அதைக் கேட்டதுமே வெற்றிச்செல்வன் மற்றும் மதுபாலாவிற்கு விழி பிதுங்கி விட்டது எனலாம்!
அதில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாகத் தங்களை ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டனர் அவ்விருவரும்.
அவர்களது அந்தக் கலவரமான முகங்களை அவதானித்து விட்டு,
“அக்கா! நாம சீரியஸாகச் சண்டைப் போட்றோம்ன்னு நினைச்சிட்டு எப்படி பயந்து போய் இருக்காங்கன்னு அவங்களைப் பாருங்க!”என்று வெண்பாவைக் கடிந்து கொண்டான் புகழேந்தி.
அதற்கு,“அப்படியா?”என்றவளோ,
உடனே தனக்கு எதிரில் இருந்த இருவரையும் ஆராய்ந்து விட்டு,
“ரொம்ப சாரி!”என்று அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு,
“மிஸ். மதுபாலா! நீங்களே சொல்லுங்க! நீங்க இதை யார் கையால் வாங்க விருப்பப்பட்றீங்க?”என்றவளை ஆயாசமாகப் பார்த்து,
‘ஒரு ஐடி கார்ட்டைக் கொடுக்கிறதுக்கு இவ்வளவு அக்கப்போரா?’என்று மனதிற்குள் சலித்துக் கோண்டவளோ,
“நீங்க ரொம்ப ஆசைப்பட்றீங்க! அதனால் நீங்களே இதை எனக்குக் கொடுங்க மேம்”என்றுரைத்து விட,
அதைக் கேட்டவுடனே தனது முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க அவளைக் கடுமையாக முறைத்தான் புகழேந்தி.
அதில் தனது இதழ்கள் துடிக்க அவனிடமிருந்து தன் பார்வையைத் தவிர்த்துக் கொண்டாள் மதுபாலா.
ஆனாலும் அவனது அந்தக் அனல் பறக்கும் பார்வை தன்னைத் தொடர்வதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது!
அதே சமயம், தனது தம்பியைப் பார்த்து வெற்றிச் சிரிப்பை உதிர்த்து,”பார்த்தியா புகழ்? இதில் சம்பந்தப்பட்ட பொண்ணுக்கே நான் தான் அவங்களுக்கு இதை தரனும்னு ஆசை இருக்கு!”என்று கூறித் தனது தலையில் கல்லைத் தூக்கிப் போட்ட வெண்பாவைத் தன்னுடைய பெருவிழிகளை இன்னும் பெரிதாக்கித் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தாள் மதுபாலா.
அந்த வார்த்தைகளும் உடன் சேர்ந்து கொண்டதால் புகழேந்தியின் சுட்டெரிக்கும் பார்வைச் சரியாகத் தன்னைத் தாக்கிக் கொண்டிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விட்டு,
“மேம்!”என்றவளின் தவிப்பைப் புரிந்து கொண்டு,
“சரி, சரி. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்களுக்கு இதைக் கொடுக்கிறோம்”எனத் தானே இதற்கு ஒரு முடிவைக் கூறி விட்டாள் வெண்பா.
அதில் அவளுக்கும், வெற்றிச்செல்வனுக்கும் இருந்த பதட்டமும், கலவரமும் அப்போது தான் மறைந்து போயிற்று!
“ஓகேக்கா. உங்க இஷ்டப்படியே தருவோம்! அவங்களுக்கும் இதனால் வேலையில் லேட் ஆகி விடக் கூடாது!”என்று தானும் அந்த முடிவிற்குச் சம்மதித்து விட்டிருந்தான் புகழேந்தி.
‘இந்த முடிவை முன்னாடியே எடுத்து இருக்கலாம் தானே? எங்களைக் கலவரப்படுத்துறதே இவங்களுக்கு வேலையாகப் போச்சு!’என்று தானும் மனதிற்குள் நொந்து கொண்டான் வெற்றிச்செல்வன்.
உடனே இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் அடையாள அட்டையையும், சம்பளத்தைப் பற்றிய விவரம் இருந்தக் கவரையும் எடுத்துக் கொண்டுத் தாங்கள் இருவரும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து கொள்ளவும்,
அதில் தானும் மரியாதை நிமித்தமாக எழுந்து கொண்டாள் மதுபாலா.
அவளைத் தொடர்ந்து தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து,
தனது செல்பேசியைக் கையில் எடுத்து,”நான் உங்களை ஃபோட்டோஸ் எடுத்துடவா சார்? இதை நம்ம ஆஃபிஷியல் வெப்சைட்டில் போடனும்ல? அதுக்காகத் தான் கேட்கிறேன்”என்று தன் முதலாளியிடம் வினவினான் வெற்றிச்செல்வன்.
“ம்ஹ்ம். எடுங்க. அதையெல்லாம் இவங்களுக்கும் அனுப்பி விட்ருங்க”என்று மதுபாலாவைச் சுட்டிக் காண்பித்து அவனிடம் கூறி விட்டுத் தன்னுடைய சகோதரியிடம் ஐடி கார்டைக் கொடுத்து அதை மதுபாலாவின் கழுத்தில் போடச் சொன்னான் புகழேந்தி.
அதை தானும் மனதாரச் செய்து முடித்து விட்டு,”உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா!”என்று அவளுக்கு வாழ்த்துக் கூறினாள் வெண்பா.
தமக்கையைப் பின்பற்றி, சம்பளத்தைப் பற்றிய விவரம் இருந்த கவரை மதுபாலாவிடம் நீட்டி,”இந்தாங்க! நீங்க உங்க அறைக்குப் போய் இதை நல்லா தெளிவாகப் பார்த்துட்டு ஏதாவது குறை இருந்தால் எங்கிட்ட வந்து சொல்லுங்க. ஆல் தி பெஸ்ட்!”என்று அவளை நோக்கித் தனது கரத்தை நீட்டி விட்டிருந்தான்.
அதைக் கவனித்து விட்டுத் தானும் யோசிக்காமல் உடனேயே தன்னுடைய கரத்தை நீட்டி விட்டாள் மதுபாலா.
இது தான் வாய்ப்பு என்று அவளது கரத்தைப் பற்றி மிருதுவாக, ஆனால் அதே வேளையில் அழுத்தமாக குலுக்கி விடுவித்தான் புகழேந்தி.
அதில் பெண்ணவளின் உடல் எங்கும் சிலிர்த்து அடங்கியது!
அவனைப் பார்க்கையில் தன்னுடைய கன்னங்களும் சிவந்து போவதை உணர்ந்து கொண்டு,
‘இங்கேயிருந்து எப்போது வெளியேறுவோம்?’என்ற மனநிலைக்கு வந்து விட்டாள் மதுபாலா.
அந்தளவிற்குப் புகழேந்தியின் பார்வையும், செயலும் தன்னை மிகவும் இம்சிப்பதை அனுமானித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரின் இடையேயும் நிகழ்ந்த இந்த மௌனப் போராட்டங்களைக் கவனித்து அதை தனது மனதிற்குள் குறித்துக் கொண்டு,
“இப்போ நீங்க இந்த ஆஃபீஸில் ஆஃபிஷியல் ஆக வேலைக்குச் சேர்ந்தாச்சு மிஸ். மதுபாலா! கங்கிராட்ஸ்!”என்று அவளுக்கு மீண்டுமொரு முறைத் தன்னுடைய வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டாள் வெண்பா.
அதில் தன்னுடைய குண்டுக் கன்னங்கள் உப்பிக் கொள்ளும் வகையில் புன்னகைத்து விட்டு,”தாங்க்யூ மேம்!”என்று அவளுக்கும்,
“தாங்க்யூ சார்!”என்று புகழேந்திக்கும் தன் நன்றியைத் தெரிவிக்க,
“பரவாயில்லை மேம். உங்களை ரொம்ப நேரமாக இங்கேயே பிடிச்சு வச்சிட்டு உங்க வேலையைச் செய்ய விடாமல் பண்ணிட்டோம். இப்போ போய் உங்க வேலையை வழக்கம் போல நீங்கப் பார்க்கலாம். போயிட்டு வாங்க”எனக் கூறி அவளையும்,
“நீங்களும் போகலாம் வெற்றி”என்று காரியதரிசியிடம் சொல்லி அவனையும் அங்கேயிருந்து அனுப்பி வைத்து விட்டுத் தம்பியைப் பார்க்க,
அவனோ,”நீங்க வந்த வேலைச் சிறப்பாக முடிஞ்சதா அக்கா?”என அவளிடம் ஆதங்கத்துடன் வினவினான் புகழேந்தி.
அதில் அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து,”ம்ஹ்ம்! பேஷா முடிஞ்சதுடா! எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கு”என்றவளிடம்,
“அப்படியா? எனக்கும் தான் ரொம்ப மனசுக்கு நிறைவாக இருக்குக்கா” என்று புகைய,
“நான் போய் ஆஃபீஸைச் சுத்திப் பார்த்துட்டு வர்றேன்”என மொழிந்தாள் வெண்பா.
“அப்போ நீங்க வந்த வேலை இன்னும் முடியலை! அப்படித் தானே?”என்றான் சலிப்புடன்.
“அப்படித் தான்னு வச்சுக்கோயேன்!”எனக் கூறிக் கண்டித்து விட்டு அவ்வறையை விட்டு வெளியேறி நேராகப் பிரேமா வேலை செய்யும் பிரிவிற்குச் சென்று,
“நான் உங்க கிட்ட சில முக்கியமான விவரங்களைக் கேட்கனும்! அது கண்டிப்பாக உங்களைப் பத்தி இல்லை! உங்களோட பெஸ்ட் ஃப்ரண்ட்டைப் பத்தி தான்! நீங்க எங்கிட்டே வெளிப்படையாகப் பேசுனீங்கன்னா இதனால் நம்ம ரெண்டு பேரோட அன்பிற்குரியவங்களும் அவங்களோட எதிர்கால வாழ்க்கையை நல்லபடியாக வாழுவாங்க!”என்று அழுத்தத்துடன் கூறி அவளுக்குப் புரிய வைக்க முயன்றாள் வெண்பா.
அதைக் கேட்டு விட்டு அதிக நேரம் யோசிக்காமல் உடனே அதற்குச் சம்மதித்து விடும் விதமாக,
“இதனால் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்டோட வாழ்க்கையில் உண்மையாகவே நல்லது நடக்கும்ன்னா நான் கண்டிப்பாக உங்க கிட்ட எல்லாத்தையும் வெளிப்படையாகப் பேசத் தயாராக இருக்கேன் மேம்”என அவளுக்கு உறுதி அளித்தாள் பிரேமா.
- தொடரும்