காதல் 25.2

குரு தான் போகும் அவனையோ வெறித்தான்.

நொடிக்கு நொடி பணத்திற்கும் அப்பாற்பட்ட சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்று மகிழினியும் அகிலனும் குருவை உணர வைத்தனர்.

அடுத்த நாள் ஒருவித அமைதியுடன் விடிய குரு முந்தைய இரவே பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை கண்டறிந்து இருந்தான்.

அந்த காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டது யார் என்று இரவு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிந்திருந்தான்.

அகிலனுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தான் இதனை செய்திருந்தான்.

அவனை காவல்துறை உதவியுடன் தேடி பிடித்து அவன் மூலமாகவே இதெல்லாம் அவனாக தவறாக சித்தரித்த காணொளி என்று ஒப்புக்கொள்ள வைத்திருந்தான்.

அடுத்த கணமே ‘மருத்துவ கல்லூரியில் உடன் பயிலும் மாணவன் மீதிருந்த பழிவெறியால் அவனை தன் வகுப்பில் உள்ள மற்றொரு பெண்ணுடன் தவறாக காணொளியை சித்தரித்த மாணவன் என்று செய்தி பரவியது‌.

அந்த காணொளியை விடுத்து வேறு ஒன்று கிடைத்திட எல்லோருடைய கவனமும் அதன் புறம் திரும்பி இருந்தது.

உறவினர்கள் எல்லோருமே அந்த காணொளி சித்தரிக்கப்பட்டது என்று நம்பும்படியாக குரு அனைத்தையும் கட்சிதமாக முடித்திருந்தான் இந்த சிறந்த தொழிலளிபன்.

ஆனால் வாழ்க்கையில் தான் சறுக்கிவிட்டதை என்று இவன் அறியானோ…?

பிறைசூடன் மற்றும் கோதை கூட சற்று தெளிந்திருந்தனர். அவர்களை கூட  குரு நடந்தவை எவற்றிற்கும் வர்ஷினிக்கும் அகிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்ப வைத்திருந்தானே…

கோதை இதனை அறிந்த பிறகு தான் தான் பெற்ற பிள்ளையை தவறாக நினைத்துவிட்டோமே என்று வருந்தினார்.

வர்ஷினியிடம் கூட மன்னிப்பை வேண்டினார்.‌ வர்ஷி தான் குற்றவுணர்வில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தாள்.

இத்தனை தூரம் நடந்த பிறகும் தன்னை இவ்வளவு நம்புகின்றனரே என்று உள்ளுக்குள் குற்றவுணர்வு வாட்டியது.

இருந்தும் குருவிடம் நடந்தவற்றை யாரிடமும் கூற மாட்டேன் என்று கூறிவிட்டதால் அமைதியாக இருந்தாள். அவளிடம் முன்பிருந்த துறுதுறுப்பு காணமல் போயிருந்தது.

கோதை அகிலனிடம் கூட மன்னிப்பை கேட்டிருந்தார்.‌ எல்லாம் இந்த‌ ஒரு வாரத்தில் சரியாகியிருந்தது. குரு பிரசாத் சரி செய்திருந்தான்.

அம்முவை ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரிக்கு மாற்றியிருந்தான். வர்ஷினியும் செய்த தவறுக்காக வருந்தி குரு கூறிய அனைத்தையும் மறு பேச்சின்றி கேட்டாள்.

இளையவர்களை கூட குரு சமாதானம் செய்துவிட்டிருந்தான்.

ஆனால் இங்கு மனம் முழுவதும் ரணத்துடன் சுற்றி திரிந்தது மகிழினி மட்டுமே.

அவள் இதில் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று எண்ணி பெரியவர்களும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.

ஆனால் அவளை வார்த்தையால் கொன்றுவிட்டவனுக்கு மட்டும் தானே தெரியும் பேசிய வார்த்தைகளின் வீரியம்.

நிகழ்வு நடந்த மறுநாளே குரு மகிழினியை தன்னுடைய அறையிலே தங்கும் படி கூறிவிட்டிருந்தான்.

வழக்கம் போல இரவுணவை முடித்துவிட்டு அறைக்குள் காலடி எடுத்து வைத்தவளுக்கு உள்ளுக்குள் பெரும் இரைச்சல்.

இதயத்தின் ரணம் இன்னுமின்னும் அதிகரித்தது. இத்தனை தூரம் பேசியவனது அறைக்கே தான் மீண்டும் வர வேண்டி உள்ளதே என்று வாழ்வில் முதல் முறையாக தனது வறுமையை வெறுத்தாள்.

தனக்கு மட்டும் வறுமையும் பண கஷ்டமும் ஏற்படாது இருந்திருந்தால் தான் இந்நேரம் இந்த ஒப்பந்த திருமணத்தை செய்திருக்க மாட்டேனே…

இதோ இவரிடம் பணத்தை வைத்து ஆட்களை மதிப்பிடும் இவரிடம் அருவருத்த பார்வையுடன் கேட்க கூடாத வார்த்தைகளை கேட்க நேர்ந்திருக்காது.

இளையவர்களை வைத்து கொண்டு என்ன செய்வது என்று கூட தெரியாது நின்ற போது கூட பெற்றவர்கள் வளர்த்திருந்த விதத்தில் அத்தனை தன்னம்பிக்கையையும் தைரிரத்துடனும் இருந்தாலே‌…

ஆனால் இந்த நேசம் இல்லை ஏதோ ஒரு வகையில் ஏற்ப்பட்ட நன்றியுணர்சி பாசம் ஏதோ ஒன்றால் மொத்தமாக உடைந்து நிற்கிறேனே என்று தன்னை தானே ஆயிரமாவது முறையாக வெறுத்தவள் நிர்மலான முகத்துடன் உள்ளே நுழைந்தாள்.

குரு பிரசாத் நீள்விருக்கையில் தான் இவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

இவள் அவனது முகத்தை கூட பார்க்காது உள்ளே நுழைந்து இளையவர்களை உறங்க வைத்துவிட்டு தானும் போர்வையை போர்த்தி கொண்டு உறங்க முயற்சித்தாள்.

ஆனால் முடியவில்லை பஞ்சு மெத்தை குருவினுடையது என்ற காரணத்தால் முள் மெத்தையானது‌.

குருவும் அமைதியாக யோசித்திருந்தான். தவறிழைக்காத ஒருவரின் மீது பழியை சுமத்தி கோபப்பட்டு சற்று அதிகமாக பேசிவிட்டோமே. அதுவும் இத்தனை நடந்த பிறகும் தனது குடும்பத்திற்காக பார்த்து சிந்தித்து பேசுபவளை காயப்படுத்திவிட்டோமே என்ன கூறி சாமாதானத்திற்கு வருவது என்று வெகுநேரமாக யோசித்து அமர்ந்திருந்தான்.

ஒரு முடிவிற்கு வந்தவனாய்,

“மகிழினி…” என்று அழைத்துவிட்டான்.

ஆனால் மகிழ் தான் அசையவில்லை. காதுகளை இறுக மூடி கொண்டாள்.

“மகிழ் உன்னை தான் கூப்பிட்றேன். நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்” என்று மீண்டும் அழுத்தமாக அழைத்திட,

அந்த குரல் அவளை திரும்பி பார்க்க வைத்தது.

எழுந்து அமைதியாக அமர்ந்து,

“சொல்லுங்க சார்” என்றவளது குரல் எதுவுமே நடவாத பாவனையில் அத்தனை நிர்மலாக இருந்தது.

அவளது பாவனையில் இவனுக்கு தான் முதன் முதலில் தடுமாற்றம் பிறந்தது.

இருந்தும் அதனை வளரவிட்டால் அவன் குரு பிரசாத் இல்லையே… அடுத்த நொடியே தன்னை சமன் செய்தவன்,

“நான் நடந்த விஷயத்துல கொஞ்சம் டென்ஷனாகி என்ன ஏதுன்னு விசாரிக்காம கத்திட்டேன்.  உன்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. அகில் சொன்ன பின்னாடி தான் எனக்கு உண்மை தெரிஞ்சது…” என்று தன்னிலை விளக்கம் கொடுக்கையிலே இடை நுழைந்தவள்,

“நான் எதுவும் நினைக்கல சார். உங்க இடத்தில யாரா இருந்தாலும் இப்படி தான் பேசி இருப்பாங்க. காசுக்காக பொண்டாட்டியா நடிக்க வந்தவ அதே காசுக்காக அதுக்கு மேலயும் போவான்னு நீங்க நினைச்சதுல எந்த தப்பும் இல்லை. நாம‌ எல்லாம் ஆஃப்டர் ஆல் ஹுயூமன் பீயிங்க்ஸ். யாருக்கும் மனசு எந்த நேரத்தில மாறும்னு யாராலயும் கணிக்க முடியாது. மே பீ என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா அவங்களுக்கு கூட இந்த மாதிரி தாட்ஸ் வந்து இருக்கலாம். ஏன் எனக்கு இதுவரைக்கும் வரலைன்றதுக்காக இனி வராதுனு என்ன நிச்சயம்…?”

“…”

“இனி வர்ற நாள்ல இந்த சொகுசான வாழ்க்கை என் மனசை மாத்தலாம். நானே கூட இங்க பெர்மனென்டா இருக்க ஆசை படலாம்‌.  இப்படியிருக்கும் போது நீங்க என்னை சந்தேகப்பட்டதுல எந்த தப்பும் இருக்க மாதிரி எனக்கு தெரியலை.  இதுக்காக உங்க இடத்துல இருந்து இறங்கி வந்து என்கிட்டலாம் நீங்க விளக்கம் கொடுக்கணும்னு அவசியமில்லை சார். நான் இதை மறந்துட்டேன். உங்களுக்கு இருக்க ஆயிரம் வேலையில இது ஞாபகத்துல இருக்காதுனு நினைக்கிறேன்…” என்றவள் அவன் பதிலை எதிர்பாராது திரும்பி படுத்து கொண்டாள்.

இங்கு குரு தான் அவளது கூற்றில் பேச்சற்று போனாள்…

error: Content is protected !!
Scroll to Top