காதல் 33.1

காதல் 33:

ஹனிகாவிற்கு தான் செவியில் விழுந்த வார்த்தைகளை நம்ப இயலவில்லை.

ஒரு வேளை தனக்குத்தான் தவறாக கேட்டிருக்குமோ என்று எண்ணி,

“எ… என்ன சொன்னிங்க குரு…?” என்று தடதடக்கும் இதயத்துடன் வினவ,

பதகளிப்புடன் தனது முகத்தை கண்டவளை சலனமில்லாது நோக்கியவன்,

“நாம பிரிஞ்சிடலாம். லெட்ஸ் ப்ரேக்கப்” என்று மொழிந்திட,

“குரு எ… என்ன பேசுறீங்க நீ… நீங்க நான்…” என்றவளுக்கு ஆயிரம் இடிகளை சேர்த்து இறக்கிய அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

விழிகள் முழுவதும் நிறைந்து இருந்தது.  இத்தனை வருடங்களாக இவன் தான் இவன் மட்டும் தான் உலகம் என்று எண்ணி வாழ்ந்திருந்தவளால் அவனுடைய வார்த்தைகளை கிரகிக்க முடியவில்லை.

இதயம் சிறிது சிறிதாக சிதறி கொண்டு இருந்தது.

கன்னம் தாண்டிய கண்ணீர் அவளது நிலையை உறைக்க அந்த கனமும் அமைதியை தாங்கி பார்த்திருந்தான் எதிரில் இருந்த குரு.

ஹனிக்கு என்ன கேட்பது என்ன கூறுவது என்று எதுவும் புரியவில்லை. விழிகளில் வடிந்த நீருடன் தன்னுடைய உலகமாகி போனவனை தான் வெறித்திருந்தாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த கணமே இதயத்திற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திட்டவனை தன்னுடைய வாழ்வினுள் இணைத்து கொள்ள எண்ணி அந்த நொடியே முடிவு செய்து அவனையே சுற்றி வந்து தன்னுடைய காதலை நேசத்தை விதவிதமாக கொட்டி அவனுடைய அன்பையும் பெற்று நான்கு வருடங்களுகாக இவனுக்காகவே வாழ்ந்து வந்தவளுக்கு குருவின் வார்த்தைகள் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சியது.

நிமிடங்கள் நொடிகளாக கடக்க நடந்ததை உள்வாங்கியவள் விழிகளை மூடி திறந்து அவனது கரத்துடன் கோர்த்திருந்த கரத்தை பிரித்தெடுத்து விட்டு,

“இ… இப்போ பி…” என்று ஆரம்பித்தவளால் அந்த வார்த்தையை கூற இயலாது போய்விட,

“இப்படி இந்த மாதிரி முடிவெடுக்குற அளவுக்கு என்ன என்ன நடந்துச்சு…?” என்று அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்து வினவிட,

இவனிடம் தான் பதில் இல்லை. என்னவென பதில் கூறுவான் உன்னை நேசித்து கொண்டு இருக்கும் போதே எனக்கு மகிழ் மீது நேசம் பிறந்துவிட்டது என்றா…?

அந்த விடயத்தை நினைக்கும் போது குருவிற்கே தன் மீது ஒருவித வெறுப்பு தோன்றியது.

“இது ஐ மீன் நமம ரிலேஷன்ஷிப் சரி வராது…” என்று குரு மொழிய,

“சரி வராதுனா…? என்ன என்ன சரிவராது எனக்கு புரியலை…?” என்று வினா எழுப்பினாள்.

ஒரு நொடி விழிகளை மூடி திறந்தவன்,

“ஹனி ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டாண்ட் மீ” என்று குரு இயம்ப,

“என்ன புரிஞ்சுக்க குரு. நீங்க தான் எதுவுமே சொல்ல மாட்றீங்களே…? என்ன பிரச்சனைன்னு சொன்னாதான புரியும்‌…?” என்றவள்,

“உங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்கனு யோசிக்கிறிங்களா…? டோன்ட் வொர்ரி குரு. நான் என் பேரண்ட்ஸ பேச சொல்றேன்…” என்று மொழிய,

குருவிடம் மௌனம் குடி கொண்டது.

“வேற‌ என்ன ப்ராப்ளம் குரு. யாராவது எதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்கிறிங்களா…? உங்க மாமா அத்தை பேமிலி…?” என்று கேள்வியுடன் நிறுத்தியும் எந்த பயனும் இல்லை.

“என்னன்னு சொன்னாதான புரியும்…” என்றவளது பொறுமை கரைய துவங்கியது.

“என்னன்னு சொல்லித் தொலைங்களேன்… சும்மா பிரிஞ்சிடலாம் பிரிஞ்சிடலாம்னு சொன்னா என்ன அர்த்தம். நாலு வருஷம் நீங்கதான் உயிர் உலகம் எல்லாம்னு வாழ்ந்து இருக்கேன். இப்போ வந்து பிரிஞ்சிடலாம்னா நான் என்ன பண்ணுவேன்…” என்று கோபமாக கத்த துவங்கியவள் இறுதியில் உடைந்து அழத்துவங்க,

“ஹனி…” என்று தன்னை முற்றும் முழுதாக வெறுத்து கனத்த மனதுடன் அவளது தோளில் கையை வைக்க,

“ஐ கான்ட் லீவ் வித்தவுட் யூ குரு” என்று அவனை இறுக அனைத்து கொண்டவளது சூடான விழிநீர் குருவின் தோளினை நனைக்க,

இவன் மொத்தமாய் மரித்து இறுகிப் போனான். ஒரு பெண்ணுடைய கண்ணீர் அதுவும் முழுமுதற் காரணம் தான் தான்.

இத்தனை தூரம் உடைந்து அழுது தன்னிடமே வந்து தஞ்சம் கொள்ளும் இந்த பெண்ணின் நேசத்தை தீயில் இட்டு கொழுத்திய பாவம் தன்னை நிச்சயமாக எளிதில் விட்டுவிடாது.

எத்தனை பிறவி எடுத்தாலும்  இந்த பாவத்திற்கு தன்னால் பரிகாரம் தேட இயலாது.

‘விட்டுவிடு அவளை உன்னிடமிருந்து பிரித்துவிடு. நீ பிரிந்துவிடு’ என்று உள்ளம் கூக்குரலிட்டது.

அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்பவனால் இந்த சிறிய பெண்ணிடம் பேச இயலவில்லை.

ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,

“குரு ப்ளீஸ். என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியணும். என்ன ப்ராப்ளமா இருந்தாலும் நாம சேர்ந்தே சால்வ் பண்ணலாம்” என்று அழுகையில் தேம்பியவள் அவனது கரத்தை அழுந்த பிடிக்க,

“ஹனி ப்ளீஸ் போதும் என்னை இதுக்கு மேல குற்றவுணர்வுக்கு ஆளாக்காத…” என்று அடிக்குரலில் கத்திவிட்டவன் தலையை இறுக பிடித்து கொண்டான்.

தலைக்குள் யாரோ சுத்தியலால் அடிப்பது போல வலித்தது.

ஹனி அவனது கத்தலில் அதிர்ந்து ஒரு அடி பின்னோக்கி சென்று எழுந்து நின்றுவிட்டாள்.

முகம் முழுவதும் அவனது கத்தலில் உண்டான அதிர்ச்சி விரவியிருந்தது. அவளது  முகத்தை கண்டவன் ஒரு கணம் விழி மூடி திறந்து,

“நான் தான் நான் மட்டும் தான் பிராப்ளம். நான் தான் எல்லாத்துக்கும் காரணம். எனக்கு உன் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது அவளை பிடிச்சிருச்சு. நா… நான் உனக்கு வேணாம். நான் உனக்கு ஏத்தவன் இல்லை.  எனக்கு எந்த தகுதியும் இல்லை உன்னோட இந்த அன்பு காதல் எதுக்குமே எனக்கு ஒரு பர்சன்ட் கூட தகுதி இல்லை.‌ போய்டு என்னைவிட்டு போய்டு ப்ளீஸ்” என்றவன் கைகளில் முகத்தை புதைத்து கொண்டான்.

இங்கு அவனுடைய வார்த்தைகளை உள்வாங்கியவளுக்கு தான் உலகம் தட்டாமாலை சுற்றியது.

அதிர்ச்சியில் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க,

“குரு…” என்றவளுக்கு இதழ்கள் நடுங்கியது.

சட்டென்று விரலை ஊன்றி அழுத்தமாக நின்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டவளது இதயத்தினை குருவின் வார்த்தைகள் ஆயிரம் பாகங்களாக உடைத்திருந்தது.

ஹனியால் குருவினது வார்த்தைகளை துளியும் நம்ப இயலவில்லை.

இதற்கு முன்பு கூறிய வார்த்தைகளை விட இதோ இந்த ஒற்றை விடயம் அவளை நிலை குலையச் செய்திருந்தது.

அவன் தன்னை வேண்டாம் என்று கூறிய போது கூட ஏனென்று தெரியாத பயம் தான் நெஞ்சை கவ்வியது.

error: Content is protected !!
Scroll to Top