Member
- Messages
- 64
- Reaction score
- 2
- Points
- 8
வானவேடிக்கை ஒளியில் சந்தீப்பின் முகம் தெளிவாக தெரிய
அதை பார்த்த முகில்,
"சந்தீப்.... சந்தீப்..." என செய்வதறியாமல் அதிர்ச்சியில் பார்க்க,
முகிலை பார்த்த சந்தீப், "முகில்..... நீ என்னடா இங்க இருக்கே.....? நீ திரும்ப வந்துட்டயா...?" எனஅருகே வர,
"நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்...."என சந்தீப் அருகே வர பின்னோக்கி நடந்து சென்ற முகில் கேட்கிறான்.
"என்ன..? "என நின்றபடி சந்தீப் பார்க்க,
" நீ கழுத்துல போட்டிருக்க அந்த செயின்....அது சந்தீப்போடது....ஆனா நீ போட்டு இருக்கே... சந்தீப் இறந்து போடாட்டான்.... ரெண்டு நாள் முன்னாடிதான் நாங்க அவன் உடலை எரிச்சோம்... "என சந்தீப்பின் கழுத்தில் உள்ள அணிகலனை பார்த்து முகில் கூற,
"என்னது... செத்து போயிட்டேனா..?' என சந்தீப் கேட்க,
"நீ அவன் இல்லை.....சந்தீப்பா இருக்க முடியாது.." என முகில் கூற,
"என்னடா சொல்றே, நல்லா பாரு நான் உயிரோடதான் இருக்கேன்... "என சந்தீப் கூற,
"என்ன இது இப்படி பேசுது.. சந்தேகமே இல்லை... இது கண்டிப்பா நிழல்தான்... "என முகில் மனதினுள் நினைத்தபடி,
"உனக்கு என்னாச்சின்னு நியாபகம் இல்லையா.. ?"என முகுல்கேட்க,
"என்ன...." என சிந்தீப் யோசிக்க,
"நான்... நான் ஏன் இங்க இருக்கேன்... நான்... என்ன இது.." என சந்தீப் புருவம் சுருக்கி யோசிக்க,
"நீ ஏன் இங்க வந்தீன்னு உனக்கு நியாபகம் இல்லையா...?" என முகில் கேட்கிறான்.
சிறிது யோசித்த சந்தீப், " என்னால மூச்சுவிட முடியல..... எனக்கு நினைவு இருப்பது எல்லாம் என்னால் மூச்சு விட முடியாம் போனதுதான்.. நான் தண்ணிக்குள்ள இருந்தேன் ... எல்லாமே இருட்டா மாறுச்சி....அப்புறம் நான் இங்க வந்துட்டேன்....போச்சுடா. உண்மைலயே நான் செந்துட்டேனா..? அப்போ நான் என்ன பேயா.. ? ஆனா என்ன எனக்கு கால் ரெண்டும் இருக்கு....."என குனிந்து தன் கால்கள் ஆற்று மணலை வருடியபடி கேட்கிறான் சந்தீப்.
" இதுதான் உண்மையான சந்தீப்ன்னு இது நினைச்சுட்டு இருக்கா..? என்ன நடக்குது இங்க..? "என முகில் மனதினுள் நினைக்க,
"எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருது.... ஒருதடவையாவது உன்னை பார்க்கனும்னு நான் நினைச்சேன்... அதுனாலதான் நான் இங்க திரும்ப வந்திருக்கேன் போல....சந்தோசம்....." என சந்தீப் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி நிற்கிறான்.
"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு " என சந்தீப் கூற,
" ஏமாறாத முகில்....ரெண்டு நாள் முன்னாடிதான் நீ சந்தீப் இழவுக்கு போய் அவனோட உடல் தீயிலிடுறத பார்த்தே... அவன் இந்த உலகத்தை விட்டு போயிட்டான்.. இது சந்தீப் மாதிரி நடிக்குது... இதுக்கு என்ன வேணும்? "என மனதினுள் நினைத்துக் கொண்டே,
" இப்ப எதுக்கு இங்க வந்துருக்கே....?" என முகில் கேட்க,
" எனக்கு தெரியலை..... பொதுவா நாம இறந்ததுக்கு பின்னாடி நாம் எல்லாரும் கடவுளை பார்க்க போவோம்னு சொல்லுவாங்க." என சந்தீப் கூற,
" நீ எதுங்கு இங்க வந்திருக்கே....?உனக்கு என்ன வேணும்.....?"என வியர்வை வடிய பயத்தில் கேட்க,
" எனக்கு என்ன வேணுமா....?" என சந்தீப் திரும்பி,
வானத்தை பார்க்க வானவேடிக்கை வெடித்து கொண்டு இருந்தது.
" முகில், இன்னைக்கு 24 ஆம் தேதியா..?"என சந்தீப் கேட்க,
" ஆமாம்.... " என முகில் கூற,
"போச்சுடா...ஏன் இன்னும் இங்க இருக்கோம்....நாம் உடனடியா கிளம்பணும்...நம்ம பிரண்டஸ் எல்லாம் அங்க எனக்காக வெயிட் பண்ணுவாங்க.." என கூறி கொண்டே சந்தீப் வேகமாக ஓட,
"ஹே....."என முகில் கத்த,
" முகில்... சீக்கிரம் வா....சுரேஷ், சுதா எல்லாம் வெயிட் பண்ணுவாங்க...." என சந்தீப் கூற,
" இவனுக்கு இவன் நிழல்தான்னு தெரியலை போல..." என மனதினுள் நினைத்து கொண்டே தைரியத்தை வரவழைத்து கொண்டு சந்தீப்புடன் நடக்க,
"இது இவன்தான் உண்மையான சந்தீப்னு நினைச்சிட்டு இருக்கு போல... இதை யார் கண்ணுலயும் படாம எங்கேயாச்சும் கூட்டிட்டு போகனும்..."என மனதினுள் எண்ணிக் கெண்டே,
"சந்தீப் என்கூட வா....."என சந்தீப்பின் கையை பிடித்து கொண்டே முகில் இழுத்து ஓட,
"இருடா.....திருவிழா நேரம் சாப்பட நிறைய இருக்கும்...."என சந்தீப் வேடிக்கை பார்த்தபடி ஓட,
"இது அதுக்கான நேரம் இல்லை... உன்கிட்ட எப்படி சொல்லி நான் புரிய வைப்பேன்...இதை விட பெரிய பிரச்சினை இருக்கும்..." என கூறிக் கொண்டே முகில் ஓடுகிறான்.
அந்த நேரம் திருவிழாவிற்கு வந்த கல்லூரி உடையில் இருந்த வள்ளியின் நிழல் அங்கே மாங்காய் வெட்டிக்கொண்டு இருந்தவரின் கையில் இருந்த கத்தியை பார்த்து கொண்டே, திரும்ப தூரத்தில் கூட்டத்திற்கு நடுவே முகிலும் சந்தீப்பும் ஓடுவதை பார்க்கிறாள்.
சந்தீப்புை அழைத்து கொண்டு ஒரு ஒதுக்குபுறமான சந்திற்கு சென்று முகில் ஆசுவாசமடைகிறான்.
"டேய்.... முகில்....இப்போ எதுக்கு நாம ஒளிஞ்சுட்டு இருக்கோம்... எனக்கு பசிக்குது....வள்ளியும் மத்தவங்களும் இங்கதான் இருக்காங்களா.. ? எனக்கு அவங்களை பார்க்கனும்...."என சந்தீப் கூற,
"முடியாது....முடியவே முடியாது.. ஒரு செகண்ட் சுட்சுவேஷனை பாரு... நல்லா கேளு....நீ செத்து போயிட்டோ....உனக்கு இலவு முடிஞ்சிருச்சி...." என முகில் கூறுகிறான்.
"ஆனா....."என சந்தீப் கூற,
"ஆனாவும் இல்லை ஊனாவும் இல்லை.....நீ....நிழல்.....இல்லை பேய்....இல்லை எதுவா வேனாலும் இருக்கலாம்....எல்லாரும் உன்னை பார்த்திருவாங்க... பெரிய பிரச்சினை ஆயிரும்....செத்து போன ஆளு உயிரோட இருந்தா...."என முகில் புலம்ப,
"எல்லாரும் என்னை பார்க்க கூடாதுன்னு நீ நினைக்குறியா....?"என சந்தீப் முறைக்க,
"தயவு செஞ்து திருவிழா முடியற வரைக்கும் ஒளிஞ்சு இரு...."என முகில் கூற, சந்தீப் முறைத்தபடி முகிலின் வயற்றில் ஒரு குத்து விடுகிறான்.
"முட்டாள்தனமா பேசிட்டு இருக்காத..... இப்படி பேசுறத நிறுத்த போறியா.. ? இல்லையா.. ? " என சந்தீப் கூறிவிட்டு பார்க்க,
" இது என்ன உண்மையான சந்தீப் மாதிரியே பன்னுது...." என முகில் மனதினுள் நினைத்தபடி, வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே சரிகிறான்.
முகில் எழுந்து நின்று சந்தீப்பிடம் நடந்த எல்லாவற்றையும் முகில் விளக்க நேரம் கடந்து கொண்டிருந்தது. முதல் இரண்டு வருடங்களாக அந்த ஊரை விட்டு சென்றது அவர்களது குழந்தை பருவம் உட்பட அனைத்தும் பேச சிந்தீப்பின் நிழலிற்கு சந்தீப்பின் அனைத்து நினைவுகளும் இருப்பது முகிலிற்கு ஆச்சர்யத்தை அளித்தது.
"இதுரொம்ப வித்தியாசமா இருக்கு....இதுக்கு இது நிழல்னு தெரியல..... இதுக்கு சந்தீப் செத்துப் போனது கூட தெரியலை... "என மனதினுள் நினைத்தபடி,
"உனக்கு மித்ராவை நினைச்சு கவலையா இருக்கா....?"என முகில் கேட்க,
" ஏன்....? அவளுக்கென்ன....?"என சந்தீப் கேட்க,
" என்னை பொறுத்த வரைல இது நடிக்கிற மாதிரி தெரியல..."என முகில் மனதினுள் நினைத்த முகலின் கைபேசி அலறுகிறது.
முகில் அதை எடுத்து பார்க்க, "என்ன....ஃபோன் வருதா...?" என சந்தீப் கேட்க,
"ஆமா....வள்ளிதான் கால் பன்றா...."என முகில் கூற, சந்தீப் அவனின் கைபேசியை பிடுங்கி,
"ஹலோ வள்ளி.... " என பேச, முகில் சந்தீப்பின் கைகளில் இருந்து சைபேசியை பிடுங்கி,
"ஹலோ நான்தான்... வள்ளி சொல்லு என்ன...?"என சமாளிக்க,
"எனக்கு அண்ணனோட குரல் கேட்டுச்சு.. "என வள்ளி கூற, "இல்லை.. இல்லை... ஆர் யூ ஓகே..? "என் முகில் சமாளிக்கிறான்.
"நீ எங்க இருக்கே இப்ப.... நாங்க இப்போ கோவில் கிட்டே இருக்கோம்... எல்லாரும் கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க...."என வள்ளி கூற,
" இதோ பக்கத்துலதான் இருக்கேன்.. இப்போ வந்திருவேன்.."என கூறிவிட்டு அலைபேசியை துண்டிக்க,
"என்ன சொல்றா அவ...." என சந்தீப் கேட்க,
"தயவு செஞ்சு நீ இங்கேயே இருடா. நான் கொஞ்ச நேரத்துல வந்துறேன்.. இங்க கொஞ்சம் விசித்திரமா எல்லாம் நடக்குது.. அது உனக்கு தெரியலை.... யார் கண்ணுலயும் படாதே...."என முகில் கூறிவிட்டு கிளம்ப,
"நீதான் வள்ளியை பார்த்துக்க சொன்னே. அதுபடிதான் நான் நடக்கறேன்..."என முகில் அங்கிருந்து கிளம்புகிறான்.
முகில் வேகமாக கோவில் படிக்கட்டு ஏறி தன் முட்டியில் கைவைத்தபடி மூச்சிரைக்க.
சப்தம் கேட்டு திரும்பி பார்த்த வள்ளி,"ஒருவழியா வந்துட்டியா முகில்.. ? ' என்றவாறு
சுரேஷ் மற்றும் சதா திரும்பி பார்க்கிறார்கள்.
"ரொம்ப நேரம் ஆச்சு...நான்கூட என்னாச்சோ ஏதாச்சோன்னு
பயந்துட்டேன்..மலை...." என வள்ளி கூற,
"சாரி எனக்கு வயிற்று வலி... அதான் லேட் ....மெசப்பபோனியா நாகரீகம்.. "என முகில் கூறுகிறான்.
"பராவால்லையே...இந்த வருஷம் திருவிழாவுக்கு நிறைய பேர்வந்து இருக்காங்க....எப்படியும் ஒரு 1,500 பேர் இருக்கும்..."என முகில் மனதினுள் நினைத்தபடி மர்ம புன்னகை புரிந்தபடி பார்க்க அதை சுரேஷ் பார்க்கிறான்.
கோவில் பூஜை முடிந்து பிரசாதம் வழங்கி கௌண்டிருக்க, பிரசாதம் பெற்ற அனைவரும் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தனர்.
"நாம் இங்கு வந்தது நல்லதுன்னு தோணுது....சந்தீப் இருந்திருந்தா சந்தோசப்பட்டு இருப்பான்... "என வள்ளி கூற,
"ஆமாம்...."என சுரேஷ் கூறுகிறான்.
"சரி....என்னமோ என்கிட்ட சொல்லனும்னு சொன்னே...என்னது " என வள்ளி சுரேஷை பார்த்து கேட்க சுரேஷின் மனது படபடக்க தொடங்குகிறது.
"இன்னைக்கு என் தம்பி வள்ளிகிட்ட ப்ரபோஸ் பண்ண போறான்...."என சுதா முகிலிடம், மெதுவான குரலில் கூற,
"என்னது..? உண்மையாவா .....?"என முகில் ஆச்சரியத்துடன் அவர்களை பார்க்க,
"ஆமா... ஆனா வள்ளி ஒத்துக்க போறது இல்லை" என சுதா கூற,
"என்ன? ஏன்....?" என முகில் கேட்க,
"வள்ளி ஏற்கனவே வேற யாரையோ விரும்புறான்று நினைக்கறேன்" என சுதா கூறுகிறாள்.
"அப்படியா....? யாரது....?" என முகில் கேட்க,
"தெரியல...எல்லா கேள்வியும் என்கிட்ட கேட்காத அவகிட்ட கேக்க கொஞ்சம் மிச்சம் வை...." என சுதா முனுமுனுத்து கொண்டிருக்க,
"முகில் அப்புறம் சுதா நீங்க ரெண்டு பேரும் இதை கேட்கணும்ன்னு நினைக்கிறேன்....." என சுரேஷ் கூறிவிட்டு திரும்பி
"நான் உன்கிட்ட சொல்லனும் வள்ளி.... இது சரியான நேரமா இல்லையான்னு தெரியலை. ஆனா இதை நான் சொல்லயாகனும்... ஐ யம் இன் லவ் வித் யூ.. உன்னை லவ் பன்றேன்... "என சுரேஷ் கூற,
"உண்மையாவே அவன் சொல்லிட்டான் சுதா.."அன முகில் ஆச்சர்யத்துடன் பார்க்க
"சுரேஷ் என்ன சொல்றே நீ....? எல்லாரும் பார்க்கிறாங்க" என பதறிய வள்ளி தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டு,
"ஏன் என்னை புடிச்சது உனக்கு....நீ நல்லா ப்ரபோஸ்ts பன்னுன....ஆனால் என்னால யெஸ் சொல்ல முடியாது.. நாம நல்ல ஃபரண்ட்ஸா இருப்போம்..." என வள்ளி கூற,
"அய்யய்யோ...."என முகில் பெருமூச்சுவிட,
"இதுதான் நடக்கும்னு எனக்கு தெரியும் " என சுதா தலையை ஆட்டியபடி கூறுகிறாள்.
"நல்ல வேளை நான் டைம்க்கு வந்துட்டேன்.... " என அவர்கள் பின்னால் பவர் ரேஞ்சர் முகமுடி அணிந்தபடி சந்தீப்பின் நிழல் நிற்க,
அதை பார்த்த முகில்,"உன்னை ஒளிஞ்சுதானே இருக்க சொன்னேன்..." என
முகில் மனநினுள் நினைத்தபடி செய்வதறியாமல் விழிக்கிறான்.
முன்னே சென்ற சந்தீப் அவனின் தோளில் கைவைத்து "சுரேஷே....கவலைப்படாதே... "என கூற,
"கிறுக்கனாடா இவன் " என முகில் மனதினுள் நினைத்தடி அதிர்ச்சியில் பார்க்கிறான்.
"அந்த முடி....இந்த வாய்ஸ்.. சந்தீப்பே, "என சுரேஷ் பயம் கலந்த அதிர்ச்சியில்,
"நீ.....நீ....என்ன நடக்குது:.." என சுரேஷ் வியர்வை வடிய பார்க்க,
"நான்....சந்தீப் இல்லை....நான் ரட் பவர் ரேஞ்சர்ஸ் எஸ்பிடி எமர்ஜன்ஸி போர்ஸ்" என சந்தீப் திணறிபடி,
முகில் பக்கத்தில் வந்து,"முகில் எப்படி அவங்களைக்கு நான்தான்னு தெரிஞ்சது" என சந்தீப் மெல்லிய குரலில் கேட்க,
"பைத்திய காரா... இதெல்லாம் ஒரு மாறு வேஷம்னு போட்டுட்டு வேற வந்திருக்கே." என முகில் கோபத்துடன் திட்டுகிறான்.
"இங்க என்ன நடக்குது "என சுரேஷ் அதிர்ச்சியில் பார்க்க,
"சாரிய நான் உங்க எல்லாரையும் பார்க்கனும் என ஆசைப்பட்டேன்... சுதாதான் உனக்கு புடவை கட்டிவிட்டாளா?... நீ புடவைல அழகாக இருக்கே வள்ளி.. " என தனது முகமூடியை கழட்டி வள்ளியை பார்க்க,
"முகில்... என்ன பண்ணிட்டு இருக்கே முகில்.. அதுகிட்ட இருந்து தள்ளிப்போ... அது ஒன்னும் என் அண்ணன் இல்லை... " என கோவம் கலந்த பயத்துடன் வள்ளி கத்த,
"அது ஒரு மான்ஸ்டர்..."என வள்ளி ஆவேசத்துடன் கூற மனமுடைந்த சந்தீப்பின் கையில் இருந்த முகமூடி கீழே விழுகிறது.
கலங்கிய கண்களோடு சந்தீப் வெறித்துப் பார்க்க,
சந்தீப்பின் பின்னே சென்ற முகில்,
"வள்ளி நான் இவனை விடமாட்டேன்..... " என முகில் சந்தீப்பின் கையை முறுக்க,
"முகில் என்ன பண்றே வலிக்குது..."என சந்தீப் கத்த,
சுதாரித்து கொண்ட சுரேஷ் அவர்களுக்கிடையில் பாய்ந்து வருகிறான்.
"முகில் என்ன நடக்குது இங்க... "என கேட்க,
"என்ன உன் பிரச்சினை சாம்பலா மாறுன ஒருத்தங்களோட உருவத்தை உன்னால் எடுக்க முடியாது...."என வேகமாக முகில் முறுக்க, வலி தாங்க முடியாமல் சந்தீப் திமிறுகிறான்.
"நீ நிஜமா மாற ஆசைப்படலையா....ஏன் ஆடிப்பணிய மறுக்கறே.. உனக்கு அது கேக்கலையா....?" என வெளிரிய முகத்துடன் முகில் கேட்க,
"யார்... யார் நீ ? " என சந்தீப் கேட்டுக்கொண்டே,
திரும்பி,"இங்கிருந்து தப்பிச்சு ஒடுங்க...." என எதிரே நின்ற வள்ளி, சுரேஷ், மற்றும் சுதாவை பார்த்து சந்தீப் கத்துகிறான்.
"ஏற்கனவே லேட் ஆயிருச்சு.. " என கூறி கொண்டே சந்தீப்பின் கையை உடைக்கும் அளவிற்கு முகில் முறுக்க
"இது முகில் இல்லை..." என சுரேஷ் கூறி கொண்டே சுதா மற்றும்
வள்ளியின் கைகளை பற்றி பின்னோக்கி இழுத்து ஓட ஆயத்தம் ஆகிறான்.
"இதுதான் சரியான நேரம்...." என முகில் முகம் கருப்பு நிறத்திற்கு மாற, அவனை சுற்றி ஒளி பரவுகிறது. முகில் கையில் மாட்டிய சந்தீப்பின் கை உடைந்து எலும்புகள் வெளியே வர இரத்தம் வழிய தொடங்குகிறது.
பத்து நிமிடத்திற்கு முன்னால்...
முகில் கோவிலிற்கு செல்ல வேகமாக ஓடிக் கொண்டு இருக்க கோவிலின் படிக்கட்டை அடைய, அன் அரவமற்று இருந்த கோவிலின் படிக்கட்டு இருளில் சூழ்ந்திருந்தது.
முகில் படிக்கட்டில் ஏற படிக்கட்டில் ஒரு உருவம் இருப்பது தெரிய முகில் நிற்கிறான்.
"முகில் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனும்....?" என இருளில் இருந்த அந்த உருவம் முன்னே வர கல்லூரி உடையால் இரத்தம் படிந்த கத்தியுடன் நின்ற வள்ளியின் நிழலை நிலா தனது வெளிச்சத்தால் காட்டிக் கொடுக்கிறது.
திடீரென அருகில் வந்த வள்ளியின் நிழல் முகிலின் குரல்வளையை பிடித்து தூக்குகிறது.
"இது கிட்ட வந்தது கூட என்னால பார்க்க முடியல...எந்த மனுஷனும் இந்தளவுக்கு பலமா இருக்கமாட்டான்..." என மனதினுள் நினைத்தபடி முகில் திணற,
"முகில்..நீ என்னை வீடியோ எடுத்தேன்னு கேள்விபட்டேன்....இது எப்படி சாத்தியம் ... நான் வருவேன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சுதா...?" என கேட்டபடி முகிலை தூக்கி வீசுகிறது.
முகில் கீழே வருந்து திணற" எப்படி தெரியும் உனக்கு...?"என கேட்டபடி வள்ளியின் நிழல் முகிலை நெருங்க,
"இதுக்கு தெரிஞ்சுருச்சா...."என முகில் மனதினுள் நினைத்தபடி பார்க்க சுற்றியும் எரிந்தது போன்ற மனித அச்சுக்கள் இருக்கிறது.
"இதுதான் இதெல்லாம் செஞ்சுதா.. எத்தனை பேரை இது கொண்ணுச்சுன்னு தெரியலையே.., " என மனதினுள் நினைத்தபடி முகில் படியின் மீது தவழ்ந்து தப்பிக்க முயல, பின்னே வந்த வள்ளியின் நிழல் தன் காலை முகில் முதுகின் மீது வைத்து மிதித்து,
"யார் சொன்னா உனக்கு ? துரோகி.. ? என்னால் இதை ஏத்துக்க முடியாது....எங்க திட்டம் தோத்து போன்ன்னா பெரிய பிரச்சினை ஆகும்... கண்டுபிடி... இவன் எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கான்னு... "என வள்ளி கூற வள்ளியின் உடலில் இருந்து வந்த மற்றொரு நிழல் முகிலின் உருவத்தை எடுக்கிறது.
"நல்லா போகுது திடீர்னு கட் ஆகுது... மறுபடியும் முதல்ல இருந்து வருது இவனோட நினைவு வித்தியாசமா இருக்கு..." என முகிலின், முன்னே வந்த முகிலின் நிழல் அவனை பார்த்து
"எத்தனை முறை நீ செத்து போனோ....?" என கேட்க,
"இது என்னோட நிழல், முன்னாடி நான் மித்ரா வீட்டுக்கு போகும் போது ஒளி வந்துச்சு.... அப்போ என்னை காபி பன்னிருச்சு....அது வரைக்கும் இருந்த என்னோட நினைவு இதுகிட்ட இருக்கும் போல....போச்சி....இப்போ என்னோட தற்போதைய நினைவு தெரிஞ்சா நிழலை பத்தி நாங்க விசாரிக்கறது எங்களோட சீக்ரெட் கோட் எல்லாமே தெரிஞ்சு போயிரும்.....முடிஞ்சது... முடிந்தது....எல்லாமே முடிஞ்சது ....யோசி.... "என முகல் நினைத்தபடி பார்க்க, முகிலின் நிழல் வெளிச்சத்தை வெளியிட்டு எழ,
"முடிஞ்சதா..." என வள்ளியின் நிழல் கேட்கிறது.
" இரு"என முகில் நிழல் கூற,
"இனி நமக்கு இவன் தேவை இல்லை...
"என வள்ளியின் நிழல் தன் கையில் உள்ள கத்தியை முகிலை நோக்கி ஓங்க, முகலின் நிழல் வள்ளியின் நிழலின் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறது.
"உன்னை இருன்னு சொன்னேன்.. அவனை கொல்லாத வள்ளி " என முகிலின் நிழல் கூற,
"ஏன்" என வள்ளியின் நிழல் கேட்க,
"அவன் செத்துப் போனா மறுபடியும் திரும்ப வருவான்..."என முகிலின் நிழல் கூறுகிறது.
"இது என்ன வீடியோ கேமா...இல்லை படமா...."என வள்ளியின் நிழல் கேட்க,
"இதை அவனாலயே தடுக்க முடியல.... ஆனா இவன் நினைவெல்லாம் வச்சு பாக்கும் போது இவன் லூப்ல இருக்கான்.. இதை மூன்றாம் பரிணாமத்துல இருந்து நான்காம் பரிணாமத்துல பர்க்கனும்.. இப்போ இவன் இதை கட்டுப்படுத்தாம இருக்கலாம்... ஆனால் வருங்காலத்துல இவன் அதை கத்துக்க வாய்ப்பு இருக்கு... இப்போ என்ன நடக்க போகுதுன்னு தெரிஞ்சுட்டு இவன் 22 தேதி மறுபடியும் போனால்... மறுபடியும் இவன் நம்ம வழில வருவான்.. அதுனால எல்லாம் நடக்கற வரைக்கும் இவனை கொல்லாத...." என முகிலின் நிழல் கூற,
வள்ளி தனது கத்தியை கீழே வைக்கிறாள்.
"நான் மேலே போறேன் கோவிலுக்கு...அவன் ஃபோன் அவனோட இடது பாக்கெட்ல இருக்கு அதை எடு...என்கிட்ட குடு... சந்தீப் இங்க இருந்து இரண்டாவது சந்துல ஒளிஞ்சிட்டு இருக்கான்... "என கூற,
"சரி " என கூறியபடி முகிலின் கைபேசியை எடுத்து முகிலின் நிழலிடம் கொடுக்கிறது வள்ளியின் நிழல்.
"போ..... ரொம்ப லேட் ஆச்சின்னா அவர் கோபப்படுவார்.."என வள்ளியின் நிழல் கூற,
" சரி " என படிக்கட்டு ஏறி கோவிலின் உள்ளே செல்ல, "ஏய்... போகாதா... இரு... " என முகில் கஷ்டப்பட்டு பேச "மம்ம்... உன்னால யாரையும் காப்பாத்த முடியல..... "என முகிலின் நிழல் கூறிவிட்டு உள்ளே செல்கிறது.
"இரு இரு போகாதே.., வள்ளி மேலே கையை வச்ச...."என முதல் தன் கைகளை நீட்டி கத்த, பின்னே நின்று கொண்டு இருந்த வள்ளியின் நிழல் முகிலின் கை முட்டியை திருப்பி உடைக்கிறது.
"கத்தக்கூடாது முகில்... இட்ஸ்டூ லேட் இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா முழிச்சிருவாங்க...." என வள்ளியின் நிழல் கூற, முகில் வலியை பொறுத்துக் கொண்டு மற்றொரு கையை படிக்கட்டின் மீது ஊனி மேலே ஏற முயல,
"சோ.. சொன்னா கேட்கமாட்டியா.. "என கூறி கொண்டே முகியின் காலில் கை வைத்த வள்ளியின் நிழல் அதை உடைக்கலாமா என யோசித்தபடி அழுத்த எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கி தோட்டா வள்ளியின் நிழலின் ஒரு கண்ணை துளைக்கிறது.
தள்ளாடியபடி எழுந்து நின்ற வள்ளியின் நிழல் திரும்ப, சீறிப் பாய்ந்து வந்த அடுத்த தோட்டா வள்ளியின் முகத்தை சிதைக்கிறது. அவளின் இரத்தம் முகில் மீது தெறிக்க வள்ளியின் நிழலின் உடல் சரிந்து முகில் மீது விழுகிறது.
திரும்பி பார்த்த முகிலின் கண்களிற்கு கையில் துப்பாக்கியுடன் ஒரு உருவம் தெரிகிறது.
"தயிர்சாதம் கோபில எல்லா இடத்துலயும் கிடைக்காது போல...."என அந்த உருவம் பேச, நிலா வெளிச்சத்தில் அந்த உருவம் தெரிகிறது.
"நான் இன்னும் அதை ட்ரை பண்ணல....நீ பண்ணிருக்குயா....?"என நிலவின் ஒளியில் தெரிந்த அந்த பெண் கேட்கிறாள்.
"இந்த... இந்த பொண்ணு நம்ம கூட பஸ்ல வந்த அந்த கண்ணாடி போட்டிருந்த அந்த பொண்ணுதானே. இவதானே முதல் நடவை வந்தப்போ இறந்து போயிருந்தா.... இவளைத்தானே நாம தேடி அலைஞ்சோம்...."என முகில் மனதினுள் நினைத்தபடி எதிரில் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அந்த கண்ணாடி அணிந்திருந்த பெண்ணை பார்க்கிறான்.
(தொடரும்......)