இதயம் 2.1

அவரது வெளித்தோற்றத்திலே ராதா சற்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதை ஊகித்திருந்தாள். அதுவும் விலையைக் கேட்காது பொருளை வாங்கிவிட்டதில் தன்னுடைய கணிப்பு சரிதான் என்று நினைத்திருந்தாள்.

இவர் நிச்சயமாக இந்த கூட்டத்தில் காத்திருந்து சுத்தம் செய்து வாங்கி செல்ல யோசிப்பார் என்று நினைத்தவள், “குடுங்கம்மா நானே கிளீன் பண்ணி தரேன்” என்று கூற, ராதா பதில் கூறும் முன் மணி, “அக்கா கடைய யார் பாக்குறது” என்று கேட்டான்

“கொஞ்ச நேரத்துக்கு நீ பாருடா நான் இவங்களுக்கு கிளீன் பண்ணி குடுத்துட்டு வந்துடறேன்” என்றவள்  கடையின் ஓரத்தில் அமர்ந்து இறாலை சுத்தம் செய்ய துவங்கினாள்.

புதிதாக செய்பவருக்கு தான் சற்று நேரம் எடுக்கும் இவள் ஏற்கனவே நன்றாக சுத்தம் செய்து பழகி இருந்ததால் மடமடவென சுத்தம் செய்ய துவங்கினாள்.

பணத்தைக் கொடுக்க வந்தவனும் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து ராதாவை நெருங்கி இருந்தான்.

“பர்ஸ எடுத்துட்டு வரணும்னு தான் நினைச்சேன் ஆனால் மறந்துட்டு வந்துட்டேன் கண்ணா” என்று மகனிடம் கூற, “மாஸ்க் போட்டிருக்கதால ஸ்மெல் ஒன்னும் பெருசா தெரியலம்மா” என்றவன், “எவ்வளவு பே பண்ணனும்மா?”  என்று வினவினான்.

“நைன் பிப்டி கண்ணா அதை கிளீன் பண்ணி முடிச்சதும் கொடுப்பா” என்று ராதா கூற, சம்மதமாய் தலையை அசைத்தவனது விழிகள் அங்கிருந்த கடைகளின் மீது உலா வந்தது.

நல்ல பழகி இருந்த வேலை என்பதால் பத்து நிமிடத்திலே இரண்டையும் சுத்தம் செய்து முடித்தவள் பையில் போட்டு “இந்தாங்கம்மா பக்காவா கிளீன் பண்ணிட்டேன்” என்று ராதாவிடம் நீட்டினாள்.

ராதா, “தொள்ளாயிரத்து அம்பது ரூபாய் தானம்மா?” என்று வினவ, “ஆமாங்க அம்மா” என்று பதில்  இயம்பினாள்.

அவளது பதிலைக் கேட்டவன் தனது பர்சிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு தாயுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

மலர் ஆயிரம் ரூபாயை பெட்டியில் வைத்துவிட்டு மீதி ஐம்பதை எடுத்து விட்டு நிமிர இருவரும் நான்கடி நகர்ந்திருந்தனர்.

“என்ன மீதியை வாங்காம போயிட்டாங்க” என்றவள்,  “சார் சிவப்பு சட்டை போட்ட சார்” என்று சத்தமாக அழைக்க ராதாவின் அருகில் இருந்தவனுக்கு அக்குரல் கேட்டு விட்டிருந்தது.

தன்னைத்தான் அழைக்கிறாள் என்பதை உணர்ந்து திரும்ப, “மீதி அம்பது ரூவாய வாங்காமல் போறீங்க சார்” என்று உரத்த குரலில் கூறினாள்.

அவளது குரலுக்கு பதிலாக, ‘அதை நீயே வைத்துக்கொள்’ எனும் விதமாக விழிகளை அசைத்தவன் திரும்பி தாயுடன் நடக்கத் துவங்க மலர்தான் “பார்றா அம்பது ரூவாய வேணாம்னு சொல்லிட்டு போறாரு பெரிய பணக்காரரா இருப்பாரோ?” என்று மணியிடம் கூறினாள்.

“இருக்கும் ஆளை பாத்தா அப்படித்தான் தெரியுது” என்று மணி பதில் கூற, “அதான் கொரோனாலாம் முடிஞ்சிருச்சே. இப்பவும் மாஸ்க் போட்டுட்டு சுத்துறாங்க நம்மளால கொஞ்ச நேரம் கூட போட்டு இருக்க முடியாது கசகசன்னு இருக்கும் ஏன் மணி?” என்று மலர் அவனிடம் வினவினாள்.

ஐம்பது ரூபாய்க்காக இருவரும் அவனை பணக்காரன் என்று யோசித்ததன் காரணம் பெரிதாக இங்கு யாரும் மீதமுள்ள காசை வாங்காமல் செல்ல மாட்டார்கள். அதுவும் இங்கே ஊரில் உள்ள கடைகளை விட குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் தான் நிறைய ஆட்கள் வந்து

error: Content is protected !!
Scroll to Top