அன்பு 7.2

“ஐ‌… கேக்…” என மனோ துள்ளலாய் ஒரு துண்டு அணிச்சலை எடுத்து சுவைக்க, “எனக்கு வேணாம் அஷூ. நீயும் மனோவும் சாப்பிடுங்க…” என்றாள்.

“ஆன்ட்டி… நீங்களும் சாப்டணும். ஒரு பீஸ் எடுத்துக்கோங்க…” என அவன் விடாப்பிடியாய் நிற்க, இவள் ஒரு துண்டை எடுக்கவும், பேருந்து வந்துவிட்டது. இருவரும் கிளம்ப, ஷோபனா சந்தனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“சாரி… எனக்கு எக் அலர்ஜி. அதான் கேக் சாப்பிடலை. டோன்ட் மைண்ட் எனிதிங்க்” சந்தனா கூற, “ஐயோ… இட்ஸ் ஓகே. நான் எதுவும் நினைக்கலை டாக்டர்…” என அவள் கூற, இருவரும் ஒன்றாய் நடந்தனர்.

“உங்களுக்குப் பேக்கிங் தெரியுமா? கேக் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு…”

“இப்போதான் கிளாஸ் போய்ட்டு இருக்கேன் டாக்டர். வீட்ல சும்மா இருக்கோமேன்னு ஒரு எண்ணம். அதுவுமில்லாம ரொம்ப நாளா கேக் செய்யப் பழகணும்னு ஆசை. அதான் கிளாஸ் ஜாய்ன் பண்ணேன்…” என்றாள்.

“ரொம்ப நல்ல விஷயம். குடும்பம் முக்கியம். பட், செல்ஃப் லவ்-உம் முக்கியம்தான். உங்களுக்குப் பிடிச்சதை செய்றதுல தப்பில்லை. என்ஜாய் பண்ணி கத்துக்கோங்க…” சந்தனா கூற, ஷோபி சிரித்தாள்.

“இது என்னோட பெர்சனல் சாட்டிஸ்பேக்ஷன்காக மட்டும் இல்ல. என் ஹஸ்பண்ட்காகவும் தான். அவரோட பெர்த்டேக்கு கேக் செய்ய ஆசை. ஆல்ரெடி ட்ரை பண்ணி அது ரொம்ப சொதப்பிடுச்சு. அப்போ அப்போ அவர் அதை வச்சு கிண்டல் பண்ணுவார். அதான் இந்த டைம் சர்ப்ரைஸா பண்ணிடலாம்னு இருக்கேன்…”

“உங்க ஹஸ்பண்ட் ரியலி லக்கி…”

“நிஜமா இல்ல டாக்டர். நான் தான் ரொம்ப லக்கி. அவர் என் மேல வச்சிருக்க அன்பையும் காதலையும் யார்கிட்டேயும் காட்டியிருக்க மாட்டார். இன்ஃபேக்ட் எங்களோட மேரேஜ் எனக்கு லவ் மேரேஜ், பட் ஃபார் ஹிம் அரேஞ்ச் மேரேஜ். ஆனால், இப்போ அதை யார்கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாங்க. நான் ரொம்ப இம்பெர்பெக்ட் எல்லா விஷயத்துலயும். அவர்தான் பார்த்துப்பாரு. அதனாலே அவரை ரொம்ப பிடிக்கும் எனக்கு…” என்றவளின் குரல் கணவன் மீதான அன்பில் கனிந்து போயிருந்தது.

சந்தனா அவளை அமைதியாய் சில நொடிகள் பார்த்தவள், “பெர்பெக்டா இருந்தா உங்களுக்கு யாரும் அவார்ட் தரப் போறாங்களா?” எனக் கேட்டாள் மெல்லிய புன்னகையுடன்.

“ஹாஹா… அவரும் இதையே தான் சொன்னாரு. நீங்களும் சொல்றீங்க. சேம் டயலாக், வார்த்தைக் கூட மாறாம!” ஷோபனா சிரிக்க, சந்தனா தனது கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள்.

“சாரி டாக்டர், ரொம்ப நாள் கழிச்சுப் பேச ஆள் கிடைக்கவும் மொக்கை போட்டுட்டேன் போல. உங்களுக்கு டைம் ஆகிடுச்சா?”

“அட… அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. எனக்கு பத்து மணிக்குத்தான் அப்பாய்ன்மெண்ட். ஒரு பிராப்ளமும் இல்ல!”

“ஓகே டாக்டர்…”

“என் பேரு டாக்டர் இல்லைங்க, சந்தனா. நான் வாங்குன பட்டம்தான் டாக்டர். சோ, சந்தனான்னு கூப்பிடுங்க…” என்றாள்.

“ஷ்யூர் சந்தனா… நான் ஷோபனா…” மெல்லிய முறுவலுடன் மற்றவள் கூறினாள்.

“தெரியுமே… உங்க ஹஸ்பண்ட் ஷோபின்னு கூப்பிடுவாருல்ல. நான் பார்த்திருக்கேன்…” என்றவள், “ஓகே ஷோபனா, நாளைக்கு மீட் பண்ணலாம்…” என விடை பெற்றாள். ஷோபனாவும் வீட்டை நோக்கி நகர்ந்திருந்தாள்.


மறுநாள் சந்தனா பள்ளிக்கு கிளம்பினாள். பூரணியுடன் அந்த வீட்டிற்கு செல்ல இவளுக்கு விருப்பமில்லை. வீட்டிலே இருந்து பள்ளிக்குச் செல்லலாம் எனத் தோன்றியது.

“அம்மா… நான் வீட்ல இருந்துக்கிறேன் மா. நீ மட்டும் போறீயா? வீட்ல இருந்தே நான் ஸ்கூலுக்குப் போறேன் மா…” என்றாள் சோர்வாக. அவளது முகத்தின் வீக்கம் இன்னும் குறையவில்லை. பூரணிக்குமே மகளை அங்கே அழைத்துச் செல்வதில் விருப்பமில்லை. ஆனால், அவளை தனியே வீட்டில் விட பயம்.

கணவர் இருந்திருந்தால் இதுபோல கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால், ஆண் துணையில்லாத வீடு‌. யாரை இந்தக் காலத்தில் நம்புவது எனத் தெரியவில்லை. அதுவுமின்றி அவர் முன்பிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் சந்தனா வயதையொத்த சிறுமி உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட, கண்முன்னால் நிகழ்ந்த எதையும் அவரால் புறக்கணிக்க முடியவில்லை.

அவளுக்கு விபரம் தெரியும் வரை எங்கேயும் தனியே விடக்கூடாது என முடிவெடுத்திருந்ததால், தான் எங்கு சென்றாலும் அவளையும் உடன் அழைத்துக் கொள்கிறார்.

“குட்டி‌‌… அம்மா அடிச்சதையே நினைச்சுட்டு இருக்கீயா?” என வருத்தமாய்க் கேட்டார்‌.

“இல்ல மா… இல்ல. அப்போவே அதை மறந்துட்டேன்…” என்றாள் அவசரமாய். தாய் தன்னால் வருத்தம் கொள்வதை அவளால் தாங்க முடியவில்லை.

“அம்மா கூடவே வா குட்டி. உன்னை தனியா வீட்ல விட்டுட்டு என்னால அங்க வேலை பார்க்க முடியாது…” என்று அவர் கூற, “சரி மா… போகலாம்…” என்றாள் புன்னகைத்து. தான் கூறியவுடன் புரிந்து கொள்ளும் மகளைப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதா? இல்லை அவளை அலைக்கழிப்பதற்கு வருந்துவதா? எனத் தெரியாது பெருமூச்சை வெளிவிட்டவர் வேலைக்கு கிளம்பினார்.

சந்தனா அங்கே சென்றதும் நிழலான பகுதியில் அமர்ந்து புத்தகப்பையைத் திறந்து வீட்டுப் பாடங்களைச் செய்யத் துவங்கினாள். தீனா அப்போதுதான் எழுந்து வந்தான். உணவுண்ணும் போதுதான் சந்தனா நினைவு வந்தது அவனுக்கு.

“ஆன்ட்டி… குட்டி வரலையா?” பூரணி பின்னே சென்று அவன் வினவ, ஒரு நொடி தயங்கியவர், “வெளிய இருக்கா…” என்றார்.

குடுகுடுவென ஓடி வந்த தீனா மூச்சிரைக்க அவள் பக்கத்தில் அமர்ந்தான். “குட்டி.‌..” என அவன் அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் சின்னவள்.

“குட்டி… உனக்குத்தான் இது. கோகனெட் சாக்லேட், யம்மியா இருக்கும்…” என அவள் முன்னே இன்னட்டை நீட்டினான்.

“எனக்கு… எனக்கு வேணாம் தீனா. நீயே சாப்டுக்கோ…” என்றாள் தயக்கமாய்.

“இங்க பாரு… நான் இன்னொரு சாக்லேட் வச்சிருக்கேன். இது உனக்குத்தான் வாங்குனேன். டெய்லி தரேன்னு நேத்து சொன்னேன் இல்ல?” அவன் இன்னட்டை அவளது புத்தகத்தின் மீது வைத்தான்.

“தீனா… எனக்கு பூச்சி பல்லு இருக்கு. நேத்து சாக்லேட் சாப்ட்டதும் பல் வலிச்சது. அம்மா திட்டிட்டாங்க. இனிமே சாக்லேட் சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.‌..” ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பொய்யை கூறிவிட்டாள்.

“அப்டியா… உனக்கு பல்லு வலி சரியானதும் சாக்லேட் வாங்கித் தரேன். இதை நானே இப்போ சாப்ட்டுக்கிறேன்…” என இரு இன்னட்டையும் அவனே உண்ண, அவள் குனிந்து வீட்டுப் பாடங்களை எழுதத் துவங்கினாள்.

error: Content is protected !!
Scroll to Top