காதல் 1.3

படுக்கையில் சாய்ந்தமர்ந்து ஒரு கோப்பினை பார்த்தபடி இருந்த பிறைசூடன் இவளது வரவில் நிமிர்ந்து, “அம்மும்மா எழுந்துட்டியா?” என்று புன்னகையுடன் வினவினார் பிறைசூடன்.

“ஹான் எழுத்துட்டேன் இவ்வளோ சீக்கிரமா எல்லாம் உங்க பொண்ணால தான். இப்போ தான் பப்ளிக் எக்ஸாம்லாம் முடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கேன். அடுத்து மெடிசின் படிக்க பைவ் இயரஸ் கஷ்டப்படணும். இதுக்கு நடுவுலயாவது கொஞ்சம் நல்லா தூங்கி எழுந்து என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தா உங்க பொண்ணு விடமாட்டிங்கிறாங்க” என்று குறைபட,

“ஆமா அப்படியே ஸ்டேட் பர்ஸ்ட் மார்க் வாங்கின மாதிரிதான் பண்ணிட்டு இருக்க. பாஸ் மார்க்க விட கொஞ்சம் அதிகமாக வாங்கியிருக்க அவ்ளோதான்” என்றபடி கையில் பூஸ்ட்டை எடுத்து வந்தார் கோதை.

“கோதை எதுக்கு அம்முவ திட்ற. அவ சொல்றதும் சரிதானே குழந்தையை கொஞ்ச தூங்கவிடு” என்று பேத்திக்கு ஆதரவாக பேச, “ப்பா உங்களால தான் அவ கெட்டுப்போறா‌. முதல்ல செல்லம் கொடுக்குறதை நிறுத்துங்க” என்றுவிட்டு கையில் இருந்த பூஸ்ட்டை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

“உங்கம்மா அப்படித்தான்னு உனக்கு தெரியும்ல நீ பூஸ்ட்டை குடிச்சிட்டு போய் ரெஸ்ட் எடு” என்று சூடன் கூற, “ஹ்ம்ம்” என்று வாகாக அவர்மீது சாய்ந்தவாறு அமர்ந்தவள் பூஸ்ட்டை பருகிவிட்டு தாய்க்கு தெரியாதவாறு மீண்டும் அறைக்குள் அடைந்து உறங்க துவங்கி இருந்தாள்.

இரவு கேளிக்கை விருந்திற்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால் உறக்கம் கண்களை சுழற்றியது ஆதலால் உடனே உறக்கத்தினை தழுவியிருந்தாள்.

“குரு சார் வந்துட்டாரு” என்ற பியூனின் சத்தத்தில் அங்கு பேசி கொண்டு இருந்தவர்கள் தங்களது வேலையினை கவனிக்க சென்றுவிட, வழியில் மரியாதை செலுத்தியவர்களிடம் தலையசைப்பை பதிலாக கொடுத்துவிட்டு தனது அலுவலக அறைக்குள் நுழைந்தான் குரு எனப்படும் குரு பிரசாத்.

“மே ஐ கம்மின் சார்?” என்று அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான் கரண் குருவின் காரியதரிசி. அவனுக்கு அனுமதி அளித்தவனது பார்வை கையில் இருந்த அலைபேசியில் இருந்தது.

குரு தலையை நிமிர்த்தி பார்க்கும் வரை கரண் அமைதியாக நின்றிருந்தான். கரண் குருவிடம் ஆறு வருடங்களாக காரியதரிசியாக பணி புரிபவன். எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பவன். அதனால் தான் இத்தனை வருடங்களாக குருவிடம் தாக்கு பிடிக்க முடிந்தது.

இத்தனை வருடங்களில் குருவின் அத்தனை செய்கைக்கும் அர்த்தம் புரிந்து வைத்திருப்பவன். குருவிடம் எப்போது எதை பேச வேண்டும் என்று நன்றாக அறிந்து வைத்திருப்பவன். அதனால் அவனாக கேட்கும் வரை இந்த அமைதி.

முழுதாக ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு அலைபேசியில் இருந்து கவனத்தை திருப்பி சொல் எனும் விதமாக குரு பார்க்க,

“சார் மார்னிங் லெவென்க்கு எஸ் வி இன்டஸ்ட்ரீஸ்ஸோட பைனல் அக்ரீமென்ட் சைன் பண்ணனும் அன்ட் ஆப்டர் நூன் ஜே எஸ் டீலர்ஸ்ஸோட டெமான்ஸ்ட்ரேஷன் இருக்கு” என்று அவனுடைய அன்றைய தின முக்கியமான வேலைகளை கடகடவென ஒப்பிக்க, “ஹ்ம்ம்…” என்று தலையசைத்து கேட்டவன்,

“வாட் அபௌட் கிருஷ்ணாஸ் கொட்டேஷன்?” என்று வினவினான். “அவங்ககளுக்கு மெயில் பண்ணிட்டேன். டுமாரோ கொட்டேஷன் அனுப்பிட்றேன்னு சொல்லி இருக்காங்க சார்” என்று பதில் மொழிந்தான்.

“ஓகே விவி டெக்னாலஜிஸ் ப்ராஜெக்ட் எந்த லெவெல்ல இருக்கு?” “எக்ஸ்பெக்டட் டு கம்ப்ளீட் இன் எ டூ வீக்ஸ் சார்” என்க, “வாட்…?” என்று அதிர்ந்தவனது முகம் சிறிது சிறிதாக சிவப்பேற துவங்கியது.

இங்கே கரணுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது. “ப்ராஜெக்ட் டெட்லைன் என்ன?” என்று குரு இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க, “இன்னும் ஒன் வீக் சார்” என்று கரண் மொழிந்தான்.

“தென் வொய் டிட் யூ டோல்ட் தட் இட் வில் பீ எக்ஸ்பெக்டட் டு கம்ப்ளீட் இன் அ பிப்டீன் டேஸ்” என்று சினத்துடன் குரு வினவ,
“சார்…” என்று கரண் இழுத்தான்.

“வாட்…” என்றவன் அவனை அழுத்தமாக பார்த்தான்.
கரணிடம் பதிலில்லை.

“ஹூ இஸ் த டிஎல்?”

“விக்ரம் சார்”

“கால் ஹிம் இம்மிடீயேட்லி” என்று குரு மொழிய, கரண் உடனே விக்ரமிற்கு அழைப்பு விடுத்தான். அடுத்த இரண்டாவது நிமிடம் விக்ரம் அனுமதி பெற்றுவிட்டு உள்ளே நுழைய, “வாங்க மிஸ்டர் விக்ரம் டேக் யுவர் சீட்” என்று எந்தவித முக மாறுதலுமின்றி கூறியவனது கோபம் விக்ரமிற்கும் புரிந்து இருந்தது.

“இல்லை இருக்கட்டும் சார்” என்றவனுக்கு பயத்தில் சிறிதாக வியர்க்க துவங்கியது. குருவினது கோபத்தினை பற்றி அங்குள்ள அனைவருக்கும் நன்றாக தெரிந்திருந்தது.

“சொல்லுங்க விக்ரம் ஆன்கோயிங் ப்ராஜெக்ட் எந்த லெவெல்ல இருக்கு?” என்று அழுத்தமாக வினவ, “சார்…” என்று ஆரம்பித்த விக்ரமிற்கு அடுத்த வார்த்தை வர மறுத்தது.

“சொல்லுங்க எப்போ பைனலைஸ் பண்ணுவீங்க?” என்று கேட்டவனின் வார்த்தையில் சிறிது சிறிதாக சூடு ஏறத்துவங்கியது.

“சார் அதுவந்து…” என்று விக்ரம் இழுக்க, “என்ன வந்து போயிட்டுனு கதை சொல்லிட்டு இருக்கிங்க. இந்த வீக் தான் இந்த ப்ராஜெக்ட்க்கு டெட்லைன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”என்று வினவியவனின் குரலில் இருந்த சூடு எதிரில் இருந்தவனை சுட்டு பொசுக்கும் அளவில் இருந்தது.

விக்ரமிடம் மொழியில்லை. பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்க குருவை கண்டான்.

“இந்த ப்ரைடே வரைக்கும் தான் உங்களுக்கு டைம் அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கம்ப்ளீட் பண்ணியிருக்கணும்” என்றவன், “காட் இட்?” என்க,
“சார். அதுக்குள்ள எப்படி முடிக்க முடியும்” என்ற விக்ரம் அதிர்ந்து பார்த்தான்.

“எனக்கு தெரியாது. நீங்க டே அண்ட் நைட் வொர்க் பண்ணுவிங்களோ இல்லை என்ன பண்ணுவிங்களோ எனக்கு ப்ராஜெக்ட் கம்ப்ளீட் ஆகணும். அதர்வைஸ் யுவர் என்டையர் டீம் வில் பீ பையர்ட்” என்றவன், அவனது ஏகமாய் அதிர்ந்த முகத்தை கண்டுகொள்ளாது, “நவ் க்ளியர் மை ப்ளேஸ்” என்று முடித்திட்டான்.

விக்ரம் தான் செய்வதறியாது நின்றுவிட்டு சோகமான முகத்துடன் வெளியேறினான்.
நண்பன் விக்ரமின் முகத்தை கண்ட கரணுக்கும் வருத்தமாக தான் இருந்தது.

இருந்தும் தான் என்ன செய்ய முடியும். தான் எதாவது கூறினால் தனக்கும் சேர்த்தல்லவா திட்டு விழும் என்று அமைதியாக இருந்துவிட்டான்.

‘ப்ச் மார்னிங் வந்ததுமே மூட் அவுட் பண்ணிட்டான் இடியட்’ என்று எண்ணியபடி இருந்தவனுக்கு கோபம் குறையவில்லை. கரண் அனுமதி வாங்கிவிட்டு வெளியேற, குரு தான் பார்க்க வேண்டிய கோப்புகளை ஆராய துவங்கினான்.

சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த கரண், “சார் இந்த ரிப்போர்ட்ட பார்த்து சைன் பண்ணிட்டிங்கன்னா பர்தரா மூவ் பண்ண சொல்லிடலாம்” என்று ஒரு கோப்பை நீட்டினான்.

குரு வாங்கி அதனை புரட்டிப்பார்க்க அவனது அலைபேசி அழைத்தது. ஏதோ சிந்தனையில் இருந்தவன் அதனை கவனியாது போக மீண்டும் அது இசைத்தது.

“சார் கால்” என்று கூறவும் அதனை உணர்ந்தவன் அலைபேசியை எடுத்து பார்க்க,
‘ஹனி காலிங்’ என்று வர அலைபேசியில் நவநாகரீக மங்கை ஒருத்தி அழகாய் சிரித்தபடி குருவுடன் நின்றிருந்தாள்.

அவளது அழைப்பை கண்டவனது மனநிலையில் சடுதியில் மாற்றம். கரணுக்கும் தெரிந்தது. அழைப்பது யார் என்றும் புரிந்தது.

அழைப்பை ஏற்காதவன்,
“கரண் நான் மார்க் பண்ணி இருக்க கரெக்ஷன்ஸ் எல்லாம் சேஞ்ச் பண்ணி கொண்டு வா” என்றிட, கரண் வெளியேறினான்.

அதற்குள் அழைப்பு முடிந்திட அலைபேசியை எடுத்து தானே அழைப்பு விடுத்தான் ஹனி என்று குருவால் அழைக்கப்படும் ஹனிகா குருவின் காதலுக்கு சொந்தமானவள்.

error: Content is protected !!
Scroll to Top