இதயம் 31.2

இதோ வரேன் ஷாலினி. ஒரு டூ மினிட்ஸ்,” என்ற மலர் முகத்தில் பவுடரை பூசிக் கொண்டாள்.

ஷாலினியை கண்டதும் தான்விகா, “அத்தை,” என்று அவளிடம் தாவ,

“செல்லக்குட்டி, அத்தை கிட்ட வரீங்களா?” என்று மருமகளை மற்றொருபுறம் தூக்கிக் கொண்டவள், “ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க,” என்றுவிட்டு அகன்றாள்.

ரிஷி மலரின் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைக்க,

“என்ன பண்றீங்க? விடுங்க. தாலி கட்டுற நேரம் ஆயிடுச்சு. சீக்கிரம் போகணும்,” என்று அவனிடம் விடுபட முயற்சித்தாள்.

“எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அழகா தெரியிறியேடி,” என்றவனது குரல் சிரிப்பும் ரசனையும் கலந்து வர, மலருக்கு லேசாக முகம் சிவந்தது.

சிரிப்புடன் அவனை முறைத்தவள், “நம்பிட்டேன், நம்பிட்டேன்,” என்று நம்பாத தோரணையில் கூற,

“ஏய், நிஜமா தாண்டி சொல்றேன்,” என்று மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கினான்.

“அச்சச்சோ, நம்புறேன். விடுங்க,” என்றவள் பதற,

“மலர்,” என்றவனது குரல் கிறக்கமாக ஒலித்தது.

அதில் தடுமாறிய மனதை இழுத்துப் பிடித்தவள், “உங்க ரொமான்ஸை அப்புறமா வச்சுக்கோங்க. வாங்க போகலாம்,” என்று அவனை கையோடு வெளியே அழைத்து வந்துவிட்டாள்.

“அப்புறமா எங்க வச்சுக்கிறது? நீதான் மகளை கவனிச்சிட்டு என்ன கண்டுக்கவே மாட்டேன்ற,” என்று ரிஷி போலியான முறைடன் கூற,

“நைட்டுக்கு சேர்த்து மொத்தமா வச்சு கண்டுக்குறேன். வாங்க, இப்போ அமைதியா,” என்றவள் மேடைக்கு சென்று நின்று கொண்டாள்.

இவ்வளவு நேரம் தமக்கையைத் தேடிய சாகித்யா, மலர் வந்ததும், “ “ எங்கக்கா போன?” என்று அதட்ட, எல்லோரது பார்வையும் இருவர் மீது படிந்தது.

“ஹேய், மெதுவா பேசுடி. இன்னைக்கு நீ கல்யாணப் பொண்ணு,” என்று அருகில் பட்டு வேட்டி சட்டையுடன் அமர்ந்து, புரோகிதர் கூறியதை தவறாமல் செய்து கொண்டிருந்த சுபாஷ் முணுமுணுக்க,

“அப்பப்ப ஞாபகப்படுத்துங்க. மறந்துட்டேன்,” என்று சிரிப்புடன் கூறினாள்.

அதனைக் கேட்ட சுபாஷ் அவளை போலியாக முறைக்க, “சும்மா,” என்று கண் சிமிட்டு சிரித்தாள் சாகித்யா.

“உனக்கும் எனக்கும் எந்த காலத்திலும் ஒத்து வராது. அதற்கு மேல் இந்த காதல் எல்லாம் எனக்கு சரிபட்டு வராது,” என்று ஒதுங்கிப் போனவளை நான்கு வருடமாக துரத்தி துரத்தி காதலித்து, ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து மேடை வரை கொண்டு வந்துவிட்டான் சுபாஷ்.

சாகித்யாவின் சம்மதத்தை பெற்ற பிறகு ஆசுவாசமாக அமரக்கூட முடியவில்லை அவனால். காரணம், அவனுடைய பெற்றோர் அவர்களை சம்மதிக்க வைப்பதற்குள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து விட்டான். கிட்டத்தட்ட ஆறு மாதமாக போராடி, ரிஷி பேசி, அண்ணாமலை பேசி என்று ஒரு வழியாக சுபாஷின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்திருந்தனர்.

அதுவும் மலர் மற்றும் ரிஷி சாகித்யாவிற்கு நகை மற்றும் சீர் செய்வதாக ஒப்புக்கொண்ட பிறகு தான் சுபாஷின் தாய் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

அவர்கள் சம்மதம் தெரிவித்த பிறகு, “வரதட்சணை கொடுத்து தான் இந்த கல்யாணம் நடக்கணும்னா எனக்கு வேண்டாம்,” என்று சாகித்யா தனது பங்கிற்கு அவனை போட்டு படுத்த, அவளை ஒரு வழியாக கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து திருமண மேடை வரை வருவதற்குள் அவனுக்கு தாவு தீர்ந்துபோனது.

சுபாஷ் ஒரு வழியாக எல்லாம் கைக்கூடி விட்டது என்று மகிழ்ச்சியில் அமர்ந்திருக்க, சாகித்யாவும் நேசித்தவனின் கரம் பிடிக்க போகும் மகிழ்ச்சியில் அவனருகே அமர்ந்திருந்தாள்.

மந்திரங்களை கூறி புரோகிதர் திருமாங்கல்யத்தை எடுத்து சுபாஷிடம் கொடுக்க, அதனை வாங்கியவன் சாகித்யாவிடம் சம்மதம் பெற்று அவளது கழுத்தில் பூட்டி, தன்னுடைய சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.

இதைக் கண்டு மலருக்கும் மாதவிக்கும் விழிகள் கலங்கியது மகிழ்ச்சியில். அதன் பிறகு அடுத்தடுத்த சடங்குகள் நடந்தேற, மலரும் ரிஷியும் வந்தவர்களை கவனிக்க, உணவுப் பந்தியை கவனிக்க என்று வேலையில் மும்முரமாகி போயினர்.

சுபாஷ், சாகித்யா திருமணம் ரிஷி மற்றும் மலர் திருமணம் நடந்த அதே மண்டபத்தில் தான் நடைபெற்றது. ஒரு வாரம் கழித்து சிவகாசியில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஒரு வழியாக வந்தவர்கள் எல்லாம் கிளம்பி செல்ல, கணக்கு வழக்குகளை பார்த்து மண்டபத்தில் இருந்து கிளம்ப மாலை நேரமாகி இருந்தது.

மணமக்கள் இருவரும் மணமகன் வீட்டிற்கு சென்றுவிட, தன்னுடைய குடும்பத்தினரை வழியனுப்பிவிட்டு மலரும் கணவனுடன் தங்கையின் புகுந்த வீட்டிற்கு சென்றாள்.

சுபாஷ் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்தாலும், அவர்களது பூர்வீகம் சிவகாசி என்பதால் அங்கேயே மணமக்களை அழைத்துச் சென்றனர்.

மலர் தங்கையுடன் சென்று அவளுக்கு உதவியாக இருந்தவள், இரவு உணவை முடித்துவிட்டு, சாகித்யாவை அலங்காரம் செய்து அனுப்பிவிட்ட பின்பே தன்னுடைய வீட்டிற்கு வந்தாள்.

மலர் வருவதற்குள் ரிஷி மகளை தூங்க வைத்திருந்தான். வந்து மாமியாரிடமும் நாத்தனாரிடமும் இரண்டு வார்த்தைகள் பேசியவள், பிறகு தனது அறைக்கு வந்துவிட்டாள்.

உறங்கும் மகளைக் கண்டு, “பாப்பா தூங்கிட்டாளா?” என்று கேட்டபடி அவளருகே சென்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஹ்ம்ம், உன்னை கேட்டு அழுதுட்டு இருந்தா. நான் தான் கொஞ்ச நேரம் ஸ்டோரி சொன்னேன். அதை கேட்டுட்டு தூங்கிட்டா,” என்று ரிஷி மொழிய,

சரியென தலையசைத்து கேட்டுக் கொண்டவள், மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்கு செல்ல விழைந்தாள்.

அதற்குள், “எங்கடி போற?” என்று ரிஷி அவளை பிடித்திழுக்க,

“பட்டு சேலை கசகசன்னு இருக்கு. அதுதான் வேற ட்ரெஸ் மாத்த போறேன்,” என்று மலர் பதிலளித்தாள்.

“அதுக்கு ஏன்டி உள்ள போற? நானே மாத்தி விடுறேன்,” என்று ரிஷி சிரிப்புடன் கூற,

“ஐயா சாமி, நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். விடுங்க,” என்றவள் குளியலறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டாள்.

“ஏதோ, நைட்டு சேர்த்து வச்சு கவனிக்கிறேன் சொன்னியேடி,” என்ற ரிஷி முறைப்புடன் கதவிற்கு மறுபுறம் நின்று கேட்க,

கதவை சிறிதாகத் திறந்து தலையை மட்டும் எட்டிப் பார்த்தவள், “ஆமால்ல, மறந்துட்டேன். வந்து கவனிக்கிறேன். இருங்க,” என்று சிரித்து கதவை மீண்டும் கூட்டிக் கொண்டாள்.

அவளது செயலில் ரிஷி சிரிப்புடன் நீள்விருக்கையில் அமர, பத்து நிமிடத்தில் உடை மாற்றி, முகம் கழுவி வந்தவள் அவனருகே அமர்ந்தாள்.

அவளுக்காகவே காத்திருந்த ரிஷி, “ஹ்ம்ம், ஸ்டார்ட் பண்ணு,” என்று சிரிப்புடன் கண்ணடிக்க, மலருக்கும் சிரிப்பு வந்தது.

இருந்தும் அதனை கட்டுப்படுத்தியவள், “ரொம்ப டயர்டா இருக்கு. கை காலெல்லாம் வலிக்குது. நாளைக்கு கவனிக்கவா?” என்று உருவம் உயர்த்த,

“எங்கடி வலிக்குது சொல்லு. நான் அழுத்தி விடுறேன்,” என்று விஷமச் சிரிப்பு சிரித்தவன் தன்னோடு சேர்த்து அணைத்தான்.

அதில் ஒரு கணம் திகைத்து, பின் புன்னகை பூத்தவள், “நிஜமாகவே எனக்கு டயர்டா இருக்கு,” என்று முகத்தை பாவமாக வைக்க,

“சரி, தூங்கு. நாளைக்கு பாத்துக்கலாம்,” என்று முடித்துவிட்டான்.

“நிஜமாக எதுவும் வேணாமா?” மலர் சிரிப்புடன் விழி விரிக்க,

“அதுதான் டயர்டா இருக்குன்னு சொல்லிட்டேல்ல போ  போய் படுடி,” என்று ரிஷி கூறினான்.

“உண்மைக்கே வேணாமா?” என்று சிரிப்புடன் மலர் வினவ, ரிஷி அவளை முறைத்துப் பார்த்தான்.

“தான்வி என்கிட்ட தம்பி பாப்பா வேணும்னு ஆசையா கேட்டா. அவ ஆசையை நிறைவேத்த வேணாமா?” என்று விஷம சிரிப்புடன் கண்ணடித்தவள் கேட்க,

“மலர்,” என்றவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

“பிள்ளைகளுக்கு நடுவுல ரொம்ப வயசு வித்தியாசம் இருக்கக் கூடாதுன்னு எங்க அம்மா வேற சொல்லுச்சு,” என்றவள், பிறகு தயக்கமும் கூச்சமும் போட்டி போட, “நெக்ஸ்ட் ரிலீஸ் பண்ணுவோமா?” என்று கேட்க,

“இதென்னடி கேள்வி? இப்பவே ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணுவோம்,” என்றவன் மனைவியை தன் மீது சாய்த்துக் கொண்டான்.

மலரும் சிரிப்புடன் அவனோடு ஒட்டிக்கொள்ள, அழகிய நேசம் அவர்களை ஆர்ப்பரிப்பில்லாமல் அணைத்துக் கொண்டது.

உன்னை காணும்

வரையில் எனது வாழ்க்கை

வெள்ளை காகிதம் கண்ணால்

நீயும் அதிலே எழுதி போனாய்

நல்ல ஓவியம் சிறு பாா்வையில்

ஒரு வார்த்தையில் தோன்றுதே

நூறு கோடி வானவில்…

error: Content is protected !!
Scroll to Top