே கூறிய விதிமுறைகள் தான் இருந்தது.

அதில் கையெழுத்து இட்டு அவனிடம் நீட்டியவள்,

“சார் என் தம்பியோட படிப்பு” என்று பேசுகையிலே இடை நுழைந்தவன்,

“உன் தம்பிக்கு வர்ஷினி சேரப்போற காலேஜ்லயே அட்மிஷனுக்கு பேசிட்டேன். நெக்ஸ்ட் வீக் அட்மிஷன் போடணும்” என்றவன்,

“இந்த காலேஜ் உங்களுக்கு ஓகே தான?” என்று வினவ,

“ஓ..‌ ஓகே தான் சார்” என்றவளுக்கு இத்தனை பெரிய கல்லூரியில் கிடைத்த இடத்தை மறுக்க பைத்தியமா பிடித்துள்ளது.

குரு, “எனிதிங்க் எல்ஸ்?” என்றிட,

“ம்ஹூம்” என்று தலையசைத்தாள்.

பின்னர் குருவும் தனது மடிக்கணினியில் நுழைந்திட இவள் தான் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள்.

அவளுக்கு உண்மையாகவே அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி கண்ணை மூடி படுத்துவிடலாம் என்று பார்த்தால் எங்கு படுப்பது என தெரியவில்லை.

அவருக்கு தன்னுடைய பொருளை தொட்டால் சுத்தமாக பிடிக்காது என்றாரே இப்போது தான் எங்கு படுப்பது. மெத்தையில் படுக்க கூடாது அப்போது நீள்விருக்கையில்? அதில் தான் குரு அமர்ந்திருந்ததே.

இரண்டு நிமிடங்கள் கடந்த பிறகு மடிக்கணினியில் இருந்து தலையை வெளியே வந்தவன்,

“ஏன் இப்படியே நிக்கிற. படுக்க வேண்டியது தான?” என்று வினவ,

“அது நான் எங்க படுக்க?” என்று தட்டுத்தடுமாறி வினா தொடுத்தாள்.

“இதோ இவ்ளோ பெரிய பெட் இருக்கே அதுல படுக்க வேண்டியது தானே?” என்க,

அவளுக்கு அவனது கூற்றில் தான் குழப்பம். தன்னுடைய பொருளை யாரும் பயன்படுத்த கூடாது என்றாரே என்று வேறு எண்ணம் வந்தது.

தன்னுடைய கேள்விக்கு கூட பதில் கூற பிடிக்காத பொறுமை இல்லாதவன் இப்போது அவனுடைய மெத்தையில் தன்னை படுத்து கொள்ள கூறுகிறானே? என்ற எண்ணம் தான்.

மெத்தை ஆறு பேர் தாரளமாக படுக்க கூடிய அளவில் மிகவும் பெரியதாகவே இருந்தது.

சரி அவரே கூறிவிட்டார் என்று நினைத்து படுக்க செல்ல,

“நில்லு இப்படியேவா தூங்க போற? போ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ” என்றிட,

அவளுக்கும் உடை மாற்றி இந்த நகைகள் எல்லாவற்றையும் கழட்டி வைத்தால் தேவலாம் என்று தன் இருந்தது.

‘என்னுடைய‌ உடை?’ என்று அவள் யோசித்த விநாடி,

“அந்த லாஸ்ட் கப்போர்ட்ல உன் திங்க்ஸ் இருக்கு. அது மட்டும் உன்னோட யூஸ்க்காக” என்று தலையை திருப்பாமலே பதில் அளித்தான்.

அந்த அலமாரியை திறந்து என்ன உடையை உடுத்துவது என்று தேடினாள். எப்போதும் வீட்டில் இரவு உடையை தான் உடுத்துவாள்.

ஆனால் இப்போது இவன் முன்பு இரவு உடையுடன் வலம் வர இயலாது என்று நினைத்து ஒரு சுரிதாரை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

நுழைந்த கணம் குப்பென்று சோப்பின் மணமும் அவனுடைய மணமும் நாசிக்குள் நுழைய மூச்சு முட்டியது.

சட்டென வெளியே வந்துவிட்டாள்‌‌. வந்தபின் மூச்சே சாதரணமாக வந்தது.

என்னவோ ஒரு ஆணின் வாசனை நாசிக்குள் நுழைந்த நொடி உள்ளுக்குள் சிறிதான பூகம்பம் தான் வெடித்தது.

இவள் வந்த வேகத்தில் வேறு யாராக இருந்தாலும் நிச்சயமாக கேள்வி கேட்டிருப்பார்கள். குரு இப்படி ஒருத்தி இருப்பதையே மறந்தது போல் இருந்தான்.

வேகமாக நடந்து வந்து அலமாரியில் துண்டை எடுப்பது போல எடுத்து கொண்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்தாள்.

இப்போதும் அதே வாசனை தான் முன்பு போல பாதிப்பில்லை. வேக வேகமாக உடை மாற்றிவிட்டு முகத்தை கழுவிவிட்டு வந்தவள் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டினாள்.

அதுவே ஒரு இரண்டு கிலோ கணம் இருக்கும் போல அதனை கழட்டியதும் சுமை குறைந்தது. நகைகளை இப்போது எங்கு வைப்மதென்று தெரியவில்லை.

பேசாமல் குருவிடமே கொடுத்து விடுவோம் என்று எண்ணியவள்,

“சார் இது உங்க அம்மா என்கிட்ட கொடுத்த நகைகங்க” என்று அவனிடம் கூற,

நிமிர்ந்து,

“இதை எதுக்கு என்கிட்ட கொண்டு வர?” என்றவனது குரலில் சிறிதான எரிச்சல் வேலையில் குறுக்கிடுகிறாளே என்று.

“அது நான் இதை எங்க வைக்கிறதுன்னு தெரியலை” என்று தயங்கி கூற,

“உனக்குனு ஒரு கப்போர்ட் கொடுத்து இருக்கேன்ல அங்க வை. அம்மா உன்கிட்ட எதாவது உனக்கு கொடுத்தா அதை இங்க இருந்து போகுற வரை நீ தான் சேஃபா வச்சிக்கணும்” என்றவன்,

“அண்ட் டோன்ட் டிஸ்டர்ப் மீ அகெய்ன்” என்று சற்று கட்டுபடுத்திய கோபத்துடன் கூறிட,

“ஹ்ம்ம்” என்று அவன் கோபம் புரிந்து தலையசைத்தவள் நகைகளை பத்திரமாக அலமாரியில் வைத்துவிட்டு வந்து மெத்தையில் படுத்துவிட்டாள்.

அந்த உயர்தர பஞ்சு மெத்தை அவளை சுகமாக உள்வாங்கி கொண்டது.

நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்து பார்த்தவள் குரு பிரசாத் அப்படி ஒன்றும் கெட்டவரில்லை என்று நினைத்து கொண்டாள்.

அவள் நினைத்தது போல குரு பிரசாத் உண்மையிலுமே கெட்டவன் எல்லாம் இல்லை. பணம் அந்தஸ்து எல்லாம் சேர்த்து அவனிடம் ஒரு திமிரை கொடுத்திருந்தது.

அவனது பேச்சில் செயலில் அந்த பணத்தின் வெளிப்பாடு இருக்கும் ஆனால் அதனை வைத்து மற்றவரை ஏளனம் பேசுவது துன்புறுத்துவது எல்லாம் இல்லை.

என்னிடம் பணம் உள்ளது கூடவே திமிரும் உள்ளது அவ்வளவு தான் அவன் எண்ணம்.

பணத்தை வைத்து யாவையும் செய்து முடித்திடுவேன் இது தான் அவனுடைய உறுதியான நம்பிக்கையும் கூட.

ஆனால் பணத்தையும் தாண்டி சில உணர்வுகள் மனிதர்கள் இருக்கின்றனர் என்று மகிழ் இவனுக்கு விளக்குவாளா?

error: Content is protected !!
Scroll to Top