காதல் 37.2

இதெல்லாம் விட பெரிய விஷயம் எனக்கு உங்களை ஏதோ ஒரு புள்ளியில பிடிச்சிருச்சு ஆனால் அதை உணர்ந்த செகெண்ட் கூட இது தப்பு அவர் எங்க இருக்காரு நீ எங்க இருக்கன்னு நினைச்சு என் மனசுல புதைச்சிக்க தான் நினைச்சேன் ஆனால் நீங்க பேசுன பேச்சுல ஒருவேளை அவர் சொல்றது சரிதான் போல நாம இந்த சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் இவர் மேல விருப்பம் வந்திருச்சு போல நீ இவ்ளோ கேவலமான பிறவியா‌…? அவர் சொல்றது ரொம்ப கரெக்ட் தான் நீயும் பணத்தை பார்த்ததும் பச்சோந்தி மாதிரி மாறிட்ட இத்தனை நாள் ஒழுங்கா தான இருந்த கேவலம் இந்த பணம் உன்னை இப்படி மாத்திடுச்சான்னு என்னை நானே வெறுத்துட்டேன்”

“நடந்ததை நினைச்சு நினைச்சு மனசளவுல ரொம்ப உடைஞ்சிட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் உங்களை எதிர்பார்க்கவே கூடாதுனு தான் நான் உங்களுக்கே தெரியாத இடத்துக்கு போனேன் ஆனால் அங்கயும் தேடி வந்து மறுபடியும் என்னை இந்த வாழ்க்கைக்கு அழைச்சிட்டு வந்து ஏன் இப்படி பண்ணிங்க. நடபிணமா வாழ்ந்தாலும் ஏதோ ஒரு வகையில நிம்மதியா இருந்தேன் ஆனால் இப்போ ஹனிகாகிட்ட பேசி நீங்க என்னை விரும்புனதும் அதை சொல்லாம இருந்தது தெரிஞ்ச பிறகு இவ்ளோ நடந்த பின்னாடியும் இவருக்கு நம்ம மேல எந்த நம்பிக்கையும் வரலை”

“பணத்துக்காக நம்மள கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷம் பொண்டாட்டியா நடிச்சவ அதே பணத்துகாக வேசியா கூட போவான்னு உனக்கு தோணிருச்சா அதான் என்னை பிடிச்சதை சொல்லலையா…? நான் அவ்ளோ மோசமான பொண்ணா அதான் நீ என்கிட்ட நம்பிக்கை இல்லாம எதையும் சொல்லாம இருக்கியா…? அதே பணக்கார வாழ்க்கையை காட்டி என்னை அழைச்சிட்டு வந்துட்டியா…? நானும் காரு பெரிய வீடு நகை பட்டுப்புடவை இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு உன்கூட வந்துட்டேன்ல என்னை மாதிரி ஒரு கேவலமான பொண்ணை பிடிச்சிருக்குனு உன்னால எப்படி சொல்ல முடியும்”

“…”

“நீ அப்போ நினைச்சது இப்போ நினைச்சது எல்லாமே சரிதான் நான் ரொம்ப மோசமான பொண்ணுதான் போ என் பக்கத்துல வராது” என்று அவனது சட்டை பிடித்து உலுக்கியவள்,

“போ என்னை விட்டு போ இங்க இருந்து போ…” என்று அவன் மார்பிலே அடிக்க,

இத்தனை நேரம் மகியின் வார்த்தைகளை இவ்வளவு நாட்களாக அவளது மனதில் அழுத்தி கொண்டிருந்தவற்றை கேட்ட குருவிற்கு தான் எல்லா இடத்திலும் தான் தவறிவிட்டோம் ஏதுமறியா பெண்ணை மனதளவில் மரிக்க செய்திருக்கிறோம் என்று தெரிந்து ஆயிரமாயிரம் பாகங்களாய் சிதறி போனான்.

வார்த்தைகள் வரவில்லை என்ன சொல்வது எப்படி கூறுவது எப்படி தான் செய்துவிட்ட தவறை சரி செய்வது இந்த பெண்ணை எப்படி சரி செய்வது எங்கணம் தன்னிலையை விளக்குவது என்று தெரியாது தவித்தான்.

கைகள்  அவளை அணைத்திருக்க விழிகள் கலங்கியிருந்தது. கொடுத்தவள் ஒருவிதத்தில் அமைதியாகிருக்க அதனை பெற்று கொண்டவன் தான் உருக்குலைந்து போயிருந்தான்.

கணங்கள் கடக்க பட்டென்று அவனிடமிருந்து விடுபட்டு எழுந்தவள் முகத்தை துடைத்துவிட்டு,

“சா… சாரி சாரி குரு சார்.‌ என்னை மன்னிச்சிடுங்க. நான் ஏதோ குழப்பத்துல தெரியாம பேசிட்டேன்.‌ ப்ளீஸ் நீங்க எவ்ளோ பெரிய ஆள் நான் போய் உங்களை நீ வா போன்னு மரியாதை இல்லாம பேசி உங்க சட்டையை வேற பிடிச்சு ரொம்ப ரொம்ப சாரி சார். நிஜமா நான் எதையும் மனசறிஞ்சு செய்யலை ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. இனிமே எந்த காலத்திலயும் இப்படி நடந்துக்க மாட்டேன். நடந்ததை மறந்துடுவோம். இதுக்கு முன்னாடி எப்படி நாம லைஃப் இருந்ததோ அப்படியே நீங்க விருப்பப்பட்ற வரை இருக்கும். நீங்க‌ என்னோட முதலாளி நான் உங்ககிட்ட வேலை பார்க்குற வொர்க்கர் இதை நான் எப்பவும் மறக்கமாட்டேன் சார். உங்க லைஃப்ல என்னால எந்த பிராப்ளமும் வராது சார்” என்று எதுவுமே நடக்காத பாவனையில் பேசியவள்,

“சீக்கிரம் தூங்கணும் காலையில வேகமா எழுந்து சமைக்கணும் உங்களுக்கு வேற வி வி கம்பெனியோட மீட்டிங் இருக்கு” என்றவாறு படுக்கையை சரிசெய்ய,

அதை தாங்க மாட்டவன் எழுந்து சென்று அவள் முன் மண்டியிட்டு அவளது கையில் முகத்தை புதைத்து கொண்டான்.

மகியின் கரங்கள் குருவின் கண்ணீரில் நனைய துவங்கியது…

error: Content is protected !!
Scroll to Top