உள்ளம் – 25.3

முகத்தைச் சுருக்கியவள், “என்னை முறைச்சா ஆச்சா? நான் என்னப் பண்ணேன்?” என இவள் சடைத்துக்கொண்டாள்.

இன்னும் பதினைந்து நாட்கள் வீட்டிலிருக்க வேண்டும் என்ற நினைப்பே சலிப்பைக் கொடுத்தாலும் அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. விக்ரமும் ஷெண்பாவும் முன்பு போல அடிக்கடி வர முடியாவிட்டாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

அப்படி தமையனைப் பார்க்க வந்தாலும் ஷெண்பா மனோவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அது கருத்தில் பதிந்ததும், “ஷெண்பா, அவ உன்னோட அண்ணி. ஏன் முறைச்சுட்டே சுத்துற…?” என குமரன் தங்கையை அதட்ட, அவள் இரண்டு நாட்கள் வீட்டுப் பக்கம் வரவில்லை. இவன்தான் கடைசியில் இறங்கிச் சென்று அவளை சமாதானம் செய்ய வேண்டியதாகப் போகிற்று.
அப்போதும் சின்னவள் முறுக்கிக்கொண்டே தான் சுற்றினாள்.

குமரன் அவளை அதட்டி சரிசெய்ய முயலாது சின்னப்பிள்ளை என இறங்கி வந்தது எத்தனை தவறேன தங்கை நிரூபிக்கப் போகிறாள் என்பதை அவன் அறியாது போனான்.
ஞாயிறுகளில் மனைவியைவிட்டு வெளியே செல்வதை தவிர்த்தான்.

ராதா வந்து இவனைப் பார்க்க, திவாகர் மனோவிடம் மட்டும் பேசினான். குமரனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஏனோ அவன் மீதான கோபம் வளர்ந்து கொண்டே சென்றது. மனோ இதை கவனித்தாலும் அவர்களுக்கு இடையேயான உட்பூசலை அவர்களே சரிசெய்யட்டும் என விட்டுவிட்டாள். ஆனால், என்னவென்று கேட்டிருக்கலாமோ என வருந்தும் நாளும் காத்திருந்தது.

ஒருவழியாய் மருத்துவமனைக்கு மறுமுறை செல்லும்போது கை சரியாகிவிட்டதென கைக்கட்டைப் பிரித்துவிட்டார்கள். அப்போதும் மருத்துவர் அறிவுரையை அள்ளித் தெளித்தார்.

“டாக்டர், ஒரு ஐம்பது கிலோ வெயிட்டைத் தூக்கலாமா டாக்டர், ஹெவி வொர்க் பண்ணலாமா?” என்றவன் பேச்சின் சாரம்சம் உணர்ந்த மனோஹரி பல்லைக் கடித்தாள். மருத்துவர் முன்பு எதுவும் பேச முடியவில்லை அவளால்.

“நோ… ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்கக் கூடாது. பொறுமையா வேலை செய்ங்க!” என அவர் கூற, நன்றியுரைத்து இருவரும் விடை பெற்றனர்.

மனோஹரியின் இருசக்கர வாகனத்தில்தான் வந்திருந்தனர். வரும்போது அவள்தான் வாகனத்தை இயக்கினாள். “கீயைக் கொடு மனோ, நானே ஓட்றேன்!” என்றவனை முறைத்துக்
கொண்டே சாவியை கொடுத்துவிட்டு பின்னே ஏறி அமர்ந்தாள்.

“டாக்டர் முன்னாடி என்ன பேசுனீங்க?” இவள் அதட்டலாய்க் கேட்க, “என்ன… என்ன பேசுனேன்?” என குமரன் ஏதுமறியாதது போல வினவினான்.

“ஹம்ம்… அதான் ஐம்பது கிலோ வெயிட். அது நான்தானே!” இவள் கூறவும், “ஹக்கும், ஆசை டி. நீ ஒரு எழுபது இருப்பல்ல! நான் சூளையில இருக்க வேலையை சொன்னேன் டி!” என்றான் கேலியாய்.

“பொய் சொல்லாதீங்க!” மனோ உதட்டைச் சுழித்தாள்.

“ஏய்! நம்பலையா டி என்னை?” பக்கவாட்டில் குமரன் திரும்ப, “ஐயா சாமி, ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க… இப்போதான் கை சரியாகியிருக்கு!” என அவன் முகத்தை முன்புறம் திருப்பிவிட்டாள் மனைவி. குமரன் சிரிப்புடன் வாகனத்தை இயக்கினான்.

வீடு வந்ததும் அவளை இறக்கிவிட்டவன், “நான் சூளைல போய் ஓனரைப் பார்த்துட்டு வரேன்!” என அவளது பதிலை எதிர்பாராது பறந்திருந்தான்.

‘அதானே பார்த்தேன்… கை சரியானதும் கையில பிடிக்க முடியாது இவரை!’ என மனதில் நினைத்தவள் உள்ளே நுழைய, சிந்துவின் பார்வை மருமகளைத் தாண்டி பின்னே சென்றது.

“அத்தை, வேலை இருக்குன்னு என்னை இறக்கி விட்டுட்டு அவர் வெளிய போய்ட்டாருத்தை!” என அவர் பார்வை உணர்ந்து பதிலளித்தாள் இவள்.

கசகசவென இருக்கவும் சேலையை அகற்றி இரவு உடையை அணிந்தாள். எதேச்சையாக கை மேஜையில் எதையோ தேடும்போது நகப்பூச்சு தென்பட, அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது இவளுக்கு. அதை வெளியே எடுத்தவள் பூஞ்சாய நிறத்திலிருந்ததை வெளியே எடுத்துவிட்டு மற்றதை உள்ளே வைத்துப் பூட்டினாள்.

இரவு பொழுது வந்துவிட, குமரன் வரவும் மூவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். அவன் அலைபேசியை எடுத்துக்கொண்டு பேசச் சென்றுவிட, மனோ அறைக்குள் நுழைந்தாள்.

நகப்பூச்சு கண்ணில் படவும் கட்டிலில் அமர்ந்தவள் மெல்லிய புன்னகையுடன் இடது கையில் வைத்து முடித்துப் பின் காலில் பூசிக் கொண்டிருந்தாள். அலைபேசியை அணைத்தவாறே உள்ளே நுழைந்தவனின் கரம் தாழ்ப்பாளை நன்றாக இறுக்கிப் பூட்டியது.

பளிச்சென மின்னிய விழிகளுடன் மனோவை சமீபித்தவன் இதழ்களில் இளம்புன்னகை ஜனித்தது, மனைவியின் செயலில். கண்ணும் கருத்துமாக காலிற்கு நகப்பூச்சை இட்டு நிமிர்ந்தவளின் முகம் தன்னை விழுங்கும் பார்வையால் கபளீகரம் செய்தவனில் சிவந்து போனது.

அந்தப் பார்வைக் கொடுத்தத் தாக்கத்தில், “என்ன, எதுக்கு இப்படி பார்க்குறீங்க?” என அதட்டலாய் உரைத்து நகப்பூச்சை மேஜைமீது வைத்தாள். கணவனிடம் பதிலில்லை. அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தான்.

“என்னங்க…” என இவள் கோபமாய் அழைக்க முயன்று சிணுங்கலாக அழைக்க, குமரன் சிதறிப் போனான்.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகர்ந்து கட்டிலில் சாய்ந்தவளின் கால்கள் முன்னே நீண்டிருக்க, சிரிப்புடன் அவளருகே அமர்ந்தவன், அவளது காலை தன் மடியில் வைத்தான்.

“என்னப் பண்றீங்க?” என அவள் பதறும் முன்னே நகப்பூச்சு பூசிய ஒவ்வொரு விரலுக்காய் முத்தமிட்டான். கூச்சத்தில் விரல்களை மடக்கியவளின் அடிவயிற்றில் ஏதோ உணர்வொன்று குப்பென தாக்கியது. உள்ளங்காலில் பதிந்த இதழ்களில் இவளுள் பெரும் தீ பற்றிக் கொண்டது.

நிமிர்ந்து மனோவின் தலையிலிருந்தப் பூவைப் பார்த்தவன், “எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்க டி நீ…” என்றான் கிசுகிசுப்பாய்.

“என்ன எல்லாத்துக்கும் ரெடியா இருக்காங்க!” இவள் போலியாய் முறைத்தாள்.

“தலையில என்னடி மல்லிப்பூ?” எனக் கேட்டு ஆழப்பார்த்தவனின் பார்வையில் திணறியவள், “என் தலை, அதுல நான் பூ வைப்பேன்!” என்றவள் லேசாய் குனிந்து அவனின் சட்டை நுனியைப் பற்றி இழுக்கவும், குமரன் மொத்தமாய் அவள்மீது விழுந்தான். நாசி மல்லிகையின் மனத்தோடு தான் ஸ்பரிசித்த மனைவின் சுகந்தத்தை ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ச்சி செய்ய, இவன் மனைவியை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“என்ன…” எனப் பேச வந்தவளின் பேச்சை அவளிதழோடு மெலிதாய் தன் இதழை பிணைத்து முத்தம் தொடுத்தான். மனோ கொஞ்சம் கூச்சமும் தயக்கமும் திகைப்புமாய் அவனில் கலந்தாள். மெல்லிய தொடுகை இருவரையும் உசுப்பியது.

மென்முத்தங்களாய் இட்டு மனைவியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான். எட்டி நின்று தவித்த தவிப்புகளை எல்லாம் முத்தத்தில் மோட்சம் பெறச் செய்தான். முதல்முறை உணர்ந்த ஸ்பரிசம் அத்தனையாய் அவனைச் சுருட்டிக் கொண்டது.

“லைட்டை ஆஃப் பண்ணுங்க!” மனோ கூச்சத்தில் திக்கித் திணற அவளிடமிருந்து பிரிந்து மின்விளக்கை அணைத்து மேஜை மீதிருந்த விளக்கை உயிர்ப்பித்தான். மெலிதான வெளிச்சத்தில் தன்னருகே சிவந்து கிடந்த மனைவி அவனை வசியம் செய்தாள்.

மெதுவாய் இடைவருடி இதழணைத்து அவளின் ஸ்பரிசம் உணர்ந்து பொறுமையாய் மனைவியை சுவீகரித்தான். இத்தனை நாட்கள் ஏக்கங்களெல்லாம் அவனை உந்தினாலும், இவன் அத்தனை பொறுமையாய் அவளைக் கையாண்டான். எந்த இடத்திலும் சிறு பிசிறில்லை.
அவனை ஏற்க முற்பட்டவளிடம் அதீத திணறல்களும் தயக்கமும். பெண்மை வெட்கப் போர்வைக்குள் சூழ, குமரன் மென்மையாய் அவளைக் கையாண்டான்.

இடையிடையே என்னென்னவோ பேசி கொஞ்சி கெஞ்சி மனைவியைச் சிவக்கச் செய்தான். அவனின் இந்தப் பரிணாமம் அவளை திகைக்கச் செய்து, வெட்கம் கொள்ள செய்தது. ஆச்சர்யம் கொள்ளச் செய்து, சிறிது பயம் கூட்டியது.
அவ்வப்போது காதில் கரகரப்பாய் அடர்ந்தக் குரலில் ஏதோ கிசுகிசுத்தான். புரியவில்லை, புரிந்ததும் அவன் முகம் பார்க்க முடியவில்லை அவளால். இன்னுமின்னும்
மனைவியை வர்ணித்தான், கொண்டாடினான், அவளைப் பித்தாக்கினான்.

அழகாய் அமைதியாய் கொஞ்சமே ஆர்ப்பட்டமாய் ஒரு இணைவு. சின்ன சிரிப்புடன் மனோஹரியைக் கைவளைவில் வைத்திருந்தவனைக் காண முடியாது அவனது புஜத்தில் முகத்தைப் புதைத்திருந்தாள் பெண்.

“ஹக்கும்… மனோ!” கிசுகிசுப்பாய் அழைத்தான் குமரன்.

“எதுவும் பேசாதீங்க… நான் தூங்கணும்!” என்றவள் நகர்ந்து போர்வைக்குள் சூழ்ந்து கொள்ள, தள்ளிச் சென்ற மனைவியை அப்படியே விடாது இழுத்துத் தன் கைவளைவிற்கு கொண்டு வந்தவன், “என்னடி?” என்றான் மென்னகையுடன். முரடன், ஹல்க் எனப் பெயரிடப்பட்டவனின் ஆளுமையில் செய்கையில் திகைப்பும், ஆச்சர்யமுமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மனோ. இப்படியொரு முகமா இவனுக்கு என்ற பெரிய ஆச்சரியம் முகம் முழுவதும் வியாபித்திருந்தது.

அது புரிந்ததும் சிரிப்புடன் அவள் நெற்றியில் மென்முத்தமிட்டவன் குனிந்து கழுத்திலிருந்த கழுத்தணிக்கு முத்தமிட, அவனை முறைத்தவள், “எவ்வளோ கொடுத்தாலும் இதுக்கொன்னு குடுத்துட்றீங்க… பத்தாது போல!” இவள் நொடிக்க, “ஏய்! போதும்னு சொல்ற விஷயமாடி இது?” எனக் கேட்டு உடல் அதிர சிரித்தவனில் சிவந்தவள், “படுங்க…” என அதட்டி உருட்டி அவனை தூங்க வைத்து தானும் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை அவர்களுக்குத் தாமதமாய் தான் விடிந்தது. திரைச்சீலைகள் இன்னும் விலக்காதிருக்க, சூரிய கதிர்கள் உள்ளே வரவில்லை. மெல்லிய குளிருக்கு கணவனைப் போர்வையாக்கி அது தந்த கதகதப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் மனோஹரி. முதலில் கண்விழித்தாலும் எழ மனமில்லாது மனைவியையே பார்த்திருந்தவன் குனிந்து அவளது உதட்டிற்கு மேல் இருக்கும் பூனை முடிகளுக்கு மென்முத்தமிட்டான். அதில் லேசாக உறக்கம் கலைய, அவன் முகத்தைக் கைக்கொண்டு பின் தள்ளியவள், “தூங்க விடுங்க!” என்றாள் தெளிவில்லாதக் குரலில்.

“மணி எட்டாச்சு டி!” காதில் ஒலித்தக் கிசுகிசுப்பான குரல் மந்தமாயிருந்த மூளையைத் தட்டியெழுப்ப, கடினப்பட்டு இமைகளைப் பிரித்தவள், “பொய் சொல்லாதீங்க…” என எட்டி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

விழிகள் மங்கலாகத் தெரிய சிமிட்டிவிட்டு மீண்டும் பார்த்தவள், உண்மையிலே மணி எட்டைத் தொட்டதை உணர்ந்து பதறியடித்து விலகப் பார்க்க, போர்வையுடன் அவளை சுருட்டியிருந்தான் குமரன்.

“விடுங்க என்னை, டைமாச்சு!” என மனோ முறைக்க, அப்படியே அவளை அள்ளித் தன்மீது படுக்க வைத்தவன், காய்ந்திருந்த மல்லிகையின் வாசத்தை நுகர்ந்தான்.

“அழகி டி நீ!” என்றவன் குரலில் இவளுக்குள் பல வர்ண மாயாஜாலங்கள். மங்கத் தொடங்கிய மனதைத் தட்டி அவனிடமிருந்து பிரிந்து எழுந்தாள். பார்வையில் கண்டனத்தைத் தேக்கியவள் மாற்று உடை எடுத்துச்சென்று குளித்து வந்தாள்.

தலையை உலர்த்தியவளின் பின்னே வந்து நகப்பூச்சிட்டிருந்த விரலுக்கு முத்தமிட்டவனை வலுக்கட்டாயப்படுத்தி குளியலறைக்குள் தள்ளிவிட்டு வெளியே வர, சிந்து அடுக்களையிலிருந்தார். அவரோடு போய் இணைந்து கொண்டாள்.

குமரன் குளித்துவிட்டு வரவும் மூவரும் உண்டனர். அவன் உடைமாற்றி வெளியே கிளம்ப ஆயத்தமானான். “மனோ…” அறைக்குள் இருந்து கணவன் குரல் கேட்கவும் இவள் உள்ளே நுழைய, பின்னிருந்து அணைத்து செவியில் முத்தமிட்டவன், “வரேன் டி!” என்றான்.

அதில் புன்னகைக்க முயன்ற உதட்டை இழுத்துப் பிடித்தவள், “ரொம்பத்தான்… இத்தனை நாள் இதெல்லாம் எங்கப் போச்சு!” என நொடித்துக் கொண்டாள். குமரன் பதில் பேச வாயெடுக்க, வெளியே சத்தம் கேட்டது.

மனைவியிடமிருந்த கவனம் கலைய இருவரும் கூடத்திற்கு வர, சிந்து அதிர்ச்சியை முகத்தில் காட்டியவாறு நிற்க, அவர் பார்வைப் போகும் திசையில் பார்த்தனர்.

திவாகரும் ஷெண்பாவும் மணக்கோலத்தில் நின்றிருக்க, அவளின் கழுத்தில் புதிதாய்க் கட்டிய தாலி மின்னியது.

error: Content is protected !!
Scroll to Top