
அதில்,”குட் மார்னிங் வெற்றி சார்”என அவனிடம் தாங்கள் இருவரும் கோரசாகப் பதில் வணக்கத்தை வைத்திருந்தார்கள் பெண்கள் இருவரும்.
அவர்களின் அந்தச் செயலில் வெற்றிச்செல்வனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“இன்னும் எம். டி வரலைப் போலிருக்கே”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே முன்னேறிச் சென்றனர் மூவரும்.
அதற்குப் பிறகுச் சில நிமிடங்கள் தங்களுக்குள் இயல்பானப் உரையாடல்களை மேற்கொண்டு விட்டுத் தத்தமது பிரிவுகளுக்குப் போய் வேலைச் செய்யத் தொடங்கினார்கள் மதுபாலா, பிரேமா மற்றும் வெற்றிச்செல்வன்.
அதே சமயம் தனது காரில் அலுவலகத்திற்கு வந்து இறங்கியதும் தன்னுடைய செல்பேசியை எடுத்து தமக்கைக்கு அழைப்பு விடுத்தான் புகழேந்தி.
மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டதுமே,
“அக்கா! நான் ஆஃபீஸூக்கு வந்துட்டேன். நீங்க எப்போ வரப் போறீங்க?”எனக் கேட்டிருந்தான்.
அதற்கு,”நான் உங்க மாமா ஆஃபீஸூக்குக் கிளம்பிப் போனதுக்கு அப்பறமாக உடனே புறப்பட்டு வந்துட்றேன்டா”என அவனிடம் தெரிவித்தாள் வெண்பா.
“சரிங்க அக்கா. நீங்க வீட்டிலிருந்து கிளம்பும் போது எனக்கு மெசேஜ் பண்ணிட்டு வாங்க”என்றுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு,
அலுவலகத்தினுள் நுழைந்து,”வெற்றிச் சார் வந்தாச்சா?”என்று முன் வரவேற்புப் பணியாளினியிடம் விசாரித்தான் புகழேந்தி.
“வந்துட்டார் சார்”என்று அவனுக்குப் பதிலளிக்கவும்,
“அவரை என் ரூமுக்கு வரச் சொல்லுங்க”என்றுரைத்து விட்டுத் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொள்ள,
அவனது உத்தரவிற்கு இணங்கி வெற்றிச்செல்வனுக்கு இண்டர்காம் மூலமாக அழைப்பு விடுத்து,
“சார்! உங்களை நம்ம எம். டி அவரோட ரூமுக்கு வரச் சொன்னார்”என அவனிடம் அறிவித்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.
உடனே,”அப்படியா மேம்? நான் இதோ உடனே அவரோட ரூமுக்குப் போறேன்”என்று கூறி அழைப்பை வைத்தவனோ,
தன்னுடைய முதலாளியின் அறையை அண்மித்து, அதன் கதவைத் தட்டி விட்டுக் காத்திருக்க,
“யாரு?”என்றக் குரல் உள்ளிருந்து வந்ததுமே,
“நான் வெற்றிச்செல்வன் வந்திருக்கேன் சார். நீங்க வரச் சொன்னீங்கன்னு ரிசப்ஷனில் சொன்னாங்க”என்றவுடன்,
“எஸ் கமின்”என அவனுக்குத் தன் அறைக்குள் வர அனுமதி அளித்து விட்டிருந்தான் புகழேந்தி.
உடனே அறைக் கதவைத் திறந்து உள்ளே போய்,
“குட் மார்னிங் சார்”என்றத் தன்னுடைய காரியதரிசியிடம்,
“குட் மார்னிங் வெற்றி! அந்த ரன்வீர் சாரோட புதுப் படத்துக்கு ஏத்த மாதிரியான டிரெஸ் டிசைன் பண்றதுக்கான ஐடியாஸை யாராவது சொல்லத் தயாராக இருக்காங்களா?”எனக் கேட்டான் புகழேந்தி.
“நான் அதைப் பத்தி யார் கிட்டேயும் இன்னும் விசாரிக்கலை சார். நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆஃபீஸூக்கு வந்தேன். அதான், எதையும் விசாரிக்கலை! சாரி சார்”என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் வெற்றிச்செல்வன்.
“ம்ஹ்ம். இட்ஸ் ஓகே. இன்னைக்குச் சாயந்தரம் இல்லைன்னா நாளைக்குக் மதியத்துக்குள்ளே எனக்கு அதைப் பத்தின விவரங்கள் வந்து சேர்ந்து இருக்கனும்! எல்லாருக்கும் இன்ஃபார்ம் செஞ்சிடுங்க”என அவனுக்கு உத்தரவுப் பிறப்பித்து அனுப்பி வைத்து விட்டவனின் செல்பேசி ஒலி எழுப்பியது.
அதை எடுத்துப் பாரத்தவனோ, அழைப்பது தனது தமக்கை என்பதை அறிந்ததுமே, உடனே அதை ஏற்றுக் காதில் வைத்து,
“ஹலோ அக்கா”என்றிருந்தான் புகழேந்தி.
“டேய்! நான் வீட்டிலிருந்து கிளம்பிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்துடுவேன்”எனத் தம்பியிடம் தெரிவித்தாள் வெண்பா.
“சூப்பர்க்கா. நீங்க வந்ததும் யாராவது இன்னைக்கு டிசைன்ஸ் கொண்டு வந்து காட்டினால் அதையும் பார்த்துடுவோம்”என்றுரைத்து அழைப்பைத் துண்டித்து விடவும்,
இங்குத் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்து தங்களது முதலாளி சொன்னதை அப்படியே அவர்களிடம் ஒப்புவித்து விட்டிருந்தான் வெற்றிச்செல்வன்.
அதைக் கேட்டதுமே,”நாங்க முடிஞ்சளவுக்கு இன்னைக்குச் சாயந்தரத்துக்குள்ளே டிசைன்ஸ்ஸை வரைஞ்சுக் கொண்டு வந்துட்றோம் சார்”எனக் கூறினர் அவர்கள் அனைவரும்.
அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த மதுபாலாவும், பிரேமாவும் கூட இதையே தான் யோசித்து வைத்திருந்தார்கள் எனலாம்!
அதனாலேயே,”ஆமாம் சார். நாங்களும் இன்னைக்குள்ளே டிசைன்ஸ்ஸை முடிச்சுக் கொண்டு வந்துட்றோம்”என்று அவனுக்கு உறுதி அளித்து விட்டனர்.
“சரி. ஆனால் சீக்கிரம் முடிச்சுக் கொண்டு வாங்க. நம்ம எம். டி சார் இதனால் ரொம்பவே டென்ஷன் ஆக இருக்கார். அதான் சொல்றேன்”என அவர்களிடம் அறிவுறுத்தினான் வெற்றிச்செல்வன்.
“ஓகே சார்! நாங்கச் சீக்கிரம் முடிக்கிறோம்”என்று தாங்களும் அவனிடம் கூறி விட்டுத் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்றிருக்க,
“என்னடி நீ டிசைன்ஸ் ஏதாவது செஞ்சி வச்சிருக்கியா?”எனத் தோழியிடம் விசாரித்தாள் பிரேமா.
“இல்லடி. இனிமேல் தான் ஏதாவது யோசிக்கனும். நீ ரெடி பண்ணிட்டியா?”என்று தானும் கேட்டிருந்தாள் மதுபாலா.
“ஊஹூம்! நானும் இப்போ போய்த் தான் யோசிச்சு வரையனும்”என்றுரைக்கவும்,
“சரி டி. நாம ரெண்டு பேரும் இன்னைக்கு அதை முடிச்சு சப்மிட் பண்ணிடலாம்”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்,
அந்த அலுவலகத்தில் நுழைந்து விட்டிருந்தாள் வெண்பா.
அவர்கள் இருவரையும் அங்கே கண்டதுமே,
“ஹாய்!”எனப் புன்னகை முகத்துடன் அவர்களிடம் செல்ல,
“ஹாய் மேம்!”என்று தாங்களும் குறுநகை புரிந்து,
அவளுக்குக் காலை வணக்கத்தை தெரிவித்து இருந்தனர் மதுபாலாவும், பிரேமாவும்.
பரஸ்பரம் நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர்,
“சரி. நீங்கப் போய் உங்க வேலையைப் பாருங்க”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,
அப்போது,“வணக்கம் மேம்”என்று அவளிடம் சொன்ன வெற்றிச்செல்வனைக் கண்டுப் புன்சிரிப்பை உதிர்த்து,
“வணக்கம் வெற்றி”என்றவளிடம்,
“நீங்க வந்திருக்கிறதைச் சார் கிட்டே இன்ஃபார்ம் பண்ணவா மேம்?”எனக் கேட்டிருந்தான்.
அதற்கு,”வேண்டாம் வெற்றி சார். நானே அவரைப் போய்ப் பார்த்துக்கிறேன். நீங்கப் போய் உங்களோட வொர்க்கைப் பாருங்க”என்று அவனுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டாள் வெண்பா.
“ஓகே மாம். நாங்களும் எங்களோட வேலைகளைப் பார்க்கப் போறோம்”என அவளிடம் விடைபெற்றுக் கொண்டார்கள் மதுபாலா மற்றும் பிரேமா.
இதில் பிரேமாவிற்கு மட்டுமே வெண்பாவின் வருகைக்கான காரணம் தெரியும்.
அதனாலேயே தனது தோழியுடன் உற்சாகமாகப் அளவளாவி விட்டுத் தன்னுடைய பிரிவிற்குப் போய்ச் சேர்ந்து விடவும்,
தானும் தன் வழிகாட்டிப் பெண்ணிடம் சென்று,”மேம்! நான் சார் கொடுத்த அந்த டிசைன்ஸ்ஸை வரையிறதுக்கான வேலையைச் செய்ய ஆரம்பிக்கவா?”என்றாள் மதுபாலா.
அதற்கு,”ம்ஹ்ம். ஓகே மேம். நீங்க அதை முதல்லப் பாருங்க. இது நாம எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட வேலை. அதனால் நானுமே அதை தான் பார்க்கப் போறேன். உங்களையும் வேற எந்த வேலையைச் செய்யச் சொல்லியும் கட்டாயப்படுத்த மாட்டேன். அதனால் நீங்க ரிலாக்ஸ் ஆக அந்த வேலையைப் பாருங்க. ஆல் தி பெஸ்ட்”என்றிருந்தாள் வினோதினி.
“தாங்க்யூ மேம். உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்!”எனத் தானும் அவளுக்கு வாழ்த்தைக் கூறி விட்டுத் தனது வேலையைச் செய்யத் தொடங்கினாள்.
அதே சமயம் புகழேந்தியின் அலுவலக அறையில்,”என்னடா இன்னைக்கு மதுவைப் பார்த்தியா?”என்று அவனிடம் வினவினாள் வெண்பா.
“இல்லக்கா. அந்தப் பொண்ணுச் சீக்கிரம் ஆஃபீஸூக்கு வந்துட்டா போல! அதனால் என்னால் அவளைப் பார்க்க முடியலை! நான் அடிக்கடி அவளைப் போய்ப் பார்க்கிறதும் நல்லா இருக்காதுன்னு விட்டுட்டேன்”என்று பதில் அளிக்கவும்,
“ஓஹோ! ஆனால் நான் அவளைப் பார்த்தேனே! ஆஃபீஸூக்குள்ளே நுழைஞ்சதுமே நான் முதலில் பார்த்தது மதுவையும், அவளோட ஃப்ரண்ட்டையும் தான்! அவங்க கிட்டேயும், வெற்றிக் கிட்டேயும் பேசிட்டுத் தான் வந்திருக்கேன்”எனக் கூறி அவனை வெறுப்பை ஏற்றவும்,
அதில் தன் தமக்கையைப் பொய்க் கோபத்துடன் முறைத்துப் பார்த்தான் புகழேந்தி.
“என்னடா முறைக்கிற? நாம இப்போ அவளை இங்கே கூப்பிட்டுப் பேசுவோமா? நான் அதுக்காகத் தானே இங்கே வந்திருக்கேன்”என்று அவனிடம் யோசனையைக் கேட்டிருந்தாள் வெண்பா.
“அது சரியாக வராதுக்கா. என்னை உங்க கூடவே வச்சிட்டுப் பேசினால் அவ ரொம்பவே சங்கடப்படுவாள். அதனால் நீங்க அவளைத் தனியாகச் சந்திச்சுப் பேசுங்க. அது தான் கரெக்டா இருக்கும்!”என அவளுக்கு அறிவுறுத்த,
“ஓகேடா. நீ சொன்ன மாதிரியே நான் அவளோட ரூமுக்கே போய்ப் பேசுறேன். அதுக்கப்புறம் அவளோட பதிலை உங்கிட்ட வந்து சொல்றேன். அதே மாதிரி, அவ உங்கிட்டேயும் இதைப் பத்திப் பேசனும்னு விருப்பப்பட்டால் அப்போ வேணும்னா நாம மூனுப் பேரும் சேர்ந்து கண்டிப்பாகப் பேசுவோம். சரியா?”என்றவளிடம்,
“சரிக்கா”எனக் கூறி அவளை மதுபாலாவைச் சந்தித்துப் பேசுவதற்காக அனுப்பி வைத்தான் புகழேந்தி.
சில நிமிடங்களில் மதுபாலாவின் அறையில் அவளுக்கு எதிரில் அமர்ந்து இருந்தாள் வெண்பா.
அவளது திடீர் வருகையைக் கண்டுத் திகைத்துப் போயிருந்தாலும் கூட, அவளைப் புன்னகை முகமாகவே எதிர்கொண்டு,
“எங்கிட்ட முக்கியமான விஷயம் ஏதாவது பேசனுமா மேம்?”என்றவளைத் தயக்கத்துடன் பார்த்து,
“ஆமாம் மது. ஆனால் அது வேலை விஷயமாக இல்லை. கொஞ்சம் பர்சனலாகப் பேசனும்! அதில் உங்களுக்கு விருப்பமா?”என்று வினவினாள் வெண்பா.
அதைக் கேட்டதுமே அவளைக் குழப்பத்துடன் நோக்கி,
“நீங்க எங்கிட்ட பர்சனலாகப் பேசுற அளவுக்கு நமக்குள்ளே என்ன விஷயம் இருக்கு மேம்?”என்றாள் மதுபாலா.
உடனே,”ஒரு முக்கியமான விஷயம் இருக்கும்மா. நான் அதை உங்கிட்ட விளக்கமாகச் சொல்றேன். நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் நீ அதை நிதானமாக கேட்பியா?”என்று அவளிடம் கேட்டுக் கொண்டாள் வெண்பா.
அதில் துணுக்குற்று,”நீங்க எதைப் பத்திப் பேசப் போறீங்க?”என்றதுமே,
தன்னைத் தயார்படுத்திக் கொண்டுத், தான் அவளிடம் பேச வந்த நோக்கத்தைப் பற்றிய முழு விவரங்களைச் சிறிது நேரத்திலேயே விவரித்து முடித்திருந்தாள் புகழேந்தியின் தமக்கை.
அதைக் கேட்கக், கேட்கப் பெண்ணவளின் முகம் பேயறைந்ததைப் போலாகி விட்டது எனலாம்!
அவளுக்கு வியர்க்கவும் தொடங்கி விட்டிருந்தது.
தன்னுடைய முதலாளியின் சகோதரித் தன்னிடம் இப்படியான ஒரு விஷயத்தைக், கோரிக்கையை முன் வைப்பாள் என்பதைக் கனவிலும் அவன் நினைத்துப் பார்த்ததில்லை.
அதனாலேயே அவளால் உடனேயே வெண்பாவிற்குப் பதிலளிக்க முடியவில்லை!
அதே வேளையில் அவளிடம் தென்பட்ட அந்த மாறுதல்களைக் கவனித்து விட்டு,
“முதல்ல தண்ணீரைக் குடிங்க. அதுக்கப்புறம் இதுக்கான உங்களோட பதிலையும், விருப்பத்தையும் சொல்லுங்க மது”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் வெண்பா.
“ஓகே மேம். ஆனால் என்னால் உடனே பதிலையும், விருப்பத்தையும் சொல்ல முடியாது! நான் இதைப் பத்திக் கொஞ்சம் யோசிக்கனும். அதனால் என்னோட தங்கச்சிக் கிட்டேயும் கலந்து பேசிட்டுத் தான் முடிவைச் சொல்ல முடியும்”என அவளிடம் தீர்க்கமாக மொழிந்தாள் மதுபாலா.
- தொடரும்
உங்களை ரொம்பவே காத்திருக்க வச்சதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிறேன் ஃப்ரண்ட்ஸ் 🙏 அடுத்த வாரத்திற்குள்ளே கதையை முடிச்சிட்றேன். புரிதலுக்கு நன்றி 🩵